Jump to content


Photo
- - - - -

கோழி மோசடி


 • Please log in to reply
6 replies to this topic

#1 அஸ்ஸாஞ்

அஸ்ஸாஞ்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 4,021 posts
 • Gender:Male

Posted 03 மார்ச் 2012 - 05:54 காலை

கோழி மோசடி

http://www.luckylook.../blog-post.html

புளி போட்டு பளபளப்பாக துலக்கி வைக்கப்பட்டிருந்த வெங்கலச் சொம்பில் ‘புளிச்’சென்று துப்பினார் நாட்டாமை. அதே ஆலமரம். அதே ஜமுக்காளம். அதே பொதுமக்கள்.

“ஆளாளுக்கு மசமசன்னு நின்னுக்கிட்டிருந்தா எப்பூடி? யாராவது பேச்சைத் தொடங்கியாகணுமில்லே?” நாட்டாமைக்கு சரிசமமாக அமர்ந்திருந்த பச்சைத்துண்டு பெருசு ஆரம்பித்து வைத்தது. தனக்கு வாகாக அவ்வப்போது ‘பீப்பி’ ஊதும் இம்மாதிரி ஆட்களுக்குதான் சரியாசனம் வழங்குவது நாட்டாமையின் வழக்கம்.

“நம்ம மாடசாமிதான் பிராது கொடுத்திருக்காப்புலே” மேடையில் அமர்ந்திருந்த இன்னொரு பீப்பி, முந்தைய பீப்பியை வழிமொழிந்தது.

“அது ஒண்ணுமில்லேங்கய்யா... நம்ம ராசாவாலே எனக்கு ஒரு ஒண்ணே முக்கா லட்சம் நஷ்டமா போயிடிச்சிய்யா... அவனாண்ட பேசி வாங்கித் தருவியளோ, இல்லேன்னா கட்டிவெச்சி அடிச்சி வாங்கித் தருவியளோ தெரியாது. என் காசு ஒண்ணே முக்கா லட்ச ரூவாய் எனக்கு வோணும்”

“என்னப்பா ராசா. மாடசாமி சொல்றது உண்மையா?”

“இல்லீங்க. என்னாலே அவனுக்கு லாபம்தானுங்க”

“ஏம்பா. அவன் லாபம்னு சொல்றான். நீ நஷ்டமுன்னு சொல்றே. என்னதான்யா உங்க கொடுக்க வாங்க”

“அய்யா. என் கோழிப்பண்ணையையே அழிச்சிப் புட்டான்யா இந்த ராசா”

“இல்லீங்கய்யா. அவன் பொய் சொல்லுதான். என்னாலே மாடசாமிக்கு நாப்பது ரூவாய் லாபம்தானுங்கய்யா”

“யோவ். ரெண்டு பேருலே ஒருத்தனாவது புரியறாமாதிரி சொல்லித் தொலைங்கடா. வெயில் ஏறிக்கிட்டே போவுது. உடம்பெல்லாம் ஒரு மாதிரி கசகசக்குது பார்த்துக்க”

மாடசாமி சொல்ல ஆரம்பித்தான்.

“அய்யாவுக்கு தெரியாதது ஒண்ணுமில்லீங்க. நான் ஆசையா ஒரு பெட்டைக்கோழியை வளர்த்து வந்தேன். எனக்கு வயித்துக்கு இருக்குதோ இல்லையோ. அதுக்கு நல்லா சத்தா தீவனம் போட்டு வளர்த்தேனுங்க. இப்போ கொஞ்சம் பணமுடை. அதனாலே அதை விலைக்கு வித்துடலாமுன்னு முடிவு பண்ணேனுங்க. நம்ம ராசா வாராவாரம் சந்தைக்குப் போவாப்புலேன்னு சொல்லிட்டு, அவனாண்ட இதை வித்துக் கொடுக்குற பொறுப்பை ஒப்படைச்சேனுங்க. அதுலேதானுங்க என்னை இவன் ஏமாத்திப்புட்டான்”

“அந்த கோழியோட விலை நூத்தி பத்து ரூவாய்ங்க. நான் நூத்தி ஐம்பது ரூவாய்க்கு வித்துக் கொடுத்தேனுங்க. அவனுக்கு நாப்பது ரூவாய் லாபம்தானுங்களே?”

“அது எப்படிங்க அய்யா? இந்த கோழி நாலு முட்டை வெச்சுருக்கும். நாலு குஞ்சு பொறிச்சிருக்கும். நாலு பதினாறாயி, பதினாறு அறுவத்தி நாலு ஆயி, அறுவத்தி நாலு இருநூத்தி ஐம்பத்தாறாயி... இப்படியே ஒரு ரெண்டு வருஷத்துலே பண்ணை ஆகியிருக்குமுங்க.. ஊர்லே பண்ணை வெச்சிருக்கிறானே முனுசாமி. அவங்கிட்டே வெசாரிச்சி கேட்டுட்டுதானுங்க சொல்றேன். ஒரு பண்ணையோட மதிப்பு ஒண்ணே முக்கா லட்சமுங்க. அப்போ என் கோழியோட மதிப்பும் அதுதானுங்களே? இவன் பாட்டுக்கு நூத்தி ஐம்பது ரூவாயை கையில் கொடுத்துட்டு போனா என்னாங்க அர்த்தம்?”

“என் அறிவுக்கண்ணை தெறந்துட்டேய்யா..” நாட்டாமை புளங்காங்கிதப்பட்டதோடு ராசாவை நோக்கி, “ராசா நீ கோழியை யாராண்ட வித்தியோ, அந்த விற்பனையை கேன்சல் பண்ணி உடனே தீர்ப்பு கொடுக்கறேன். மரியாதையா கோழியை வாங்கி மாடசாமி கிட்டே கொடுத்துடு. அதுவுமில்லாமே ஒண்ணே முக்கா லட்ச ரூவாய் ஏமாத்தியிருக்கே. இந்த நாட்டாமையோட லெவலை தாண்டின குத்தமிது. மோசடி பண்ண குத்தத்துக்காக உன்னை இந்த பஞ்சாயத்து போலிஸிலே ஒப்படைக்குது. இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு!”

“அருமையான தீர்ப்புங்கய்யா...” ஊரே குலவையிட்டு நாட்டாமையை வாழ்த்தியது.

ராசா இப்போது ஜெயிலில் இருக்கிறார். மாடசாமி தன் கோழியை ஒண்ணே முக்கா லட்ச ரூபாய்க்கு விற்க ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.

#2 சவகிருஷ்ணா

சவகிருஷ்ணா

  Junior

 • Members20
 • PipPip
 • 10 posts

Posted 04 மார்ச் 2012 - 06:05 மாலை

அருமை அருமை

#3 அருணாசலம்

அருணாசலம்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,127 posts
 • Gender:Male

Posted 06 மார்ச் 2012 - 12:48 காலை

இந்த திமுக அல்லகைகள் இன்னமும் ராசா சபோர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க ஆனா அவங்க தலிவரே ராசாவ கைவிட்டுடாரே?


250 ரூபாக்கு போக வேண்டிய கோழிய 50 ரூபா லஞ்சம் வாங்கிகிட்டு 140 ரூபாய்க்கு வித்துட்டு 40 ரூபா லாபம்னு சொன்னா நாம அவரு நல்லவருனு ஒத்துகினுமாம்... என்னங்கடா அநியாயமா இருக்கு? ஏன்டா 50 ரூவா லஞ்சம் வாங்கினேனு கேட்ட இல்ல 40 ரூவா லாபம்னு கணக்கு சொல்றானுங்க.. இதுக்கு ஒரு கத வேற... அட அல்லகைங்களா?
உலகெங்கும் அமைதி பரவட்டும்

#4 தென்னவன்

தென்னவன்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 5,074 posts
 • Gender:Male
 • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 06 மார்ச் 2012 - 01:55 மாலை

இந்த திமுக அல்லகைகள் இன்னமும் ராசா சபோர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க ஆனா அவங்க தலிவரே ராசாவ கைவிட்டுடாரே?


250 ரூபாக்கு போக வேண்டிய கோழிய 50 ரூபா லஞ்சம் வாங்கிகிட்டு 140 ரூபாய்க்கு வித்துட்டு 40 ரூபா லாபம்னு சொன்னா நாம அவரு நல்லவருனு ஒத்துகினுமாம்... என்னங்கடா அநியாயமா இருக்கு? ஏன்டா 50 ரூவா லஞ்சம் வாங்கினேனு கேட்ட இல்ல 40 ரூவா லாபம்னு கணக்கு சொல்றானுங்க.. இதுக்கு ஒரு கத வேற... அட அல்லகைங்களா?

:முடியல:

#5 கரிகாலன்

கரிகாலன்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 3,111 posts
 • Gender:Male
 • Location:தமிழ்??? அகம்!!!

Posted 09 மார்ச் 2012 - 07:49 காலை

கோழியை ஏலம் விட்டிருக்கலாம்.... அத விட்டுட்டு முதல்ல வர்றவனுக்குத்தான் கோழின்னு சொல்லி , தனக்கு கமிஷன் கொடுக்கிறவனுக்கு ஊர்ப்பொதுக்கோழியை குறைச்ச விலைக்கு வித்துட்டு கதை விடறானுவ .... கோழியை இப்பவும் ஏலம் விட தயாரா இல்லை ராசவோட கூட்டாளி போங்கிரஸ் களவாணிகள் .... ஏலம் விட்டா தெரியும் வண்டவாளம்.... அது எப்படி கோழி சாதரண 150 ரூபாக்கோழின்னா அதை வாங்குன ஆளுங்க உடனே அடுத்தவனுக்கு எப்படிடா 2000 ரூபாய்க்கு வித்தானுங்க ?????
மெய்ப் பொருள் காண்பது அறிவு

#6 clinton

clinton

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 1,567 posts

Posted 09 மார்ச் 2012 - 10:44 காலை

வக்கீல் ராம்ஜெத்மிலானி, ராசாவிற்கு செப்ட்ரம் ஊழலில் பங்க் இருகிறது என்று கோர்ட்டில் சொல்லவில்லையா? அதை சொல்லச்சொன்னது கருணாஸ் தானே? தன் மவளைக்காப்பாத்த அப்படி சொல்ல சொன்னதிற்கு கருணாஸீன் சாணயத்தனத்திற்காக உடன்பிறப்புகள் விழா ஏன் எடுக்கல. கருணாஸீக்கு விழா இல்லாமல் போர் அடிக்குமே!

#7 ஹரிஹரன்

ஹரிஹரன்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,543 posts
 • Gender:Male
 • Location:Chennai

Posted 10 மார்ச் 2012 - 02:27 காலை

வக்கீல் ராம்ஜெத்மிலானி, ராசாவிற்கு செப்ட்ரம் ஊழலில் பங்க் இருகிறது என்று கோர்ட்டில் சொல்லவில்லையா? அதை சொல்லச்சொன்னது கருணாஸ் தானே? தன் மவளைக்காப்பாத்த அப்படி சொல்ல சொன்னதிற்கு கருணாஸீன் சாணயத்தனத்திற்காக உடன்பிறப்புகள் விழா ஏன் எடுக்கல. கருணாஸீக்கு விழா இல்லாமல் போர் அடிக்குமே!

தலித் சம்பந்தியை இப்படியெல்லாம் அசிங்கப்படுத்தக்கூடாது சொல்லிபுட்டேன் ஆமாம்..
என்றும் அன்புடன்

ஹரிஹரன்