TamilnaduTalk.com: அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் - TamilnaduTalk.com

Jump to content

  • (2 Pages)
  • +
  • 1
  • 2
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

#1 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 08:45 மாலை

உன்னோடு வாழும்
ஓவ்வோரு நாளும்
எனக்கு காதலர் தினம்

உன்னை காணும்
காலை நேரங்கள்
எனக்குக் காதலர் தினம்

உன் இதயத்தில்
நான் இருக்கும் நேரம்
எல்லாம் எனக்கு காதலர் தினம்
உன் இடதுபக்கத்தில் என் இதயத்தையும்
என் வலபக்கத்தில் உன் இதையத்தையும்
நாம் தாங்கி வாழும் எல்லா நாளும்
நமக்கு காதலர் தினமே
(சத்தியமா நான் எழுதவில்லை)
நல்லதே நினைப்போம்
0

#2 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 08:49 மாலை

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்
எண்ணூரு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி!

பார்வையிலே சிலநிமிடம், பயத்தோடு சிலநிமிடம்!கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களில்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சிலநிமிடம்!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

எது நியாயம், எது பாவம்,
இருவர்க்கும் தோன்றவில்லை!

அது இரவா, அது பகலா,
அதைப்பற்றி அறியவில்லை!

யார் தொடங்க, யார் முடிக்க,
ஒருவழியும் தோன்றவில்லை!

இருவருமே தொடங்கிவிட்டோம்
இதுவரைக்கும் கேள்வியில்லை!

அச்சம் களைந்தேன் ஆசைகளை நீ அணைத்தாய்!
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்!

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்,
கடைசியிலே அழுத கண்ணீர்
கையில் இன்னும் முட்டுதடி!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

(இது இருவர் படத்தில் வரும் ஒரு அற்புதமான கவிதை ..கவியரவு வைரமுத்துவின் பொற்கரங்களால் எழுதபட்டது)
எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று
நல்லதே நினைப்போம்
0

#3 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 08:53 மாலை

கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?

பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?

சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவம் நீயா?

பருவத்தின் தோட்டத்தின் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணும் ஒளி வட்டம் நீதான்!
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சிதான்!

வார்த்தைக்குள் உள்ளாடும் உயிரோட்டம் நீதான்!
என் வாக்கியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்!

தூரத்தில் மயிலிறகாய்த் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்!

காதலுக்குக் கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்தால் கண்மூடிக்கொண்டவளும் நீதான்!

படம் டூயட் கவிதை வைரமுத்து.. என் டீன் ஏஜ் காலங்களில் அரை பக்கத்தில் இந்த கவிதையை எழுதி வைத்து என் கவிதை என்று பீலா விட்ட காலம் நினைவிற்க்கு வருகிறது
நல்லதே நினைப்போம்
0

#4 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 08:54 மாலை

எனக்கு இந்தப் பாடல் வரிகள் ரொம்பப்
பிடிக்கும்...

படம் : காதல் கொண்டேன்
கவிஞர் : நா முத்துகுமார்

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முகமூடி அணிகின்ற உலகிது
உன் முகமென்று ஒன்று இங்கு என்னது?
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது
வா நண்பா... --
நல்லதே நினைப்போம்
0

#5 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 08:59 மாலை

ஷாம் நடித்த 'இயற்கை' படத்தில் வைரமுத்துவின் கைவண்ணத்தில் இந்தப் பாட்டு:

'காதல் வந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
கண்ணீர் வழிய உயிரும் வழியக்
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக - மனம்
வெட்ட வெளியிலே வாடுதடி
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி'

ஒரு கடற்கரையோரக் காதலனின் பார்வை எவ்வளவு அழகாக வர்ணிக்கப்படுகிறது?
நல்லதே நினைப்போம்
0

#6 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 09:01 மாலை

காதல் தோல்வியை இதை விட யாரும் தன்னபிக்கையோடு தெளிவாக சொல்லி விட முடியாது

சத்தத்தினால் உண்ட பித்தத்தினால்
காதல் யுத்ததினால் எனது ரத்ததினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி.
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி.
கண் பார்த்ததும், கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும், தள்ளிப்பின் பார்த்ததும்
சுட்டாலும், மறக்காது நெஞ்சம்.
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால், என்னை நிந்திப்பதால்,
நெஞ்சை தண்டிப்பதால், தலையை துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.
உம் என்று சொல், இல்லை நில் என்று கொல்.
என்னை வாவென்று சொல் இல்லை போவென்று கொல்.
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.
நீ இல்லை என்றால் ஈடுகாடு பக்கம்.

படம் டூயட் கவியரசு வைரமுத்துவின் கைவண்ணம்
நல்லதே நினைப்போம்
0

#7 User is offline   லெனின் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 14,056
  • Joined: 14-நவம்பர் 05
  • Gender:Male
  • Location:Chennai

Posted 13 பிப்ரவரி 2007 - 09:03 மாலை

நான் ரொம்ப டயர்டாகிபோனேனே....:(
0

#8 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 09:10 மாலை

View Postபூக்குட்டி, on Feb 13 2007, 09:03 PM, said:

நான் ரொம்ப டயர்டாகிபோனேனே....:(


என்ன மாமே என்ன டயர்டு என்ஞாய் மாடி !!
நல்லதே நினைப்போம்
0

#9 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 09:10 மாலை

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

உடலுக்குள் மல்லிகை தூரல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய்ய்ய்ய்ய்ய்ய்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

எந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துகிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லிவேர்கள் இருந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை
துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

சட்டென நனைந்தது நெஞ்சம்!

இது கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஒரு அற்புதமான பாடல்
மீண்டும் கவியரசு வைரமுத்து
நல்லதே நினைப்போம்
0

#10 User is offline   லெனின் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 14,056
  • Joined: 14-நவம்பர் 05
  • Gender:Male
  • Location:Chennai

Posted 13 பிப்ரவரி 2007 - 09:14 மாலை

காதல் என்பது வெங்காயம்..
உரிக்க உரிக்க வெறும் தோல் மட்டுமே மிஞ்சும்..
-லக்கிலுக் பொன்மொழிகள்
0

#11 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 09:17 மாலை

கடையாக எனக்கு மிகவும் படித்த பாடல்
என் வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த பாடல்

இன்றும் கூட பார்க்கும் போதோ அல்லது கேட்க்கும் போதோ இந்த பாடல் என்னை என்னவோ செய்து விடும்

சக்கரை நிலவே பெண்ணின் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே!

மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே அதில் வார்த்தை இல்லை
அன்பே உன் புண்ணகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே என் புண்ணகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்துக் கொண்டது என் தவறா
ஆண் பெண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதை அல்ல கல்லின் சுவரா?

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றாள் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்த சிலை
என் கணவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் எனக்கும் எல்லா பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்


இப்ப என் மெசேஜ்( இது தேவையா?)
மானிடரே ஆதனினால் காதல் செய்வீரே

எனக்கு தெரிந்து வேலை இடத்திலும் நண்பர்களிலும் பல பேரை நாளைக்கு பிடிக்க முடியாது
காதலின் சுவை அருமையானது அற்புதமானது அதை அனுபவித்து பார்தவர்களால் தான் உணர முடியும்
நல்லதே நினைப்போம்
0

#12 User is offline   லீனாரோய் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • Group: Active Members
  • Posts: 14,490
  • Joined: 18-செப்டம்பர் 06
  • Gender:Male
  • Location:யேர்மனி
  • Interests:சமையல் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் சாப்பிடுவது உட்பட

Posted 13 பிப்ரவரி 2007 - 09:20 மாலை

அருண் புல் பார்ம் இல் இருப்பது போல் தெரிகிறது.
இன்றைக்கு மட்டும் அருணிடம் யாரும் அகப்பட்டால் அவ்வளவுதான்.
சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......!
0

#13 User is offline   லெனின் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 14,056
  • Joined: 14-நவம்பர் 05
  • Gender:Male
  • Location:Chennai

Post icon  Posted 13 பிப்ரவரி 2007 - 09:22 மாலை

View Postலீனாரோய், on Feb 13 2007, 09:20 PM, said:

அருண் புல் பாட்டிலில் இருப்பது போல் தெரிகிறது.

:lol: :lol: வன்மையாக கண்டிக்கிறேன்...:(
0

#14 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 09:27 மாலை

View Postலீனாரோய், on Feb 13 2007, 09:20 PM, said:

அருண் புல் பார்ம் இல் இருப்பது போல் தெரிகிறது.
இன்றைக்கு மட்டும் அருணிடம் யாரும் அகப்பட்டால் அவ்வளவுதான்.


இல்லை அண்ணா சில வருடங்கல் முன்பு இந்த இரவுகளில் என்ன செய்யலாம் என்று உருகி கொண்டு இருந்தேன். அந்த நாட்களை நினைத்தாலே இன்னமும் மனதுக்குக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சி பறக்கும் :) :D
நல்லதே நினைப்போம்
0

#15 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 09:27 மாலை

View Postபூக்குட்டி, on Feb 13 2007, 09:22 PM, said:

:lol: :lol: வன்மையாக கண்டிக்கிறேன்...:(


அட பாவிகளா இப்படி எல்லாம் புரளி கிளப்புரீங்க :)
நல்லதே நினைப்போம்
0

#16 User is offline   வந்தி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 9,498
  • Joined: 11-மே 06
  • Gender:Male
  • Location:பூமியில் ஓர் இடம்
  • Interests:cricket,Internet, Books and music

Posted 13 பிப்ரவரி 2007 - 09:35 மாலை

அருணின் காதலுக்கு வாழ்த்துக்கள்

காதல் என்பது பபிள்கம் மாதிரி ஆரம்பத்தில் இனிக்கும் பின்னர் கசக்கும் இறுதியில் இழுபடும்
இணையதளபதி - வந்தி
0

#17 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 09:37 மாலை

View Postவந்தியத்தே�, on Feb 13 2007, 09:35 PM, said:

அருணின் காதலுக்கு வாழ்த்துக்கள்

காதல் என்பது பபிள்கம் மாதிரி ஆரம்பத்தில் இனிக்கும் பின்னர் கசக்கும் இறுதியில் இழுபடும்

அது காதல் பபுள்கம்
வந்தி அண்ணா இந்த குறிப்புகளை பத்தர படித்து வையுங்கள்
இல்லை என்றால் பெப்சி அல்லது கோகோ கோலோ காரன் அடித்து விட்டு செல்வான்
நல்லதே நினைப்போம்
0

#18 User is offline   லீனாரோய் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • Group: Active Members
  • Posts: 14,490
  • Joined: 18-செப்டம்பர் 06
  • Gender:Male
  • Location:யேர்மனி
  • Interests:சமையல் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் சாப்பிடுவது உட்பட

Posted 13 பிப்ரவரி 2007 - 09:46 மாலை

View Postவந்தியத்தே�, on Feb 13 2007, 05:05 PM, said:

அருணின் காதலுக்கு வாழ்த்துக்கள்

காதல் என்பது பபிள்கம் மாதிரி ஆரம்பத்தில் இனிக்கும் பின்னர் கசக்கும் இறுதியில் இழுபடும்

காதல் என்பது பபிள் கம்முமில்லை சூயிங் கம்முமில்லை அது என்றும் இனிக்கும் தேன். ஆனால் எப்போ, திருமணம் வரை..................
சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......!
0

#19 User is offline   அருண் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 7,253
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:** Universe **
  • Interests:உங்களிடம் பேசுவது

Posted 13 பிப்ரவரி 2007 - 09:53 மாலை

View Postலீனாரோய், on Feb 13 2007, 09:46 PM, said:

காதல் என்பது பபிள் கம்முமில்லை சூயிங் கம்முமில்லை அது என்றும் இனிக்கும் தேன். ஆனால் எப்போ, திருமணம் வரை..................


நீங்க வேற
இப்போ திருமணங்களுக்கு முன்னரே தேன் குப்பை தொட்டிக்கு செல்கிறது
ஆனாலும் காதல் என்றும் சுவை குறையாத தேன் தான்.
நல்லதே நினைப்போம்
0

#20 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 8,479
  • Joined: 11-ஜூலை 06

Posted 13 பிப்ரவரி 2007 - 09:57 மாலை

View Postலீனாரோய், on Feb 13 2007, 09:46 PM, said:

காதல் என்பது பபிள் கம்முமில்லை சூயிங் கம்முமில்லை அது என்றும் இனிக்கும் தேன். ஆனால் எப்போ, திருமணம் வரை..................

அப்படியானால் அங்கு காதலுக்கு என்ன மரியாதை? காதல் திருமணம் என்றாலும் ஒன்று தான் பெரியவர்கள் நிச்சயித்த திருமணமானாலும் ஒன்று தானே?
0

Share this topic:


  • (2 Pages)
  • +
  • 1
  • 2
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users