Jump to content


Photo

விளையாடலாம் வாங்க


 • Please log in to reply
31 replies to this topic

#1 ஆக்னி

ஆக்னி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,316 posts

Posted 03 பிப்ரவரி 2012 - 08:31 காலை

கிராமத்தில் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும் போழுது பள்ளிவிட்டு 4 மணிக்கு வீடு வந்ததும் எங்களுடைய விளையாட்டு ஆரம்பிக்கும். வித்விதமான விளையாட்டுக்களை விளையாடுவோம். ஒன்று போர் அடித்தால் அடுத்தவிளையாட்டு உடனடியாக ஆரம்ப்த்துவிடுவோம்...

சமீபத்தில் என்னுடைய கிராம்த்துக்கு சென்று ஒருவாரம் தங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த ஒரு வாரத்தில் நான் கவனித்த ஒரு விசயம் என்னன்னா "எங்களுடைய சிறுவயது விளையாட்டை போன்று இன்றய சிறுவர்கள் யாரும் விளையாடவில்லை" என்பது தான். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கிரிக்கெட், கிரிக்கெட்... கிரிக்கெட் மட்டுமே...

நான் விளையாடி இன்று எங்கள் ஊர் சிறுவர்கள் மறந்து போன சில விளயாட்டை இங்கு பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறென்.

என்ன பதியவா?

Edited by ஆக்னி, 03 பிப்ரவரி 2012 - 08:32 காலை.


#2 அஸ்ஸாஞ்

அஸ்ஸாஞ்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 4,021 posts
 • Gender:Male

Posted 03 பிப்ரவரி 2012 - 08:34 காலை

பொங்கலுக்கு ஊருக்கு போனதை சொல்றிங்களா சார்....

#3 ஆக்னி

ஆக்னி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,316 posts

Posted 03 பிப்ரவரி 2012 - 08:39 காலை

பொங்கலுக்கு ஊருக்கு போனதை சொல்றிங்களா சார்....


இல்லை சார்... பொங்கலுக்கு ஊருக்கு போய் கிட்டதட்ட் 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது...

#4 கிமீரா

கிமீரா

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 8,954 posts
 • Gender:Female

Posted 03 பிப்ரவரி 2012 - 03:30 மாலை

பதியுங்க ஆக்னி......

#5 அருணாசலம்

அருணாசலம்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,127 posts
 • Gender:Male

Posted 03 பிப்ரவரி 2012 - 05:22 மாலை

அட கிரிகெட்டாவது விளையாடுறாங்களேனு சந்தோச படுங்க பாஸ்... இப்போவேல்லம் பசங்க கம்ப்யூடெர்கேம்ஸ், பிஸ்3, வீ கேம்ஸுனு விளையாடுறாங்களேனு கவலபடுறேன்..
உலகெங்கும் அமைதி பரவட்டும்

#6 பாலா

பாலா

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 1,864 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 03 பிப்ரவரி 2012 - 06:30 மாலை

அட கிரிகெட்டாவது விளையாடுறாங்களேனு சந்தோச படுங்க பாஸ்... இப்போவேல்லம் பசங்க கம்ப்யூடெர்கேம்ஸ், பிஸ்3, வீ கேம்ஸுனு விளையாடுறாங்களேனு கவலபடுறேன்..


நான் சின்ன வயசில விளையாடியது : கில்லி தாண்டு (கிட்டிப்புள்), கபடி, கொக்கோ (இது தமிழ் நாட்டு விளையாட்டா?) , கால்பந்து, சாஃப்ட் பால், தென்னை மட்டை கிரிக்கெட்....இன்ன பிற...

விக்கிப்பிடியாவில் உள்ள ஆட்டங்கள் யாரெல்லாம் ஆடி யிருக்கிறீர்கள் என்று கூறுங்கள்!

http://ta.wikipedia....்_விளையாட்டுகள்


தொன்மகால விளையாட்டுக்கள்

புனல் விளையாட்டு [1]
பொழில் விளையாட்டு
பந்தாட்டம் (விளையாட்டு) [2]
மல்லாடல்
கழைக்கூத்து
வல்லாட்டம்

தற்காப்பு/ஆடற் கலைகள்
தமிழர் தற்காப்புக் கலைகள்
தமிழர் ஆடற்கலைகள் பட்டியல்

வெளிக்கள விளையாட்டுக்கள்
ஓணப்பந்து விளையாட்டு
கிட்டிப் புள்ளு
கிளித்தட்டு, தாச்சி
சடுகுடு/கபடி
எட்டுக்கோடு
வழுக்கு மரம் ஏறல்
கயிறு இழுத்தல்
முட்டி உடைத்தல்/உறியடி
பாரிவேட்டை [3]
சங்கீதக் கதிரை
கிளி கோடு பாய்தல்
போர்த்தேங்காய்
பல்லாங்குழி
ஒப்பு
இரட்டை மாட்டுப் பந்தயம்
மோடி விளையாட்டு
கண்ணாமூச்சி (Hide & Seek)
குழை எடு
பேணி அடித்தல், பேணிப்பந்து, தகரப்பந்து
அம்பெறிதல்
கோழிச்சண்டை
வண்டிச்சவாரி
சில்லிக்கோடு
இளவட்டக் கல்
கீச்சு மச்சுத் தம்பலம்
போளையடி
வெள்ளமடித்தல்
சிற்றில், வீடு கட்டி விளையாடுதல்
கயிறடித்தல்
கப்பல் விடுதல், தோணி விடுதல்
குலை குலையாய் முந்திரிக்காய்
தேர்கட்டி விளையாட்டு
உப்பு மூட்டை
எறி பந்து
தும்பி விளையாட்டு
தொப்ப விளையாட்டு
எல்லே எல்லே
ஆடு வீடு
ஊஞ்சல்
தணையடி அடி
புளியடி புளியடி
ஒப்பு விளையாட்டு
மரமேறல்
நீந்தல்
ஈருருளி மெது ஓட்டம்
சாக்கு ஓட்டம்
புளிச்சல்
தலையணைச் சண்டை
கள்ளன் காவல்
பச்சைக் குதிரை
காற்றாடி
எலியும் பூனையும்
தட்டா மாலை
சில்லுக் கோடு
கொழுக்கட்டை
பட்டம்
பூசணிக்காய் (விளையாட்டு)
ஓடிப் பிடித்தல்/அடிச்சுப் பிடித்தல்
ஒளித்துப் பிடித்தல்
கண்கட்டிப் பிடித்தல்/கண் பொத்தி விளையாட்டு
கண்கட்டி ஓட்டம்
கயிறு பாய்தல்
சமநிலை பேணுதல்
கிடுகு பின்னுதல்
ஊசி நூல் கோர்த்தல்
மரம் ஏறுதல்
தேங்காய் துருவுதல்
தட்டாங்கல்
பல்லாங்குழி
பாட்டி பேத்தி
அல்லி மல்லி தாமரை
வீடு கட்டல்
வளையல் விளையாட்டு
ஊஞ்சல்
சோளக்கதிர்
சிறுவீடு
குத்து விளையாட்டு
குண்டு விளையாட்டு
வண்டியுருட்டுதல்
பூச்சி விளையாட்டு
மரங்கொத்தி (விளையாட்டு)

உள்ளக விளையாட்டுக்கள்
தாயக் கட்டை
சொக்கட்டான்
கொக்கான்
பல்லாங்குழி
ஆடும் புலியும்
பாம்பும் ஏணியும்
பாண்டி
பம்பரம்
ஆடுபுலி ஆட்டம்
மூன்றுகல் ஆட்டம்
செப்புசாமான்
உப்புத் தூக்கல்
கூட்டாஞ்சோறாக்கல்
தத்தைக்கா..
சங்கு சக்கரம்
பருப்புக்கட
கிச்சு கிச்சு தாம்பலம்
ஒத்தையா, ரெட்டையா
கரகர வண்டி
கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்
சீதைப் பாண்டி
ஒருகுடம் தண்ணி ஊத்தி
குலைகுலையா முந்திரிக்காய்
கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை
நொண்டி

ஆடவர் விளையாட்டுகள்
ஆடவர் விளையாட்டுகள் பெரும்பாலும் புறவிளையாட்டுகளாகவே (outdoor games) உள்ளன.
ஜல்லிக்கட்டு
பாரிவேட்டை
சிலம்பம்
புலிவேடம்
சடுகுடு
இளவட்டக்கல்
ஓட்டம்
இரட்டை மாட்டுப் பந்தயம்
மோடி விளையாட்டு
உரிமரம் ஏறுதல்
பானை உடைத்தல்
உறிப்பானை விளையாட்டு
சூதுதாயம்
வாய்ப்புநிலை விளையாட்டுகள்
அறிவுத் திறன் விளையாட்டுகள்
இவை ஆகியன ஆடவர் விரும்பி ஆடும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.


மகளிர் விளையாட்டுகள்
மகளிர் விளையாட்டுகள் பெரும்பாலும் அக விளையாட்டுகளாகவே (Indoor games) உள்ளன.
தாயம்
பல்லாங்குழி
தட்டாங்கல்
மஞ்சள் நீர் தெளித்தல்
இவை பொதுவாக மகளிர் பங்கேற்கும் முக்கிய விளையாட்டுகளாகும்.

சிறுவர் சிறுமியர் விளையாட்டுகள்
எலியும் பூனையும், சோளக்கதிர், சிறுவீடு, குலைகுலையாய் முந்திரிக்காய் ஆகியன சிறுவர் சிறுமியர் சேர்ந்து பங்கு கொள்ளும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.

சிறுவர் விளையாட்டுகள்
கிட்டிப்புள், குத்து விளையாட்டு, பச்சைக் குதிரை, குத்துப் பம்பரம், குண்டு விளையாட்டு, எறிபந்து, காற்றாடி, பட்டம், வண்டியுருட்டுதல், பூச்சி விளையாட்டு, மரங்கொத்தி முதலியன சிறுவரின் முக்கிய விளையாட்டுகளாகும்.

சிறுமியர் விளையாட்டுகள்
சில்லி, சோற்றுப்பானை, கும்மி, திரிதிரி, கண்கட்டி விளையாடுதல், மலையிலே தீப்பிடிக்குது, தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல் முதலியன சிறுமியரின் முக்கிய விளையாட்டுகளாகும்.

குழந்தை விளையாட்டுகள்

உச்சரிப்பு விளையாட்டு, வினா விடைச் சங்கிலி, பருப்புக் கடைதல் ஆகியன கிராமபுற குழந்தைகள் பங்கு பெறும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
விளையாட்டு வகைகள்

புனல் விளையாட்டு
நீரில் விளையாடுவது. சில தருணம் நீரில் அடித்துச் செல்லப்படும் தலைவியை தலைவன் காப்பாற்றுவதும் இதில் அடங்கும்.

பந்து
பழங்காலத்தில் ஆண்கள் தேங்காய் நார் , பஞ்சு , சிறிய அளவிலான இரும்பு களிமண் முதலியவற்றில் ஆடினர். பெண்கள் பூக்களைக் கொண்டு ஆடினர். குதிரையில் பயணம் செய்தும் பந்து விளையாடினர். இப்போது விளையாடும் போலோ என்கிற விளையாட்டு இந்த வகையைச் சார்ந்தது.

அசதியாடல்
ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்து விளையாடுவது

அம்மானை
பெண்கள் குழுக்களாக வினா, விடைகளை பாடல்களாகப் பாடப்படுவது அம்மானை. பாடலின் முடிவில் அம்மானை என்ற சொல் இடம் பெற வேண்டும்.

ஊசல்
ஊஞ்சல் விளையாட்டு. ஆலம் விழுது முதல் அம்பொன் வரை விளையாட்டுக் கருவிகளாக பயன்பட்டன.

கழங்கு
ஒரு காயைத் தூக்கி போட்டு பிடித்தாடும் ஆட்டம். புளியங்காய், சிறு கற்கள் முதலியன கொண்டு ஆடப்படுவது.

கண் புதைந்து ஆடுதல்
இன்று கண்ணாமூச்சி என்று இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது

கறங்கு
கறங்கு என்றால் சுழற்சி. பனை ஓலையை சீவி வெட்டி காற்றாடி போல செய்து காற்று வரும் திசையை நோக்கி ஓடினால் விசிறியைப் போல சுழற்றிக் கொண்டு விளையாடுவது.

குரவை
பெண்கள் வட்டமாக கை கோர்த்து பாடி ஆடுவது

சிறு சோறாக்கல்
கூட்டாஞ் சோறு ஆக்கல்

சிற்றில் செய்தல்
கடல் அல்லது ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுதல்

வட்டு
பொருளை உருட்டி விளையாடும் ஆட்டம் ( தாயம் போல)

ஏறுகோள்
ஜல்லிக்கட்டு

வள்ளை
உரலில் ஒரு பொருளைக் குத்திக் கொண்டு பாடும் ஒரு விளையாட்டு

சதவி
பட்டம் விளையாடுதல் போன்ற ஒரு விளையாட்டடு


தமிழ் குழந்தை விளையாட்டுக்கள்

விளையாட்டுப் பாடல்
உச்சரிப்பு விளையாட்டு
வினா விடைச் சங்கிலி
பருப்புக் கடைதல்
உயிர் போனால் மயிர் போச்சு!

#7 கிமீரா

கிமீரா

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 8,954 posts
 • Gender:Female

Posted 03 பிப்ரவரி 2012 - 08:45 மாலை

தாயக் கட்டை
சொக்கட்டான்
பல்லாங்குழி
ஆடும் புலியும்
பாம்பும் ஏணியும்
பாண்டி
பம்பரம்
ஆடுபுலி ஆட்டம்
மூன்றுகல் ஆட்டம்
செப்புசாமான்
உப்புத் தூக்கல்
கூட்டாஞ்சோறாக்கல்
பருப்புக்கட
கிச்சு கிச்சு தாம்பலம்
ஒத்தையா, ரெட்டையா
கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்
ஒருகுடம் தண்ணி ஊத்தி
குலைகுலையா முந்திரிக்காய்
நொண்டி
குத்துப் பம்பரம்
காற்றாடி, பட்டம்,
கும்மி,
கண்கட்டி விளையாடுதல்
குலை குலையாய் முந்திரிக்காய்
உப்பு மூட்டை
எறி பந்து
தும்பி விளையாட்டு
தொப்ப விளையாட்டு
ஊஞ்சல்
மரமேறல்
நீந்தல்
சாக்கு ஓட்டம்
தலையணைச் சண்டை
ஒளித்துப் பிடித்தல்
கண்கட்டிப் பிடித்தல்/கண் பொத்தி விளையாட்டு
கண்கட்டி ஓட்டம்
கயிறு பாய்தல்
வீடு கட்டல்
ஊஞ்சல்
கிட்டிப் புள்ளு
சோற்றுப்பானை
சடுகுடு/கபடி
கயிறு இழுத்தல்
வண்டியுருட்டுதல்


இந்த விளையாட்டுகள் எல்லாம் நான் சிறுவயதில் ஆடி இருக்கிறேன்..இன்னும் சில விளையாட்டுகள் கூட........ :குழந்தை:

சிறுவயதி ஆடிய விளையாட்டுகளை நினைவுபடுத்திய ஆக்னிக்கு நன்றி. :சூப்பர்:

Edited by கிமீரா, 03 பிப்ரவரி 2012 - 08:46 மாலை.


#8 அருணாசலம்

அருணாசலம்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,127 posts
 • Gender:Male

Posted 03 பிப்ரவரி 2012 - 09:13 மாலை

இந்த விளையாட்டுகள் எல்லாம் நான் சிறுவயதில் ஆடி இருக்கிறேன்..இன்னும் சில விளையாட்டுகள் கூட........ :குழந்தை:

சிறுவயதி ஆடிய விளையாட்டுகளை நினைவுபடுத்திய ஆக்னிக்கு நன்றி. :சூப்பர்:


அந்த டான்ஸ பாத்த ஏதோ வெவகாரமான ஆட்டமெல்லாம் ஆடியிருக்கிங்க போல
உலகெங்கும் அமைதி பரவட்டும்

#9 தென்னவன்

தென்னவன்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 5,074 posts
 • Gender:Male
 • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 03 பிப்ரவரி 2012 - 09:45 மாலை

புனல் விளையாட்டு [1] - இது என்ன கண்ணியமான ஆட்டம் தானா ?

#10 பாலா

பாலா

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 1,864 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 03 பிப்ரவரி 2012 - 09:55 மாலை

புனல் என்றால் ஆற்று நீர்...

http://www.thamizhst...ppurakkalai.htm


பண்டைத் தமிழகத்தில் ஆற்றருகே இருந்த மக்கள் எல்லோரும் ஆண்டுதோறும் ஆற்றில் புதுவெள்ளம் வந்தவுடன் ஒருங்கே சென்று பகற்பொழுது முழுதும் அவ்வெள்ளத்தில் திளைத்தாடி இன்புற்ற விளையாட்டு விழா புனல் விளையாட்டு என்று பெயர் பெற்றது. அது நீர்விழா, நீராட்டு, நீராட்டணி முதலிய பெயர் கொண்டும் வழங்கிற்று.

Edited by பாலா, 03 பிப்ரவரி 2012 - 09:56 மாலை.

உயிர் போனால் மயிர் போச்சு!

#11 ஆக்னி

ஆக்னி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,316 posts

Posted 03 பிப்ரவரி 2012 - 10:32 மாலை

எறி பந்து

இது ஒரு சுவராசியமான விளையாட்டு. ஒரு ரப்பர் பந்து இருக்கும். அதனை எடுத்து அடுத்தவர் மேல் எறியவேண்டும். பந்தை எந்த இடத்தில் எடுக்கின்றார்களொ அந்த இடத்திலிருந்து தான் எறியவேண்டும். பந்தை கையில் தூக்கிகொண்டு ஓடக்கூடாது. யாரை பார்த்து எறிகின்றாரோ அவருக்கு திறமை இருந்தால் அந்த பந்தை பிடித்து எறிந்தவர் மேலே திருப்பி எறியலாம். அல்லது பந்தின் வழியில் இருந்து விலகி நிக்கலாம். அப்படி எதாவது செய்தால் தப்பிக்கலாம். பயந்து முதுகை காண்பித்தானோ தொலைந்தான். பந்தின் அடி பொலீர் பொலீர் என்று மேலே விழும்.

இதில் ரெண்டு மூண்று பேர் சேர்ந்து தனக்கு கொஞ்சம் புடிக்காதவன், அல்லது கொஞ்சம் சண்டித்தனம் செய்பவனை எல்லாம் மொத்தி எடுத்த கதையும் உண்டு.

எத்தனை தான் அடிபட்டாலும், எத்தனை அடி கொடுத்தாலும் எறிபந்து விளையாட வாரியா என்றால் சாப்பிடும் சாப்பாட்டை அரக்க பரக்க வயிற்றில் போட்டுவிட்டு கையை கழுவியும் கழுவாமலும் ஓடிய காலம் அது. நீங்க யாராவது இந்த விளையாட்டு விளையாடியிருக்கின்றீர்களா?

Edited by ஆக்னி, 03 பிப்ரவரி 2012 - 10:32 மாலை.


#12 அருணாசலம்

அருணாசலம்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,127 posts
 • Gender:Male

Posted 03 பிப்ரவரி 2012 - 10:41 மாலை

எறி பந்து

இது ஒரு சுவராசியமான விளையாட்டு. ஒரு ரப்பர் பந்து இருக்கும். அதனை எடுத்து அடுத்தவர் மேல் எறியவேண்டும். பந்தை எந்த இடத்தில் எடுக்கின்றார்களொ அந்த இடத்திலிருந்து தான் எறியவேண்டும். பந்தை கையில் தூக்கிகொண்டு ஓடக்கூடாது. யாரை பார்த்து எறிகின்றாரோ அவருக்கு திறமை இருந்தால் அந்த பந்தை பிடித்து எறிந்தவர் மேலே திருப்பி எறியலாம். அல்லது பந்தின் வழியில் இருந்து விலகி நிக்கலாம். அப்படி எதாவது செய்தால் தப்பிக்கலாம். பயந்து முதுகை காண்பித்தானோ தொலைந்தான். பந்தின் அடி பொலீர் பொலீர் என்று மேலே விழும்.

இதில் ரெண்டு மூண்று பேர் சேர்ந்து தனக்கு கொஞ்சம் புடிக்காதவன், அல்லது கொஞ்சம் சண்டித்தனம் செய்பவனை எல்லாம் மொத்தி எடுத்த கதையும் உண்டு.

எத்தனை தான் அடிபட்டாலும், எத்தனை அடி கொடுத்தாலும் எறிபந்து விளையாட வாரியா என்றால் சாப்பிடும் சாப்பாட்டை அரக்க பரக்க வயிற்றில் போட்டுவிட்டு கையை கழுவியும் கழுவாமலும் ஓடிய காலம் அது. நீங்க யாராவது இந்த விளையாட்டு விளையாடியிருக்கின்றீர்களா?
நீங்க சொல்றது முதுகு பஞ்சர் மாதிரி இருக்கு... ஆனா அதுல பந்தை எடுத்துகிட்டு ஓடலாம்... முதலில் ஒரு ஆள் மத்தவங்க மேல எரியனும், யார் முதுகிலாவது அடித்துவிட்டால் அவங்க இரண்டு பேரும் சேர்ந்து மத்தவங்க மேல் எரியனும்.. இப்படியே கடைசியா அடிபடாம இருப்பவர் வின்னர்!!
உலகெங்கும் அமைதி பரவட்டும்

#13 ஆக்னி

ஆக்னி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,316 posts

Posted 03 பிப்ரவரி 2012 - 10:43 மாலை

நீங்க சொல்றது முதுகு பஞ்சர் மாதிரி இருக்கு... ஆனா அதுல பந்தை எடுத்துகிட்டு ஓடலாம்... முதலில் ஒரு ஆள் மத்தவங்க மேல எரியனும், யார் முதுகிலாவது அடித்துவிட்டால் அவங்க இரண்டு பேரும் சேர்ந்து மத்தவங்க மேல் எரியனும்.. இப்படியே கடைசியா அடிபடாம இருப்பவர் வின்னர்!!


இல்லபாஸ்... இதுல வின்னர் லூசர் எல்லாம் கிடையாது. எல்லாருமே தனிஆள் தான். டீம் ஒருக்கும் கிடியாது. பொதுவாக எவ்வளவு வேகமா வந்தாலும் அந்த பந்தை லாகவமாக பிடித்து திருப்பி அடிச்சிடுவோம். தெரியாம முதுகை காமிச்சாதான் மாட்டிப்போம்.

#14 அருணாசலம்

அருணாசலம்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,127 posts
 • Gender:Male

Posted 03 பிப்ரவரி 2012 - 10:47 மாலை

இல்லபாஸ்... இதுல வின்னர் லூசர் எல்லாம் கிடையாது. எல்லாருமே தனிஆள் தான். டீம் ஒருக்கும் கிடியாது. பொதுவாக எவ்வளவு வேகமா வந்தாலும் அந்த பந்தை லாகவமாக பிடித்து திருப்பி அடிச்சிடுவோம். தெரியாம முதுகை காமிச்சாதான் மாட்டிப்போம்.
அப்போ இதுல என்ன சார் ஃப்ன் இருக்கு? எனக்கு புரியல? வின்னர் லூசர் இல்லைனா என்ன தான் விளையாட்டோட இலக்கு?
உலகெங்கும் அமைதி பரவட்டும்

#15 ஆக்னி

ஆக்னி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,316 posts

Posted 04 பிப்ரவரி 2012 - 08:06 காலை

அப்போ இதுல என்ன சார் ஃப்ன் இருக்கு? எனக்கு புரியல? வின்னர் லூசர் இல்லைனா என்ன தான் விளையாட்டோட இலக்கு?


இது ஒரு பன் பிளே கேம் மட்டுமே...

#16 ஆக்னி

ஆக்னி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,316 posts

Posted 04 பிப்ரவரி 2012 - 08:36 காலை

பிள்ளையார் பந்து


இந்த விளையாட்டு விளையாட ஒரு நடுத்தரமான கல் வேண்டும். அது தான் பிள்ளையார். அவரை அடிப்பதற்கு ஒரு பந்து வேண்டும். நாங்கள் அனைவரும் இரு அணியாக சம எண்ணிக்கையில் பிரிக்கப்படுவோம். ஆட்ட்த்தின் விதி இதுதான்.

பிள்ளையார் என்று சொல்லும் சிறிய கல்லை ஒரு சுவரின் அருகில் நட்டவேண்டும். ஒரு டீம் பிள்ளையாரின் இருகரையிலும் நடுவில் இடம் விட்டு வரிசையாக நிப்பார்கள். அடுத்த டீமில் இருந்து ஒருவொருவராக வந்து குறி பார்த்து பிள்ளையாரை அடிக்க்து சரியவைக்க வேண்டும். ஒருவருக்கு மூன்று முறை வாய்ப்பு. மூன்று முறைக்குள் ஒருவர் அடிக்கவில்லை என்றால் பந்து அதே அணியை சேர்ந்த அடுத்தவர் கைக்கு போய்விடும். அவர் முயற்சிப்பார். பந்தால் அடிக்கும் பொழுது பந்து சுவரில் பட்டு தரையில் படுவதற்குள் எதிர் அணியினர் பிடித்துவிட்டால் எறிந்தவர் அவுட். அதே அணியை சேர்ந்த அடுத்தவர் முயற்சிப்பார். அணியில் அனைவரும் அவுட் ஆணால் பந்து எதிர் அணியினருக்கு சென்றுவிடும். இவர்கள் போய் பந்து பிடிக்கும் வேலையை பார்க்கவேண்டும்.

சரி பிள்ளையாரை அடித்து அவர் சரிந்துவிழுந்துவிட்டால் அடுத்தது என்ன?

அங்க தான் ரியல் கேம் ஆரம்பிக்கும். பிள்ளையார் சரிந்தும் அந்த பந்து தரையில் படுவதற்குள் பிடிக்க முடியவில்லை என்றால் எதிர் அணியினர் நாலா பக்கமும் சிதறி ஓடுவார்கள். பிள்ளையாரை அடித்த அணியினர் உடனடியாக பந்தை எடுத்துவிட்டு ஒன்று கூடுவார்கள். உள்ளே நடப்பது வேளியே தெரியாத அளவுக்கு நெருக்கமாக நிற்பார்கள். அவர்கள் கலைவர்தற்கு முன்னர் பந்து ஒருவரிடம் ஒப்படைத்து மறைத்து வைக்கப்படும். ஆனால் எல்லோருமே தாங்கள் தான் பந்தை வைத்திருக்கின்றோம் என்ற ஒரு பில்டப்பை கொடுத்து கொண்டிருப்போம். இப்பொழுது எதிர் அணியினர் வந்து பந்து வைத்திருக்கும் அணியினர் ஒருவரின் தலையை தொட்டுவிட்டு பிள்ளையாரை தொடவேண்டும். அப்படி அவர் தொட முயற்சிக்கும் பொழுது பந்தை மறைத்து வைத்திருப்பர் எடுத்து அதனை அவர் மேலே எறிய வேண்டும். அது அவர் மேல் பட்டுவிட்டால் எதிர் அணியினர் அவுட். அவ்ர்கள் மீண்டும் பந்து பிடிக்கும் இடத்தில் நிற்க வேண்டும். பந்து அவர்மேல் படவில்லை என்றால் இந்த அணியினர் அவுட். அவர்க்ள் போய் பந்து பிடிக்கும் இடத்தில் நிற்க வேண்டும்.

பந்தை மறைத்து வைத்து வைப்பதில் இருந்து பந்தை எடுத்து எறிவது வரை பல சுவராசியமான திருப்பங்கள் நடக்கும். சிலரிடம் பந்து இல்லை என்றால் கூட பந்து இருப்பது போன்று நிறைய பில்டப் கொடுத்து எதிர் அணியினரை துரத்துவார்கள். ஒருகட்டத்தில் அவனிடம் பந்து இல்லை என்று தெரிந்ததும் எதிர் அணியினர் அவனை துரத்துவார்கள்.

ஒருசிலரிடம் பந்து இருக்காது என்று ஏமாந்து போய் வைகையாக மாட்டி அடிப்படுவதும் உண்டும். மொத்ததில் இந்த விளையாட்டு விளையாடும் பொழுது மிக சுவராஸ்யமாக இருக்கும்.

Edited by ஆக்னி, 04 பிப்ரவரி 2012 - 08:38 காலை.


#17 அருணாசலம்

அருணாசலம்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,127 posts
 • Gender:Male

Posted 06 பிப்ரவரி 2012 - 03:01 மாலை

பிள்ளையார் பந்து


இது 7-ஸ்டோன்ஸ் கேம் மாதிரி கொஞ்சம் இருக்கு..
உலகெங்கும் அமைதி பரவட்டும்

#18 ஹரிஹரன்

ஹரிஹரன்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,543 posts
 • Gender:Male
 • Location:Chennai

Posted 07 பிப்ரவரி 2012 - 09:44 மாலை

ஆடுபுலி ஆட்டம் இணையத்தில்

இணையத்தில் பல்லாங்குழி

Edited by ஹரிஹரன், 07 பிப்ரவரி 2012 - 09:59 மாலை.

என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#19 அருணாசலம்

அருணாசலம்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,127 posts
 • Gender:Male

Posted 07 பிப்ரவரி 2012 - 09:49 மாலை

ஆடுபுலி ஆட்டம் இணையத்தில் விளையாட
அரி, இதில் நண்பர்களோடமட்டும் விளையாட முடியும் போல, கம்ப்யூட்டருடன் விளையாட முடியாதா? சிறுவயதில், எங்க காலனியில் ஆடுபுலி ஆட்ட சாம்பியன் நான்!!
உலகெங்கும் அமைதி பரவட்டும்

#20 ஹரிஹரன்

ஹரிஹரன்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,543 posts
 • Gender:Male
 • Location:Chennai

Posted 07 பிப்ரவரி 2012 - 10:03 மாலை

அரி, இதில் நண்பர்களோடமட்டும் விளையாட முடியும் போல, கம்ப்யூட்டருடன் விளையாட முடியாதா? சிறுவயதில், எங்க காலனியில் ஆடுபுலி ஆட்ட சாம்பியன் நான்!!

இல்லை மென்பொருள் விற்ப்பன்னர்கள் செய்ய வேண்டும் மேலும் அதற்கு அதிகமான டேட்டாக்களை பதிய வேண்டும் ஒவ்வொரு மூவுக்கும் எதிர் மூவ் என்று வாய்ப்புகள் குறைவு..
என்றும் அன்புடன்

ஹரிஹரன்