Jump to content


Photo

விளையாடலாம் வாங்க


  • Please log in to reply
31 replies to this topic

#21 அருணாசலம்

அருணாசலம்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,127 posts
  • Gender:Male

Posted 07 பிப்ரவரி 2012 - 10:12 மாலை

இல்லை மென்பொருள் விற்ப்பன்னர்கள் செய்ய வேண்டும் மேலும் அதற்கு அதிகமான டேட்டாக்களை பதிய வேண்டும் ஒவ்வொரு மூவுக்கும் எதிர் மூவ் என்று வாய்ப்புகள் குறைவு..



நீங்க சொல்லுவது சரிதான்! இது ஏதோ க்ட்ம்ல், ஜாவா ஸ்கிரிப்ட் வெச்சி பண்ணியிருக்காங்க...
உலகெங்கும் அமைதி பரவட்டும்

#22 ஆக்னி

ஆக்னி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,313 posts

Posted 08 பிப்ரவரி 2012 - 08:27 காலை

உப்பு குத்தி விளையாட்டு

உப்புக்கும் விளையாட்டுக்கும் ஒரே ஒரு சம்பந்தம் தான் இருக்குன்றது.

பொதுவாக உப்பளங்களுக்கு சென்றால் பாத்திகளில் இருந்து உப்புகளை சேர்த்து அதன் வரப்பில் நீர்வடிதற்காக குவித்துவைப்பார்கள். உப்பு எடுக்கும் காலங்களில் உப்பளங்களுக்கு சென்றால் அதன் வரப்புகளில் வெள்ளை குவியல்கள் வரிசையாக இருக்கும். பார்ப்பதற்கு அளகாக இருக்கும்.

உப்புக்கு பதிலாக மனலை சிறிது சிறிதாக (3 மி.மீ உயரம்) குவித்துவைத்து விளையாடும் ஒரு விளையாட்டு அதனால் இதற்கு உப்பு குத்தி விளையாட்டு என்று பெயர். இப்பொழுது பெயர்காரணம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சரி இதனை எப்படி விளையாடுவது.

இது இரு அணியினருக்கு இடையே விளையாடும் விளையாட்டு. அதனால் இருவர் மூவர் சேர்ந்து விளையாட முடியாது. அணிக்கு குறைந்தது 5 பேராவது இருக்க வேண்டும். ஒரு அணியினர் குத்தியிருக்கும் உப்பை இன்னொரு அணியினர் போய் அழிக்கவேண்டும். அப்படி அழித்ததற்கு பிறகு எஞ்சியிருப்பதை எண்ணி யார் அதிகமாக வைத்திருக்கின்றார்களோ அந்த அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

அணியையும் அணித்தலைவரையும் முடிவு செய்தபின் இரு அணியினருக்கும் ஏரியா பிரிக்கப்படும். அதாவது ஒரு அணியினர் உப்பு குத்துவதை இன்னொரு அணியினர் பார்க்க முடியாதவாறு ஏரியா பிரிக்கப்பட்டு எல்லைகள் கூட முடிவுசெய்யப்படும். முதலில் இரு அணியினருக்கும் 15 நிமிடங்கள் வழங்கப்படும். இருவரும் தமது எல்லைக்குள் சென்று மறைவான இடங்களில் உப்புகுத்துவார்கள். அதுவும் எதிரணியினர் யோசித்தே பார்க்காத இடங்களில் எல்லாம் உப்பு குத்துவார்கள். மர இடுக்கு, வீட்டின் ஓடு, உப்பு குத்திவிட்டு அதனை கோழி கவுத்தும் பெட்டியை வைத்து மறைத்து வைப்பது என்று எந்த எந்த வழிகள் எல்லாம் இருக்கின்றதோ அத்தனை வழிகளையும் கையாளுவோம். அதே வேலையில் அணிக்கு இருவர் வெட்டவெளியில் எதிர் அணியினர் பார்த்த உடனே கண்ணில் படும்படி உப்பு குத்துவார்கள். அதாவது எதிரணியினர் வரும் பொழுது அவர்களை டைவர்ட் செய்வதற்கு இந்த ஏற்பாடு.

15 நிமிடங்கள் முடிந்ததும் மீண்டும் இரு அணியினரும் ஒரே இடத்தில் ஒன்று கூடுவார்கள். இனி ஒரு அணியினர் வைத்த உப்பை அடுத்த அணியினர் அழிக்க வேண்டும். மொத்தமாக 10 நிமிடங்கள் வழங்கப்படும். உடனே இரு அணியினரும் எதிர் அணியினரின் எல்லைக்கு சென்று அவர்கள் வெட்ட வெளியில் வைத்ததையும் மறைவான இடங்களில் வைத்ததையும் தேடி தேடி அழிப்பார்கள். ஒரு இடத்தில் இந்ததை அழிக்கும் பொழுது அதில் ஒரு உப்பு கூட மிஞ்சக்கூடாது. அப்படி மிஞ்சியதையும் அவர்கள் அணியின் கவுண்டில் சேர்த்துவிடுவார்கள். அதனால் ஒன்று கூட மிஞ்சாமல் அழிக்க முயற்சி செய்வார்கள்.

10 நிமிடங்கள் முடிந்ததும் மீண்டும் ஒரு இடத்தில் ஒன்று கூடுவார்கள். அதன் பின் மொத்தமாக ஒவ்வொருவரின் எல்லைக்கு சென்று மிச்ச மீதி அழிபடாதவைகளை எண்ண வேண்டும். ஒரு அணியினர் வைத்ததை அடுத்த அணியின் தலைவர் எண்ணுவார். இந்த அணி தலைவர் எண்ணிக்கையில் கோல்மால் நடக்காமல் பார்த்துக்கொள்ளூவார். எந்த அணி அதகமாக எண்ணிக்கை வாங்கி இருக்கின்றதோ அந்த அணியே வெற்றி பெற்ற அணி.

இந்த விளையாட்டில் நிறைய சண்டைகள் நடக்கும்.

1. எண்ணும் பொழுது எண்ணிக்கையை மாற்றி சொல்லுவது.

2. ஒரு உப்பில் பாதி அழிந்திருக்கும் பாதி இருக்கும். உப்புவைத்தவன் அதனை எண்ண சொல்லுவான். எண்ணுபவன் அதனை எண்ண மாட்டேன் எனபான்.

3. எண்ணுவதற்கு செல்லும் பொழுது எதிரணியினர் மற்றவருக்கு தெரியாமல் சிலவற்றை அழிக்க முயற்சிப்பார்கள். அது விளையாட்டு தர்மப்படி குற்றம். அப்படி யாராவது அழிப்பதை பார்த்தால் உடனே இந்த அணியினர் வெற்றி பெற்ற அணியினராக அருவிக்கப்படும். இத்னை அந்த அணியினர் ஏற்க்க மாட்டார்கள்.

இப்படி சிற்சில சண்டைகள் இருந்தாலும் கொஞ்சம் சுவராசியமான ஒரு விளையாட்டு. அடுத்தவன் மறைத்துவைத்ததை கண்டுபிடித்து அழிப்பது என்பது மனிதனுக்கு எப்பொழுதுமே அலாதி பிரியமாண ஒன்று.

குறிப்பு:

இது சிறுவர்களுக்கான ஒரு விளையாட்டு. ஆண் பெண் பேதமின்றி விளையாடலாம்.

#23 கிமீரா

கிமீரா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 8,954 posts
  • Gender:Female

Posted 08 பிப்ரவரி 2012 - 08:32 காலை

அந்த டான்ஸ பாத்த ஏதோ வெவகாரமான ஆட்டமெல்லாம் ஆடியிருக்கிங்க போல

:முடியல1: :செய்வியா:

#24 அஸ்ஸாஞ்

அஸ்ஸாஞ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,020 posts
  • Gender:Male

Posted 08 பிப்ரவரி 2012 - 08:34 காலை

அந்த டான்ஸ பாத்த ஏதோ வெவகாரமான ஆட்டமெல்லாம் ஆடியிருக்கிங்க போல

:சூப்பர்:

#25 கிமீரா

கிமீரா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 8,954 posts
  • Gender:Female

Posted 08 பிப்ரவரி 2012 - 08:37 காலை

:சூப்பர்:


:செய்வியா:

#26 அஸ்ஸாஞ்

அஸ்ஸாஞ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,020 posts
  • Gender:Male

Posted 08 பிப்ரவரி 2012 - 08:40 காலை

செய்வியா

செய்வேன் :பெப்பெப்பே:

#27 கிமீரா

கிமீரா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 8,954 posts
  • Gender:Female

Posted 08 பிப்ரவரி 2012 - 01:03 மாலை

செய்வேன் :பெப்பெப்பே:

:

:அறுவை:

#28 ஆக்னி

ஆக்னி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,313 posts

Posted 17 பிப்ரவரி 2012 - 10:12 காலை

ஆடுபுலி ஆட்டம்.

கிராமத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடும் ஆட்டம். ஆனால் எங்கள் கிராமத்தில் சிறுவர்கள் இதனை ஆடி நான் பார்த்ததில்லை. ஏனென்று தெரியவில்லை.

ஒரு முறை பக்கத்து தெருவில் தனியாக நடந்து போய்கொண்டிருந்தேன். அப்பொழுது 60 வயது பெரியவர் ஒருவர் அவரின் வீட்டின் முன்புறம் இருந்த நிழலில் தனியாக உக்கார்ந்து கட்டம் போட்டு எதோ விளையாடிக்கொண்டிருந்தார். நானோ நேரம் போகாமல் அப்பொழுது ஊர் சுத்த வந்திருந்தேன். அவரிடம் போய் என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டேன். ஆடு புலி ஆட்டம் ஆடுகின்றேன் என்றார். இது ஒரு ஆள் விளையாடும் விளையாட்டா என்று கேட்டேன். இல்லை ஆடு புலி ஆட்டம் ஆட ஆள் இல்லை அதானால் தனியாக ஆடுகின்றேன் என்று சொன்னார். எனக்கு கத்துகொடுங்கள் நான் ஆடுகின்றேன் என்று சொன்னேன். ஆடு புலி ஆட்டம் எனக்கு தெரிந்தது இப்படி தான்.

ஆடு புலி ஆட்டம் கத்துக்கொள்ளும் பொழுது எனக்கு சதுரங்கம் ஆட்டம் எல்லாம் தெரியாது. சதுரங்கம் கட்டத்தையே நான் 10 வது வகுப்பு லீவில் சென்னை வரும் பொழுதுதான் பார்த்திருக்கின்றேன். ஆனால் இந்த ஆட்டம்மும் கிட்டத்ட்ட சதுரங்கம் ஆடுவது போன்றதுதான். ஒரே ஒரு வித்தியாசம் சதுரங்கத்தில் இரு அணியினரும் ஒரே வலிமையில் களம் இறங்குவார்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான ரூல்ஸ் இருக்கும். ஆனால் ஆடு புலி ஆட்டம் கொஞ்சம் வேறு பட்டிருக்கும். 3 புலிகளை 15 ஆடுகளை கொண்டு அடைக்க வேண்டும்(நகர முடியாத படி செய்ய வேண்டும்).

அது எப்படி செய்வது? ரூல்ஸ் தெரிஞ்சிகிட்டு ஆடையும் புலியையும் நகர்த்த தெரிஞ்சிகிட்டா வெரி சிம்பில்.

முதலில் புலி எப்படி நகரும் என்று பார்த்துவிடுவோம். ஆட்டம் தொடங்கும் பொழுது 3 புலிகளையும் முதலில் இடம் பார்த்து வைத்துவிடவேண்டும். பொதுவாக ஒரு புலி எப்பொழுதும் கட்டத்தில் தலை பாகத்தில் இருக்கும். புலிகளை வைத்ததும் ஆடுகளை ஒவ்வொண்றாக வைத்து புலியை அடைக்க பார்ப்பார்கள். ஒரு ஆடு கட்டத்திற்குள் வைக்கும்பொழுது புலியானது ஒரு கட்டம் நகரும்.

1. காலியான கட்டம் இருந்தால் புலி ஒரே ஒரு கட்டம் மட்டுமே நகரும்.

2. பக்கத்து கட்டத்தில் ஆடு இருந்து அதற்கு நேர் அடுத்த கட்டம் காலியாக இருந்தால் புலி ஒரே தாவு தாவி பக்கத்து காலியான இரண்டாம் கட்டத்து போய்விடும். போவதற்கு முன்னர் தனியாக மாட்டியா ஆட்டையும் அடித்து சாப்பிட்டுவிட்டு போய்விடும். மொத்த எண்ணிக்கையில் ஒரு ஆடு காலி. அதனை கட்டத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும்.

3. சரி அப்போ எப்படி புலியை அடைப்பது. வெரி சிம்பில். ஆடு இருக்கும் கட்டத்திற்கு நேர் அடுத்த கட்டம் காலியாக இல்லை என்றால் புலியால் தாவி போக முடியாது. அத்னால் முதலில் புலி இருக்கும் இடத்தில் இருந்து 2 ஆம் இடத்தில் ஆட்டை வக்க வேண்டும். பின்னர் முதல் கட்டத்தில் வைக்கவேண்டும். அதாவது தொடர்சியாக 2 ஆடுகள் இருந்தால் அதனால் முதல் ஆட்டை அடிக்க முடியாது. அப்படி தொடர்சியாக இருந்தால் புலி வேறு பக்கம் திரும்பி போக பார்க்கும்.

இப்படி எந்த பக்கமும் புலியால நகரமுடியாதபடி செய்த்துவிட்டால் ஆடு வைத்து விளையாடுபவர் வெற்றி பெருவார். இல்லை என்றால் புலி ஆட்டை அடித்துக்கொண்டே வரும். 5 ஆட்டை அடித்து விட்டால் அத்துடன் விளையாட்டை முடித்துகொள்வார்கள். ஏன்னா அதுக்கு அப்புறம் 10 ஆட்டை வைத்து 3 புலிகளை கட்டவே முடியாது.

எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. முதல் நாள் கற்றுகொண்டு அவரோடு ஆடிய 2 ஆட்டங்களிலும் எனக்கு தோல்வியே. ஆனால் அதன் பின்னர் அவரொடு நிறைய முறை விளையாடி வெற்றி பெற்றுருக்கின்றேன்.

ஆடு புலி ஆட்டம் ஆடவேண்டுமா. கீழே உள்ள லிங்கை உபயோகித்து கணினியில் விளையாடலாம். ஆனால் இரண்டு பேர் இருந்தால் மட்டுமே ஆட முடியும்.

ஆடுபுலி ஆட்டம் இணையத்தில்


Edited by ஆக்னி, 17 பிப்ரவரி 2012 - 10:14 காலை.


#29 பாலா

பாலா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,859 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 17 பிப்ரவரி 2012 - 10:07 மாலை

ஆன் லைனில் விளையாட...
http://www.fupa.com/...nst-tigers.html
உயிர் போனால் மயிர் போச்சு!

#30 புதுமுகம்

புதுமுகம்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 2,361 posts
  • Location:United States of America
  • Interests:Listening to Songs<br />Browsing the net

Posted 18 பிப்ரவரி 2012 - 09:51 காலை

கள்ள கபடமில்லாத வயதில், எந்த பால் (ஜென்டர்) வித்தியாசமின்றி ஆடிய ஆட்டங்களை நினைத்தால், ஏனோ மனதில் சோகம் லேசாக எட்டிப்பார்க்கிறது. பேஸ் புக் இருந்தும் என் நண்பர்கள், நண்பீகள் பலரைக்கண்டு பிடிக்க இயலவில்லை.
தாய், தந்தையர் தான் முதற் கடவுள்!

#31 சவகிருஷ்ணா

சவகிருஷ்ணா

    Junior

  • Members20
  • PipPip
  • 10 posts

Posted 27 பிப்ரவரி 2012 - 09:09 மாலை

பதிவுக்கு நன்றி

#32 ஆக்னி

ஆக்னி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,313 posts

Posted 26 ஏப்ரல் 2012 - 01:08 மாலை

பூப்பறிக்க வருகிறோம்.

இது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு(பசங்கள் 10 வயதுக்கு மேலிருந்தால் ஆட்டத்துல சேர்க்க மாட்டார்கள்)

சரி இந்த விளையாட்டை எப்படி ஆடுவதுன்னு பார்க்காலாம்.

விளையாட்டுக்கு வந்தவர்களை இரண்டு பிரிவாக பிரித்து அதற்கு அணித்தலைவர் தேரிந்த்தெடுக்கப்படுவார்.

அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு விளையாட்டு பெயர் வைக்கப்படும் அப்படி வைக்கப்படும் முன் இரு அணித்தலைவர்களும் கலந்து பேசி எந்த அணிக்கு எப்படி பட்ட பெயர்வைக்க வேண்டும் என்று முடிவுசெய்வார்கள்.

ஒரு அணி பூக்களின் பெயரை வைக்கும். இன்னொரு அணி காய்களின் பெயரைவைக்கும். இப்படி ஏதாவது ஒரு வெரைட்டியை தேரிவு செய்யவேண்டும்.

அதன் பின்னர் இரு அணியினரும் கொஞசம் இடைவெளிவிட்டு எதிர் எதிராக வரிசயாக உக்காருவார்கள். அணித்தலைவர் தங்கள் அணி உருப்பினர் ஒவ்வொருவரின் காதிலும் அவருடைய பெயரை கூறுவார். (பூக்கள் பெயர் என்றால், முல்லை, மல்லி, கனகாம்பரம், லில்லி... என்று ஒரு ஒருவருக்கும் பெயர் வைக்கப்படும் ஒருவருக்கு என்ன பெயர் வைத்திருக்கின்றார் என்று அவருக்கும் அணித்தலைவருக்கும் மட்டுமே தெரியும். வேறு ஒருவருக்கும் தெரியாது.

பெயர் சூட்டல் முடிந்ததும் டாஸ் போட்டு எந்த அணி முதலில் விளையாட்டை ஆரம்பிக்கவேண்டும் என்று முடிவு செய்வார்கள். டாஸில் வென்ற அணித்தலைவர் அடுத்த அணியில் இருக்கும் ஒருவருடைய கண்களை இருக்கமாக தன்னுடைய கைகளை வைத்து மூடிக்கொள்வார். இருக்கமாக மூடியவுடன் தன் அணியை சேர்ந்த ஒருவரை வந்து கண்கள் முடப்பட்டவரை வந்து கிள்ளிவிட்டு போக சொல்லுவார். அதற்காக அவர் ஒரு வரியை திரும்ப திரும்ப சொல்லுவார்.
உதாரணத்துக்கு முல்லைபூ பெயர் உள்ள நபரை அழைத்தால்

"முல்லை பூவே! முல்லை பூவே மெல்ல வந்து கிள்ளி போ,
முல்லை பூவே முல்லை பூவே மெல்ல வந்து கிள்ளி போ" என்று ஒரு வித ராகத்தில் அதை திரும்ப திரும்ப சொல்லுவார்.

முல்லை பூ என்ற பெயருடையவர் மெதுவாக வந்து அடுத்த அணியின் கண்கள் மூடப்பட்டவரை கிள்ளிவிட்டு போய் ஒன்னுமே தெரியாத மாதிரி அவருடைய இடத்தில் போய் உக்கார்ந்துவிடுவார். அவர் உக்கார்ந்தவுடன் அணித்தலைவர் தன்னுடைய அணியினரை பார்த்து மீண்டும் ஒரு வரி சொல்லுவார்

"எல்லோரும் ஆடம அசையாம தலைய வெட்டி நாய்க்கு போடுன்னு"

அப்படி சொன்னதும் அணியினர் அனைவரும் தலையை தலையை குனிந்து கொள்வார்கள். அப்படி குனிந்ததும் கண்களை மூடியிருந்த கையை எடுத்துவிடுவார். இப்பொழுது யார் கணகளை மூடியிருந்தாரோ அவர் தன்னை வந்து கிள்ளி சென்றவரை அடையாளம் காட்டவேண்டும். அவர் சரியாக அடையாளம் காட்டிவிட்டாள், கிள்ளிவிட்டவர் எதிரணிக்கு போய் விடவேணடும். அதன் பின்னர் அவர் எதிர் அணி உறுப்பினர். தவறான ஆளை சொல்லிவிட்டாள் இவர் முதல் அணிக்கு வந்துவிட வேண்டும்.

ஆட்டத்தின் முடிவில் எந்த அணியில் அதிகமாக ஆள் இருக்கின்றார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.


ஆட்டத்தின் சுவராஸ்யமான பகுதிகள்,

1. கிள்ளுபவர் வேண்டும் என்றே அதிகமாக வலிக்கும் படி கிள்ளுவார்.

2. யார் கிள்ளியது என்று கண்டுபிடிப்பது ரொம்ப கஸ்டம். முகத்தை பார்க்கவே முடியாது. எல்லோரும் தலை குனிந்து இருப்பார்கள்.

3. ஒருவருடைய அசைவு வைத்து குத்துமதிப்பாக கண்டுபிடிப்பார்கள். கிராமங்களில் யார் யார் எப்படி நடப்பார்கள், யார் நடக்கும் பொழுது எப்படி சத்தம் வரும் என்பது எல்லாம், எல்லோருக்கும் கிட்ட தட்ட தெரியும்

4. கிள்ளவருபவர் பக்கத்தில் வரும் பொழுது, வளையல் சத்தம், கொலுசு சத்தம் கேக்கின்றதா என்று கவனிப்பார்கள்

5. கிள்ளுபவர் பக்கத்தில் வரும் பொழுது வித்தியாசமான வாசனை வருகின்றதா என்பதை கவனிப்பார்கள். (பொதுவாக மீன் குழம்பு சாப்பிட்டுவிட்டு வந்தால் அவர்கள் பக்கத்தில் வந்ததும் கண்டுபிடித்திவிடலாம். அது போல் ரசம் சாப்பிட்டுவிட்டு வந்தாலும் கண்டு பிடித்துவிடலாம்)

6. இப்படி எல்லாத்தையும் கவனித்து சொன்னாலும் முக்கால்வாசி தவறாகவே போய்விடும். ஒருசிலர் மட்டுமே சரியாக கணித்து சரியான ஆளை அடையாளம் காட்டுவார்கள்.

7. சரியான ஆளை கண்டுபிடிப்பாவர்களை இரு அணித்தலைவர்களும் தங்கள் அணியில் வைத்துக்கொள்ள முயற்சி செய்வார்கள். இதனால் அவருக்கு மட்டும் அடிக்கடி கண்பொத்தல் நடக்கும். கிள்ளுபட்டு அவருடைய கைகள் ரணமாகிடும்.