நல்லா சாகறதுக்கு பயிற்சி!
ஒரு காமெடி சீனில் வடிவேலுவிடம் முத்துக்காளை, ‘‘நாம ரெண்டு பேரும் செத்துச் செத்து விளையாடலாம் வா’’ என்று கூப்பிடுவார். அப்படி ‘செத்து விளையாடும்’ ஒரு பயிற்சியை தென் கொரியாவில் சீரியஸாக தருகிறார்கள். ‘நல்ல மரணத்துக்கான பயிற்சி’ என அழைக்கப்படும் இது, தலைநகர் சியோலில் தரப்படுகிறது.
பயிற்சி எடுக்க வருபவருக்கு, பிணங்களுக்குப் போர்த்தும் மஞ்சள் போர்வை ஆடை, மஞ்சள் ஷூக்கள் அணிவிக்கப்படும். அந்த கெட்டப்பில் அப்படியே சவப்பெட்டிக்குள் நுழைந்து, கண்களை மூடி மல்லாந்து படுத்ததும் அந்த அறையை நிசப்தம் சூழ்ந்துகொள்ளும். ஒரு ஊழியர் சவப்பெட்டியை மூடுவார். மரணத்தின் துயர நிழல், ஒரு கருமைப் போர்வையாக அப்படியே அவரைத் தழுவிக்கொள்ளும். சில நொடிகளுக்குப் பிறகு சவப்பெட்டி திறக்கப்பட, மரணத்தின் வாசல்வரை போய்வந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு அவர் வெளியே வருவார்.
‘‘உயிரின் மதிப்பு இளைய தலை முறையினர் பலருக்குப் புரிவதில்லை. சின்னச்சின்ன காரணங்களுக்குக் கூட தற்கொலை செய்து கொள்கின்றனர். தென் கொரியாவில் தற்கொலை விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. மரணம் என்பது என்ன என்பதை உணர்ந்து பார்த்தால், உயிர் வாழ்வதன் அவசியம் புரியும். அதற்காகத்தான் இந்தப் பயிற்சி’’ என்கிறார் இந்த புதுமை கான்செப்ட்டை அறிமுகம் செய்திருக்கும் காங் குயிங்வா.
மரணத்தை எதிர்கொள்வதற்கான பயிற்சியாகவும் இது இருக்கிறது. ‘‘பிறப்புக்கும் மரணத்துக்கும் இடையிலான ஒரு சின்ன பயணம்தான் வாழ்க்கை. கோபம், பேராசை, பொறாமைன்னு பல உணர்வுகளால இந்தப் பயணம் பலருக்கு இனிமையா இருக்கறதில்லை. மரணம்ங்கறது இதுதான்னு தெரிஞ்சுட்டா, அதுக்கப்புறம் எல்லா விஷயங்களையும் பாசிட்டிவ்வா பார்க்கற மனநிலை வந்துடும். நம்ம வாசல்ல பக்கத்து வீட்டுக்காரர் குப்பை போட்டா கோபம் வராது; ஸ்கூலுக்கு பசங்களை அழைச்சிக்கிட்டு போற ஆட்டோக்காரர் லேட்டா வந்தாலும் திட்டத் தோணாது. கத்தரிக்காய்க்கு காய்கறிக்காரன் யானை விலை சொன்னா ஆத்திரம் வராது. அப்படியான வாழ்க்கை எவ்வளவு இனிமையானதுன்னு வாழ்ந்து பாருங்க’’ என்கிறார் குயிங்வா.
|
Page 1 of 1
நல்லா சாகறதுக்கு பயிற்சி!
Share this topic:
Page 1 of 1

Help












