சங்கரன்

Active Members
 • Content count

  2,689
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

4 Followers

About சங்கரன்

 • Rank
  Philosopher

Contact Methods

 • ICQ 0
 1. கடைசி சந்திப்பு

  அட, இப்ப தான் கவனிக்கிறேன், ஆரங்கன் ஸாரின் அக்கவுண்ட் டி ஆக்டிவேடட் என்று காட்டுகிறது. ஏன் சார், எதாவது கசப்பான அனுபவமா?
 2. கடைசி சந்திப்பு

  எனக்கு பா.ஜ.க ஆட்சி மிகவும் ஏமாற்றத்தைத்தருகிறது. தேவையில்லாமல் மொழித்திணிப்பு, ஆபாசப்பேச்சு, மாற்று மதத்தினர் உணவைத்தடை செய்தல், அவர்களுக்கு ஒட்டு உரிமை கூடாது என்ற உளறல் என்று வேண்டாத வேலைகளைத்தான் செய்கின்றனர். நில மசோதா தான் உச்சக்கட்ட மக்கள் விரோதப்போக்கு செயல். ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் ஆக்காமல் விட மாட்டார்கள் போல் இருக்கிறது....
 3. என்ன ஆட்டம் போட்டார்கள், பிஜேபினர்? ஆடம்பரம், ஆத்திரமூட்டும் பேச்சு, திமிர்த்தனம் என்று எதிர்ப்பாராத வகையில் ஆட்டம் போட்ட பி.ஜே.பிக்கு இது தேவை தான். வாஜ்பாய் காலத்தில் இருந்த ஆட்சி வேறு, இன்றைய நவீன ஆட்சி வேறு, ஏமாற்றம் அளிக்கிறது... திருந்துவார்கள் என்று நம்புவோம்..
 4. http://tamil.thehindu.com/cinema/cinema-video/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/article6845290.ece?ref=video
 5. விகடன் மேடை “அப்போ துணிந்த ராஜேந்தர்...இப்போ கனிந்த ராஜேந்தர்!” கு.பார்த்திபன், திருச்செந்தூர். '' 'ஒருதலை ராகம்’ ட்ரெண்ட் செட்டர் படம். அந்தப் படத்தின் மூலக்கதை, வசனம் உங்களோடது. எப்படிக் கிடைச்சது அந்த வெற்றி?'' ''அது இறைவன் கொடுத்தது. 'ஒருதலை ராகம்’ என் கனவுப் படம். அந்தப் படம் வெளியாகிறதுக்கு முன்னாடியே படத்தோட பாடல்களைக் கேட்டவங்க, 'பாட்டு எல்லாம் நிச்சயம் ஹிட் ஆகும்’னு சொன்னாங்க. அந்தப் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும்னு நான் பி.ஏ படிக்கும்போதே தெரியும். ஏன்னா, அப்பவே அந்தப் பாடல்களுக்கு ஃபேன்ஸ் ஜாஸ்தி. பி.யூ.சி முடிச்சுட்டு ஆறு வருஷம் மயிலாடுதுறை டு தரங்கம்பாடி ரூட்ல நான் டிரெயின்ல போவேன். அப்போ நான் படிச்ச ஏ.வி.சி கல்லூரிதான் எனக்குப் பிடித்த இடம்... நான் படித்த இடம்... நான் படம்பிடித்த இடம்! டிரெயின் காலையில 6.40-க்குக் கிளம்பும். ஒன்றரை மணி நேரப் பயணம். தினமும் அந்த ஒன்றரை மணி நேரமும் எல்லாருக்கும் நான்தான் என்டர்டெயினர். கிட்டத்தட்ட ரயில் பாடகன்னு வெச்சுக்கங்களேன். அப்போ மத்தவங்க எல்லாம் சினிமா பாட்டு பாடுவாங்க. ஆனா, நான் வார்த்தைகளைப் பிடிச்சுப்போட்டு தாளத்தோடு கம்போஸ் பண்ணி சொந்தமாப் பாட ஆரம்பிச்சேன். அப்படி உருவாக்கின பாடல்கள்தான்... 'கூடையில கருவாடு...’, 'வாசம் இல்லா மலர் இது...’, 'நான் ஒரு ராசி இல்லா ராஜா...’, 'இது குழந்தை பாடும் தாலாட்டு...’. இந்தப் பாட்டு எல்லாமே அப்போ நானே மெட்டுக் கட்டிப் போட்டதுதான். இப்படி ஒண்ணு இல்ல... ரெண்டு இல்ல... வெவ்வேறு தாள லயத்துல மொத்தம் 108 பாடல்கள் எழுதினேன். அதில் ஏழு பாடல்களை மட்டும்தான் படத்தில் பயன்படுத்தினோம். அப்போ வந்த படங்களைப் பார்த்தாலே சோர்வா இருக்கும். கல்லூரி மாணவர்கள் எல்லாம் எப்படி இருக்கோம். ஆனா, படத்துல காட்டுற ஹீரோ வயசானவரா இருக்காரே! அந்தப் பழைய ட்ரெண்டை உடைக்கணும்னு எடுத்ததுதான் 'ஒருதலை ராகம்’! நீராவி இன்ஜின் டிரெயின், நிஜ காலேஜ்னு நேட்டிவிட்டியை படத்துல கொண்டுவந்தோம். படத்துல கேபரே டான்ஸ் இருக்கக் கூடாது, ஹீரோ வில்லன்கிட்ட அடி வாங்கணும்னு பல புது முயற்சிகளை அந்தப் படத்துல பண்ணிணோம். வசனத்துலயும் புது டிரெண்ட் உண்டாக்கினோம். படத்துல ஒரு குடிகாரன் சொல்வான்... 'தாமரை, தண்ணியில தள்ளாடினா ரசிக்கிற... நான் குடியில தள்ளாடினா ஏன்டா ரசிக்க மாட்டேங்கிறே?’ படத்துல கோயில்ல இருந்து நடந்து வர்ற ஹீரோயின், நாயகனைப் பார்த்ததும் கையில வெச்சிருந்த எண்ணெய்க் கிண்ணத்தைக் கொட்டிருவா. 'எண்ணெயைக் கொட்டிட்டே’னு தங்கச்சி சொல்ல, 'என்னையே கொட்டிட்டேன்’னு நாயகி பதில் சொல்வா. இப்படி சின்னச் சின்ன கேரக்டர்கள்கூட பன்ச் பேசுவாங்க. இதுபோல இன்னும் நிறையக் கற்பனை பண்ணிவெச்சிருந்தேன். அந்தக் கற்பனையில் 10 சதவிகிதம்கூட நான் படத்துல கொண்டுவர முடியலை. ஆனாலும், படம் அவ்வளவு ஹிட். அது இறைவன் கொடுத்த கொடை!'' சிவக்குமார் பாலசுப்ரமணியம், ஃபேஸ்புக். ''உங்க பையன் சிம்பு ஹீரோவா நடிச்சுட்டு இருக்கும்போது நீங்களும் அவருக்குப் போட்டியா சோலோ ஹீரோவாத்தான் நடிப்பேன்னு மல்லுக்கட்டுறது சரியா?'' ங''சிம்புவுக்கு நான் போட்டினு சொல்றதே தப்பு. சார்... ஒண்ணு புரிஞ்சுக்கங்க. நான் இதுவரை கதையின் நாயகனா நடிச்சிருக்கேனே தவிர, கதாநாயகனா நடிச்சதே கிடையாது. இப்போ தல அஜித் பட டைட்டில் 'என்னை அறிந்தால்’. அது மாதிரி நான் என்னை அறிஞ்சுவெச்சிருக்கேன்; தமிழ் சினிமாவைப் புரிஞ்சுவெச்சிருக்கேன்; மக்கள் மனசைத் தெரிஞ்சுவெச்சிருக்கேன். என் தகுதிக்குப் பொருந்தி வர்ற கதைகள்ல மட்டும்தான் நான் நடிச்சிருக்கேன். 'மைதிலி என்னைக் காதலி’ படத்துல, 'உன் மூஞ்சியை கண்ணாடியில பார்த்திருக்கியா? இதெல்லாம் ஒரு மூஞ்சினு காதலிக்க வந்துட்டே...’னு கதாநாயகியே காறித் துப்பக்கூடிய கேரக்டரில்தான் நடிச்சேன். அடிப்படையில் நான் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். 110 வாய்ஸ்ல பேசுவேன். இன்னைக்கு வரைக்கும் புதுசா என்னென்ன வாய்ஸ்ல பேச முடியும்னு முயற்சி பண்ணிட்டே இருக்கிற கலைஞன் நான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஆக்டர் கமல் ஹாசன்னு ஹீரோக்கள் உச்சாணிக் கொம்பில் இருந்த சமயம், நான் பண்ணது எல்லாமே சாதாரண கேரக்டர்கள்தான். ரஜினி, கமலை விடுங்க. விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யானு நிறைய நடிகர்கள் மத்தியில, ஒரு புதுமுகம் மாதிரி நடிச்சுட்டு இருக்கேன். கடல்ல திமிங்கிலமும் சுறாவும் வாழும்கிறதுக்காக ஒரு சின்ன மீன் வாழாம இருக்குமா? இந்தத் திரைகடலில் எல்லாரும் கப்பல்ல போறாங்க. நான் ஒரு ஓரமா கட்டுமரத்துல போறேன் சார்!'' க.சுரேஷ்குமார், தஞ்சாவூர். ''டியர் டி.ஆர்... இன்றைய சினிமா ட்ரெண்ட் எப்படி இருக்கிறது?'' ”சுருக்கமா சொல்லவா... ஒரு பக்கம், பல கோடிக்கு சினிமா வித்துக்கிட்டிருக்கு; இன்னொரு பக்கம், சினிமா செத்துக்கிட்டிருக்கு!'' எஸ்.விஜயா, சென்னை. ''முன்னாடி பயங்கரமாக் கோபப்படுவீங்க... இப்போ கொஞ்சம் சாந்தமாகிட்டீங்களே... ஏன் சார்?'' ''சார்... ஒரு பூ பூக்குது, காய் காய்க்குது, கனிஞ்சு பழமாகுது. அந்த மாதிரி இப்போ டி.ஆர் கனிஞ்சுட்டு இருக்கான். ஒருகாலத்துல துணிஞ்ச ராஜேந்தரைப் பார்த்தீங்க; இப்போ கனிஞ்ச ராஜேந்தரைப் பாருங்க. எல்லாத்துக்கும் மேல ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மாற்றம் வரும். அப்படி ஒரு மனமாற்றம் எனக்கு வந்திருக்கு. பகவத் கீதை என்னை ரொம்பப் பாதிச்சிருச்சு சார். நான் அல்லாவைத் தொழக்கூடியவன்; ஜீசஸை வணங்கக்கூடியவன். எல்லா மதங்களும் எல்லா சான்றோர்களும் அன்பைத்தான் சொல்லிட்டுப் போயிருக்காங்க. நாமதான் அடிச்சுக்கிட்டு சாவுறோம். இந்த உலகம், நாடுகள், மக்கள்னு இறைவனோட படைப்பை யோசிச்சுப் பார்த்தா, நாமல்லாம் வாழ்க்கையில ஒண்ணுமே இல்லைனு தோணுது சார். என் ஸ்டைல்ல சொன்னா, நான் ஏன் பட வேண்டும் ஆத்திரம்... இறைவனின் படைப்புக்கு முன் நான் எம்மாத்திரம்... ''டி.ஆர்-னாலே பயங்கர எனர்ஜி. அந்த எனர்ஜி எங்கே இருந்து வருது டி.ஆர்ஜி?'' ''ஒவ்வொரு மனுஷனும் ஏதோ ஒரு விஷயம் முயற்சி பண்ணுவான். அது நடக்கலைனா, சோர்ந்துபோயிருவான். நானும் ஆரம்பத்துல அப்படித்தான். பண்ண காரியம்லாம் கைகூடாதப்போ, மனசு கொஞ்சம் உடைஞ்சது. மனசு உடைய உடைய ஏன் இப்படி நடக்குதுனு யோசிக்க ஆரம்பிச்சேன். அப்போ ரயில் தண்டவாளம் இருக்கே சார்... அது என் யோசனையில வந்துச்சு. தண்டவாளத்து மேல தடக் தடக்... தடக் தடக்னு ரயில் நிக்காம ஓடிட்டே இருக்கும். அப்போ, 'இவ்வளவு வெயிட்டான ரயில் நம்ம மேல ஓடுதே’னு தண்டவாளம் நினைச்சா, அதுக்கு அங்கே வேலையே இல்லை. 'ரயில் ஓடுறதுக்கு நாம காரணமா இருக்கோம். எவ்வளவு வலின்னாலும் தாங்கிப்போம்’னு நினைக்கிறதாலதான் அது நிலைச்சு நிக்குது. சின்ன வயசுல தண்டவாளத்து மேல காதை வெச்சுக் கேட்பேன். தூரத்துல டிரெயின் வர்ற சத்தம் 'தடக்... தடக்’னு கேட்கும். என் இதயமும் அதுமாதிரிதான் சார்... எப்போ என்ன நடந்தாலும் 'தடக்... தடக்’னு துடிச்சுட்டே இருக்கும். வாழ்க்கைங்கிற ரயில் பயணத்துல எத்தனை பிரச்னை வந்தாலும் தாங்கிட்டு அமைதியா இருப்பான் இந்த டி.ஆர். அதுதான் அவன் உற்சாகத்துக்குக் காரணம்!'' வி.சுபிக்ஷா, கும்பகோணம். ''உங்க இசை ஞானம் அபாரம்தான். அதுக்காக, 'ஆப்பிரிக்கா மக்கள்கூட ரசிப்பாங்க’னு சொல்லி 'ஆப்பிரிக்கன் மியூசிக் போடுறேன்’னு அதகளம் பண்றது கொஞ்சம் ஓவர்தானே?'' ''ஒரு நிமிஷம்... உங்க கேள்வியில இருக்கிற ரெண்டு விஷயங்களையும் நான் மறுக்கிறேன். நான் இசை ஞானம் உள்ளவன் கிடையாது. 'எனக்கு இசை ஞானம் இருக்கு’னு எந்தப் பேட்டியிலயும் சொன்னதே இல்லை. அப்புறம் எந்தக் கேள்வி கேட்டாலும், அதைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக் கிட்டுக் கேளுங்க. வாழ்க்கையில எப்பவும் எதுவும் நடக்கலாம். நான் எதுக்கும் தயாரா இருக்கேன்னுதான் சொன்னேன். சார்... அவ்வளவு பாதுகாப்பு வசதிகொண்ட விமானமே கடலுக்குள்ள போயிடுது. இங்கே யாரும் எதுக்கும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. திடீர்னு நாம ஒரு பாலைவனத்துல மாட்டிக்கலாம். திக்குத்தெரியாத காட்டுல சிக்கிக்கிட்டா, என்ன பண்ணுவீங்க? அப்போ அந்தச் சூழ்நிலையில நீங்க என்ன பண்ணுவீங்க? அந்த மாதிரியான சூழ்நிலையை நான் எப்படிச் சமாளிப்பேன்னு உதாரணம் சொல்றதுக்காக ஆப்பிரிக்கன் மியூசிக்னு சொன்னேன். 'பாஷை புரியாத, ஊர் பேர் தெரியாத ஆப்பிரிக்கா நாட்டுல கொண்டுபோய் என்னை இறக்கிவிட்டாக்கூட, அங்கே அவங்களை மாதிரி ஏதாவது சத்தம் கொடுத்துப் பொழைச்சுப்பேன்’னு சொன்னேன். அதை என் நம்பிக்கையின் அடையாளமாப் பார்க்கணும். டி.ஆர் பண்ற அதகளமா பார்க்கக் கூடாது. 'இதுதான் ஆப்பிரிக்க இசை’னு நான் எப்பவும் எங்கேயும் பேசலை. இப்போ நீங்க போயிட்டு இருக்கிற விமானம் கடல்ல விழுந்துடுச்சு. அப்போ பயத்துலயே செத்துடணுமா? ஏதாவது ஒரு கட்டை கிடைக்குதா... அதைப் பிடிச்சு கரை சேருவோமானு பார்ப்போம்ல... அப்படி ஒரு தன்னம்பிக்கை கொடுக்கத்தான் அந்த மியூசிக் போட்டுப் பேசிக் காட்டினேன். நீங்க என்னைக் காயப்படுத்த நினைக்கலாம் இந்தக் கேள்வி மூலமா. ஆனா, எந்தச் சூழ்நிலையிலும் எப்பவும் இருப்பேன் நான் நலமா! நீங்க என்னைக் கிண்டல் பண்ண நினைச்சாலும், அதை விளக்கிச் சொல்ற திறமையும் பொறுமையும் இறைவன் எனக்குக் கொடுத்திருக்கான். அந்த இறைவனுக்கு நன்றி!'' ச.பாண்டியராஜன், சென்னை. ''ஒரு இயக்குநரா பதில் சொல்லுங்க. நயன்தாரா, ஹன்சிகா... இந்த ரெண்டு ஹீரோயின்களோட ப்ளஸ், மைனஸ் என்ன?'' ''பெரிய பெரிய நடிகைகளை வெச்சு நான் படம் இயக்கியது இல்லை. அதுவும் நீங்க சொல்ற ரெண்டு பேரை வெச்சு நான் படம் பண்ணினது இல்லை. அப்படி படம் பண்ணினா, நான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்றேன்!'' ஏ.ரஹ்மத்துல்லா, ஃபேஸ்புக். ''சிம்புவுக்கு எப்போ சார் கல்யாணம்?'' ''நான் 'மகனே’ என்கிறேன். அவர் 'சிவனே’ என ஓடிக்கொண்டிருக்கிறார். மாற வேண்டும் அவர் மனம். மாறிவிட்டால் உடனே திருமணம்!'' - அதிரடி சரவெடி தொடரும்...
 6. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கிறான் சங்கரன். பிகு:- மிஸ்டர் தமிழ்குரல், அடிக்கடி பதிவு போடுங்கள். களத்திற்கு பரபரப்பு வேண்டாமா?
 7. செல்வி.ஜெயலலிதா தனி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், அவர் செய்த தவறு ஒன்றும் பெரிய விசயம் அல்ல என்று பரவலாக இணையங்களில் எழுதப்பட்டு வருகிறது. தமிழர்களிடம் விழிப்புணர்வு என்பதே இல்லையா? நமக்கு நீதி, நேர்மை என்றெல்லாம் சிறு வயதில் சொல்லித்தந்தார்களே அதற்கு மதிப்பே இல்லையா, இன்று? மேலும், அதிமுகவினரின் நடவடிக்கைகள் தனிக்குனிவை அல்லவா ஏற்படுத்துகிறது. எப்போது சொரணையை இழக்க ஆரம்பித்தது நம் இனம்? பெரியவர் வேக்கப், ஆரங்கனார் ஆகியோரின் பதில்களை எதிர்ப்பார்க்கிறேன்..
 8. முதல் அறை!

  சிக்கலில் க்ரின் விழ, யாமினி காற்றில் மறைந்தாள். அவளை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று மனம் ஏங்கியது. இன்டெர்வியூவில் வினாக்களை அனாயசமாக எதிர்க்கொண்டு, பதில்களை படு நம்பிக்கையோடு அள்ளித்தெளித்தேன். அட! நம்ம கிட்ட கூட இவ்வளவு சரக்கு இருக்கிறதா? லிப்ட்டில் இறங்கி வரும் போது எதிர்ப்படும் முகங்கள் எல்லாம் யாமினியாய் தோன்றியது. ஒரு புதுமுகம் என்னை இவ்வளவு தூரம் மாற்றும் என்று நினைக்கவே இல்லை. வீட்டிற்குச்சென்றவுடன் விசல் அடித்துக்கொண்டே டிவியை ஆன் செய்தேன். டிவி நிகழ்ச்சியைப்பார்த்துக்கொண்டே இருந்தேன். எப்படியாவது யாமினியின் போன் நம்பரை வாங்கி விட வேண்டும் என்று தோன்றியது. மறு நாள் காலையில் அவளைக்கண்டதும் நேரே சென்றேன். "மொபைல் நம்பர் வேணும்...." "எதுக்கு" "பேச தான்" "அதான், பேசிட்டு இருக்கீங்களே!" "இல்லை, எப்பவாச்சம் பேசுணும்னு தோணுச்சுனா பேசறதற்கு..." "ஓ... எப்பல்லாம் பேச தோணுது?" "வீட்டில, ஆபிஸ்ல இருக்கும் போது..." "ஓ. ஐ சி..ஆபிஸ்ல வேல பாக்க மாட்டீங்களா" "பென்சல் இருக்கேன்...." "புரோஜக்ட் கிடைச்சிட்டா நெனப்பு வருமா?" சரியான வாயாடி போல இருக்கு, ஆனா இதுவும் ஜாலியா தான் இருக்கு....
 9. பகவத் கீதையை தேசிய நூலாக அறிவித்து, பள்ளிகளில் கற்றுக் கொடுக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். Posted Date : 15:48 (06/08/2014)Last updated : 18:29 (06/08/2014) திருவனந்தபுரம்: பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி தவே கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், அதனை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி தவே அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், "ஒவ்வொருவரிடமும் நல்ல குணங்களை வெளிகொண்டு வரும்போது, வன்முறையை தடுக்க முடியும். இதற்காக பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பிலேயே மாணவர்களுக்கு பகவத் கீதை, மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த நூல்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை போதிக்கிறது. நான் மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால், பகவத் கீதையையும், மகாபாரதத்தையும் முதலாம் வகுப்பிலேயே கற்றுக் கொடுக்க உத்தரவிட்டிருப்பேன்" என்று கூறியிருந்தார். இவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு, இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் இது ஏற்புடையதல்ல என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று இது தொடர்பாக பேசிய ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பான பாரதிய விசாரா கேந்தரத்தின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், உச்சநீதிமன்ற நீதிபதி தவேவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: "பகவத் கீதை வெறும் வேத நூல் மட்டும் அல்ல; ஆன்மீக மற்றும் உன்னதமான தத்துவ நூல் என்பதால் அதனை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். பகவத் கீதை இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஆழமாக வேரூன்றிவிட்ட நூலாகும். பகவத் கீதையை குறைந்தபட்சம் ஒருமுறையாவது படித்து பார்ப்போர், அது வெறும் மத உரைகளை மட்டுமே கொண்டது அல்ல என்பதை புரிந்துகொள்வார்கள். பகவத் கீதையைப் போன்று எண்ணற்ற விளக்கங்களை கொண்ட வேறு எந்த புத்தகமும், அதிகமான எண்ணிக்கையில் வெளியிடப்பட்டு விற்கப்பட்டதில்லை. காலம் மற்றும் இடத்திற்கு அப்பாற்பட்டு ஆதிக்கம் செலுத்துவது பகவத் கீதை. அது ஒரு அறிவுச் சுரங்கம். மகாத்மா காந்தி கூட பக்வத் கீதையை தனது 'தாய்' என அழைத்துள்ளார். எப்பொழுதெல்லாம் அவர் குழப்பமும், துன்பம் அடைகிறாரோ அப்பொழுதெல்லாம் அவர் பகவத் கீதையிடம் தஞ்சமடைந்தார். நமது சுதந்திர போராட்டத்தில் கூட தாக்கத்தை ஏற்படுத்தியது பகவத் கீதை. உலகம் முழுவதும் நமது நன்னெறி அமைப்புகள் வேகமாக சீரழிந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கான தீர்வை எப்பொழுதுமே கொண்டிருக்கிறது மனித குலத்திற்கான உயரிய பண்புகளை கற்றுக்கொடுக்கும் பகவத் கீதை நூல். எனவே பகவத் கீதையை நமது நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அசல் பிரதியில் 'கீதாஉபதேசம்' செய்யும் படம்தான் இடம்பெற்றிருக்கும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பகவத் கீதை, பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்பட்டால் அது எப்படி அரசியலமைப்பு சாசனத்திற்கு விரோதமானதாக அமையும்?" எனக் கூறியுள்ளார்.
 10. முதல் அறை!

  கம்பெனி காரில், ஸ்ருதியை அழைத்துக்கொண்டு வந்து நிறுத்தினேன். அவள் ,"பை அங்கிள்" என்று சொல்லி விட்டு பிரேயர் லைனில் போய் நின்று கொண்டாள். நானும் கண்ணை மூடிக்கொண்டு கும்பலோடு பிரேயரை முணு முணுத்தேன். கண் திறந்துப்பார்த்தால், யாமினி சற்றுத்தொலைவில் நின்று கொண்டிருந்தாள். அவள் என்னைப்பார்ப்பாளா? ஆவலோடு நின்றுக்கொண்டு இருந்தேன். அவள் பாட்டிற்கு போய்க்கொண்டே இருந்தாள். சே எனக்கு நேரமே சரியில்ல போலிருக்கிறது. காரை எடுத்துக்கொண்டு டிராபிக்கில் வெயிட் செய்து கொண்டிருந்தேன். மதியம் போன் இன்டர்வியூ வேற இருக்கிறது. என்னத்தைக்கேட்பான்களோ? பக்கத்து லேனில் ஒரு குட்டி போர்டு கார் நின்று க்கொண்டு இருந்தது. அந்தக்காரிலிருந்து துள்ளலான குரல், "ஹே சங்கர், இளைய நிலா இன்னுமுமா பொழிஞ்சிட்டு இருக்கிறது.. குட் டே மை பிரண்ட்" யாமினி, மோகினியாய் சிரித்தாள்.....சிக்னலில் கீரின் விழுந்தது..
 11. முதல் அறை!

  ஸ்மிதா என் கைகளைப்பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளைப்பார்க்கவும் பாவமாய் இருந்தது. என் புத்திக்கெட்டது - ஒரு நிமிஷம் இரு என்று சொல்லி விட்டு, என் காரை நோக்கிச்சென்றேன். கிள‌வ் கம்பார்ட்மெண்டில் இருந்து செக் புக்கை எடுத்து வந்தேன். ஸ்மிதாவைத்தனியாக அழைத்துச்சென்றேன். "நீயும் நானும் இனி ஒன்றாக வாழ முடியாது, இன்னிக்கு உங்களுக்கு பணக்கஷ்டம் இருக்கு, அதனால நான் மனுஷனாய் தெரிகிறேன். உங்க நிலைமை மாறுச்சுனா, நான் மறுபடியும் உங்களுக்கு புழுவாய் தெரிவேன், ஸாரி டியர்.. என்னிடம் பேங்க் சேவிங்கில் முப்பதைந்தாயிரம் டாலர் தான் இருக்கு, செக்காக தருகிறேன், திருப்பிக்கூட தர வேண்டாம், இனி மேல் என்னைக்காண்டாக்ட் செய்யாதே" அமைதியாய் செக்கை வாங்கிக்கொண்டாள். மெல்லியக்குரலில், தாங்க்ஸ் என்றாள். நெட்டை எழுந்து நின்று கைக்குலுக்கினார், அவர் தம்பி முதுகில் தட்டிக்கொடுத்தார். நியூ ஜெர்சி திரும்பினேன். பிராஜெக்ட் முடிந்து விட்டது, இனி மேல் பென்ச் சம்பளம் தான் தர முடியும் என்று கம்பெனி பிரசிடெண்ட் கூப்பிட்டு சொன்னார். அவர் நினைத்தால் என்னை வேலையை விட்டுத்தூக்கி இருக்கலாம், ஸ்ருதியை பள்ளியில் கொண்டு போய் விடுவதால் இரக்கம் காட்டுகிறார் என்று நினைக்கிறேன். மனம் மிகப்பாரமாக இருந்தது. 2 மாதத்தில் அவள் ஸ்கூலும் முடிந்து விடும். இன்டர்வீயுவிற்கு பிரிபேர் பண்ணனும். ஒரே டிப்ரஸனாக இருந்தது. வீட்டிற்கு போன் செய்தால், அப்பாவிற்கு உடம்பு சரியில்லை, கொஞ்சம் பணம் அனுப்ப முடியுமா என்றார்கள். சேமித்து வைத்திருந்தப்பணத்தையும், ஸ்மிதா அப்பாவிற்கு க்கொடுத்தாயிற்று. எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை வளர்த்து இருப்பார் அப்பா? எப்படியாவது அவருக்குப்பணம் அனுப்ப வேண்டும். காரில் அமர்ந்து யோசித்தேன், அட இந்த‌ கார் தேவையா, நியூஜெர்சியில் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இருந்தால் பஸ்ஸை ப்பயன் படுத்தியே காலத்தை ஓட்டி விடலாம். ஆசை ஆசையாய் வாங்கிய காரை அடிமாட்டு விலைக்கு விற்றேன். கண்களை முட்டிக்கொண்டு கண்ணீர் வந்தது. ஸ்மிதா குடும்பத்திடம் ஏமாந்து விட்டோம் என்று தோன்றியது.
 12. முதல் அறை!

  நேரம் போய்க்கொண்டே போனது. அன்று இரவு அங்கு தங்கக்கூடாது என்று முடிவு செய்தேன். வீட்டின் அழைப்பு மணி அடித்தது. இவள் கதவைத்திறக்க, நெட்டையின் தம்பி உள்ளே நுழைத்தார். பிஸினெஸில் ஏதோ சிக்கல் என்றும், பணம் தர வேண்டிய குஜராத்தி கண்ணில் படாமல் ஓளிந்துக்கொண்டான் என்றும் புலம்பினார். நான் ஒன்றரை லட்சம் டாலர் தயார் பண்ணி விட்டேன், உன்னால் மூணு வாரத்திற்குள் 1 லட்சம் டாலர் தர முடியுமா என்று கேட்டார் நெட்டையின் தம்பி. நான் முடியாது என்று சொல்ல சொல்ல அவர் முகம் மாறியது. ஸ்மிதாவிற்கு நீ எவ்வளவு தொல்லைக்கொடுத்தாய், அவளுக்கு கெட்டுப்போன சாப்பாடு க்கொடுத்தாய், அலிமோனி (ஜீவனாம்சம்) கேட்டு உன்னை ஒரு வழிப்பண்ணுவோம் என்று மிரட்டத்தொடங்கினார். ஒரு கட்டத்தில் கையை ஓங்கிக்கொண்டு ஆவேசமாய் அடிக்க எல்லாம் வந்தார். ஸ்மிதா அமைதியாய் நின்றுக்கொண்டு இருந்தாள், அது தான் எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. இவன்கள் கூத்தடித்தற்கு நானே, என் அப்பாவே தண்டம் அழ வேண்டும். , ஒரு வேளைபணக்காரனெல்லாம் இப்படி தான் மானம் கெட்டு நடந்து க்கொள்வான்களோ... என்ன செய்வது?
 13. முதல் அறை!

  சங்கர், ப்ளீஸ் ஹெல்ப் மை டேட், நாம டிவேர்சை வேண்டுமென்றால் ரீகன்சிடர் பண்ணலாம். அடிப்பாவி, அப்பாவிற்கு த்தப்பாமல் பெண் பிறந்திருக்கிறது. அவள் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள், நான் ஒப்புக்கொள்ளவே இல்லை. மூதாதையர் சொத்தை வித்தா இந்த நெட்டை மூதேவியின் கடனை அடைக்க வேண்டும். திருமணம் என்பது எவ்வளவு புனிதமான பந்தம்? ஆணவத்தால் என்னைத்தூக்கி எறிய துணிந்தீர்கள்? இன்று பணம் வேண்டும் எனும் போது நான் புருஷனாய் தெரிகிறேன். நாளை எவனாவது பணக்காரன் கிடைத்தால் , நான் மீண்டும் டாய்லெட் பேப்பர் ஆகி விடுவேனே?
 14. முதல் அறை!

  கேன் யூ லென்ட் மீ ஹன்ட்ரெட் தெளவ்சன்ட் டாலர்ஸ்? இதென்ன அக்கிரமமா இருக்கு? அவனவன் வரதட்சணை கேட்டு கல்யாணம் பண்றிக்கிறான். நாம ஒரு பைசா கேட்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டா இவங்க நம்ம கிட்டேயே பணம் கேட்கிறாங்க. ஸ்மிதாவை த்தனியாக அழைத்துப்பேசினேன். என்கிட்டே அவ்வளவு பணம் கிடையாது. ஒரு லட்சம் சேர்க்க நான் என்ன தென்னவன் மாதிரி கொள்ளைக்கொள்ளையா சம்பாரிக்கிறேன்? "உன் அப்பாவிடம் கடன் வாங்கிக்கொடு" என்றாள். "என்னது, என் அப்பாக்கிட்டேயா? அவரே பாவம் கஷ்டப்பட்டு பிசினேஸ் நடத்திக்கிட்டு இருக்கார். நியாயமா நான் தான் அவருக்குப்பணம் அனுப்பணும்" "ஸொ, யூ டோன்ட் லக் மை டேட்" குரலை உயர்த்தினாள் ஸ்மிதா. நெட்டையன் எத்தனைப்பேரிடம் ஆட்டையைப்போட்டாரோ, நியூட்டனின் 3வது விதி அவரையேத்தாக்குது..
 15. முதல் அறை!

  ஸ்மிதாவின் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லையாம், உடனே பாஸ்டனுக்கு வா என்று போனில் அழுதாள். டிவோர்ஸ் பிராஸஸில் இருக்கும் போது, போகலாமா வேண்டாமா என்று நினைத்தேன். ஒரு வேளை அவருக்கு எதாவது ஆகி விட்டால் .... மனசு உறுத்தியது. பதறி அடித்துக்கொண்டு பாஸ்டனுக்கு ஓடினேன். ஏப்ரல் மாதமென்றாலும் லைட்டாக குளிர் காற்று வீசி ஒடிக்கொண்டிருந்தது. கார் காராஜை மூடி வைத்து இருந்தார்கள். கார்லிங் பெல் அழுத்தினேன். ஸ்மிதா கதவைத்திறந்தாள். நார்மலாக தான் தெரிந்தாள். உள்ளே அழைத்துச்சென்றாள். பேமிலி ரூம் இருட்டாக இருந்தது. ஒரு மூலையில் சோபாவில் நெட்டை உட்கார்ந்து இருந்தார். என்னைப்பார்த்தும் கையை நீட்டினார். அப்பாவின் பி.பி. ரொம்ப அதிகமாகி விட்டது, ஈ.ஆரில் இருந்து நேற்று மாலை தான் திரும்பினோம் என்றாள். "ஹவ் இஸ் யுவர் ஜாப் ஷங்கர்" என்றார் நெட்டை. "கோயிங் குட்" என்றேன். "ஹவ் இஸ் யுவ‌ர் பிஸினஸ் ஸார்?" "நாட் பேட், பட் ஐ ஹேவ் டூ மீட் சம், பைனாசியல் ஆப்லி கேஷன்ஸ்" "ஒகே" "ஷங்கர், ஐ நீட் யூவர் ஹெல்ப்"