சயந்தன்

Members20
 • Content count

  26
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About சயந்தன்

 • Rank
  Junior

Profile Information

 • Gender Male
 1. சமணர், புத்த கோவில்களை இடித்துத்தான் இப்போது இருக்கும் கோயில்கள் கட்டப்பட்டது என்று திருமாவளவன் அவர்கள் கூறியதற்கு யாரோ ஒருவர் ஒரு செவ்வியில் முதலில் அவை தமிழர்களின் வழிபாட்டுத் தளங்கள் தான் என்றும் பின் சமணர், புத்த கோயில்களாக மாற்றப்பட்டதாகவும் கூறியிருந்தார். அந்த செவ்வியை வழங்கியவர் யார், அதை முகநூலில் பகிர்ந்தவர் யாரென்றும் மறந்து விட்டேன். அவரிடம் எப்படி இந்தக் கோயில்கள் கை மாறி கை மாறி வந்தன என்று கேட்க வேண்டும். 'தமிழர் உலகம்' கூறுவதும் இவர் கூறுவதும் சேரும் புள்ளி ஒன்றாக உள்ளதே!
 2. ரஜினி/கமல் அரசியல்

  இவர்கள் துறையில் நடக்கும் பெண்களுக்கான பாலியல் பிரச்சனையைப் பற்றி ஏதாவது பேசியது உண்டா? கமலும் அப்படியானவர்களில் ஒருவர் என்பதால் அவரிடம் இதை எதிர்பார்க்க முடியாது. ஆனால் ரஜினியாவது பேசியது உண்டா? இவர்கள் வந்தால் தங்கள் தொழிலுக்குத்தான் எல்லாவற்றையும் கொடுப்பார்கள். உம்: ஒரு பெரிய படம் எடுத்து நட்டமடைந்தால் அல்லது நட்டம் அடைந்ததாகச் சொல்லி அதையும் நல்ல முயற்சி என்று பாராட்டி பண உதவி செய்வார்கள்/பெறுவார்கள். இவர்களை விட திறமையானவர்கள் எத்தனையோ பேர் பல வருடங்களாக சுயநலம் பாராது பொதுச் சேவைகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தேசியவாதிகள். இவர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் பேசி இருக்கிறார்களா? மாநில சுயாட்சிக்கு இவர்கள் உதவமாட்டார்கள். நாம் கருணாநிதி, ஜெயலலிதாவை விமர்சித்ததைப் போல் இவர்களை விமர்சிக்க விடமாட்டார்கள்.
 3. ரஜினி/கமல் அரசியல்

  நீங்கள் கமல்/ரஜினி ஏற்கிறீர்களா? ஏன்?
 4. கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் அரசியலில் இல்லாத இந்த நேரத்தில் நாம் மீண்டும் ரஜனியா, கமலா என சண்டையைத் தொடங்க வேண்டியது தான்.
 5. ஏன் லெனினை சந்திக்கவில்லை? நீங்கள் மட்டும்தான் சந்தித்தீர்களா? நான் நலம் விசாரித்ததாகவும் கூறவும்.
 6. நிலை என்ன?

  அன்பரே என்பது ஒருவரைக்குறிக்கும். அது யார்? Interests:தாய் தமிழ் ஈழம், ஒன்று பட்ட இந்தியா, சொர்க பூமி... படைப்போம் என்பதில்... தாய் தமிழ் ஈழம் என்பதன் அர்த்தம் என்ன? ஈழம், ஒன்றுபட்ட இந்தியா, சொர்க்க பூமி, சரியாகத்தான் பதிந்துள்ளிர்களா? இன்றும் இவற்றில் நம்பிக்கை உள்ளதா?
 7. 1) அது எமது அரசியல்வாதிகளின் தவறேயன்றி வேறென்ன? நாம் தமிழர், பாமக போன்ற கட்சிகள் வந்திருந்தால் இப்படி நிலை இருந்திருக்காது. அதற்கு ஏன் புறத்தியானிடம் ஆட்சியைக்கொடுக்கவேண்டும். அவர்கள் ஆளும் மாநிலங்களை விட இங்கு 2 திராவிடக் கட்சிகளும் நல்லாவே வைத்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம். இவர்கள் இரண்டு கட்சிகளிலும் நாம் கூறும் குறைகள் என்ன? ஊழல், இன மொழிப் பற்று, சுயநல அரசியல். இவை இல்லாத தேசியக்கட்சிகளைக் கூறுங்கள் பார்ப்போம். இவர்கள் ஆளும் மாநிலங்களில் மது பிரச்சனை இல்லையா? 2) இது கெடுத்தவனுக்கே பெண்ணைக் கட்டிக்கொடுக்கச்சொல்லுதல் போன்றது. ஒவ்வொருவனும் தனக்குப் பிடித்த பெண்ணை கெடுத்துக்கொண்டே இருப்பான். மத்திய அரசு கொடுக்கும் மானியத்தை அவர்கள் எங்கிருந்து கொடுக்கிறார்கள்? தமிழ்நாட்டு மக்களின் பணம். இங்கிருந்து போகும் பணத்தில் எவ்வளவைத் திருப்பித்தருகிறார்கள்? பேரிடர் காலங்களில் கொடுங்க வேண்டிய பணம் வந்ததா? பிச்சை போடுவது போல் போட்டுக்கொண்டு தாங்கள் விரும்பிய மாதிரி கொள்ளை அடிக்கிறார்கள். இப்படிச் சொல்லும் நீங்கள் அவர்கள் வெளிநாடுகளுக்குக் கொடுக்கும் பணத்தில் தமிழ்நாட்டின் பங்கு இவ்வளவு என்று கூறிய கொடுக்கிறார்கள்? மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளைப்பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு உங்கள் கருத்து என்ன? இப்படி யோசியுங்கள். இவர்களை விட பாகிஸ்தானுடனோ சீனாவுடனோ உறவை வளர்த்தால் பலமடங்கு உயர்வாக தமிழ்நாட்டிற்கு செய்வார்கள். அவர்களுடன் போய்விடலாமா? தமிழ்நாட்டின் வருமானம் தமிழ்நாட்டை சிறந்தமுறையில் ஆட்சி செய்ய போதுமானது. உதாரணங்கள்: இப்பொழுது விவசாகிகளைப்பாதிக்கும் திட்டங்கள், அணு உலை, சில்லரை வியாபாரங்களின் வெளிநாட்டு நிறுவனங்கள் (walmart) நடைமுறையில் வந்திருக்கும் (இவை அனைத்தும் திமுகவால் வழங்கப்பட்டவை). என்னைப் பொறுத்தவரை மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தான் சரியானது.
 8. 1) எனக்கும் ஏமாற்றமே! 2) அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது. -> ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கொள்கை. -> மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறார்கள். அவர்களே இங்கு பலமாக இருந்தால் இப்பொழுது திமுகாவால் விற்க்கப்பட்ட தமிழ்நாடு விற்க்கப்பட்டதாகவே இருக்கும். எதிர்ப்பு இல்லாமல் நடைமுறைப்படுத்தி இருப்பார்கள். -> அவர்களால் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டம் இங்கு மாநிலக்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டுளதா? இல்லையே. பிறகேன் அவர்களுக்கு இங்கு இடம்?
 9. http://timesofindia.indiatimes.com/city/madurai/563-schools-in-Madurai-district-lack-toilet-facility/articleshow/40078896.cms   http://www.thehindu.com/features/education/school/report-on-toilets-in-tamil-nadu-govt-schools-sparks-political-row/article6307343.ece   http://www.deccanchronicle.com/141103/nation-current-affairs/article/7000-goverment-schools-run-without-toilets-girls   சில தரவுகள் செய்திகளாக வந்துள்ளன.
 10. அப்படி இந்தியச் சட்டம் இல்லையே!  இருக்கும் சிலவற்றையும் மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறதா?   தமிழகத்திற்கு பக்கத்து மாநிலங்களால் பிரச்சனை வரும்பொழுது என்ன செய்கிறது?   போக்குவரத்துத்துறையில் பல மாநிலங்களிடையே உள்ள கட்டண முறையை ஒழுங்கு படுத்த்துவதற்கு வேண்டுமானால் மத்திய அரசு தலையிடலாம்.  வேறு எதுவாக இருந்தாலும்  தனி மாநிலங்களுக்கான உரிமைகளில் தலையிடக் கூடாது.  ஏற்றுக்கொள்ளவும் கூடாது.   அதே போல் எப்படி பல வேறு மொழி/கலாச்சாரம் கொண்ட மாநிலத்திற்கான கல்வித்துறையை மத்திய அரசு கையகப்படுத்தலாம்?   மத்திய அரசிற்கு  நாட்டின் பாதுகாப்பு, நிதி, வெளியுறவுக் கொள்கை போன்றவையே ஒதுக்கப்பட்டுள்ளது.
 11. போக்குவரத்து மற்றும் கல்வி துறைகள் மாநில அரசாங்கங்களிடம் உள்ளவை.  அதில் எக்காராணம் கொண்டும் மத்திய அரசு தலையிடுவதை அனுமதிக்கக்கூடாது.    எந்த சட்ட விதியின் படி இப்படி தலையிட முடியும்?  அதே சட்டத்தின் கீழ் மத்திய அரசிற்கான வெளியுறவுக்கொள்கையை வெளிநாடு ஒன்றை அருகாமையில் கொண்டுள்ள தமிழ்நாட்டிற்கு வழங்கத் தயாரா?    
 12.   உச்ச நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது. ஆகையல் "இந்த வழக்கில்" என்றுதான் வரவேண்டும்.  வழக்கு முடியவில்லையே.  
 13. இப்பதிவிடத் தூண்டியது சில நாம் தமிழர் கட்சியினரும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் முகநூலில் ஏற்படுத்தும் குழப்பங்களே. இவர்கள் மாணவர் அமைப்புகளையும் மற்றைய அமைப்புகளையும் குறைகூறுகிறார்களா, கத்தி திரைப்படத்தை ஆதரிக்கிறார்களா என தெரியவில்லை.  அங்கு சில கேள்விகளை பல இடத்தில் திரும்பத்திரும்ப பதிந்துகொண்டே இருக்கிறார்கள். நானும் பல இடங்களில் பதிலளித்து விட்டேன். ஆனாலும் அவர்கள் நிறுத்திய பாடாக இல்லை.  ஆகவே அங்கே திரும்பத்திரும்பக் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரே இடத்தில் பதிலளிக்கவே இப்பதிவு.   பொதுவான கேள்விகளுக்கு இத்திரியில் பதில் அளித்துள்ளேன்.   >     1) அல்லிராஜா வந்து விளக்கம் கொடுத்துவிட்டார்.  இப்பொழுது சீமானின் நிலைப்பாடு என்ன? அல்லிராஜா சொன்னதை நம்புகிறாரா?  அல்லது அல்லிராஜா இலங்கை அரசாங்கத்துடன் வைத்திருக்கும் தொடர்பைத் துண்டிக்கச்சொல்லி விட்டாரா?   2) ஜெயா ரீவி கத்தி திரைப்படத்தை வாங்கிவிட்டது.   கத்தி திரைப்படத்தை எதிர்ப்பவர்கள், இப்பொழுது ஜெயா ரீவியை, ஈரோஸை ஏன் எதிர்க்கவில்லை என்கிறீர்கள்.    நீங்கள் கேட்பதற்கு முன்னரே (செய்தி வந்தவுடன்) ஈரோஸைப் புறக்கணிப்பதாக http://www.facebook.com/boycottKaththi யில் கூறப்பட்டுள்ளது.  லிங்கா படத்தைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.  நீங்கள் எதிர்பார்ப்பது கத்தி படத்தை எதிர்ப்பவர்கள்  ஜெயலலிதாவிடம் மோதவேண்டும் என்றுதானே? அது நடக்காது என்று நினைக்கிறீர்களா?  அல்லது எப்பொழுது கூத்துப் பார்க்கலாம் என்று எதிர்பாத்துக்கொண்டிருக்கிறீர்களா?  உங்கள் பற்று புல்லரிக்கின்றது. இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ள நிறுவனத்துடன் பொருளாதார தடை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயாவே எப்படி வியாபாரம் செய்யலாம்?  நீங்கள் தானே இதை முதலில் தட்டிக் கேட்க வேண்டும்?  கத்தி பட வியாபாரம் என்றபடியால் பருவாயில்லை என்று விட்டுவிட்டீர்களா அல்லது எந்த நிறுவனத்துடன் தொடர்பு வைத்தாலும் விட்டுவிடுவீர்களா?    முதலில் நீங்கள் லைக்கா இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புடையது என்பதை ஏற்கிறீர்களா?  அல்லது இந்தியாவில் இருந்து விமானங்கள் போய்வருவதால் லைக்கவையும் எதிர்க்கத்தேவையில்லை என்கிறீர்களா?   விடுதலைப்புலிகளால் தனக்கு ஆபத்து என்று கூறிய ஜெயலலிதாவையே நீங்கள் எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.  அவர் அந்தக்கருத்தில் கூறவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகின்றீர்கள்.  நீங்கள் தானே அவரை ஆதரித்தவர்கள்.  நீங்கள்தானே முதலாவதாக கேட்கவேண்டியவர்கள்?    3) நீங்கள் மாணவர்களை எதிர்க்கவில்லை என்று கூறிக்கொண்டு முகநூலில் அவர்கள் எந்த பதிவிட்டாலும் அது தொடர்பில்லாத பதிவுகளை பதிந்து ஏன் குழப்புகிறீர்கள்?     4) லைக்கா முதலே படம் எடுத்தவர்கள் தானே, லண்டனில் இவர்கள் நடத்திய நிகழ்வுகளை அங்குள்ள மக்கள் எதிர்க்கவில்லையே என்று அறியாதவர்கள் கேட்பது போல் சீமானே கேட்பதை எப்படி ஏற்க முடியும்?   2013 கார்த்திகை மாதம் லைக்கா இலங்கை சென்றபின் தானே அவர்களைப்பற்றி தெரியவந்தது.  அதற்குப்பின்தானே  அவர்களைபற்றி செய்தி பரவியது.  தெரியுமுன்னரே எப்படி எதிர்ப்பது?     5) சீமான் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறவில்லை என்று வேறு ஒருவர் கூறுகிறார்.  அதற்கு ஆதாரம் கேட்கிறார்.   (thanthi tv)  (indiaglitz) http://www.indiaglitz.com/vijay-must-come-to-politics-seeman-kannada-news-111673 http://www.diehardvijayfans.com/2014/08/08/seeman-wishes-vijay-to-come-to-politics/   6) ஒருவர் திராவிடத்தை ஆதரிக்கின்றார் என்பதற்காக அவர் தமிழருக்கு ஆதரவாக எந்த போராட்டமும் செய்யக்கூடாதா?  நீங்கள் ஜெயலலிதாவை ஏன் ஆதரித்தீர்கள்? பச்சமுத்துவை ஏன் ஆதரிக்கிறீர்கள்? அவர்கள் தங்கள் கருத்துகளில் இருந்து மாறியிருக்கிறார்களா? பச்சமுத்துவிடம் ஏன் தமிழீழத்தை/தலைவரை அப்படி பேசினாய் என்று கேட்டீர்களா?  அப்படிப் பேசியவனை மானமுள்ள, இனப்பற்றுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.  அவனையே தூக்கிப்பிடிக்கும் நீங்கள் எப்படி திராவிடத்தை புகழ்பவனை கேள்வி கேட்கலாம்?  அவனின் அந்த கருத்துக்கும் கத்தி பட எதிர்ப்புக்கும் என்ன தொடர்பு?     7)சீமான் தாங்கள் சந்தோஷ் சிவனின் படங்களை எதிர்க்கவில்லை அவர் எடுக்கும் படங்களில் உள்ள கருத்தைத்தான் எதிர்ப்பதாகக் கூறுகிறார். இது சரியா?  அவர் இங்கே உழைத்து எங்களுக்கு எதிராக படங்கள் எடுக்கும் பொழுது போராடுவோம் என்றால் உங்களுடன் இருப்பவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்பட்ட்டதுண்டா?  தமிழ் திரையுலகில் உழைத்து ஏங்களுக்கு எதிராக படம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தும் பொழுது வேலைக்குப் போகாமல் தங்கள் நேரங்களை ஒதிக்கித்தானே வருகிறார்கள்?  ஏன் சந்தோஷ் சிவன் இல்லாமல் தமிழ்ப்படம் எடுக்கமுடியாதா?  அவர் வேலைசெய்யும் தமிழ்ப்படங்களுக்கும் எதிராகப் போராடினால் வேறு யாரும் அப்படிப் படம் எடுக்க வரமாட்டார்கள். எப்படியும் சந்தோஷ் சிவன் தான் வேண்டும் என்று எத்தனை தயாரிப்பாளர்கள்  உள்ளார்கள்?     இனி நாம் விஜய் மற்றும் முருகதாஸின் எதிர்காலப் படங்களையும் புறக்கணிக்கப் போகிறோம்.  லைக்கா தமிழருக்கு எதிரான நிறுவனம் என்று எவ்வளவு ஆதாரங்களுடன் எத்தனை பேர் சொல்லியும் கேட்டார்களா?  அவர்கள் ஒப்பந்தப்படி நடித்துக் கொடுத்துவிட்டாவது அவர்களும் புறக்கணிக்கச்சொல்லி அறிக்கையாவது விடலாம் தானே?  படம் வெளிவருவதற்கும் வராததற்கும் இவர்களுக்குத் தொடர்பில்லையே. படத்தில் வேலை செய்த அனைவருக்கும் ஊதியம் கிடைத்துவிட்டதுதானே?  உழைப்பு வீணாகிவிடும் என்பதன் அர்த்தம் என்ன?    கத்தியில் நடிப்பதற்கு முன் விஜய்க்கோ முருகதாஸுக்கோ லைக்காவுடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை இந்தப் படம் முடிந்தபின்னும் இருக்கப்போவதும் இல்லை. பிறகேன் அவர்களை எதிர்க்க வேண்டும் என்கிறீர்கள்.  நீங்கள் கூறுவது கூலிக்கு ஒருவனைக் கொன்றவக்கு ஏன் தண்டனை என்பது போல் உள்ளது.  செத்தவனுக்கும் கொண்டவனுக்கும் கொலைக்கு முதலிலும் எந்தத்தொடர்பும் இருந்ததில்லை பிறகும் இருக்கப்போவதுமில்லை. இது சரியா?  
 14. முகநூலில் சில கேள்விகளைத் பல இடங்களில் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  நானும் பல இடங்களில் பதில் அளித்து களைத்துவிட்டேன்.  ஆகையால் ஒரே இடத்தில் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இத்திரியை பதிகின்றேன்.   1) அல்லிராஜா உதவிகள் செய்கிறார் அதனால் அவர் தயாரித்த படத்தை எதிர்க்கக்கூடாது.   ஈழத்தில் உள்ள மக்களுக்கு உதவது முக்கியம் தான்.  ஆனால் அவர்கள் தங்களுக்கு எப்படியாவது உதவி கிடைத்தால் சரி என்று நினைத்திருந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு வாக்களித்திருப்பார்களே?   தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் தங்களுக்கு உதவி கிடைக்காது என்று தெரிந்தும் தங்கள் கொள்கையை கைவிடவில்லையே அவர்கள்.      கேபி, கருணா, பிள்ளையான், டக்லஸ் போன்றோரும் அல்லிராஜாவை விட கூடுதலாக மக்களுக்கு நல்லது செய்துள்ளார்கள். என்ன அவர்கள் படம் பிடித்துப் போடவில்லை.  அதை நீங்கள் மறுக்க முடியாது.  அவர்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?  எப்படியிருந்தாலும் கேபி, கருணா, பிள்ளையான் போன்றோர் ஆயுதப் போராட்டத்தில் 15 வருடங்களுக்கு மேலாக பங்காற்றியவர்கள், இப்பொழுது மக்களுக்கு உதவிகளும் செய்கிறார்கள் என இவர்களை ஆதரிப்பவர்களை என்ன சொல்வீர்கள்?     2) அவர் கூட்டிய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் CHOGM 2013க்கு பிரித்தானியாவில் இருந்து பல நிறுவனங்கள் சென்றதாகவும் அவர்களைப்போல்தான் தனது நிறுவனமும் சென்றதாகவும் கூறியுள்ளார்.   உண்மை அதுவல்ல.  இவர்கள் தான் பெரும் பங்களிப்பு அளித்தவர்கள்.  மூன்று வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு வழங்கியுள்ளார்கள் அவ்வளவே.  ஏன் இவர்கள் பொய் சொன்னார்கள்?  மற்றவர்கள் அடிக்கும் போது வாங்குகிறீர்கள் நாங்களும் அடித்தால் வாங்க வேண்டியதுதானே என்கிறாரா?     http://www.cbcglobal.org/events/details/commonwealth-business-forum-2013#sponsors   ஒரு புகைப்படத்தை வெட்டியொட்டி பொய்யான செய்தியை வெளியிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என தாங்கள் காவல்துறையிடம் மனுக்கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.  அது தமிழ்நாட்டு காவல்துறையில் நேரத்தை விரயமாக்கும் செயல். மேல் உள்ள இணைப்பில் இவர்கள் பெரும் பங்களிப்பு செய்ததற்கான ஆதாரம் உள்ளது. இவர்கள் கூறும் புகைப்படம்  கார்த்திகை 2013ல் வந்த ஈழதமிழ் இணைய ஊடகங்களில் வெளிவந்தது.  ஆகையால் படம் வெட்டி ஒட்டப்பட்டிருந்தாலும் அதற்கு போராட்டக்காரர்கள் பொறுப்பானவர்கள் அல்ல. அந்தப்படம் மாற்றப்பட்டதா இல்லையா என்று காவல் துறையே கண்டுபிடிக்கட்டும். செய்தி உண்மையா இல்லையா என்பதுதான் பிரச்சனை.  100% உண்மையானது.     3) தாங்கள் இலங்கையுடன் வியாபாரத்தொடர்பை மட்டுமே வைத்திருப்பதாக கூறுகிறார்.   அதுவும் விமானசேவையில், மற்றைய நிறுவனங்களைப் போல்தான் தாங்களும் இலங்கை விமானசேவையை IATA ஊடாக பெறுகின்றோம் என்று கூறியிருக்கிறார்.  ஆனால் இவர்களே தாங்கள் இலங்கை விமான சேவை நிறுவனத்தின் முன்னுரிமை பெற்ற பங்காளி் என விளம்பரமும் செய்கிறார்கள்.  என்ன ஒரு முரண்பாடு?    அதுமட்டுமன்றி இவர்கள் இலங்கையில் வேறு தொழில்களிலும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.  நாங்கள் தான் பொய் சொல்கிறோம் என்றால் பிரித்தானிய பாராளுமன்றத்திலேயே இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்கள்.  அங்குள்ள பத்திரிகைகளும் போர்க்குற்றம் புரிந்ததாக கூறப்படும் அரசுடன் தொடர்புள்ளவர்களிடம் ஆளும் கட்சி எப்படி பணம் பெறலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.  பங்குதாரர்கள் என்பதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார்கள்.     நாம் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கும்படி உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டு இவரை ஆதரிக்க வேண்டும் என்கிறீர்களா?   4) 150ம் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றுகூடி இப்படத்தை எதிர்க்கிறீர்கள், இதற்கு முன் நடந்த ஏதாவதற்கு கூடினீர்களா என்று கேட்கும் ....க்கு உங்கள் பிரச்சனை இவ் அமைப்புகள் ஒன்று சேர்ந்ததாலா அல்லது கத்தி படத்தை எதிர்ப்பதா?   ஒரு கட்சி/கூட்டணி ஆரம்பிக்கும் பொழுது ஏன் முன்னரே ஆரம்பிக்கவில்லை என கேட்பவர்கள் அதி புத்திசாலிகள்.  அவர்களுக்குப் பதில் சொல்ல எனக்கு அறிவு இல்லை.  இவர்கள் விஜய், ரஜினி போன்றோர் கட்சி ஆரம்பிக்கும் பொழுது இதே கேள்வியைக் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.   5) புகழுக்காக பெரிய நட்சத்திரங்களின் படங்களை எதிர்க்கிறார்கள். உம்: சண்டியர் இந்தியாவில் ஏன் சில அமிலங்களை விற்பதற்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது? அரசாங்கம் கட்டுப்பாடு விதிக்காத நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்று விட்டது என்கிறீர்களா?   கமலில் படத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள்?  தலைப்பு வைத்ததில் இருந்து ஊடகங்களில் இப்படம் பற்றிய செய்தி வந்து கொண்டே இருந்தது.  இப்பொழுது சமீபத்தில் அதே பெயரில் படம் வந்ததே என்பவர்கள், அதைப்பற்றிய செய்திகள் எத்தனை முறை ஊடகங்களில் வந்தது?  அப்படி வந்ததைத் தெரிந்திருந்தால் அப்பொழுது அல்லவா நீங்கள் ஏன் இப்படத்திற்கு போராடவில்லை என்று கேட்டிருக்கவேண்டும்?  அப்படத்தை எத்தனைபேர் பார்த்தார்கள்?     6) முன்னமே வேறு படம் எடுத்தவர்கள் தானே.  அப்போது எதிர்க்கவில்லையே? அப்பொழுது இவர்களைப்பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.  2013 கார்த்திகை மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்க்குப்பின்தானே இவர்களைப்பற்றி தெரியவந்தது.     7) தங்கள் நிகழ்விற்கு கமலும், இளையராஜாவும் பங்குபற்றியுள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.  பங்குபற்றியதன் மூலம் அவர்கள் இருவரும் தற்பொழுது தங்களை ஆதரிக்கிறார்கள் என்று கூறுகிறார்களா? அல்லது தங்களைப் பற்றி தெரிந்தும் பணத்திற்காக பங்குபற்றினார்கள் என்கிறார்களா?  மற்றையவர்களுக்கு எப்படி இவர்களைப் பற்றி தெரியாமல் இருந்ததோ அதேபோல் கமலுக்கும் இளையராஜாவுக்கும்  தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது ஒரு மலிவான விளம்பரப்புத்தி.  விஜயின் ரசிகர்கள் போல் இவ்விருவர்களின் ரசிகர்களும் தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று துணைக்கு அழைக்கிறார்கள்.  அதை அந்த ரசிகர்கள் தான் முடிவெடுக்கவேண்டும்.   இதற்கு மேல் கமலிடமும் இளையராவிடமும் தான் கேட்க வேண்டும்.    8) யாரையும் பாதிக்காத கதை என்பதால் எதிர்க்கத்தேவையில்லை.  இலங்கையில் இருந்து வரும் பொருட்களால் ஏதாவது ஆபத்து இருந்ததாலா பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது?  அல்லது அந்த தீர்மானம் தவறானது என்கிறீர்களா?  பல தமிழக நிறுவனங்கள் இலங்கைப் பொருட்களை விற்பனை செய்யாமல் நிறுத்தியது தவறு என்கிறீர்களா?  அல்லது விஜய் கூறியது போல் அவர்கள் தியாகிகள், நீஙகள் தியாகிகள் இல்லை என்கிறீர்களா?