TamilnaduTalk.com: நீறில்லா நெற்றி - TamilnaduTalk.com

Jump to content

Subscribe to வினோத் தென்குமரி        RSS Feed

நீறில்லா நெற்றி

1 Comments
நீறில்லா நெற்றி


மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிளுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதானம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதான் நெற்றியில் திருநீறு பூசுவது.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தணம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.

நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள்.

அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.

மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா யோகோ போன்ற இடங்களில் சென்றால் சொல்லித்தருவார்கள்.

பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.

இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.

இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்திதியானமும் செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும்.

இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு.

--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.../friends/vinoth

1 Comments On This Entry

Page 1 of 1

chillsam 

14 ஆகஸ்ட் 2010 - 02:47 காலை
மிக நேர்த்தியான விளக்கம்;ஆனால் சுண்ணாம்பு எடுக்கும் வழிமுறையினைச் சொன்ன நீர் நீறு எடுக்கும் வழிமுறையினையும் சொல்லியிருக்கவேண்டுமே..!
0
Page 1 of 1

Trackbacks for this entry [ Trackback URL ]

There are no Trackbacks for this entry

June 2013

S M T W T F S
      1
2345678
9101112131415
161718 19 202122
23242526272829
30      

Recent Entries

Recent Comments