TamilnaduTalk.com: ஸ்ரீ இராமாயணம் - TamilnaduTalk.com

Jump to content

ஸ்ரீ இராமாயணம் ஸ்ரீ இராமனுக்கு ஸ்ரீ சீதை சொன்ன நல்லுரை

#1 User is offline   வர்ஷா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 9,613
 • Joined: 02-மே 08
 • Gender:Not Telling

Posted 27 மார்ச் 2011 - 09:58 மாலை

ஸ்ரீ இராமனுக்கு ஸ்ரீ சீதை சொன்ன நல்லுரை... - ஸ்ரீ ராமாயணம்

Posted Image

கணவன் ஆத்திரத்திலோ, உணர்ச்சி வேகத்திலோ பிறருடன் அனாவசிய வம்புக்குக் கிளம்பினால், மனைவி அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி, அவன் கோபத்தைத் தடுக்க வேண்டும்.
மாறாக, அவன் தவறு செய்ய அனுமதித்துவிட்டு, துன்பம் நேர்கையில் அவனோடு சேர்ந்து துயரப்படுவதில் பயனில்லை. "செய்தக்க அல்ல செயக்கெடும்' என்பதுபோலவே "செய்தக்க செய்யாமையாயினும் கெடும்' அல்லவா?

இதற்கு ராமாயணத்திலேயே பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ஸ்ரீராமபிரான் தண்டகாரண்யத்துக்குப் போனபோது ஸுதீஷர் முதலிய மகரிஷிகள் அவரைக் கண்டார்கள். தாங்கள் அரக்கர்களால் படும் துன்பங்களை அவரிடம் கூறி, அவர்களைத் தண்டிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீராமரும் அவ்வாறே அரக்கர்களை அழிப்பதாக வாக்களித்தார்.
பின்னர் சீதாபிராட்டி, இதைத் தவறு என்று கருதி, அன்போடும் இதமாகவும் சில வார்த்தைகளை ஸ்ரீராமபிரானுக்குச் சொன்னாள்.

"உலகத்தில் மூன்று விதமான பாவங்கள் ஏற்படுவது உண்டு. அவை: 1. பொய் வார்த்தை, 2. பிறர் மனைவியைக் கவர்வது. 3. பகைமையில்லாதவரிடம் கொள்ளும் கோபமும், அதனால் ஏற்படும் நாசமும். தங்களுக்குப் பொய் என்பதே நாவில் வந்ததில்லை. பிற பெண்களைத் தாங்கள் இச்சிப்பதேயில்லை. ஆனாலும், மூன்றாவது தோஷம், ஒரு வித தீங்கும் நமக்குச் செய்யாதவர்களைக் கொல்வது. இதை நீங்கள் புரிவது நியாயமில்லை'.

"ஒரு மகரிஷி செய்த கடும் தவத்தைக் கெடுக்க, கூர்மையான கத்தி ஒன்றை தேவேந்திரன் அவரருகில் கொண்டு வந்து வைத்துவிட்டான். தியானம் முடிந்தபின், அந்த ரிஷி கத்தியைக் கையில் எடுத்து பலவிதமாகப் பயன்படுத்தி, தமது தவப்பயனை இழந்தார் என்று ஒரு வழலாறு உண்டு'.
"தங்களுக்குத் தெரியாத நியாயமில்லை. நான் தங்களுக்குப் புத்தி புகலவில்லை. ஆனால், நினைவுபடுத்துகிறேன். எதற்கும், தம்பி லட்சுமணணைக் கலந்து கொண்டு நியாயப்படி செய்யலாம்' என்றாள்..

இதைக் கேட்ட ராமபிரான், "நீ சொல்வதுதான் நியாயம். ஆனால் நான் அரக்கர்களை தெரிந்து கொண்டு அவர்களின் கொடூரங்களை அறிந்த பின்னரே, அவர்களை அழிக்க முற்படுகிறேன்' என்றார்.
இதுபோல் ராமாயணத்தில் சுக்ரீவன், வாலியை சண்டைக்கு இழுத்தபோது, வாலியின் மனைவி தாரை வாலியிடம் வந்து, "ராமன் என்பவன் அவனுக்கு உதவிகரமாக வந்திருக்கிறான். அவன் மகா பராக்கிமசாலி. தாங்கள் சண்டைக்குப் போக வேண்டாம்' என்று சொல்லித் தடுத்தும், வாலி சண்டைக்குச் சென்று உயிரை இழந்தான்.

அதுபோலவே ராவணனும், தன் மனைவி மண்டோதரி சொன்ன வார்த்தையைக் கேட்காமல் உயிரை இழந்தபோது, மண்டோதரி அதையே சொல்லி பிரலாபித்து அழுதாள்.
http://www.fno.org/mar2012/three_athletes_running_lg_clr.gif
0

#2 User is offline   வேக்கப் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 10,955
 • Joined: 09-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:Dubai
 • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 27 மார்ச் 2011 - 10:47 மாலை

கணவன் ஆத்திரத்திலோ, உணர்ச்சி வேகத்திலோ பிறருடன் அனாவசிய வம்புக்குக் கிளம்பினால், மனைவி அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி, அவன் கோபத்தைத் தடுக்க வேண்டும்.

Quote

நல்ல அறிவுரை சொல்லி ரிக்கார் சீதை

கணவன் மனைவி கற்பை சந்தேகப்பட்டால் என்ன செய்யலாம்.

Quote

சீதையை முன் உதாரணமாக கொண்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா

மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்
0

#3 User is offline   வர்ஷா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 9,613
 • Joined: 02-மே 08
 • Gender:Not Telling

Posted 28 மார்ச் 2011 - 12:07 காலை

View Postவேக்கப், on 27 March 2011 - 10:47 PM, said:

கணவன் ஆத்திரத்திலோ, உணர்ச்சி வேகத்திலோ பிறருடன் அனாவசிய வம்புக்குக் கிளம்பினால், மனைவி அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி, அவன் கோபத்தைத் தடுக்க வேண்டும்.

கணவன் மனைவி கற்பை சந்தேகப்பட்டால் என்ன செய்யலாம்.

உண்மை நிலை தெறியும் வரை பெண் மௌனம் காக்கவேண்டும்

மௌனத்திற்க்கு அதிஹ சக்தி உண்டு

உண்மை நிலை அறிந்ததும் தன் தவருக்காக வெட்கி தலை குனிவான் ஆண்

குறிப்பு:

குஷ்பு போன்ற பெண்மனிக்கு எதைபற்றியும் கவலை படமாட்டார்கள் அது வேறு விஷயம்
http://www.fno.org/mar2012/three_athletes_running_lg_clr.gif
0

#4 User is offline   சங்கரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,070
 • Joined: 23-மார்ச் 08

Posted 30 மார்ச் 2011 - 07:42 காலை

ராமாயணம் படித்தால் (சுந்திர காண்டம் குறிப்பாக படித்தால்) மனம் சாந்தி அடையுமாம்.
தாய் சொல்லைத்தட்டாதே!
0

#5 User is offline   வேக்கப் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 10,955
 • Joined: 09-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:Dubai
 • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 30 மார்ச் 2011 - 09:24 காலை

View Postசங்கரன், on 30 March 2011 - 06:12 AM, said:

ராமாயணம் படித்தால் (சுந்திர காண்டம் குறிப்பாக படித்தால்) மனம் சாந்தி அடையுமாம்.அது என்ன சுந்த காண்டம்

அந்த காலத்து matter இப்பவும் பலன் தருமா

அதை படிக்ககூட முடியுமா
மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்
0

#6 User is offline   வர்ஷா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 9,613
 • Joined: 02-மே 08
 • Gender:Not Telling

Posted 30 மார்ச் 2011 - 11:48 காலை

View Postவேக்கப், on 30 March 2011 - 09:24 AM, said:

அது என்ன சுந்த காண்டம்

அந்த காலத்து matter இப்பவும் பலன் தருமா

அதை படிக்ககூட முடியுமா"ஸ்ரீ ராம மஹா மந்திரம்

Posted Imageபார்வதி பரமனிடம் கேட்கின்றாள்_ "பிரபோ! இந்தக் கலியுகத்தில் மக்கள் உய்ய எளிய வழியைக் கூற வேண்டும்.''

ஈஸ்வரன் பரம கருணையுடன் பார்வதிக்குக் கூறிய அந்த மகா மந்திரமே "ராம'' மந்திரமாகும்.

"ஸ்ரீ ராம ராமேதி
ரமே ரமே மனோரமே
சகஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே''`ராம்' என்ற அந்த ஈரெழுத்து மந்திரத்தைச் சொன்னால் ஆயிரம் திருநாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும் என்கிறார். அது மட்டுமா?

"நன்மையுஞ் செல்வமு
நாறு நல்குமே,
தின்மையும் பாவமுஞ்
சிதைந்து தேயுமே,
சென்மமு மரணமு
•ன்றித் தீருமே,
இம்மையே இராமா
வென்றிரண்டு எழுத்தினால்''என்று கம்பன் உறுதியுடன் கூறுகின்றார். அதைக் கலிச்சக்ரவர்த்தி ஆஞ்சநேயன் வாயிலாகவும் கூறுகின்றார்.

சுந்தர காண்டத்தில் மாருதி,

சுந்தர காண்டத்தில் மாருதி, சூழ்கின்ற துன்பங்களையும், துயர்களையும் ராமநாமத்தை உச்சரிப்பதன் மூலமே துரத்தி விட முடியும் என்பதை வலியுறுத்துகின்றான்.

"இராம! என
எல்லாம் மாறும்,
அதின் மாறு பிறிது இல்,
என வலித்தான்''

இதை நிரூபிக்கும் விதத்தில் ராம கதையில் ஒரு நிகழ்ச்சி. இலங்கைக்குச் செல்ல பாலம் அமைக்கப்படுகிறது. குரங்குப் படைகள் எல்லாம் பெரிய பெரிய பாறைகளை பெயர்த்து வந்து கடலில் போடுகின்றன. கடலில் போடப்பட்ட கற்கள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. சற்று நேரம் செய்வதறியது தவித்த ஆஞ்சநேயர் உடனே இந்த சிக்கலுக்கு விடை கண்டவராக மனம் தெளிந்து ஒவ்வொரு கல்லிலும் "ராம'' நாமத்தைப் பொறிக்கச் செய்து கடலிலே போடச் சொல்கிறான். என்ன ஆச்சர்யம்! அந்தக் கற்கள் நிரில் மூழ்காமல் •தக்கின்றன. எளிதில் பாலம் அமைக்கப்பட்டு விடுகிறது. `ராம' நாமத்துக்கு அவ்வளவு மகிமை.

இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அண்ணல் தானும் ஒரு கல்லை எடுத்துப் போடுகிறார்.
ஆனால் ராமன் போட்ட கல் •தக்காமல் கடலில் மூழ்கி விடுகிறது. காரணம் கடவுளைவிட கடவுளின் நாமத்துக்கே மகிமை அதிகம் என்பதை நிரூபிப்பதை போல இருக்கிறது ராமனின் அந்தச் செயல்.
ராமனின் நாமம் எவ்வளவு ருசியானது. சொல்லச் சொல்ல இனிக்கும் திருநாமம் அல்லவா? "ராம ஸ்ரீராமமு எந்த ருசிரா? ஏ• ருசிரா?'' என்று சொல்லிச் சொல்லிப் புளாங்கிதம் அடைகிறார் ஸ்ரீதியாக பிரம்மம்.

சைவ, வைணவக் கோட்பாடுகளை ஐக்கியப்படுத்தும் திருநாமமாகவும் `ராம' நாமம் அமைந்துள்ளது. அஷ்டாக்ஷர மந்திரத்தில் நாராயணாய என்ற சொல்லில் இரண்டாவது எழுத்து "ரா'', சிவாக்ஷரத்தில் நமசிவாய என்பதில் இரண்டாவது எழுத்து `ம' இரண்டையும் இணைத்து `ராம' என்றாகிறது என்று சொல்வார்கள்.

"ரா_ஆ_மா'' என்பதே `ராமா' என்றாயிற்று. இது பிரம்மனையும் (படைக்கும் கடவுள்), விஷ்ணுவையும் (காக்கும் கடவுள்) சிவனையும் (சம்ஹார மூர்த்தி) குறிக்கும் சொல் என்று 36 அழகான விளக்கத்தை ஸ்ரீ சுவா• சிவானந்தர் கூறுகின்றார். அவனது திருநாமத்தை பக்தியுடன் உச்சரிப்பவர்கள் எல்லா நலனும் பெறுவர் என்பது அவரது அருள்வாக்கு.

ஸ்ரீராமன் மனிதனாக அவதரித்து, பக்தர்களின் மகிழ்ச்சிக்காக தான் எல்லா துன்பங்களையும் அனுபவித்தவன். ஆனால், அவனது பக்தர்கள் அவன் திருநாமத்தை உண்மையான பக்தியுடன் சொன்னாலே போதும். இந்தப் பிறவிக் கடலை எளிதில் நிந்தி விடலாம்.

காந்தி அண்ணல் தம் இறுதி மூச்சுவரை `ராம' நாமத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். குண்டடிபட்டு மண்ணிலே தலை சாயும் போதும், அவர் "ராம, ராம'' என்று சொல்லிக்கொண்டே உயிர் நித்ததை நாம் அறிவோம்.

`ராம' நாமத்தின் மகிமையை பற்றி காந்திஜி கூறுகையில், "ராம'' நாமம் சிலருக்கு மட்டுமே சொந்தமல்ல, அது அனைவருக்கும் சொந்தமானது. அதைப் பக்தியுடன் ஜெபிப்பவர் என்றும் வற்றாத, விலை மதிக்கவொண்ணாத அருட் பொக்கிஷத்தைத் தனக்கென சே•த்துக் கொள்கிறார்கள். நாம் அதிலிருந்து எடுக்க, எடுக்க அமுத சுரபி போல மேன் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு முடிவே இல்லை. உபநிஷதம் கூறுவதுபோல முடிவிலாப் பரம்பொருள் அது.''

ராம நாமமே கதி என்றிருப்பவர் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். ராம நாம அமுதம் உள்ளத்திற்கு மகிழ்ச்சி தருவதுடன் உடற்கோளாறுகள் அனைத்தையும் அகற்றி விடும் என்கிறார் காந்திஜி.

பிங்களை ஒரு தாசி. அவளுக்கு ராம நாமத்தின் பெருமையைப்பற்றி எதுவும் தெரியாது. ஒரு திருடன் அவளுக்கு கிளி ஒன்றை தனது அன்பளிப்பாகத் தந்து விட்டுப்போனான். அந்தக் கிளி எப்போதும் "ராம, ராம'' என்று சொல்லும்படி பழக்கப்படுத்தப்பட்டிருந்தது. ராம நாமத்தைப் பற்றி எதுவும் அறியாத பிங்களை கிளியின் வாய் மூலமாக அந்த நாமத்தை அறிந்து கொண்டு, கிளி சொல்லச் சொல்லக் கேட்டு, கேட்டு தானும் இடையறாது உச்சரித்து உய்வு பெற்றாள் என்றால், ராம நாமம் சகல தளைகளையும் அறுத்து மேன்மை அளிக்கும் மந்திர மன்றோ.

அனுமன் வாலில் அரக்கர்கள் தீ மூட்டிய போது, அந்தத் தீ ஆஞ்சநேயனைச் சுட்டெரிக்காமல் இலங்கையை எரித்து விட்டது. அனுமன் ராம நாமத்தை பக்தியுடன் ஸ்மரித்ததால் அன்றோ அவனுக்கு ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை. இலங்கை முழுதும் எரியும் போது விபீஷணனின் மாளிகை மட்டும் தீப்பிடிக்கவில்லை. அவன் ராம நாமத்தில் கொண்டிருந்த பக்தியே காரணம்.

உள்ளும் புறமும் ஒளி வேண்டுமானால் ராம நாமம் என்ற ரத்தினத்தை உனது நாவில் வைத்துக்கொள் என்று கூறுகிறார் துளசி.

இராமாயணம் ஒரு தலை சிறந்த பக்தி காவியம் ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீசுகர் குறிப்பிட்டுள்ள ஒன்பது பக்தி வகைகளும் ராமாயணத்தில் ஒன்பது கதாபாத்திரங்களின் மூலம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன.

தன்யா ராமகதா ஸ்ருதௌ ஹனுமான் வல்மீகயூ கீர்தனே சீதா ஸமஸ்மரணே, தைதவ பரத:

ஸ்ரீ பாதுகா ஸேவனே
அர்ச்சாயாம் சபரீ, ப்ரணமாகரணே
லங்காதிபோ, லக்ஷ்மண:
தாஸ்யோ ஸக்யக் ருதே அர்கஜ:
தணுத்ராணே ஜடாயுர் நவ.

கேட்டலுக்கு அனுமன், பாடலுக்கு வால்மீகி, நினைப்பதற்கு சீதை (ஸ்மரணம்), பாத சேவைக்கு பரதன் (ஸேவனே), அர்ச்சிப்பதில் சபரி, வணங்குவதில் விபீஷணன், தொண்டு புரிவதில் லக்ஷ்மணன், நட்புக்கு சுக்ரீவனும்_குகனும், தன்னையே அர்ப்பணிப்பதில் ஜடாயு என பத்துவித கதாபாத்திரங்களின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

போஜ மகாராசன் தனது அந்தம காலத்தில் உயிர்வாழ ஒன்றரை மணி நேரமே இருக்கிறது என்ற நிலையில் மகாகவி காளிதாசனுடன் சேர்ந்து நாடும், தானும் உய்ய இயற்றிய போஜசம்பூ என்ற கவிதையுடன் கலந்த உரை நடைக்காவியம் ராமகதையின் பெருமையை விளக்கும்.

இராமாயணம் ஒரு சரித்திர நூல் மட்டுமன்றி, வேதம் நிடதங்களில் கூறப்பட்டுள்ள பரம்பொருள் தத்துவத்தை எளிய முறையில் விளக்கும் நடைமுறை வேதாந்த நூலாகும்.
பாரதப் போருக்குப் பின் யுதிஷ்டிரர் பீஷ்மரிடம், "பல அரசர்கள் போரில் இறந்து விட்டதால் நாட்டில் நிலவும் குழப்பத்தை எப்படி நிக்குவது?'' என்று கேட்டார்.
"நாடெங்கும் ராமாயணம் பிரசங்கங்களுக்கு ஏற்பாடு செய்தால் நாட்டில் அமைதி நிலவும்.'' என்று பீஷ்மர் பதிலளித்தார்.
ராமாயணம் நவரசங்களும் அடங்கிய காவிய இலக்கண நூலாகும்.

வில் ஒடித்தலில் வீரம், சீதையுடன் சிருங்காரம், ராமனைப் பிரிந்த தசரதன் துயரில் கருணை விராதன் கபந்தன் வதங்களிலும் சேது பந்தனத்திலும் ஆச்சரியம், பஞ்சவடியில் சூர்ப்பணகை நடந்து கொண்ட விதத்தில் நகைச்சுவை, பாபம் செய்வதில் பயம், தாடகை மற்றும் அசோகவனத்தில் சீதையைச் சுற்றியுள்ள அரக்கிகளின் வர்ணனையில் வெறுப்பு, ராவணனை வதம் செய்ததில் ரௌத்திரம் மற்றும் தண்ட கார்ண்ய வர்ணனையில் அமைதியும் •ளிர்கின்றன.

ராமாயணம் ரிக்_சாம_யஜுர்_அதர்வண என்னும் நான்கு வேதங்களுக்கும் இணையானவை ஆகும்.
லவ_குசர் ராமனின் அசுவமேதயாகத்தின்போது அங்கு தோன்றி இராமாயணக்கதையைப் பாடியபோது ராமர் அதை கேட்டபோது தம்மைவிட உயர்ந்தது இராமாயணமே என்று அரியணையிலிருந்து இறங்கி தாமும் மக்களில் ஒருவராக அமர்ந்து கொண்டாராம்.

ராமர் தம் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் தம்மை நேரில் கண்டவர்களுக்கும் முக்தியளித்தார். ஆனால் ராமாயணமோ காலத்தைக் கடந்து, அதை இன்று கேட்பவர்களுக்கும் முக்தி அளித்து வருகிறது.

ஸ்ரீ ராமாய ஸ்ரீ ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய சீதாய: பதயே நம:

http://www.fno.org/mar2012/three_athletes_running_lg_clr.gif
0

#7 User is offline   சங்கரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,070
 • Joined: 23-மார்ச் 08

Posted 30 மார்ச் 2011 - 08:12 மாலை

அருமையான விளக்கம் வர்ஷா அவர்களே! தொடர்ந்து இது போன்ற கருத்துக்களைப்பதியுங்கள்.

ஆனால், அவனது பக்தர்கள் அவன் திருநாமத்தை உண்மையான பக்தியுடன் சொன்னாலே போதும். இந்தப் பிறவிக் கடலை எளிதில் நிந்தி விடலாம் - 100% true!
தாய் சொல்லைத்தட்டாதே!
0

#8 User is offline   சங்கரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,070
 • Joined: 23-மார்ச் 08

Posted 01 ஏப்ரல் 2011 - 08:43 மாலை

http://www.raaga.com...ie/TD01696.html

1hr video - Shri.Velukudi Krishnasamy
தாய் சொல்லைத்தட்டாதே!
0

#9 User is offline   ஆரங்கன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,773
 • Joined: 31-ஜனவரி 09
 • Gender:Male
 • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 04 ஏப்ரல் 2011 - 12:03 மாலை

சுந்தர காண்டம் படித்தால் சுபிட்சம் உண்டாகும் இது நான் கண்ட பலன்
வாழு வாழவிடு
0

#10 User is offline   வர்ஷா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 9,613
 • Joined: 02-மே 08
 • Gender:Not Telling

Posted 12 ஏப்ரல் 2011 - 06:35 மாலை

View Postவர்ஷா, on 30 March 2011 - 11:48 AM, said:

"ஸ்ரீ ராம மஹா மந்திரம்

Posted Imageபார்வதி பரமனிடம் கேட்கின்றாள்_ "பிரபோ! இந்தக் கலியுகத்தில் மக்கள் உய்ய எளிய வழியைக் கூற வேண்டும்.''

ஈஸ்வரன் பரம கருணையுடன் பார்வதிக்குக் கூறிய அந்த மகா மந்திரமே "ராம'' மந்திரமாகும்.

"ஸ்ரீ ராம ராமேதி
ரமே ரமே மனோரமே
சகஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே''`ராம்' என்ற அந்த ஈரெழுத்து மந்திரத்தைச் சொன்னால் ஆயிரம் திருநாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும் என்கிறார். அது மட்டுமா?

"நன்மையுஞ் செல்வமு
நாறு நல்குமே,
தின்மையும் பாவமுஞ்
சிதைந்து தேயுமே,
சென்மமு மரணமு
•ன்றித் தீருமே,
இம்மையே இராமா
வென்றிரண்டு எழுத்தினால்''என்று கம்பன் உறுதியுடன் கூறுகின்றார். அதைக் கலிச்சக்ரவர்த்தி ஆஞ்சநேயன் வாயிலாகவும் கூறுகின்றார்.

சுந்தர காண்டத்தில் மாருதி,

சுந்தர காண்டத்தில் மாருதி, சூழ்கின்ற துன்பங்களையும், துயர்களையும் ராமநாமத்தை உச்சரிப்பதன் மூலமே துரத்தி விட முடியும் என்பதை வலியுறுத்துகின்றான்.

"இராம! என
எல்லாம் மாறும்,
அதின் மாறு பிறிது இல்,
என வலித்தான்''

இதை நிரூபிக்கும் விதத்தில் ராம கதையில் ஒரு நிகழ்ச்சி. இலங்கைக்குச் செல்ல பாலம் அமைக்கப்படுகிறது. குரங்குப் படைகள் எல்லாம் பெரிய பெரிய பாறைகளை பெயர்த்து வந்து கடலில் போடுகின்றன. கடலில் போடப்பட்ட கற்கள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. சற்று நேரம் செய்வதறியது தவித்த ஆஞ்சநேயர் உடனே இந்த சிக்கலுக்கு விடை கண்டவராக மனம் தெளிந்து ஒவ்வொரு கல்லிலும் "ராம'' நாமத்தைப் பொறிக்கச் செய்து கடலிலே போடச் சொல்கிறான். என்ன ஆச்சர்யம்! அந்தக் கற்கள் நிரில் மூழ்காமல் •தக்கின்றன. எளிதில் பாலம் அமைக்கப்பட்டு விடுகிறது. `ராம' நாமத்துக்கு அவ்வளவு மகிமை.

இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அண்ணல் தானும் ஒரு கல்லை எடுத்துப் போடுகிறார்.
ஆனால் ராமன் போட்ட கல் •தக்காமல் கடலில் மூழ்கி விடுகிறது. காரணம் கடவுளைவிட கடவுளின் நாமத்துக்கே மகிமை அதிகம் என்பதை நிரூபிப்பதை போல இருக்கிறது ராமனின் அந்தச் செயல்.
ராமனின் நாமம் எவ்வளவு ருசியானது. சொல்லச் சொல்ல இனிக்கும் திருநாமம் அல்லவா? "ராம ஸ்ரீராமமு எந்த ருசிரா? ஏ• ருசிரா?'' என்று சொல்லிச் சொல்லிப் புளாங்கிதம் அடைகிறார் ஸ்ரீதியாக பிரம்மம்.

சைவ, வைணவக் கோட்பாடுகளை ஐக்கியப்படுத்தும் திருநாமமாகவும் `ராம' நாமம் அமைந்துள்ளது. அஷ்டாக்ஷர மந்திரத்தில் நாராயணாய என்ற சொல்லில் இரண்டாவது எழுத்து "ரா'', சிவாக்ஷரத்தில் நமசிவாய என்பதில் இரண்டாவது எழுத்து `ம' இரண்டையும் இணைத்து `ராம' என்றாகிறது என்று சொல்வார்கள்.

"ரா_ஆ_மா'' என்பதே `ராமா' என்றாயிற்று. இது பிரம்மனையும் (படைக்கும் கடவுள்), விஷ்ணுவையும் (காக்கும் கடவுள்) சிவனையும் (சம்ஹார மூர்த்தி) குறிக்கும் சொல் என்று 36 அழகான விளக்கத்தை ஸ்ரீ சுவா• சிவானந்தர் கூறுகின்றார். அவனது திருநாமத்தை பக்தியுடன் உச்சரிப்பவர்கள் எல்லா நலனும் பெறுவர் என்பது அவரது அருள்வாக்கு.

ஸ்ரீராமன் மனிதனாக அவதரித்து, பக்தர்களின் மகிழ்ச்சிக்காக தான் எல்லா துன்பங்களையும் அனுபவித்தவன். ஆனால், அவனது பக்தர்கள் அவன் திருநாமத்தை உண்மையான பக்தியுடன் சொன்னாலே போதும். இந்தப் பிறவிக் கடலை எளிதில் நிந்தி விடலாம்.

காந்தி அண்ணல் தம் இறுதி மூச்சுவரை `ராம' நாமத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். குண்டடிபட்டு மண்ணிலே தலை சாயும் போதும், அவர் "ராம, ராம'' என்று சொல்லிக்கொண்டே உயிர் நித்ததை நாம் அறிவோம்.

`ராம' நாமத்தின் மகிமையை பற்றி காந்திஜி கூறுகையில், "ராம'' நாமம் சிலருக்கு மட்டுமே சொந்தமல்ல, அது அனைவருக்கும் சொந்தமானது. அதைப் பக்தியுடன் ஜெபிப்பவர் என்றும் வற்றாத, விலை மதிக்கவொண்ணாத அருட் பொக்கிஷத்தைத் தனக்கென சே•த்துக் கொள்கிறார்கள். நாம் அதிலிருந்து எடுக்க, எடுக்க அமுத சுரபி போல மேன் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு முடிவே இல்லை. உபநிஷதம் கூறுவதுபோல முடிவிலாப் பரம்பொருள் அது.''

ராம நாமமே கதி என்றிருப்பவர் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். ராம நாம அமுதம் உள்ளத்திற்கு மகிழ்ச்சி தருவதுடன் உடற்கோளாறுகள் அனைத்தையும் அகற்றி விடும் என்கிறார் காந்திஜி.

பிங்களை ஒரு தாசி. அவளுக்கு ராம நாமத்தின் பெருமையைப்பற்றி எதுவும் தெரியாது. ஒரு திருடன் அவளுக்கு கிளி ஒன்றை தனது அன்பளிப்பாகத் தந்து விட்டுப்போனான். அந்தக் கிளி எப்போதும் "ராம, ராம'' என்று சொல்லும்படி பழக்கப்படுத்தப்பட்டிருந்தது. ராம நாமத்தைப் பற்றி எதுவும் அறியாத பிங்களை கிளியின் வாய் மூலமாக அந்த நாமத்தை அறிந்து கொண்டு, கிளி சொல்லச் சொல்லக் கேட்டு, கேட்டு தானும் இடையறாது உச்சரித்து உய்வு பெற்றாள் என்றால், ராம நாமம் சகல தளைகளையும் அறுத்து மேன்மை அளிக்கும் மந்திர மன்றோ.

அனுமன் வாலில் அரக்கர்கள் தீ மூட்டிய போது, அந்தத் தீ ஆஞ்சநேயனைச் சுட்டெரிக்காமல் இலங்கையை எரித்து விட்டது. அனுமன் ராம நாமத்தை பக்தியுடன் ஸ்மரித்ததால் அன்றோ அவனுக்கு ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை. இலங்கை முழுதும் எரியும் போது விபீஷணனின் மாளிகை மட்டும் தீப்பிடிக்கவில்லை. அவன் ராம நாமத்தில் கொண்டிருந்த பக்தியே காரணம்.

உள்ளும் புறமும் ஒளி வேண்டுமானால் ராம நாமம் என்ற ரத்தினத்தை உனது நாவில் வைத்துக்கொள் என்று கூறுகிறார் துளசி.

இராமாயணம் ஒரு தலை சிறந்த பக்தி காவியம் ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீசுகர் குறிப்பிட்டுள்ள ஒன்பது பக்தி வகைகளும் ராமாயணத்தில் ஒன்பது கதாபாத்திரங்களின் மூலம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன.

தன்யா ராமகதா ஸ்ருதௌ ஹனுமான் வல்மீகயூ கீர்தனே சீதா ஸமஸ்மரணே, தைதவ பரத:

ஸ்ரீ பாதுகா ஸேவனே
அர்ச்சாயாம் சபரீ, ப்ரணமாகரணே
லங்காதிபோ, லக்ஷ்மண:
தாஸ்யோ ஸக்யக் ருதே அர்கஜ:
தணுத்ராணே ஜடாயுர் நவ.

கேட்டலுக்கு அனுமன், பாடலுக்கு வால்மீகி, நினைப்பதற்கு சீதை (ஸ்மரணம்), பாத சேவைக்கு பரதன் (ஸேவனே), அர்ச்சிப்பதில் சபரி, வணங்குவதில் விபீஷணன், தொண்டு புரிவதில் லக்ஷ்மணன், நட்புக்கு சுக்ரீவனும்_குகனும், தன்னையே அர்ப்பணிப்பதில் ஜடாயு என பத்துவித கதாபாத்திரங்களின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

போஜ மகாராசன் தனது அந்தம காலத்தில் உயிர்வாழ ஒன்றரை மணி நேரமே இருக்கிறது என்ற நிலையில் மகாகவி காளிதாசனுடன் சேர்ந்து நாடும், தானும் உய்ய இயற்றிய போஜசம்பூ என்ற கவிதையுடன் கலந்த உரை நடைக்காவியம் ராமகதையின் பெருமையை விளக்கும்.

இராமாயணம் ஒரு சரித்திர நூல் மட்டுமன்றி, வேதம் நிடதங்களில் கூறப்பட்டுள்ள பரம்பொருள் தத்துவத்தை எளிய முறையில் விளக்கும் நடைமுறை வேதாந்த நூலாகும்.
பாரதப் போருக்குப் பின் யுதிஷ்டிரர் பீஷ்மரிடம், "பல அரசர்கள் போரில் இறந்து விட்டதால் நாட்டில் நிலவும் குழப்பத்தை எப்படி நிக்குவது?'' என்று கேட்டார்.
"நாடெங்கும் ராமாயணம் பிரசங்கங்களுக்கு ஏற்பாடு செய்தால் நாட்டில் அமைதி நிலவும்.'' என்று பீஷ்மர் பதிலளித்தார்.
ராமாயணம் நவரசங்களும் அடங்கிய காவிய இலக்கண நூலாகும்.

வில் ஒடித்தலில் வீரம், சீதையுடன் சிருங்காரம், ராமனைப் பிரிந்த தசரதன் துயரில் கருணை விராதன் கபந்தன் வதங்களிலும் சேது பந்தனத்திலும் ஆச்சரியம், பஞ்சவடியில் சூர்ப்பணகை நடந்து கொண்ட விதத்தில் நகைச்சுவை, பாபம் செய்வதில் பயம், தாடகை மற்றும் அசோகவனத்தில் சீதையைச் சுற்றியுள்ள அரக்கிகளின் வர்ணனையில் வெறுப்பு, ராவணனை வதம் செய்ததில் ரௌத்திரம் மற்றும் தண்ட கார்ண்ய வர்ணனையில் அமைதியும் •ளிர்கின்றன.

ராமாயணம் ரிக்_சாம_யஜுர்_அதர்வண என்னும் நான்கு வேதங்களுக்கும் இணையானவை ஆகும்.
லவ_குசர் ராமனின் அசுவமேதயாகத்தின்போது அங்கு தோன்றி இராமாயணக்கதையைப் பாடியபோது ராமர் அதை கேட்டபோது தம்மைவிட உயர்ந்தது இராமாயணமே என்று அரியணையிலிருந்து இறங்கி தாமும் மக்களில் ஒருவராக அமர்ந்து கொண்டாராம்.

ராமர் தம் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் தம்மை நேரில் கண்டவர்களுக்கும் முக்தியளித்தார். ஆனால் ராமாயணமோ காலத்தைக் கடந்து, அதை இன்று கேட்பவர்களுக்கும் முக்தி அளித்து வருகிறது.

ஸ்ரீ ராமாய ஸ்ரீ ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய சீதாய: பதயே நம:
SRI RAMA NAVAMI

HAPPY BIRTHDAY SRI RAMA

Posted Image

ஸ்ரீ ராமாய ஸ்ரீ ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய சீதாய: பதயே நம:

"நன்மையுஞ் செல்வமு
நாறு நல்குமே,
தின்மையும் பாவமுஞ்
சிதைந்து தேயுமே,
சென்மமு மரணமு
•ன்றித் தீருமே,
இம்மையே இராமா
வென்றிரண்டு எழுத்தினால்''

http://www.fno.org/mar2012/three_athletes_running_lg_clr.gif
0

#11 User is offline   ஆரங்கன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,773
 • Joined: 31-ஜனவரி 09
 • Gender:Male
 • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 13 ஏப்ரல் 2011 - 04:58 மாலை

View Postவர்ஷா, on 12 April 2011 - 06:35 PM, said:

SRI RAMA NAVAMI

HAPPY BIRTHDAY SRI RAMA

[

ஏங்க வருஷா ஸ்ரீராம நவமிக்கு என்ன விசேஷ பலகாரம் செய்வார்கள். நம்ம அனுராதா கரெக்டா ரெசிப்பி கொடுக்குமே நீங்களும் சொல்வது தானே. எனக்கு தெரிந்து பானகம் கரைப்பார்கள்

நாளை தமிழ் வருஷப்பிறப்பு அதற்கு ஏதாவது விசேஷ ரெசிப்பி உண்டா
வாழு வாழவிடு
0

#12 User is offline   clinton 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,553
 • Joined: 06-மார்ச் 10

Posted 13 ஏப்ரல் 2011 - 09:44 மாலை

இந்த் முன்னாள் இந்துவின் ஸ்ரீராம நவமி vazthukkal
0

#13 User is offline   தென்னவன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 5,053
 • Joined: 28-ஜனவரி 07
 • Gender:Male
 • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 14 ஏப்ரல் 2011 - 12:12 காலை

நல்லது கிளிண்டன். நீங்கள் இது போல் என்றும் நல்லவராக இருக்க வேண்டும். என்னை போன்றவர்கள் கோபத்தில் பேசினாலும் எங்கள் மேல் அன்பு பாராட்ட வேண்டும். அதுதான் நீங்கள் பிறந்த வீட்டுக்கும் (இந்து மதம்) புகுந்த விட்டுக்கும் (கிருத்துவ மதம்) செய்ய கூடிய நல்லது . நாளை யாரும் "இந்த கிளிண்டன் இந்து மதத்தில் இருந்து வந்தவர் தானே இவருக்கு இங்கிதம் இல்லை என்று சொன்னால் என்னாலோ அல்லது வேக்கப்பாலோ அல்லது அருணாலோ அல்லது சங்கரனாலோ அல்லது ஆரங்கனாலோ அல்லது லீனாவாலோ அல்லது உங்கள் தாய் தந்தையாராலோ அல்லது உறவினராலோ அல்லது சொந்தங்களாலோ அல்லது ஷார்ட்டியாலோ அல்லது தில்லு துரையாலோ தாங்கமுடியாது

உங்கள் கண்ணியத்துக்கு என்றும் நான் மதிப்பு கொடுக்கிறேன்
0

#14 User is offline   வேக்கப் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 10,955
 • Joined: 09-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:Dubai
 • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 14 ஏப்ரல் 2011 - 12:34 காலை

View Postஆரங்கன், on 13 April 2011 - 03:28 PM, said:

ஏங்க வருஷா ஸ்ரீராம நவமிக்கு என்ன விசேஷ பலகாரம் செய்வார்கள். நம்ம அனுராதா கரெக்டா ரெசிப்பி கொடுக்குமே நீங்களும் சொல்வது தானே. எனக்கு தெரிந்து பானகம் கரைப்பார்கள்

நாளை தமிழ் வருஷப்பிறப்பு அதற்கு ஏதாவது விசேஷ ரெசிப்பி உண்டா

தமிழ் துரோகிகள் மட்டும் தான் நாளை வருடபிறப்பு கொண்டாடுவார்கள் ( இவர்களை அடையாளம் கண்டு கொள்ள அவரால் நடத்தும் தொலைக்காட்சி பெட்டிகளில் வரும் நிகழ்ச்சி களை கண்டால் புரியும் )

சுத்த தமிழர், பச்சை தமிழர், மறத்தமிழர், புறனானுறு போற்றிய தமிழர், எல்லாம் போங்கள் திருநாளைத்தான் புது வருடம் பிறப்பதாக கொண்டாடுவார்கள்
மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்
0

#15 User is offline   சங்கரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,070
 • Joined: 23-மார்ச் 08

Posted 14 ஏப்ரல் 2011 - 01:15 காலை

சிரி ராமரை வணங்கினாலே போதும், இந்தியாவில் எந்த குற்றமும் இருக்காது! மக்கள் ராமரை வழிபட்டாலே போதும், தன்னாலே நல்லாட்சி வரும். என்றாவது ஒரு நாள் நம் நாடு இந்துஸ்தான் என்ற பெயர் மாற்றம் பெறும். உலகமே நம் நாட்டை வழிப்படும் காலம் வரும்!

ஜெய் சிரி ராம்!
தாய் சொல்லைத்தட்டாதே!
0

#16 User is offline   தென்னவன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 5,053
 • Joined: 28-ஜனவரி 07
 • Gender:Male
 • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 15 ஏப்ரல் 2011 - 06:32 மாலை

அரசியல் சாசனப்படி நம் நாட்டின் பெயர் பாரதம். பரதம் அழகாக இருக்கு. ஒரு நாள் நம் பாரதம் இந்து நாடு என்றுஅறிவுக்கப்படும்.
0

#17 User is offline   வர்ஷா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 9,613
 • Joined: 02-மே 08
 • Gender:Not Telling

Posted 18 ஏப்ரல் 2011 - 10:14 காலை

View Postசங்கரன், on 14 April 2011 - 01:15 AM, said:

சிரி ராமரை வணங்கினாலே போதும், இந்தியாவில் எந்த குற்றமும் இருக்காது! மக்கள் ராமரை வழிபட்டாலே போதும், தன்னாலே நல்லாட்சி வரும். என்றாவது ஒரு நாள் நம் நாடு இந்துஸ்தான் என்ற பெயர் மாற்றம் பெறும். உலகமே நம் நாட்டை வழிப்படும் காலம் வரும்!

ஜெய் சிரி ராம்!

Posted Image

Posted Image

ஸ்ரீ ராம மஹா மந்திரம்
1. பஜே விசேஷ ஸுந்தரம் ஸமஸ்த பாப கண்டனம்!
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராமமத்வயம்!!

2. ஜடாகலாப சோபிதம் ஸமஸ்த பாப நாசகம்!
ஸ்வபக்தபீதி பஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்!!

3. நிஜஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்!
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹராம மத்வயம்!!

4. ஸ ப்ரபஞ்சகல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்!
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹராம மத்வயம்!!

5. நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்!
சிதேகரூப ஸந்தகம் பஜேஹராம மத்வயம்!!

6. பவாப்திபோத்ரூபகம் ஹ்யசேஷ தேஹகல்பிதம்!
குணாகரம் க்ருபாகரம் பஜேஹராம மத்வயம்!!

7. மஹாவாக்ய போதகைர்விராஜமானவாக்பதை:!
பரம்ப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்!!

8. சிவப்தரம் ஸுகப்ரதம் பவச்சிதம்ப்ரமாபஹம்!
விராஜமான தேசிகம் பஜேஹராமமத்வயம்!!

9. ராமாஷ்டகம்படதி யஸ்ஸுகரம் ஸுபுண்யம்
வ்யாஸேன பாஷிதமிதம் ச்ருணுதே மனுஷ்ய:
வித்யாம்ச்ரியம் விபுலலௌக்யமனந்த கீர்த்திம்
ஸம்ப்ராப்யதேஹ விலயே லபதே சமோக்ஷம்!!
இதி ஸ்ரீ வியாஸ மஹரிஷி விரசிதம்
ஸ்ரீராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்.

விளக்கம்

மிகுந்த அழகு வாய்ந்தவரும், பாவங்களை போக்குகிறவரும், பக்தர்களின் மனதை மகிழச் செய்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

ஜடாமுடி தரித்தவரும், எல்லா பாவங்களையும் நாசம் செய்கிறவரும், பயத்தை போக்குகிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கின்றேன்.

ஆத்மஸ்வரூபத்தை உபதேசிப்பவரும், கருணைக்கடலும், ஜனன மரண பயம் போக்குகிறவரும், எங்கும் பரவியிருப்பவரும், மங்களத்தை செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

உலகங்களின் இருப்பிடமாய் இருப்பவரும், நாம ரூபமற்றவரும், எப்பொழுதும் உள்ளவரும், உருவமற்றவரும்,
அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பணிகிறேன்.

உலக சம்பந்தமற்றவரும், நிர்குணமானவரும், பாவமற்றவரும், அழிவற்றவரும், தேஜோரூபியும், இணையற்றவருமான ஸ்ரீராமனை கொண்டாடுகிறேன்.

சம்சார சமுத்திரத்துக்கு படகு போன்றவரும், எல்லா சரீரங்களிலும் வியாபித்தவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணாமூர்த்தியும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

மகாவாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரபிரம்மமாயும், வியாபகமாயும் திகழ்பவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

மங்களத்தைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், பிறவி பயத்தை போக்குகிறவரும், அஞ்ஞானத்தை அழிக்கிறவரும், குருவும், இணையற்ற வருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

ஸ்லோக பலன்

வியாசரால் சொல்லப்பட்டதும், சுலபமானதும், புண்ணியத்தை தருவதுமான இந்த ராமாஷ்டகத்தை படிக்கிறவரும், கேட்கிறவரும், கல்வி, செல்வம், அளவற்ற சுகம், எங்கும் பரவு புகழை அடைந்து முடிவில் மோட்சத்தையும் அடைவார்.
http://www.fno.org/mar2012/three_athletes_running_lg_clr.gif
0

#18 User is offline   வர்ஷா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 9,613
 • Joined: 02-மே 08
 • Gender:Not Telling

Posted 30 மார்ச் 2012 - 11:57 மாலை

ஸ்ரீ ராம மஹா மந்திரம்

ஸ்ரீ ராம நவமிPosted Image
மார்ச் 31ஆம் தேதி ஸ்ரீராம நவமி. அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

‘ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்.

1. பஜே விசேஷ ஸுந்தரம் ஸமஸ்த பாப கண்டனம்!
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராமமத்வயம்!!

2. ஜடாகலாப சோபிதம் ஸமஸ்த பாப நாசகம்!
ஸ்வபக்தபீதி பஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்!!

3. நிஜஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்!
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹராம மத்வயம்!!

4. ஸ ப்ரபஞ்சகல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்!
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹராம மத்வயம்!!

5. நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்!
சிதேகரூப ஸந்தகம் பஜேஹராம மத்வயம்!!

6. பவாப்திபோத்ரூபகம் ஹ்யசேஷ தேஹகல்பிதம்!
குணாகரம் க்ருபாகரம் பஜேஹராம மத்வயம்!!

7. மஹாவாக்ய போதகைர்விராஜமானவாக்பதை:!
பரம்ப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்!!

8. சிவப்தரம் ஸுகப்ரதம் பவச்சிதம்ப்ரமாபஹம்!
விராஜமான தேசிகம் பஜேஹராமமத்வயம்!!

9. ராமாஷ்டகம்படதி யஸ்ஸுகரம் ஸுபுண்யம்
வ்யாஸேன பாஷிதமிதம் ச்ருணுதே மனுஷ்ய:
வித்யாம்ச்ரியம் விபுலலௌக்யமனந்த கீர்த்திம்
ஸம்ப்ராப்யதேஹ விலயே லபதே சமோக்ஷம்!!
இதி ஸ்ரீ வியாஸ மஹரிஷி விரசிதம்
ஸ்ரீராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்.

விளக்கம்

மிகுந்த அழகு வாய்ந்தவரும், பாவங்களை போக்குகிறவரும், பக்தர்களின் மனதை மகிழச் செய்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

ஜடாமுடி தரித்தவரும், எல்லா பாவங்களையும் நாசம் செய்கிறவரும், பயத்தை போக்குகிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கின்றேன்.

ஆத்மஸ்வரூபத்தை உபதேசிப்பவரும், கருணைக்கடலும், ஜனன மரண பயம் போக்குகிறவரும், எங்கும் பரவியிருப்பவரும், மங்களத்தை செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

உலகங்களின் இருப்பிடமாய் இருப்பவரும், நாம ரூபமற்றவரும், எப்பொழுதும் உள்ளவரும், உருவமற்றவரும்,
அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பணிகிறேன்.

உலக சம்பந்தமற்றவரும், நிர்குணமானவரும், பாவமற்றவரும், அழிவற்றவரும், தேஜோரூபியும், இணையற்றவருமான ஸ்ரீராமனை கொண்டாடுகிறேன்.

சம்சார சமுத்திரத்துக்கு படகு போன்றவரும், எல்லா சரீரங்களிலும் வியாபித்தவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணாமூர்த்தியும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

மகாவாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரபிரம்மமாயும், வியாபகமாயும் திகழ்பவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

மங்களத்தைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், பிறவி பயத்தை போக்குகிறவரும், அஞ்ஞானத்தை அழிக்கிறவரும், குருவும், இணையற்ற வருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

ஸ்லோக பலன்

வியாசரால் சொல்லப்பட்டதும், சுலபமானதும், புண்ணியத்தை தருவதுமான இந்த ராமாஷ்டகத்தை படிக்கிறவரும், கேட்கிறவரும், கல்வி, செல்வம், அளவற்ற சுகம், எங்கும் பரவு புகழை அடைந்து முடிவில் மோட்சத்தையும் அடைவார்.
http://www.fno.org/mar2012/three_athletes_running_lg_clr.gif
0

#19 User is offline   வர்ஷா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 9,613
 • Joined: 02-மே 08
 • Gender:Not Telling

Posted 31 மார்ச் 2012 - 12:15 காலை

ஸ்ரீ ராம நவமி
31-03-2012 சனிக்கிழமை ஸ்ரீ ராம நவமி கொண்டாடப் படுகிறது

ராமன் என்பதற்கு ஆனந்தமாக இருப்பவன், ஆனந்தம் தருபவன் என்று

இருவிதமான பொருள்கள் உண்டு.

மனதில் மகிழ்ச்சி இருக்கும்போது, புறச்சூழ்நிலைகள் ஒருவனை

பாதிப்பதில்லை.

கைகேயி பெற்ற வரத்தால் பட்டு உடுத்தி பட்டாபிஷேகத்திற்கு தயாரான

ராமன், மரவுரி கட்டி காட்டுக்கு கிளம்பிச் சென்றார்.

முகத்தில் எந்த வருத்தமும் இல்லை. மலர்ந்த தாமரை மலரைப் போல

புன்னகையுடன் கிளம்பினார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இதனை

"சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை முகத்தினன் என்று குறிப்பிடுகிறார்.

கடவுளாகிய மகாவிஷ்ணு, தர்மத்தை மனிதனால் கடைபிடிக்க முடியும்

என்று வாழ்ந்து காட்டுவதற்காக ராமனாக அவதரித்தார்.

எந்த இடத்திலும் ராமன் "இது என் அபிப்ராயம் என்று சொன்னதே

இல்லை.

"தர்மம் இப்படி சொல்கிறது "மகான்கள் இவ்விதம் சொல்கிறார்கள் என்று

தான் சொல்வார்.

தந்தை தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ராமன்

காட்டுக்குச் சென்று தர்மத்தை நிலைநாட்டினார்.

எந்தநிலையிலும் அவர் மனதில் மகிழ்ச்சியையும், முகத்தில்

மலர்ச்சியையும் இழந்ததே இல்லை.

காட்டுக்குச்சென்ற கட்டுச்சோறு :

கோசலையின் மணிவயிறு, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமனைப்

பெற்றெடுக்கும் பேறு பெற்றது.

அவள் தன் பிள்ளையைக் கண்ணின் மணிபோல காத்து வந்தாள்.

எந்தப் பிள்ளை வெளியூருக்குக் கிளம்பினால் அப்பா தன் பங்குக்கு

பணமும், அம்மா பசிக்கு கட்டுச்சோறும் கொடுத்து அனுப்புவது அக்கால

வழக்கம்.

ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டி வந்தது.

அப்போது தசரதர் பிள்ளைக்கு "சத்தியம் என்னும் பணத்தை தந்தார்.

கோசலை ஒரு விசேஷமான கட்டுச்சோறு செய்து கொடுத்தாள்.

"ஒருநாள் இருநாள் அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,

கெட்டுப்போகாதது இது என்று ராமனிடம் சொன்னாள்.

""என் கண்ணே! ராகவா! நீ எந்த தர்மத்தை பக்தியோடு அனுசரித்து

வந்தாயோ அந்த தர்மத்தையே கட்டுச்சோறாக தருகிறேன்.

அதை என்றென்றும் பின்பற்று.

அது உன் உடனிருந்து காக்கும், என்று ஆசியளித்தாள்.

பத்துதலை ராணனை ஒற்றைத்தலை ராமன் வென்றான் :

தர்மத்தை ஒருவன் பின்பற்ற வேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற

மனநிலை வேண்டும்.

தர்மவாதிகளை உலகம் பரிகாசம் செய்தாலும்,

விடாமல் பின்பற்றும் தைரியம் வேண்டும்.

ராமபிரான் வாழ்வில் எத்தனையோ துன்பத்தைச் சந்தித்தாலும் தர்மத்தைக்

கைவிடவில்லை.

எவன் ஒருவன் தர்மத்தைக் காக்கிறானோ அவனைத் தர்மம் காக்கும்.

ராமபிரானும், ராவணனும் தர்மத்தைப் பின்பற்றும் விஷயத்தில் எதிர்

துருவங்கள்.

ராமனுக்கு ஒரு தலை.

ராவணனுக்கு பத்துத்தலை.

ஒருதலையிடம் பணிவும், தர்மமும் இருந்தது.

பத்துதலையிடம் ஆணவமும், அதர்மமும் இருந்தது.

அதர்மம் ஆயிரம் வழிகளில் தர்மத்தைச் சுற்றி வளைத்தாலும், தர்மமே

இறுதியில் வெற்றி பெறும் என்பதை ராமகாவியம் வலியுறுத்துகிறது.

இதையே "தர்மம் தலை காக்கும் என்று இன்றும் போற்றுகின்றனர்.

இராமாயணத்தில், தர்மத்தை உலகில் நிலைநிறுத்திக் காட்டுவதற்காகவே

ஸ்ரீ ராமர் அவதாரம் எடுத்தார்.

தனயனாய், சகோதரனாய், கணவனாய், அரசனாய், ஒரு நண்பனாய்,

பலப் பல விதங்களில் தர்மத்தை போதிப்பதே ஸ்ரீ ராமதத்துவமாகும்.

ராமரின் பெருமையும், பெருந்தன்மையும் போற்றத்தக்கன.

இராவணன் மிகப் பெரிய சிவ பக்தன். மிகப் பெரிய அனுபவசாலி.

அப்படிப்பட்ட இராவணன், சாகும் இறுதித் தறுவாயில் இருந்தபோது,

தன் தம்பி இலக்குவனை அழைத்து அவரிடம் ராஜ தர்மத்தைக் கேட்டு

அறிந்துவருமாறு பணித்தவர் ஸ்ரீராமர்..
இராவணன் இறந்தபிறகு இறுதிக் கடனைச் செய்ய மறுத்த

இராவணனின் தம்பி விபீஷணனிடம், ""இப்படிப்பட்ட வெறுப்புணர்ச்சி, ஒருவர்

இறந்த பிறகும் கூட இருப்பது அதர்மம்.

மரணத்துடன் பகைமை முடிந்துவிட வேண்டும்.

நீயே இறுதிக் கடன்களைச் செய்யவேண்டும்.

நீ மறுத்தால் அந்தக் கடமைகளைச் செய்ய தான் தயாராக இருப்பதாக''

அறிவுறுத்தினார்..
ராமநாமத்தைப் பற்றி சமய வரலாற்றிலும் ஒரு கதையுண்டு.

சிவபெருமான் நடத்திய திருவிளையாடலில்

சிவன் தனது கணங்களுக்கு

அதிபதியாக யாரை நியமிக்கலாம் என்ற போட்டியில்

தம்பி முருகனைமுந்திக்கொண்டு, "ராமநாமத்துக்குள்' இந்த பிரபஞ்சமே

அடங்கியுள்ளது என்ற ரகசியத்தை தெரிந்துவைத்துக் கொண்டு தரையில்

"ராமா' என எழுதி அதைச்சுற்றி வந்து விநாயகர்,

கண அதிபதி பட்டம் பெற்றாராம்.

அனுமன் ஸ்ரீராமரின் பிரதம சீடன்.

ஸ்ரீராம நாமத்தை மட்டும் ஜெபிப்பதே இவரது கடன்.

இராமாயணம் ஜெபிக்கும் இடங்களில் இவர் இருப்பதாக ஒரு ஐதீகம்.

ஸ்ரீராம நாமம் அனுமன் பக்தர்களின் தாரகமந்திரம்..
இராமாயணத்தில் ஒரு சம்பவம் :

பட்டாபிஷேக சமயத்தில் அனைவரையும் சீதாராமர் கௌரவித்துவிட்டு,

அனுமனிடம் ஒரு முத்துமாலையை சீதாதேவி அன்பளிப்பு செய்தார்.

அனுமன் அந்த மாலையை ஒடித்து முத்துக்களைக் கடித்து அவற்றை கீழே

வீசி சின்னா பின்னமாக்கினார்.

இதைப்பார்த்த சீதாதேவி, ""ஆஞ்சநேயா என்ன காரியம் இது?'' என்று வினவ,

அதற்கு ஆஞ்சநேயர், ""அம்மா! எந்த முத்திலாவது ஸ்ரீராம நாமம் கேட்கிறதா

என்று சோதித்துப் பார்க்கிறேன். ஆனால் ஸ்ரீராம நாமம் ஒலிக்கவே இல்லை.

எனக்கெதற்கு இந்த மாலை?'' என்றார்.

இறைவனின் நாமத்திற்கு எதிரில் அனைத்தும் தூசு என்பதை விளக்கினார்.

மனிதனின் புகழ், மனித மேம்பாடு, உலக நன்மை என்ற இலட்சியங்களை

இராமாயணம் விவரிக்கின்றது.

காலம், செயல், காரண காரியங்கள், கடமைகளைப் பொறுத்தே ஒவ்வொரு

பாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது..
இராமாயணம் இலட்சியங்களை எடுத்துக் காட்டி,

மனிதத்தன்மையை பேணிக் காத்து,

ஏகத்துவத்தைப் போதித்து, தெய்வீகத்தை அனுபவிப்பதற்காகவே

தோற்றுவிக்கப்பட்டது

இன்று புனர்பூசம் நட்சத்திரம்.
ஸ்ரீ ராமர் இந்நட்சத்திரத்தில் அவதரித்ததால் இந்நட்சத்திர நான்கு
பாதங்களும் தோஷமற்றது.

\

ராம' என்ற மந்திரம், "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து

மந்திரத்திலுள்ள (ஓம் என்பது ஒரே எழுத்து) "ரா'

மற்றும் "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்திலுள்ள, "ம' என்ற

பீஜாக்ஷரங்களை இணைத்து உருவாக்கப்பட்டது.

பீஜாக்ஷரம் என்றால், உயிர்ப்புள்ள எழுத்து என்று பொருள்.

""ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம'' என்னும் ராமதாரக மந்திர ஜெபம்

இன்று செய்வதால் தொடர்ந்து வெற்றிகள் ஏற்படும்
http://www.fno.org/mar2012/three_athletes_running_lg_clr.gif
0

#20 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 31 மார்ச் 2012 - 06:10 காலை

சீதை இப்படி எல்லாம் சொன்னாளா...? இப்படிச் சொன்னவ ஏன் ராவணனுடன் ஓடிப்போனாள்...?
0

Share this topic:

 • (2 Pages)
 • +
 • 1
 • 2
 • You cannot start a new topic
 • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users