தமிழ் சிறி

Active Members
 • Content count

  806
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

3 Followers

About தமிழ் சிறி

 • Rank
  Guide
 • Birthday 02/21/2008

Contact Methods

 • ICQ 0

Profile Information

 • Gender Male
 • Location பக்கத்து ஊர்.
 • Interests இனித்தான் யோசிக்க வேண்டும்.
 1. கார்ட்டூன்

 2. கார்ட்டூன்

 3. நான் அதிகம் சினிமா... பார்ப்பது இல்லை என்றாலும், எனக்குப் பிடித்த நடிகர்களில், சிவாஜி கணேசனும் ஒருவர். இவர் நடித்த... "தங்கப் பதக்கம்" படம் என்றும் மறக்க முடியாதது.
 4. கவலையிலும்... உங்களால், எப்படி சிரிக்க முடிகின்றது அஸ்ஸாஞ்.
 5. வீடு கட்டி அடித்தல்

  அருமையான... எழுத்து ந‌டை, க‌பாலி. குழாய்கிண‌று தோண்டும்.... போது... தண்ணீர் வ‌ருகின்ற‌தா... என்ற‌ க‌வ‌லையை விட‌, கூடி நின்ற‌ ச‌ன‌த்தின், க‌தையையும்... காது கொடுத்துக் கேட்ட‌து தான்... உங்க‌ளின் எழுத்திலுள்ள‌ சிற‌ப்பு.
 6. கார்ட்டூன்

  சிரிக்கவும்.... சிந்திக்கவும் கூடியதாய், மிக அருமையான... கேலிச் சித்திரங்களை இணைத்துள்ளீர்கள் வர்ஷா. தமிழ்நாட்டு கார்ட்டூன் வரைபவர்கள் மிக அழகாக கார்ட்டூன் வரைவதைப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது. எங்கிருந்து தான்... இந்த திறமையை பெற்றார்களோ... எல்லாம் நன்றாக உள்ளது, தொடர்ந்து இணையுங்கள்.
 7. வீடு கட்டி அடித்தல்

  உங்கள் நிலைமை.... புரிகின்றது, கபாலி. எல்லாவற்றையும்... நல்ல படியாக முடித்துக் கொண்டு, ஆறுதலாக வாருங்கள். உங்களுக்காக காத்திருக்கின்றோம்.
 8. முதல்வர் ஜெயலலிதாவின் சாணக்கியத்துக்கும், துணிந்து எடுக்கும் முடிவுக்கும் அடுத்த ஒரு சான்று, இவர்களின் விடுதலை பற்றிய அறிவிப்பு. நீதித் துறை இன்னும் உயிரோடு இருக்கின்றது என்பதற்கு தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களின் தீர்ப்பு ஆறுதலைத் தருகின்றது. இவர்களின் விடுதலைக்காக கறுப்பு உடையையும், சட்டப் புத்தகத்தையும் கையில் கொண்டு போராடிய வைகோவுக்கும், தமிழக மக்களிடம் இவர்களது விடுதலையின் தேவையை.. கொண்டு சென்ற நெடுமாறன் ஐயாவுக்கும், சீமானுக்கும், அதற்கு மேலாக... தனது உயிரையே கொடுத்து இவர்களை காப்பாற்றிய சகோதரி செங்கொடிக்கும், போராட்டங்களில் கலந்து கொண்ட மாணவச் செல்வங்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். காங்கிரஸ் இப்போது... ஆப்பிழுத்த குரங்கின் நிலைமையில் உள்ளது. அது விரும்பியிருந்தால்... எப்போதோ இவ‌ர்க‌ளை விடுத‌லை செய்து, த‌மிழ‌க‌த்தில்... த‌ன‌க்கென‌ ஒரு இட‌த்தை பிடித்திருக்க‌லாம்.
 9. தென்னவன் சார், சில வருடங்களுக்கு முன்பு... இந்து மக்கள் கட்சித் தலைவர் ராமகோபாலன், இம் மூவருக்கும் மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று... அறிக்கை விட்டது நல்ல ஞாபகத்தில் உள்ளது.
 10. நளினி விடுதலை : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் நளினிக்கு தூக்கு ரத்து ஆகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நேற்று, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு ரத்து ஆனது. மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தால் இவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு செய்து, வேலூர் சிறையில் உள்ள மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. வேலூர் சிறையில் உள்ள நளினியும்( முருகன் மனைவி ) விடுதலை செய்யப்படுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். நளியுடன் சிறையில் உள்ள ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார். இந்த 7 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். 23 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு 6 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி நக்கீரன்.
 11. பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை. முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கும், சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பின், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, 2000ம் ஆண்டில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், தூக்கு தண்டனை யை குறைக்க கோரி, ஜனாதிபதியிடம், கருணை மனு தாக்கல் செய்தனர்.ஆனால், இவர்களின் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. மூன்று பேரும், இது தொடர்பாக, ஜனாதிபதிக்கு, நினைவூட்டல் கடிதங்களை, தொடர்ந்து அனுப்பி வந்தனர். இந்நிலையில், 11 ஆண்டு தாமதத்துக்கு பின், 2011ல், இவர்களின் கருணை மனுக்களை, அப்போது ஜனாதிபதியாக இருந்த, காங்., கட்சியைச் சேர்ந்த, பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து, 2011, செப்டம்பர், 11ல், இவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே, கருணை மனுக்கள் தாமதமாக பரிசீலிக்கப்பட்டதால், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, குறைக்க கோரி, மூன்று பேரும், சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த ஐகோர்ட், தூக்கு தண்டனையை நிறைவேற்ற, இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, 'பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது. மத்திய அரசு, தன் வாதத்தில், 'இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க முடியாது; தண்டனையை குறைக்க கூடிய குற்றத்தை, அவர்கள் செய்யவில்லை. தண்டனை காலத்தில், சிறையில், அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தனர்; உயர் கல்வியும் கற்றனர். சிறையில், எந்தவித சித்ரவதை, துன்பத்தையும், அவர்களுக்கு அளிக்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் தரப்பு, இதை மறுத்தது. 'கருணை மனு பரிசீலனை தாமதமானதால், மனவேதனை உட்பட, பல்வேறு வேதனைகளை, அனுபவித்தோம்' என, அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள், நான்கு பேர் உட்பட, 15 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, கருணை மனுக்கள் தாமதமாக பரிசீலிக்கப்பட்டதற்காக, ஆயுள் தண்டனையாக குறைத்து, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. எனவே, ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களும், தூக்கிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்பட்டது. இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், கடந்த 4ல், தேதி குறிப்பிடப்படாமல், தீர்ப்பை, நீதிபதிகள் ஒத்திவைத்தனர். தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், எஸ்.கே.சிங் ஆகியோர் அடங்கிய 'பெஞ்ச்', நேற்று தீர்ப்பளித்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும், சிறையில் எவ்வித துன்பத்திற்கும், சித்ரவதைக்கும் ஆளாகவில்லை என்றும், மகிழ்ச்சியாக இருந்தனர் என்றும், மத்திய அரசு தரப்பில் கூறும் வாதத்தை, நாங் கள் ஏற்கவில்லை. 23 ஆண்டுகளாக, சிறையில் இருப்பவர்களின் மனம், எந்த அளவுக்கு வேதனைப்படும் என்பதும், அவர் களுக்கு ஏற்படும் துன்பமும், அனைவருக்கும் தெரியும். கருணை மனு பரிசீலனை தாமதமாவது குறித்து, மூன்று பேரும், பலமுறை ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியுள்ளனர். மூன்று பேரும், துன்பம் அனுபவித்து வந்தனர் என்பது, இதில் தெரிகிறது. எனவே, கருணை மனு தாமதமாக பரிசீலிக்கப்பட்ட காரணத்தை அடிப்படையாக வைத்து, இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ரத்து செய்வதோடு, ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்படுகிறது. இனியாவது, தூக்கு தண்டனை கைதிகளின், கருணை மனுக்களை கையாளும் விஷயத்தில், மத்திய அரசு, ஒழுங்குமுறையை பின்பற்ற வேண்டும். கருணை மனு பரிசீலனை குறித்து, ஜனாதிபதிக்கு, குறித்த காலத்தில் ஆலோசனை வழங்க வேண்டும். கருணை மனுக்கள், இனியாவது, மிக வேகமாக பரிசீலிக் கப்படும் என, நம்புகிறோம். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவர்களை விடுதலை செய்வது குறித்து, மாநில அரசு முடிவு செய்யலாம்’’என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். 'ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு, 432 மற்றும் 433ன் படி, மாநில அரசு, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். நன்றி நக்கீரன்.
 12. காலையில்.... நல்ல, மகிழ்ச்சியான செய்தி.
 13. கவிழ்கின்ற கப்பலில், காப்டன் விஜயகாந்த் ஏறி விட்டார். கடைசியில்... உள்ளூராட்சி தேர்தலிலும், நாறப் போறார்.
 14. மத மாற்றம்

  ரி. ராஜேந்திரர் அண்ணாவும், குடும்பத்துடன்... கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டாராம் என்று, நண்பர் இப்போ... தொலை பேசியில் சொன்னார். நம்ப முடியவில்லை. முதலில்... தமிழக கோவில்களில், தமிழில் தேவாரம் படித்து... இறைவனை வணங்க வேண்டும் என்ற சட்டத்தை... மாண்பு மிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வர வேண்டும் என்பதே... எனது ஆவல்.
 15. மத மாற்றம்

  நீங்க‌ள் எங்கு... ப‌டித்தீர்க‌ள் என்று, என‌க்குத் தெரியாது. இது, பொய்யான‌.. வ‌த‌ந்தி என்று... உறுதியாக‌ச் சொல்வேன். த‌மிழ்நாட்டில் உள்ள‌வ‌ர்க‌ளை... "டாஸ் மாக்கிற்கும்", சினிமாவுக்கும் அடிமையாக்கும்... திராவிடம் பேசும் அர‌சிய‌ல் வாதிக‌ளின் சூழ்ச்சி. முன்பு நானும்... ஒரு தீவிர‌ சைவ‌ன். உங்க‌ள் பாசையில்... இந்து. அந்த‌ ம‌த‌த்தை பெரும்பான்மையாக‌ க‌டைப்பிடிக்கும் இந்தியா... என் இன‌த்தை, பௌத்த‌னோடு சேர்ந்து... "வேரோடும், வேர‌டி ம‌ண்ணோடும்..." சேர்ந்து, அழித்து விட்ட‌து. அங்கு... அழிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் பெரும்பாலான‌ சைவ‌ ச‌மைய‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் தான். அப்போ... எங்கு போன‌து, உங்க‌ள் ஒரு குடையின் கீழ் இணைவோம் என்ற‌ ஒற்றுமை. சும்மா... கோச‌ம் போடுவ‌தில் பிர‌யோச‌ன‌மில்லை தென்ன‌வ‌ன், செய‌லில் காட்டுவ‌தே... ம‌னித‌னுக்கு அழ‌கு.