TamilnaduTalk.com: பள பளக்கும் பற்கள்! - TamilnaduTalk.com

Jump to content


Page 1 of 1

பள பளக்கும் பற்கள்!

#1 User is offline   சராஜ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 16,881
 • Joined: 19-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:சீனா
 • Interests:பிடித்தவை எல்லாமே...

Post icon  Posted 10 ஜூலை 2007 - 02:12 மாலை

பள பளக்கும் பற்கள்!!!

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" ஆலங்குச்சி, வேலங்குச்சி, பேப்பங்குச்சி என பற்பசையும், பல்துலக்கும் தூரிகையும் இணைந்த இயற்கை நமக்களித்த அன்பளிப்புகளை புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு கிராமப்புறங்களில் கூட நவநாகரீக பாணியில் பற்பசைகளும் பல் துலக்கும் தூரிகைகளும் பரவலான பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

Posted Image

மாநகரத்து மகாதேவன் பயன்படுத்துவதையே மாந்தோப்பு கிராமத்து மாடசாமியும் பயன்படுத்துகிறார் என்ற சமநிலை, சமத்துவத்தை பற்றி கொஞ்சம் மகிழ்ச்சியடையலாம். ஆனால், மகாதேவதுக்குத்தான் நவநாகரீக வாழ்க்கை மோகம், தகுநிலை நிர்ப்பந்தம், நம்ம மாடசாமிக்கு அதெல்லாம் இல்லையே, இயற்கை அளித்த அருங்கொடைகளை அவர் ஏன் ஒதுக்குகிறார் என்ற கரிசனையே அதிகம் மேலிடுகிறது.

அப்படியென்றால், மாநகரத்துவாசிகள் பளீரிடும் பற்கள் தெரிய சிரிப்பதும், கிராமத்து மக்கள் கரையேறிய பற்களுடன் தெரிவதும்தான் எனக்கு பிடிக்குமா? என்ற கேள்வி எழும்.

நியாயமான கேள்விதான். இன்றைக்குள்ள பன்னாட்டு நிறுவனங்களின், பல விதமான நுகர்வுப்பொருட்கள், இயற்கையில் இருந்து நாம் நேரடியாக பயன்படுத்திய, பதப்படுத்து பயன்படுத்திய பொருட்களைவிட சில அம்சங்களில் மேம்பாடு கொண்டவை என்பதும் உண்மைதான். அதனால்தான் ஆலங்குச்சி, வேலங்குச்சி, வேப்பங்குச்சி, கரித்தூள் என பல்துலக்க் பயன்படுத்தப்பட்ட பொருட்களும், தலைக்கு குளிக்க சீயக்காய்த்தூளும் இன்றைக்கு பயன்படுத்தப்படாத நிலை.

எல்லாமே வேகமாகிப்போன உலகில் , அவசரமாகிப்போன நமது வாழ்க்கையில் யார் இயற்கையோடு மெனக்கெடுவது. எல்லாமே ரெடிமேட், நேரடியாக பயன்படுத்த ஆயத்த நிலையில் கிடைக்கும்போது, எதற்கு குச்சியை வைத்து பற்களை துலக்கவேண்டும். மேலும் பற்பசைகளும் இன்னபிற பற்களை மினுமினுக்கச்செய்யும் பொருட்களும்தான் சந்தையில் கிடைக்கின்றனவே, அவற்றை வாங்கி பயன்படுத்தி பளீரிடும் புன்னகைக்கு சொந்தக்காரர்களாகலாமே.

அப்படி போடு அருவாள என்று நினைப்பவர்களுக்கு, ஐயா சாமி, ஆபத்து சாமி என்கின்றனர் வல்லுனர்கள். இன்றைக்கு சந்தையில் உள்ள, பற்களை தூய்மைப்படுத்தும், வெண்மைப்படுத்தும் பொருட்களில் 90 விழுக்காட்டு பொருட்களில் அளவுக்கு மீறிய ப்ளீச் எனப்படும் தூய்மை செய்யும் வேதியல் பொருள் இருப்பதாக வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். அளவுக்கு அதிகமாக இருந்தால் சீக்கிரம் நம் பற்கள் வெண்மையாகிவிடுமே என்றெல்லாம் இங்கே பக்கவாத்தியம் வாசிக்க முடியாது.

Posted Image

இந்த வேதியல் பொருள் தலைமுடியை தங்க நிற்மாக மாற்றப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். ஆனால் இது நமது பற்களில் பயன்படுத்தப்படும்போது, வாயில் புண்கள் ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் உண்மை. சிகையலங்காரத்துறையில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதியல் பொருள், பற்களை வெண்மையாக்கும் திரவங்கள் என்று விளம்மபர்ப்படுத்தப்பட்டு சந்தையில் விற்பனையாகும் பொருட்களிலும் உள்ளதாம்.

இன்றைக்கு திரைப்படங்களில், தொலைக்காட்சியில் நம் உள்ளம் கவர்ந்த நட்சத்திரங்கள் பளீரிடும் வெண்மையான பற்கள் தெரிய சிரிப்பதை பார்த்து நாமும், அதேபோல் வெண்மையான பற்கள் வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த நட்சத்திரங்கள் பணம் அதிகம் செலவழித்து, பல மருத்துவரிடம் சென்று முறைப்படி பற்களை வெண்மையாக்கக்கியிருக்க, நமக்கு சந்தையில் நாமே பயன்படுத்தி வெண்மையாக்கக்கூடிய பொருட்கள் கிடைத்தால் நாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிடவா போகிறோம்.

அண்மையில் வர்த்தகத்தர நிறுவனம் என்ற நிறுவனத்தின் ஆண்டு மாநாட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நாம் இதுவரை கேட்ட தகவல்கள் தவிர, ஒரு சில பொருட்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 230 மடங்கு அதிகமான ஹைட்ரஜன் பெராக்சைடு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த வல்லுனர்கள் சொல்வது என்னவென்றால், பற்களை வெண்மையாக்கி, பளீரென வைத்துக்கொள்ள விரும்புவது தவறல்ல, ஆனால், அதை ஒரு நல்ல பல் மருத்துவரின் ஆலோசனையின் படியும், அவரது வழிநடத்தலின் படியும் செய்யுங்கள் என்பதுதான். கடந்த சில ஆண்டுகளில் முக அழகு தொடர்பான துறையில், பற்களை வெண்மையாக வைத்துக்கொள்ள பல் மருத்துவரை நாடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Posted Image

இந்த வேதியல் பொருட்கள் பற்களை வெண்மையாக்கும் அதேவேளை வாயில் புண் ஏற்படுத்துவது மட்டுமல்லாது, ஈருகளை பாதிக்கும், பற் கூசுதலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பற்களை வெண்மைபடுத்தும் பொருட்களை சோதித்ததே த்வைர, இன்னும் பற்பசைகலை ஆய்வு செய்யவில்லை. அதையும் பரிச்சொதித்தால் அதில் என்னென்ன தீங்கேற்படுத்தும் வேதியல் பொருட்கள் இருக்குமோ.

இப்படி பற்களை வெண்மையாக்கும் முயற்சியில் பல் மருத்துவரை நாடாமல் நாமே சொந்தமாக இறங்கிவிட்டால் முதலில் நாம் பயன்படுத்தும் வெண்மையாக்கும் பொருட்களில் ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதியல் பொருளின் இருப்பு 0.1 விழுக்காடு மட்டுமே இருக்கவேண்டும் என்கின்றனர் வல்லுனர்கள்.

சுகாதாரக் கட்டுபாடுகள் மிகக்கடுமையானதாக இல்லாத நாடுகளின் சந்தைக்கென இப்படியான பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பற்களை வெண்மையாக்க கிளம்பி, அந்த பற்களையே இழக்க கூடாதல்லவா.

தங்கப்பல்லைக் கட்டினாலும், தந்த்தாதல் ஆன பற்களை பொருத்தினாலும், சொந்தப்பல் போல வருமா.

பல்லு போனா சொல்லு போச்சி.
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
0

#2 User is offline   வேக்கப் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 10,955
 • Joined: 09-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:Dubai
 • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 10 ஜூலை 2007 - 02:42 மாலை

சொந்த பல்லு போனா

தங்க பல் வைச்சா

சுப்பராக பள பளக்கும் பற்கள்!!!

மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்
0

#3 User is offline   சராஜ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 16,881
 • Joined: 19-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:சீனா
 • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 10 ஜூலை 2007 - 02:47 மாலை

பளபளக்கு தங்கப்பல் எந்த உபயோகமும் இல்லை... ??!!

:rolleyes:
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
0

#4 User is offline   லீனாரோய் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 15,196
 • Joined: 18-செப்டம்பர் 06
 • Gender:Male
 • Interests:சமையல் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் சாப்பிடுவது உட்பட

Posted 10 ஜூலை 2007 - 02:49 மாலை

View Postசராஜ், on Jul 10 2007, 11:17 AM, said:

பளபளக்கு தங்கப்பல் எந்த உபயோகமும் இல்லை... ??!!

:rolleyes:

கஷ்டம் வரும்போது விற்கலாமே! அது உபயோகமில்லையா?
[color="#0000FF"]சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......![/color]
0

#5 User is offline   சராஜ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 16,881
 • Joined: 19-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:சீனா
 • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 10 ஜூலை 2007 - 02:54 மாலை

<<தங்கப்பல்லைக் கட்டினாலும், தந்த்தாதல் ஆன பற்களை பொருத்தினாலும், சொந்தப்பல் போல வருமா. >>

எனவே பல் பாதுகாப்பு பராமரிப்பு மிகவும் அவசியம்.

தங்கப்பல் விற்று வரும் பணத்தால் எந்த வகை உண்வையும் மெல்ல இயலாதே லீனா அண்ணா.. ஹிஹி!
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
0

#6 User is offline   வந்தி 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 9,499
 • Joined: 11-மே 06
 • Gender:Male
 • Location:பூமியில் ஓர் இடம்
 • Interests:cricket,Internet, Books and music

Posted 10 ஜூலை 2007 - 11:15 மாலை

யானை எந்த பேஸ்ட் பயன்படுத்துகிறது கோல்கேட்டா? சிக்னலா? இல்லை கோபால் பல்பொடியா?
[color="#FF0000"][b]இணையதளபதி - வந்தி[/b] [/color]
0

#7 User is offline   ரம்யா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 9,018
 • Joined: 17-மே 06
 • Gender:Female
 • Location:California

Posted 10 ஜூலை 2007 - 11:35 மாலை

தற்போது க்ரெஸ்ட் ஒய்ட்னிங் ஸ்ட்ரிப்ஸ் பற்களை வெண்மையாக்க பெரிதும் உதவுகிறது.
[b] யாமறிந்த மொழிகளிலே...[/b]
0

#8 User is offline   ஜெய் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 4,526
 • Joined: 10-ஏப்ரல் 06
 • Gender:Male
 • Location:chennai

Posted 10 ஜூலை 2007 - 11:39 மாலை

View Postவந்தி, on Jul 10 2007, 11:15 PM, said:

யானை எந்த பேஸ்ட் பயன்படுத்துகிறது கோல்கேட்டா? சிக்னலா? இல்லை கோபால் பல்பொடியா?

பயோரியா பல்பொடி... பலே பலே பல்பொடி....
[size=3][color="#800080"]My Name Is BillAAAAAAA[/color][/size]
0

#9 User is offline   ஜெய் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 4,526
 • Joined: 10-ஏப்ரல் 06
 • Gender:Male
 • Location:chennai

Posted 10 ஜூலை 2007 - 11:40 மாலை

கரும்பு திண்ணால் பற்கள் நல்ல வெண்மையாகுமாமே.....
[size=3][color="#800080"]My Name Is BillAAAAAAA[/color][/size]
0

#10 User is offline   ரம்யா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 9,018
 • Joined: 17-மே 06
 • Gender:Female
 • Location:California

Posted 10 ஜூலை 2007 - 11:41 மாலை

View Postஜெய், on Jul 10 2007, 11:40 PM, said:

கரும்பு திண்ணால் பற்கள் நல்ல வெண்மையாகுமாமே.....

இல்லை, கரும்பில் உள்ள சர்கக்ரையால் பல் கெட்டுப்போக தான் சான்ஸ் அதிகம்.
[b] யாமறிந்த மொழிகளிலே...[/b]
0

#11 User is offline   ஜெய் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 4,526
 • Joined: 10-ஏப்ரல் 06
 • Gender:Male
 • Location:chennai

Posted 10 ஜூலை 2007 - 11:56 மாலை

View Postரம்யா, on Jul 10 2007, 11:41 PM, said:

இல்லை, கரும்பில் உள்ள சர்கக்ரையால் பல் கெட்டுப்போக தான் சான்ஸ் அதிகம்.

ஓ.... :)
[size=3][color="#800080"]My Name Is BillAAAAAAA[/color][/size]
0

#12 User is offline   சராஜ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 16,881
 • Joined: 19-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:சீனா
 • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 11 ஜூலை 2007 - 12:41 மாலை

ஆலும் வேலும் பல்லுக்குறுதி...

யாரேனும் ஆலம் குச்சி அல்லது வேலம் குச்சு கொண்டு பல் துலக்கம் வழக்கம் உள்ளவர்கள் இருக்கீங்களா?

நான் கிராம்த்து வீட்டுக்குச் சென்றால் வேப்பங்குச்சியில் தான் பல்லில் கடிப்பது... :)
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
0

#13 User is offline   லெனின் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Members
 • Posts: 14,367
 • Joined: 14-நவம்பர் 05
 • Gender:Male
 • Location:Chennai

Posted 11 ஜூலை 2007 - 12:55 மாலை

பல்லே விளக்காம இருக்க ஐடியா இருந்தா கொடுங்களேன்.

சராஜ். நான் ஊருக்கு போனால் வேப்பங்குச்சிதான்..:)
0

#14 User is offline   சராஜ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 16,881
 • Joined: 19-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:சீனா
 • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 11 ஜூலை 2007 - 02:32 மாலை

பல்லே விளக்காம இருக்க... அமெரிக்கர்களைத்தான் ஐடியா கேட்கனும்... ஹிஹி!

அவக தான் ஏதோ மவுத் வாஷ்... வெண்பல் மாத்திரைன்னு என்னன்னவோ வைத்திருக்கிறார்கள்... :)
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
0

#15 User is offline   லீனாரோய் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 15,196
 • Joined: 18-செப்டம்பர் 06
 • Gender:Male
 • Interests:சமையல் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் சாப்பிடுவது உட்பட

Posted 11 ஜூலை 2007 - 02:54 மாலை

View Postசராஜ், on Jul 11 2007, 09:11 AM, said:

ஆலும் வேலும் பல்லுக்குறுதி...

யாரேனும் ஆலம் குச்சி அல்லது வேலம் குச்சு கொண்டு பல் துலக்கம் வழக்கம் உள்ளவர்கள் இருக்கீங்களா?

நான் கிராம்த்து வீட்டுக்குச் சென்றால் வேப்பங்குச்சியில் தான் பல்லில் கடிப்பது... :)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சொல்வது சரியாகவே இருந்தாலும், அவை நமக்கு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலர் மரத்திலிருந்து வேப்பங்குச்சியைப் பிடுங்கி கடித்து துப்பி, பல் விளக்குவார்கள் இது மிகவும் தப்பானது.
காரணம் ஒரு மரம் அது வேப்ப மரமாயிருந்தாலும் கூட, பல நுண்ணுயிர்களைக் கொண்டது. கண்ணுக்குத் தெரியாத சிறு புழுக்களும் அதில் இருக்கும். அது மட்டுமல்லாமல் பறவைகளின் எச்சங்கள் சிதறப்பட்ட சிறு கண்ணுக்குத் தெரியாத துளிகளாக அந்த குச்சியில் படிந்திருக்க வாய்ப்புமுண்டு.
இவையெல்லாம் சுகாதாரமற்றவை.
பழைய காலத்து மனிதர்கள் பல விதமான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அது சரியாகவே இருந்தது. ஆனால் நவீன மனிதன் அடிப்படையில் ஒரு நோஞ்சான். நோய்களை எதிர்க்க முடியாதவன்.

அப்படியும் இதைச் செய்ய வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் வீட்டில் அதை நன்றாக கழுவி, சுடுநீரில் வேகவைத்தை பின்னர் பற்களை அதனால் விளக்கலாம்.

இந்தக் குச்சியின் நார்கள் பற்களின் ஈறுகளை காயப்படுத்தி நிரந்தர இன்பெக்சன் வருவதற்கும் வழி சமைக்கலாம்.
[color="#0000FF"]சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......![/color]
0

#16 User is offline   சராஜ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 16,881
 • Joined: 19-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:சீனா
 • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 11 ஜூலை 2007 - 03:03 மாலை

ஓஒ... நீங்கள் சொல்வதும் சரிதான் லீனா அண்ணா...
நீங்கள் சொன்ன முறைப்படியே வேக வைத்த வேப்பங்குச்சியில் பல் துலக்குகிறேன்.. நன்றி :)
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
0

#17 User is offline   ramesh_86 

 • Pro
 • PipPipPip
 • Group: Active Members
 • Posts: 181
 • Joined: 18-ஜூன் 07
 • Gender:Male
 • Location:Malaysia
 • Interests:IT books

Posted 12 ஜூலை 2007 - 10:31 காலை

View Postலீனாரோய், on Jul 11 2007, 05:24 PM, said:

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சொல்வது சரியாகவே இருந்தாலும், அவை நமக்கு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலர் மரத்திலிருந்து வேப்பங்குச்சியைப் பிடுங்கி கடித்து துப்பி, பல் விளக்குவார்கள் இது மிகவும் தப்பானது.
காரணம் ஒரு மரம் அது வேப்ப மரமாயிருந்தாலும் கூட, பல நுண்ணுயிர்களைக் கொண்டது. கண்ணுக்குத் தெரியாத சிறு புழுக்களும் அதில் இருக்கும். அது மட்டுமல்லாமல் பறவைகளின் எச்சங்கள் சிதறப்பட்ட சிறு கண்ணுக்குத் தெரியாத துளிகளாக அந்த குச்சியில் படிந்திருக்க வாய்ப்புமுண்டு.
இவையெல்லாம் சுகாதாரமற்றவை.
பழைய காலத்து மனிதர்கள் பல விதமான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அது சரியாகவே இருந்தது. ஆனால் நவீன மனிதன் அடிப்படையில் ஒரு நோஞ்சான். நோய்களை எதிர்க்க முடியாதவன்.

அப்படியும் இதைச் செய்ய வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் வீட்டில் அதை நன்றாக கழுவி, சுடுநீரில் வேகவைத்தை பின்னர் பற்களை அதனால் விளக்கலாம்.

இந்தக் குச்சியின் நார்கள் பற்களின் ஈறுகளை காயப்படுத்தி நிரந்தர இன்பெக்சன் வருவதற்கும் வழி சமைக்கலாம்.good infos brother.. :)
[size=2][color="#FF0000"]En Uyir Tamizhuku!![/color]![/size]
0

Share this topic:


Page 1 of 1
 • You cannot start a new topic
 • You cannot reply to this topic

2 User(s) are reading this topic
0 members, 2 guests, 0 anonymous users