நான் இங்கு பதில் பதித்ததே தாங்கள் காயத்ரி மந்திரத்தில் ஆபாசம் இருப்பதாக கூறியதால்தான்.
ஆரம்பத்திலிருந்தே கல்யாண மந்திரத்தை மட்டுமோ, இராமாயணத்தை மட்டுமோ தொட்டிருந்தால் இந்த பக்கமே நான் வந்திருக்க மாட்டேன். ஏனெனில் எனக்கு அதில் அவ்வளவாக அறிவு கிடையாது என்பதை முன்னமே கூறிவிட்டேன்
எனக்கோ என் பெற்றோர்களுக்கோ சமஸ்கிருதத்தின் அர்த்தங்கள் விரிவாக தெரியாது. (அதை ஜபிக்கும் பல சாஸ்த்ரிரிகளுக்கு கூட தெரியாது என்பது வேறு விடயம்)
அதற்கான அர்த்தம் வேண்டுமென்றால் Sanskrit College போன்ற இடத்திற்கு போனால்தான் கிடைக்கும்
காயத்ரி மந்திரத்தை தவிர வேறு சுலோகத்தில் ஆபாசமிருப்பதாக நீங்கள் கருதினால் அத்ற்கு எனக்கு பதில் அளிக்க தெரியாது. காரணம் எனக்கு சுலோகத்திலிருந்து தமிழாக்கம் செய்யும் அறிவு கிடையாது.
தாங்கள் தந்த சுலோகத்தின் அர்த்தம் எனக்கு தெரியாது
மேலும் நான் அதில் ஆபாசம் இருந்தாலும் ஆச்ச்ரிய பட மாட்டேன். கஜூராகோ என்பது சிவன் கோவிலாம் ,காமசூத்ராவை எழுதியது முனிவராம் இப்படி காமத்தை எங்குமே விட்டுவைக்காத மதத்தில் இதில் காமம் இருக்காது என்பதை வாதாடுவதல்ல என் நோக்கம். இருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை
என் நோக்கமெல்லாம் காயத்ரி மந்திரம் பற்றிய குற்றச்சாட்டை மறுப்பது மட்டும்தான். ஏனெனில் இராமயாணத்தையோ, கல்யாணமந்திரமோ என் வாழ்கையில் நான் சொன்னது கிடையாது, ஆனால் காயத்ரி மந்திரத்தை 10000 முறையாவது சொல்லியிருப்பேன். அதில் ஆபாசம் என்ரவுடன் பதறிவிட்டேன் அவ்வளவே
மேலும் கம்பன் பெண்களை வர்ணிப்பதில் கில்லாடி என எனக்கு தெரியும். அந்த பாட்டை கொடுத்தமைக்கு நன்றி.
இந்த பகுதியில் மேலும் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. (காரணம் இதை வேறு திசையில் திசை திருப்ப இப்போதே பலர் ரெடி, மேலும் நான் மீண்டும் இக்களத்திற்கு அடிமையாவதை கண்டிப்பாக விரும்பைல்லை)
எனவே நண்றி வருகிறேன்
This post has been edited by ஆனந்த்: 12 ஜனவரி 2007 - 12:46 மாலை

Help





















