Jump to content


Photo
- - - - -

வரலாற்று மோசடி


 • Please log in to reply
8 replies to this topic

#1 பாலா

பாலா

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 1,864 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 28 பிப்ரவரி 2012 - 09:01 மாலை

http://www.ayothidha...andithar/?p=174


சனவரி 25 மொழிப்போர் தியாகிகள் ‘வீரவணக்கம்’ நாள், வழக்கம் போலவே எவ்வித செயல்திட்டம், அறிவிப்புகள் ஏதுமின்றி ஒரு சடங்காகவே இவ்வாண்டும் அனுசரிக்கப்பட்டது. தமிழக முதல்வர் முதல் திராவிட, தமிழ்த்தேசிய, தோழர்கள் வரை 1965 வருடம் அதாவது நான்காம் மொழிப்போராட்டம் பற்றியே பேசினார்கள். எந்த ஒரு போராட்டத்திலும் முதலில் களப்பலியானவரின் நினைவைப் போற்றுவதே இயல்பு. 1938 ஆம் ஆண்டு நடந்த முதல் இந்தி எதிர்ப்போரில் தமிழுக்காக முதன்முதலாக உயிரைத் தந்த சனவரி 15 நாளையே மொழிப்போர் தியாகிகள் நாளாக அறிவிக்க வேண்டும் அதுதான் பொருள்பொதிந்தது. அதற்கு மாறாக முப்பது ஆண்டுகளுக்குப் பின் 1965 ஆண்டு சனவரி முதல் மார்ச் வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டதில் பலர் உயிர்த் தியாகம் செய்த நாளையே சனவரி 25 நளையே ‘மொழிப் போர் தியாகி நாளாக அறிவித்துக் கொண்டாடுவது, முதல் மொழிப்போரில் தமிழுக்காக உயிர் தியாகம் செய்தது முக்கியத்துவமில்லாமல் இன்றும் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது
1937 ல் நடைபெற்ற சென்னை மாகான பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி தோற்றது. அத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சி இந்தி திணிப்பைத் தன்னுடைய கொள்கையாக கொண்டிருந்தது. சென்னை மாகானத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி மொழியைக் கட்டாயப்பாடமாக வைக்கபோவதாக முதலைமைச்சர் இராசகோபாலாச்சாரி அறிவித்தார். இந்தி மொழியை நம் மாணவர்களுக்கு பாடமாக வைத்தால் நம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு கேடு வரும், அதோடு நம்முடைய பண்பாடு,கலாச்சாரம் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த தமிழர்கள் கூட்டங்கூட்டமாக அணிதிரண்டு, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள். இதுதான் முதல் இந்தி எதிர்ப்போராட்டம் இதுவரையில் ஏழு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இன்றும் அது முடியவிலை.
1. முதலாம் மொழிப்போராட்டம் – 1937 – 1940
2 இரண்டாம் மொழிப்போராட்டம் – 1948 – 1950
3 மூன்றாம் மொழிப்போராட்டம் – 1952
4 நான்காம் மொழிப்போராட்டம் – 1963 – 1965
5 ஐந்தாம் மொழிப் போராட்டம் – 1967 – 1968
6 ஆறாம் மொழிப் போராட்டம் – 1986 – 1987
7 ஏழாம் மொழிப் போராட்டம் – 1993 – 1994.
திராவிட இயக்கங்கள் உருவாகத காலம். மக்களின் தமிழ் மொழி உணர்வை, இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வை ஒருங்கிணைத்து வ்ழிநடத்திச் சென்றவை தமிழ் அமைப்புகளே. கரந்தைத் தமிழ்சங்கம், திருவையாற்றுச் செந்தமிழ்கழகம், உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவை, நாமக்கல் தமிழ்ச் சங்கம், தென்காசி திருவள்ளுவர் கழகம், நெல்லைத் தமிழ்ப் பாதுகாப்பு சங்கம்….. போன்ற தமிழ் அமைப்புகளும், வேங்கடாசலம், உமாககேசுவரனார், சோமசுந்தர பாரதியார்,, கா.சுப்பிரமணியம், கு மு அண்ணல் தாங்கோ போன்ற தமிழறிஞர்கள் தலைமையேற்று நடத்திய இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள், சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களின் விளைவாக தமிழகம் முழுவதும்(ஆந்திரா,கேரளா,கர்நாடகம் உள்ளடக்கிய சென்னை மாகானம் என்றாலும் அங்கெல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறவில்லை) தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் குறிப்பாக தொல் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் இந்தியெதிர்ப்பு போர் கொழுந்துவிட்டு எரிந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களி மிக அதிகமாக தொல் தமிழர்கள் கல்ந்துகொண்டு சிறை சென்றனர். அதை ” சிறையில் ஒழுங்காக சாப்பாடு கிடைக்கும் என்பதால் பல ஹரிசனங்கள் கைதாகியுள்ளார்கள்” என்று டாக்டர் சுப்புராயன் சட்டமன்றதில் தொல் தமிழர்களின் தமிழுணர்வை பகடி செய்தார். இதையே ” அற்பக்கூலிகளுக்கு அமர்த்தப்பட்ட கூலிகள்” என முதலைமச்சர் இராசாசி கேவலப்படுத்தினார். இந்த முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழுக்காக முதன்முதலில் 15.01.1939 ல் தன்னுயிரை ஈகம் செய்தவர் எசு.நடராசன் என்ற தொல் தமிழர். அவருக்கு அடுத்தே மூன்று மாதங்களுக்கு பின்னர் இடை நிலைச்சாதியைச் சேர்ந்த தாளமுத்து 11.03.1939 ல் உயிர்த்தியாகம் செய்தார். ஆனால் வரலாற்று ஏடுகளில் பெயர்ச்சூட்டலில்’ தாள்முத்து நடராசன்” என்று தாளமுத்து முன்பாகவும் நடராசன் இரண்டாவது இடத்திற்கு ஒதுக்கியது. அதை உண்மையாக்கும் பொருட்டு அரசு மாளிகையொன்றிற்கு ‘தாளமுத்து நடராசன் மாளிகை’ என பிழையான வரிசையில் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.
சென்னை வள்ளலார் நகரையடுத்த மூலக்கொத்தளம் சுடுகாட்டில் இருக்கும் நினைவுச்சின்னத்தில் ’ நடராசன் தாளமுத்து’ என்று சரியான வரிசையில் எழுதப்பட்டுள்ளது. இந்த சரியான பெயர் வரிசை 1960 வரையில் சரியாக உச்சரிக்கப்பட்டு வந்துள்ளது. 1952 களில் ஆதிதிராவிடர் நலவுரிமைச் சங்கம் சார்பாக திறக்கப்பட்ட ‘நடராசன் தாளமுத்து’ நூல் நிலையத் திறப்பு விழா அழைப்பிதழில் ‘நடராசன் தாளமுத்து’ நூல் நிலையத்தை, சினிமா நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன், கலைஞர் மு.கருனாநிதி, டைரக்டர் கிருஷ்ணன்பஞ்சு அகியோர் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்கள். அதே கலைஞர் மு கருனாநிதிதான் வரலாற்று உண்மையை மாற்றிப்போட்டு ‘தாளமுத்து நடராசன்’ என்று உச்சரிக்கிறார். அரசு மாளிகை ஒன்றிற்கு அப்படியே பெயர் சூட்டி வராற்று மோசடி செய்கிறார்.
தமிழ்மொழி காக்க உயிர்விட்ட நடராசன் பிணத்தை,மரணத்தை வைத்துதான் தமிழ்மொழி உணர்ச்சியை உசுப்பிவிட்டார்கள். ” நடராசன் அவர் குடியில் ஒரே பிள்ளை. நம் மகன் சிறையிலிருந்து வருவான் அவனுக்கு திருமணம் செய்வோம் என் எண்ணிய நடராசன் பெற்றோர் ஏமாற்றமுற்றதையும் வருத்தமாகக் கூறி மணக்கோலத்தில் போக இருந்த நடராசன் அநியாயமாகப் பிணக்கோலத்தில் சென்று விட்டாரே” என்று நடராசன் இறுதி நிகழ்ச்சியில் கு.மு.அண்ணல்தங்கோ அவர்கள் உருக்கமாக பேசியுள்ளார்.ஆற்றல் மிக்க பேச்சாளர் முன்னால் முதல்வர் சி.ந.அண்ணாத்துரை அவர்கள் ” அதோ, அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவருடைய இரத்தம் ஓடுவதை நிறுத்திவிட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால் அவருடைய முகத்தைப் பாருங்கள் தன்னுடைய கலாச்சாரத்திற்காவும், விடுதலைக்காகவும் போராடி, அப்போடிரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம். பல்லாயிரக்கணக்கில் கூடிய நீங்கள், ஓர் உறுதி மொழியினைத் தருவீர்களா? நாம் விரும்பாத ஒரு மொழியினை எதிர்த்துப் போரிட்டு, ஐயகோ! நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீரவாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்ற உறுதி கொள்வீர்களா?. இந்தியைப் புகுத்துவதால் நம் மொழி தமிழுக்கு குந்தகம் விளைந்திடுமா? என யாராவது கேட்டால் அவரிடம் கூறுங்கள். இந்தி வந்தது அதனை நுழையவிடாமல் தடுக்கும் போராட்டத்தில் ஒரு தமிழன் உயிர்துறந்தான்”. என்று அண்ணத்துரையின் இந்த உணர்ச்சிப் பேச்சு தமிழருக்கு தமிழ் மொழியுணர்ச்சியை உசுப்பிவிட்டது.அந்த மொழியுணர்ச்சியே அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது. ஆனால் திமுக அமைத்த மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் நடராசனின் படம் கடைக்கோடியில்.
தமிழ்மொழிக்காக உயிர் விட்ட நடராசனின் மரணம் குறித்து விளக்கம் தந்த முதலமைச்சர் ராசாசி, ” நடராசன் படிபறிவில்லாதவர், அதனால்தான் அவர் மறியலில் ஈடுபட்டார். அவரைப்போல படிப்பறிவில்லாத அப்பாவிகளை இந்தி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்” என்றார், அதற்கு கடுமையான கண்டனம் எழுந்தது. நடராசனின் தந்தையார் முதல்வர் ராசாசியின் விளக்கத்தை மறுத்து, ” இந்தி எதிர்ப்பிற்காக மறியலில் ஈடுபட்டு நடராசன் கைதானபோது அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்துவிடுகிறோம்” என அரசு அதிகாரிகள் அவரிடம் வற்புறுத்தியுள்ளீர்கள். ஆனால் ” கோழையாக வாழ்வதைவிட வீரனாக சாவதைதே நான் விரும்புகிறேன்” என நடராசன் கூறியுள்ளார். அப்படியயே வீரமரணமும் ஏய்துவிட்டார்.
தமிழ்மொழி
உணர்வை மூலதனமாக்கி ஆட்சியில் அமர்ந்த திராவிடக் கட்சிகள். தமிழுக்காக இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் விட்ட நடராசனை இருட்டடிப்புச் செய்துததுமட்டுமல்ல வரலாற்றுக்கு நேர்மையில்லாமல் மோசடி செய்கிறது. திராவிட கட்சிகள் மட்டுமல்ல, தமிழ்த்தேசிய அமைப்புகள், சாதி ஒழிப்பு, சமூக நீதி, மைக் தொழிளாலர்கள், எல்லாமே தாளமுத்து நடராசன் என்றே பதிவு செய்கின்றன. 26.01.2011 ஜு வி யில் சீமான் எழுதும் தொடரில் நடராசனை மட்டும் தனித்து ஒதுக்கிமறைத்துவிட்டு மற்ற அனைவரையும் மொழிப்போர் தியகிகளென படம் காட்டுகிறார். அடிப்படை தமிழக வரலாறு கூட தெரியாத இதெல்லாம் தமிழகத்தை ஆளனுமாம். தமிழியம் பறம்பை அறிவன் அவர்கள் வழங்கிய ‘தமிழிய வரலாற்றுப் பேரவை’ யின் நாள்காட்டியில் தமிழர்களின் முக்கிய நாள்கள் என்கிற தலைப்பில் ‘ மார்ச் 14 – தாளமுத்து நடராசன் தோற்றம் ‘ என குறிப்பிட்டுள்ளது. இதில் என்ன பொருள் இருகிறது? தலித்களின் நண்பர் என்று சொல்லிக்கொண்டே தலித்களின் ஆளுமைகளை, வரலாற்றை திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்வதை எந்த நடுநிலையாளர்களும் கேள்வி கேட்பதில்லை. சாதியடிப்படையில் ஒருவரின் உயிர் தியாகததை இழிவு படுத்தமுடியுமா? இவர்கள் பேசும் சாதி ஒழிப்பு, சமூக நீதி… எந்தளவிற்கு நம்பகத்தன்மையானதாக இருக்கும்? இன்னும் விரிவாக அறிய
1 என்று முடியும் இந்த மொழிப்போர் – 1994- அ. இராமசாமி
2 திரவிட இயக்கமும் மொழிக்கொள்கையும் – 1991-கோ.கேசவன்
3 அறவுவாழி – ஏப்பிரல் – 1999
4 தூய தமிழ்க் காவலன் கு மு அண்ணல்தங்கோ – 1999
5 The Political Career of E.V.Ramasami Nicker -1983 – Dr.E.Sa.Visswanathan
( Translated by Prof. P.S. Panneer Selvam)
6 மொழிப் போர் தீண்டப்படாத தியாகம் – 2005 – இரவிக்குமார்
7 பெரியார்: தமிழ், தமிழர், தமிழ்நாடு – 2007 – தொல்தமிழன்
உயிர் போனால் மயிர் போச்சு!

#2 பாலா

பாலா

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 1,864 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 28 பிப்ரவரி 2012 - 09:11 மாலை

http://www.koodal.co...tics.asp?id=902

மொழிப்போர் போராளிகளின் கனவு: தமிழ்மொழி தமிழ்நாடு காப்பதே!

1938ல் அன்றைய சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட பகுதியில் முதல்வராக இருந்த இராசாசி தலைமையிலான காங்கிரசால் இந்தி திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன் முதலில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கப்பட்டது. அன்றைய காலகட்டம் என்பது வெள்ளையரின் ஆட்சியதிகாரம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்ற காலக்கட்டமாகும்.
இங்கிலாந்து ஆட்சியாளர்கள் தங்களின் மேற்பார்வையில் தேர்தல் நடத்திக் கொள்ள வழங்கிய அனுமதியின் பேரில் ஆட்சிக்கு வந்த காங்கிரசின் அன்றைய முதல்வர் இராசாசியால் முதன் முதலாக கட்டாய இந்தி திணிக்கப்பட்டது. இதை எதிர்த்து முதல்வர் இராசாசியின் வீட்டின் முன் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து 1938ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் நாவலர் சோமசுந்தர பாரதியார், புரட்சிப் பாவலர் பாரதிதாசன், அண்ணாதுரை ஆகியோரால் காஞ்சிபுரத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதேவேளை சென்னை மாகாணத்தை ஆண்டுக் கொண்டிருந்த காங்கிரசு கட்சி பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக கொண்டு வந்தது. கட்டாய இந்தியை பல்வேறு தலைவர்கள் எதிர்த்து "இந்தி எதிர்ப்பு மாநாடு" ஆங்காங்கே பரவலாக நடத்தினர்.
தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளாரும், சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தினார். தொடர்ந்து சென்னை கடற்கரையில் 1938ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியை எதிர்த்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் முதன் முதலாக "தமிழ்நாடு தமிழருக்கே" என்கிற முழக்கத்தை வைத்தார். அதுவரை திராவிடம், திராவிட நாடு என்று பேசி வந்த பெரியாரை பாவாணர் கூறுவது போல் "பால் திரிந்து தயிரானபின் எப்படிப் பாலாகாதோ? அதுபோல திராவிடம் என்பது சிதைந்து தமிழான பின்னர் மீண்டும் திராவிடம் என்பது கிடையாது" என்பதை அன்றைக்கு நிலவிய அரசியல் சூழல் வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்ததென்றால் அது மிகையல்ல. 1939ம் ஆண்டு காங்கிரசு கொண்டு வந்த இந்தித் திணிப்பை எதிர்த்து ஒரு மாநாடு நடைபெற்றது. மற்ற மாநாடுகளிலிருந்து இம்மாநாடு வேறுபட்ட மாநாடாக இருந்தது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், நாராயணி, தாமரைக்கனி, ம.தர்மாம்பாள், பட்டம்மாள், சீதா அம்மாள், அழகியார் என எண்ணற்ற பெண்கள் கலந்து கொண்ட எழுச்சியான போராட்டமாக இது அமைந்தது. இதற்காக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்றோர்க்கு 6 வாரங்கள் சிறை தண்டனை கிட்டியது.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. இளைஞர்கள் பலர் தங்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காக்க வேண்டி எத்தகைய அடக்குமுறைகளையும், எதிர்கொள்ள அணியமாகி விட்டனர்.
நடராசன், 1938 இந்தி எதிர்ப்புக் களத்திலே சாவை பரிசாகப் பெற்ற முதல் போராளி. 1938ம் ஆண்டு திசம்பர் 5ம் நாள் சிறைப்படுத்தப்பட்ட நடராசன் சிறையைக் கண்டு அஞ்சவில்லை. தம் கொள்கையில் உறுதியாக இருந்தார். சிறையில் கடுமையான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதனால் 1939ம் ஆண்டு சனவரி 15ம் நாள் சிறையிலேயே இறந்தார்.
நடராசனின் இறப்புக் குறித்து சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பியபோது ஈந்த ஈகியரை இழிவு செய்வது போல் அதை அலட்சியம் செய்தார் அன்றைக்கு முதல்வராக இருந்த இராசாசி. நடராசனின் தந்தை, இலட்சுமணன் சனவரி 29 அன்று "சண்டே அப்சர்வர்" எனும் ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலில் நெஞ்சுரம் மிக்க இளைஞன் நடராசன் முன் விடுதலை வேண்டி மன்னிப்பு கோரவில்லை என்பதை தெளிவுபடுத்தி பார்ப்பன இராசாசியின் அவதூறுக்கு தக்க பதிலடி கொடுத்தார்.
நடராசனைத் தொடர்ந்து தாளமுத்து என்கிற மற்றொரு போராளி 1939ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் நாள் சிறைப்படுத்தப்பட்டார். இவரும் எவ்வித சமரசமுமின்றி உறுதியோடு இருந்து மார்ச்சு மாதம் 11ம் நாள் மறைந்து 1938 மொழிப் போரின் அழியாச்சான்றானார். இவ்விருவரின் ஈகம் தமிழகமெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எதிர்ப்பு வலுக்கவே இராசாசியின் தலைமையில் இருந்த காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மேலும் இரண்டாம் உலகப் போரும் தொடங்கி விட்டதால் இராசாசியின் அரசு 1939ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதவி விலகியது.
இதையடுத்து சென்னை மாகாண அரசு ஆங்கிலேய கவர்னரின் ஆட்சியின் கீழ் வந்தது. 1940ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆங்கிலேய ஆளுநர் எர்சுகின் கட்டாய இந்தியை நீக்கி விரும்புகிறவர் மட்டும் படித்தால் போதும் என்று ஆணைப் பிறப்பித்தார். இதன் பின்னர் அவ்வப்போது இந்தியை கொண்டு வருவதும் பின் வாங்குவதுமாக இருந்து வந்தது. 1947 ஆகத்து 15 வெள்ளையரின் அதிகாரம் முழுவதுமாக காங்கிரசிடம் கையளிக்கப்பட்ட பின் ஆட்சியதிகாரத்தை முழுமையாகப் பெற்ற நேரு தலைமையிலான காங்கிரசு தான் இதுநாள்வரை மறைத்து வைத்திருந்த நஞ்சை மீண்டும் கக்கத் தொடங்கியது.
இந்தியை தமிழக மக்களின் மேல் வலுக்கட்டாயமாகத் திணித்தது. இதைக் கண்டித்து 1948ம் ஆண்டு சூலை மாதம் மறைமலையடிகள் தலைமையில் பெரியார் ஒரு பெரிய இந்தி எதிர்ப்பு கூட்டத்தைக் கூட்டினார். இதில் திரு.வி.க., அண்ணாதுரை, சிவஞானம் போன்றோர் கலந்து கொண்டனர். மீண்டும் 1952ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் உள்ள நடுவணரசு அலுவலகங்கள் பெயர் பலகைகளில் எல்லாம் இந்தி எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
பெரியார் மக்களைத் திரட்டி இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்தார். இந்தி மட்டும் இந்தியாவின் அலுவல் மொழி என்று ஓர் ஆணை நடுவண் அரசால் பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணை அலுவல் மொழிச் சட்டம் 1963 என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டு வரப்பட்டது. மீண்டும் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது அண்ணாதுரை தலைமையிலான திமுக நடுவணரசிடம் நேருவின் உறுதிமொழியை நடைமுறைப்படுத்த கோரிக்கை வைத்ததேயன்றி, தமிழகத்தில் இந்திக்கு என்றைக்கும் இடமில்லை என்பதை வலியுறுத்த திராணியற்றவர்களாக இருந்தனர். நேருவின் உறுதிமொழி என்பதே மோசடியான ஒன்றாகும்.
நேருவின் உறுதிமொழி என்பது என்ன? இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் அலுவல் மொழியாக நீடிக்கும் என்பதே அது. ஆக எப்போது வேண்டுமானாலும் மக்கள் விரும்புவதாகக் கூறி இந்தியைத் திணிப்பதற்காக நேருவின் காங்கிரசால் நயவஞ்சகமாக முன்மொழியப்பட்ட திட்டம் என்பதைத் தவிர வேறல்ல. நேருவின் அரசியல் நேர்மை உலகறிந்த ஒன்றாகும்.
காசுமீர மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துவதாக உறுதியளித்து மாறாக வாக்கெடுப்பு நடத்தாமல் அம்மக்களின் தலைவரான சேக் அப்துல்லாவை வெளியில் வராதபடி சிறையிலடைத்தவர்தான் நேரு. 1965 சனவரி 26ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வெடித்தது. தமிழ் மாணவர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கம் என்கிற மாணவர்கள் இயக்கம் தமிழகம் முழுவதுமுள்ள இந்தி எதிர்ப்பாளர்களையெல்லாம் ஒருங்கிணைத்தது. அண்ணாதுரை சனவரி 26 இந்திய குடியரசு நாளை "துக்க நாளாக" அறிவித்தார். கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை காட்டவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பக்தவத்சலம், மாணவர்களையும் போராட்டக் காரர்களையும் கடுமையாக எச்சரித்தார். அரசின் எதிர்ப்பைக் கண்டு திமுக சனவரி 25ஐ துக்க நாள் என அறிவித்தது.
1968 சனவரி 25, காலை மதுரையில் மாணவர்கள் பெருமளவில் திலகர் திடலை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அவர்களுடைய நோக்கம் ஊர்வலமாக சென்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவை கொளுத்த வேண்டும் என்பதாகும். ஊர்வலத்தினூடே இந்திக்கு பெரிய பாடை கட்டி அதைக் கொளுத்தியபடி இந்தி ஒழிக, இந்தி வேண்டாம், ஆங்கிலம் வேண்டும் என்று முழங்கியபடி ஊர்வலம் சென்றது. அப்போது காங்கிரசுகாரர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. தமிழகத்தில் இதுவுரை நடைபெற்ற போராட்டங்களிலே மிகப் பெரிய போராட்டம் 1965 மொழிப் போராட்டமே ஆகும். நம் தாய்மொழியாம் அருந்தமிழ் மொழியைக் காக்க எண்ணற்ற இளைஞர்கள் தங்கள் உயிரைத் தீயிக்கு இரையாக்கினர். உலகில் அதுவரை எங்குமே நடந்திராத ஒன்று மொழிக்காக நூற்றுக்கணக்கானோர் உயிரை தாமாக முன் வந்து தற்கொடையாக கொடுத்து தம் தாய்மொழியைக் காப்பாற்ற போராடியதுதான்.
அய்யம்பாளையம் வீரப்பன், கீழப்பழவூர் சின்னச்சாமி, கீரனூர் முத்து, கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, விருகம்பாக்கம் அரங்கநாதன் போன்றோர் தங்கள் உடலில் கன்னெய் ஊற்றி தீவைத்துக் கொண்டு தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்று முழக்கமிட்டபடியே இறந்தனர்.
அவ்வாறு இறந்துபோன அத்துணை பேரும் தங்களை ஈன்றெடுத்த பெற்றோரைப் பற்றிக் கவலைப்படவில்லை. தங்கள் மனைவிமார்கள் மற்றும் மழலைச் செல்வங்கள் பற்றி கிஞ்சிற்றும் எண்ணாமல் மொழியைக் காக்க வேண்டும் அதன் மூலம் தம் இனத்தைக் காக்க வேண்டும் என்கிற உறுதியோடு சாவை எதிர் கொண்டனர். இந்த வீர மறவர்களைப் பற்றி பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதுகையில் "கன்னெய் முழுகி கனல் குளித்தானையோ" என்ற வரிகள் அவர்களின் ஈகத்தை பறைசாற்றுவதாக அமைந்தது.
இவர்களைப் போலவே அண்ணாமலைப் பல்லைக் கழக மாணவர்கள் வரலாறு காணாத போராட்டத்தை நடத்தினர். அண்ணாமலை பல்கலைக் கழகமும், சென்னைப் பல்கலைக்கழகமும் காலவரையின்றி மூடப்பட்டன. போராட்டம் தீவிரமடைந்தது. பள்ளி கல்லூரிகள் ஏதும் இயங்கவில்லை.
மொழிப் போராட்டத்தை தீர்மானிக்கும் ஆற்றல் மாணவர்களின் கைக்கு மாறியது. தன்னெழுச்சியாக ஆங்காங்கே தமிழகமெங்கும் மாணவர்களும் பொதுமக்களும் திரண்டெழுந்து போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். தமிழகம் இந்தியாவிலிருந்து துண்டித்ததுபோல் வரலாறு காணாத கிளர்ச்சியும் வன்முறையும் வெடித்தது. இராணுவம் வரவழைக்கப்பட்டது.
கலவரத்தை அடக்க போராடிய மாணவர்கள் மீது பக்தவத்சலத்தின் காங்கிரசு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதிலே பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாயினர். அதிலே முதல் பலி அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் மாணவர் ராசேந்திரன் ஆவார். மற்றொரு மாணவர் நெடுமாறன் படுகாயமுற்றார். இப்படிப்பட்ட மொழிப் போர் ஈகியர்களைத்தாம் முதலமைச்சர் பக்தவத்சலம் வறுமையில் இறந்து போனார்கள் என்றும் வயிற்று வலியின் காரணமாக இறந்தார் என்றும் காதல் தோல்வியாலும் கடன் தொல்லையாலும் இறந்தார் என்றும் நாகூசாமல் சட்டப் பேரவையில் இழிவுபடுத்தினார். வேண்டும் என்றே இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாகக் காட்டினார்.
வீரஞ்செறிந்த மொழிப் போராட்டத்திற்கு தன்னலமற்ற தலைமை கிட்டியிருந்தால், அது சரியான பாதையில் சென்று தமிழக விடுதலைப் போராட்டமாக மாறியிருக்கும். 1965 மொழிப் போராட்டத்தைப் பொறுத்தளவில் அதன் துவக்கப்புள்ளி மொழியைக் காக்கும் ஒரு போராட்டமாகத் தொடங்கப்பட்டாலும், அதன் வளர்ச்சிப் போக்கில் அம்மொழியைச் சார்ந்த தேசிய இனம் விடுதலை என்பதாகவே அமையும். தமிழ் மொழி காக்கத் தொடங்கப்பட்ட போராட்டத்தை வெறும் காங்கிரசு எதிர்ப்பாக மட்டும் மாற்றி 1967 பொதுத் தேர்தலில் தங்கள் வாக்குப் பெட்டிகளை நிரப்பி ஆட்சிக்குவந்தது தி.மு.க. அரசு.
ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்த திமுக அதற்குக் காரணமான ஈகியர்களை மறந்தே போனது. அன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை "மாணவர்கள் அரசியலில் பங்கேற்கக் கூடாது" என்பதே. ஆனால் கருணாநிதியும் அவரது எடுபிடிகளும், 1965 மொழிப் போரில் கருணாநிதி கைதுசெய்யப்பட்டு பாளையம்கோட்டை சிறையில் சில காலம் இருந்ததை பாம்புகளுக்கும், தேள்களுக்கும் நடுவில் கருணாநிதி துன்பப்பட்டது போன்று இன்றுவரை மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
உண்மையில் அன்று மொழிப் போரை காட்டிக் கொடுத்தவர்களில் முதன்மையானவர் கருணாநிதி தான். அன்றைக்கு பாளையம்கோட்டை சிறையில் கருணாநிதி தனிமைச் சிறையில் இருந்ததைப் போல ஒரு மாயை இன்றுவரை நிலவுகிறது. சிறையில் கருணாநிதியுடன் மாணவர்களின் படி நிகராணிகளாக பெ.சீனிவாசன், காளிமுத்து, இராசாமுகமது, சேடப்பட்டி முத்தையா, துரைமுருகன் என பலர் இருந்தனர். இவர்களில் கருணாநிதிதான் முதன் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை வழக்குரைஞர் வழியாக விண்ணப்பித்தார்.
நாராயண சாமி முதலியார் எனும் வழக்குரைஞரை வைத்து, இவர் பின்னாட்களில் ம.கோ.ராவின் அமைச்சரவையில் சில காலம் சட்ட அமைச்சராக இருந்தவர். அந்த மனுவில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும் கருணாநிதிக்கும் தொடர்பில்லை. அவ்வாறு தொடர்பில்லாமல் கைது செய்தவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை தனது தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் மறைத்து "ஓடிவந்த இந்திப் பெண்ணே கேளீர் தேடி வந்த கோழை உள்ள நாடு இதுவல்லவே" என்று வெற்று ஆரவாரம் பேசி மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் ஊறு விளைவிப்பதில் காங்கிரசுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்லர் இங்கே இருக்கும் தமிழினத் தலைவர்களும் திராவிடத் தலைவர்களும். இவர்கள் ஆட்சியில்தான் தமிழுக்காக உண்மையாக உழைத்த தமிழறிஞர்கள் துன்புறுத்தப்பட்டனர். பலர் வறுமையில் வாடி இறந்தனர். தமிழ் மொழி தமிழினம் காக்கப் போராடியவர்கள் கடுமையான வழக்குகளில் சிறையிலடைக்கப்பட்டனர். தமிழ் வழிக் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. உயர் கல்வியில் தமிழ் மொழிக்கு இடம் இல்லை. 1997ம் ஆண்டு தமிழ் வழியில் பொறியியல் படிப்பு படிப்பதற்காக பலர் விண்ணப்பம் செய்திருந்த போதிலும் இவர்களின் அலட்சியப் போக்கினால் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்திடம் அனுமதி கிடைக்காமல் கிடப்பில் போட்டனர். மாறாக தனியார் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகி விட்டன. சென்னையில் ஓடுகின்ற தனியார் பொறியியல் கல்லூரி பேருந்துகளைப் பார்த்தாலே புரியும் அவற்றின் வளர்ச்சி. கல்விக் கொள்ளைக்கு வழிவகுத்தவர்கள் திமுக ஆட்சியாளர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்று வரை நீதிமன்றங்களிலே தமிழ் இல்லை. தமிழில் வழக்காட உரிமை கோரிய வழக்குரைஞர்களை சிறைப்படுத்துவதும், தமிழீழ மக்களுக்காக குரல் கொடுத்த வழக்குரைஞர்கள் மீது நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே ஆயிரக்கணக்கில் காவல்துறை குண்டர்களை ஏவிவிட்டு தாக்குவது, தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை நாள்தோறும் சுட்டுக் கொல்வதைப் பற்றி கிஞ்சிற்றும் கவலையில்லாமல் நடுவணரசுக்கு மடல் எழுதுவதாகக் கூறி தமிழக மீனவர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துவது இவையெல்லாம் தமிழ் மொழியையும் தமிழினத்தையும் உய்விக்க வந்ததாகக் கூறிக் கொள்ளும் திமுகவின் துரோகங்கள்.
நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மொழி என்பது தனித்த ஒன்றல்ல. அது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். அவர்களின் உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்தது. அந்த மொழியின் விடுதலை என்பது அந்த தேசிய இனம் விடுதலை அடைவதற்கான முக்கிய கூறு ஆகும். அதனால்தான் 1965 மொழிப்போர் உச்சக்கட்டத்தை எட்டும்போது துவக்கத்திலே அதற்கு தலைமை கொடுப்பதாக கூறி வந்த தமிழினத் தலைவர்களும் திராவிடத் தலைவர்களும் ஓடி ஒளிந்துக் கொண்டனர்.
ஆனால் இதை சரியாகக் கணித்த இந்திய உளவுத் துறை தமிழக விடுதலையை நோக்கி போராட்டம் செல்வதை நடுவணரசு உணர்த்தியதன் வெளிப்பாடே அன்றைக்கு இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி தமிழகத்தின் மீது இந்தியை திணிக்க மாட்டோம், அலுவல் மொழியாக ஆங்கிலம் நீடிக்கும் என்று கூறினார்.
மீண்டும் ஒரு மொழிப் போர் வந்துவிடுமோ என்று இந்திய அரசைக் காட்டிலும் அதன் அடிவருடிகளாக இருக்கும் தமிழக ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். இந்திய அரசும் இந்தியும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் செய்த கேட்டைக் காட்டிலும் தமிழக ஆட்சியாளர்கள் செய்த இரண்டகங்கள் அதிகம். இவற்றை நாம் கருத்தில் கொண்டால்தான் நாம் நம்முடைய அடிமைத் தளையில் இருந்து விடுபட முடியும் என்பதை உணர வேண்டும்.

நன்றி: உழைக்கும் மக்கள் தமிழகம்
உயிர் போனால் மயிர் போச்சு!

#3 பாலா

பாலா

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 1,864 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 28 பிப்ரவரி 2012 - 09:12 மாலை

அஸ்ஸாஞ் மற்றும் ஹரிஹரனுக்காக!
உயிர் போனால் மயிர் போச்சு!

#4 ஹரிஹரன்

ஹரிஹரன்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,543 posts
 • Gender:Male
 • Location:Chennai

Posted 01 மார்ச் 2012 - 06:49 மாலை

அஸ்ஸாஞ் மற்றும் ஹரிஹரனுக்காக!

நன்றி, அஸ்ஸாஞ் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லியாகிவிட்டது ஒற்றை வார்த்தையில் “கண்ணீர்துளி” என்று அது புரியாதமாதிரி நடிச்சுக்கிட்டு வாலை குழைத்து ஆட்டிக் கொண்டு திரிகிறது விடுங்கள்..
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#5 பழசு

பழசு

  Pro

 • Active Members
 • PipPipPip
 • 117 posts
 • Gender:Male

Posted 01 மார்ச் 2012 - 07:01 மாலை

அஸ்ஸாஞ் மற்றும் ஹரிஹரனுக்காக!பண்ணித்தமிழ் பாவேந்தன் குஸ்ஸாஞ்சுக்கு இந்தத் தமிழ் என்னாத்தைப் புரியும் பாலா சேர்?

#6 ஆக்னி

ஆக்னி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,316 posts

Posted 02 மார்ச் 2012 - 10:07 காலை

இதுக்கு எல்லாம் யோக்கிய சிகாமணி பதில் சொல்லமாட்டாருங்காணும்....

#7 அஸ்ஸாஞ்

அஸ்ஸாஞ்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 4,021 posts
 • Gender:Male

Posted 02 மார்ச் 2012 - 03:11 மாலை

கிழட்டு செனப்பன்னி எதுக்கு என் பின்பக்கத்தை முகர்ந்து கொண்டிருக்கிறது....

#8 ஹரிஹரன்

ஹரிஹரன்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,543 posts
 • Gender:Male
 • Location:Chennai

Posted 02 மார்ச் 2012 - 04:46 மாலை

கிழட்டு செனப்பன்னி எதுக்கு என் பின்பக்கத்தை முகர்ந்து கொண்டிருக்கிறது....

கிழட்டு செனப்பன்னியின் பின்பக்கத்தை முகர்ந்து கொண்டிருப்பது அஸ்ஸாஞ்....
இதற்கு பெயர்தான் “தன்னைப்போல் பிறரை நினைப்பதோ” :பெப்பெப்பே:
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#9 மலர்

மலர்

  Guide

 • Active Members
 • PipPipPipPip
 • 586 posts
 • Location:TN

Posted 03 மார்ச் 2012 - 12:47 மாலை

1937 முதல் 1968 வரையான இந்தி எதிர்ப்புப் போரை இந்த ஆங்கிலக் கட்டுரையில் விரிவாகப் படிக்கலாம்.

http://www.tamiltrib...on-history.html
Independent Tamil Nadu is our birth right!