![]() |
ஷில்பா ஷெட்டி - தேசத்தின் அவமானம்
#1
Posted 01 பிப்ரவரி 2007 - 08:54 காலை
" வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டம்தான். சந்தேகமிருந்தால் தோற்றவனைக் கேட்டுப்பாருங்கள்.. " என்றார் வில்சன் பிரபு.
ஜேட் கூடியின் முகவரி தெரிந்தால் ஷில்பா ஷெட்டியின் அதிர்ஷ்டம்பற்றி கேட்டுவிடலாம்.கேட்டால் அந்த அம்மணி என்ன சொல்லும்..? ''அவ என்னைவிட பெரிய நாடகக்காரி.." என்றா..? சொன்னால் தப்பில்லை.அதுதானே உண்மை.
என்னவோ இந்த நாட்டின் ஒட்டுமொத்த மானம் மரியாதையும் ஷில்பா ஷெட்டியின் உள்ளாடைக்குள்தான் இத்தனை நாட்களாய் ஒழித்து வைக்கப்பட்டிருதது மாதிரி மீடியாக்கள் இந்த செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் எரிச்சலாய் இருக்கிறது. 'ஷில்பா அபார வெற்றி...இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினார்..' என்று தலைப்பு வெளியிடுகிறது ஒரு பத்திரிகை.இன்னொன்று, 'வென்றார் ஷில்பா..தோற்றது இனவெறி..' என்று ஷில்பாவை கொண்டாடுகிறது.அவர் இந்தியாவுக்கு வந்து சேரும்போது, 'நிறவெறியை வென்றெடுத்த நாயகியே...வருக..வருக..' என்று கட் அவுட் வைத்தாலும் வியப்பு தேவையில்லை.
ஷில்பாவை அப்படியே நிறுத்திவிட்டு இதைக் கொஞ்சம் பாருங்கள்.விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே இருக்கிறது விஜய கரிசல்குளம்.இந்த ஊரைச் சேர்ந்த பொறியாளர் கணேசன் ராணுவத்தில் வேலைப் பார்க்கிறார்.அஸ்ஸாமில் பணியிலிருந்த இவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.இதுவரைக்கும் எந்த விதமான தகவலும் இல்லாமல் பரிதவித்துக் கிடக்கிறது அந்த குடும்பம்.கணேசனின் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் தந்தையை உயிருடன் பார்க்க முடியுமா..? என்று பரிதவித்துக் கிடக்கின்றன.ஆனால் இதுவரைக்கும் அரசுத்தரப்பில் கணேசனை மீட்பதற்கு எந்த விதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை.இதற்காக மத்திய அமைச்சர்களோ,அரசியல் கட்சி தலைவர்களோ குரல் கொடுக்கவில்லை.
இந்த தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கணேசன்,தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார்.ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது இந்த தேசத்திற்கு அவமானமில்லையா...?இதைப்பற்றி ஏன் யாரும் வாய்திறக்கவில்லை..?
மண்ணை பிசைந்து கல்லாக்கி, அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் ஏழ்மைத் தகப்பனின் மகள், புதுக்கோட்டை சாந்தி ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றபோது, 'அவர் பெண்ணே இல்லை..' என்று அவமானப்படுத்தப்பட்டார். தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் எல்லாம் மிகுந்த உற்சாகத்துடன், 'சாந்தி பெண்ணா...? ஆணா..?' என்று கவர்ஸ்டோரி வெளியிட்டு, போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டி மகிழ்ந்தன.அப்படி சாந்தியை அவமானப்படுத்திய அதே பத்திரிக்கைகள், இன்று ஷில்பாவின் மூலமாக தேசத்தின் மானம் காப்பாற்றப்பட்டிருப்பதாக கொண்டாடுகின்றன. (நல்லவேளை ஷில்பா ஜெயித்தார்.இல்லையென்றால் மானமில்லாத தேசத்தில் நாம் வாழ நேர்ந்திருக்கும்..). சாந்திக்கு எழுந்த ஆதரவு குரல்களை விட இப்போது ஷில்பாவுக்கு எழும் ஆதரவு பன்மடங்காக இருக்கிறது.இதன் அரசியல் என்ன..?
ஒரு நடிகையை மற்றொரு நடிகை, 'கறுப்புத்தோலுக்காரி' என்று திட்டியதற்காக, மானம் மரியாதையெல்லாம் போய்விட்டதாகவும், 'கறுப்புத்தோலுக்காரி' வெற்றிபெற்றவுடன் இப்போது இழந்த மானமும்,மரியாதையும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் சொல்பவர்களே.. ஷில்பாவுக்கு ஏற்பட்ட நிறவெறி அவமானம் கண்டு பொங்குபவர்களே....உள்ளூரில் நடக்கும் ஜாதிவெறி அக்கிரமம் குறித்து இதுவரைக்கும் நீங்கள் வாய் திறந்ததுண்டா..? சாதியென்னும் பெயரால் செயலாலும், வார்த்தையாலும் தினந்தோறும் பலரை அவமானப்படுத்துகிறீர்களே... அதற்காக வருந்தியதுண்டா...? குறைந்தப்பட்சம் அவற்றைப்பற்றி யோசிக்கவாவது செய்திருக்கிறீர்களா..? உங்கள் கால்களுக்கும் கீழ் லட்சக்கணக்கானவர்களை தினமும் அவமானப்படுத்தி, இந்த தேசத்தின் மானத்தை தினந்தோறும் கேவலப்படுத்தும் உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது..?
உண்மையை உணரவிடாமல்,அதன் அருகிலேயே நெருங்க விடாமல் நம்மை தூரத்திலேயே வைத்திருக்கும் வேலையை மீடியா வெகுநாட்களாக சிறப்பாக செய்து வருகிறது.அந்த மயக்கத்திலிருந்து மீளாதவரை, ஷில்பா ஷெட்டி தேசத்தின் அவமானம் என்பதை நாம் உணரப்போவதில்லை.
மூலம்: ஆழியூரான்.
#2
Posted 01 பிப்ரவரி 2007 - 11:40 காலை
இந்தியாவின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்தபின் தான் ஒருவரை பாராட்டுவதென்றால் யாரையுமே பாராட்ட முடியாது.
சாந்தி சாதித்தது உயர்ந்தது ஷில்பாவின் சாதனை குறைந்தது என்று எந்த அடிப்படையில் கூறுகிறார் இவர்?
ஷில்பாவின் உள்ளாடை பற்றியெல்லாம் பேசி மன அழுக்கைக் காட்டுகிறார் இப்பதிவை எழுதியவர்.
இப்படி பொதுவான நிகழ்ச்சிகளை தேவையின்றி சாடி புகழ்பெற நினைப்பவர்கள் தமிழ்மணத்தில் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர்.
எந்த அடிப்படையில் ஷில்பா தேசத்தின் அவமானம்? இதை இங்கு பதித்த லீனாவாவது விளக்குவாரா??
#3
Posted 01 பிப்ரவரி 2007 - 12:01 மாலை
source: http://emadal.blogspot.com
உலக அரங்கில் மெல்ல, மெல்ல இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரசி என்று இந்தியா அழைக்கப்பட்டாலும், உலக அரங்கில் இந்தியர்கள் வெறும் 'பல்லக்கு தூக்கிகளே'. ஆனால், இந்தியா சுதந்திரத்தைப் பெற்றவிதம் உலகை உலுக்கியது. தொடர்ந்து மெதுவான, ஆனால் ஸ்தரமான இந்திய வளர்ச்சி உலகின் பார்வையை இந்தியாவின் பக்கம் மெல்ல, மெல்ல திரும்ப வைத்தது. எத்தனையோ காரணிகள். ஆன்மீகம், பொருளாதாரம், கவர்ச்சி எல்லாம் இதில் அடங்குகின்றன. வேண்டுமானால் பின்னூட்டத்தில் இதை விரிவாகப் பேசலாம். ஷில்பா ஷெட்டி 'பெரியண்ணன்' (பிக் பிரதர்) போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது வெள்ளையர் இந்தியர் மீது வைத்திருக்கும் மதிப்பு காலத்தால் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இது சாதாரண மக்களின் தீர்ப்பு. ஒரு இந்தியரும், ஒரு கருப்பரும் கடைசித் தேர்வில் நிற்பது நல்ல குறி என்றே படுகிறது.
வழக்கம் போல் நான் மெதுவாக இச்சேதியைப் பகிர்ந்து கொள்ளலாம். இருந்தாலும் அவசியம் என்று படுகிறது. கொசுறு: ஷில்பாவை எனக்குப் பிடிக்கும். பிரபுதேவாவிற்கு போட்டியாக ஆடக்கூடிய ஒரே நடிகை. ஷில்பாவின் வெற்றிக்கு அவர் கடைப்பிடித்த தியானமுறை ஒரு காரணம் என்பது கூடுதல் சந்தோஷம் தரும் விஷயம். இந்தியாவின் பலமே இந்த ஆன்மீகம்தான். அது மீண்டும் உயர்ந்த பீடத்தில் பார்க்கப்படுவது மகிழ்வே!
-------
நான் ஆய்வு செய்து வரும் போது இந்த bunker experiment வாய்ப்பு வந்தது. அதாவது ஒரு மாதம் under ground வாழ்வு! இது சோர்வு தரக்கூடியது. நம் மனநிலையை பாதிக்கும் விஷயம். ரொம்ப composed-ஆக இருக்க வேண்டும். ஷில்பா தியானம் செய்து தனது மனோநிலையை சமனப்படுத்தியது இந்தியாவின் தியானப் பயிற்சிக்கு வெற்றி.
கடைசியில் ஜாக்சன் ஷில்பாவின் வெற்றிக்காக காரணம் என்று சுட்டுவது, அன்பு, காருண்யம், தயை. இதுதான் இந்தியா காலம் காலமாகச் சொல்லி வருவது. படோடாபமும், ஆடம்பரமும், கவர்ச்சியும், மேம்போக்குத்தனமும் வாழ்வென இருக்கும் ஒரு பாலிவுட் நடிகையாலும் இந்தியாவின் ஆகச்சிறந்த விழுமியங்களை உலக அளவில் காட்டமுடியுமெனில் அது இந்தியாவின் ஆன்மீக வெற்றி.
உலகின் பெரும் போர்களுக்கும், குழப்ப நிலைகளுக்கும் பாமரனின் புரியாத்தனத்திற்கும் ஆழமான தொடர்புண்டு. பாமரன் விழிப்புறும் போது உலகம் மாறுகிறது. நிறவெறியை உலகிற்கு பாரிய அளவில் அறிமுகப்படுத்திய வெள்ளையர் சமூகம் ஒரு கருப்பனையும், இந்தியனையும் மதிக்கிறது என்றால் உலகம் மாறிக் கொண்டு வருகிறது என்று பொருள். அந்த மாற்றத்திற்கு இந்தியா வித்திடுகிறது என்றால் அது இந்தியாவின் வெற்றி :-)
--------------------------------
இது போன்று நல்லவிதமாக சிந்திக்கத்தெரியாதவர்களும் இருக்கிறார்கள்!!!!
#4
Posted 01 பிப்ரவரி 2007 - 07:45 மாலை
`கிடந்தது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வை’ என்பது நம் நாட்டுப் பழமொழி.
நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. மக்களின் அடிப்படைத் தேவைகள் 60 ஆண்டு சுதந்திரத்தில் தீர்க்கப்படவில்லை. 14 வயதுக்குள்பட்டவர்கள் அனைவருக்கும் 10 ஆண்டுக்குள் அடிப்படைக் கல்வி என்பது ஏட்டளவில் தான்; எத்தனையோ பத்தாண்டுகள் பந்தாடப்பட்டும் விட்டன.
உலகில் 47 சதவிகிதக் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து இல்லை. இரண்டாம் உலகப் போர் நடந்தபோது மக்களுக்குக் கிடைத்த உணவுப் பொருள்களைவிட இப்பொழுது குறைவாகக் கிடைக்கிறது.
குழந்தைகள் பட்டினிச் சாவு உலகில் ஆண்டுதோறும் 50 லட்சம். இதுபோல ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகளும், இல்லாமைகளும், போதாமைகளும் மக்களை ஒரு பக்கத்தில் உலுக்கி எடுத்துக் கொண்டுள்ளன. நட்சத்திர விடுதிக் கலாச்சாரத்தின் மினுக்கல் - குலுக்கல் மற்றொருபுறம்.
அடுத்தவனுக்கு இல்லாத ஒன்று, தனக்கு அளவுக்குமேல் இருந்தால், அது திருட்டு என்று காந்தியார் சொன்னார் என்ற கதைகள் எல்லாம் நாட்டில் ஏராளம் உண்டே உண்டு.
ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைகளுக்காகக் கொடி பிடித்தால் அதற்கு ஆயிரத்தெட்டு விமர்சனங்கள்! சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்கிற ஓலம்; கலாச்சாரச் சீரழிவு என்கிற பெரிய மனுஷ வார்த்தைகள்.
கிரிக்கெட் என்கிற போதையை சாமான்ய மனிதனின் மூளையில் சாயமாக இறக்கி, கொள்ளைத் தொழில் நடத்திக் கொண்டு இருப்பதைப்பற்றி எல்லாம் எடுத்துச் சொல்ல இந்த நாட்டில் ஏடுகள் இல்லை.
இப்பொழுது ஒரு செய்தி நாட்டைக் கலக்குகிறது.
ஷில்பா ஷெட்டி என்கிற பாலிவுட் நடிகைக்குத்தான் இப்பொழுது நமது ஊடகங்களில் முதல் இடம்!
இந்தியாவைச் சேர்ந்த ஷில்பா ஷெட்டியை இங்கிலாந்து நடிகை இன வெறுப்பின் அடிப்படையில் திட்டித் தீர்த்து விட்டார்! பிரச்சினை பெரிதாகி விட்டது; உலகம் பூராவும் பேசப்பட்டன; தீ பறக்கும் விமர்சனங்கள் இறக்கையைக் கட்டிக் கொண்டு ஆடித் தீர்த்தன.
அந்த வெள்ளைக்கார நடிகை வெளியேற்றப்பட்டார். கடைசியாக ஷில்பா ஷெட்டிதான் சிறந்தவராகத் தேர்வு செய்யப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பரிசு மழையாக திக்கு முக்காடும் அளவுக்குக் கொட்டியது.
வெள்ளைக்காரப் பெண்மணி, நிறத்தின் அடிப்படையில் திட்டியது, வெறுத்தது எல்லாம் கேவலமானதுதான் - குற்றமானதுதான் - அதில் ஒன்றும் அய்யம் இல்லை!
நாட்டில் இதனைவிட வேற்றுமைகள், ஏற்றத் தாழ்வுகள், வெறுப்புகள், பிறப்பின் அடிப்படையில் ஒதுக்கல்கள் இன்னும் இருக்கத்தானே செய்கின்றன.
டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டில், இனவெறிக்குச் சமமானதாக ஜாதியையும் கொண்டு போன நேரத்தில், அது கூடாது என்று சொன்ன அதிகாரவர்க்கம் இந்தியாவில் இருந்ததே!
ஜாதி கொடுமையானது அல்லவா?
பிறப்பின் அடிப்படையில் பேதம் என்பது மனிதநேயக் கண்ணோட்டத்தில், சமத்துவப் பார்வையில் ஏற்கத் தக்கதுதானா?
ஷில்பா ஷெட்டிக்காக எழுதுகோலைத் தூக்கிய ஊடகங்கள், காமிராக்களைப் பிடித்த கரங்கள் இந்தக் கொடுமையான முகங்கள் பக்கம் ஒளியைத் திருப்பாதது ஏன்?
ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு படிமேலேறிட இட ஒதுக்கீடு என்றால் நீதிமன்றம் ஓடுபவர்கள் அந்த வெள்ளைக்கார நடிகையைவிட எந்த அளவுக்கு உயர்ந்தவர்கள்? அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை என்றால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர்கள் அந்த நிறவெறி வெள்ளையர்களைவிட உயர்ந்தவர்களா?
ஷில்பா ஷெட்டி பிரச்சினையில் நனைந்து கிடக்கும் மக்கள், அறிவு ஜீவிகள் ஏன் இந்த யதார்த்தத்துக்குள் தங்கள் மூக்கை நுழைக்கக் கூடாது?
#5
Posted 01 பிப்ரவரி 2007 - 07:54 மாலை
Quote
நியாயமான கேள்வி.
பழங்கதைகள் பேசி பயணில்லை என்று சொல்பவர்கள் இந்த நடைமுறை பிரச்சினையை பற்றி அலசி, கருத்து சொல்வார்களா?
#6
Posted 01 பிப்ரவரி 2007 - 08:14 மாலை
முதலில் இதைப் பதித்த எனக்கு எந்த ஒரு தவறான உள் நோக்கமும் கிடையாது.
ஷில்பா என்னும் நடிகை பிக் பிரதர் என்னும் நிகழ்ச்சியில் வென்று வந்ததால் உங்களுக்கும், நா.கண்ணனுக்கும் தேசத்தை உலக அரங்கில் முன்னுக்குக் கொண்டுவந்து விட்டார் என்னும் அபிப்பிராயம் பலமாக இருக்கும் பட்சத்தில். உங்கள் உணர்வை காயப் படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்.
சரி மன்னித்து விட்டீர்களா? நன்றி.
எனது தரப்பில் உள்ள ஒரிரு கருத்துகளையும் சொல்லிவிடுகிறேன்.
பிக் பிரதர் என்னும் நிகழ்ச்சி பற்றி, அதன் சகல விதமான பரிமானங்கள் பற்றி, அதை மேற்குலகம் பார்க்கும் பார்வை பற்றி,
மேற்குலகில் பல காலங்கள் (23 வருடங்கள்) வாழ்ந்து வருபவன் என்ற வகையில் ஒரளவு தெரிந்து வைத்திருக்கிறேன்.
அது நல்லதா கூடாதா என்னும் விவாதத்திற்கு இங்கு நான் வரவில்லை. காரணம் எனக்குக் கேவலமாகத் தெரிவது சிலருக்குப் புனிதமானதாகப் படலாம்.
ஆனால் ஒரே வார்த்தையில் மட்டும் கூறுகிறேன். ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் பிக் பிரதர் என்னும் நிகழ்ச்சியில் நடை பெற்ற பல விடயங்களை அவதானித்தவன் என்னும் அருகதையில் கூறுகிறேன்.
எங்கள் நாட்டில் வாழும் , எங்கள் நாட்டு (எங்கள் நாடு என்று நான் சொல்வது இந்தியா, ஈழம் இரண்டையும் சேர்த்துத்தான்) கலாச்சாரத்தை காதலிக்கும் எந்த ஒரு மனிதனும் பிக் பிரதருக்கு
தனது மகள் போய்ப் பங்குபற்றி வந்தால் அவளை அங்கேயே வெட்டிக் கூறு போட்டு விடுவான்.
நான் இதைச் சொலவதால் பிற் போக்குத் தனமாகச் சிந்திப்பதாக யாரும் தயவு செய்து எடுத்து விடவேண்டாம்.
நான் இங்கு மிகவும் முற்போக்குச் சிந்தனைகளுடனேயே வாழ்ந்து வருகிறேன். அப்படிப் பட்ட எங்களையே அதிர வைக்கும் நிகழ்ச்சி அது.
நான் பிக் பிரதரின் வேறு ஒரு சுரங்க வாழ்க்கை சம்மந்தமான நிகழ்ச்சியில் கண்ட காட்சி, (இது அநாகரீகமெனினும் சொல்ல வேண்டியிருப்பதால் சொல்கிறேன் கண்காணிப்பாளர் தயவுசெய்து வெட்ட வேண்டாம்)
இரவில் படுக்கும் போது போர்வைக்குள் உருவம் அசையும் காட்சிகளையும் முனகல் சத்தங்களையும் கூசாமல் காட்டியது.
ஷில்பா பங்குபற்றிய நிகழ்ச்சி ஒழுங்காக நடை பெற்று முடிந்திருக்காலாம். ஆனால் பல நிகழ்ச்சிகள் இப்படி பாழாய்ப்போன கலாச்சாரச் சீரழிவுகளாகவே இருக்கும்.
இந்த நிகழ்ச்சியை யேர்மனியில் வாழும் மரியாதையான யேர்மன் மக்களே பார்ப்பதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் ஒரு இந்தியப் பெண் பங்குபற்றுவதே சரியா என்பது பற்றி முதலில் விவாதிக்கப் பட வேண்டும்.
அத்ற்கும் ஒரு காரணம் சொல்கிறேன்.
ஷில்பா நிகழ்ச்சி தொடங்கி பல நாட்கள் குளிப்பதற்குக் கூடப் பயப்பட்டார்..... ஏன்?
அந்த நிகழ்ச்சி பற்றி அவருக்கு தெரிந்த படியால்தானே குளிப்பதற்கே தயங்கினார்.
அதன்பின்னர் பாத் ரூமில் கமரா இல்லை என்றதும்தானே குளித்தார். இது தேவையா?
இருந்தும் அந்த நிகழ்ச்சியை சரியாகாக் கவணியுங்கள்.
அவர்கள் டாய்லெட்டுக்குள் செல்லும் போது கமரா எங்கிருந்து முதலில் எடுக்கிறது என்று.
இருந்தாலும் உங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதரவான ஒரு விடயத்தை தவாறாக நான் பதித்திருந்தால் மன்னிக்க.
கடைசியாக............
இதை ஒரிஜினலாகப் பதித்த ஆழியூரான் கூட, ஒரு நடிகையின் செயலை பெரிதாக்கும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள்
ஏன் மற்றவற்றுக்குக் கொடுப்பதில்லை என்பதையே தனது கருவாகக் கொண்டு தனது பதிவைப் பதித்தார் என்பதால்தான் நான் அதை மீளப் பதித்தேன்.
This post has been edited by லீனாரோய்: 02 பிப்ரவரி 2007 - 03:57 காலை
#7
Posted 01 பிப்ரவரி 2007 - 08:28 மாலை
#8
Posted 01 பிப்ரவரி 2007 - 10:03 மாலை
லீனா சொல்வது மாதிரி மிக மிக ஆபாசமாகவும், அருவெறுப்பாகவும் கூட நடிக்கக்கூடியவர்கள் இவர்கள், ஷில்பாவும் இப்படி தான், கோடிக்கணக்கான பணம் வாங்கிக்கொண்டு தான் இதில் நடிக்கவே சம்மதித்திருப்பார். இந்த இன் வெறி நாடகம் வெறும் விளம்பரத்துக்காக தான் என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழகத்தில் எத்தனை பெண்கள் கடினப்ப்ட்டு நாள் முழுவதும் உழைக்கிறார்கள்? இவர்களின் எத்தனை பேர் வேலை செய்யும் இடத்தில் பெண் என்பதால் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுகிறார்க
்? முக்கியமாக உடலுழப்பை நம்பி இருக்கும் பெண்கள்( blue collar job) எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள்? இதை பற்றி எல்லாம் முதலில் கவலை படவேண்டும். ஒரு மில்லியன்ர் நடிகை பணம் வாங்கிக்கொண்டு, நடித்த நாடகத்துக்கு இவ்வளவு கலாட்டாவா?
#9
Posted 01 பிப்ரவரி 2007 - 10:06 மாலை
ரம்யா, on Feb 1 2007, 10:03 PM, said:
அடப்பாவிகளா..நிஜமாகவா...? நான் நிஜமோ என்று சந்தேகப்பட்டேனே... :(
#10
Posted 01 பிப்ரவரி 2007 - 10:11 மாலை
பூக்குட்டி, on Feb 1 2007, 10:06 PM, said:
நம்பினீர்கள் இல்லையா? அது தான் அவர்களின் வெற்றி. இந்த ரகசியத்தை இவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். நடிப்பவர்களுக்கும் நிறைய பணம் கொடுத்து, இந்த சம்பவங்களை அனைத்தும் உண்மையே என்று விளம்பரப்படுத்துவார்கள். இந்த மெகா சைஸ் நாடகம், கோர்ட் கேஸ் என்று கூட தொடரும்.
இது நம்மை எல்லாம் மீறிய High level, high tech ப்ராடு லெனின்.
This post has been edited by ரம்யா: 01 பிப்ரவரி 2007 - 10:32 மாலை
#11
Posted 01 பிப்ரவரி 2007 - 10:30 மாலை
ஜிம் காரியின் (Jim Carrey ) த ட்ரூ மான் ஷா (The Truman Show ) படம் பார்க்கவில்லையா?
அது கொஞ்சம் மிகைப் படுத்தப் பட்டது என்றாலும் ரம்யா கூறும் இந்த நடிப்பு என்ற விடயத்தை வைத்தே எடுத்தார்கள்.
#12
Posted 01 பிப்ரவரி 2007 - 10:36 மாலை
லீனாரோய், on Feb 1 2007, 10:30 PM, said:
ஜிம் காரியின் (Jim Carrey ) த ட்ரூ மான் ஷா (The Truman Show ) படம் பார்க்கவில்லையா?
அது கொஞ்சம் மிகைப் படுத்தப் பட்டது என்றாலும் ரம்யா கூறும் இந்த நடிப்பு என்ற விடயத்தை வைத்தே எடுத்தார்கள்.
இல்ல அண்ணே... தமிழ் படமே சிலதுதான்.. எனக்கு படங்களில் ரொம்ப ஆர்வமில்லை... :blink:
#13
Posted 01 பிப்ரவரி 2007 - 10:39 மாலை
மிஸ் பண்ண வேண்டாம்.
அனேகம் பேர் மேற்குலகத்தின் நாடகங்கள் தெரியாமல் அநியாயமாகச் சண்டை போடுகிறோம்.
#14
Posted 01 பிப்ரவரி 2007 - 10:44 மாலை
லீனாரோய், on Feb 1 2007, 10:39 PM, said:
மிஸ் பண்ண வேண்டாம்.
அனேகம் பேர் மேற்குலகத்தின் நாடகங்கள் தெரியாமல் அநியாயமாகச் சண்டை போடுகிறோம்.
அப்படின்னா பார்க்கிறேன்..நீங்க சொன்ன பின்னாடி பாக்காமல் இருந்தால் மரியாதை அல்லவே...
குறிப்பு: நான் ஆங்கில படங்களை பார்ப்பதில்லை என்று சொன்னது தப்பு..பார்ப்பேன்...ஆனால்....
#15
Posted 01 பிப்ரவரி 2007 - 10:49 மாலை
பூக்குட்டி, on Feb 1 2007, 06:14 PM, said:
அதுக்கு வேறு லிஸ்ட் இருக்கிறது பிறகு தருகிறேன்.
ஆமா........ அதுக்கு எதுக்கு மொழி. ஆங்கிலமானாலென்ன. பிரெஞ்சானாலென்ன.
#16
Posted 01 பிப்ரவரி 2007 - 10:54 மாலை
லீனாரோய், on Feb 1 2007, 10:49 PM, said:
ஆமா........ அதுக்கு எதுக்கு மொழி. ஆங்கிலமானாலென்ன. பிரெஞ்சானாலென்ன.
PM ப்ளீஸ்..
#18
Posted 02 பிப்ரவரி 2007 - 07:55 காலை
என்றாவது வாய் திறந்திருக்குமா.
#19
Posted 02 பிப்ரவரி 2007 - 08:13 காலை
athapps, on Feb 2 2007, 03:25 AM, said:
என்றாவது வாய் திறந்திருக்குமா.
ரியோ, on Feb 1 2007, 07:31 AM, said:
உலகின் பார்வையை இந்தியாவின் பக்கம் மெல்ல, மெல்ல திரும்ப வைத்தது. எத்தனையோ காரணிகள். ............ கவர்ச்சி எல்லாம் இதில் அடங்குகின்றன. ஷில்பா ஷெட்டி 'பெரியண்ணன்' (பிக் பிரதர்) போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது வெள்ளையர் இந்தியர் மீது வைத்திருக்கும் மதிப்பு காலத்தால் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
இல்லையே அதப்ஸ்,
இந்தியாவின் மதிப்பை கவர்ச்சியால் கூட்டியிருக்கிறோமல்லவா?
#20
Posted 02 பிப்ரவரி 2007 - 10:27 காலை
லீனாரோய், on Feb 2 2007, 08:13 AM, said:
இந்தியாவின் மதிப்பை கவர்ச்சியால் கூட்டியிருக்கிறோமல்லவா?
லீனா இங்கு நீங்கள் என் பேரில் கோட் பண்ணியிருப்பது வேரொருவருடைய கருத்து.
அதை நான் பதித்ததன் காரணம் எதையும் காமாலைக்கண்ணோடு பார்த்து புலம்பக்கூடாது என்று உதாரணம் காட்டத்தான்.
எதையெடுத்தாலும், இங்கு பலர் வறுமையில் வாடுகின்றனர், ஷில்பாவுக்கு என்ன பாராட்டு என்று கேட்பது சரியாகத்தான் படுகிறதா உங்களுக்கு.
ஷில்பா கண்ணியக்குறைவாக நடந்தாரா அந்த நிகழ்ச்சியில்? (எனக்குத்க்தெரியாது)
நீங்களே சொல்லியுள்ளீர்கள் முந்தைய நிகழ்ச்சிகள் போலல்லாமல் இந்நிகழ்ச்சி நன்றாகவே நடந்தது என்று. அப்புறம் எப்படி ஷில்பா இந்தியாவின் அவமானமாக ஆனார்?
"காசுக்கும் கூத்தடிக்கும் இவர்கள்" என்று அத்தாப்ஸ் குறிப்பிட்டது எந்தள்விற்கு சரி? ஏதோ நாம் மட்டும் இலவசமாக எல்லாருக்கும் சேவை செய்வதே தொழிலாகக்கொண்டவர்கள் போல.

Help


















