TamilnaduTalk.com: நன்றி கெட்ட மாறன் சகோதரர்கள் - TamilnaduTalk.com

Jump to content

  • (2 Pages)
  • +
  • 1
  • 2
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

நன்றி கெட்ட மாறன் சகோதரர்கள் Rate Topic: -----

#1 User is offline   வந்தி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 9,498
  • Joined: 11-மே 06
  • Gender:Male
  • Location:பூமியில் ஓர் இடம்
  • Interests:cricket,Internet, Books and music

Post icon  Posted 02 ஜூலை 2008 - 01:49 மாலை

நன்றி கெட்ட மாறன் சகோதரர்கள்

மாறன் சகோதரர்கள் பற்றி நாலொரு செய்தி பொழுதொரு வதந்தி அடிபடுகின்றது. களத்தில் இருக்கும் திமுக உறுப்பினர்கள் அல்லது அபிமானிகள் இவர்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள். திமுக அபிமானி என்றவகையில் என் எண்ணம் இவர்களை அரசியல் அனாதைகள் ஆக்கவேண்டும் என்பதுதான் கலைஞரின் எதிரிகளுடன் சேர்ந்துள்ள கோடரிக்காம்புகள் இவர்கள். விகடனிலும் குமுதத்திலும் வந்த இரண்டு கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக‌


கழுகாரின் பார்வையில் மாறன் சகோதரர்கள்

''தினகரன், சன் குழுமத்துடன் எந்தத் தொடர்பும் கூடாது என்று கருணாநிதி டூ விட்டாரல்லவா? இந்தப் பிரச்னைக்கு முன்புவரை தி.மு.க. செய்திகளை ஏதோ ஒரு பாசத்தில் முக்கியத்துவம் தந்து தினகரனில் வெளியிட்டு வந்தார்கள். இப்போது கருணாநிதியின் எதிர்ப்பு அறிக்கையைப் போர்ப் பிரகடனம் போல் எடுத்துக்கொண்டார்கள் போலும், தினகரன் தரப்பினர். தி.மு.கவுக்குப் பயந்து யார் யார் செய்தியை இருட்டடிப்பு செய்தார்களோ... இப்போது அவர்கள் மீதெல்லாம் சன் டி.வியின் வெளிச்சம் விழ ஆரம்பித்துவிட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் சொத்தைக் கத்திரிக்காய் இருந்தால்கூட இப்போது அரசாங்கத்துக்கு எதிரான விஷயமாக அது 'ஃபோகஸ்' செய்யப்படுகிறது. சென்னையை வாட்டி வதைக்கும் வாடகை உயர்வு 'ஐந்து கால' செய்தியாகிறது. இப்போது தி.மு.கவைத் திட்டி அறிக்கை வெளியிடுபவர்கள் முதலில் அனுப்புவது தினகரன், சன் டி.விக்குத்தான்.''

''சரிதான்!''

''கருணாநிதி நானே ஒரு பத்திரிகையாளர் என்பார். ஆனால், அவரை விமர்சித்து எழுதினால் கோபம் கொண்டுவிடுவார். 'இந்து' பத்திரிகையை 'மவுன்ட்ரோடு மஹாவிஷ்ணு' என்று கிண்டல் செய்வார். அதே 'இந்து'வில் தி.மு.கவுக்கு சாதகமாகச் செய்தி வந்தால் 'இந்து பத்திரிகையே பாராட்டிவிட்டது' என்று முரசொலியில் மறுபதிப்பு செய்து சந்தோஷப்படுவார். குறிப்பிட்ட ஒரு தமிழ் நாளிதழை 'யாரும் படிக்காதீர், வாங்காதீர்' என்று அறிக்கையாக வாய் மலர்...ந்தார். அதை 'வாங்க மாட்டோம்' என்று உறுதிமொழிக் கடிதம் அனுப்பியவர்களின் பட்டியலை எல்லாம் முரசொலியில் தினம் வெளியிட்டார்கள். இப்போது கருணாநிதி தவறாமல் அந்தப் பத்திரிகையையும் படித்துவிட்டு, அதிகாரிகளையும் கட்சிக்காரர்களையும் கேள்விகளால் துளைக்கிறாராம். 'கலைஞர்' தொலைக்காட்சியின் முக்கிய விளம்பரதாரராகவும் இருக்கிறது அந்த நாளிதழ்.''

''சரி..!''

'' 'தி.மு.கவுடன் தினகரனுக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை' என்று கருணாநிதி சொன்னவுடன், இரண்டு மூத்த அமைச்சர்கள், 'இந்தளவு ஆன பிறகு தயாநிதி மாறனை மட்டும் எப்படி தி.மு.க. உறுப்பினராக நீடிக்க விடலாம்? அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே தூக்கிவிடுங்கள்' என்று கருணாநிதியிடம் சொன்னார்களாம். அவரோ தன்னுடைய முக்கியமான இரண்டு உதவியாளர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். 'இந்தக் காலகட்டத்தில் ஒரு எம்.பியின் பலம்கூட மத்திய அரசுக்கு முக்கியம். இப்போது தயாநிதியை நீக்கினால், அவர் எம்.பியாக இருந்துகொண்டே தி.மு.க. எதிர்ப்பு அரசியலில் இறங்குவார். இப்போதைக்கு இந்த முடிவு தலைவலியாகிவிடும். அதனால் நாம் அமைதியாக இருந்துவிட்டால் தயாநிதியும் நீக்குபோக்காக நடந்து கொள்வார்' என்று சொல்லியிருக்கிறார்கள். இதை மூத்த அமைச்சர்களிடம் கருணாநிதி சொல்ல, 'தலைவரே! உங்களுக்கு யோசனை சொல்ல அவர்கள் என்ன நேரடி அரசியலில் இருப்பவர்களா, என்ன...?' என்று விடாப் பிடியாகக் கேட்டார்களாம். மொத்ததில், தயாநிதி விஷயத்தில் முதல்வர் மனதில் குழப்பம்தான்

நீடிக்கிறது.''

''ஓஹோ!''

Posted Image

கடந்த 25-ம்தேதி! திருச்சியில் இருந்து ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை வந்து காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கலைஞர், அந்த அதிகாலை நேரத்தில் காருக்குள்ளிருந்தபடி நாளிதழ்களைப் புரட்டியிருக்கிறார். ஒவ்வொரு நாளிதழாகப் புரட்டியபடி வந்த கலைஞரின் பார்வை தினகரன் நாளிதழின் ஒரு பக்கத்தில் உன்னிப்பாகப் பதிந்தது. அந்தப் பக்கத்தில் இருந்தது ஜெயலலிதாவின் அறிக்கை. `மரண பயத்தில் மதுரை மக்கள்' என்ற தலைப்பில் இருந்த அந்தச் செய்தியைப் பார்த்து அப்படியே அதிர்ந்து போனார் கலைஞர்.

அந்த அறிக்கையை வரிக்குவரி தனது பேனாவால் அடிக்கோடிட்டபடி கோபாலபுரம் வீட்டுக்கு வந்து சேர்ந்த கலைஞர், உடனடியாக அங்கு வந்திருந்த உயரதிகாரிகள் சிலருடன் ஆலோசனை நடத்தினார். `அறிக்கையில் வந்திருப்பது போல மதுரையில் நிலைமை அவ்வளவு மோசமாகவா இருக்கிறது?' என்றவரிடம், `மதுரையில் சன் டி.வி. தெரியவில்லை என்பதைத் தவிர, பிரச்னை எதுவும் இல்லை. அதையும் முறைப்படி வாங்க ராயல் கேபிள் விஷன் முயன்று வருகிறது' என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதற்கு கலைஞர் `அதுதான் உண்மை என்றால், அந்த அம்மையாரின் அறிக்கையை இவர்கள் (தினகரன்) ஏன் இவ்வளவு பெரிதுபடுத்துகிறார்கள்?' என்று கூறிக் கொதித்தவர், `இந்தத் தலைப்பு நமது ஆட்சியையே களங்கப்படுத்துகிறது' என்று கூறி, சட்டென தனது உதவியாளர் சண்முகநாதனிடம், `சரி! போதும். அந்தப் பசங்களுக்கு கட்டம் கட்டி விடுங்கள்' என்று சொன்னதோடு, கைகளின் சைகையிலும் கட்டம் கட்டுவது போல காண்பித்து விட்டு அறிக்கையை தானே `டிக்டேட்' செய்தாராம். பிறகு தன்னை வரவேற்க வந்திருந்த அமைச்சர்களுடன் ஆலோசனைகளில் மூழ்கி விட்டாராம்.

அதன்பின் கலைஞர், அதேநாளில் ஓர் ஆங்கில நாளேட்டில் வந்த கட்டுரையைச் சுட்டிக்காட்டி, அதில் மாறன் சகோதரர்களின் நிறுவனங்கள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி விளக்கி, `இந்தக் கட்டுரையில் பெரும்பாலும் உண்மை இருக்கிறது. அவர்கள் பிழைப்புக்காக எதையும் செய்வார்கள் போலிருக்கிறது' என்று குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, ``முரசொலியில் அவர்களுக்கு கட்டம் கட்டிய அதே செய்தியின் அருகில் இந்த ஆங்கிலக் கட்டுரையின் சாராம்சத்தையும் போடச் சொல்லுங்கள்' என்றாராம்.

அதிகாலையில் ஆரம்பித்த இந்த ஆலோசனையில் கலைஞர் எடுத்த அதிரடி முடிவு பரபரவென பல மட்டங்களிலும் பரவியது. தினகரனுக்கு கட்டம் கட்டப்பட்ட விஷயம் முடிவான நிலையில், கலைஞருடன் இருந்த ஆற்காட்டார் இந்தத் தகவலை சந்தோஷத்துடன் அழகிரியிடம் கூறியிருக்கிறார். அதற்கு அழகிரி, `இந்த முடிவை எப்போதோ எடுத்திருக்க வேண்டும். இப்போதுதான் அதற்கு நேரம் வந்ததாக்கும்' என்றாராம்.

இந்த அதிரடி முடிவு பற்றி நம்மிடம் சில தகவல்களைக் கூறிய மூத்த அமைச்சர் ஒருவர், ``மாறன் சகோதரர்கள் தினகரனை வாங்கியதில் இருந்தே தொடர்ந்து தி.மு.க.வுக்குக் குடைச்சல்தான். தினகரனில் வெளிவரும் செய்திகளில் உள்ள தவறுகளை அதன் ஆசிரியர் மற்றும்நிர்வாகிகளுக்கு கலைஞர் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது போனில் சுட்டிக்காட்டுவார். ஆரம்பத்தில் விரும்பியே செய்த இந்த விமர்சனத்தை அங்குள்ள நிர்வாகிகள் சரிவரப் புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து தவறான பாதையிலேயே போனார்கள். பொதுவாக ஓர் ஊடகத்தில் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்றாலும், எந்த விவகாரத்தில் யாருக்கு முக்கியத்துவம்கொடுக்க வேண்டும் என்பதில் இவர்கள் நிலைதடுமாறி விட்டார்கள்.

கழகத்தையும்,அதன் சொத்துக்களையும் மூலதனமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட, சன் டி.வி.யும், அதன்மூலம் வாங்கப்பட்ட தினகரனும், இன்றைக்கு இந்த சகோதரர்களை இந்தியக் கோடீஸ்வரர்களில் ஒருவராக ஆக்கியிருக்கிறது. இதற்குக் காரணம் கலைஞர் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அத்துடன் தொடர்ந்து தவறு செய்து விட்டு பழியை அவர்கள் அழகிரி மீது போடுவது மகா பாவம் என்றே சொல்வோம். ஆரம்பத்தில் `சுமங்கலி'யை ஆரம்பிக்க மாறன் சகோதரர்கள் எந்த வழியைக் கையாண்டார்களோ அதே வழியைத்தான் அழகிரியின் ராயல் கேபிள் விஷனும் கையாள்கிறது.

தாங்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்றும் தங்களின் அடிமைகளாகவே இங்குள்ளவர்கள் இருக்க வேண்டும் என்றும் மாறன் சகோதரர்கள் நினைத்து வந்தார்கள். அப்படியிருந்தும் அவர்களை மன்னிக்க கலைஞர் தயாராகவே இருந்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து தங்களுக்குள்ள மீடியா பலத்தைப் பயன்படுத்தி, அவ்வப்போது தவறான தகவல்களைப் பரப்புவது கலைஞருக்கு அதிருப்தியைக் கொடுத்து வந்தது. இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். இப்போது மதுரையில் கேபிள் பிரச்னை பற்றிய ஜெயலலிதாவின் அறிக்கையை எடுத்துக் கொள்வோம். அதன் மூலம் தனது ஆட்சியையே அவர்கள் அவமானப்படுத்தி விட்டதாகப் பெரிதும் நொந்து போனார் தலைவர்'' என்று கூறினார் அந்த அமைச்சர்.

அவரே தொடர்ந்து ``அறிவாலயத்தில் இயங்கி வந்த சன் டிவி. அலுவலகத்தை மாறன் சகோதரர்கள் காலி செய்துவிட்டுப் போகும்போது, பல இடங்களில் உடைப்பையும், சேதத்தையும் ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள். காலையில் தலைவர் வாக்கிங் வரும்போது, அறிவாலய மேனேஜர் பவ்யமாக இந்த விஷயத்தை எடுத்துக்கூறி, `பூச்சுவேலைக்குக் கொஞ்சம் அதிகம் செலவாகும்' என்றிருக்கிறார். இதில் அதிர்ந்து போன தலைவர், உடனடியாக லிஃப்ட் மூலம் மேலே போய், சேதாரமான பகுதிகளைப் பார்வையிட்டிருக்கிறார். அதோடு, `என் வியர்வையும்,ரத்தமும் கலந்து கட்டிய கட்டடத்தை இப்படி சின்னாபின்னமாக்கி இருக்கிறார்களே.இந்த அநியாயத்தைப் பண்ணியவர்களுக்கு சப்போர்ட் செய்யும் செல்வியிடம் இதைக் கூறுங்கள்'' என்றவர், தானே தன் மகள் செல்வியிடம் செல்போனில் பேசி கட்டட டேமேஜ் பற்றி கூறியிருக்கிறார்.

செல்வி உடனடியாக, இதுபற்றி தயாநிதி மாறனிடம் பேச, தயாநிதி ஏதோ அப்போதுதான் தனக்கு டேமேஜ் பற்றித் தெரியும் என்பது போல் உடனே அறிவாலயத்துக்குள் போய் சுற்றிப் பார்த்தார். அதே நேரம் தலைவர் கட்டளைப்படி ஆற்காட்டாரும், வீரபாண்டியாரும் அறிவாலயத்துக்குப் போய் சேதாரத்தைப் பார்த்திருக்கிறார்கள். தயாநிதி ஒரு ஃபுளோரில் இருக்கும் போது, ஆற்காட்டாரும், வீரபாண்டியாரும் வேறு ஒரு ஃபுளோரில் இருந்த சூழ்நிலையில், ஆற்காட்டாரை தயாநிதி சந்தித்துப் பேசிக் கொண்டதாக ஒரு பத்திரிகையில் தயாநிதி தரப்பே ஒரு செய்தியை வரவழைத்து விட்டது.

இதே மாதிரிதான் கலைஞர் பிறந்தநாளன்று அவரைச் சந்திக்காமலேயே சந்தித்த மாதிரி செய்தியை அவர்கள் பரப்பினார்கள். கற்பனையும், பொய்யும் கலந்த சகோதரர்கள் என்றால் அது இவர்கள்தான். பிறந்தநாள் சந்திப்பு நடக்கவில்லை என்று அழகிரி கூறியது போல, இந்தமுறை ஆற்காட்டார் மறுப்பு கொடுக்கத் தயாரானார். அதற்குள் இப்படி ஒரு பிரச்னை வந்து மாறன் சகோதரர்களுடனான உறவு முற்றிலும் முறிந்து விட்டது'' என்று தெரிவித்தார் அவர்.

இதுபற்றி மாறன் சகோதரர்களின் கருத்து என்ன என்பதை அறிய நாம் தினகரன் வட்டாரத்துடன் பேசினோம். இதற்காகவே காத்திருந்ததுபோல மளமளவென தங்கள் உணர்வுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள் அவர்கள்.

``உண்மையைச் சொல்வது என்றால் தினகரன் ஊழியர்கள் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறோம். மாறன் சகோதரர்கள் வாங்கிய தினகரனில் கலைஞருக்குப் பிடிக்காத செய்தி ஏதாவது வந்து விட்டால், அவரே நேரடியாகப் போன் போட்டு காது கூசும் அளவுக்குத் திட்டுவது வாடிக்கை. எங்கள் எம்.டி.க்கும், இவர்களுக்கும் பிரச்னை வந்து பிரிந்த பிறகுதான் அந்த வாடிக்கை நின்று போய் இருக்கிறது.

நிஜத்தில் தி.மு.க. இப்போது அ.தி.மு.க. ஆகி விட்டது. அதாவது அழகிரி தி.மு.க. அப்பேர்ப்பட்ட தி.மு. கழகம் முன்பு ஒருமுறை தினமணியையும், பின்னர் தினமலர் நாளிதழையும் ஆதரிக்க வேண்டாம் என்றது. மேடை தோறும் இப்படியெல்லாம் தி.மு.க. தலைவர்கள் கூறிய பிறகுதான் அந்த நாளிதழ்களின் சர்க்குலேஷன்கள் எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. அதுபோல எங்கள் சர்க்குலேஷன் இன்னும் உயரும் என்பது உறுதி.

தி.மு.க.வினர் இப்போது மானப் பிரச்னையாகக் கருதும் ஜெயலலிதாவின் அறிக்கையை, இங்குள்ள நாளேடுகள் அத்தனையும் வெளியிட்டுள்ள நிலையில் அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதாவை விட்டுவிட்டு எங்கள் மீது ஏன் இத்தனை காட்டம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை. தி.மு.க. ஆட்சி வருவதற்கு முன் ஜெயலலிதாவின் மிடாஸ் நிறுவனம் பற்றி கன்னாபின்னா வென்று பல குற்றச்சாட்டுகளைக் கூறிய தி.மு.க. நிர்வாகிகள், இப்போது கமுக்கமாக இருக்கக் காரணம் என்ன? மாதாமாதம் அவர்கள் கமிஷன் வாங்குவதைப் பற்றியோ, அல்லது ஒரு மூத்த அமைச்சர் அவ்வப்போது ரகசியமாக சசிகலாவைச் சந்திப்பதைப் பற்றியோ செய்தி போட்டால் அவர்கள் கோபப்படலாம். மாறாக தமிழக எதிர்க்கட்சித் தலைவியின் அறிக்கையை நாங்கள் வெளியிட்டதற்கு இத்தனை கோபமா?

கலைஞர் டி.வி.யிலும் அவர்களின் மற்றொரு சேனலான இசையருவியிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் படங்கள் மற்றும் பாடல்களை அவர்கள் வெளியிடுவது மட்டும் தப்பில்லையாம். நடுநிலையான எங்கள் நாளேட்டில், நாட்டில் நடக்கும் பிரச்னை குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையைப் பிரசுரித்ததை தவறு என்று சொல்வதுதான் வேடிக்கை.

ஆரம்பத்தில், நாங்கள் போட்ட கருத்துக்கணிப்பை இன்றுவரை தவறு என்கிறார்கள். உண்மையில் அந்தக் கருத்துக் கணிப்புகள் ஒவ்வொன்றையும் கலைஞரின் ஒப்புதலுக்குப் பிறகே பிரசுரித்தோம். கலைஞரின் நள்ளிரவுக் கைதின்போது, `கொல்றாங்க கொல்றாங்க' என்ற கூக்குரலுக்குச் சொந்தக்காரரான தயாநிதி மாறனால் தலைவருக்கு ஒருபோதும் ஒரு கஷ்டமும் வராது. மேலும், இதே அறிவாலயத்தில் சன் டி.வி.யை காலி பண்ணும்போது ஏதோ சேதாரம் நடந்து விட்டது என்கிறார்கள். இந்த அறிவாலயத்தில் உருவாகியுள்ள கண் ஆஸ்பத்திரி, நூலகம், கலந்தாய்வுக் கூடம் மற்றும் தலைவரின் அறை இவை எல்லாமே எங்கள் எம்.டி. (கலாநிதி மாறன்) கட்டிக் கொடுத்ததுதான்.

அறிவாலயத்தில் இன்றளவும் கலைஞர் தொடங்கி பார்வையாளர்கள் வரை போய் அமரும் சேர்கள் எல்லாம் மாறன் சகோதரர்கள் வாங்கிக் கொடுத்ததுதான். இதை எல்லாம் மறந்துவிட்டு டேமேஜ் என்றெல்லாம் கூறி யாரை டேமேஜ் செய்கிறார்கள் என்று தெரியவில்லை? அப்படி டேமேஜ் ஏதாவது செய்திருந்தால் அதைச் சரி செய்ய உரிய பணத்தைக் கொடுக்கும் வசதியுள்ள எங்கள் நிறுவனம் பற்றி தாறுமாறாகப் பேசுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

அத்துடன் எங்கள் நாளிதழுக்குக் கட்டம் கட்டிய திமு.க.அரசு, எங்களுக்குத் தந்து வந்த அரசு விளம்பரங்களையும் நிறுத்தியுள்ளது. இதன்மூலம் எங்களைப் பணிய வைக்கலாம் என்று அவர்கள் கணக்குப் போடுகிறார்கள் போலும். அது ஒருபோதும் நடக்காது. இந்த அரசு தரும் விளம்பர வருவாய் எங்கள் ஊழியர்களின் ஒருநாள் டீ செலவுக்குக் கூட வராது என்பதுதான் உண்மை. இதற்காகவே அழகிரி ஏற்பாட்டில் கனிமொழியின் முயற்சியின் பெயரில் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் அரைப் பக்கக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் எங்கள் நடுநிலையை அதாவது ஜெயலலிதாவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விமர்சித்து இருக்கிறார்கள். அவர்களது நோக்கம் இப்போதைக்கு ஜெயித்திருக்கிறது. ஆனால் அது நீடிக்க வாய்ப்பில்லை.

இந்த சூழ்நிலையில் தி.மு.க. கூட்டணியைவிட பலமான கூட்டணி ஒன்று எதிர்ப்புறத்தில் இருந்து எங்களுக்கு மறைமுக ஆதரவு அளிக்கிறது. அந்த ஆதரவு இன்னும் வலுப்படும் என்றாலும் எங்கள் எம்.டி.க்கள் (மாறன் சகோதரர்கள்) எந்த சூழ்நிலையிலும் தி.மு.க.வை விட்டு விலகுவார்கள் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம்.

தேவையில்லாமல் எங்களைச் சீண்டியுள்ள கலைஞர் காங்கிரஸையும், கம்யூனிஸ்டுகளையும் ஒன்று சேர்த்து வைக்க பாடுபடுவதாகச் செய்திகள்வருவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. முதலில் தனித்தனியாகப் பிரிந்துள்ள அவரது குடும்ப உறுப்பினர்களை அவர் ஒன்று சேர்க்கட்டும் பார்க்கலாம்.

இப்போதைக்கு தினகரன் மீது கட்டம் கட்டியதை பெரிதுபடுத்தும் அழகிரிக்கே 2001-ல் இதே தி.மு.க. தலைமைக் கழகம் கட்டம் கட்டவில்லையா? அவ்வளவு ஏன்? ஜெயலலிதாவிடம் போய் யாசகமாக ஐந்து லட்சம் வாங்கி வந்த மூத்த மகன் மு.க.முத்துவின் மணிவிழாவில்கலைஞர் கலந்து கொண்டு உச்சி முகரவில்லையா? இதே பாணியில் கலைஞர் எங்கள் அலுவலகம் வந்து புது புராஜெக்டுக்கு குத்துவிளக்கேற்றும் வைபவம் நடந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்'' என்று ஒரேபோடாகப் போட்டார்கள் அவர்கள்.

ஆயினும்,அப்படியொரு நிகழ்ச்சி நடக்காது என்றும்,இப்போது தினகரனுக்குக் கட்டப்பட்ட `கட்டம்' நாளை சன் டி.வி.க்கும் கட்டப்படலாம் என்கிறார்கள் தி.மு.க. தரப்பில்! ஸீ

Posted Image
`மரண பயத்தில் மதுரை மக்கள்' என்ற தலைப்பில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையும், அதை தினகரன் நாளிதழ் வெளியிட்டதும் மதுரையிலுள்ள அழகிரி ஆதரவாளர்களை ஆத்திரப்பட வைத்துள்ளது. ```மாறன் சகோதரர்கள் தி.மு.க.வுக்குச் சாதகமாக இருக்க மாட்டார்கள்' என்று அண்ணன் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறார்.அது படிப்படியாக நிரூபணமாகி வருகிறது'' என்று ஆவேசப்பட்டனர் அவர்கள்.

`ஜெயலலிதாவின் இந்த அறிக்கை பற்றிய கருத்தறிய அழகிரியை அவரது ராயல் கேபிள் விஷன் அலுவலகத்தில் சந்தித்தோம்.

``ஜெயலலிதாவின் அறிக்கைக்கு ராயல் கேபிள் விஷன் மூலம் பதிலளித்து விட்டோம். தினகரன் நாளிதழுக்கு தி.மு.க. தலைமைக்கழகம் பதிலளித்து விட்டது. இது குறித்து முரசொலியில் விளக்கமாகவே அறிவிப்பு வந்துள்ளது. தலைவர் கருத்துக்குப் பிறகு நான் சொல்ல இதில் என்ன இருக்கிறது?'' என்றார் அழகிரி சிரித்துக் கொண்டே

This post has been edited by வந்தி: 02 ஜூலை 2008 - 01:52 மாலை

இணையதளபதி - வந்தி
0

#2 User is offline   சேகுவேரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 9,955
  • Joined: 25-ஆகஸ்ட் 07
  • Gender:Male
  • Interests:இங்கு என் விருப்பங்களை பற்றி சொல்வதால் என்ன நடக்கப்போகிறது?

Posted 02 ஜூலை 2008 - 02:17 மாலை

பணத்தால் எதையும் சாதிக்கலாம் என நினைத்தால் மாறன் சகோதரர்கள் நிலை இப்படித்தான் ஆகும். கலைஞர் உண்மையில் அது போல கட்டம் கட்டுக என சொல்லியிருந்தால் இருவரின் நிலை கொஞ்சம் கடினம் தான்.
கலைஞரை எதிர்க்கவேண்டும் என்பதற்காக செம்மொழி மாநாட்டை எதிர்ப்பவர்கள் அறிவிலிகள்!
0

#3 User is offline   அருணாசலம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 5,170
  • Joined: 06-அக்டோபர் 07
  • Gender:Male

Posted 02 ஜூலை 2008 - 04:57 மாலை

மாறன் சகோதரர்கள் அவர்கள் தந்தை மாறன் எல்லோரும் விசுவாசமாதானெ இருந்தார்கள்... அவங்கள அழகிரி பேச்சை கேட்டு தொரத்திட்டு, இப்போ அவங்க மேல் எல்லா பழியும் போடுவது சிரிப்பா இருக்கு...
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#4 User is offline   வந்தி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 9,498
  • Joined: 11-மே 06
  • Gender:Male
  • Location:பூமியில் ஓர் இடம்
  • Interests:cricket,Internet, Books and music

Posted 02 ஜூலை 2008 - 05:07 மாலை

View Postகோர்பசேவ், on Jul 2 2008, 05:57 PM, said:

மாறன் சகோதரர்கள் அவர்கள் தந்தை மாறன் எல்லோரும் விசுவாசமாதானெ இருந்தார்கள்... அவங்கள அழகிரி பேச்சை கேட்டு தொரத்திட்டு, இப்போ அவங்க மேல் எல்லா பழியும் போடுவது சிரிப்பா இருக்கு...

சரி உங்கள் கருத்துப்படி அழகிரிதான் காரணம் என்றாலும் தாத்தாவுக்கு எதிராக சன் டிவியும் தினகரனும் செயற்படுவது சரியா? சகல டிவிகளிலும்(ஜெயா உட்பட) புகைத்தல் மது சம்பந்தமான காட்சிகளில் எச்சரிக்கை செய்யும்போது சன்னில் அதுபற்றி அலட்டிக்கொள்வதில்லை. முன்னர் இதனை சன் செய்தது இப்போ இல்லை. தயாநிதியுடன் கோபித்துக் கொண்ட சரத்குமார் இப்போ சன்னில் அடிக்கடி வருகின்றார். ஜெயாவின் அறிக்கைகளுக்கு முக்கியத்துவம், இராமாயணம், திருவிளையாடல், சக்திகொடு என சமய சம்பந்தப்பட்ட தொடர்கள். இதெல்லாம் அப்பட்டமாகத் தெரிகின்றது கலைஞருக்கு எதிரானவையா இல்லையா?

அழகிரி என்பது எல்லாம் சும்மா, இதுதான் மாறன் சகோதரர்களின் சுயரூபம்.
இணையதளபதி - வந்தி
0

#5 User is offline   அருணாசலம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 5,170
  • Joined: 06-அக்டோபர் 07
  • Gender:Male

Posted 02 ஜூலை 2008 - 06:01 மாலை

வந்தி இப்போ அவங்க செய்வது வேண்டுமானால் கருனாவிற்கு எதிராக இருக்கலாம்... ஆனால் அவர்களை இதுபோல் செய்ய தூண்டுவது எது?

அவர்களும் எவ்வளவோ தழைந்து வந்து பார்த்தார்கள்.. இவர்கள் கொஞ்சம் கூட இறங்கிவராமல் அவர்களை நாய் நடத்துவதுபோல் நடத்தியது யார்?

கருனாவின் பிறந்த நாளுக்கு கூட அவர்களை விடவில்லையே...

அது மட்டுமல்லாது சன் டிவியை அழிக்கவேண்டும் என கங்கனம் கட்டி கொண்டு செயல் பட்டால் அவர்கள் பார்த்து கொண்டிருக்க வேண்டுமா?
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#6 User is offline   வேக்கப் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 9,254
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:Dubai
  • Interests:Change for Any, should come from within.

Posted 02 ஜூலை 2008 - 06:46 மாலை

நான் வைக்கோவுக்கு கலைஞர் கட்டம் கட்டியபோதும் தப்பு என்றேன்

தயாநிதி மாறனுக்கு தகாத வழியில் நேராக சீனியர் மந்திரி பதவி தரபட்டபோதும் தவறு என்றேன்.

இப்ப சொல்லுகிறேன்.

அண்ணன் அழகிரியை அழிக்க, தம்பி ஸ்டாலின் (தகப்பனார் வழியில்)

மாறென் சகோதரர்கள் கூட கூட்டு போட்டு கட்டம் கட்டுவார்.

விபீஸ்னன் இப்ப ஸ்டாலின் தான்.
தமிழ் பிராமனர் திராவிடர்களுக்கு நல்ல வழிகாட்டி
0

#7 User is offline   வந்தி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 9,498
  • Joined: 11-மே 06
  • Gender:Male
  • Location:பூமியில் ஓர் இடம்
  • Interests:cricket,Internet, Books and music

Posted 02 ஜூலை 2008 - 08:38 மாலை

View Postகோர்பசேவ், on Jul 2 2008, 07:01 PM, said:

வந்தி இப்போ அவங்க செய்வது வேண்டுமானால் கருனாவிற்கு எதிராக இருக்கலாம்... ஆனால் அவர்களை இதுபோல் செய்ய தூண்டுவது எது?

அது மட்டுமல்லாது சன் டிவியை அழிக்கவேண்டும் என கங்கனம் கட்டி கொண்டு செயல் பட்டால் அவர்கள் பார்த்து கொண்டிருக்க வேண்டுமா?

மாறன் சகோதரர்கள் செய்த தவறு தினகரன் சர்வேதான். சன் டிவி முன்னர் ஏனைய டிவிகளை அழித்ததை மறந்துவிட்டீர்களா? ராஜ் டிவி விஜய் டிவி செய்திகளை நிறுத்தினார்கள். இன்று ராஜ் செய்திக்கு என தனி சானல் ஆரம்பித்துவிட்டது. சன் டிவியும் தாதா வேலை செய்தது இப்போ அதற்க்கு அனுபவிக்கின்றது. இதெல்லாம் நியூட்டனின் மூன்றாம் விதி ஒரு "தாக்கத்திற்க்கு சமனானதும் எதிரானதுமான மறுதாக்கம்" .

திமுக இந்தப் பிரச்சனைகளில் இருந்து மீள வேண்டும் என்றால் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவியும் அழகிரிக்கு திமுக தலைவர் பதவியையும் கொடுக்கவேண்டும். இல்லையேல் பல பிரச்சனைகள் உருவாகலாம். இதற்க்கு கடலூர் மகளிர் மாநாடு சிறந்த உதாரணம். ஸ்டாலின் பகிஸ்கரிப்பு.
இணையதளபதி - வந்தி
0

#8 User is offline   வேக்கப் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 9,254
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:Dubai
  • Interests:Change for Any, should come from within.

Posted 02 ஜூலை 2008 - 09:24 மாலை

நேற்று பலரை தாண்டி தாயானிதி மாறனுக்கு, நேராக சீனியர் மந்திரி பதவி தந்தது போல

இப்பவாவது, சாதி பார்க்காமல், அரசியல் செய்யும் வைக்கோ அவர்களை, அழைக்கவேன்டும். கழகத்தின் தலைமைப்பதவி தரவேண்டும்.

அழகிரிக்கு முதல் மந்திரி பதவி, கனிமொழி போன்றவர்களுக்கு மந்திரி பதவி தரவேண்டும்.

ஸ்டாலின் ஓரம் கட்டப்பட வேண்டும்.

முதல் பாவம், ஸ்டாலினுகாக, வைக்கோவை பலிகடா ஆக்கியது.

ரென்டாம் பாவம், ஸ்டாலினுக்காக, அழகிரியை வனவாசம் அனுப்பியது (மதுரையை நோக்கி)

மூன்றாம் பாவம், வீடுக்குள்ளேயெ விழச்செடி வளர்த்தது. சகோதரி புருஷன் என்ற ரத்த பாசத்தால், மாரன் குடும்பம் அதிகார துர்பிரயோகம் செய்து கோடிகளை சுருட்டியபொழுது, தனக்கும், அதில் பெரும் பங்கு வரும் என்று மனப்பால் குடித்து கொன்டிருந்தது.

மாறன் சகோதரர்கள், தாத்தாவிடம் படித்த பாடத்தை, தாத்தாவிடமே காட்டியபோது, வைக்கோ நிச்சயம் வருத்தபட்டிருப்பார் அவர் மனம் அப்படி

துரோனர், ஏகலைவன் விரலை வெட்டி வாங்கி, அர்ஜுனனை வளர்த்தார்.

பதிலுக்கு அர்ஜுனனும், தன்னிடம் இருந்த, தாய் மாமன் கற்று தந்த, ராஜ தந்திரம் சிரசில் கொன்டு, துரோனரை கொன்று சாய்த்தான்.

நாளை, நாமும் கான்போமா புதிய பாரத யுத்தம்

தமிழ் பிராமனர் திராவிடர்களுக்கு நல்ல வழிகாட்டி
0

#9 User is offline   புதுமுகம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 2,294
  • Joined: 22-ஏப்ரல் 06
  • Location:United States of America
  • Interests:Listening to Songs<br />Browsing the net

Posted 02 ஜூலை 2008 - 10:03 மாலை

இப்பவாவது, சாதி பார்க்காமல், அரசியல் செய்யும் வைக்கோ அவர்களை, அழைக்கவேன்டும். கழகத்தின் தலைமைப்பதவி தரவேண்டும்.

:P :மகிழ்ச்சி: :லொள்: Kaipullai can do only one thing at this stage. He can act in Appa roles in TV serials.
தாய், தந்தையர் தான் முதற் கடவுள்!
0

#10 User is offline   வேக்கப் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 9,254
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:Dubai
  • Interests:Change for Any, should come from within.

Posted 02 ஜூலை 2008 - 10:28 மாலை

View Postபுதுமுகம், on Jul 2 2008, 08:33 PM, said:

இப்பவாவது, சாதி பார்க்காமல், அரசியல் செய்யும் வைக்கோ அவர்களை, அழைக்கவேன்டும். கழகத்தின் தலைமைப்பதவி தரவேண்டும்.

:P :மகிழ்ச்சி: :லொள்: Kaipullai can do only one thing at this stage. He can act in Appa roles in TV serials.



களத்தின் கருப்புதுண்டு கபாலிகிட்டயே வா -- நேரந்தான்

அவுங்கல்லாம் அடிசிப்பங்க பின்னால சேர்ந்துக்குவாங்க.

பொம்மி வந்தால், பட்டி மன்றம் போடலாம்.

நாளைய முதல்வர், அஞ்ஜா நெஞ்ஜனா இல்லை

எதாவது ஒரு கலை உலக வாரிசுத்தானா
தமிழ் பிராமனர் திராவிடர்களுக்கு நல்ல வழிகாட்டி
0

#11 User is offline   புதுமுகம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 2,294
  • Joined: 22-ஏப்ரல் 06
  • Location:United States of America
  • Interests:Listening to Songs<br />Browsing the net

Posted 02 ஜூலை 2008 - 11:38 மாலை

m.natarajan will be the next cm
தாய், தந்தையர் தான் முதற் கடவுள்!
0

#12 User is offline   நாராயணி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 1,584
  • Joined: 31-ஜனவரி 06

Post icon  Posted 03 ஜூலை 2008 - 12:50 காலை

அன்று எம். ஜி.ஆர் கறிவேப்பிலை. பின்னாளில், வை.கோ. கறிவேப்பிலை.இன்று மாறன் சகோதரர்கள் கறிவேப்பிலை.

இனி திருதாஷ்ட்டிரரால் ஒன்றும் செய்ய முடியாது. கௌரவர்களின் கைப்பாவை தான்.

ஓட்டப்பம் வீட்டைச் சுடும். தன் வினை தன்னைச் சுடும்.இது கலிகாலம்.கணக்கு இப் பிறவியிலேயே நேர் செய்யப்படும்.

(தொடரும்)
யதார்த்தவாதி வெகு ஜன விரோதி!
0

#13 User is offline   லீனாரோய் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • Group: Active Members
  • Posts: 14,402
  • Joined: 18-செப்டம்பர் 06
  • Gender:Male
  • Location:யேர்மனி
  • Interests:சமையல் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் சாப்பிடுவது உட்பட

Posted 03 ஜூலை 2008 - 09:58 காலை

எனக்கு என்னவோ திமுக வின் எதிர்காலத்திற்கு இவை நல்லது அல்ல என்றே தோன்றுகிறது.
கலைஞர் இருக்கும் வரை இவை எல்லாம் சரி. ஆனால் அப்புறம்..........?
இதுவரை ஸ்டாலின் தனது நிலையை சரிவர மாறன் சகோதரர்களின் விசயத்தில் எப்படி என்பதை தெளிவாக்கவில்லை.
சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......!
0

#14 User is offline   நாராயணி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 1,584
  • Joined: 31-ஜனவரி 06

Post icon  Posted 03 ஜூலை 2008 - 10:47 மாலை

இந்தத் திரியை அக்கு வேறு ஆணி வேறாக பகுத்தறிவுடன் ஆராய்வது என்று நாராயணீ தீர்மானித்திருக்கிறாள்...

இனி தொடர்கிறேன்...

வந்தியின் பதிவிலிருந்தே இதைப் பிரதி எடுத்து விவாதிக்கிறேன்..

முதலில் இதைப் பார்ப்போம்...

.....கழகத்தையும்,அதன் சொத்துக்களையும் மூலதனமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட, சன் டி.வி.யும், அதன்மூலம் வாங்கப்பட்ட தினகரனும், இன்றைக்கு இந்த சகோதரர்களை இந்தியக் கோடீஸ்வரர்களில் ஒருவராக ஆக்கியிருக்கிறது. இதற்குக் காரணம் கலைஞர் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அத்துடன் தொடர்ந்து தவறு செய்து விட்டு பழியை அவர்கள் அழகிரி மீது போடுவது மகா பாவம் என்றே சொல்வோம். ஆரம்பத்தில் `சுமங்கலி'யை ஆரம்பிக்க மாறன் சகோதரர்கள் எந்த வழியைக் கையாண்டார்களோ அதே வழியைத்தான் அழகிரியின் ராயல் கேபிள் விஷனும் கையாள்கிறது. ....

ஆக,ஒரு குவளை தேநீரும், பொறையும் தின்று சுவரொட்டி ஒட்டி "தலைவா !"என்று கூப்பாடு போட்ட உடன்பிறப்புகள் நெற்றியில் பட்டை நாமம் போட்டு விட்டு, முரசொலி மாறனை மத்தியில் யார் வந்தாலும் நானும் மந்திரி என்று துண்டு போட்டு தன் குடும்ப வளத்தைப் பெருக்கிக் கொள்ள இந்த வள்ளுவனின் கழகம் அதிகாரத் துஷ்ப்பிரயோகம் செய்திருக்கிறது.கிட்டத்தட்ட இந்த மாறன் சகோதரர்கள் பூமாலை ஆரம்பித்த காலம் தொட்டு.பின்னர் அது அடையாறு ஆலமரமாக சன் தொலைக்காட்சியாக விஸ்வரூபம் எடுத்து, இன்றைக்கு, கலாநிதி தனி விமானம் வைத்துக் கொண்டு லண்டன், அமெரிக்கா என்று செல்லும் அளவிற்கு உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் கொலு வீற்றிருக்க இந்தக் கழகம், அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர், வை.கோ,என்ற ஜாம்பவான்கள் வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகம் ஒத்துப் போயிருக்கிறது .

இப்போது அதே வழியில், அதிகாரத் துஷ்ப்பிரயோகம் செய்து, உலகத் தமிழினத் தலைவனின் செல்ல மகனின் ராயல் கேபிள் விஷன்(இது தமிழ் பெயரோ என்னவோ?)பீடு நடை போடுகிறது அல்லது போடப் போகிறது.

அதாவது, அதே அதிகாரத் துஷ்ப்பிரயோகம் என்று ஜெ..விஷயத்தில் -டான்ஸி நிலவிவகாரத்தில் -துள்ளிக் குதித்த இந்தச் சிங்கக் குட்டிகள்,ஆசானின் மகன்கள் தட்டேந்த,ஒரு சாம்ராஜ்யமே ஆர்ப்பாட்டமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்...

(தொடரும்)
யதார்த்தவாதி வெகு ஜன விரோதி!
0

#15 User is offline   வேக்கப் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 9,254
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:Dubai
  • Interests:Change for Any, should come from within.

Posted 04 ஜூலை 2008 - 12:03 காலை

அரசியல்வாதிகள் அப்படியும் இப்படியும் இருப்பார்கள்

ஆண்டி பண்டாரங்களும் அப்படியும் இப்படியும் கூட இல்லாமல் சுத்த பொம்பிளை பொருக்கியாக இருக்கலாமா.

அவனுவ காலத்தொட்டு கும்பிடலாமா, குரு என்று சொல்லி சோத்துக்கு வழி செய்த உண்மையான குருமார்களையெல்லம் அவமானபடுத்தலாமா.

மாறனை பற்றிய திரியில் எங்க அம்மாவையெல்லம் இழுத்தாசில்ல (தான்சி கீன்சி ..)

நாங்கள்ளும் இழுப்போமுல்ல
தமிழ் பிராமனர் திராவிடர்களுக்கு நல்ல வழிகாட்டி
0

#16 User is offline   புதுமுகம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 2,294
  • Joined: 22-ஏப்ரல் 06
  • Location:United States of America
  • Interests:Listening to Songs<br />Browsing the net

Posted 04 ஜூலை 2008 - 12:38 காலை

அம்மாவையெல்லம் இழுத்தாசில்ல ..


நாராயணி அக்கா பார்முலா படி - ராஜசேகர், சண்முகசுந்தரம், மணிசங்கர், சுவாமி, சிதம்பரம், கோபால்(நக்கீரன்),சுந்தரே ஐயர், செரீனா, நீதிபதியின் மகன், சாலைப்பணியாளர் உயிர்கள் - இவர்களிடம் வாங்கிய சாபத்திற்கு இந்த ஜென்மத்தில் என்ன நடக்கும்?
தாய், தந்தையர் தான் முதற் கடவுள்!
0

#17 User is offline   வேக்கப் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 9,254
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:Dubai
  • Interests:Change for Any, should come from within.

Posted 04 ஜூலை 2008 - 12:49 காலை

பொம்மி நீங்க சொன்னாத்தான் சரியா இருக்குமுன்னு நான் நினைச்சேன்

அப்படியே சொல்லிட்டிங்க
தமிழ் பிராமனர் திராவிடர்களுக்கு நல்ல வழிகாட்டி
0

#18 User is offline   புதுமுகம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 2,294
  • Joined: 22-ஏப்ரல் 06
  • Location:United States of America
  • Interests:Listening to Songs<br />Browsing the net

Posted 04 ஜூலை 2008 - 12:52 காலை

thanks. you never disappoint me wakel :rolleyes:
தாய், தந்தையர் தான் முதற் கடவுள்!
0

#19 User is offline   நாராயணி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 1,584
  • Joined: 31-ஜனவரி 06

Post icon  Posted 05 ஜூலை 2008 - 12:29 காலை

''கருணாநிதி நானே ஒரு பத்திரிகையாளர் என்பார். ஆனால், அவரை விமர்சித்து எழுதினால் கோபம் கொண்டுவிடுவார். 'இந்து' பத்திரிகையை 'மவுன்ட்ரோடு மஹாவிஷ்ணு' என்று கிண்டல் செய்வார். அதே 'இந்து'வில் தி.மு.கவுக்கு சாதகமாகச் செய்தி வந்தால் 'இந்து பத்திரிகையே பாராட்டிவிட்டது' என்று முரசொலியில் மறுபதிப்பு செய்து சந்தோஷப்படுவார். குறிப்பிட்ட ஒரு தமிழ் நாளிதழை 'யாரும் படிக்காதீர், வாங்காதீர்' என்று அறிக்கையாக வாய் மலர்...ந்தார். அதை 'வாங்க மாட்டோம்' என்று உறுதிமொழிக் கடிதம் அனுப்பியவர்களின் பட்டியலை எல்லாம் முரசொலியில் தினம் வெளியிட்டார்கள். இப்போது கருணாநிதி தவறாமல் அந்தப் பத்திரிகையையும் படித்துவிட்டு, அதிகாரிகளையும் கட்சிக்காரர்களையும் கேள்விகளால் துளைக்கிறாராம். 'கலைஞர்' தொலைக்காட்சியின் முக்கிய விளம்பரதாரராகவும் இருக்கிறது அந்த நாளிதழ்.''

அடுத்து," கொள்கையில் உறுதி ", சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!! என்று மார்தட்டிக் கொள்பவர்கள்.. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று கொக்கரிப்பவர்கள்... மூச்சுக்கொ மூச்சு பத்திரிக்கைச் சுதந்திரம் என்று சொல்பவர்கள், எப்படி தங்களுக்கு வேண்டுமென்றால், ஒரு மாதிரியாகவும் இல்லையென்றால் இன்னொரு மாதிரியாகவும் பேசுவார்கள் என்பதற்கு இதுவே சான்று.

தி ஹிந்து,குமுதம், துக்ளக்,தராசு போன்றவை படாத பாடா இந்தத் தினகரன் படப் போகிறது?

ஒரு சமயம். லக்கிலுக் என்று நினைக்கிறேன்,தி ஹிந்துவை "மவுண்ட் ரோடு மகா விஷ்ணு"என்று கருணாநிதி சொன்னதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டார்..இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.காமராஜை காமன் என்றும், வெங்கட்ராமனை வெங்கன் என்றும், சுப்பிரமணியத்தைச் சுப்புணி என்றும் திருவாய் மலர்ந்தருளியவர்கள் கூட்டம் தானே இவர்கள்..எம்.ஜி.ஆர் குண்டடி பட்டவுடன் அவர் புகைப்படத்தைக் காட்டி வாக்குச் சேகரித்தவர்கள், அவர் எதிர்த்தவுடன்,கோமாளி, நடிகன், கூத்தாடி என்றவர் பக்கத்தில் இன்று ரஜினி என்ன?கமல் என்ன?விஜய் என்ன?அவர் பேரன் உதயநிதியின் திரையுலகத் தொடர்பு என்ன?

பகுத்தறிவு பகலவன் என்று முழக்கிக் கொண்டே, தங்களுக்கு ஆகாத பத்திரிக்கைகள் என்றால், "நீ படிக்காதே,வாங்காதே, விளம்பரம் தராதே"என்று ஒரு தனி மனிதச் சுதந்திரத்தைப் பறிப்பதென்ன?இது தான் இவர்களது ஜனநாயகம் போலும்!இது கமர்கட்டுச் சாப்பிடும் சின்னப் பசங்களின் எண்ணப் பிரதிபலிப்பாக அல்லவா இருக்கிறது.

கரண் தப்பாரிடம் அசட்டுத் தனமாக நடந்து கொண்ட, ஜெ..விற்கும்,இவருக்கும் என்ன அப்படி வித்தியாசம்?ஒரு வேளை அவர் கருணாநிதியைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தால்,இன்னும் அதிகப்படியான மரியாதை தருவாரோ?இருக்கலாம்!

பிராமனனைக் கண்டால் ஆகாது.ஆனால் நேற்று வரை விரோதியாய் இருந்த ராமசுப்பையரின் தினமலர் இப்போது செல்லப் பிள்ளை ஆனது எப்படி?பிராமனர்கள் தான் அயோக்கியர்கள் ஆயிற்றே!பிராமனர்கள் பச்சைப் புளுகர்கள் என்ற சிந்தனை கொண்டவர்கள், இன்று அந்த அய்யரின் பத்திரிக்கையில் வரும் விஷயங்களை நம்பி கேள்விக்கணைகளால் அதிகாரிகளைத் துளைத்தெடுக்கிறாராமே?

கண்டதே காட்சி!கொண்டதே கோலம்!இது தான் இவர்கள் கொள்கைப் பிடிப்பு!

(தொடரும்)
யதார்த்தவாதி வெகு ஜன விரோதி!
0

#20 User is offline   நாராயணி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 1,584
  • Joined: 31-ஜனவரி 06

Post icon  Posted 05 ஜூலை 2008 - 06:27 மாலை

2வது பெரிய நகரமாக இருந்தும் மதுரைக்குள் நுழைய அரசு கேபிள் டிவிக்கு தடை


ஜெயலலிதா குற்றச்சாட்டு


சென்னை, ஜூலை 5: மதுரை நகரில் மு.க.அழகிரியின் கேபிள் சாம்ராஜ்யத்துக்குள் அடியெடுத்து வைக்காமல் தமிழக அரசு கேபிள் டிவி கழகம் தடுக்கப்படுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பணிகளை தஞ்சாவூர், கோவை, வேலூர், திருநெல்வேலி மாவட்டங்களில் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி ஆலோசனை கூறியதாக செய்தி வந்திருக்கிறது. தமிழகத்தில் அரசு செயல்படும் முறை எவ்வளவு பரிதாபமாக உள்ளது என்பதற்கு இந்த ஒரு செய்தியே ஆயிரம் விளக்கங்களை சொல்லும்.

தென் தமிழகத்தின் மிகப்பெரிய நகரம், தமிழ்நாட்டில் எல்லாவகையிலும் இரண்டாவது பெரிய நகரமான மதுரை இந்த பட்டியலில் இல்லை. திருநெல்வேலியில் அமைக்கப்படவுள்ள அரசு கேபிள் டிவி நிறுவனமே மதுரை மண்டல கேபிள் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று கருணாநிதி விளக்கம் சொல்கிறார். மதுரை நகரில் மு.க.அழகிரியின் கேபிள் சாம்ராஜ்யத்துக்குள் அடியெடுத்து வைக்காமல் தமிழக அரசு கேபிள் டிவி கழகம் தடுக்கப்படுகிறது என்பதுதான் இதன் பின்னணி.

ஒரு குடும்பத்தை சேர்ந்த பல நபர்கள் அரசை ஆட்டிப் படைக்கிறார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. மதுரையில் அழகிரியின் செல்வாக்கும், அதிகார முறைகளும் கேபிள் டிவியோடு நிற்கவில்லை. மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல்துறை தலைவரும் தினந்தோறும் காலையில் அவரை சந்தித்து ஆணைகளை பெறுகின்றனராம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தும் சுழல்விளக்கு பொருத்தப்பட்ட வாகனங்களில் அழகிரி மதுரை மாநகரில் உற்சவ மூர்த்தியாக உலா வருவதை எண்ணற்ற ஊடகங்கள் படம் பிடித்து காட்டி விட்டன.
கட்டப் பஞ்சாயத்து நடத்தி அப்பாவி மக்களின் பணத்தை அபகரிக்கும் விபரீதநீதி விசாரணைகளில் ஈடுபடு கின்றனர்.

மதுரை பகுதியில் எங்கு யார் நிலம் வாங்கினாலும், விற்றாலும் அது தெரியப்படுத்தப்படுகிறது. அதற்கென்று ஓர் எழுதப்படாத ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விற்க நினைப்பவர்களும், வாங்க முயல்பவர்களும் மிரட்டப்படு கிறார்கள். அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவரது பினாமிகள் பெயரில் நிலம் பதிவு செய்யப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனை வெட்டிக் கொன்றவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அதே நபர்கள், தினகரன் பத்திரிகை அலுவலகத்தை தாக்கிய அதே நபர்கள், மதுரை நகர தெருக்களில் பயங்கரமாக உலா வருகின்றனர். மக்களிடம் மாமூல் வசூல் செய்வதுதான் இந்த உலாவின் நோக்கம். அங்கே ஒரு காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. செய்வது அறியாது மக்கள் தவிக்கிறார்கள்.


இப்போது சிலர் நிழல் முதல்வர்களாக வேலை பார்க்கின்றனர். இவர்கள் ஒவ் வொருவருக்கும் கப்பம் கட்ட, ஆட்சி நடத்த ஒரு துறை, ஒரு பகுதி என ஒதுக்கப்பட்டு வசூல் வேட்டை தீவிரமாகியுள்ளது. சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கக்கூடிய அலுவலக இடமாற்றம், காவலர் நியமனம், கல்லூரி ஆசிரியர்கள் நியமனம், மதுபான பார்கள் ஒதுக்கீடு, சாலை ஒப்பந்தங்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் ஆகியவை ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் இவர்களைத்தான் நாட வேண்டும். இவர்களுக்கு கப்பம் கட்டினால் வேலை முடிந்து விடும். ஒவ்வொருவரும் பல விதமான தொழில்களை செய்கின்றனர். எல்லாமே மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட, மக்கள் வரிப்பணத்தை வாரி சுருட்டிக் கொள்கின்ற தொழில்கள்தான்..............

...நன்றி தினகரன் 05/07/2008
யதார்த்தவாதி வெகு ஜன விரோதி!
0

Share this topic:


  • (2 Pages)
  • +
  • 1
  • 2
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users