TamilnaduTalk.com: சளித்தொல்லையும், விட்டமின் "சி"யும் - TamilnaduTalk.com

Jump to content


Page 1 of 1

சளித்தொல்லையும், விட்டமின் "சி"யும்

#1 User is offline   சராஜ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 16,881
 • Joined: 19-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:சீனா
 • Interests:பிடித்தவை எல்லாமே...

Post icon  Posted 26 ஜூலை 2007 - 03:53 மாலை

சளித்தொல்லையும், விட்டமின் "சி"யும்

Posted Image

உலகில் பரவலாக எல்லோருக்குமே ஏற்படக்கூடியது, முகத்தை சுளிக்க வைத்து, நம்மிடமிருந்து மற்றவர் சற்று ஒடுங்கி நிற்கும் அளவுக்கு தொற்று அச்சுறுத்தலைக் கொண்டது. உயிர்குடிக்கும் தீவிரம் இல்லாது போனாலும், நம்மை வாட்டி நோகடிப்பது. ஆங்கிலத்தில் கோல்ட் என்றும் வடமொழியில் ஜலதோஷம் என்றும் அறியப்படும் சளி.

இதன் தன்மை அறிந்துதான், உணர்ந்துதான் பொதுவாக தொல்லை என்பதை உடன் சேர்த்தே "சளித்தொல்லை என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்".

மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களில் தீரும், மருந்து இல்லாவிட்டால் ஒரு வாரம் நீடிக்கும் என்று உண்மையை கிண்டலாக சொல்லி நாம் நமது ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்கிறோம். பொதுவாக சளித்தில்லை ஏற்பட்டால் நாம் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடுவதில்லை.

வைட்டமின் என்று நாம் அழைக்கும், விட்டமின், உயிர்ச்சத்துகளில் சி வகை சளிக்கு நல்லது என்பது பரவலான ஒரு நமிக்கை. ஆரன்ச்ஜுபழத்தில் இந்த உயிர்சத்து சி அதாவது விட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞு வழம் சாப்பிட்டால் சளி அதிகரிக்கும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால் ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி சளிக்கு நல்லது என்று மறுசாரார் நம்புகின்றனர். சளித்தொல்லையை சமாளிக்க விட்டமின் "சி"யை மாத்திரைகளாக உட்கொள்ளுபவர்கள் உலகில் அதிகம். ஊட்டச்சத்து மாத்திரைகளாக கருதப்படும் மல்ட்டிவிட்டமின்கள் அதாவது பல விட்டமின்களின் கலவை மாத்திரைகள் குட இன்றைக்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் வேடிக்கை என்ன்வென்றால், சளித்தொல்லைக்கு விட்டமின் சியை மாத்திரையாக் ஔட்கொண்டாலும் சரி, ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதம் மூலம் விட்டமின் சியை பெற்றாலும் சரி, எல்லாம் வீண், கால விரயெமே என்று அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.

மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இந்த விட்டமின் சியை மாத்திரைகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒன்றேல் சளியை வராமல் தடுக்க அல்லது சளி வந்தாலும், அதன் அறிகுறிகளின் தீவிரத்தை தணிவுபடுத்த.

Posted Image

ஆனால் இத்தகைய மாத்திரைகள், சளியைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அதன் தீவிரத்தை தணிவுபடுத்துவதுமில்லை என்று அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாரத்தான் எனப்படும் நெடுந்தூர ஓட்டத்தில் பங்கேற்போர், ஸ்கீயிங் என்பபடும் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்போர், மிகத்தீவிரமான சளியால் துன்புறுவோர், மன அழுத்தத்தால் அவதியுறுவோர், இவர்களுக்கு மட்டும்தான் இந்த விட்டமின் சி மாத்திரைகள் கொஞ்சம் பயன் தருகின்றன. மற்றவர்கள் சளி வந்தால், இந்த விட்டமின் சி மாத்திரைகளை சாப்பிட மெனக்கெட வேண்டாம் என்று கூறுகின்றனர்.

ஈந்த ஆய்வாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் 11 ஆயிரம் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இவர்கள் கூறுவது என்னவென்றால், 365 நாட்களும் விட்டமின் சியை சாப்பிடுவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை என்பதுதான்.

கோக்ரேன் லெபாரட்டரி என்ற மருத்துவ ஏட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு பொதுவாக விட்டமின் சியை வழமையாக அன்றாடம் உட்கொள்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சளி ஏற்பட குறைவான வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்தது. மேலும் அன்றாடம் விட்டமின் சியை உட்கொள்பவர்களுக்கு சளி பிடித்தால் அதன் தீவிரம் எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதும் ஆராயப்பட்டது. பொதுவாக கடைகளில் கிடைக்கும் விட்டமின் சி மாத்திரைகளில் இருப்பதைப்போல் 4 மடங்கு அதாவது 2 கிராம் விட்டமின் சியை ஆய்வுக்குட்படுத்தப்பட்டோர் உட்கொண்டனர்.

ஆய்வின் முடிவில், உலகின் பல்வேறு பகுதியிலிருந்தான தரவுகளின்படி, விட்டமின் சி மாத்திரைகள் மிகக் குறைவான பயனையே தந்தனவாம். அன்றாடம் விட்டமின் சியை உட்கொண்டவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 2 விழுக்காடு மட்டுமே குறைவாக சளிபிடிக்கும் ஆபத்தில்லாதிருந்தனர். சளியின் தீவிரமும் மிகச் சிறிய அளவே குறைந்தது. பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகம் இவற்றைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்களின் கருத்தில், இந்த் ஆய்வை சுருங்கச் சொன்னால், மற்றவர்கள் ஆண்டில் 12 நாட்கள் சளியால் அவதியுற்றால், அன்ராடம் விட்டமின் சி சாப்பிடுபோர் ஆண்டில் 11 நாட்கள் அவதியுறுவர்.

ஆண்டுக்கு 3 அலது 4 முறை நமக்கு சளி பிடிக்கிறது. சளி பிடித்தால், தலைவலி, மூக்கடைப்பு, தொண்டை வலி, காய்ச்சல், இருமல், முக்கொழுகுதல் என அதன் சகாக்களும் சேர்ந்து நம்மை உண்டு இல்லையென ஆக்கிவிடுகின்றன.

கிண்டலாக இதையும் சொல்லக் கேட்டிருப்போம், நமக்கெல்லாம் சளிபிடித்தால் எப்படி அவதியுறுகிறோம், பத்து தலை ராவணன் எப்படி சமாளித்திருப்பார் என்று. கேலியும், கிண்டலும் ஒருபுறம் இருக்கட்டும். நம்மில் அனைவருமே அறிந்தது, அனுபவத்தால் உணர்ந்தது, இந்த சளித்தொல்லை. நாம் பலரும் நம்பிய விட்டமின் சியும் இபோது பயனற்றதாக அறிவியலர்கள் கூறியதால் கவலை ஏற்படுகிறது அல்லவா. கவலையை விடுங்கள், கொஞ்சம் ஆறுதலான தகவலும் உண்டு.

Posted Image

விட்டமின் சி பொதுவாக அனைவருக்குமே பலன் தராது என்றாலும், இச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு அது பலன் தரும் என்பதை பிரித்தானிய வல்லுனர்கள், கண்டறிந்துள்ளனர்.

அபெர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த நுண் உயிரியலாளர் ஹியூக் பென்னிங்க்டன் என்பவர், சளிக்கு விட்டமின் சி மாத்திரைகளும், ஆரன்ச்ஜு வழச்சாறும் பெரிதாக ஒன்றும் பயன் தரவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன ஆனால் அவற்றை உட்கொள்வதால் கேடொன்றுமில்லை, தீங்கொன்றுமில்லை என்கிறார். மட்டுமல்ல, இவற்றை சாப்பிடுவதால் குணமாகும், சளி குறையும் என்ற நம்பிக்கையே சளியால் அவதியுறுபவர்களுக்கு ஆறுதலாக இருக்கும், அவர்கள் ஓரளவு தெம்பைப் பெறுவார்கள் என்கிறார் பென்னிங்க்டன்.

மறுபுறத்தில் எக்கினாசியா என்ற ஒரு தாவரத்தின் மூலமான மருந்து சளிக்கு நல்ல பயனுள்ள நிவாரணமளிப்பதாக அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர். சூரியகாந்தி பூவைப்போல காட்சியளிக்கும் இந்த எக்கினாசியா பூக்களின் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, கிட்டத்தட்ட சலிபிடிக்கும் வாய்ப்பை பாதியளவு குறைக்கிறதாம்.

என்ன் எக்கினாசியா எங்கே கிடைக்கும் என்பதுதானே உங்கள் கேள்வி....??

:rolleyes:
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
0

#2 User is offline   அறிவானந்தா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 5,486
 • Joined: 12-ஜனவரி 06
 • Gender:Male

Posted 26 ஜூலை 2007 - 05:17 மாலை

நன்றி சராஜ் தகவலுக்கு ஹி ஹி ஹி

மேலே உள்ள பதிவை எழுத உபயம்: நன்றிமான். சராஜ்
[b]தமிழா இன உணர்வுகொள்![/b]
0

#3 User is offline   லெனின் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Members
 • Posts: 14,367
 • Joined: 14-நவம்பர் 05
 • Gender:Male
 • Location:Chennai

Posted 26 ஜூலை 2007 - 05:25 மாலை

View Postஅறிவானந்தா, on Jul 26 2007, 05:17 PM, said:

நன்றி சராஜ் தகவலுக்கு ஹி ஹி ஹி

மேலே உள்ள பதிவை எழுத உபயம்: நன்றிமான். சராஜ்

வழிமொழிக்கிறேன். ;)
0

#4 User is offline   கிமீரா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 8,954
 • Joined: 11-ஜூலை 06
 • Gender:Female

Posted 26 ஜூலை 2007 - 05:34 மாலை

ஐயகோ!...2,3 நாளாக இந்த தொல்லை என்னை தீவிரமா ஆட்டி படைக்குதே....'வைட்டமின் சி' கூட காப்பாத்தாதாமே......நான் என்ன செய்வேன்..........
0

#5 User is offline   லீனாரோய் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 15,196
 • Joined: 18-செப்டம்பர் 06
 • Gender:Male
 • Interests:சமையல் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் சாப்பிடுவது உட்பட

Posted 26 ஜூலை 2007 - 05:44 மாலை

View Postகிமீரா, on Jul 26 2007, 02:04 PM, said:

ஐயகோ!...2,3 நாளாக இந்த தொல்லை என்னை தீவிரமா ஆட்டி படைக்குதே....'வைட்டமின் சி' கூட காப்பாத்தாதாமே......நான் என்ன செய்வேன்..........

சளித் தொல்லை வாழ்நாளில் வராமல் இருப்பதற்கு சரியான மருந்து......... தற்கொலைதான்.
[color="#0000FF"]சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......![/color]
0

#6 User is offline   சராஜ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 16,881
 • Joined: 19-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:சீனா
 • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 26 ஜூலை 2007 - 05:45 மாலை

கிமீராக்கா இன்னும் இரண்டு நாள் பொருத்துக்கோங்க... எல்லாம் தானா ஓடிடும்... :)
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
0

#7 User is offline   கிமீரா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 8,954
 • Joined: 11-ஜூலை 06
 • Gender:Female

Posted 26 ஜூலை 2007 - 05:56 மாலை

View Postலீனாரோய், on Jul 26 2007, 05:44 PM, said:

சளித் தொல்லை வாழ்நாளில் வராமல் இருப்பதற்கு சரியான மருந்து......... தற்கொலைதான்.

தற்கொலையா..நான் செய்யமாட்டேன்..........சராஜின் கூற்றுபடி பொறுத்துக் கொள்கிறேன்... பொறுத்தவர் பூமி ஆள்வார் அல்லவோ......
0

#8 User is offline   தமிழ் குரல் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 4,632
 • Joined: 08-ஏப்ரல் 06
 • Gender:Male

Posted 26 ஜூலை 2007 - 09:04 மாலை

எனக்கு 2 மாததிற்கு ஒரு முறை இந்த தொந்தரவு வரும்... மருத்துகளால் பயன் இல்லை... ஒரு வாரம் பாடாய் படுத்தி விட்டுதான் போகிறது... இப்போது கூட 3 நாட்களாக சளியால் அவதி படுகிறேன்... வேறு வழியில்லாமல் பொறுத்து கொள்ள வேண்டியதுதான்...
மக்கள் விடுதலைக்கு போராடுவோம்...
0

#9 User is offline   லெனின் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Members
 • Posts: 14,367
 • Joined: 14-நவம்பர் 05
 • Gender:Male
 • Location:Chennai

Posted 26 ஜூலை 2007 - 09:18 மாலை

அய்யோ பாவம்.. :P :P
0

#10 User is offline   பாலா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,857
 • Joined: 12-ஏப்ரல் 06
 • Gender:Male
 • Location:USA

Posted 26 ஜூலை 2007 - 09:40 மாலை

View Postதமிழ் குரல், on Jul 26 2007, 11:34 AM, said:

எனக்கு 2 மாததிற்கு ஒரு முறை இந்த தொந்தரவு வரும்... மருத்துகளால் பயன் இல்லை... ஒரு வாரம் பாடாய் படுத்தி விட்டுதான் போகிறது... இப்போது கூட 3 நாட்களாக சளியால் அவதி படுகிறேன்... வேறு வழியில்லாமல் பொறுத்து கொள்ள வேண்டியதுதான்...


இதற்கு காரணம் அலர்ஜிதான்...தலையில் அதிகம் தூசு படியாமல் பார்த்துக் கொள்ளவும்...இரவு எண்ணெய் தேய்த்தால் காலையில் தலைக்கு குளித்தல் அவசியம்...

நான் இந்தியாவில் இருந்த போது இந்த முறையில் தினமும் தலைக்கு குளிக்க ஆரம்பித்தேன்....சளி அதற்கப்புறம் போன இடம் தெரியவில்லை...

லீனாஜி சொல்வது போல் தற்கொலைக்கு யாரும் முயலவேண்டாம்....பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்...(பாடியைத்தான்!!)
உயிர் போனால் மயிர் போச்சு!
0

#11 User is offline   கிமீரா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 8,954
 • Joined: 11-ஜூலை 06
 • Gender:Female

Posted 26 ஜூலை 2007 - 09:46 மாலை

View Postதமிழ் குரல், on Jul 26 2007, 09:04 PM, said:

எனக்கு 2 மாததிற்கு ஒரு முறை இந்த தொந்தரவு வரும்... மருத்துகளால் பயன் இல்லை... ஒரு வாரம் பாடாய் படுத்தி விட்டுதான் போகிறது... இப்போது கூட 3 நாட்களாக சளியால் அவதி படுகிறேன்... வேறு வழியில்லாமல் பொறுத்து கொள்ள வேண்டியதுதான்...எனக்கு ஜலதோஷம் பிடித்து 1,11/2 வருடத்திற்கு மேல் ஆகி இருக்கும்.அவ்வளவு சீக்கிரத்தில் ஏதுவும் வராது...வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து எனக்கு ஒட்டிவிட்டார்கள். :(
0

#12 User is offline   தமிழ் குரல் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 4,632
 • Joined: 08-ஏப்ரல் 06
 • Gender:Male

Posted 26 ஜூலை 2007 - 10:00 மாலை

View Postபாலா, on Jul 26 2007, 09:40 PM, said:

இதற்கு காரணம் அலர்ஜிதான்...தலையில் அதிகம் தூசு படியாமல் பார்த்துக் கொள்ளவும்...இரவு எண்ணெய் தேய்த்தால் காலையில் தலைக்கு குளித்தல் அவசியம்...

(பாடியைத்தான்!!)


நான் தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் உடையவன்... ஆனால் கொஞ்சமும் தூசி ஒத்து கொள்வதில்லை... மேலும் சென்னை வந்த பின் 3 மாததிற்கு ஒரு முறை காய்ச்சல்... இரண்டு மாததிற்கு ஒரு முறை சளி தொல்லை என்றாகி விட்டது... சொந்த ஊரிலோ... வெளி நாட்டிலோ இருக்கும் போது இவ்வளவு பிரச்சனை இருக்காது... ஓரளவிற்கு சரியாக்கும் நிவாரணம் அதிமதுரம் எனும் நாட்டு மருந்துதான்... நாட்டு மருந்து கடையில் வேர்களை வாங்கி வந்து... சுடு நீரில் ஊர வைத்து... அந்த சுடு நீரை குடித்தால் கொஞ்சம் சரியாகிறது...
மக்கள் விடுதலைக்கு போராடுவோம்...
0

#13 User is offline   தமிழ் குரல் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 4,632
 • Joined: 08-ஏப்ரல் 06
 • Gender:Male

Posted 26 ஜூலை 2007 - 10:02 மாலை

View Postகிமீரா, on Jul 26 2007, 09:46 PM, said:

ஏதுவும் வராது...வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து எனக்கு ஒட்டிவிட்டார்கள். :(


உங்கள் வீட்டில் எவ்வளவு பாசம்... ஒரு வகையில் நன்றாக் இருக்கிறது...
மக்கள் விடுதலைக்கு போராடுவோம்...
0

#14 User is offline   கிமீரா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 8,954
 • Joined: 11-ஜூலை 06
 • Gender:Female

Posted 26 ஜூலை 2007 - 10:04 மாலை

View Postதமிழ் குரல், on Jul 26 2007, 10:00 PM, said:

நான் தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் உடையவன்... ஆனால் கொஞ்சமும் தூசி ஒத்து கொள்வதில்லை... மேலும் சென்னை வந்த பின் 3 மாததிற்கு ஒரு முறை காய்ச்சல்... இரண்டு மாததிற்கு ஒரு முறை சளி தொல்லை என்றாகி விட்டது... சொந்த ஊரிலோ... வெளி நாட்டிலோ இருக்கும் போது இவ்வளவு பிரச்சனை இருக்காது... ஓரளவிற்கு சரியாக்கும் நிவாரணம் அதிமதுரம் எனும் நாட்டு மருந்துதான்... நாட்டு மருந்து கடையில் வேர்களை வாங்கி வந்து... சுடு நீரில் ஊர வைத்து... அந்த சுடு நீரை குடித்தால் கொஞ்சம் சரியாகிறது...

வெளிநாட்டிலிருப்பவர்கள் இங்கு வந்த உடனே சளி பிடித்துக்கொள்கிறது...தூசு தான் காரணம் என்று நினைக்கிறேன்.
0

#15 User is offline   கிமீரா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 8,954
 • Joined: 11-ஜூலை 06
 • Gender:Female

Posted 26 ஜூலை 2007 - 10:07 மாலை

View Postதமிழ் குரல், on Jul 26 2007, 10:02 PM, said:

உங்கள் வீட்டில் எவ்வளவு பாசம்... ஒரு வகையில் நன்றாக் இருக்கிறது...

:) :)
0

#16 User is offline   பாலா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,857
 • Joined: 12-ஏப்ரல் 06
 • Gender:Male
 • Location:USA

Posted 26 ஜூலை 2007 - 10:07 மாலை

View Postபாலா, on Jul 26 2007, 12:10 PM, said:

இதற்கு காரணம் அலர்ஜிதான்...தலையில் அதிகம் தூசு படியாமல் பார்த்துக் கொள்ளவும்...இரவு எண்ணெய் தேய்த்தால் காலையில் தலைக்கு குளித்தல் அவசியம்...

நான் இந்தியாவில் இருந்த போது இந்த முறையில் தினமும் தலைக்கு குளிக்க ஆரம்பித்தேன்....சளி அதற்கப்புறம் போன இடம் தெரியவில்லை...

லீனாஜி சொல்வது போல் தற்கொலைக்கு யாரும் முயலவேண்டாம்....பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்...(பாடியைத்தான்!!)ஸாரி......தூசி என்று இருக்க வேண்டும்...தூசு என்றால்...வேறு அர்த்தமல்லவா? (தமிழ்க் குரல் சரியாக போட்டுள்ளார்)

This post has been edited by பாலா: 26 ஜூலை 2007 - 10:08 மாலை

உயிர் போனால் மயிர் போச்சு!
0

#17 User is offline   கிமீரா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 8,954
 • Joined: 11-ஜூலை 06
 • Gender:Female

Posted 26 ஜூலை 2007 - 10:11 மாலை

View Postபாலா, on Jul 26 2007, 10:07 PM, said:

ஸாரி......தூசி என்று இருக்க வேண்டும்...தூசு என்றால்...வேறு அர்த்தமல்லவா? (தமிழ்க் குரல் சரியாக போட்டுள்ளார்)

தூசுக்கும் தூசிக்கும் என்ன வித்தியாசம்?
0

#18 User is offline   பாலா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,857
 • Joined: 12-ஏப்ரல் 06
 • Gender:Male
 • Location:USA

Posted 26 ஜூலை 2007 - 11:04 மாலை

View Postகிமீரா, on Jul 26 2007, 12:41 PM, said:

தூசுக்கும் தூசிக்கும் என்ன வித்தியாசம்?


இங்கு இரண்டுமே சரி தான் என்று படுகிறது...

தூசு---கண்ணுக்கு தெரியாத சிறு துகள்கள்..
தூசி -- கண்ணுக்கு தெரியும் சிறு துகள்கள்..

சொந்த கருத்துதான்...சும்மா அடிச்சு விட்டேன்..வேறு யாரும் சரியான அகராதிப் பொருள் தெரியின் கூறவும்...
உயிர் போனால் மயிர் போச்சு!
0

#19 User is offline   லீனாரோய் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 15,196
 • Joined: 18-செப்டம்பர் 06
 • Gender:Male
 • Interests:சமையல் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் சாப்பிடுவது உட்பட

Posted 26 ஜூலை 2007 - 11:35 மாலை

View Postபாலா, on Jul 26 2007, 07:34 PM, said:

இங்கு இரண்டுமே சரி தான் என்று படுகிறது...

தூசு---கண்ணுக்கு தெரியாத சிறு துகள்கள்..
தூசி -- கண்ணுக்கு தெரியும் சிறு துகள்கள்..

சொந்த கருத்துதான்...சும்மா அடிச்சு விட்டேன்..வேறு யாரும் சரியான அகராதிப் பொருள் தெரியின் கூறவும்...


இப்படிப் பல சொற்கள் தமிழில் உண்டு.

தசை - சதை
போல.
[color="#0000FF"]சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......![/color]
0

Share this topic:


Page 1 of 1
 • You cannot start a new topic
 • You cannot reply to this topic

2 User(s) are reading this topic
0 members, 2 guests, 0 anonymous users