|
[] கோலங்கள்!
#2
Posted 13 செப்டம்பர் 2008 - 01:38 மாலை
என் இளமைப் பருவ நினைவுகளை வரச்செய்தது... வாழ்த்துக்கள் சார் ....
#3
Posted 04 டிசம்பர் 2008 - 03:41 மாலை
#4
Posted 05 டிசம்பர் 2008 - 07:47 காலை
aagni, on Dec 4 2008, 03:11 PM, said:
அப்படியா... என்ன காரணமாக இருக்கலாம்?
#5
Posted 05 டிசம்பர் 2008 - 08:27 காலை
#6
Posted 05 டிசம்பர் 2008 - 12:23 மாலை
நாங்கள் மேற்கு அண்ணாநகரில் குடி இருந்தபோது மார்கழி மாதம் பக்கத்து, எதிர் வீட்டு பெண்கள் எல்லாரும் சேர்ந்து ஒரே சமயத்தில் போட்டி போட்டுக்கொண்டு கோலம் போடுவோம்...
வித விதமான கோலங்கள் .......பக்கத்துடு வீட்ட் பெண் மிக அழகாக படம் வரைந்தது போல் மரத்தின் மீது மயில் அமர்ந்திருப்பது போலும்,அன்னப்பறவை போலும் வண்ணக்கோலம் பல போடுவார்.....கோலப்போட்டிகளில் முதல் பரிசெல்லாம் பெற்றிருக்கிறாராம்.நாங்களும
அவருக்கு போட்டியாக கோலம் போடுவோம்...
தினமும் இரவு 9.00 மணிக்கு கோலம் போட ஆரம்பிப்போம்.முடிய 11.00 ஆகும்.போட்டு முடிந்ததும் அப்போது தான் தூங்கப்போன அல்லது பாதி தூக்கத்தில் இருக்கும் கணவரை எழுப்பி கேஞ்சி கூத்தாடி கோலம் பார்க்க வைத்ஹ்டு எப்படி இருக்கிறது என்று கேட்ப்பேன்.....அவரும் ஏதோ கடனுக்கு தூக்கத்தில் எழுப்பிய எரிச்சலில் நல்லாருக்கு என்பார்.(நல்லாயில்லை என்று சொன்னால் என்ன நல்லா இல்லை கலரா?அல்லது கோல டிசைனா? அல்லது கோலமேவா?வேறு போடட்டுமா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தூங்கவிடாமல் செய்துவிடுவேனோ என்ற பயமோ என்னவோ)
ஒரு முறை அப்படி தான்.நாளை காலை பொங்கல் பண்டிகை.இரவு மிகவும் நன்றாக அழகான கலர்கோலம் போட்டு,பொங்கல் பானை,கரும்பு எல்லாட்துக்கும் கலர் போட்டு பார்டரெல்லாம் போட்டு ரொம்ப அழகா வந்திருக்கு என்று பார்த்து பார்த்து ரசித்து கணவரையும் எழுப்பி கோலம்பார்க்கும் படி காட்டி முடிந்ததோ இல்லையோ ஜோரென்று மழை பெய்ய தொடங்கிவிட்டது...
என்ன செய்வதென்றே தெரியவில்லை...முதலில் தோன்றியதென்னவென்றால் கோலம் நனையாமல் எப்படியாவது ஏதாவது போட்டு மூட வேண்டுமென்று..நானும் எங்கள் பக்கத்து வீட்டுபெண்ணும் ஏதேதோ தேடி கொண்டுவந்து போட்ட கோலத்தை மூடினோம்...அவ்வளவு பெரிய கோலத்தை மூட ஒன்றும் கிடைக்கவில்லை. வீடிலிருந்த இரண்டு ப்ளாஸ்டிக் சிமெண்ட் பை கொண்டு மூடினேன்.பத்தவில்லை ....... மழை வேறு வலுக்கதொடங்கிவிட்டது...என்ன செயவதென்று தெரியாமல் யோசிக்கும் போது தான் ஒரு ஐடியா வந்தது..குடு குடு வென்று ஓடி மோட்டார்பைக்கின் மீதிருந்த கவரை கழட்டி கோலம் மீது மூடினேன்... ஒரளவுக்கு மூடமுடிந்தது. கற்களை தேடி கொண்டுவந்து சுற்றி வைதேன்.கொஞ்சம் நிம்மதி பிறந்தது
சிறிது மனவருத்தத்துடன் தூங்க சென்றோம்....நாளை காலை எழுந்ததும் முதல் வேலையாக சென்று கோலத்தை பார்த்தேன்.நல்ல வேளை கோலம் பெரும்பாலும் அழியவில்லை. பார்டர்மட்டும் சிறிது அழிந்திருந்தது.சரி செய்துவிட்டேன்.....எங்கள் மற்றும் பக்கத்ஹ்டு வீட்டு வாசலில் மட்டுமே அன்று கோலமிருந்தது.மற்றவர் வீட்டு முன்னெல்லாம் அழிந்து சுத்தமாக கோலமே இல்லை.......(சீட்டெல்லாம் தொப்பையாக நனைந்து விட்டதென்று மறுநாள்காலை கணவர் கத்திக்கொண்டிருந்தது வேறு விஷயம்..)எப்படியோ கோலம் நனையாமல் காப்பத்திவிட்டாகியது.
கோலம் பத்தி பேசும்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து சிரித்துக்கொள்வேன்....
#7
Posted 05 டிசம்பர் 2008 - 12:30 மாலை
இப்போது கூட மார்க்கழி மாதத்தில் பெண்கள் தெருவில் கோலம் போடுகிறார்கள் அக்கா. பார்த்திருக்கிறேன்..
#8
Posted 05 டிசம்பர் 2008 - 12:34 மாலை
லெனின், on Dec 5 2008, 12:30 PM, said:
இப்போது கூட மார்க்கழி மாதத்தில் பெண்கள் தெருவில் கோலம் போடுகிறார்கள் அக்கா. பார்த்திருக்கிறேன்..
ஆமாம்குட்டி.
ஆனால் இப்போதேல்லாம் அடுக்கு மாடியில் குடியிருப்பதால் கோலம் போடுவது இல்லை.... சிறிய வாசல்...சின்ன கோலமே போடுவதில்லை.இதில் எங்கே பெரிய கோலமெல்லாம்....
#9
Posted 05 டிசம்பர் 2008 - 01:03 மாலை
கிமீரா, on Dec 5 2008, 12:34 PM, said:
ஆனால் இப்போதேல்லாம் அடுக்கு மாடியில் குடியிருப்பதால் கோலம் போடுவது இல்லை.... சிறிய வாசல்...சின்ன கோலமே போடுவதில்லை.இதில் எங்கே பெரிய கோலமெல்லாம்....
கோலம் போடுவது ஒரு கலை....அதற்க்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில் இருந்தெ தெரிகிறது அதில்
நீங்கள் expert என்று....வாழ்த்துக்கள் அக்கா....
#10
Posted 05 டிசம்பர் 2008 - 01:18 மாலை
#11
Posted 05 டிசம்பர் 2008 - 03:03 மாலை
கோலம் காப்பாற்றப்பட்டு... பைக் ப்ழுதடைந்திருக்குமொ என எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன் ... ஹிஹி
#12
Posted 05 டிசம்பர் 2008 - 03:30 மாலை
#13
Posted 05 டிசம்பர் 2008 - 06:46 மாலை
சராஜ், on Dec 5 2008, 03:03 PM, said:
கோலம் காப்பாற்றப்பட்டு... பைக் ப்ழுதடைந்திருக்குமொ என எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன் ... ஹிஹி
கதையா?
சீட் நனைந்ததற்கே கத்திக்கொண்டிருந்தார்.இன்னு
் பழுதடைந்திருந்தால்.....எப்போது நினைத்தாலும் இனிக்கும் இந்த நிகழ்வு இனிப்பதற்கு பதிலாக கசந்துக்கொண்டிருக்கும்...
#14
Posted 05 டிசம்பர் 2008 - 06:52 மாலை
கிமீரா, on Dec 5 2008, 06:46 PM, said:
சீட் நனைந்ததற்கே கத்திக்கொண்டிருந்தார்.இன்னு
�் பழுதடைந்திருந்தால்.....எப்போது நினைத்தாலும் இனிக்கும் இந்த நிகழ்வு இனிப்பதற்கு பதிலாக கசந்துக்கொண்டிருக்கும்...
அவ்வளவு தைரியசாலியாக இருந்தவரை இப்படி பூச்சி மாதிரி ஏன் அக்காச்சி மாத்திடீங்க..
#16
Posted 05 டிசம்பர் 2008 - 07:22 மாலை
கிமீரா, on Dec 5 2008, 02:38 PM, said:
்....
எல்லாரும் நம்மம் போல இருக்க முடியுமா...?
#17
Posted 05 டிசம்பர் 2008 - 07:23 மாலை
சராஜ், on Dec 5 2008, 07:47 AM, said:
பதில்
லெனின், on Dec 5 2008, 12:30 PM, said:
இப்போது கூட மார்க்கழி மாதத்தில் பெண்கள் தெருவில் கோலம் போடுகிறார்கள் அக்கா. பார்த்திருக்கிறேன்..
#20
Posted 05 டிசம்பர் 2008 - 07:37 மாலை
கிமீரா, on Dec 5 2008, 03:02 PM, said:
புரியல.....

Help


















