ஆடுபுலி ஆட்டம்.
கிராமத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடும் ஆட்டம். ஆனால் எங்கள் கிராமத்தில் சிறுவர்கள் இதனை ஆடி நான் பார்த்ததில்லை. ஏனென்று தெரியவில்லை.
ஒரு முறை பக்கத்து தெருவில் தனியாக நடந்து போய்கொண்டிருந்தேன். அப்பொழுது 60 வயது பெரியவர் ஒருவர் அவரின் வீட்டின் முன்புறம் இருந்த நிழலில் தனியாக உக்கார்ந்து கட்டம் போட்டு எதோ விளையாடிக்கொண்டிருந்தார். நானோ நேரம் போகாமல் அப்பொழுது ஊர் சுத்த வந்திருந்தேன். அவரிடம் போய் என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டேன். ஆடு புலி ஆட்டம் ஆடுகின்றேன் என்றார். இது ஒரு ஆள் விளையாடும் விளையாட்டா என்று கேட்டேன். இல்லை ஆடு புலி ஆட்டம் ஆட ஆள் இல்லை அதானால் தனியாக ஆடுகின்றேன் என்று சொன்னார். எனக்கு கத்துகொடுங்கள் நான் ஆடுகின்றேன் என்று சொன்னேன். ஆடு புலி ஆட்டம் எனக்கு தெரிந்தது இப்படி தான்.
ஆடு புலி ஆட்டம் கத்துக்கொள்ளும் பொழுது எனக்கு சதுரங்கம் ஆட்டம் எல்லாம் தெரியாது. சதுரங்கம் கட்டத்தையே நான் 10 வது வகுப்பு லீவில் சென்னை வரும் பொழுதுதான் பார்த்திருக்கின்றேன். ஆனால் இந்த ஆட்டம்மும் கிட்டத்ட்ட சதுரங்கம் ஆடுவது போன்றதுதான். ஒரே ஒரு வித்தியாசம் சதுரங்கத்தில் இரு அணியினரும் ஒரே வலிமையில் களம் இறங்குவார்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான ரூல்ஸ் இருக்கும். ஆனால் ஆடு புலி ஆட்டம் கொஞ்சம் வேறு பட்டிருக்கும். 3 புலிகளை 15 ஆடுகளை கொண்டு அடைக்க வேண்டும்(நகர முடியாத படி செய்ய வேண்டும்).
அது எப்படி செய்வது? ரூல்ஸ் தெரிஞ்சிகிட்டு ஆடையும் புலியையும் நகர்த்த தெரிஞ்சிகிட்டா வெரி சிம்பில்.
முதலில் புலி எப்படி நகரும் என்று பார்த்துவிடுவோம். ஆட்டம் தொடங்கும் பொழுது 3 புலிகளையும் முதலில் இடம் பார்த்து வைத்துவிடவேண்டும். பொதுவாக ஒரு புலி எப்பொழுதும் கட்டத்தில் தலை பாகத்தில் இருக்கும். புலிகளை வைத்ததும் ஆடுகளை ஒவ்வொண்றாக வைத்து புலியை அடைக்க பார்ப்பார்கள். ஒரு ஆடு கட்டத்திற்குள் வைக்கும்பொழுது புலியானது ஒரு கட்டம் நகரும்.
1. காலியான கட்டம் இருந்தால் புலி ஒரே ஒரு கட்டம் மட்டுமே நகரும்.
2. பக்கத்து கட்டத்தில் ஆடு இருந்து அதற்கு நேர் அடுத்த கட்டம் காலியாக இருந்தால் புலி ஒரே தாவு தாவி பக்கத்து காலியான இரண்டாம் கட்டத்து போய்விடும். போவதற்கு முன்னர் தனியாக மாட்டியா ஆட்டையும் அடித்து சாப்பிட்டுவிட்டு போய்விடும். மொத்த எண்ணிக்கையில் ஒரு ஆடு காலி. அதனை கட்டத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும்.
3. சரி அப்போ எப்படி புலியை அடைப்பது. வெரி சிம்பில். ஆடு இருக்கும் கட்டத்திற்கு நேர் அடுத்த கட்டம் காலியாக இல்லை என்றால் புலியால் தாவி போக முடியாது. அத்னால் முதலில் புலி இருக்கும் இடத்தில் இருந்து 2 ஆம் இடத்தில் ஆட்டை வக்க வேண்டும். பின்னர் முதல் கட்டத்தில் வைக்கவேண்டும். அதாவது தொடர்சியாக 2 ஆடுகள் இருந்தால் அதனால் முதல் ஆட்டை அடிக்க முடியாது. அப்படி தொடர்சியாக இருந்தால் புலி வேறு பக்கம் திரும்பி போக பார்க்கும்.
இப்படி எந்த பக்கமும் புலியால நகரமுடியாதபடி செய்த்துவிட்டால் ஆடு வைத்து விளையாடுபவர் வெற்றி பெருவார். இல்லை என்றால் புலி ஆட்டை அடித்துக்கொண்டே வரும். 5 ஆட்டை அடித்து விட்டால் அத்துடன் விளையாட்டை முடித்துகொள்வார்கள். ஏன்னா அதுக்கு அப்புறம் 10 ஆட்டை வைத்து 3 புலிகளை கட்டவே முடியாது.
எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. முதல் நாள் கற்றுகொண்டு அவரோடு ஆடிய 2 ஆட்டங்களிலும் எனக்கு தோல்வியே. ஆனால் அதன் பின்னர் அவரொடு நிறைய முறை விளையாடி வெற்றி பெற்றுருக்கின்றேன்.
ஆடு புலி ஆட்டம் ஆடவேண்டுமா. கீழே உள்ள லிங்கை உபயோகித்து கணினியில் விளையாடலாம். ஆனால் இரண்டு பேர் இருந்தால் மட்டுமே ஆட முடியும்.
ஹரிஹரன், on 07 February 2012 - 09:44 PM, said:
This post has been edited by ஆக்னி: 17 பிப்ரவரி 2012 - 10:14 காலை