dhilludhurai, on 22 May 2010 - 06:12 PM, said:
அய்யா ஆக்னி, ஏமாற்றி விட்டீர்களே. இதுவரை நீங்கள் கலைஞருக்கு ஆதரவானவர் அவரை நன்கு புரிந்தவர் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். தலைவர் கலைஞரின் கடிதத்திற்கு இருக்கும் சக்தியெல்லாம் உங்களைப்போன்றோருக்கு புரியாது. அவரது ஒரு எழுத்திற்கு இருக்கும் மதிப்பே தனி. அவர் நினைத்தால் ஒரே வாரத்தில் பத்து படங்களுக்கு அருமையான திரைக்கதை வசனம் எழுதி கோடிக்கணக்கான ரூபாய்கள் சம்பாதிக்க முடியும். இன்று தமிழக திரைப்பட துறையில் கலைஞரின் எழுத்திற்க்காக தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள் எண்ணிடலங்காதவை.ஆனால் அவர் எழுதிய ஒவ்வொரு எழுத்தையும் தமிழர் குடும்பத்துக்கே அர்ப்பணித்து விட்டார். அவர் அதில் சம்பாதித்த பணத்தை ஒரு பைசா கூட எடுத்துக்கொள்ளவில்லை. அத்தனையும் குடும்பத்திற்கே வாரி வழங்கிவிட்டார்.அப்பேர்ப்பட்டவரை கிடப்பில் போடுவார் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது
குருவே,
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி, தானும் ஆடியதுபோல்
தலைவர் சிலரை புகழந்து கவிதை எழுதுவது போல் நானும் அவரை புகழ்ந்து ஏதோ எழுத போய்... அர்த்தம் மாறிவிட்டது. அதனை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி குருவே...
இது போல் இனிமேலும் ஏதேனும் தவறு நடந்தால் உடனே சுட்டிகாட்டி எனக்கு நல் வழிகாட்டுங்கள் குருவே...