![]() |
டாக்டர் முதல்வர் கலைஞரின் பேனாவுக்கு ஓய்வே கிடையாது
#1
Posted 23 ஜூலை 2010 - 12:42 மாலை
கவர்ச்சி நடிகை சோனா தனது யூனிக் நிறுவனம் சார்பில் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுடன் இணைந்து தயாரித்துள்ள படம் கனிமொழி. ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று கலைஞர்அரங்கத்தில் நடந்தது. முதல்வர் கருணாநிதி இசையை வெளியிட நடிகர் விஜய் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கருணாநிதி பேசுகையில்,
உலகத் தமிழ் மாநாட்டின் ஊர்வலம் 1968-ம் ஆண்டு சென்னை மாநகரத்தில் ஜாகீர் உசேன், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் அமர்ந்து, அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணும்போது, நானும், அவர்களோடு அமர்ந்திருந்த நேரத்தில், மருத்துவமனையிலே இருந்து "உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது'' என்று எனக்குச் செய்தி வந்தது.
இந்த "கனிமொழி'' என்கின்ற பெயரில் எனக்கு எப்போதுமே பற்று, பாசம் உண்டு. நான் எழுதியுள்ள சிறுகதையானாலும், பெருங்கதையானாலும், அவற்றில் கதாநாயகியினுடைய பெயரோ அல்லது முக்கியமான ஒரு பெண் பாத்திரத்தினுடைய பெயரோ, "கனிமொழி'' என்று இருக்கும். இப்படி பல பெண் பாத்திரங்களுக்கு "கனிமொழி'' என்று பெயர் வைத்து, அதன்மூலமாக மகிழ்ந்த நான், உள்ளபடியே ஒரு "கனிமொழி'' பிறந்திருக்கிறது என்ற செய்தி வந்தவுடன், நான் மருத்துவமனையிலே இருந்தவர்களுக்கு, என் மனைவிக்கு நான் சொல்லியனுப்பியது - இப்போது அண்ணா சாலை; அதற்கு முன்பு "மவுண்ட் ரோடு'' - அங்கிருந்து பேசுகிறேன். "குழந்தைக்கு நான் ஏற்கெனவே சொன்னபடி, "கனிமொழி என்றுதான் பெயர்'' என்று குறிப்பிட்டேன்.
ஒருவேளை உலகத் தமிழ் மாநாட்டையொட்டி பிறந்த பெண் குழந்தை என்ற காரணத்தினாலோ, என்னவோ, அந்த "கனிமொழி'' இன்றைக்கு உலகப் புகழ் பெறுகின்றவர்களிலே ஒருவராக விளங்கி வருகின்றார். பெற்றவர்களுக்கு அதனால் ஏற்பட்டிருக்கின்ற மகிழ்ச்சி கொஞ்ச நஞ்சமல்ல; உங்களுக்குத் தெரியும்.
கனிமொழி இன்றைக்கு இந்த விழாவிற்கு வந்திருக்க வேண்டும், வரவில்லை. அது, கனிமொழி பின்பற்றுகின்ற ஒரு இலக்கணம். தன்னைப் பாராட்டுகின்றவர்கள், தன்னைப் புகழ்கின்றவர்கள் அல்லது தன்னைப் பாராட்டுவதற்காக நடைபெறுகின்ற விழாக்கள் இவைகளில் கலந்து கொள்ளாமல் சமாளிப்பது, அவர்களுக்குப் போக்கு காட்டி வேறு இடத்திற்குச் சென்று விடுவது கனிமொழியினுடைய வாடிக்கை.
ஆனால், எனக்குள்ள சங்கடம் என்னை உட்கார வைத்துக்கொண்டே, நம்முடைய கலையுலக நண்பர்கள் பாராட்டுவதும், புகழ்வதும், போற்றுவதும் - கூடுமானால் என்னைப்பற்றிய வாழ்த்துக்களை அச்சடித்துக் கொண்டே வந்து பாடுவதும் என்ற அளவிற்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. இதை நான் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிற அதே நேரத்தில், இந்தப் புகழையும், பெருமையும், பாராட்டுக்களையும் தாங்கிக் கொள்ள முடியாமல், தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பல பேர் தினம் தினம் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உங்களுக்குத் தெரியும்.
நான் அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. காரணம், அந்த ஏச்சுக்கும், பேச்சுக்கும் எனக்குக் கிடைக்கின்ற ஆறுதலான இடமாக, இப்போது கலையுலகம் இருக்கின்ற காரணத்தால் என்னுடைய கவலையை - கலையுலகத்திலே இருக்கின்ற தம்பிமார்களையும், நண்பர்களையும், சகோதர சகோதரிகளைக் கண்டு நான் போக்கிக் கொள்கின்றேன்.
1938-ம் ஆண்டு வாக்கில் நான் எழுத ஆரம்பித்தேன். இதுவரையிலே எழுதிக் கொண்டிருக்கின்றேன். இன்னும் என்னுடைய பேனாவிற்கு ஓய்வில்லை. எழுதிக் கொண்டேயிருக்கின்றேன். "எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டேயிருப்பேன்''.
இந்த கலையுலகத்திற்கு என்னால் இயன்ற உதவிகளை, துணையை ஆற்றியிருக்கிறேன் என்பதை முன்னால் பேசியவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். அதிலும் சிறப்பாக கலையுலகத்திலே எந்த நடிகரை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறோமோ, எந்த நடிகர்களையெல்லாம் இன்றைக்கு வாழ வைத்திருக்கிறோமோ, அதை விடப் பெரிய காரியமாக திரைப்படத் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு - ஏறத்தாழ நூறு ஏக்கர் நிலம் வழங்க வேண்டுமென்று வைத்த கோரிக்கையையேற்று, அந்தக் கோரிக்கையின்படி, அந்த நிலத்தை அவர்களுக்கு வழங்கி - அங்கே அவர்கள் வீடு கட்ட அஸ்திவாரம் போடுகின்ற விழா வெகு விரைவிலே நடைபெறவிருக்கின்றது. அந்த விழாவிலே நான் கலந்து கொள்வதுதான் இந்த விழாவை விட எனக்குச் சிறப்பான விழா என்பதைத் தொழிலாளத் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தம்பி நடிகர் விஜய் பேசும்போது குறிப்பிட்டார். நான் ஒரு குடும்பத் தலைவனாக இருந்து - அகில இந்திய அளவில் பண்டித நேரு அவர்களின் குடும்பத்தைப் போல - தமிழகத்தில் என்னுடைய குடும்பமும், நானும் அரசியலில், நாட்டு மக்களுக்கான தொண்டிலே ஈடுபட்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். குடும்பமாக இருப்பது தான் தொல்லை.
பல பேர் அந்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் - அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாத காரணத்தால் எதற்கெடுத்தாலும், என்னைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் - என்னைப் பற்றிச் சாட்டுகின்ற பெரிய குற்றச்சாட்டே, நான் ஒரு குடும்பஸ்தன் என்பது தான்.
அவர்களுக்கு அது வாய்க்கவில்லை என்பது என்னுடைய தவறல்ல. ஆனால், இந்த நல்ல நேரத்தில் அதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டுமா என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரியாமல் இல்லை, புரிகிறது. ஆகவே அதை நிறுத்திக் கொண்டு வாழ்க "கனிமொழி'' - "வெற்றி பெறுக கனிமொழி'' என்று குறிப்பிட்டு - இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், இயக்குநர் , கதாசிரியர் அத்தனை பேரும் இந்த வெற்றியிலே பங்கு பெற்று வாழ்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
#2
Posted 23 ஜூலை 2010 - 12:52 மாலை
கலைஞரின் குடும்பம் நேரு குடும்பத்தைப்போன்றது என்று இளைய தளபதியே சர்டிபிகேட் கொடுத்து இருக்கிறார். நேரு குடும்பத்தின் பாரம்பரியம் எப்பேர்ப்பட்டது என்பது உலகத்திற்கே தெரியும். இன்று மூலை முடுக்கெல்லாம் காந்தி குடும்பத்தை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. எப்படி நேரு குடும்பம் இந்தியாவின் சுதந்த்ரத்திற்காக பாடுபட்டார்களோ அதுபோல தமிழகத்தின் பெருமையை மீட்ட பெருமை கலைஞர் அவர்களின் அடிமட்டத்தொண்ட்ர்களால் ஆன கழகத்தையே சேரும்.தொண்டையே முதல் பணியாக கொண்டு தொண்டாற்றி வரும் கழக முதன்மை தொண்டர் கலைஞர் அவர்கள் என்பதை மறந்திவிட வேண்டாம்
கலைஞர் இந்த செய்தியில் அவருக்கு பிடித்தமான பெயர் கனிமொழி என்று சொல்லி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கனிமொழி அவர்கள் தமிழ் இலக்கதியத்திற்கும்ட் தமிழ் கலாச்ச்சார வளர்ச்சிக்கும் ஆற்றி வரும் தொண்டு மகத்தானது. அவரது பெயர் தமிழ்மொழி வளர்ச்சியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கபடவேண்டிய காலம் வந்துவிட்டது . தன்னை பாராட்டுவதை பிடிக்காது என்ற உயர்ந்த கொள்கையை கொண்ட கனிமொழி பற்றி இந்த ஒரு செய்தியின் மூலம் ஆதாரமாக விளங்கிக்கொள்ள முடியும். இந்த செய்தியில் உள்ள கருத்துக்களை ஆதாரத்துடன் விவாதிக்க தயாரா ?
#3
Posted 23 ஜூலை 2010 - 12:57 மாலை
dhilludhurai, on 23 July 2010 - 08:22 AM, said:
அய்யா ஆதாரம் இல்லாம பேசுங்க.... வரலாறு தெரியாம பேசுங்க!
#4
Posted 23 ஜூலை 2010 - 01:05 மாலை
அருணாசலம், on 23 ஜூலை 2010 - 12:57 மாலை, said:
அய்யா அருணாசலம் கோபப்படாதீர்கள். முன்பெல்லாம் கலைஞர் அவர்களின் சிறப்பை உணர்ந்தவராக எழுதுவீர்கள் . ஆனால் இப்போது கொஞ்சம் வேறு மாதிரியாக எழுதுகிறீர்களே. அதனால்தான் சந்தேகம் வந்தது. உங்களை வருத்தப்படுத்தியி இருந்தால் மன்னிக்கவும் அதற்காக விவாதிப்பதை நிறுத்தி விடாதீர்கள்.
#5
Posted 23 ஜூலை 2010 - 01:12 மாலை
dhilludhurai, on 23 July 2010 - 08:35 AM, said:
நெஞ்ச தொட்டுடிங்க சார்...
#6
Posted 23 ஜூலை 2010 - 01:21 மாலை
dhilludhurai, on 23 ஜூலை 2010 - 01:05 மாலை, said:
அந்த வானத்தை போல மனம் படச்ச மன்னவனே
பனித் துளிய போல குணம் படச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு..
உங்க நல்ல மனசு இங்க யாருக்கு தெரியிது??
#7
Posted 23 ஜூலை 2010 - 01:23 மாலை
#8
Posted 23 ஜூலை 2010 - 01:30 மாலை
சராஜ், on 23 July 2010 - 08:53 AM, said:
சராஜ் நீங்க தலிவர் பற்றிய திரியில் இப்படி ஆபாசம் எதிர்பார்ப்பது நல்லா இல்ல...
அப்புறம் தில்லு மனசு கஷ்டபடும்!
#9
Posted 23 ஜூலை 2010 - 01:32 மாலை
சிம்மகர்ஜனை, on 23 July 2010 - 12:51 PM, said:
பனித் துளிய போல குணம் படச்ச தென்னவனே
எதுகை மோனை அற்புதமா அமைந்து இருக்கு
இந்த பாடலை எழுதியவர் யார்
பாடியவர் அழுகிறார் என்றால் சிங்கம் கூட அழுமா என்ன !!
#10
Posted 23 ஜூலை 2010 - 01:37 மாலை
வேக்கப், on 23 July 2010 - 09:02 AM, said:
இந்த பாடலை எழுதியவர் யார்
பாடியவர் அழுகிறார் என்றால் சிங்கம் கூட அழுமா என்ன !!
அது அழுகை இல்லிங்க ஆனந்த கண்ணீர்..
அப்புறம், இராம நாராயணன் படத்துல பாம்பே அழுது, சிங்கம் அழக்கூடாதா?
#11
Posted 23 ஜூலை 2010 - 01:46 மாலை
வேக்கப், on 23 ஜூலை 2010 - 01:32 மாலை, said:
இந்த பாடலை எழுதியவர் யார்
பாடியவர் அழுகிறார் என்றால் சிங்கம் கூட அழுமா என்ன !!
நம்ம என்கையா இப்படி எல்லாம் எழுதுறது எல்லாத்தையும் காப்பி அடிச்சி நம்ம பேரு வாங்கிக்கிறது தான்..
பேரு கேட்சிங்கா இருக்கேன்னு போட்டு உள்ள வந்தேன், உள்ள வந்து பாத்தா நம்மை விட பெரிய சிங்கமெல்லாம் இருக்கு
சரி பேர மாத்தலாம்னு பாத்தா அதுவும் முடியல.. அப்படியே அந்த பேர Maintain பண்றதுக்கு நானும் எவ்வளவோ சிந்திச்சி பாக்குறேன் நம்ம மண்டைக்கு எதுவுமே தோன மாட்டேங்கிது..
வரிகள் சின்ன கவண்டர் படத்துல இருந்து சுட்டது, அதுல வெள்ளை மனசுக் காரற நெனச்சி அழுவுறது நான் தான்..
அவருக்காகவே இப்ப கலைஞரை அவ்வளவா விமர்சனம் பண்றது இல்ல.. ஆனா அவரோட லிஸ்ட்ல என் பேரையும் சேத்தத நெனச்சா..
என்னால தாங்க முடியல அய்யா தாங்க முடியல..
#12
Posted 23 ஜூலை 2010 - 05:03 மாலை
பெயர் மாற்ற வேண்டும் என்றால் நிர்வாகிக்கு தனிமெடல் அனுப்புங்கள். பெயர் நன்றாக உள்ளது எதற்கு மாற்ற விரும்புகிறீர்கள்
#13
Posted 23 ஜூலை 2010 - 05:10 மாலை
#14
Posted 23 ஜூலை 2010 - 06:14 மாலை
ஹரிஹரன், on 23 ஜூலை 2010 - 05:03 மாலை, said:
நாலு மாதம் கழித்து எனது வாழ்க்கைக்கான ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளேன்..
அதை நிறைவேற்றும் பொருட்டு ஓரிரு மாதம் அதில் மூழ்க வேண்டியதாக இருக்கும்..
நான் சொல்ல நினைத்தது நான்கு மாதம் வரை தொடர்ச்சியா இருப்பேன் என்பது.. அதன் பிறகு களம் உள்ள வரை மீண்டும் தொடர்வேன்..
#15
Posted 23 ஜூலை 2010 - 06:57 மாலை
சிம்மகர்ஜனை, on 23 ஜூலை 2010 - 06:14 மாலை, said:
அதை நிறைவேற்றும் பொருட்டு ஓரிரு மாதம் அதில் மூழ்க வேண்டியதாக இருக்கும்..
நான் சொல்ல நினைத்தது நான்கு மாதம் வரை தொடர்ச்சியா இருப்பேன் என்பது.. அதன் பிறகு களம் உள்ள வரை மீண்டும் தொடர்வேன்..
உங்கள் திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
#16
Posted 24 ஜூலை 2010 - 01:13 காலை
- மனசு கஷ்டமாஉ இர்க்கும் போது மேல் இருப்ப்தை படிங்க - சிர்த்து சிர்த்து சிரு நீரே வந்துட்டும் - செம ஜோக்ப்பா
#17
Posted 25 ஜூலை 2010 - 11:36 காலை
clinton, on 24 ஜூலை 2010 - 01:13 காலை, said:
- மனசு கஷ்டமாஉ இர்க்கும் போது மேல் இருப்ப்தை படிங்க - சிர்த்து சிர்த்து சிரு நீரே வந்துட்டும் - செம ஜோக்ப்பா
அய்யா தரக்குறைவாக சிறுனீர் என்றெல்லாம் பேசாதீர்கள். கண்ணியம் தேவை கலைஞரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். கனிமொழி அவர்கள் இன்று உலகப்புகழ் பெற்றிருக்கிறார் என்பது முற்றிலும் உண்மை. அவரது தங்குதடையற்ற தெளிவான தமிழ்ப்பேச்சும், அவரது எழுத்துக்களும் இன்று செம்மொழிக்கிடைத்திட்ட பேரிய பொக்கிசம். கலைஞரின் கலைகளை அழிந்துபோகாவண்ணம் தன்னோடு எடுத்து நடக்கும் நடமாடும் பொக்கிசம். இன்று கலைஞர் அவர்கள் தனது திறைமைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அடிமட்டத்தொண்டனுக்கும் பகிர்ந்து அளித்து இருக்கிறார்.அதாவது கலைஞர் பின்னும் அவரது கொள்கைகள், நேர்மை, உண்மை வாய்மை, சமூக நீதி என்பன நிலைத்து வாழ வேண்டி கழகத்தின் ஒவ்வொரு அடிமட்டத்தொண்டனும் அவரது ஒவ்வொரு கலைகளையும் சுமந்து நிற்கிறார்கள். அவரது கலைகளை சுமந்து செல்லும் அடிமட்டத்தொண்டனாக கனிமொழி அக்கா.ஒரு நிமிசம் நினைத்து பாருங்கள் ஆங்கில (முன்பு இந்து பத்திரிக்கையில் பணியாற்றினார்) தமிழ் என்று இரு மொழிகளிலும் சிறப்பு பெற்ற கனிமொழி அவர்கள் ஒருவரால் மட்டுமே கலைஞர் அவர்களின் கலையை மட்டும் சுமந்துசெல்ல வேண்டி இருக்கிறதென்றால், கலைஞரின் திறமைக்குவியலை நினைத்து பாருங்கள். அவரது ஒவ்வொரு கலைகளையும் சுமந்து செல்ல இன்னும் 200க்கும் மேற்பட்ட திறமையான அடிமட்டத்தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். இதுவரை கலைஞர் அவர்கள் மிகவும் கவனமாக 150க்கும்குறைவான அடிமட்டத்தொண்டர்களையே தேர்ந்தெடுக்க முடிந்திருக்கிறது. இன்னும் ஆக குறைந்தது 50 திறமையில் சிறந்த அடிமட்டத்தொண்டர்களாவது தேவைப்படுகிறார்கள். கலைஞரின் வாழ்நாளிலேயே இன்னும் தேவைப்படும் அடிமட்டத்தொண்டர்களை கண்டறிந்து விடுவார் என்ற நம்பிக்கை கழக தொண்டர் ஒவ்வொருவனுக்கும் இருக்கிறது
#18
Posted 29 ஜூலை 2010 - 01:49 மாலை
ஹரிஹரன், on 23 ஜூலை 2010 - 05:10 மாலை, said:
அய்யா ஹரிஹரன் கலைஞர் எப்போதும் கருப்பு இங்க் பேனாவினால்தான் எழுதுவார். அப்போதுதான் எழுத்து பளிச்சென்று இருக்கும்.
#19
Posted 29 ஜூலை 2010 - 09:45 மாலை
#20
Posted 29 ஜூலை 2010 - 10:12 மாலை
சிம்மகர்ஜனை, on 23 July 2010 - 01:46 PM, said:
பேரு கேட்சிங்கா இருக்கேன்னு போட்டு உள்ள வந்தேன், உள்ள வந்து பாத்தா நம்மை விட பெரிய சிங்கமெல்லாம் இருக்கு
சரி பேர மாத்தலாம்னு பாத்தா அதுவும் முடியல.. அப்படியே அந்த பேர Maintain பண்றதுக்கு நானும் எவ்வளவோ சிந்திச்சி பாக்குறேன் நம்ம மண்டைக்கு எதுவுமே தோன மாட்டேங்கிது..
வரிகள் சின்ன கவண்டர் படத்துல இருந்து சுட்டது, அதுல வெள்ளை மனசுக் காரற நெனச்சி அழுவுறது நான் தான்..
அவருக்காகவே இப்ப கலைஞரை அவ்வளவா விமர்சனம் பண்றது இல்ல.. ஆனா அவரோட லிஸ்ட்ல என் பேரையும் சேத்தத நெனச்சா..
என்னால தாங்க முடியல அய்யா தாங்க முடியல..
மன்னவரே அழலாமா கண்ணீரை விடலாமா
வானொலியில் கேட்ட பாடல்

Help



















