வேக்கப், on 30 March 2011 - 09:24 AM, said:
அது என்ன சுந்த காண்டம்
அந்த காலத்து matter இப்பவும் பலன் தருமா
அதை படிக்ககூட முடியுமா
"ஸ்ரீ ராம மஹா மந்திரம்
பார்வதி பரமனிடம் கேட்கின்றாள்_ "பிரபோ! இந்தக் கலியுகத்தில் மக்கள் உய்ய எளிய வழியைக் கூற வேண்டும்.''
ஈஸ்வரன் பரம கருணையுடன் பார்வதிக்குக் கூறிய அந்த மகா மந்திரமே "ராம'' மந்திரமாகும்.
"ஸ்ரீ ராம ராமேதி
ரமே ரமே மனோரமே
சகஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே''
`ராம்' என்ற அந்த ஈரெழுத்து மந்திரத்தைச் சொன்னால் ஆயிரம் திருநாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும் என்கிறார். அது மட்டுமா?
"நன்மையுஞ் செல்வமு
நாறு நல்குமே,
தின்மையும் பாவமுஞ்
சிதைந்து தேயுமே,
சென்மமு மரணமு
•ன்றித் தீருமே,
இம்மையே இராமா
வென்றிரண்டு எழுத்தினால்''
என்று கம்பன் உறுதியுடன் கூறுகின்றார். அதைக் கலிச்சக்ரவர்த்தி ஆஞ்சநேயன் வாயிலாகவும் கூறுகின்றார்.
சுந்தர காண்டத்தில் மாருதி,
சுந்தர காண்டத்தில் மாருதி, சூழ்கின்ற துன்பங்களையும், துயர்களையும் ராமநாமத்தை உச்சரிப்பதன் மூலமே துரத்தி விட முடியும் என்பதை வலியுறுத்துகின்றான்.
"இராம! என
எல்லாம் மாறும்,
அதின் மாறு பிறிது இல்,
என வலித்தான்''
இதை நிரூபிக்கும் விதத்தில் ராம கதையில் ஒரு நிகழ்ச்சி. இலங்கைக்குச் செல்ல பாலம் அமைக்கப்படுகிறது. குரங்குப் படைகள் எல்லாம் பெரிய பெரிய பாறைகளை பெயர்த்து வந்து கடலில் போடுகின்றன. கடலில் போடப்பட்ட கற்கள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. சற்று நேரம் செய்வதறியது தவித்த ஆஞ்சநேயர் உடனே இந்த சிக்கலுக்கு விடை கண்டவராக மனம் தெளிந்து ஒவ்வொரு கல்லிலும் "ராம'' நாமத்தைப் பொறிக்கச் செய்து கடலிலே போடச் சொல்கிறான். என்ன ஆச்சர்யம்! அந்தக் கற்கள் நிரில் மூழ்காமல் •தக்கின்றன. எளிதில் பாலம் அமைக்கப்பட்டு விடுகிறது. `ராம' நாமத்துக்கு அவ்வளவு மகிமை.
இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அண்ணல் தானும் ஒரு கல்லை எடுத்துப் போடுகிறார்.
ஆனால் ராமன் போட்ட கல் •தக்காமல் கடலில் மூழ்கி விடுகிறது. காரணம் கடவுளைவிட கடவுளின் நாமத்துக்கே மகிமை அதிகம் என்பதை நிரூபிப்பதை போல இருக்கிறது ராமனின் அந்தச் செயல்.
ராமனின் நாமம் எவ்வளவு ருசியானது. சொல்லச் சொல்ல இனிக்கும் திருநாமம் அல்லவா? "ராம ஸ்ரீராமமு எந்த ருசிரா? ஏ• ருசிரா?'' என்று சொல்லிச் சொல்லிப் புளாங்கிதம் அடைகிறார் ஸ்ரீதியாக பிரம்மம்.
சைவ, வைணவக் கோட்பாடுகளை ஐக்கியப்படுத்தும் திருநாமமாகவும் `ராம' நாமம் அமைந்துள்ளது. அஷ்டாக்ஷர மந்திரத்தில் நாராயணாய என்ற சொல்லில் இரண்டாவது எழுத்து "ரா'', சிவாக்ஷரத்தில் நமசிவாய என்பதில் இரண்டாவது எழுத்து `ம' இரண்டையும் இணைத்து `ராம' என்றாகிறது என்று சொல்வார்கள்.
"ரா_ஆ_மா'' என்பதே `ராமா' என்றாயிற்று. இது பிரம்மனையும் (படைக்கும் கடவுள்), விஷ்ணுவையும் (காக்கும் கடவுள்) சிவனையும் (சம்ஹார மூர்த்தி) குறிக்கும் சொல் என்று 36 அழகான விளக்கத்தை ஸ்ரீ சுவா• சிவானந்தர் கூறுகின்றார். அவனது திருநாமத்தை பக்தியுடன் உச்சரிப்பவர்கள் எல்லா நலனும் பெறுவர் என்பது அவரது அருள்வாக்கு.
ஸ்ரீராமன் மனிதனாக அவதரித்து, பக்தர்களின் மகிழ்ச்சிக்காக தான் எல்லா துன்பங்களையும் அனுபவித்தவன். ஆனால், அவனது பக்தர்கள் அவன் திருநாமத்தை உண்மையான பக்தியுடன் சொன்னாலே போதும். இந்தப் பிறவிக் கடலை எளிதில் நிந்தி விடலாம்.
காந்தி அண்ணல் தம் இறுதி மூச்சுவரை `ராம' நாமத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். குண்டடிபட்டு மண்ணிலே தலை சாயும் போதும், அவர் "ராம, ராம'' என்று சொல்லிக்கொண்டே உயிர் நித்ததை நாம் அறிவோம்.
`ராம' நாமத்தின் மகிமையை பற்றி காந்திஜி கூறுகையில், "ராம'' நாமம் சிலருக்கு மட்டுமே சொந்தமல்ல, அது அனைவருக்கும் சொந்தமானது. அதைப் பக்தியுடன் ஜெபிப்பவர் என்றும் வற்றாத, விலை மதிக்கவொண்ணாத அருட் பொக்கிஷத்தைத் தனக்கென சே•த்துக் கொள்கிறார்கள். நாம் அதிலிருந்து எடுக்க, எடுக்க அமுத சுரபி போல மேன் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு முடிவே இல்லை. உபநிஷதம் கூறுவதுபோல முடிவிலாப் பரம்பொருள் அது.''
ராம நாமமே கதி என்றிருப்பவர் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். ராம நாம அமுதம் உள்ளத்திற்கு மகிழ்ச்சி தருவதுடன் உடற்கோளாறுகள் அனைத்தையும் அகற்றி விடும் என்கிறார் காந்திஜி.
பிங்களை ஒரு தாசி. அவளுக்கு ராம நாமத்தின் பெருமையைப்பற்றி எதுவும் தெரியாது. ஒரு திருடன் அவளுக்கு கிளி ஒன்றை தனது அன்பளிப்பாகத் தந்து விட்டுப்போனான். அந்தக் கிளி எப்போதும் "ராம, ராம'' என்று சொல்லும்படி பழக்கப்படுத்தப்பட்டிருந்தது. ராம நாமத்தைப் பற்றி எதுவும் அறியாத பிங்களை கிளியின் வாய் மூலமாக அந்த நாமத்தை அறிந்து கொண்டு, கிளி சொல்லச் சொல்லக் கேட்டு, கேட்டு தானும் இடையறாது உச்சரித்து உய்வு பெற்றாள் என்றால், ராம நாமம் சகல தளைகளையும் அறுத்து மேன்மை அளிக்கும் மந்திர மன்றோ.
அனுமன் வாலில் அரக்கர்கள் தீ மூட்டிய போது, அந்தத் தீ ஆஞ்சநேயனைச் சுட்டெரிக்காமல் இலங்கையை எரித்து விட்டது. அனுமன் ராம நாமத்தை பக்தியுடன் ஸ்மரித்ததால் அன்றோ அவனுக்கு ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை. இலங்கை முழுதும் எரியும் போது விபீஷணனின் மாளிகை மட்டும் தீப்பிடிக்கவில்லை. அவன் ராம நாமத்தில் கொண்டிருந்த பக்தியே காரணம்.
உள்ளும் புறமும் ஒளி வேண்டுமானால் ராம நாமம் என்ற ரத்தினத்தை உனது நாவில் வைத்துக்கொள் என்று கூறுகிறார் துளசி.
இராமாயணம் ஒரு தலை சிறந்த பக்தி காவியம் ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீசுகர் குறிப்பிட்டுள்ள ஒன்பது பக்தி வகைகளும் ராமாயணத்தில் ஒன்பது கதாபாத்திரங்களின் மூலம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன.
தன்யா ராமகதா ஸ்ருதௌ ஹனுமான் வல்மீகயூ கீர்தனே சீதா ஸமஸ்மரணே, தைதவ பரத:
ஸ்ரீ பாதுகா ஸேவனே
அர்ச்சாயாம் சபரீ, ப்ரணமாகரணே
லங்காதிபோ, லக்ஷ்மண:
தாஸ்யோ ஸக்யக் ருதே அர்கஜ:
தணுத்ராணே ஜடாயுர் நவ.
கேட்டலுக்கு அனுமன், பாடலுக்கு வால்மீகி, நினைப்பதற்கு சீதை (ஸ்மரணம்), பாத சேவைக்கு பரதன் (ஸேவனே), அர்ச்சிப்பதில் சபரி, வணங்குவதில் விபீஷணன், தொண்டு புரிவதில் லக்ஷ்மணன், நட்புக்கு சுக்ரீவனும்_குகனும், தன்னையே அர்ப்பணிப்பதில் ஜடாயு என பத்துவித கதாபாத்திரங்களின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
போஜ மகாராசன் தனது அந்தம காலத்தில் உயிர்வாழ ஒன்றரை மணி நேரமே இருக்கிறது என்ற நிலையில் மகாகவி காளிதாசனுடன் சேர்ந்து நாடும், தானும் உய்ய இயற்றிய போஜசம்பூ என்ற கவிதையுடன் கலந்த உரை நடைக்காவியம் ராமகதையின் பெருமையை விளக்கும்.
இராமாயணம் ஒரு சரித்திர நூல் மட்டுமன்றி, வேதம் நிடதங்களில் கூறப்பட்டுள்ள பரம்பொருள் தத்துவத்தை எளிய முறையில் விளக்கும் நடைமுறை வேதாந்த நூலாகும்.
பாரதப் போருக்குப் பின் யுதிஷ்டிரர் பீஷ்மரிடம், "பல அரசர்கள் போரில் இறந்து விட்டதால் நாட்டில் நிலவும் குழப்பத்தை எப்படி நிக்குவது?'' என்று கேட்டார்.
"நாடெங்கும் ராமாயணம் பிரசங்கங்களுக்கு ஏற்பாடு செய்தால் நாட்டில் அமைதி நிலவும்.'' என்று பீஷ்மர் பதிலளித்தார்.
ராமாயணம் நவரசங்களும் அடங்கிய காவிய இலக்கண நூலாகும்.
வில் ஒடித்தலில் வீரம், சீதையுடன் சிருங்காரம், ராமனைப் பிரிந்த தசரதன் துயரில் கருணை விராதன் கபந்தன் வதங்களிலும் சேது பந்தனத்திலும் ஆச்சரியம், பஞ்சவடியில் சூர்ப்பணகை நடந்து கொண்ட விதத்தில் நகைச்சுவை, பாபம் செய்வதில் பயம், தாடகை மற்றும் அசோகவனத்தில் சீதையைச் சுற்றியுள்ள அரக்கிகளின் வர்ணனையில் வெறுப்பு, ராவணனை வதம் செய்ததில் ரௌத்திரம் மற்றும் தண்ட கார்ண்ய வர்ணனையில் அமைதியும் •ளிர்கின்றன.
ராமாயணம் ரிக்_சாம_யஜுர்_அதர்வண என்னும் நான்கு வேதங்களுக்கும் இணையானவை ஆகும்.
லவ_குசர் ராமனின் அசுவமேதயாகத்தின்போது அங்கு தோன்றி இராமாயணக்கதையைப் பாடியபோது ராமர் அதை கேட்டபோது தம்மைவிட உயர்ந்தது இராமாயணமே என்று அரியணையிலிருந்து இறங்கி தாமும் மக்களில் ஒருவராக அமர்ந்து கொண்டாராம்.
ராமர் தம் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் தம்மை நேரில் கண்டவர்களுக்கும் முக்தியளித்தார். ஆனால் ராமாயணமோ காலத்தைக் கடந்து, அதை இன்று கேட்பவர்களுக்கும் முக்தி அளித்து வருகிறது.
ஸ்ரீ ராமாய ஸ்ரீ ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய சீதாய: பதயே நம: