ஈழப் படுகொலை...!அழைத்தோம்
போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன்
என்று கேட்டதற்கு அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்றான்...!
பால் விலையேற்றம்....! அழைத்தோம்
போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு அது தடுக்க
முடியாதது என்றான்...!
எரிபொருள் விலையேற்றம் ....!அழைத்தோம்
போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு அது மத்திய
அரசு ஆணை நம்மால் ஒன்னும் செய்ய
முடியாது என்றான்...!
மீனவர் தாக்குதல்...!அழைத்தோம்
போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு மீனவன் ஏன்
எல்லைதாண்டி போகிறான் என்றான்...!
முல்லை பெரியாறு பிரச்சனை...!அழை
த்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன்
என்று கேட்டதற்கு எனக்கு முல்லை பெரியாறு நீர்
வருவதில்லை என்றான்...!
இதோ இன்று...!
சபரி மலையில் ...தமிழர்கள்
தாக்கப்பட்டனர்..!அழைப்போம்
போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரமாட்டான் ...!
ஏன் என்று கேட்டால் ...யார்
அவர்களை கேரள
கோயிலுக்கு போகச்சொன்னது என்பான் ...!
ஆனால்.......!
IPL
போட்டி சென்னையில் ..
எவனும் அழைக்க வில்லை...!
வேலை வெட்டியை விட்டுவிட்டு வரிசையில்
நின்று அனுமதி சீட்டு வாங்குகிறான்..!
ஏன்
என்று கேட்டால் ....தேசபற்று என்கிறான்...!
அடேய் ..! தமிழா வாழ்க உனது தேசப்
பற்று..!
thanks: facebook.com
|
Page 1 of 1
IPLலும் தமிழனும் facebook.com
#2
Posted 12 ஏப்ரல் 2012 - 03:06 மாலை
இந்த கவிதையில் சொற்குற்றம் இல்லை.. ஆனா பொருள் குற்றம் இருக்கு..
IPL போவது தேசபற்றுக்கா? பொழுதுபோக்குதானே...
அதுக்கு தானே மானட மயிலாடவும் பார்க்குறாங்க...
IPL போவது தேசபற்றுக்கா? பொழுதுபோக்குதானே...
அதுக்கு தானே மானட மயிலாடவும் பார்க்குறாங்க...
This post has been edited by அருணாசலம்: 12 ஏப்ரல் 2012 - 03:06 மாலை
உலகெங்கும் அமைதி பரவட்டும்
#3
Posted 12 ஏப்ரல் 2012 - 08:13 மாலை
இன்னிக்கு மேட்ச் பார்த்திங்களா? என்ன ஒரு த்ரிலர்.. இதுக்குதான் ஜனங்க போறாங்க.. அதுக்கு போய் தேசபற்று மொழிபற்றுனு ஏதாவது கவித எழுதவேண்டியது..
உலகெங்கும் அமைதி பரவட்டும்
#4
Posted 04 மே 2012 - 11:59 காலை
சென்னை என்று சொல்லிவிட்டு வெள்ளைகாரர்கள் கறுப்பர்கள் மற்றும் வடகத்தியர்கள் தான் விளையாடுகிறார்கள் யாரும் எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக பத்ரிநாத், விஜய் மற்றும் அஷ்வின் அணியிலுள்ளனர். தமிழ் பசங்களான பாலாஜி, தினேஷ் கார்த்திக், முரளி கார்த்திக் ஆகியோர் வேறு வேறு அணியில் ஆடுகின்றனர்.
மராட்டிகாரர்களுக்கு யாரை ஆதரிப்பது என தெரியவில்லை மும்பையையா இல்லை புனேவையா
டெல்லிகாரர்களுக்கு டெல்லியா இல்லை கவுதம் கம்பீர் வழிநடத்தும் கொல்கத்தாவா என குழப்பம்
பெங்காலிகளுக்கு கல்கத்தாவா இல்லை கங்குலி வழிநடத்தும் புனேவா
ரொம்ப கொழப்பமப்பா ஆனா இந்த வருஷ ஐபிஎல் பெரிய பெயிலியர் அடுத்த வருஷம் இப்போட்டி நடக்கவே கூடாது படிக்கும் பிள்ளைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

வாழு வாழவிடு
Share this topic:
Page 1 of 1

Help