தமிழ் குரல், on 21 மே 2010 - 07:25 மாலை, said:
இங்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் முகாம்களுக்கு சென்று அவர்களுக்கு உதவி செய்வது கடினமான செயலாகவே இருக்கிறது...
முகாம்களின் இருக்கும் மக்களை மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்... அந்த மக்களை சந்திப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது...
நீங்கள் என்ன உதவிகள் செய்ய போகிறீர்கள் என முடிவு செய்து விட்டு சொல்லலாமே?
25 ஆண்டுகளுக்கு மேலாக புலம் பெயர்ந்து வாழும் மக்களை தமிழ் நாட்டிலேயே குடியுரிமை கிடைக்க வழி செய்ய யாராவது செய்ய வேண்டும்... ஆனால் இந்திய அரசு இந்த மக்களை இறுதி வரை சித்ரவதைக்கு ஆட்படுத்தி மகிழ்கிறது...
அய்யா தமிழ்குரல் மீண்டும் தமிழக வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள். இங்கே எந்த அகதி முகாமில் மக்கள் நீங்கள் சொல்லும் அளவுக்கு கொடுமை நடக்கிறது ? 4 வருடங்களுக்கு முன் சிறையில் இருந்தார்கள் ஆனால் கலைஞர் ஆட்சியில் ஈழதமிழர்கள் தமிழ்கத்தில் மிக அமைதியான சந்தோசமான வாழ்க்கை. அவர்களூக்காக இலவச கல்வி மருத்துவம் என்று பல வசதிகளள செய்து வைத்திருக்கிறார். டிவி, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடியிருப்புகளாகவே இருக்கின்றன. அவர்களுக்கு பொறியல் கல்லூரிகள் மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு என்று தாராளமாக இருக்கிறார். புலம் பெயர்ந்த தமிழர்களிலெயே மிக் மிக சந்தோசமாக இருப்பது தமிழக ஈழ தமிழர்கள்தான்.வேறு எந்த நாட்டு ஈழத்தமிழர்கள் தமிழ் சூழலில் வாழ்கிறார்கள்.
எந்த நாட்டு ஈழத்தமிழர்கள் வெளியெ சென்றால் தமிழில் பேச முடியும் ? எந்த நாட்டு ஈழ தமிழர்கள் தமிழ் தொலைக்காட்சிகள் பார்க்க முடியும் ? தமிழ் உணவுகள் சாப்பிட முடியும் ? தமிழ் சூழலே இல்லாத நிலை தற்கொலலக்கு சமம் அல்லவா. தமிழக ஈழ தமிழர்கள் கூடிய விரைவில் முதல்வர் கலைஞர் அவர்களால் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அமைதியாக இருக்கீற இலங்கைக்கு நல்ல வாழ்க்கைக்கு போவவர்கள். அவர்களுக்கு எதற்கு குடியுரிமை ?
நான் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால் உலகமே ஒட்டும். - டாக்டர் முதல்வர் கலைஞர்