சிம்மகர்ஜனை

Active Members
 • Content count

  672
 • Joined

 • Last visited

Everything posted by சிம்மகர்ஜனை

 1. ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்,நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும், எனும் பொருளில் ஆத்திகம் பேசும் அடியார்களான சங்கரன் ஜி, ஆரங்கன் சாB, ஐயா தென்னவன், ஆக்னி, வர்ஷா, அனுராதான, விகடன், உணர்வு ஆகியோருக்கும் ஒருமுறை நடந்த விவாதத்தில் நாலு பட்டாசு வெடிச்சோமா, புது ட்ரெஸ் போட்டு ஏரியா ஃபிகர்சுக்கு ஹாய் சொன்னோமா னு இருக்கணும் என்ற ரீதியில் தீபாவளி கொண்டாடும் முதல் ஆளாக நானாக தான் இருப்பேன் என்று தீபாவளியை ஏற்றுக்கொண்ட நம்பர் ப்ளேட்டிற்க்கும் அன்பே சிவமாகும் என்றுநாத்திகம் பேசும் ஐயா லீனாரோய், பாலா, சபா, M130 தோழர் இளந்தமிழன், தமிழ்புலி, லெனின், சேகுவேரா, இப்பொழுது ஐயா ஹரிஹரன் ஆகியோருக்கும் தமிழ்நாடுடாக் கள உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துககள்...
 2. என் இனிய தமிழ் மக்களுக்கு தமிழ்வேந்தனின் அன்பான வணக்கங்கள், 1500 ஆண்டிற்கு முன் தமிழர்களின்அழிக்கப்பட்ட நெறியான ஆசீவக நெறியைப்(அமணம்) பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை உங்களிடம்பகிர்ந்துகொள்ளலாம் என உள்ளேன். இங்கு நான் பகிர்ந்துகொள்ளப்படும்கட்டுரைகள்,ஆசீவக நெறியைப் பற்றி பல்வேறு இணையதளங்களில் பல்வேறு இடங்களில் தேடிக் கிடைத்தத் தரவுகளை வைத்து என்ஆய்வுகளின் தரவுகளையும் சேர்த்து எல்லோருக்கும் புரியும் விதம் ஒரு கோர்வையாகத் தொகுக்கப்பட்டது. இதன்மூலம்,நம் உண்மையான வரலாறு என் மக்களுக்கு எளிதாகச் சென்றடையும் என்ற நோக்கத்துடனும் நம்பிக்கையுடன்தொடங்குகிறேன்.நன்றி. கட்டுரைகளை படிக்கத் தொடங்கும் முன்பு, மக்களிடம் இதுவரை பிறரால் பரப்பப்பட்ட தவறான கண்ணோட்டதிற்காக ஒரு தெளிவுரை: ஆசீவக நெறி(அமணம்>சமணம்) என்று கூறியவுடன், பெரும்பான்மையானோருக்கு நான் ஜைன நெறியைத்தான் விளக்கப் போகிறேன் என்று தோன்றும். இல்லை, ஆசீவக நெறி என்பது தமிழர்கள் ஆதி காலந்தொட்டு பின்பற்றி வந்த நெறியாகும். அந்நெறியை, கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சிவ நெறி, சமணர் கழுவேற்றத்தின் பொழுது அழித்தது(சிவனும் ஒரு ஆசீவகரே. அதைப் பற்றி பின்பு பார்ப்போம்). கடந்த எழுபது ஆண்டுகளில் தமிழர் தொடர்புகளுடன் ஆசீவக நெறியைப் பற்றி ஆய்வுகள் எழும் பொழுதெல்லாம் அது இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. இதன்மூலம், தமிழர்களின் உண்மையான வரலாறு அவர்களுக்கே இதுவரை தெரியாமல் வந்திருக்கிறது. தமிழ் ஆய்வுலகில் எப்பொழுதெல்லாம் தமிழகத்தில் ஆசீவக நெறியின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப் படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவை ஜைன நெறியின் அடையாளங்களாக மாற்றி காண்பிக்கப்படுகிறது. உதாரணமாக,தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா. முனைவர் டி.வி.மகாலிங்கம் ஆவார். தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ60ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது. இங்கு நான் விளக்கப்போவது, ஆசீவக நெறி என்றால் என்ன?. அது ஏன் எப்படி உருவானது?. யாரால் எங்கே உருவாக்கப்பட்டது? ஆசீவகம் பரவி இருந்த இடங்கள் யாவை? ஆசீவகம் எப்பொழுது யாரால் அழிக்கப்பட்டது? ஆசீவகச் சித்தர்கள் எந்ததெந்தத் துறைகளில் வலிமையாயிருந்தனர்? ஆசீவகத்தின் தெய்வங்கள் யாவர்?. அவர்கள் எப்படி ஆசீவக தெய்வங்கள்? விநாயகர் ஐயனார்(கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை நிறத்தை அடைந்தவர்கள்), எழுமுனிகள்(சப்தமுனிகள்), ஏழுகன்னிகள்(சப்தகன்னிகள்) ஔவையார் தெய்வ நிலையை அடைந்த ஆசீவகச் சித்தர்கள் - சிவன், திருமால்(விஷ்ணு), இந்திரன், வருணன், முருகன், ஐயப்பன் ஏழுமுனிகளின் வடிவங்கள் - பிரம்மா ஏழுகன்னிகளின் வடிவங்கள் - சரஸ்வதி, இலட்சுமி, காளி, மாரியம்மன் அஷ்டலட்சுமி, மாதங்கி(கஜலட்சுமி) அவர்கள் எப்படி ஆசீவகத்தின் தெய்வங்கள் என்பதை பின்பு விளக்கமாகப் பாப்போம். மேலும், ஆசீவக நெறியில் உள்ள கடவுள் கோட்பாடுகள். ஆசீவக நெறி, ஜைன நெறி, புத்த நெறி இம்மூன்றிற்கும் உள்ள வேறுபாடு? ஆசீவக நெறி பற்றி உண்மைகள் வெளியே தெரிந்தால் யாருக்கு கட்டம்? ஆசீவக நெறியின் கோட்பாடுகள் ஆசீவகச் சித்தர்களின் படிநிலைகள் யாவை? ஆசீவக நெறியின் பிற கோட்பாடுகள் இக்கட்டுரைகளின் தரவுகளின் மேற்கோள்களுக்கு நன்றிகள்: 1.தமிழர் சிந்தனைப் பேரவை(தமிழர் உலகம்) ஆசீவக நெறியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, Youtube User Page -http://www.youtube.com/user/tamilsantham/videos 2.ஆதி. சங்கரர்,கோரக்கர் சித்தர் பீடம்மூலை ஆற்றங்கரை 3.முனைவர் க. நெடுஞ்செழியன் --இது வேறு ஒரு தளத்திலிருந்து எந்த அனுமதியுமின்றி சுடப்பட்டது... இது தமிழ்வேந்தன் என்பவரால் பதிய பட்டதாகும்... விவாதம் புரிய விருமபுபவர்கள் இங்கேயும் விவாதித்துக் கொள்ளலாம்... ஆசீவகம் என்ற தமிழ் நெறிக்கு தெய்வங்கள் என்ன... தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்...
 3. லீனாரோய், M130போன்றஜாம்பவான்களை கண்ட களமிது... அவர்கள் உந்துதலால் களத்தை நகர்த்துவது பெரிய விடயம் கிடையாது... பின் வருவதை எஙகோ படித்ததாக ஞாபகம்... லீனாரோய் அவர்களும், அவருடைய மற்ற நண்பரும் வேறொரு களத்தில் தனி உரையாடல் நடத்திக்கொகொண்டிருப்பதாக... இப்பொழுது தமிழினத்திற்கு தேவையானது நல்ல கருத்துக்களே... அதை பார்த்து எவரேனும் செயலில் இறக்கினால் அது தமிழினத்துக்கு கிடைத்த வெற்றியே... இப்பொழுது அது காலத்தின் கட்டாயமாகவும் நிற்க்கிறது... ஐயா வேக்கப் அவர்கள் களமாடினால், பின்னோக்கி களமாட வருவார்கள் என சராஜ் அவர்கள் சொன்னார்...
 4. 19ம் தேதி நீங்கள் பதிந்த இந்த கருத்தை பார்த்துவிட்டு, அடுத்த நாள் போட்ட கருத்தை எப்படி பார்க்க தவறினேன்னு ஷாக் ஆயிட்டேன். பிறகுதான் தங்களுடையது நவம்பர் மாதத்தினுடையது என்று பார்த்தேதேன். நீங்கள்ர ஏன் இரண்டாம்அறைக்கு தயாராகக் கூடாது. ஒருவரை இங்கு இட்டுக்குனு வர.
 5. ஐயா அருணாசலத்தை மறந்து விட்டேன்...
 6. வாங்கிய கடனை திருப்பி வங்கியில் அடைக்க முடியாத ஒரு தெரு பொறுக்கி கப்பல்களை சொந்தமாக வைத்திருந்தானாம்... அந்த தெருப்பொறுக்கியிடம் புலிகள் உதவி கேட்ட பொழுது கப்பல்கள் அலுவலில் உள்ளது என்றானாம்... இந்த விடயம் ஈழ அபிமானி என்று பட்டம் அளிப்பதற்க்கு பட்டம் பெற்ற கீரி பாபா வுக்கு தெரியுமா??...
 7. ரஜினி/கமல் அரசியல்

  இப்பொழுது தமிழர்களிடம் இழப்பதற்க்குவேறு என்ன இருக்கிறது...
 8. ரஜினி/கமல் அரசியல்

  இவர்களின் தகுதி என்ன? அழகாக ஒய்யாரமாக ஃபேன் சுழற்ச்சிக்கடியில் அமர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு அவர்கள் தகுதியை ஆராய எனக்கு தகுதி இல்லை... ஒரு வேளை ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் உரிமையாளருக்கு அவ்வுரிமை இருக்கலாம்... ///நாம் கருணாநிதி, ஜெயலலிதாவை விமர்சித்ததைப் போல் இவர்களை விமர்சிக்க விடமாட்டார்கள்./// அதையும் தான் பார்த்து விடுவோமே... எத்தனை வருடம் ஆடுவார்கள்... எனது வாக்கை சீமான் அல்லது தமிழருவி மணியன் அவர்களுக்கு தான் அளிக்க வேண்டும் என்று விருப்பம்... ஆனால் நிதர்சனம் என்ன... --கண்ணதாசனின் வரிகள். ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொருமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே... வேறவக்கும் இல்லை நாதியற்ற ஈன தமிழனுக்கு... அழகான நீரோடையாக பாய்ந்து வந்து கொண்டிருந்த தமிழகத்தை ஒட்டு மொத்தமாக பாதையை மாற்றி அமைத்து விட்டனர் படுபாவிகள்...
 9. ரிக் வேதம்.......

  என்னாலையும் மிடில... ஒவ்வொரு பதிவும் அனுமார் வாலு போல நீழுது... ஏதோ எனக்குதெரிந்த ஒரு முப்பது நாப்பது குறளை வைத்து காலத்தை ஓட்டிக்கிறேன்...
 10. ரஜினி/கமல் அரசியல்

  வேறு நாதி இல்லை... இவர்களாவது ஏதேனும் நன்னமகள் செய்யமாட்டார்களா என்ற ஏக்கம் தான்... ரஜினி மீது ஒன்றும் பெரிய அபிப்ராயம் இல்லை... ஒருமுறை திரையுலகினர், காவிரி நதிக்காக போராட்டம் நடத்திய பொழுது, நான் நதியில் இரத்தம் வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தனியாக உண்ணாவிரதம் இருந்தவர்... தமிழர்களுக்கான நியாயமான, அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்று சொன்னாலும் ஆச்சர்யப் படுவதிர்க்கில்லை... தமிழர்களுக்குதேவை தமிழ் நாட்டு மக்கள் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் தலைமை தேவை இல்லை... எட்டு கோடி தமிழர்களை தாங்கி இருக்கும் தமிழகம், உலக தமிழர்களின் உரிமைகளையையும் மீட்டெடுக்கும் ஆளுமையை பெற வேண்டும்... ஏற்கனவே இருக்கும் கட்சிகள், செய்த ஊழல்கள் மூலம் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தத்திற்க்கு தகுந்தார் போல் பல்லை இளித்துக் கொண்டு போடும் பிஸ்கெட் துண்டுகளை பொறுக்கிக்கொண்டு ஓடும்...
 11. ரஜினி/கமல் அரசியல்

  கமல் திமுகாவை ஆயுதமாக எடுத்திருக்கிறார்... ஆயுதமா அல்லது மடிமேல் தவழ்ந்தவன் என்ற முறையில் ஏழேழு ஜென்மம்எடுத்தாலும் தீறா கறையை, பாவம் துடைக்க முயற்சிக்கிகிறாரா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்... ஆயுதம்என்றால் கமலுக்கு பின் இவனுக ஆட்டம் தாங்க முடியாதே...
 12. நேஷனல் ஜியோகிராபியில் புதன் கிழமை தோறும் ஒளிபரப்பாகும் ஜீனியஸ் என்ற நிகழ்ச்சியில் திரு. ஆல்பர்ட் என்ஸ்டெயின் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது... அதில் அவர் ஒரு முறை தன் மகன் பொம்மை ட்ரெயினோடு விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்... ஆசையாக பக்கத்தில் சென்று அவன் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருப்பார்... அப்பொழுது அதற்க்கு நேராக தொங்கப் பட்டு ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரத்தை தர் செயலாக காண்பார்... அதையும் பார்ப்பார் இதையும் பார்ப்பார்... திடீரென எதையோ கண்டு பிடித்தது போல் துள்ளி எழுந்து தன் நண்பரிடம் பகிர்ந்து கொள்ள செல்வார்... அவர் நண்பனிடம், வெட்ட வெளியில் மின்னல் பக்கத்தில் பக்கத்தில் ஒரே நேரத்தில் பூமியை தாக்குவதாக கற்பனை செய்துக் கொள்... அதற்க்கு அவர் நண்பர் மின்னல் ஒரே நேரத்தில் பக்கத்தில் பக்கத்தில் ஒரே நேரத்த்தில் எப்படி சாத்தியம்??... அதற்க்கு இவர் சும்மா கற்பனை செய்துக்க கொள் என்பார்... சரி என்று கற்பனை செயதுக் கொள்வார்... என்ன கண்டாய்??... மின்னல் பக்கத்தில் பக்கத்தில் பூமியை தாக்குவதாக கண்டேன்... இப்பொழுது ஒரு தொடர் வண்டியில் சென்று கொண்டிருப்பது போல் நினைத்துக் கொண்டு மறு படியும் அந்த மின்னல்களை கற்பனை செயதுக் கொள்... இப்பொழுது என்ன தெரிந்தது???... ஒரு மின்னல் இடது புறம் இருந்து வரும் பொழுதும் மற்றோரு மின்னலை அதை கடந்து சென்று வலது புறம் சென்ற பிறகு காண நேர்ந்தது... இதில் இருந்து என்ன தெரிகிறது?? என்பார்... என்ன தெரிகிறது??... நேரம் துல்லியமானது அல்ல என்பது தெரிகிறது என்பார்... அவர் நண்பரும் புரிந்து கொண்டது போல் என்ஸ்டெயினை வாரி அணைத்து கட்டிக் கொள்வார்... அவர் நண்பர் கற்பனை செய்ததிலேயே புரிந்து கொண்டார்... இங்கு படம் போட்டுக் கிராபிக்ஸோடு காட்டுகின்றனர் ஒரு எழவும் புரியலையே என்று நொந்துக் கொண்டேன்... --இந்த மண்டை குழம்பும் நேரத்தில் M130 வந்து மண்டை குழம்புவது போல் ஏதேனும் பாட்டு இட்டுக் காட்டினால் சுகமாக அமையும்... இல்லையெனில் அது ஒரு காலம் அழகிய காலம் என்று பாட்டு படிக்க கொண்டு பொய் கொண்டிருக்க வேண்டியது தான்... நம்பர் பிளேட்டை மங்குனி அமைச்சர்கள் தடை செயது விட்டதாக ஐயா ஹரிஹரன் சொன்னதாக கேள்வி, தடை நீடிக்கிறதா தளர்த்தியாகிவிட்டதா?? மேலும் ஒரு சின்ன கேள்வி?? மொத்தம் எத்தனை கோணங்கள் (Dimension) உள்ளது??... அதில் என்ஸ்டெயின் எத்தனை கோணங்களில் சிந்தித்தார் பாலா அவர்களே?? Or (L.R.... (?).....)
 13. மொத்தம் பிரபஞ்சத்தில் பத்து டைமென்ஷன்கள் உள்ளது... ஐன்ஸ்டெயின் எத்தனை டைமென்ஷன்களில் சிந்தித்தார் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமையால் நான் கேட்ட கேள்வி தவறானது என்று நினைக்கிறேன்... அதே நிகழ்ச்சியில் தான் அவர் இரண்டு டைமென்ஷன்களில் சிந்தித்தாலே போதுமானது என்பது போல் காட்டியிருப்பர்... இப்பொழுது கூகிளில் தேடச் சென்றதில் நாம் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருக்கலாம் என்றும் ஐன்ஸ்டெயின் சொல்லி இருப்பதாக தெரிகிறது...
 14. சேகு வை வருக வருக என்று வரவேற்கிறேன்

  அப்படி எல்லோரும் நினைத்தால் நலம்... உள் குத்து இல்லாமல் சேகுவேரா என்ற பரம பொட்டையை வருக வருக என்று அழைத்தால் சரியாக இருக்குமா???
 15. சேகு என்ற பொட்டையை வருக வருக என்று வரவேற்கிறேன்...
 16. பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!

  ஜொயிங் ஜங் ஜக்...
 17. தலையங்கம்: பிரிவினைவாதம் ஏற்புடையதல்ல!

  ஹவ் இஸ் இட்?? சூப்பர் இல்ல??
 18. காஷ்மீர் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா ஜிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தில்லியில் இம்மாதம் 21-ம் தேதி காஷ்மீர் குறித்த கருத்தரங்கு நடத்த அனுமதி தந்துவிட்டு, அதில் பேசிய பேச்சுகளைப் பிரசுரிக்கவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் அனுமதித்துவிட்டு அதன் பிறகு பேச்சாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் சுதந்திரம் கேட்கிறார்கள், இதைப் பல்லாண்டுகளாகக் கேட்கிறார்கள். எனவே அவர்களுடைய கோரிக்கை நியாயமானது, இதற்காக அவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும், ஆதரவு தர நான் தயார் என்று பேசியிருக்கிறார் அருந்ததி ராய். பொறுப்பான எழுத்தாளர்களும், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் விளம்பரத்துக்காக தேசநலனுக்கு எதிராகப் பேசுவதும், செயல்படுவதும் சுதந்திரம் என்கிற பெயரில் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டுமா என்கிற கேள்வி நிச்சயம் எழுகிறது. பிரிவினைவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் ஆதரவுக்குரல் கொடுப்பதுதான் முற்போக்குச் சிந்தனை என்று பெருமிதப்படுவது தடை செய்யப்பட வேண்டியதும் தண்டனைக்குரியதும் இல்லாவிட்டாலும் தேசவிரோதச் செயல்தான் என்பதை "தினமணி' அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் பதிவு செய்ய விரும்புகிறது. "உரிமை' என்கிற பெயரில் தேசியக் கடமையை மறந்துவிட முடியாது. கூடாது. காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசு ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களது குரல்வளையை நெரிக்கிறது என்கிறவாதம் பாதிதான் உண்மை. காஷ்மீர் மக்கள் நிஜமாகவே பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பவர்களாக இருந்திருந்தால் கடந்த ஜனவரி 2009-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும், தடையையும் மீறி வாக்களிக்கவே வந்திருக்கக்கூடாதே? தேர்தலை அவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கவில்லை என்பதை உலகமே பார்த்து வியந்ததே? அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேய அரசின் ஆதரவுடன் செயல்பட்டுவந்த அத்தனை சமஸ்தானங்களும், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன. 1947, ஆகஸ்ட் 4-ம் தேதி அன்றைய கவர்னர் ஜெனரல் மௌண்ட் பேட்டன் பிரபு, பாகிஸ்தானிய அதிபர் முகம்மது அலி ஜின்னா, பலுஜிஸ்தான் அரசர் கலாட் கான் ஆகியோர் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தப்படி ஒரே ஒரு விதிவிலக்காக பலுஜிஸ்தான் மட்டும் 1876-ல் இருந்ததுபோல ஒரு சுதந்திர நாடாக இயங்கும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், 1948 ஜனவரியில் கலாட் கான் கராச்சிக்கு வரவழைக்கப்பட்டு வலுக்கட்டாயமாகப் பாகிஸ்தானுடன் பலுஜிஸ்தானை இணைக்க கையொப்பமிடச் செய்தனர். அன்றுமுதல் இன்றுவரை பலுஜிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைப்பற்றி எந்தவொரு பாகிஸ்தான் எழுத்தாளரும், அரசியல்வாதியும் பேசுவதில்லை. பாகிஸ்தானின் உரிமை மீறல்கள் மன்னிக்கப்படுகின்றனவே, ஏன்? இந்தியாவுக்கு வருவோம். 1947-ல் வேறு எந்த சமஸ்தானத்துக்கும் இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ தரப்படாத சிறப்பு அந்தஸ்தைக் காஷ்மீருக்கு அளிக்க நாம் வாக்குறுதி அளித்ததன் பேரில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணையச் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பாகிஸ்தான் காஷ்மீரைத் தன் வசப்படுத்த சற்றும் எதிர்பாராதவிதமாக ராணுவத்தினரை ஊடுருவச் செய்தபோது இந்தியப் படைகள் அவர்களைப் புறமுதுகிட்டு ஓட விரட்டியது. லடாக், புஞ்ச் பகுதிகளிலிருந்து அவர்களை விரட்டியடித்து முஜபராபாத்தை நெருங்கும்போது, ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிரச்னையை ஐ.நா. சபைக்கு எடுத்துச்சென்று, போர் நிறுத்தத்தை அறிவித்தார். பண்டித நேருவின் பெருந்தன்மை, அந்த மாமனிதரின் நல்லெண்ணம் இப்போது பாஜகவினரால் விமர்சிக்கப்படும்போது வேதனையாக இருக்கிறது. தனது நல்லெண்ணம் ஒரு தீராப்பழியைத் தேடித்தரும் என்று அந்த ஆசிய ஜோதி நிச்சயம் நினைத்திருக்க மாட்டார். அப்போது மட்டும், பண்டித நேரு ராணுவத்தைத் தடுக்காமல் இருந்திருந்தால் இன்று தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்து ஊடுருவச் செய்ய பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் பகுதியே இருந்திருக்காது. பண்டித நேரு மட்டும், பாகிஸ்தானிலிருந்து அடித்து விரட்டப்பட்ட சிந்திகளையும், பஞ்சாபிகளையும் காஷ்மீரில் குடியேற்றி இருந்தால் இன்று "காஷ்மீரியாட்' பற்றி யாரும் பேசியே இருக்க முடியாது. பண்டித நேரு என்ன இலங்கை அதிபர் ராஜபட்சவா, சிறுநரித்தனமாகச் செயல்பட? கடந்த 63 ஆண்டுகளில் காஷ்மீர் இனத்தின் தனித்தன்மையைக் குலைக்க இந்தியா எப்போதாவது, ஏதாவது முயற்சி செய்திருக்கிறதா? இலங்கையில் தமிழர்கள் எல்லா உரிமையும் மறுக்கப்பட்டு, சொந்தமண்ணில் அகதிகளாக வாழ்வதுபோல ஒரு நிலைமையை இந்தியா காஷ்மீரத்தில் உருவாக்கி இருக்கிறதா? காஷ்மீர் மக்களின் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, செய்யத் தொழில், கல்வி இவையெல்லாம் மறுக்கப்பட்டு இலங்கையில் ஈழத்துக்குப் பொருளாதாரத் தடை விதித்ததுபோல நாம் நடந்து கொண்டதுண்டா? பிரிவினைவாதம் என்பது பெருவாரியானவர்களின் கோரிக்கை அல்ல. பஞ்சாபில் "காலிஸ்தான்' கேட்டபோது அதை இன்னொரு காஷ்மீர் என்று வர்ணித்தார்களே, இப்போது பஞ்சாபில் பிரிவினைவாதம் எங்கே போயிற்று? ஒருசில கலகக்காரர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடும்போது, பெருவாரியான பொதுஜனம் தங்களுக்கு ஏன் வம்பு என்று இருப்பது இயல்பு. நான்கு பேர் வன்முறையில் ஈடுபடும்போது நானூறு பேர் அவர்களுடன் இணைவதும் இயல்பு. இதற்குப் பயந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஓடிவிட முடியாது. அடக்கத்தான் வேண்டும். காஷ்மீரில் தனிநாடு கேட்கிறார்கள் என்று காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கேட்கிறார்கள் என்று அந்த மாநிலங்கள் பிரிந்து போகட்டும் என்று நாம் விட்டுவிட்டால், மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரேயும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவும், ஏன், வன்னிய நாடு கோரிக்கையுடன் நமது டாக்டர் ராமதாசும்கூடத்தான் தனிநாடு கேட்பார்கள். எல்லா மாநிலங்களையும் தனி நாடுகளாக்கிவிட்டு நாமும் ஓர் ஆப்பிரிக்கா ஆகிவிடப் போகிறோமா? இந்தியாவைப் பொறுத்தவரை, நமது பிரச்னைகள் அனைத்தும் மாநிலப் பிரச்னைகள். ஆனால், இதற்கான தீர்வுகள் தேசியத் தீர்வுகள். 2020-ல் உலக வல்லரசு என்று நாம் காணும் கனவு நனவாக வேண்டுமானால் இந்தியா ஒரு யூனியனாக ஒன்றுபட்டு இருந்தாக வேண்டும். இதில் பிரச்னைகள் இருக்கலாம். தவறுகள் இருக்கலாம். அவை சரிசெய்யப்பட வேண்டுமே தவிர, பிரிவினை அல்ல தீர்வு. மனித உரிமை மீறல் காஷ்மீரில் இல்லையா? இருக்கிறது. அதைவிட அதிகமான மனித உரிமை மீறல் இலங்கையில் தமிழர்கள்மீது தொடுக்கப்படுகிறது. பலுஜிஸ்தானில் கொடூரமான அடக்குமுறையும் மனித உரிமை மீறலும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அருந்ததி ராய்கள் அங்கே போய் ஏன் பேசுவதில்லை? காரணம், இங்கே சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது. அதற்காக வாய்க்கு வந்ததைப் பேசி விடுவதா? காஷ்மீரைப் பிரச்னையாக்கி இந்தியாவிலிருந்து பிரித்து மேற்கு நாடுகளின் ராணுவத் தளமாக்க வேண்டும் என்கிற முயற்சியின் ஒரு பகுதிதான், பாகிஸ்தானைத் தூண்டிவிட்டு, பிரிவினைவாத சக்திகளுக்கு ஊக்கமளிப்பது. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் துடிக்கும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எந்தவித உதவியும் செய்யத் தயாராக இருக்கிறது. இலங்கையைத் தனது நட்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிட்ட சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி, காஷ்மீரில் குழப்பம் விளைவிக்கத் தூண்டுகிறது. முதல்வர் ஒமர் அப்துல்லாவும், எதிர்க்கட்சித் தலைவி மெகபூபா முஃப்தியும் தங்களைப் பிரிவினைவாதிகளாகக் காட்டிக்கொள்ள முனைகிறார்கள். போதாக்குறைக்கு, தீவிரவாதத் தலைவர்களும் அவர்களை ஆதரித்து விளம்பரம் தேடிக்கொள்ள முயலும் அருந்ததி ராய்களும்... இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்திய சக்திகளுக்குத் துணைபோகத் துடிக்கிறார்களே என்பதுதான் வேதனையாக இருக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத, பிரிக்கப்படக் கூடாத பகுதி. இதில் எந்தவித சமரசமும் ஏற்புடையதல்ல. சுயவிளம்பரத்துக்காக தேசநலனைக் கைகழுவும் போக்கும்தான்! --நன்றி தினமணி..
 19. ராமசாமி நாயக்கன் பொறம்போக்கா, குசேலன் பொறம்போக்கா, அவன் பிச்சை எடுத்த கிருஷ்ணன் பொறம்போக்கா என்பது எல்லாம் தெரிந்து கொள்வது கடினம்... ஆனால் இந்த முகநூல் கிறுக்கன் ஆனந்தன் அமிர்தன் ஒரு பொறம்போக்கு என்று மட்டும் அரங்கன் சாB அவர்களுக்கு சொல்ல கடமை பட்டுள்ளேன்...
 20. "ஸ்லீப் அப்னியா"

  இதற்க்கு பத்து வருடத்திற்கு முன்பு கருத்தை பதிந்திருந்தால் என்ன பதிந்திருப்பேன் என்று தெரியவில்லை... ஆனால் இப்பொழுது சிரித்து விட்டும் அழுதுவிட்டும், அழுதுவிட்டும் சிரித்துவிட்டு மாறி மாறி, மாறி மாறி படித்தேன்... ////மிகவும் அழகான தாதி ஒருவர் வந்து, என்னை ""நித்திரை சோதனை"" (இது புதுசா இருக்கு) க்கு அழைத்துச் சென்றார்//// இதைப் படித்ததும் இருட்டு அறையில் முரட்டு கூத்து, பாப்பா போட்ட தாப்பா போன்ற தலைப்புகள் தான் நினைவுக்கு வருகிறது... அப்பறம் கருத்து பதிந்ததிலேயே இவருடைய கருத்து தான் சிறப்பாக இருந்தது.. ////லீனா..இதென்ன விளையாட்டு..உடனே மருத்துவரை சென்று பாருங்கள்//// ரெண்டு நாளா ஒரு மனுஷன் தூங்காம டாக்டரைப் பாத்து விட்டு ஒன்னரை மணி நேரமா தட்டச்சு செய்து பதிந்திருக்கிறார், அதன் பிறகு இதை பதிந்திருக்கிறார்... இதை இவர் பிடித்தாரா இல்லை தூக்கத்தில் யாரோ எழுப்பி லீனாவுக்கு "ஸ்லீப்பிங் அப்னியா" என்று சொன்னார்களா என்று தெரியவில்லை... சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணானது தான் மிச்சம்... --இந்த பத்து வருடங்களில் எவ்வளவோ மாற்றங்கள்... இதைப் பதியும் பொழுது உள்ள மனநிலை இப்பொழுது இருக்காது, படித்து பதில் எழுதியவர்களின் மனநிலையும் கண்ணோட்டமும் சுத்தமாக மாறி இருக்கும்...
 21. வேற்று கிரக வாசிகள் என்ற உடனேயே இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்றனரா? என்று சிறு பிள்ளைகளைப் போல் கேள்வி எழும்... இருக்கிறார்கள் என்றும் சுலபமாக பதில் சொல்லிவிடலாம்... ஆனால் விஞ்ஞானமும் அதைச் சார்ந்து சுற்றி உள்ள மனிதர்கள் மூளையும் ஒரு நமட்டு சிரிப்பு சிரிக்கும்... ஏனெனில் வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்கள் என்று உணர்ந்தாலும், வேறு பல விஷயங்களில் லாஜிக் கேட்டு கொண்டிருக்கும் அவர்கள் இதை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வது என்று லாஜிக் மூலமே அசைந்துக் கொண்டிருக்கும் அவர்களது மூளை அணுக்கள் மறுக்கும்... இந்த பிரபஞ்சத்தில் வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்... இந்த அண்டசராசரங்களில் நம் மனித மூளையைக் காட்டிலும் பல மடங்கு வளர்ந்து முதிர்ச்சி அடைந்த வாசிகள் இல்லாமலா போய்விடுவார்கள்... அப்படி இருக்குமாயின் அவர்களுள் நாடோடி வாசிகளும் இருக்கலாம் அல்லவா... அப்படி இருக்குமாயின் அவர்கள் பூமியையும் வந்தடைந்திருக்கலாம்... பூமியில் இருக்கும் சில வரலாற்று குறிகளும் அதை உறுதிப்படுத்துகிறது (இருக்கலாம் என்று தானே தவிர நிச்சயமாக அல்ல)... அப்படியே இருந்தாலும் கூட, மனிதனை விட பல மடங்குஅறிவு வளர்ச்சி பெற்ற அவர்கள் ஏன் மனித இனத்தை அழித்து பூமியை ஆட்கொள்ளவில்லை... அவர்கள் மனிதர்களை விரும்புகின்றனரா?... இல்லை அவர்கள் தியாக செம்மல்களா? அப்படியெல்லாம் இல்லை என்றே சொல்லலாம்... உதாரணமாக என் வாழ்க்கை முறையை நான் தான் எந்த குறையுமின்றி மன நிறைவுடன் வாழ முடியும், அது போன்றே அனைவருக்கும்... அது போல மனிதர்களின் வாழ்க்கை முறையை மனிதர்கள் தான் இந்த பூமியில் வாழ முடியும்... முதலில் அவர் அவர் வாழ்க்கை முறையை அவர் அவர் மீட்டெடுப்போம்... கண்ணதாசனின் வரிகள்... பரம சிவன் கழுத்திலிருந்து, பாம்பு கேட்டது கருடா செளக்கியமா? யாரும் இருக்குமிடத்தில், இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது...
 22. நிலை என்ன?

  பழைய சில விவாதங்களை பார்க்கும் பொழுது உலகின் நிலை என்ன, என் நிலை என்ன என்று குழப்பம் ஏற்படுகிறது... இங்கு சிலரது நிலை இன்றும் மாறாது இருக்கிறது என்பது அர்ஜூன் படத்தை பார்த்துவிட்டு, கையில் புடைக்கும் நாக்கு பூச்சியை உருட்டைக்கட்டையால் அடிப்பதிலிருந்து தெரிகிறது... சோறு இல்லையானு அழுவது போய் காரு இல்லையேன்னு அழும் கும்பல் மேடை ஏறி விட்டது... இன்னும் அர்ஜூன் படம்? நிலையை மாற்றுங்கள் அன்பரே...
 23. நிலை என்ன?

  (அன்பரே என்பது ஒருவரைக்குறிக்கும். அது யார்?) இந்த களத்தில் அவரை மட்டும் தான் அப்படி அழைத்துள்ளேன்... அவருக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்... அது நீங்கள் இல்லை... அது உங்களுக்கு அவசியம் அர்ரதும் கூட... (Interests:தாய் தமிழ் ஈழம், ஒன்று பட்ட இந்தியா, சொர்க பூமி... படைப்போம் என்பதில்... தாய் தமிழ் ஈழம் என்பதன் அர்த்தம் என்ன?) தாய் என்பதற்கு பிறகு தான் அனைத்தும் என்பது எனது பொருள்... அதனால் தமிழ் ஈழத்தை தாயுடன் இணைத்துள்ளேன்... (ஈழம், ஒன்றுபட்ட இந்தியா, சொர்க்க பூமி, சரியாகத்தான் பதிந்துள்ளிர்களா?) ஆமாம். (இன்றும் இவற்றில் நம்பிக்கை உள்ளதா?) நடந்து செல்வோம் எது நம்பிக்கைக்குரியது எது நம்பிக்கையற்றது என்பது பிறகு தெரிய வரும்...
 24. "தமிழர்களுக்கு" என்று கேள்விக்குறியெல்லாம் போட்டு சந்தேகத்துடன் கருத்தை பதிய தேவை இல்லை... தமிழர்களுக்கு இருக்கும் உணர்வுகளுக்கு அண்டத்தை ஊடுருவியிருப்பார்கள் என்றே சொல்லலாம்... அண்டத்தை பற்றிய ஆராய்ச்சியில் தமிழர்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பது எதிர்காலத்தில் வெளி வரும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன்... என் குறு மூளையை வைத்துக் கொண்டு சின்னதாக தாங்கள் சொன்னது போல் அண்டத்தையும் பிண்டத்தையும் முடிச்சி போடுகிறேன்... வெயில் காலத்தில் நமது பிண்டமானது குளிர் பானங்களையும், எலுமிச்சை சாறுகளையும், மோரையும் குடிக்க ஏங்கும்... அது போல மழை காலத்தில் சூடாக தேநீரையும், சூடான சூப் வகைகளையும் அடைய துடிக்கும்... அது போல கிரக மாற்றங்களின் போதும், அண்ட மாற்றங்களின் போதும், சுழற்சியின் போதும், Star Dust என்று சொல்லப் படும் நமது உடல் நிலையானது அண்டத்தின் காந்த அழுத்தத்தின் அளவினைப் பொறுத்து மாறும், அதைக் கணக்கில் கொண்டே நமது உடலானது இயங்கும். நமது மூளையும் அதைக் கணக்கில் கொண்டே சிந்திக்கும் செல்களை கட்டவிழ்க்கப் பட்டு தனது வாழ்க்கை முறையை எடுத்துச் செல்லும் என்பது எனது கருத்து... --இதை தான் தலை எழுத்து என்கிறார்களோ...
 25. சூரியன் திடீரென மறைந்து போய் விட்டால் அதை அறிந்து கொள்வதர்க்கே பூமியில் இருப்பவர்களுக்கு சில நிமிடங்கள் ஆகும் என்பதை வேறு ஒரு திரியில் பாலா குறிப்பிட்டிருந்தார். அது போலவே ஒளியானது ஒரு நொடிக்கு 1,86,000 மைல்கள் பிரயாணிக்கும் என்பதை ஒரு வலை தேடலில் காண நேர்ந்தது. அதன் படி நமது பூமியானதின் வயது 4 பில்லியன் ஆண்டுகளாக வைத்துக் கொண்டோமானால், ஒரு நொடிக்கு எத்தனை ஒளி ஆண்டுகள் பயணிக்கிறோமோ, இந்த பிரபஞ்சத்தின் அந்த சுற்றளவில் உள்ள வெளியில் நமது இருப்பு தெரிய வரும். அப்படியே தெரிய வந்தாலும் நமது பூமி 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்ன நிலையில் இருந்ததோ அந்த நிலையை தான் அந்த சுற்றளவில் இருக்கும் இடைவெளிக்கு தெரியவரும். ஒவ்வொரு நொடியும் நமது பூமி 1,86,000 மயில்கள் இடைவெளிக்கு நமது இருப்பை உணர்த்திக் கொண்டே செல்வதனால், ஒவ்வொரு நொடியும் நமது பூமி புதுமையடைதல் ஆகிறதுஎன்ற கணக்கில் எடுத்துக் கொண்டோமானால் நமக்கு மரணமென்பதே இல்லையா? Lucy என்ற ஆங்கில படத்தில் மனிதன் 100% மூளை வளர்ச்சி ஆனால் என்ன நடக்கும் என்பதை காண்பிக்க முற்பட்டிருப்பார்கள். அதில் With out time we never exist, we never die என்ற கருத்தும் மேலோட்டமாக காட்டியிருப்பார்கள். இதற்க்கு பாலா, லீனாரோய் போன்றவர்கள் பின்னூட்டம் அளித்தால் நிறை குறைகளை வெளிக் கொணரலாம்.