வர்ஷா

Active Members
 • Content count

  8,351
 • Joined

 • Last visited

Everything posted by வர்ஷா

 1. இங்கு வெளியிடப்படும் அனைத்து கார்டூன்களும் முன்னிலையில் இருக்கும் மாத இதழ்கள், வார இதழ்கள், நாளிதழ்களில் வெளியானவைகள், ஒருவேளை பிரம்ஹஹத்தி தோஷம் பிடிச்சிக்குமோ
 2. நீதித் துறைக்குள் சமநீதி! ஜி.ராமகிருஷ்ணன் நீதித் துறைக்குள் சுணக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு மக்கள் மீதுதான் விழும் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கமான நீதித் துறையில் நீதிபதிகள் ஒரு பாதியென்றால், வழக்கறிஞர்கள் மறுபாதி. இந்நிலையில், தமிழகத்தில் இந்த இரு தரப்புக்கும் இடையே எழுந்திருக்கும் ஒரு முரண்பாடு, சமீப காலமாகவே நீதித் துறையையே ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. பொதுமக்களும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34-ஐப் பயன்படுத்தி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள விதிகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராடிவருகின்றனர். இந்த விதிகள், தங்கள் சுதந்திரச் செயல்பாட்டை முடக்கும் விதமாக இருக்கின்றன என்பது வழக்கறிஞர்களின் வாதம். நீதிபதிகள் தரப்போ அதன் தேவையை வலியுறுத்துகிறது. ஒருதலைப்பட்சம் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்களின் நடவடிக்கைகள் குறித்துப் பிறப்பித்த விதிகள் நியாயமானவையா என்று பார்ப்பதற்கு முன்பாக, இந்த விதிகள் கொண்டுவரப்பட்ட விதம் கேள்விக்கு உள்ளாகியிருப்பதைக் கவனிக்க வேண்டும். வழக்கறிஞர்களின் கருத்தறியாமல், ஒத்துழைப் பில்லாமல் அவர்களின் செயல்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டுவரும் விதிகளை சரியா, அப்படி நிறைவேற்ற முடியுமா எனும் கேள்விகள் தவிர்க்கக் கூடியவை அல்ல. இந்த விஷயத்தை விவாதித்து, நடைமுறைச் சாத்தியங்களை அறிந்துகொள்வதால் நீதித் துறையின் மரியாதையும் கண்ணியமும் குன்றிவிடாது. சென்னை உயர் நீதிமன்றம் கொண்டுவந்திருக்கும் சில விதிகள், நீதிபதிகளுக்கு எதிராகப் புகார் பதி வதையும் உயர்த்திப் பேசுவதையும் (Browbeat) குற்றம் என்கின்றன. நீதிமன்றத்துக்குள் போராடுவது தவறு என்கிறது ஒரு விதி. உண்மையில், வழக்கறிஞர்களின் செயல்பாடுகளை முடக்கும் இந்த விதிகள் ஜனநாயக விரோதமானவை என்றே சொல்ல வேண்டும். ‘ப்ரோபீட்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு, கையை உயர்த்திப் பேசுவது; புருவத்தை உயர்த்துவது என்ற அர்த்தங் களும் உண்டு. மிரட்டுவது என்றும் கொள்ளலாம். வழக்கறிஞர் தன்னுடைய வழக்கை முன்வைத்து வாதிடுகிறபோது, தன்னுடைய வாதத்துக்கேற்ப உடல் மொழியை வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாதது. இதை நீதிபதிகளை மிரட்டுவதாகச் சொல்வது சரியாகாது. நீதிபதிகளுக்கு எதிராக அடிப்படையே இல்லாத, ஆதாரமில்லாத புகாரை ஒரு வழக்கறிஞர் அளிப்பது குற்றம் என்று விதி கூறுகிறது. புகாரை விசாரிப்பதன் மூலம்தான் ஆதாரம் உள்ளதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். மாறாக, புகார் அளிப்பதே நீதிபதிகளுக்கு எதிரானது என்ற முடிவுக்கு வரலாமா? பயன்படுத்தப்படாத வழி உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதை விசாரிப்பதற்கோ, அது நிரூபிக்கப்பட்டால் தண்டனை அளிப்பதற்கோ இப்போது என்ன வழி உள்ளது? சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதுதான் இன்றுள்ள ஒரே வழி. கடந்த 68 ஆண்டுகளில் ஒரு நீதிபதி கூட நாடாளுமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்படவில்லை. ஒருசில நீதிபதிகள் மீது விசாரணை வரை வந்து, வேறு வழியாகத்தான் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதே ஒழிய, ஒரு நீதிபதியைக்கூட இதுவரை நாடாளுமன்றம் பதவி நீக்கம் செய்ததில்லை. அப்படியென்றால், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யாருமே முறைகேட்டில் ஈடுபடவில்லை என்ற முடிவுக்கு வர முடியுமா? முடியாது. நீதிபதிகளைப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக்கிட தற்போது சட்டம் ஏதுமில்லை. இந்திய ஜனநாயகத்தின் தூணாக அமைந்திருக்கும் நீதித் துறையை மேம்படுத்த மேற்சொன்ன விதிகள் உதவாது. மாறாக, சமூகப் பொறுப்புடைய அங்கமாக நீதித் துறையை மாற்றுவதே அவசியமானதாகும். நீதித் துறையில் அதிகரிக்கும் ஊழல் முறைகேடுகள் பற்றி அந்த விதிகள் பேசுகின்றன. ஆனால், வழக்கறிஞர்களை நோக்கி அந்தப் பிரச்சினையைத் திருப்புவது என்பது - பிரச்சினையின் ஆழத்தைக் கவனத்தில்கொள்ளாத தன்மையாகும். சி.ரவிச்சந்திரன் ஐயர் வழக்கில் நீதிபதிகள் மீது வழக்கறிஞர்கள் ஊழல் குற்றச்சாட்டு குறித்து உயர் நீதிமன்றத்துக்கோ உச்ச நீதிமன்றத்துக்கோ புகார் கொடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் 1995-ல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு புகார் கொடுப்பதைக் குற்றம் என்று சொல்லவில்லை. ஒரு புகார் உண்மையா, இல்லையா என்று விசாரணைக்குப் பிறகுதான் முடிவுக்கு வர முடியும். பொய்க் குற்றச்சாட்டை ஒருவர் கொண்டுவருகிறார் என்றால், நீதிமன்றம் விசாரித்து அதைத் தள்ளுபடி செய்கிறபோது, புகார் கொடுத்தவர் வழக்குச் செலவை ஏற்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறது. சில நேரங்களில் கண்டனமும் தெரிவிக்கிறது. எனவே, இத்தகைய விசாரணைக்குத் தாங்கள் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை நீதிபதிகள் ஏற்கத்தான் வேண்டும். வழக்கறிஞர் மீதுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிப்பதற்கு முன்னதாகவே வழக்கறிஞர் தொழில் செய்ய அவருக்குத் தற்காலிகமாகத் தடை விதிப்பதும் சரியல்ல. விசாரணை இல்லாமலேயே தண்டனை வழங்கலாம் என உயர் நீதிமன்றமே சொல்வதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. சொல்லப்போனால், வழக்கறிஞர்கள் மீது புகார் வந்தால், அதை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. 1950-களில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஏ,கே.கோபாலனை விசாரணையில்லாமல் தடுப்புக்காவல் சட்டப்படி கைதுசெய்து சிறையில் அடைத்தது தவறு என்று இதே சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நொடிப்பொழுதே வாழ்ந்தாலும் மனித உரிமையோடு வாழ வேண்டும் என்றுதான் ஒவ்வொரு குடிமகனும் விரும்புகிறான். நீதிமன்றங்களில் வாதிடுகிற வழக்கறிஞர்களை விசாரிக்காமல் தண்டிக்கலாமா? நீதித்துறை ஆணையம் நீதிபதிகள் நியமனம், இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை ஆகியவை குறித்த அனைத்து அதிகாரமும் உள்ள ஒரு தேசிய நீதித்துறை ஆணை யத்தை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்த நீதித்துறை ஆணையத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, நாடாளுமன்ற முன்னவர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் ஒருவர் இடம்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ஆலோசனையை முன்வைத்துள்ளது. நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கத்துக்குப் பின் எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்திருக்கிறது. லட்சம் கோடிகளில் பிரம்மாண்டமான ஊழல்களைப் பார்த்துவருகிறோம். இந்தச் சூழலில் நீதித் துறையிலும் ஊழல் நடப்பதை யாரும் மறுக்க முடியாது. நீதிபதிகளில் 40%-க்கும் மேற்பட்டவர்கள் ஊழல் கறை படிந்தவர்கள் என ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவரே குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், நீதித் துறைக்கு வர்க்கச் சார்பில்லை என்று கருத முடியுமா? இன்றைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வழக்குகளைத் தனி அமர்வு அமைத்து விரைவாக முடிக்கும் நீதிமன்றங்கள் - தொழில் தகராறு வழக்குகளை ஆண்டுக் கணக்கில் இழுத்தடிப்பது நடந்துகொண்டுதானே இருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் கார் வைத்திருப்பவர், பெரிய மனிதர் என்பதால் வெண்மணிப் படுகொலையிலிருந்து குற்றவாளியை விடுவித்தது சென்னை உயர் நீதிமன்றம் என்பதை மறக்க முடியுமா? இந்தியச் சிறைகளில் உள்ள 2.8 லட்சம் கைதிகளில் 40% பேர் விசாரணைக் கைதிகள் (1.1 லட்சம் பேர்) என்பதையும் அவர்கள் ஜாமீன்கூடப் பெற முடியாத நிலையில் இருப்பதையும் தவிர்த்துவிட்டுப் பார்க்க முடியுமா? கடந்த பல நாட்களாக தமிழகம் முழுவதும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றம் வரையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக் கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பான்மையாக நீதி மன்றங்கள் செயலிழந்து ஸ்தம்பித்துள்ளன. வழக்கறி ஞர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடாத காரணத்தினால் வழக்காடிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட வர்களோ, தண்டனைகளுக்கு அப்பாற்பட்டவர்களோ அல்ல. அதேசமயம், நீதிபதிகளும் வழக்கறிஞர் பிரதிநிதிகளும் பரஸ்பரம் சமதளத்தில் அமர்ந்து விவாதிக்கும்போதுதான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். எனவே, புதிய விதிகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். 41 வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தையும் ரத்துசெய்ய வேண்டும். நீதிமன்றங்கள் ஸ்தம்பித்துள்ளதை மத்திய அரசும் மாநில அரசும் வேடிக்கை பார்க்கக் கூடாது. இரு தரப்போடு கலந்து பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். நீதித் துறைக்குள் சுணக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு மக்கள் மீதுதான் விழும் என்பதை மறந்துவிடக் கூடாது! - ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்.
 3. டெலிபதி கிரிதர்பாபாவுக்கு வாழ்த்துக்கள்
 4. கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள் கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் : 1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். 4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும். 5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும். 6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் .. 7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். 8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி. 9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும். 10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான். 11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது.. 12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக். 13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க. 14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம். 15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். 16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான். நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். 17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி. 18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. 19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் .. 20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் ...அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் ....இறை சக்தி நம்மை காக்கட்டும் ...
 5. நிறுவனம் வளரும்போது நாமும் வளர்வோம்- காக்னிசென்ட் நிறுவன நிர்வாக துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகரன் சிறப்புப் பேட்டி காக்னிசென்ட் நிர்வாக துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகரன் சில வருடங்களுக்கு முன்பு ஐ.டி. நிறுவனங்களின் வளர்ச்சி அபரி மிதமாக இருந்தது. ஆனால் இப்போது இரட்டை இலக்க வளர்ச்சியை அடைவதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால் கடந்த சில காலாண்டுகளாகவே காக்னி சென்ட் நிறுவனம் 20 சதவீத அளவுக்கு வளர்ச்சியைச் சாதித்துள்ளது. கடந்த 2010 டிசம்பர் மாதம் இந்த நிறுவனத்தில் 1 லட்சம் பணியாளர்கள் இருந்தார்கள். தற்போதைய நிலைமையில் 1.71 லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள். மற்ற நிறுவனங்கள் தடுமாறும் போது இந்த நிறுவனம் பணியாளர்களுக்கு கணிச மாக போனஸ் வழங்கி இருக்கிறது. இந்தியாவின் முக்கியமான ஐ.டி. நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் 20 வருடங்களாக பணிபுரிந்து வரும் அந்த நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகரனை சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய வாழ்க்கை, காக்னி சென்ட் மற்றும் ஐ.டி. துறை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நிறைய பேசி னோம். அந்த பேட்டியிலிருந்து... உங்களுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து முதலில் பேசலாமே? நான் சீர்காழியில் பிறந்தவன். அங்கே படித்தேன். எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் தமிழ் வழி கல்விதான் படித்தேன். அதன் பிறகு லயோலா கல்லூரியில் பிரி யுனிவர்சிட்டி படித்தேன். அதன்பிறகு ஆர்.இ.சி. திருச்சியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து, அசோக் லேலாண்டில் நான்கு வருடம் வேலை செய்தேன். அதன் பிறகு மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த தால் ஐ.ஐ.எம். பெங்களூருவில் நிர்வாகப்படிப்பு படித்தேன். படித்து முடித்தவுடன் டி.சி.எஸ். நிறுவனத்தில் 9 வருடங்களுக்கு மேலாக வேலை செய்தேன். அங்குதான் எனக்கு நிறைய கற்றுக்கொள்ளவும், வெளிநாடு களுக்கும் செல்ல வாய்ப்பும் கிடைத்தது. 94-ம் ஆண்டு காக்னிசென்ட் நிறுவனத்தில் சேர்ந்தேன். கிட்டத்தட்ட 20 வருடங்கள். நான்கு வருடங்கள் வேலை செய்த பிறகு மீண்டும் படிப்பதற்கு உங்களுடைய குடும்ப சூழ்நிலை அனுமதித்தா? எங்களுடையது பெரிய குடும்பம். மேலும், பெரிய பொறுப்புகள் இல்லை. அடுத்தடுத்து படிக்கும் போது, இன்னும் மேலே செல்லலாம். படிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அதைவிட ஐ.ஐ.எம்-ல் படிக்க அனுமதியும் கிடைத் தது. அதனால் படித்தேன். அங்கு படித்த இரண்டு வருடங்களில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. அங்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மட்டுமின்றி உடன் படிக்கும் மாணவர்கள் பல துறைகளிலிருந்து வந்திருப்பார்கள். இதுமட்டுமல்லாமல் நான் நான்கு வருடம் வேலை செய்த பிறகு படித்ததால், நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அதனால் எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் சில காலம் வேலை செய்த பிறகு எம்.பி.ஏ. படிப்பது நல்லது. ஐ.ஐ.எம். அனுபவங்கள், சுவையான அனுபவங்கள் எதாவது சொல்ல முடியுமா? (சிரித்துக்கொண்டே) 30 வருடங்கள் முடிந்து விட்டது. கேட்டவுடன் எனக்கு நினைவில்லை. மீண்டும் காக்னிசென்ட்க்கு வருவோம். இப்போது காக்னிசென்ட் பெரிய நிறுவனம். ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு காக்னிசென்ட் சிறிய நிறுவனம். டி.சி.எஸ். போன்ற பெரிய நிறுவனத்திலிருந்து எதற்காக வரவேண்டும் என்று நினைத்தீர்கள்? புதிய நிறுவனத்தில் வாய்ப்புகள் அதிகம். நிறுவனம் வளரும் போது நாமும் வேகமாக வளர்வோம். அந்த நம்பிக்கையில்தான் இந்த நிறுவனத்தில் இணைந்தேன். அதேபோல நடந்தது. இதுபோல வளர்வோம் என்று நினைத்தீர்களா? அப்போது நிறைய நிறுவனங்கள் வர ஆரம்பித்தது. வளர ஆரம்பித்தது. ஆனாலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் ஆகவேண்டும். ரொம்பவும் ‘கம்பர்ட்’ எதிர்பார்த்தால் எதுவுமே முடியாது. இது ரிஸ்க்கான முடிவாக இருந்தாலும், வாய்ப்புகள் இருக்கிற பட்சத்தில் அந்த ரிஸ்க் எடுத்தேன். என் கூட இருக்கும் நிறைய பேர் எனக்கு ஆலோசனை சொன்னார்கள். இருந்தாலும் முடிவு நாம்தான் எடுக்க வேண்டும். ஐ.டி. துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்தியாவின் பங்கு மிக சிறியதாக இருக்கிறதே. இதைப் பற்றி? இது நல்லதுதான். இந்தியாவின் பங்கு சிறியதாக இருக்கும் பட்சத்தில் நாம் வளர்வதற்காக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தி யாவின் வளர்ச்சியில் ஐ.டி.யின் பங்கு முக்கியமானது. இந்தியாவில் இருக்கும் அனைத்து துறைகளையும் ஒப்பிடும்போது ஐ.டி துறைதான் நல்ல வளர்ச்சி அடைந்துவருகிறது. அடுத்தவருடம் கூட 13-15 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ஜிடிபியில் 8.1 சதவீதம் ஐ.டி.துறையின் பங்கு இருக்கிறது. பேலன்ஸ் ஆஃப் பேமெண்டை குறைப்பதில் ஐ.டி.யின் பங்கு முக்கியமானது. இந்த துறையில் 35-40 சதவீதமான பெண்கள் வேலை செய்கிறார்கள். இது வேறு எந்த துறைகளைவிடவும் அதிகம். சீனா எப்படி உற்பத்திதுறையில் முக்கியமான நாடாக இருக்கிறதோ, அப்படி இந்தியா ஐ.டி. சேவை நாடாக அறியப்படுகிறது. இப்போது SMAC (social, mobile, analytics, cloud) என்ற புதிய பிரிவு வளர்ந்து வருகிறது. இந்த பிரிவுகளில் நிறைய வாய்ப்புகள் உருவாகிவருகிறது. இதை செய்வதற்கு வெளிநாடுகளில் எக்ஸ்பர்ட்கள் கிடையாது. இதில் மட்டும் 10 பில்லியன் டாலர்களுக்கு மேலே வருமான வாய்ப்பு இருக்கிறது. இப்போது ஐ.டி. துறையில் டாப் மேனேஜ்மெண்டில் நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. சில நிறுவனங்கள் மொத்தமாக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். மேலும் ஐ.டி. துறையில் வெளியேறும் விகிதமும் அதிகரித்து வருகிறதே? இது சம்பந்தபட்ட நிறுவனங்களை பொறுத்தது. ஐ.டி.யில் வாய்ப்புகள் இருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ள லாம். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது 1.6 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. இந்த வருடத்தில் இதைவிட அதிகம், அதாவது வரும் நிதி ஆண்டில் (2014-15) 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவில் ஐ.டி. துறைக்கு எதிராக ஒரு மசோதா தாக்கல் செய்யப்போவதாக தெரிகிறதே. என்ன நடக்கிறது என்று அனைவருக்கும் புரியும்படி சொல்லுங்களேன்? அமெரிக்காவில் வேலை செய்வ தற்கு வொர்க் பர்மிட் தேவை. ஆனால் சில நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக அங்கு பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். மேலும், வெளி நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு செல்வதால் அங்கு இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கருத்தும் அங்கு நிலவுகிறது. இதனால் comprehensive immigration reform bill கொண்டுவரப்போகிறார்கள். இங்கிருப்பதுபோலவே அங்கு செனட், காங்கிரஸ் என்று இரண்டு அவைகள் இருக்கிறது. செனட் கொண்டுவரப்பட்ட மசோதாவின் படி பார்த்தால் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் கொஞ்சம் பாதிக்கப் படும். அந்த மசோதாவில் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு நிறைய தடைகள் இருக்கிறது. ஆனால் காங்கிரஸில் இருக்கும் மசோதா அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. இதில் எந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் தெரியவில்லை. எப்போது செய்யப்படும் என்றும் தெரியவில்லை. நாஸ்காம் உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்து அரசாங்கத்திடம் கேட்டு வருகிறோம். பாதிப்பு இருக்காது என்ற நம்பிக்கை இருகிறது. மோசமாக நடக்கும் பட்சத்தில் என்ன நடக்கும்.? எங்களுடைய பிஸினஸ் மாடலை மாற்றி அமைக்கவேண்டி இருக்கும். இங்கிருந்து ஆட்களை எடுப்பதற்கு பதில் அங்கே ஆட்களை எடுக்க வேண்டி இருக்கும். அப்படியே எடுப்பதாக இருந்தாலும் அங்கு ஆட்கள் இல்லை. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் என்ன நடக்கும் என்று தெரியும். இருந்தாலும் மோசமாக எதுவும் நடக்காது என்று நம்புகிறோம். நாஸ்காமிற்கு போட்டியாக ஒரு ஐ.டி. அமைப்பு உருவாக்கப்பட்டதே? இப்போது நாங்களே சிறிய கம்பெனிகளின் product forum என்று உருவாக்கி இருக்கிறோம். மேலும் 10,000 ஸ்டார் அப் என்று புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். முதல் 5 மாதங்களுக்கு 4,000 விண்ணப்பங்கள் வந்தன. 1,000 நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவர்களுக்கு incubation centre உள்ளிட்ட பல வசதிகள் செய்யப் பட்டுள்ளன. அதாவது நாஸ்காமிலேயே சிறிய நிறுவனங்களின் பிரச்சினைகளைக் கையாளுகிறோம். நாஸ்காம் 10,000 ஸ்டார்ட் அப் இலக்கு என்ன? அடுத்த மூன்று நான்காண்டுகளில் 10,000 தொழில்முனை வோர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் திட்டம். அந்த இலக்கு நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். மைக்ரோசாஃப்ட், கூகுள் உள்ளிட்ட டெக்னாலஜி நிறுவனங்கள், நிறுவனங்களுக்கு (business to business) மட்டுமல்லாமல், நேரடியாக வாடிக்கையாளர்களுக்கும்(business to consumer) சேவை கொடுக்கிறார்கள். ஆனால் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் அப்படி இல்லையே? இந்திய ஐ.டி. நிறுவனங்கள் சேவையை வழங்கும் நிறுவனங்கள். ஆனாலும், இப்போது நிறைய நிறுவனங்கள் வந்துக்கொண்டுதான் இருக்கி றார்கள். அமேசான் மாதிரி நிறைய இந்திய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்குகிறார்கள். சி.இ.ஓ.களின் சம்பளத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வைக்க வேண்டும் என்பது போல சமீபத்தில் சில பேச்சுகள் எழுந்ததே? சம்பளத்தை கட்டுப்படுத்தும் போது சரியான நபர்கள் கிடைக்காமல் போவார்கள். இதை ஒழுங்குபடுத்து வதைவிட கம்பெனியிடம் விட்டு விடுவதே நல்லது. ஆனால் செயல் பாடுகளின் அடிப்படையில் சம்பளம் கொடுக்கலாம் என்பது போல மாற்றலாம். இவ்வளவுதான் சம்பளம் என்றால் எப்படி தகுதியான நபர்கள் கிடைப்பார்கள்? அமெரிக்கா ஐரோப்பா தவிர உலகின் மற்ற பகுதிகளில் உங்களின் பங்கு 3 சதவீதம்தான். அந்த நாடுகளில் வாய்ப்புகள் இருக்கிறதே? கடந்த சில வருடங்களாக அந்த பிரிவில் கவனம் செலுத்தி வேகமாக வளர்ந்து வருகிறோம். இன்னும் சில வருடங்களில் இந்த வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
 6. கூடாரவல்லி 11.01.2015 ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம் ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தக யோக த்ருச்யாம்! ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம் கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!! ஸ்ரீ விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வாரின் குலத்தில் உதித்த, கேட்டதை எல்லாம் தரும் கற்பகக் கொடி போன்றவள் கோதை. அடியவருக்கு வேண்டுவனதரும் சந்தனமரமான ஸ்ரீ ரங்கராஜரைச் சுற்றிப் படர்ந்திருக்கும் கற்பகக் கொடியே கோதை நாச்சியார். பூமிதேவியே கோதையாக அவதரித்தாளோ அல்லது ஸ்ரீலக்ஷ்மியே கோதையாக வடிவெடுத்தாளோ, வேறு புகலற்ற நான், கோதை நாச்சியாரைச் சரணடைகிறேன் .(கோதா ஸ்துதி, ஸ்வாமி ஸ்ரீ தேசிகர்). சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், பூமிப்பிராட்டியின் திருஅவதாரமாகவே போற்றப்படுகிறார். கலியுகத்தில், பக்தர்களை உய்விக்க வேண்டி, எம்பெருமானின் கட்டளையை ஏற்று, திருவில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் திருமகளாக, திருத்துழாய்(துளசி) செடியருகில் அவதரித்தார் கோதை நாச்சியார். திருப்பாவை, வேத வேதாந்த உபநிஷதங்களின் சாரமே. மார்கழி மாதம் முதல் நாள் தொடங்கி, தினம் ஒரு பாசுரமாக முப்பது நாளும் பாராயணம் செய்வது வழக்கம். மார்கழி 27ம் நாள், 27வது பாசுரமான, 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்று தொடங்கும் பாசுரம் பாராயணம் செய்யும் நன்னாளே 'கூடாரவல்லி' என்று சிறப்பிக்கப்படுகிறது. இன்று (மார்கழி 27-வது நாள்) கூடாரவல்லி என்று சிறப்பித்துக் கூறப்படும் நாள். இன்றைக்கு, குறிப்பாக வைணவர்கள், சிறப்பாக நெய் வடியும் பாலில் செய்த ’சர்க்கரைப் பொங்கல்’ செய்து வழிபடுவர். வைணவர்கள் அல்லாத சிலரும் கூட இதைச் செய்து வருகிறார்கள்/வருகிறோம். காரணம், கோதைநாச்சியார் பாடிய இந்த 27-வது திருப்பாவைப் பாசுரம்தான் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் தன்னை கோபிகையாக பாவித்து கண்ணனை வேண்டி மற்ற கோபிகையர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் கோவிந்தனுடன் கூடிய நாள்.கூடார வல்லி"
 7. என்ன கொடுப்பாய் நாடு திரும்ப என்ன கொடுப்பாய் இலங்கை அரசே வெளிநாட்டு தமிழர்களுக்காக ஐரோப்பிய கனேடிய அரசுகள் இலங்கைக்கு கொடுத்துள்ள திட்டம்: இலங்கையில் யுத்தம் நடந்த காலத்திலும், அதன் பின்னரும் இலங்கையை விட்டு வெளியேறிச் சென்ற லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களில், வெளிநாடுகளில் இன்னும் நிரந்தர வதிவிட அந்தஸ்து கொடுக்கப்படாமல் பல ஆயிரக்கணக்கானோர் உள்ளார்கள். இவர்கள் தொடர்பாக இலங்கை அரசின் உதவியுடன் திட்டம் ஒன்றை செயல்படுத்த சில வெளிநாடுகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் கனடா இது தொடர்பாக ஏற்கனவே இலங்கை வெளியுறவு அமைச்சை தொடர்பு கொண்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள எமது தொடர்பாளர் மூலம் தெரியவருகிறது. இந்த புதிய திட்ட proposal என்ன? தற்போது வெளிநாடுகளில் நிரந்தர வதிவிட அந்தஸ்து கொடுக்கப்படாமல் உள்ள தமிழர்களில் யாருக்கு எப்படியான நன்மைகளை, அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது? இதோ விபரங்கள்- நாமக்கு தெரியவந்த விபரங்களின்படி, தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தாலும் கனடாவாலும் கொடுக்கப்பட்டுள்ள proposal, இலங்கையில் அரசியல் சூழ்நிலை மாற்றமடைந்துள்ளதால், நிரந்தர வதிவிட அந்தஸ்து கொடுக்கப்படாமல் உள்ள தமிழர்கள் இலங்கைக்கு திரும்பிச் செல்வதில் எந்த அச்சுறுத்தலும் கிடையாது என இந்த நாடுகள் நம்புகின்றன. 1) திரும்பிச் செல்லும் தமிழர்கள் யாரும் கைது செய்யப்படவோ, அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசு கொடுக்க வேண்டும் என இந்த நாடுகள் கோருகின்றன. 2) இலங்கையை விட்டு வெளியேறிச் சென்ற தமிழர்களின் நிலங்கள், மற்றும் சொத்துக்கள் அரசு பாவனைக்காக (உதாரணமாக ராணுவ முகாம்களை அமைத்தல்) எடுக்கப்பட்டிருந்தால், அந்த சொத்துக்கள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் இருந்து கோருகின்றன இந்த நாடுகள். 3) இலங்கையை விட்டு வெளியேறிச் சென்றபின் இவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தால், அந்தப் பெயர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவும், அவர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் தேவைப்பட்டால் அவற்றை வழங்கவும் இலங்கை அரசு, இந்த வெளிநாடுகளுக்கு ஒரு சர்வதேச இருவழி ஒப்பந்தம் (International bilateral agreement) மூலம் உத்தரவாதம் வழங்க வேண்டும். 4A) திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் நல்வாழ்வுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நபருக்கு 38,000 யூரோ என்ற வகையில் பண முதலீடு செய்யும். இந்தப் பணத்தில் அவர்கள் வீடுகளை கட்டிக் கொள்ளவும், இதர வாழ்க்கை தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். அது தவிர, அவர்கள் இலங்கை செல்வதற்காக விமானப் பயணத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியம் பணம் வழங்கும். 4B) இந்த விஷயத்தில் கனடா இன்னமும் குறிப்பிட்ட தொகை எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தில் கூறுகின்றனர். வெளிநாடுகளின் இந்த proposal தற்போது இலங்கை வெளியுறவுத்துறையால் ஆராயப்பட்டு வருகிறது. தற்போது இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள் சமரவீர ஐரோப்பா சென்றுள்ளதால், அங்குள்ள அரசுகளுடன் மேலதிக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் எனவும், வெளியுறவு அமைச்சக தகவல் உள்ளது. இலங்கை அரசு சார்பில் இந்த proposal தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
 8. ஸ்ரீ மஹா சிவராத்திரி 27.02.2014 மகா சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி வரலாறு மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்துப் பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது ‘சிவராத்திரி‘ என்றே - கொண்டாட வேண்டும் என்று வேண்டினார். சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப் பூஜிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லா விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.. சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று. கடைபிடிக்க வேண்டிய விரத முறை சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது. சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின்போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவ பூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம். விரதத்தின் அம்சங்கள் மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தைப் பாடிக்கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டுப் பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும். மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவ பூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்துப் பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களைக் கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம். பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறிப் பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். வில்வ இலைகளைக் கோயில்களுக்கும் வழங்கலாம். பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்துவிட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவ புராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்து, அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும். சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். தவிர மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம். இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது சத்தியம் என்று புராணங்கள் கூறுகின்றன.
 9. தைபூசம் வாழ்த்துக்கள்
 10. முதல் காட்சியிலேயே இசையின் ஆக்கிரமிப்பு துவங்கி விடுகிறது. கயிலாயத்தில் தேவரும், முனிவரும், நாரதரும், பூத கணங்களும் சிவபூஜை செய்யும் காட்சி. பலதரப்பட்ட இசைக்கருவிகளைக் கையாண்டு அருமையான தனி ஆவர்த்தனத்தை ஆதி தாளத்தில் வெகு அற்புதமாக அமைத்து மெய்சிலிர்க்க வைத்தார் கே.வி.மகாதேவன். சங்கீதத்தில் "காலப்ரமாணம்" என்று ஒரு சொல்வழக்கு உண்டு. தாளத்தில் அது மிக முக்கியமான் ஒரு அம்சம். அதன்படி ஒவ்வொரு வாத்தியத்தையும் கணக்கு பிசகாமல் கையாண்டு மகாதேவன் அமைத்திருக்கும் அந்த தனி ஆவர்த்தனமும் அதைத் தொடரும் சீர்காழியின் கணீர்க் குரலும். "சம்போ மகாதேவா" - என்ற ஒரே வரியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி விரியவைத்து என்னமாய்த்தான் அமைத்திருக்கிறார் மகாதேவன்! நமது கர்நாடக சங்கீதத்தில் "யதி" என்று ஒரு அமைப்பு உண்டு. நாம் தமிழில் அணி என்கிறோமே அது போன்றது தான் இது. இது பலவகைப்படும்.. அவற்றில் "கோபுச்ச யதி" என்று ஒன்றும் "ச்ரோதோவக யதி" என்றும் ஒன்று உண்டு. "கோபுச்ச யதி" - என்றால் பசுவின் வாலைப்போல ஆரம்பத்தில் அகலமாக இருந்து போகப்போக குறுகி வரும் பாடல் அமைப்பு. முமூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் ஆனந்த பைரவி ராக கீர்த்தனை "தியாகராஜ யோக வைபவம்" இதற்கு சரியான உதாரணம். "தியாகராஜ யோக வைபவம், அகராஜ யோக வைபவம். ராஜயோகவைபவம், யோக வைபவம், வைபவம், பவம், வம்" - என்று கீர்த்தனையின் ஆரம்பத்தில் இந்த கோபுச்ச யதிக் கிரமத்தை கையாண்டிருக்கும் தீட்சிதர். சரணத்தில் "ச்ரோதோவக யதி" வகையை அமைத்து முடித்திருக்கிறார். "ச்ரோதோவக யதி" - என்றால்..? எப்படி ஒரு ஆறு உற்பத்தியாகும் இடத்தில் ஆரம்பத்தில் குறுகியும், போகப்போக விரிந்தும் செல்லுகிறதோ அது போன்ற ஒரு ஆற்றொழுக்கு போன்ற பாடல் அமைப்புக்கு "ச்ரோதோவக யதி"என்று பெயர். மேலே குறிப்பிட்ட தீட்சிதர் கீர்த்தனையின் சரணத்தில் "பிரகாசம், தத்வப் பிரகாசம், சகல தத்வப் பிரகாசம்" என்று இந்த "ச்ரோதோவக யதி" கிரமம் அமைந்திருக்கிறது. இந்தச் "ச்ரோதோவக யதி" கிரமத்தைக் கையாண்டு தேவா மகாதேவா 0Vaq5sLWD4c சம்போ மகாதேவா .. என்று பாடலின் ஒற்றை வரியை வைத்தே மோகன ராகத்தில் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன். சீர்காழி கோவிந்தராஜன் முடித்ததும் வீணையில் மோகன ராகத்தை கலைமகள் மீட்டுவதாக வரும் சஞ்சாரங்கள்... இப்படி எல்லாம் பாடலை இப்போது போடவேண்டும் என்றால் அதற்கு கே.வி. மகாதேவன்தான் மறுபடியும் பிறந்து வரவேண்டும். தொடர்ந்து பி.சுசீலாவின் குரலில் "நமச்சிவாய வாழ்க" என்ற மாணிக்கவாசகரின் சிவபுராண வரிகள்... "ஈசனடி போற்றி எந்தையடி போற்றி..." என்று தொடரும் அர்ச்சனைப் பதிகத்தை யஜுர் வேதத்தில் "யோபாம் புஷ்பம் வேதா" என்று துவங்கும் "மந்த்ர புஷ்பம்" - பகுதியை நினைவுறுத்தும் வகையில் மெட்டமைத்து திருவாசகத்தை தமிழ் வேதம் என்று கொண்டாடும் அளவுக்கு அற்புதமாக கையாண்டிருக்கிறார் கே.வி. மகாதேவன். ஞானப் பழத்துக்காக கோபமுற்று தாய் தந்தையைப் பிரிந்து செல்லும் முருகனை சாந்தப் படுத்தும் விதமாக அவ்வையாராக வரும் கே. பி.சுந்தராம்பாள் பாடும் KDNSM0RyUa8 "ஞானப் பழத்தைப் பிழிந்து" என்ற தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் பாடலை இடையிடையே ஒற்றை வயலினைக் கையாண்டு காம்போதி ராகத்தில் ஆரம்பித்து, சாவேரி, மோகனம், கானடா என்று ராகமாலிகை விருத்தமாக வெகு சிறப்பாக அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன். தொடர்ந்து படத்தில் இடம் பெறும் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவியரசு கண்ணதாசன். "பழம் நீயப்பா" - பாடலில் முருகனுக்குகந்த ஷண்முகப்ரியா ராகம் தான் எத்தனை அழகாகக் கையாப்பட்டிருக்கிறது! பாடலின் இடையே வரும் இணைப்பிசையில் நம் மனதை அப்படியே கட்டிப்போட்டுவிடுகிறார் கே.வி.மகாதேவன். rA1cuzhcTfQ பி.பி.ஸ்ரீனிவாஸ் - எஸ். ஜானகியின் குரல்களில் "பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்" மகாதேவனின் இசையில் நடபைரவி ராகத்தில் கலந்து கேட்பவர் செவிகளை மட்டுமல்ல மனதையும் நிறைக்கிறது. இந்தப் பாடலில் நாதஸ்வரமும், புல்லாங்குழலும் தான் எவ்வளவு லாவகமாகக் கையாளப் பட்டிருக்கின்றன. நடபைரவியில் இத்தனை இனிமையாக - காலத்தை வென்று நிற்கும் அளவுக்கு ஒரு திரைப்படப் பாடலை வேறு யாராலுமே தரமுடியாது. இடைவேளைக்கு முன்வரும் சிவதாண்டவத்திற்கு மகாதேவன் அமைத்திருக்கும் இசை . உண்மையிலேயே மகாதேவ தாண்டவம் தான். தாள வாத்தியங்களில் ஆதிக்கம் நிறைந்திருந்தாலும் வயலினில் ஹம்சானந்தி ராகத்தை பளிச்சென்று மின்னல் போல வெளிக்காட்டி மறைக்கும் லாவகம் - கே.வி. மகாதேவனால் மட்டுமே சாத்தியம். "நீலச்சேலை கட்டிகிட்ட சமுத்திரப்பொண்ணு" - கண்ணதாசனின் நயமான வரிகள் விரகதாபத்தால் தவிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை எடுத்துக்காட்டுகின்றன என்றால் அதற்கு "பஹாடி"யில் மகாதேவன் அமைத்திருக்கும் மெட்டும் அதனை பி.சுசீலா பாடி இருக்கும் அழகும், நடிகையர் திலகம் வெளிப்படுத்தும் பாவங்களும் பாடலுக்கு தனி இடம் கொடுத்து விடுகின்றன. அடுத்து "ஒரு நாள் போதுமா" .. பாடலுக்கு வருவோம். உண்மையிலேயே இந்தப் பாடலை கே.வி.மகாதேவன் அமைத்திருக்கும் அழகை - பாடலின் சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொள்வது என்றால் அதற்கு ஒரு நாள் போதாது தான். D0wLIArAayY வடநாட்டில் இருந்துவரும் ஹேமநாத பாகவதர் பாண்டியமன்னனின் சபையில் பாடுவதாக காட்சி. நாடெங்கும் உள்ள பாடகர்களை எல்லாம் வெற்றி கொண்ட ஆணவத்தில் மிதக்கும் ஹேமநாத பாகவதரை விறகுவெட்டியாக வரும் ஈசன் எப்படி தன்னிலை உணரவைக்கிறார் என்பது கதை ஆரம்பத்தில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைக்க விரும்பினார் ஏ.பி.நாகராஜன். ஆனால் தோல்வி அடையும் கதாபாத்திரத்துக்கு தான் பாடுவதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்த காரணத்தால் சீர்காழி கோவிந்தராஜன் தன்னால் பாட முடியாது என்று நயமாக மறுத்து விட்டார். சங்கீதத்தில் முடிசூடா மன்னனாக வரும் பாடகருக்கு ஒரு சங்கீத வித்வானையே பாடவைத்தால் என்ன என்று தோன்றியதும் அனைவருக்கும் ஒருமனதாக நினைவுக்கு வந்த பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் தான். அவரிடம் சென்று கதையமைப்பைக் கூறி ஹேமநாத பாகவதருக்காக அவர் பாடவேண்டும் என்று தயக்கத்துடன் கோரிக்கை வைத்தார்கள். "என்னது? தோற்றுப்போகும் சங்கீத வித்வானுக்கு நான் பாடணுமா? என்னை என்னவென்று நினைத்தீர்கள்?" என்றெல்லாம் கூச்சல் போடாமல் - சற்றுக்கூட முகம் சுளிக்காமல்,"அதுக்கென்ன தாராளமா பாடறேன்" - என்று எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் சம்மதித்தார் பாலமுரளிகிருஷ்ணா. கவியரசர் பாடலுக்கான பல்லவியை இப்படி எழுதிக் கொடுத்தார்: "நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா" இந்தப் பல்லவியை மேலே சொன்ன அதே "ச்ரோதோவகயதி" முறையைப் பின்பற்றி.. "ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா.. - என்று வரிக்கு வரி வார்த்தைகளைக் கூட்டி அமைத்த திறமையை என்னவென்று சொல்வது? அதே சமயம் இந்தப் பாடலுக்கு கே.வி. மகாதேவன் தேர்ந்தெடுத்த ராகமோ "மாண்ட்". கதைப்படி ஹேமநாத பாகவதர் வடநாட்டிலிருந்து வரும் ஒரு சங்கீத நிபுணர். பாண்டிய நாட்டுக்கு வருகை தந்து அரசவையில் பாட வருகிறார். யாருக்குமே அவரது சொந்த மண்ணுக்கு உரித்தான விஷயங்களில் தானே பிடிப்பு சற்று அதிகமாக இருக்கும். ஆகவே தான் ஹேமநாத பாகவதர் தன் பாடலை ஹிந்துஸ்தானி ராகமான மாண்ட்டில் ஆரம்பிக்கிறார். மாண்ட் - இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம். கேட்பவரை கிறங்கடிக்கும் வன்மை வாய்ந்த ஒரு ராகம். நமது தென்னக கர்நாடக இசையில் கச்சேரியின் பிற்பகுதியில் இடம்பெறும் துக்கடாக்களுக்கு பயன்படுத்தப் படும் ராகம். எம்.எஸ். அம்மா அவர்கள் பாடிப் பிரபலமடைந்த வள்ளலாரின் "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்" மாண்ட் ராகத்தில் அமைந்தது தான். அந்த ராகத்தில் துவங்கும் "ஒரு நாள் போதுமா" பாடலைக் கேட்டு வரகுண பாண்டியன் மட்டும் அல்ல. நாமுமே அல்லவா கிறங்கிவிடுகிறோம். சரணத்தில் "குழலென்றும் .." என்ற வார்த்தைக்கு பிறகு ஒரு சிறு ஆலாபனை, ஸ்வரம் என்று பாடிய பிறகு அந்த வார்த்தைக்கு தக்கபடி குழலிசையில் முடிப்பதும், அதே போல "யாழென்றும்.." என்ற வார்த்தைக்கு பிறகு வரும் ஸ்வரங்களை வீணையில் இசைத்து பிறகு இரண்டு வார்த்தைகளையும் இணைத்து பாடலைத் தொடர்வதும்..... கே.வி.மகாதேவனுக்கு மட்டுமே சாத்தியம்... கடைசி சரணத்தில் கவிஞர் ராகத்தின் பெயர்களை இணைத்து பாடல் வரிகளை அமைக்க அவற்றை முறையே தோடி, தர்பார், மோகனம், கானடா என்று அந்தந்த ராகங்களிலேயே அமைத்து ஒரு ராக முத்திரைப் பாடலாக அமைத்துவிட்டிருக்கிறார் கே.வி. மகாதேவன். இங்கு கையாண்ட ராகங்கள் அனைத்துமே தென்னாட்டுக்கு சொந்தமான கர்நாடக ராகங்கள் தான். ஹிந்துஸ்தானியில் மட்டும் தான் என்று இல்லை நான் உங்கள் கர்நாடக சங்கீதத்திலும் கரை கண்டவன் என்று ஹேமநாத பாகவதர் பறை சாற்றிக் கொள்வது போல வரிக்கு வரி ராகம் மாறும் பாடலாக அமைத்து கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப பாடலை அமைத்திருக்கும் விதம் அந்த கதாபாத்திரத்தை கே.வி. மகாதேவன் எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டு இசை அமைத்திருக்கிறார் என்பதற்கு ஒரு சான்று. ஒரு இசை அமைப்பாளர் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு இந்தப் பாடலின் மூலம் ஒரு இலக்கணமே வகுத்துக்கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன் என்றால் அது மிகை அல்ல. HdhAu6fbeIA அடுத்து டி.ஆர். மகாலிங்கத்தின் கணீர்க் குரலில் இரண்டு பாடல்கள். இரண்டுமே சிறப்பான பாடல்கள். z2klpOa4SlU "இல்லாததொன்றில்லை" என்ற விருத்தம். இந்த விருத்தம் சிம்மேந்திர மத்யமம், ஹிந்தோளம் ஆகிய இரண்டு ராகங்களின் சேர்க்கையில் அமைந்தது. பீம்ப்ளாசில் அதாவது ஆபேரியில் - "இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை." - கவிஞர் இந்தப் பல்லவியை இறைவனுக்காக செய்தாரா அல்லது கே.வி. மகாதேவனை மனதில் வைத்துக்கொண்டு கொடுத்தாரா என்பது தெரியாது. ஆனால் இந்தப் பாடல் உண்மையிலேயே அரும்சாதனை தான். பாடலின் உச்சத்தில் பொங்கும் உணர்ச்சிப் பெருக்கும், அதை சிறப்பாக பிரதிபலிக்கும் வண்ணம் வரிகளுக்கிடையே இணைத்திருக்கும் இணைப்பிசையும் பாடலை சிகரத்தில் ஏற்றி நிறுத்திவிடுகிறது. இந்த மாதிரி ஒரு பாடலைக் கேட்டபிறகும் இறைவன் சும்மா இருப்பாரா?. பாணபத்திரருக்காக விறகு விற்க மட்டுமல்ல எதைச் செய்யவும் இறங்கி வரமாட்டாரா? 3Fu0546rs1g அப்படி விறகுவெட்டியாக வரும் இறைவன் பாடுவதாக அமைந்த "பார்த்தாப் பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்" - பாடல். சரியான நாட்டுப்புற மெட்டுப் பாட்டு. இந்தப் பாடலை வெற்றிப் பாடலாக மாற்ற மகாதேவனுக்கு கைகொடுத்த ராகம் சிந்துபைரவி. அடுத்து ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்குவதற்காக விறகு வெட்டியாக வந்த பரமன் அவர் தங்கி இருக்கும் மாளிகையின் வெளியே உள்ள திண்ணையில் வந்து படுத்துக்கொண்டு பாடுவதாக அமைந்த பாடல் "பாட்டும் நானே பாவமும் நானே". xg_hBWlR3h0 டி.எம். சௌந்தரராஜன் அற்புதமாகப் பாடி இருக்கும் இந்தப் பாட்டுக்கு மகாதேவன் அமைத்த இசை .. உச்சத்தின் உச்சம். "கௌரி மனோகரி" ராகத்தைக் கையாண்டு இந்தப் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன். எச்சகச்ச முறை திருவிளையாடல் படத்தை டிவியில் பார்த்திருக்கிறேன். எண்ணிக்கை தெரியவில்லை. சோமெனி டைம்ஸ் டிவியில் பார்த்தும் சலிக்கவே சலிக்காத திரைப்படம் திருவிளையாடல். என்னதான் டிவியில் பார்த்தாலும் ஒரு திரைப்படத்தை திரையில் பார்க்கும்போது கிடைக்கிற பரவச நிலை நிச்சயமாக வேறெதிலும் கிடைக்காது. கர்ணன் படம் ஹிட்டடித்த ஜோரில் யாரோ புண்ணியவான் திருவிளையாடல் படத்தையும் கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து ரிலீஸ் செய்திருக்கிறார். உட்ரா வண்டிய என உட்லாண்ட்ஸ் தியேட்டருக்கு அரக்க பரக்க ஓடினோம். தியேட்டருக்கு போய்ச்சேரும்போதே மணி ஆறேமுக்கால் கால்மணிநேர படம் முடிந்துவிட்டிருந்தது. அந்த கால்மணிநேரத்தில் கைலாய மலையின் புகை மண்டிய ஓப்பனிங் சீனும், சிவபெருமான் சிவாஜிசாரின் ஓப்பனிங்கும் , நாரதர் ஞானப்பழம்கொண்டு வந்து சிவபெருமான் ஃபேமிலியில் கும்மி அடிப்பதும்.. அதனால் கடுப்பான குன்றேறி குமரன் பட்டையும் கொட்டையுமாக பழனிமலைமேல் ஏறிக்கொள்வதும்.. அவரை இறக்க அவ்வையார் போவதும் மிஸ்ஸாகிவிட்டது. உள்ளே நுழைந்து சீட் நம்பர் பார்த்து அமரும் போதுதான்.. நாமறிந்த அவ்வையாரான கே.பி.சுந்தராம்பாள் குன்றின் மேல் கோவணத்தோடு நிற்கும் குமரனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார். தியேட்டர் ஹவுஸ்ஃபுல் என்பது அந்த இருட்டிலும் தெரிந்தது. பாட்ஷா படத்தில் ரஜினிசார் ‘’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’’ என்று சொன்னதும் ரசிகர்கள் விசிலடித்து சிலிர்த்து கைதட்டி மகிழ்வார்களே அதே போல கேபிசுந்தராம்பாள் ‘’பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா..’’ என பாட ரசிகர்கள் சிலிர்த்துக்கொண்டதை பார்க்க தமாஷாக இருந்தது. பல்லுப்போன தாத்தா பாட்டிகள் நிறைய பேர் பேரன் பேத்திகளோடு உற்சாகமாக கைத்தட்டி பாடலை தாளம்போட்டு ரசித்துக்கொண்டிருந்தனர். தியேட்டர் முழுக்க ஏகப்பட்ட சிவாஜி ரசிகர்கள். பக்தர்கள். அவ்வையார் முருகனை கூல் பண்ணமுடியாமல் கடுப்பாகி ‘’உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கோ உரிமையுண்டூ...’’ என்றெல்லாம் சொல்லி டிரைப்பண்ணி வேலைக்கு ஆகாமல் பாடிபாடி டயர்டாகி வீட்டுக்கு கிளம்பிவிடுகிறார். பார்வதி தேவியான சாவித்திரி பச்சை பெயின்டில் வந்து முருகனை சாந்தப்படுத்த உன் அப்பாவின் திருவிளையாடல்களை சொல்கிறேன் கேள் என்று ஃப்ளாஷ்பேக்கை ஓப்பன் பண்ணுகிறார். கட் பண்ணினால் மதுரை. தேவிகாவுக்கு ஒரு ஓப்பனிங் சாங்.. ‘’பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்’’ . செம பாட்டு.. குட் லிரிக்ஸ்.. சூப்பரான கலர்ஸ். தேவிகா அவ்வளவு அழகு. என்னதான் சாமிப்படமாக இருந்தாலும் கமர்ஷியல் காரணங்களுக்காக ஒரு குளியல் குமால்டிங்கான சீனையும் சொருகியிருக்கிறார் இயக்குனர். ம்ம்.. டிவைன். (பல வருடங்களாக தொங்கிப்போயிருந்த பல பெரிசுகளின் துவண்ட நெஞ்சுகள் தேவிகாவை பார்த்ததும் குபுக்கென குமுறியிருக்கும் என்பது மட்டும் உறுதி!..) பாட்டு முடிந்ததும் பாண்டியமன்னனான முத்துராமன் வருகிறார். கீழோர் மறப்பர் மேலோர் நினைப்பர் என்கிற பாட்டுக்கு என்ன அர்த்தம் சொல்லு என தேவிகாவிடம் சொல்லி.. அதற்கு ஒரு சூப்பர் விளக்கமும் கொடுக்கிறார். அப்படியே பேச்சுவாக்கில் போகிற போக்கில் உன் கூந்தலுக்கு இயற்கையில் மணமா செயற்கையில் மணமா என சந்தேகத்தை எழுப்பி.. அதுக்கு பரிசுகொடுக்கிறேன் என தண்டோரா போட.. படத்தின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான நாகேஷ் என்ட்ரி! ஸ்பான்டேனியஸ் என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. நிறைய இங்கிலீஸ் விமர்சனங்களில் படித்திருக்கிறேன், அதை எங்காவது உபயோக்கிக்க வேண்டும் என நினைத்ததுண்டு. நாகேஷ்தான் அந்த வார்த்தைக்கேற்ற நடிகர். அடேங்கப்பா என்ன ஒரு ஆக்டிங். மண்டபத்தில் பாட்டெழுதி கொடுக்கும் சிவபெருமானிடம் அவர் பண்ணுகிற சேட்டைகள்.. ஒரிஜினல் சிவபெருமானே ரசித்து சிரித்திருப்பார். அவ்வளவு ஸ்பான்டேனியஸ்! ஸ்கிரீன் பிரசென்ஸில் சிவாஜியை அடித்துக்கொள்ள முடியாது.. அவரையே தூக்கி சாப்பிட்டு முழுங்கி ஏப்பம் விடுகிறார் நாகேஷ். என்ன மாதிரியான ஒரு கலைஞன்.. ஆற்றாமையையும் வறுமையையும் இயலாமையையும் ஏழ்மையையும் இன்னும் நிறைய மைகளையும் ஒருங்கே தன்னுடைய முகத்திலும் பாடிலேங்வேஜிலும் காட்டி அசத்துகிறார். சிம்ப்ளி சூப்பர்ப்! அவருடைய அந்த தருமி போர்ஷனுக்காகவே படத்தை பத்துமுறை பார்க்கலாம். நாகேஷுக்கு பிறகு அவருடைய திரைவிழுங்குகிற தன்மை வடிவேலுவுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. தருமி கதை முடிந்ததும், தாட்சாயினி கதை தொடங்குகிறது. தட்சனின் யாகத்தில் ஏதோ அவில்பாகம் (அப்படீனா என்ன யாராவது விளக்கலாம்) குடுக்கவில்லையென சிவபெருமான் காண்டாகி தாட்சாயிணியோடு சண்டையிட்டு போரிட்டு வாயிலிருந்து கற்பூரத்தை வரவைத்து தாட்சாயிணியை எரித்து சாம்பலாக்கி ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இப்பாகம் முழுக்க சிவாஜிசாரின் செம பர்பாமென்ஸ்.. அதிலும் தாட்சாயணியை போ போ என விரட்டும்போது அரங்கம் அதிர்கிறது. விசில் பறக்கிறது. சிவாஜி ரசிகர்கள் தெயவ்மே என சிலிர்க்கிறார்கள். சிவமில்லையேல் சக்தியில்லை சக்தியில்லையேல்சிவமில்லை என்பதை உலகுக்கு உணர்த்த சூப்பரான டான்ஸ் ஒன்றை ஆடுகிறார் சிவன்ஜி! அவருக்கு நடனம் சரியாக வராது என்பது உலகறிந்த செய்தி என்பதால் எடிட்டரும் நடன இயக்குனரும் ஓவர் டைம் பார்த்து அந்த காட்சியை செதுக்கியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சின்ன சின்ன ஷாட்டுகள்.. ஒவ்வொரு நடன அசைவுக்கு ஒரு ஷாட்.. நடனம் தொங்கலாக இருக்குமிடங்களிலெல்லாம் கேமரா ஆடுகிறது.. சிகப்பு விளக்கு எரிகிறது.. எப்படியோ ஒப்பேற்றி அந்த நடனத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். இடைவேளை. (உச்சா போய்விட்டு வந்து பப்ஸ் வாயோடு தோழரிடம் சிவாஜிசாரை நக்கலடித்து சிரித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அருகில் இருந்தவர் ஒருமாதிரியாக முறைத்துப் பார்த்துக்கொண்டேயிருந்தார். அடித்துவிடுவாரோ என்றுகூட தோன்றியது. கண்டுக்காமல் சிவாஜிக்கு தொப்பைய பாத்தீங்களா பாஸ்.. சாவித்திரிக்கு அதவிட பெரிய தொப்பை என நக்கல் பண்ணிக்கொண்டிருந்தோம்.. திடீரென அந்த மர்ம நபரின் செல்ஃபோன் ஒலித்தது.. ‘’இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..’’ தோழர் அரண்டுபோய்விட்டார். இந்த பாட்டை ரிங்டோனாக வைத்திருப்பவர் நிச்சயம் சிவாஜி வெறியராகத்தான் இருக்கவேண்டும்.. ஓடிடுவோம்.. என்றார். அவர் சொல்லிமுடிப்பதற்குள் நான் என் சீட்டில் இருந்தேன்) அடுத்தது மீனவர் கதை. இதில் மீனப்பெண்ணாக பிறந்த பார்வதியை மணமுடிக்க எல்லா சேட்டைகளும் செய்கிறார் சிவபெருமான். வயசுப்பொண்ணை கையபுடிச்சு இழுக்கிறார். எல்லாமே ரஜினி ஸ்டைல். நடை,சிரிப்பு,சண்டைபோடும் ஸ்டைல்,ரொமான்ஸ் என எல்லாமே ரஜினிகாந்த் செய்துகிறாரே அச்சு அசல் அதே அதே!. (சந்திரமுகி கிளைமாக்ஸில் வருகிற வேட்டையபுரம் மகாராஜா செய்வதைப்போலவே செம வில்லத்தனம் காட்டுகிறார் சிவாஜி!) ரஜினியின் ஸ்டைலை சிவாஜிசார் நிறையவே பாதித்திருக்கிறார் என்பதை படத்தின் இந்த பாகத்தில் உணரலாம். பஸ்ட் ஆஃப் ஆக்சன் காமெடி சென்டிமென்ட் என்றால் செகன்ட் ஆஃப் மியூசிக்கல். கிட்டத்தட்ட ஆறு பாட்டு! எல்லாமே அற்புதம். பாட்டும் நானே பாவமும் நானே.. தொடங்கி கிளைமாக்ஸ் அவ்வையாரின் ஒன்றானவன் இரண்டானவன் பாடல் வரைக்கும்.. பாடல்களுக்கு நடுவில்தான் காட்சிகள்! முதல் பாதியில் நாகேஷ் என்றால் இரண்டாம் பாதியில் பாலைய்யாவும் டிஆர் மகாலிங்கமும்.. ‘’இஷைத்தமிழ் நீ ஷெய்த அருஞ்ஷாதனை’’ என அவர் பாடத்தொடங்க.. ஏஆர் ரஹ்மான் லைவ் இன் கான்செர்ட்டில் தில்சேரே.. என பாடும் போது கரகோஷங்கள் எழுமே அதைவிட அதிகமான கரவொலி. ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என ரசிகர்கள் துள்ளுகிறார்கள். சில இடங்களில் கொஞ்சம் பழைய ஸ்டைல் ஆக்டிங்கால் டிஆர் மகாலிங்கம் சமகால டிஆர் போல சிரிக்க வைத்துவிடுகிறார் (தட்ஸ் ஓக்கே). ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை.. நான் அசைந்தால் அசையும் அகிலமெலாமே என பாடி புரியவைக்கிறார் சிவாஜி. பிறகு பாணபத்திரருக்கு காட்சி தந்து ஒருவழியாக ஃபிளாஷ்பேக் முடிந்துவிடுகிறது. மூன்று கதைகளை கேட்டபிறகு நான்காவது கதையை சொல்ல தொடங்கிவிடுவாரோ என்கிற பயத்திலோ என்னவோ முருகன் கூல் டவுன் ஆகிறார். சிவபெருமான் தோன்றி நீ அமர்ந்த இந்த மலை பழம்நீ என்று விளங்கட்டும் என அருள்பாலிக்கிறார். பழனிமலை எப்படி உருவானது என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் என்று புரிகிறது. விநாயகர்,சிவபெருமான்,பார்வதி,முருகன் என குடும்பத்தோடு குன்றில் மேல் நிற்க.. அந்த வழியாக வரும் அவ்வையாரை கூப்பிட்டு சிவபெருமான் ஒன்று இரண்டு மூன்று என என்னை வாழ்த்தி பாடு என ஜாலியாக பாடவைத்து மகிழ்கிறார். படம் முடிகிறது! தமிழ்சினிமாவில் சிவபெருமானாக ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மனோகர் தொடங்கி ஏஎம் ராஜன்,விகே ராமசாமி, கேப்டன் விஜயகாந்த்,ரஜினிகாந்த்,கமலஹாசன் வரைக்கும் பலரும் நடித்த கேரக்டர்தான் என்றாலும்.. மேச்சோவான நடிகராக போற்றப்படும் சிவாஜி அப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது சிவபெருமானுக்கே ஒரு கம்பீரமும் உக்கிரமும் வந்துவிடுகிறது. வெர்சடைலான நடிப்பில் அசத்தும் சிவாஜிசாருக்கு நவரச நடிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது இந்தப்படத்தில். தருமியில் காமெடி, தாட்சாயிணியிடம் ரஜினிஸ்டைல் ‘’பொம்பளை பொம்பளையா இருக்கணும்’’ ஆண்மைத்திமிர், நக்கீரரிடம் கோபம், மீனவ பெண்ணிடம் ரொமான்ஸ்,ருத்ர தாண்டவ டான்ஸ், பார்த்தா பசுமரம் என குத்துப்பாட்டுக்கு லோக்கல் டான்ஸ், திமிங்கலத்தோடு வீரம் என கலவையான நடிப்பு.. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். பாட்டும் நானே பாடலிலும் அதற்கு முந்தையா பிந்தைய காட்சிகளிலும் சிவாஜிசாரின் நடிப்பை பாராட்ட எனக்கு வயது பத்தாது! படத்தின் வசனகர்த்தா மாபெரும் தமிழ் இலக்கிய பேராசிரியாக இருக்கவேண்டும். எல்லாமே கிளாசிக். இன்றைக்கும் தமிழகத்தின் எங்காவது மூலையில் யார்வாயிலாவது இப்படத்தின் வசனங்கள் உச்சரிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. சிவபெருமானுக்கான டயலாக்குகள் எல்லாமே டாப்டக்கர். அன்றைக்கு இருந்த தொழில்நுட்பங்களையும் கிராபிக்ஸ் உத்திகளையும் பயன்படுத்தி எடுத்திருந்தாலும் இறுதியில் சிவாஜி,நாகேஷ்,சாவித்திரி,பாலையா.டிஆர் மகாலிங்கம் மாதிரியான மாபெரும் நடிகர்களின் நடிப்புக்கு முன்னால் சுமாரான கிராபிக்ஸோ, வரைந்து வைத்திருக்கும் அரங்க அமைப்புகளோ ஒரு குறையாகவே தெரியவில்லை. கேவி மகாதேவனின் இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஏற்கனவே சொன்னதுபோல அவருடைய இசைதான் இரண்டாம் பாதி முழுக்க படத்தை காப்பாற்றுகிறது. என்னதான் பக்திப்படமாகவே இருந்தாலும், காமெடி,சென்டிமென்ட்,ஆக்சன்,ரொமான்ஸ்,கவர்ச்சி என எல்லாமே கலந்த கலவையாக ஒரு நல்ல மசாலா படம் பார்த்த திருப்தியை தருகிறது திருவிளையாடல். டிவியில் பார்க்கும்போது கிடைக்காத ஒரு உற்சாகமும் மனநிறைவும் தியேட்டரில் பார்க்கும் போது தொற்றிக்கொள்கிறது. நீங்கள் நாத்திகரோ ஆத்திகரோ சிவபெருமான் மேல் நம்பிக்கையிருக்கோ இல்லையோ, சிவாஜி ரசிகரோ இல்லையோ.. நிச்சயம் இப்படம் உங்களை மகிழ்விக்கும் என்பது மட்டும் நிச்சயம். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் தியேட்டரில் பாருங்க! திருவிளையாடல் - புராணப் படங்களில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்த படம். zztzKqHb66c&feature=fvsr[/youtube
 11. திருவிளையாடல் - புராணப் படங்களில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்த படம். zztzKqHb66c&feature=fvsr "புராணப் படமா? ஏ.பி.நாகராஜன் தான் செய்யணும்" என்ற அளவுக்கு அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கித் தந்த படம். 1965-ஆம் ஆண்டு வெளிவந்த பிராந்திய மொழிப் படங்களில் தமிழில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசின் சிறப்பு விருதினைப் பெற்ற படம். அதற்கு முன்பும் கூட புராணப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் புதிய தலைமுறைக்கு ஏற்றபடி புதிய பாணியில் திரைக்கதை அமைத்து இயக்கி இருந்தார் ஏ.பி. நாகராஜன் அவர்கள். நடிகர் திலகத்தின் அபாரமான நடிப்பாற்றல் - நுணுக்கமான அசைவுகளைக் கூட துல்லியமாக அவர் வெளிப்படுத்தி நடித்த விதம் - சிவனாக வரும் காட்சிகளில் புருவத்தைக் கூட அசைக்காமல் நடித்த பாங்கு-அனைவரையும் பிரமிக்க வைத்தது. அதுவரை சமூகப் படங்களில் மட்டுமே கையாளப்பட்டு வந்த "பிளாஷ்-பாக்" உத்தியைக் கையாண்டு கதை பின்னப்பட்ட முதல் படம் திருவிளையாடல் தான். ஞானப் பழத்துக்காக கோபித்துப் பிரிந்து சென்று தனியாக இருக்கும் முருகனின் சினத்தைத் தணிப்பதற்காக பராசக்தி பரமனின் திருவிளையாடல்களில் சிலவற்றைக் கூறுவதாக கதை அமைத்திருந்தார் ஏ.பி.நாகராஜன். அதன்பிறகு வெளிவந்த புராணப்படங்கள், பக்திப் படங்கள் எல்லாமே இந்தப் பாணியிலேயே வர ஆரம்பித்தன என்பது கவனத்துக்குரிய விஷயம். இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் அமைத்த இசை . அதுவரை அவர் அமைத்த படங்களின் இசையையும் பாடல்களையும் எல்லாம் தூக்கி அடித்தது. பொதுவாக நடிகர் திலகத்திடம் ஒரு தனித்தன்மை உண்டு. அவர் நடிக்கும் படம் எதுவோ அது வெளிவந்த பிறகு அதில் வேறு எத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விஞ்சி அவரது நடிப்பு மட்டுமே பெரிதாகப் பேசப்படும். அதுதான் முன்னணியில் நிற்கும். ஆனால் திருவிளையாடல் படம் ஒரு விதிவிலக்கு. நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாக படத்தில் பேசப்பட்ட விஷயங்கள் நாகேஷின் நகைச்சுவை நடிப்பும். படத்தின் பாடல்களும். இன்றளவும் நாகேஷ் காமெடி என்று எடுத்துக்கொண்டால் முதலிடம் பெறுவது திருவிளையாடல் தருமி தானே? அதே போல படத்தின் இசையும் மிகப் பிரமாண்டமாகப் பேசப்பட்டது. "அய்யரின் இசையின் மகத்துவத்தை முழுமையாக உணர்த்திய படம்" என்று கே.வி. மகாதேவனின் உற்ற துணையாக இருந்த உதவியாளர் டி. கே. புகழேந்தி பெருமையாகக் குறிப்பிடுவார். அந்த அளவுக்கு இசையின் ஆக்கிரமிப்பு அதுவும் நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாகப் பேசப்படும் அளவுக்கு இருந்தது.
 12. ஏ.பி.நாகராஜன் அவர்கள் கதை, வசனம் எழுதியும் இயக்கி வெளிவந்த திருவிளையாடல் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ், முத்துராமன், பாலையா, டி.ஆர். மகாலிங்கம், கே.பி. சுந்தாரம்பாள், மாஸ்டர் பிரபாகரன், மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சிவாஜி, சாவித்திரி நடித்த ‘திருவிளையாடல்’ படம் 1965-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. செண்பகபாண்டியனாக முத்துராமன், புலவர் தருமியாக நாகேஷ். மனோரமா அவ்வையாராக, கே.பி.சுந்தராம்பாள், ஹேமநாத பாகவதராக டி.எஸ்.பாலையா, பானபட்டராக டி.ஆர். மகாலிங்கம் ஆகியோரும் நடித்து இருந்தனர். ஏ.பி. நாகராஜன் டைரக்டு செய்து இருந்தார். zztzKqHb66c&feature=watch-now-button&wide=1 “கடைசிக் குடிமகனிலிருந்து உலககைக் காக்கும் ஈசன் குடும்பம் வரை பெண்ணாகப் பிறப்பது பெரும் தவறு என்பது நன்றாகப் புரிந்துவிட்டது” – இப்படிச் சொன்னவர் பரமசிவனின் மனைவி பார்வதி. அவரை இப்படி பேச வைத்தவர் ஏ.பி.நாகராஜன். “ஒருத்தி என் தலையிலே ஏறி உட்கார்ந்துக்கிட்டு இறங்கமாட்டேங்குறா.. இன்னொருத்தி என் உடம்புல பாதியை எடுத்துக்கிட்டு பிராணனை வாங்குறா” என்று இருதார மணவாளரான பரமசிவனை புலம்பவைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான். இரண்டும் திருவிளையாடல் படத்தில் அவர் எழுதிய வசனங்கள். கொங்கு மண்டலத்தில் வளமான நிலவுடைமையாளர் குடும்பத்தில் 1928 பிப்ரவரி 24ந் தேதி பிறந்தவர் அக்கம்மாபேட்டை பரமசிவன் நாகராஜன் (ஏ.பி.நாகராஜன்). அவருக்கு வைக்கப்பட்ட பெயர், குப்புசாமி. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த அவரை பாட்டி மாணிக்கம்மாள்தான் வளர்த்தார். அதனால் சின்ன வயதிலேயே புராண-இதிகாசக் கதைகளை கேட்டு வளரும் வாய்ப்பு அமைந்தது. அது அவரைக் கவர்ந்தது. அவ்வை டி.கே.சண்முகம் நாடகக்குழுவில் சேர்ந்தார். அங்கே நிறைய குப்புசாமிகள் இருந்ததால், அவரது பெயர் நாகராஜன் என மாற்றப்பட்டது. குடும்பத்தினரைப் பிரிந்து ஊர் ஊராகச் சென்று நாடகங்களில் நடித்தார் நாகராஜன். ஸ்த்ரீபார்ட் எனப்படும் பெண் வேடங்களில் நடித்தார். சக்தி நாடகசபாவில் அவர் சேர்ந்தபோது நடிகர்திலகம் சிவாஜிகணேசன், காகா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் நண்பரானார்கள். பின்னர், பழனி கதிரவன் நாடக சபா என்ற சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து நாடகங்களை அரங்கேற்றியதுடன் ராணி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் நாகராஜன். அவர் எழுதி அரங்கேற்றிய ‘நால்வர்’ என்ற நாடகம் 1953ல் திரைப்படமானது. அவரே திரைக்கதை எழுதியதுடன், கதாநாயகனாகவும் நடித்தார். படம் வெளியானபின் அவரை ஒரு பத்திரிகை பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் தன் அப்பா பற்றியும் சொந்த ஊரான அக்கம்மாபேட்டை பற்றியும் தெரிவித்திருந்ததைப் படித்த அவரது சொந்தபந்தங்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை அடையாளம் கண்டு, நேரில் சந்தித்தனர். மாங்கல்யம், நல்லதங்காள் உள்ளிட்ட படங்களிலும் ஏ.பி.நாகராஜன் நடித்துவந்தார். எனினும், நடிப்பைவிட படைப்பில்தான் அவருக்குத் தீவிர ஆர்வம் இருந்தது. மேடை நாடகத் தமிழில் திரைப்பட வசனங்கள் அமைந்திருந்த காலத்தில், கொங்கு வட்டார வழக்கில் ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் வசனம் எழுதினார் ஏ.பி.என். ‘நான் பெற்ற செல்வம்’ படத்திலும் அவரது படைப்பாற்றல் வெளிப்பட்டது. தமிழில் வெளியான மிக நீளமான படங்களில் ஒன்று, ‘சம்பூர்ண ராமாயணம்’. 1958ல் வெளியான இப்படத்திற்கு, திரைக்கதை-வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். ராமராக என்.டி.ராமராவும், பரதனாக சிவாஜியும், ராவணனாக டி.கே.பகவதியும் நடித்த படம் இது. ராமன்தான் கதாநாயகன் என்றாலும் ராவணனின் பெருமைகளைச் சொல்ல ஏ.பி.என் தவறவில்லை. அவன் திறமையான மன்னன் மட்டுமல்ல, சிறந்த வீணைக் கலைஞன் என்பதையும் அவனது அவையில் ராகங்களைப் பற்றி அலசும் அருமையான பாடல் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக, ராவணனுக்கு 10 தலைகளை ஒட்டவைத்து அரக்கனாகக் காட்டாமல், நம்மைப்போல ஒற்றைத்தலையுடன் ‘சம்பூர்ண ராமாயணத்தில்’ உலவவிட்டிருந்தனர். இந்தப் படம் பெற்ற வெற்றியும், அதற்கு மூதறிஞர் ராஜாஜி அளித்த பாராட்டும் ஏ.பி.நாகராஜனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து சொந்தமாகப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான முதல் படம், ‘வடிவுக்கு வளைகாப்பு’ (1962) ஏ.பி.நாகராஜன் என்ற இயக்குநரைப் பார்த்து தமிழ்த்திரையுலகமும் ரசிகர்களும் முதன் முதலாக வியந்தது, ‘நவராத்திரி’ படத்தில்தான் (1964). ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த அப்படம் பெரும் வெற்றி பெற்றது. 1965ல் ‘திருவிளையாடல்’ படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. பரமசிவன், பார்வதி, முருகன், பிள்ளையார், நாரதர், அவ்வையார், நக்கீரர் என அனைத்து கதாபாத்திரங்களின் நாவிலும் அழகுத் தமிழ் விளையாடியது. ஒரு புராணப் படத்தில் அமைந்த நகைச்சுவை காட்சி, இன்றைய தலைமுறையையும் சிரிக்க வைக்கிறது என்றால் அது திருவிளையாடல் படத்தில், தருமி வேடத்தில் நடித்த நாகேஷின் அற்புதமான உடல்மொழியுடன் கூடிய நகைச்சுவை காட்சிதான். கடவுளான பரமசிவனையே கலாய்த்துத் தள்ளியிருப்பார் தருமி. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்த்திரையில் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி வந்தகாலத்தில் அதற்கு நேர்எதிராக புராணப் பாத்திரங்கள் மூலம் ‘தெய்வ’ங்களைத் தமிழ்ப பேச வைத்தவர் ஏ.பி.நாகராஜன். அவர், திராவிட இயக்கத்திற்கு எதிராக சிலம்புச்செல்வர் ம.பொ.சி. தொடங்கிய தமிழரசுக் கழகத்தில் இணைந்திருந்தார். அதனால், அவருடைய படைப்புகளிலும் அது வெளிப்பட்டது. தி.மு.கவில் மு.கருணாநிதியை கலைஞர் என்று அழைத்ததுபோல தமிழரசு கழகத்தில் ஏ.பி.நாகராஜனை ‘கலைஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தனர். அங்கே ‘கவிஞர்’ கண்ணதாசன், இங்கே ‘கவிஞர்’ கா.மு.ஷெரீப். இரண்டு இயக்கத்திற்குமான போட்டியில், திரையில் செம்மையாக ஒளிர்ந்தது, தமிழ். திருவிளையாடலைத் தொடர்ந்து, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமலை தென்குமரி, அகத்தியர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புராண படங்களை எடுத்தார் ஏ.பி.நாகராஜன். எல்லாவற்றிலும் அவருடைய தமிழ் விளையாடியது. அவருடைய மிகச்சிறந்த படைப்புகளின் வரிசையில் முதல் இடம் பிடிப்பது, ‘தில்லானா மோகனாம்பாள்’. இது புராணமல்ல, புதினம். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையைத் திரைக்கு ஏற்றபடி நாகராஜன் வடிவமைக்க, நாதசுர கலைஞர் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜியும், பரதநாட்டிய கலைஞர் திருவாரூர் மோகனாம்பாளாக பத்மினியும் வாழ்ந்து காட்டியிருந்த படம் அது. கலைஞர்களின் வாழ்வை மிகச் சிறப்பான காட்சியமைப்புகள் மூலமாக வெளிப்படுத்திய தில்லானா மோகனாம்பாள் படத்தில் பாலையா, மனோரமா, நாகேஷ் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் தங்கள் பங்கினைத் திறம்பட வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர். சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதையும் தில்லானா மோகனாம்பாள் பெற்றது. பிற்காலச் சோழ மன்னர்களில் பெரும்புகழ் பெற்றவரான முதலாம் ராஜராஜனின் வரலாற்றை, தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘ராஜராஜசோழன்’ என்ற பெயரில் இயக்கியவரும் ஏ.பி.நாகராஜன்தான். குருதட்சணை, வா ராஜா வா, குமாஸ்தாவின் மகள், மேல்நாட்டு மருமகள் போன்ற படங்களையும் இயக்கினார். நடிகர் திலகம் சிவாஜியை வைத்து பலப்பல படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை இயக்கிய ஒரே படம், ‘நவரத்தினம்’ அதுவே ஏ.பி.என்னின் கடைசிப்படமாகவும் அமைந்தது. 1977ல் அவர் காலமானார். இன்றும் கோவில் திருவிழாக்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஒ(லி)ளிபரப்பாகும் திருவிளையாடல் படத்தின் வசனங்களில் உரக்க ஒலிக்கும் தமிழில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஏ.பி.நாகராஜன். சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி இப்படம் தயாரானது,. சிவன் கேரக்டரில் சிவாஜி வந்தார். பார்வதி கேரக்டரில் சாவித்திரி நடித்தார். இப்படத்தில் புலவர் தருமியாக வரும் நாகேஷின் காமெடி வேடம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. புலவர் நக்கீரன் வேடத்தில் இயக்குனர் ஏ.பி.நாகராஜனே நடித்து இருந்தார். பிரமாண்ட அரங்குகள் அமைத்து மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்து இருந்தனர். இதில் இடம்பெற்ற ‘பழம் நீயப்பா ஞானபழம் நீயப்பா’, ‘இன்றொரு நாள் போதுமா’, ‘இசை தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘பார்த்தால் பசு மரம் படுத்துவிட்டால் நெடு மரம்’, ‘பாட்டும் நானே பாவமும் நானே’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின. திருவிளையாடல் படமும் சரி சிவாஜியின் பரிமாணமும் சரி இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.அந்தக் காலத்தில் திரை அரங்குகளை கலக்கி,பின்னாளில் திருவிழாக் காலங்களில் (தெருவோரத்தில் திரை கட்டுவார்களே) தெருவோரங்கங்களையும் கலக்கி எடுத்தப்படம்.பெரும்பாலான கோவில் திருவிழாக்களில் திருவிளையாடல் படம் போடும் நாளும் திருவிழாவாக கொண்டாடப்படும். என் சிறுவயது பருவத்தில் எனது கிராமத்தில் இதை நான் அனுபவித்திருக்கின்றேன்.என்னுள் என் ரத்தத்தில் ஊறிப்போன ஒருசிலப் படங்களில் திருவிளையாடலும் ஒன்று.அந்த பாதிப்புதான் இந்த உயிரோவியத்தை உருவாக்கவைத்தது. அந்தக்காலத்தில் பானப்பத்திரர் நேராக பாட்டுப்பாட வந்தார்..விறகு விற்பவன் (சிவன்) பாடலைக் கேட்டார்..பயந்து ஓடினார்..இப்போதான் காலம் மாறிப்போச்சே..நவீன டிஜிட்டல் காலமாச்சே..அதான் தொலைக்காட்சியில் சிவன் பாடலைக் கேட்டே பானப்பத்திரரை ஆட வைத்திருக்கிறேன்..ஹீ..ஹீ.. ( கலைஞர் "முரசு" தொலைகாட்சிக்காக..நான் உருவாக்கிய உயிரோவியம்)
 13. நவீன தொழில் நுட்பத்தில் திரு விளையாடல் 1965 ஆம் ஆண்டில் வெளி வந்து மக்கள் மனதில் நீங்க இடம் பெற்ற‘திருவிளையாடல்’ படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது புது ப்பிக்கப்பட்டு உள்ளது. கலரையும் மெரு கூட்டியுள்ளனர்.
 14. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து தமிழக அரசியல் கட்சிகள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளன. கருணாநிதி, தலைவர், தி.மு.க வெற்றி பெற்றவரும், தோல்வி அடைந்தவரும் கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்களுக்கு யார் பொறுப்பு என்பதை எண்ணிப் பார்த்து இனிமேலாவது திருத்திக் கொள்ள வேண்டும். போர்க் குற்றங்களுக்காக ராஜபக்சவை விசாரிக்க வேண்டும் என்பது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே வலியுறுத்தியது அப்படியே இருக்கிறது. பழ.நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய முன்னணி இலங்கைத் தேர்தலில் ராஜபக்ச அடைந்துள்ள படுதோல்வி வரவேற்கத்தக்கது. ஆனாலும், இது தமிழர்களுக்கு முழுமையான மகிழ்ச்சியளிப்பது ஆகாது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல், போர்க்குற்றம் ஆகியவற்றை விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைத்த விசாரணைக் குழுவை தனது நாட்டுக்குள் அனுமதித்து சுதந்திரமாக விசாரணை நடத்த புதிய அதிபர் துணை நிற்க வேண்டும். தமிழர் பகுதியிலிருந்து சிங்கள ராணுவத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். விஜயகாந்த், தலைவர், தேமுதிக ராஜபக்ச படுதோல்வி அடைந்துள்ளார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த உலகத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டனை அடைந்துதான் ஆக வேண்டும். சிறிசேனா தலைமையிலான புதிய அரசு, அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளை வழங்கி, தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே குடியமர்த்தி அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும். ராமதாஸ், நிறுவனர், பாமக ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான ராஜபக்ச இலங்கை மக்களால் தண்டிக்கப்பட்டு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ராஜபக்சவை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று சிறிசேனா வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது வடகிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகள்தான் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சூழலில், தமிழர்களுக்கு நீதியையும், உரிமைகளையும் பெற்றுத்தருவது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமுதாயத்தின் கடமையாகும். டி.ராஜா, தேசிய செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் சிறிசேனா வெற்றிப் பெற்றார் என்பதை விட ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் முக்கியம். ராஜபக்ச தோற்கடிக்க முடியாதவர் என்று உருவாக்கப்பட்ட பிம்பம் உடைந்து விட்டது. ராஜபக்சவின் சர்வாதிகாரப் போக்கை, குடும்ப அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர். புதிய அதிபர் உறுதியளித்தபடி ஜனநாயகத்தை நிலைநாட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதன் பிறகாவது தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு உரக்க குரல் கொடுக்க வேண்டும். ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை நடத்தப்படவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் நடைபெற்ற இலங்கைத் தேர்தலில் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு சிறிசேனா வெற்றிப்பெற்றது வரவேற்கத்தக்கது. இந்த வெற்றி தமிழர்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தம் கூறியது போல, சிறிசேனா உறுதியளித்தபடி, ஜனாதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கூடுதலாக்கினால், தமிழர்களின் பிரச்னைகளை பேசுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ஜி.கே.வாசன், தலைவர், தமாகா (மூ) இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் தோல்வி ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி. தமிழர்களின் நியாயமான எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கும் ஆட்சியாளர்கள் அனைத்து நல்ல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சிங்கள மக்களுக்குரிய உரிமைகள் அனைத்தும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். கி.வீரமணி, தலைவர், தி.க. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சிறிசேனா, ராஜபக்சவை விட 5 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். இந்த 5 சதவீத கூடுதல் வாக்குகள் தமிழர்களாலும், இஸ்லாமிய சகோதரர்களாலும்தான் கிடைத்தது என்பதை மனதில் கொண்டு சிறிசேனா செயல்பட வேண்டும். தமிழருவி மணியன், நிறுவனர், காந்திய மக்கள் கட்சி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறிசேனா, எந்தவகையிலும் ஈழத் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வை உருவாக்குவார் என்பதற்கான மிகச்சிறிய சமிஞ்கைகள் கூட இல்லை. எனவே, ராஜபக்சவின் வீழ்ச்சி நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும், சிறிசேனாவின் வெற்றி ஈழத் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வை உருவாக்கித் தருமா என்பதை காலம்தான் வெளிப்படுத்த வேண்டும். தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இனவெறியை வைத்து அரசியல் நடத்த முனையும் எல்லோருக்கும் இந்த தேர்தல் முடிவு ஒரு பாடமாகும். தற்போது மைத்ரிபால அதிபராக வெற்றி பெற்றிருப்பது தமிழ்மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதோ நம்பிக்கை அளிக்கக்கூடியதோ அல்ல. எனினும் முதல்கட்டமாக ஜனநாயக வழியில் ராஜபக்சவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற ஆறுதல் கிடைத்துள்ளது. தமிழிசை சவுந்திரராஜன், பாஜக மாநிலத் தலைவர் யாராக இருந்தாலும் சட்டத்துக்குப் புறம்பாக கொடுங்கோல் ஆட்சி புரிந்தாலோ, ஓர் இனத்தை பழிவாங்கினாலோ அவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள் என்பதை வரலாறு மீண்டும் நிரூபித்திருக்கிறது. மேலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் இலங்கைத் தேர்தலில் ராஜபட்சவுக்கு கிடைத்த தோல்வியை வரவேற்றுள்ளனர்.
 15. மரணபயம் உயிர் பிச்சை கேட்க்கும் மகிந்த ராஜபக்சே இன்னும் வெறி அடங்கவில்லை, அந்தப் படுபாதகனுக்கு. ""இந்தியவம்சாவளி மலையகத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு ஈழத் தமிழர்கள்தான் என் தோல்விக்குக் காரணம்'' என பழிவாங்கத் தயாராகும் ஒரு காட்டு விலங்கைப் போல, "சிங்கள மக்கள் என் பக்கம்தான்' என மார்தட்டியிருக்கிறார், மகிந்த ராஜபக்சே. அரசுத்தலைவருக்கான ’அலறி’ மாளிகையிலிருந்து வெளியேறி, அம்பந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான மெலமுதனவில் போய், இப்படி திருவாய்மலர்ந்து இருக்கிறார், இனப்படுகொலையாளனும் மாபாதகனுமான அந்த மனிதப் பிறவி! ஆட்சியதிகாரம் எல்லாவற்றையும் மக்கள் ராஜபக்சே குடும்பத்திடமிருந்து பறித்து, இன்னொருவரிடம் கொடுத்துவிட்டார்களே? பெரிய மாற்றம் வந்ததாகச் சொன்னார்களே? ராஜபக்சே குடும்பமே நாட்டைவிட்டு ஓடிப்போய் விட்டது என்றார்களே? எப்படி இப்படி பழைய கோதாவில் பேசமுடிகிறது? என்னதான் நடக்கிறது, இலங்கைத் தீவில்? ராஜபக்சே குடும்பமோ அதைச் சுற்றியிருந்த கூட்டமோ நாட்டைவிட்டு ஓடிவிடவில்லை. இனப்படுகொலையை வழிநடத்தி உத்தரவுகளை இட்ட மகிந்தவின் தம்பி கோத்தபாய ராஜபக்சே, கடந்த ஞாயிறுவரை, அரசாங்க வீட்டை காலிசெய்யவில்லை. ரகசியமாக தப்பிவிட்டதாகச் சொல்லப்படும், குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யும் இலங்கையைவிட்டு தான் வெளியே செல்லவில்லை என அறிக்கைவிட்டிருக்கிறார். இதற்கு நேர்மாறாக, ராஜபக்சே கூட்டத்தால் ராணுவத்தை விட்டு நீக்கப்பட்டு, வெளிநாட்டுக்கு விரட்டப்பட்ட முன்னாள் தலைமைத் தளபதி பொன்சேகாவுக்கு நெருக்கமான முன்னாள் தளபதிகள், நாடு திரும்பியிருக்கிறார்கள். மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டி வலன ஆகிய இருவருமே, சனியன்று கொழும்பு வந்தடைந்த அந்த அதிகாரிகள். இவர்களுடன் பொன் சேகாவுக்கு வேண்டப்பட்ட மேலும் சில ராணுவ அதிகாரிகளும் இலங் கைக்குத் திரும்பவுள்ளனர். இவர்களெல்லாம் 2010 அதிபர் தேர்தலில் பொன்சேகா தோற்றதையடுத்து, பதவிப் பறிக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டதால், வெளி நாடுகளுக்குச் சென்று வசித்துவந்தனர். இப்போது அதிபராகியிருக்கும் மைத்திரிக்கு ஆதரவாக தேர் தல் பணியாற்றிய பொன்சேகா வின் ஆசியால், இவர்களுக்கு மீண்டும் ராணுவப் பதவிகள் அளிக்கப்படும் என்ற தகவலை நடப்பு நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இத்துடன், மகிந்த அரசாங்கத்தின் கொலைவெறித் தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, வெளிநாடுகளுக்குச் சென்ற பத்திரிகையாளர்கள், மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் இலங்கைக்குத் திரும்ப புதிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மைத்திரியின் சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன, 10ஆம் தேதியன்று கொழும்புவில் செய்தியாளர்களைக் கூட்டி அறிவித்தார்.
 16. ராஜபக்ஷே கதறல் கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் நான் தோல்வி அடைந்ததற்கு என் சகோதரர்களும், மகன்களும் தான் காரணம். அவர்களால் எனது 45 ஆண்டு அரசியல் வாழ்க்கை அழிந்து விட்டது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே தனக்கு நெருக்கமானவர்களிடம் கண்ணீர் விட்டு அழுது, புலம்பி வருகிறார்.. இலங்கை அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெற்று 3வது முறையாக அதிபராக போவதாக உறுதியாக நம்பி இருந்த ராஜபக்ஷே சிறிதும் எதிர்பாராத விதமாக, பொது வேட்பாளர் சிறிசேனாவிடம் படுதோல்வி அடைந்தார். இந்த பலத்த அடியை தாக்க முடியாத ராஜபக்ஷே, தோல்வியை தாங்க முடியாமல் கடும் விரக்தியில் இருந்து வருகிறார். தோல்வி துயரம் வாட்டி எடுத்து வரும் நிலையில், அவர் மீதும், அவரது ஆட்சி மீதும் கூறப்பட்டு வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள், ராஜபக்ஷேவை நிலைகுலைய வைத்துள்ளன. பதவி இழந்து, தனது சொந்த ஊரில் இருந்து வரும் ராஜபக்ஷே, தனது சகோதரர் கோத்தபாயவை போனில் தொடர்ந்து கொண்டு பேசி உள்ளார். அப்போது, என்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். எங்கும் வெளியேற முடியவில்லை என, குமுறலை கொட்டித் தீர்த்தார். இந்த உரையாடல் சிறிது நேரத்திலேயே வாக்குவாதமாக மாறியது. ஆத்திரமடைந்த ராஜபக்ஷே, என்னை வீழ்த்தியது தமிழர்களோ, முஸ்லீம்களோ இல்லை. நீயும், எனது மகன்களும் தான் .என் அரசியல் வாழ்க்கையை அழித்தது,' என கத்தினார். மேலும், 'என்னுடைய 45 வருட அரசியல் வாழ்க்கை என் சகோதரர்களாலும், என் 3 மகன்களின் நடத்தையாலும் தான் அழிந்து விட்டது. எனக்கு வாய்ந்த சகோதரர்களும் அப்படி...மகன்களும் அப்படி...நான் என்ன செய்வேன்? என தனது நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த நெருக்கடியில் ராஜபக்ஷேவின் அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளது அவரை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
 17. இலங்கை தேர்தலில் தோல்வி: அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய மகிந்த ராஜபக்சே கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்ததால் மகிந்த ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிவிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால ஸ்ரீசேனா வெற்றி முகத்தில் இருப்பதால் உலகத்தமிழர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.இலங்கை அதிபர் தேர்தல் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட வன்முறையை தவிர அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது.சுமார் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்களில் 67 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளைப் பதிவு செய்தனர்.தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில், அதிக அளவு வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு மையம் திறந்தவுடனேயே நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித் தனர்.யாழ்ப்பாணத்தில் 61.15 சதவீத வாக்குகளும், மாத்தறை - 76, அம்பாந்தோட்டை 70, நுவரேலியா 80, புத்தளம் 78, பொலனறுவ 75, கோலை 70, கம்பஹா 65, காலி 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 18. இலங்கை தேர்தலில் தோல்வி: அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய மகிந்த ராஜபக்சே கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்ததால் மகிந்த ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிவிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால ஸ்ரீசேனா வெற்றி முகத்தில் இருப்பதால் உலகத்தமிழர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.இலங்கை அதிபர் தேர்தல் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட வன்முறையை தவிர அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது.சுமார் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்களில் 67 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளைப் பதிவு செய்தனர்.தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில், அதிக அளவு வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு மையம் திறந்தவுடனேயே நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித் தனர்.யாழ்ப்பாணத்தில் 61.15 சதவீத வாக்குகளும், மாத்தறை - 76, அம்பாந்தோட்டை 70, நுவரேலியா 80, புத்தளம் 78, பொலனறுவ 75, கோலை 70, கம்பஹா 65, காலி 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 19. விதிகளை மீறி, கோர்ட்டை மிரட்டி முன்கூட்டியே 3வது முறை போட்டியிட்டு முழுகிப் போன ராஜபக்சே! கொழும்பு: இலங்கை அதிபர் பதவிக்கு ஒருவர் தொடர்ந்து 2 தடவைக்கு மேல் போட்டியிட முடியாது என்று அந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் அதை மீறி தேர்தலில் போட்டியிட்டவர் ராஜபக்சே. இதற்காக இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியையும் ராஜபக்சே தரப்பு மிரட்டி தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூற வைத்ததாகவும் அப்போது சர்ச்சை எழுந்தது. மேலும் 2வது முறை செய்தது போல, 3வது முறையாகவும், முன்கூட்டியிட்டார் ராஜபக்சே. எல்லாம் செய்தும் கூட படு தோல்வியைத் தழுவியுள்ளார்.2005ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முதல் முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சில மாதங்களிலேயே தமிழர் பகுதிகளைக் குறி வைத்து தனது தாக்குதலை ஆரம்பித்தார் ராஜபக்சே பன்னாட்டு துணையுடன், விடுதலைப் புலிகளை அடக்கினார். தமிழர் பகுதிகளில் லட்சக்கணக்கானோர் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இந்தப் படுகொலையை உலகமே அமைதியாக வேடிக்கை தான் பார்த்தது.அதன் பின்னர் இந்த வெற்றியைக் காரணமாக வைத்து அதில் குளிர் காய நினைத்து பதவி முடிய ஒரு வருடம் இருந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்தினார் ராஜபக்சே 2010ம் ஆண்டு நடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தனது தளபதியாக செயல்பட்டவரான சரத் பொன்சேகாவே எதிர்த்துப் போட்டியிட்டார். இருப்பினும் அப்போது சிங்களர்களின் ஆதரவு ராஜபக்சேவுக்கு முழுமையாக இருந்ததாலும், பொன்சேகாவை துரோகி போல சித்தரித்ததாலும் ராஜபக்சே வென்றார்.இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் இந்த சட்டத்தை மீற முடிவு செய்தார் ராஜபக்சே. அதன்படி டெக்னிக்கலாக ஏமாற்றும் வகையில் முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார். அதாவது பதவியை முழுமையாக முடிக்காமல், 2 ஆண்டு பதவிக்காலம் இருந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்தினார் அவர்.இதை எதிர்த்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதியையே ராஜபக்சே கும்பல் மிரட்டியதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. இதனால் ராஜபக்சே மீண்டும் போட்டியிடலாம் என்று சுப்ரீ்ம் கோர்ட் கூறி விட்டது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட்டார் ராஜபக்சே.ஆனாலும் அவர் போட்ட திட்டங்களையெல்லாம் தமிழர்கள் தங்களது வாக்குகளால் தவிடுபொடியாக்கி விட்டனர். ராஜபக்சேவுக்கு எதிராக மைத்ரிபாலாவுக்கு ஆதரவாக சிங்களர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களும் திரண்டதே ராஜபக்சேவின் கதையை முடிக்க முக்கியக் காரணமாகி விட்டது.
 20. விடுதலைப் புலிகளின் தலைநகரில் ராஜபக்சேவை வெளுத்து வாங்கிய தமிழர்கள்! கிளிநொச்சி: விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கி வந்த கிளிநொச்சியில் ராஜபக்சேவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் தமிழர்கள். அங்கு அவருக்கு வெறும் 24 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.தமிழர் நகரமான கிளிநொச்சி வடக்கில் உள்ளது. முக்கியமான தமிழர் பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சிதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகத் தலைநகராக ஒரு காலத்தில் கோலோச்சி வந்தது. இன்று அந்த மாவட்டத்தில் தமிழர்கள் ஒன்று கூடி ராஜக்சேவை இழுத்து தெருவில் தள்ளியுள்ளனர்.இந்த டிவிஷனில் மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு 72.1 சதவீத வாக்குகளைத் தமிழர்கள் கொடுத்துள்ளனர். அதாவது 38,856 வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.அதேசமயம், ராஜபக்சேவுக்கு இங்கு வெறும் 13,300 வாக்குகளே கிடைத்துள்ளன. அதாவது 24.7 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.
 21. தன்னைத் தானே படு குழியில் தள்ளிக் கொண்ட சர்வாதிகாரி ராஜபக்சே! கொழும்பு: அதிபர் பதவியிலிருந்து மக்களால் விரட்டி அடிக்கப்பட்டுள்ள ராஜபக்சே, தனது கதையை தானே முடித்துக் கொண்டுள்ளார்.இலங்கை அதிபர் தேர்தலை 2 ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி தன்னைத் தானே படுகுழியில் தள்ளி விட்டு தனது கதையே தானே முடித்துக் கொண்டுள்ளார். தனக்கு எதிராக தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சிங்களர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி நிலவி வந்ததைப் பார்த்து 2 ஆண்டுகள் பதவிக்காலம் இன்னும் இருந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார் ராஜபக்சே.எப்படியாவது ஜெயித்து விட வேண்டு்ம் என்ற வைராக்கியத்துடன் இருந்து வந்த அவருக்கு மைத்ரிபால ஸ்ரீசேன மூலம் பெரும் சவால் உண்டானது. ஆனால் தமிழர்களின் வாக்குகளை வைத்து எப்படியாவது ஜெயித்து விடலாம் என்ற நப்பாசையுடன் இருந்தார் ராஜபக்சே. ஆனால் அதில் மண் விழுந்து விட்டது.தமிழர்கள் முற்றாக ராஜபக்சேவை புறக்கணித்து விட்டனர். வரலாறு காணாத அளவுக்கு தமிழர் பகுதிகளுக்கு நேரில் போய் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கெஞ்சி வாக்குகள் கேட்டார். ஆனாலும் ராஜபக்சேவை தமிழர்கள் ஏற்கவில்லை.தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று கூறி லட்சக்கணக்கான தமிழ் மக்களை கூண்டோடு கொன்று குவித்த கையோடு இலங்கையின் காவலராக தன்னைக் காட்டிக் கொண்டவர் ராஜபக்சே. ஆனால் தமிழர்களை அழித்த கையோடு சிங்களர்களையும் அவர் பதம் பார்த்து விட்டார். தன்னை எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும், அவன் சிங்களவனாகவே இருந்தாலும் உயிரோடு விட மாட்டேன் என்பது போல அவரது நடவடிக்கைகள் அமைந்ததைப் பார்த்து சிங்களர்களே அதிர்ந்து போனார்கள்.ராஜபக்சே 2 முறை அதிபர் பதவியில் இருந்தார். இந்த இரண்டு ஆட்சிக்காலத்திலும், தமிழர்களைப் போலவே சிங்களர்களும் ராஜபக்சே கும்பலின் கொலை வெறியாட்டத்தில் சிக்கித் தவித்தனர். எதிர்த்தவர்களை எல்லாம் வெள்ளை வேனில் ஏற்றிச் சென்று விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்தது ராஜபக்சே கும்பல்.குறிப்பாக முக்கியமான சில சிங்களப் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர். பலர் காணாமல் போயினர். பலர் தாக்குதலுக்குள்ளாகினர்.தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையுமே இந்த ராஜபக்சே நிறைவேற்றவில்லை. மேலும் தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்ட ராணுவத்தையும் திரும்பப் பெறவில்லை. மாறாக ராணுவத்தினரின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழர்கள் வாழும் நிலை ஏற்பட்டது. காணாமல் போன பல ஆயிரம் தமிழர்களின் கதி என்ன என்பது இன்று வரை தெரியவில்லை. தமிழர்களின் சுதந்திரமான வாழ்க்கை தடைபட்டது. ராஜபக்சே கும்பலுக்குப் பயந்து வாழும் நிலையில்தான் இன்று வரை தமிழர்கள் உள்ளனர். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இன்று வரை முடிவு கட்டவில்லை ராஜபக்சே.தமிழர் கட்சிகளையும் கூட தனது அடிமைகள் போல நடப்பதையே அவர் விரும்பினார். ராஜபக்சே மீது சிங்களர்களுக்கு கடும் வெறுப்பு வர இன்னொரு முக்கியக் காரணம், ராஜபக்சே குடும்பத்தினர் போட்ட ஆட்டம். அவரது தம்பி கோத்தபயா, பசில் ராஜபக்சே போக மகன்களும் சேர்ந்து ஆட ஆரம்பித்தனர். நமல் ராஜபக்சே அதில் முக்கியமானவர்.நாட்டைக் காக்கிறேன், தீவிரவாதத்தை ஒழித்து விட்டேன் என்று கூறிக் கூறியே நாட்டின் வளத்தை தன் வளமாக்க ராஜபக்சே முயன்றதும் சிங்களர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட ராஜபக்சே முடிவு செய்ததுமே அவருக்கு சனி பிடித்து விட்டது. யாரும் எதிர்பாராத வகையில் அவரது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும், முக்கிய அமைச்சருமான மைத்ரிபால தான் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து களத்தில் குதித்தார். மேலும் பல கூட்டணிக் கட்சிகள் ராஜபக்சேவை விட்டு விலகின. முஸ்லீம் கட்சிகள் விலகின, தமிழர் கட்சிகள் விலகின. பல முக்கிய சிங்களக் கட்சிகளும் ராஜபக்சேவுக்கு எதிராக திரும்பின.கடந்த பத்து வருடமாக இலங்கையின் அசைக்க முடியாத தலைவராக விளங்கிய ராஜபக்சே ஆரம்பத்தில் சிங்களர்களைக் காக்க வந்த ரட்சகர் போலத்தான் பார்க்கப்பட்டார். ஆனால் அவரது சுயரூபம் போகப் போகத் தெரிய வரவே சிங்களர்கள் கோபமடைந்து விட்டனர். இவரை மாற்றியாக வேண்டும் என்ற வேட்கை அவர்களிடையே எழுந்தது. ஹீரோவாக பார்க்கப்பட்ட ராஜபக்சே இன்று ஜீரோவாக மாறி தூக்கி எறியப்பட்டுள்ளார்.ஊழல், சர்வாதிகாரம், எதிர்த்து யார் பேசினாலும் கைது, கொலை என்று ராஜபக்சே கும்பல் மிகவும் மோசமாக நடக்க ஆரம்பித்ததே இதற்கு முக்கியக் காரணம்.இலங்கையை தனது சொத்து போல பாவித்து நாட்டையே சுரண்ட ஆரம்பித்து விட்ட இந்த கும்பலை இனியும் விட்டு வைக்கக் கூடாது என்ற முடிவோடுதான் சிங்களர்கள் இந்த முறை ராஜபக்சேவை விரட்டி விட்டுள்ளனர், கைவிட்டுள்ளனர்.இருப்பினும் இன்னும் ஒரு சிங்கள பெளத்த அரசியல் தலைவரையே அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர் தமிழர்கள்... இவர் ராஜபக்சே போல கொடூரமானவராக இருக்க மாட்டார் என்ற சிறிய நம்பிக்கையில். பார்க்கலாம், ஸ்ரீசேன என்ன செய்ப் போகிறார் என்று.
 22. தோற்றது ராஜபக்சே மட்டும் அல்ல... பிரதமர் மோடியும்தான்! - சீமான் சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் தோற்றது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியப் பிரதமர் மோடியும்தான் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயின் வீழ்ச்சி குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததன் மூலமாக இலங்கையின் நிரந்தர மகுடாதிபதியாக நீடித்துவிடலாம் என கனவு கண்ட ராஜபக்சேயை அந்நாட்டு மக்களே தேர்தலில் தூக்கி வீசியிருக்கிறார்கள். இனவெறி அரசியல், அராஜக நடவடிக்கைகள், குடும்பத் தலையீடு என நேர்மையற்ற அரசியலை மட்டுமே நிர்வாகத் தகுதியாகக் கொண்ட ராஜபக்சேயை வரலாறு காறி உமிழ்ந்திருக்கிறது.அறுபது ஆண்டுகால சுதந்திரப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாகச் சொல்லி இனவெறிக் கொடூரனாக எந்த அதிபர் மாளிகையில் இருந்து ராஜபக்சே கொக்கரித்துச் சிரித்தாரோ... அந்த அதிபர் மாளிகையில் இருந்து அவர் இப்போது அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்.தன் தேசத்து மக்களுக்கு உண்மையாக இல்லாத எந்தத் தலைவனும் நீடித்த அரசியலில் நிலைக்க முடியாது என்பதற்கு ராஜபக்சேயின் வீழ்ச்சி சரியான முன்னுதாரணம். கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் சொந்த நாட்டு மக்களின் மீதே ராணுவத் தாக்குதல் நடத்திய கொடுங்கோலனுக்கு காலம் மிகச் சரியான தண்டனையைக் கொடுத்திருக்கிறது. இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றும், வதை முகாம்களின் அடைத்தும், மீனவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியும் தன்னை ஓர் அரக்கனாகக் காட்டிக்கொண்ட ராஜபக்சேயுடன் பிரதமர் மோடி தொடங்கி சுப்ரமணிய சுவாமி வரையிலான பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் தொடர்ந்து நட்பு பாராட்டினார்கள். தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் விதமாக ராஜபக்சேயின் வெற்றிக்குப் பகிரங்க வாழ்த்து தெரிவித்தார் இந்தியப் பிரதமர் மோடி. ஊடகங்களின் பேட்டிகளிலும் பிரதமர் மோடியின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் காட்டிக் கொண்ட ராஜபக்சேதான் இப்போது படுதோல்வி அடைந்திருக்கிறார்.இதை ராஜபக்சேயின் தோல்வியாக மட்டும் கருத முடியாது. ஒருமித்த தமிழர்களின் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு அவரைப் பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தும், சிகப்பு கம்பளம் விரித்தும், அவருடைய வழிபாட்டுக்கு பாதுகாப்பு வழங்கியும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் நட்பு பாராட்டிய இந்திய அரசும் தோற்றுப் போயிருக்கிறது என்பதுதான் உண்மை. சுப்ரமணியன் சுவாமி மாதிரியான ஊதுகுழல்களை வைத்துக்கொண்டு ராஜபக்சேவுக்கு லாலி பாடிய பிரதமர் மோடியும் தனது அரசியல் அணுகுமுறையில் தோற்றுப் போயிருக்கிறார். ராஜபக்சேயை அடிக்கடி சந்தித்து அவருக்குப் பகிரங்க ஆதரவு தெரிவித்த அய்யா சுப்ரமணியன்சுவாமி அவர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது நாம் தமிழர் கட்சி.இனவெறி அரசியலால் எதையும் சாதித்துவிடலாம் என நினைத்த ராஜபக்சேயின் வீழ்ச்சியை புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனக்கான பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ராஜபக்சேயின் தோல்வியை ரசிக்கவோ, புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் வெற்றியைப் பாராட்டவோ தமிழர்களாகிய நாங்கள் நினைக்கவில்லை. தமிழர்களின் சுதந்திரத்துக்கான எவ்வித அணுகுமுறையும் புதிய அதிபரிடம் தெரியாவிட்டாலும், தமிழர்களை நசுக்கிய ஒரு கொடூரனின் வீழ்ச்சியை காலத்தின் தக்க பதிலடியாகவே தமிழுலகம் பார்க்கிறது. இனவெறி இல்லாத, ராணுவக் கொடூரங்கள் இல்லாத, பாகுபாடு பாராத நல்லாட்சியைத்தான் இலங்கையில் இருக்கும் சிங்கள மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இதனைச் செயல்படுத்தும் அதிபராக மைத்ரிபால சிறிசேனா தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.ராஜபக்சே அனுமதிக்காத பன்னாட்டு விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா முன்வர வேண்டும். நில உரிமை தொடங்கி தனக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளும் எத்தகைய உரிமைகளும் அற்றுப்போனவர்களாக தமிழர்கள் இலங்கையில் தத்தளிக்கிறார்கள். அவர்களின் வாக்குகளும் ராஜபக்சேயை வீழ்த்த முக்கியக் காரணம். தமிழர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியதாகச் சொன்ன ராஜபக்சேயின் அத்தனை வார்த்தைகளும் பொய் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. தாங்கொணா வேதனைகளில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் மீட்சிக்கான செயல்பாடுகளில் புதிய அரசு உண்மையாகச் செயல்பட வேண்டும். இதுகாலம் வரை ராஜபக்சேயை தாங்கிப் பிடித்த உலக நாடுகள் இனியாவது அவரை இனவெறிக் கொடூரனாக அறிவிப்பதற்கான முன்னெடுப்புகளை ஆதரிக்க வேண்டும். அதற்கான பன்னாட்டு விசாரணைகளுக்கும் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வைக் கொடுக்கும் பொது வாக்கெடுப்புக்கும் புதிய அரசு வழி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார் சீமான்.
 23. யார் இந்த சிறிசேனா.. மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேனா 1951 செப்டம்பர் 3-ம் தேதி பொலனறுவையில் பிறந்தார். அவரது தந்தை ஆல்பர்ட் சிறிசேனா இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரர் ஆவார். உள்ளூர் பள்ளியில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்ரிபால சிறிசேனா, பின்னர் கண்டி குண்ட சாலை விவசாயக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பயின்று பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து ரஷ்ய கல்வி நிறுவனத்தில் அரசியல் அறிவியலில் பட்டயப் படிப்பை முடித்தார். ஆரம்பத்தில் கம்யூனிச கொள்கைகளில் ஆர்வம் காட்டிய சிறிசேனா, 1967-ம் ஆண்டில் இலங்கை சுதந்திர கட்சியில் சாதாரண தொண்டராக சேர்ந்தார். 1971-ம் ஆண்டில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலை யான பின்னர் அரசியலில் மிகவும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1970-களில் இலங்கை சுதந்திர கட்சியின் இளைஞர் பிரிவின் உள்ளூர் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 1980-களில் தேசிய அரசியலில் நுழைந்தார். 1989-ம் ஆண்டில் பொலன்ன றுவை தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் முதன்முத லாக காலடி எடுத்து வைத்தார். 1994-ல் நீர்ப்பாசனத் துறை இணை அமைச்சராக பதவியேற்றார். 2000-ம் ஆண்டில் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2000-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2001-ம் ஆண்டில் கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்தார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடியது. அந்த அரசின் அமைச்சரவையில் சிறிசேனா நதிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2004-ல் வேளாண், சுற்றுச் சூழல், நீர்ப்பாசனத் துறை அமைச்ச ராக சிறிசேனா பொறுப்பேற்றார். விடுதலைப் புலிகளின் ‘ஹிட் லிஸ்டில்’ இருந்த அவரை குறிவைத்து 2008 அக்டோபர் 9-ம் தேதி கொழும்பில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உள்நாட்டுப் போர் இறுதி கட் டத்தை எட்டியபோது பாதுகாப் புத் துறையையும் (பொறுப்பு) கவனித்தார். அதிபர் ராஜபக்ச வெளிநாடுகளுக்குச் சென்ற போதெல்லாம் நாட்டின் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வந்தார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற அவர் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். ராஜபக்சவின் நெருங்கிய நண்பராகவும் அவரின் வலது கரமாகவும் சிறிசேனா செயல்பட்டார். அதிபர் தேர்தலுக்கான அறி விப்பு வெளியான நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் 2014 நவம்பர் 21-ம் தேதி எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.