பஸ் தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறைகளுக்கு பிரேக் போட்டிருக்கிறது நீதிமன்றம். ''பஸ் தினக் கொண்டாட்டத்துக்கு நீதிமன்றத் தடை இருக்கும் நிலையில், இனியும் வன்முறை நடைபெற்றால், காவல் துறையினர் மற்றும் கல்லூரிக் கல்வித்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்...'' என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்!
கடந்த 9-ம் தேதி காலை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு, 'பஸ் தினம் கொண்டாட வேண்டும்’ என்று அரசு பஸ் டிரைவர்களை வற்புறுத்தினார்கள். அவர்கள் மறுக்கவே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, போலீஸார் குவிக்கப்பட்டனர். தடையை மீறி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.
வேறுவழி இல்லாமல் அந்த ஊர்வலத்துக்கு போலீஸார், பாதுகாப்பு அளிக்க வேண்டியதாயிற்று. ஊர்வலம் அமைந்தகரை பகுதியை அடைந்தபோது மாணவர்கள் சிலர் அங்கே இருந்த தனியார் நிறுவனத்தின் கட்டடம் மீது கல்வீசித் தாக் கவே... சாலையில் சென்ற மூன்று பேர் காயம் அடைந்தார்கள். ஒரு வழியாக, பச்சையப்பா கல்லூரியை ஊர்வலம் அடைந்த பிறகும் சிக்கல் தீரவில்லை.உள்ளே சென்றவர்களில் சிலர், செங்கற்களை சரமாரி யாக வீசத் தொடங்க... அந்த வழியாகச் சென்ற 15 பி பஸ் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
அந்த பஸ் நிறுத்தப்பட்டதும், பஸ் மீது தொடர்ந்து மாணவர்கள் கற்களை வீசித்தாக்கினார்கள். அதனால் பீதி அடைந்த மக்கள் பஸ்ஸின் வலது புற ஜன்னல்கள் வழியாக குதித்து தப்பினார்கள். இதில் குழந்தையோடு பஸ்ஸில் மாட்டிக்கொண்ட பெண் ஒருவர் அலறித் துடிக்க, போலீஸார் குழந்தையை பெரும் சிரமம் எடுத்து மீட்டு வந்தார்கள். இந்த சம்பவத்தில் 15 பேருக்குக் காயம். போலீஸ் ஜீப் தாக்கப்பட்டது. இந்த விவகாரம் சென்னை மக்களை உஷ்ணப்படுத்தவே, பஸ் தினக் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார்.
கிருஷ்ண மூர்த்தியிடம் பேசினோம். ''சென்னைக்கு இந்த சம்பவம் புதிது அல்ல. ஏற்கெனவே இதுபோன்று நடந்திருப்பதால் பஸ் தினத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுநல வழக்குத் தொடரப்பட்டு, கடந்த 2.3.11 அன்று உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், அந்த மாதம் 30-ம் தேதியே பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மீண்டும் பஸ்தினம் கொண்டாடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வன்முறையில் ஈடுபட்டார்கள். இதில் 30 போலீஸார், 10 பொதுமக்கள் காயம் அடைந்தார்கள். 10-க்கும் மேற்பட்ட பஸ்களும் ஒரு போலீஸ் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டன.
பல்வேறு கல்லூரி மாணவர்களும் பஸ் தினம் என்ற பெயரில் வன்முறைகளை தொடர்ந்து நிகழ்த்து கிறார்கள். கொண்டாட்டம் என்ற பெயரில் இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் ஈவ் டீசிங் செய்கிறார்கள். கடந்த 9-ம் தேதி அன்று நடந்த வன்முறையில் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்று வதற்காக, அந்தக் குழந்தையை வெளியே தூக்கி வீசி இருக்கிறார்கள். போலீஸ் ஒருவர் அந்தக் குழந்தையை லாகவமாகப் பிடித்து மீட்டுச் சென்றார். இந்தக் காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நீதிமன்றம் தடை விதித்து ஓர் ஆண்டு ஆகியும் போலீஸார் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். எனவே, மீண்டும் பொது நல வழக்கு தொடரப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத் தடை இருக்கும்போது பஸ் தினம் கொண்டாட அனுமதித்த போலீஸார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்'' என்றார்.
போலீஸ் கமிஷனர் திரிபாதி யிடம் பேசினோம். ''நாங்கள் ஒருபோதும் பஸ் தினக் கொண் டாட்டத்துக்கு அனுமதி கொடு த்தது இல்லை. ஒவ்வொரு முறை யும் போலீஸ் விதிக்கும் தடையை மாணவர்கள் மீறுகிறார்கள். ஒவ் வொரு முறையும் மாணவர்கள் மீது, போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது. கல்லூரி நிர்வாகம் மாணவர்களை சரியாக வழி நடத்தினால், பெற்றோர்கள் கண் டிப்புடன் பிள்ளைகளை வளர்த்தால், மாணவர் கள் இப்படி பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்ள மாட்டார்கள்...'' என்றார்.
பச்சையப்பா கல்லூரி முதல்வர் டாக்டர் கந்த சாமியிடம் பேசினோம். ''நீதிமன்றத்துக்குப் பதில் அளிக்க அறிக்கை தயார் செய்து வருகிறோம். நீதிமன்றத்துக்குப் பதில் அளித்த பின்பு தான் இது குறித்து பேசுவது சரியாக இருக்கும். கடந்த வாரம் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் 14 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளோம். போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது...'' என்றார்.
தங்கள் சுதந்திரம் எதுவரை என்பதை, மாணவர்கள் இனியாவது உணர்ந்து கொள்ளட்டும்.
- டி.எல்.சஞ்சீவிகுமார்
|
Page 1 of 1
பஸ் தினக் கொண்டாட்டம்
#2
Posted 21 பிப்ரவரி 2012 - 10:20 மாலை
பச்சையப்பன் கல்லூரிக்கு படிக்க மாணவர்கள் செல்லுவதே கிடையாதா... வெறும் கலாட்டா செய்வது மட்டும் தான் வேலை போலிருக்கு... இவர்களில் பலர் கல்லூரி செல்லுவதே அரசியலில் அடிவைக்கதான்..
போலிஸ் கொஞ்சம் கடுமையான நடவடிக்கை எடுக்கனும்... இந்த மாணவர்கள் நல்ல விஷயத்துக்கு போராடினால் பரவாயில்லை, இதெல்லாம் சும்மா பிரச்சனை செய்து தங்கள் பலத்தை காட்டத்தான்...
போலிஸ் கொஞ்சம் கடுமையான நடவடிக்கை எடுக்கனும்... இந்த மாணவர்கள் நல்ல விஷயத்துக்கு போராடினால் பரவாயில்லை, இதெல்லாம் சும்மா பிரச்சனை செய்து தங்கள் பலத்தை காட்டத்தான்...
உலகெங்கும் அமைதி பரவட்டும்
#3
Posted 22 பிப்ரவரி 2012 - 09:08 காலை
பச்சையப்பன் முதலியார் பெரும் செல்வந்தர். அவரது டிரஸ்ட், மாணவர்களுக்கு நல்ல கல்வியைத்தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வன்முறையாட்டமே மாணவர்களின் பொழுதுப்போக்கு ஆகி விட்டது. என் சித்தப்பா ஒருவர் காஞ்சியில் உள்ள பச்சையப்பன் கல்வி நிறுவனத்தில் படித்தவர் - அப்பவெல்லாம் ரொம்ப டிசிப்ளினுடன் இருந்ததாம். ஷீட் அட் சைட் என்ற முறையில் வெறியுடன் ஆடும் மாணவர்களைக்குறி வைத்தால், அப்பாவிகளின் உயிரைக்காப்பாற்ற் முடியும். ஒரு 10 அல்லது 15 % மாணவர்களால், பாவம் இதர அப்பாவி மாணவர்களுக்கும் கெட்ட பெயர்.
#4
Posted 22 பிப்ரவரி 2012 - 04:27 மாலை
போலீஸ் அராஜகம் என்றால் குய்யோ முறையோ என குதிக்கும் சில அமைப்புகள் மாணவர்களின் அராஜகத்தை கண்டுகாமல் போவது ஏன்?
உலகெங்கும் அமைதி பரவட்டும்
#5
Posted 22 பிப்ரவரி 2012 - 09:15 மாலை
நான் பச்சையப்பன் கல்லுரியில் படித்த போது அவ்வளவாக பிரச்சனை இல்லை. நடுவில் ஆதிமுக ஆட்ச்சி வந்த போது இது போல் கலவரத்தில் மாணவர்கள் ஈடு பட்டனர்.
-------------------------
இப்போது பாருங்கள் கலைஞர் முதல்வராக இருந்த போது இது போல் கலவரம் இல்லை. அவர் ஆட்சியில் அன்பு தாண்டவமாடியது. ஆனால் இன்றோ மாணவர்கள் கண்ணியம் இழந்து நடக்கின்றனர். அரசன் இல்லாத ஊர் பாழ் என்பது இது தான்
-------------------------
இப்போது பாருங்கள் கலைஞர் முதல்வராக இருந்த போது இது போல் கலவரம் இல்லை. அவர் ஆட்சியில் அன்பு தாண்டவமாடியது. ஆனால் இன்றோ மாணவர்கள் கண்ணியம் இழந்து நடக்கின்றனர். அரசன் இல்லாத ஊர் பாழ் என்பது இது தான்
#6
Posted 23 பிப்ரவரி 2012 - 01:24 காலை
தென்னவன், on 22 February 2012 - 10:45 AM, said:
நான் பச்சையப்பன் கல்லுரியில் படித்த போது அவ்வளவாக பிரச்சனை இல்லை. நடுவில் ஆதிமுக ஆட்ச்சி வந்த போது இது போல் கலவரத்தில் மாணவர்கள் ஈடு பட்டனர்.
-------------------------
இப்போது பாருங்கள் கலைஞர் முதல்வராக இருந்த போது இது போல் கலவரம் இல்லை. அவர் ஆட்சியில் அன்பு தாண்டவமாடியது. ஆனால் இன்றோ மாணவர்கள் கண்ணியம் இழந்து நடக்கின்றனர். அரசன் இல்லாத ஊர் பாழ் என்பது இது தான்
-------------------------
இப்போது பாருங்கள் கலைஞர் முதல்வராக இருந்த போது இது போல் கலவரம் இல்லை. அவர் ஆட்சியில் அன்பு தாண்டவமாடியது. ஆனால் இன்றோ மாணவர்கள் கண்ணியம் இழந்து நடக்கின்றனர். அரசன் இல்லாத ஊர் பாழ் என்பது இது தான்
சரிங்க தில்லு அவர்களே!
உயிர் போனால் மயிர் போச்சு!
#7
Posted 23 பிப்ரவரி 2012 - 01:34 மாலை
தில்லு யார் என்று தெரியவில்லை. கள நணபர் ஒருவரை விசாரணை செய்து கண்டு பிடிக்க சொல்லி இருக்கிறேன். நான் அஸ்ஸாஞ் போல் பேக் ஐடியில் வருவது இல்லை.
Share this topic:
Page 1 of 1

Help















