தேவப்ரியா

Active Members
  • Content count

    776
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

1 Follower

About தேவப்ரியா

  • Rank
    Guide
  • Birthday 11/16/1967

Contact Methods

  • Website URL http://devapriyaji.wordpress.com/
  • ICQ 0

Profile Information

  • Gender Male
  • Location Chennai
  1. இயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே! இயேசுவின் கதைகளை சுவிசேஷக் கதைகளில் காண்கிறோம். பைபிளிற்கு வெளியே உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு நடுநிலையாளர் ஏற்கும் வரலாற்று ஆதாரம் ஏது கிடையாது. இயேசு சொல்லியதானதாக மத்தேயு சுவியிலுள்ள மலைப் பிரசங்கம், முதலில் வரையப்பட்ட மாற்கு சுவிசேஷத்தில் இது கிடையாது.லுக்கா சுவிக் கதாசிரியர்இதையே இரண்டு மூன்றாகப் பிரித்து தரையில் (மலையில் இல்லை) செய்ததாக புனைந்துள்ளார்.இந்த மலைப் பிரசஙத்தில் ஏசு நிறைய ந்ல்ல போதனைகள் கூறுவதாக அமைந்துள்ளது. அவற்றில் சில நாம் காண்போம்.ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப் பார்ப்போம்.முடிவு. சொல்லுதல் யார்க்கும் எளிதம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் – என்பார் தெய்வப்புலவர். பகைவரிடம் அன்பாயிருத்தல்(லூக் 6:27 - 28, 32 - 36) மத்தேயு5:43' ″உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்;உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.45' இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின்சூரியனைஉதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.46உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிவசூலிப்போரும் இவ்வாறு செய்வதில்லையா? அனைவரையும் சமமாக மதித்து சூரியன் ஒளியையும் மழையையும் கூறிவிட்டு சீடர் அனுப்பும்போது ஏசு சொன்னது என்ன பாருங்களேன். பகைவருக்காக ஜெபம்செய்ய வேண்டுமாம்! திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 - 13; லூக் 9:1 - 6) மத்தேயு10:5இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது:' 'யூதரல்லாதபிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6மாறாக,வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமேசெல்லுங்கள்.. 11நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். யோவான்4:22(சமாரியபெண்ணிடம்)யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.. யூதர்களில் பிரிவான சமாரியரிடம் செல்லாதே, யூதரல்லாதவர்களிடம் செல்லாதே. ஏசு வாழ்வில் நட்ந்தது சமாரியர்கள் என்பவர்களும் யூதர்களே, BCE 200 வாக்கில் பிரிந்தவர்கள், அப்போது பழைய ஏற்பாடு- முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே புனையபட்டு உள்ள நிலையில் சமாரிய பைபிள் நியாயப் பிரமாணங்கள் 5 புத்தகம் மட்டுமே. இவர்கள் அரசியல் ரீதியில் எதிரிக்கு உத்வி செய்ததால் பிரிந்தவர்கள், ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தினுள் அனுமதி கிடையாது. யூதர்களே ஆயினும் கீழாகப் பார்க்கப்பட்டவர்களிடம் போக வேண்டம் என்கிறார் ஏசு. யூத்ப் பிரிவினர்தான் அவர்களும், ஆனால் அவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்கின்றார் இயேசு. இவர் போற்றும்படி நடக்கவில்லை.
  2. http://devapriyaji.wordpress.com/2011/07/11/padmawaapa/ இன்றைய கேரளா என்பவை சங்க காலத்தில் சேர நாடாக இருந்தது. சேர மன்னர்கள் மக்கள் நிலை அனைத்தையும் நாம் சங இலக்கியம் முழுமையிலும் காணலாம். அதிலும் பதிற்றுப்பத்து நூலில் முழுமையாகக் காண்கிறோம் பதிற்றுப்பத்து 4:1 திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலைத் தெளிவாக உரைக்கின்றது. இன்றைய கேரளா என்பவை சங்க காலத்தில் சேர நாடாக இருந்தது. சேர மன்னர்கள் மக்கள் நிலை அனைத்தையும் நாம் சங இலக்கியம் முழுமையிலும் காணலாம். அதிலும் பதிற்றுப்பத்து நூலில் முழுமையாகக் காண்கிறோம். பதிற்றுப்பத்து 4:1 திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலைத் தெளிவாக உரைக்கின்றது. பாடல் 31 - கமழ் குரல் துழாஅய் குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓர்ஆங்குக் கைசுமந்(து) அலறும் பூசல் மாதிரத்து நால்வேறு நனம்தலை யொருங்கெழுந்(து) ஒலிப்பத் 5 தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக் கண்பொரு திகி¡¢க் *கமழ்குரல் துழாஅய்* அலங்கற் செல்வன் சேவடி பரவி 10 நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர இந்த செய்யுளில் ஒரு கோயிலையும் அங்கு செய்யப்படும் விஷ்னு வழிபாட்டையும் கூறுகின்றது. கோயில் கடற்கரையை அடுத்து இருந்தது. பல திசையிலுமிருந்து வந்த மக்கள் கையைத் தலைமேல் கூப்பித் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லி வழிபடுவர். கோயில் மணி ஒலிக்கும் போது விரதமிருக்கும் உண்ணா நோன்பிகள் துறையில் நீராடிப் பின் கோவிலில் வழிபாடு செயவார். கண் பொரு திகிரியும் கமழ்குரல் துழாயும் உடைய திருமாலை இவ்வாறு வழிபடுவர். மண்ணுலகத்தில் மாபெருஞ் ஞெல்வம் படைத்தவன் வண்டன் வானுலகத்துக் குபேரனைப் போல இந்த நார்முடிச் சேரலும் வண்டன் போலப் பெருஞ்செல்வம் படைத்தவன்.நார்முடிச் சேரலின் மனைவி அரண்மனைச் செல்வி வானில் மின்னும் அருந்ததி நட்சத்திரம் போலெ கற்பில் சிறந்தவள். இவ்வாறு கூறப்படும் வழிபாடு நிகழ்ந்த்தாக உள்ள கோயில் பெயர் செய்யுளில் இல்லவிடிலும் இது திருவனந்தபுரம் பத்மநாபரையே குறிக்கும். விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டது போலெ சயனக் கோலத்தில் அனந்தமாகக் காட்சி அளிப்பதினாலே தான் ஊர் திரு அனந்தபுரம் என்க் கோயிலின் பெயராலெ விளங்குகின்றது.
  3. ஆபிரகாமினரின் தீயொழுக்கமும் புறஜாதியினரின் நல்லொழுக்கமும் பழைய ஏற்பாட்டின் புனைக்கதைகளுள் முக்கிய கதாபாத்திரம்- ஆபிரகாம், ஈசாக்கு. இவர்கள் வாழ்நாளில் நடந்ததான கதைகள். பந்ஞம் வர பக்கத்து நாடுகள் செல்கின்றனர். அங்கே- ஆதியாகமம்: 12 10. அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.11. அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து, நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.12. எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள்.13. ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.14. ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.15. பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.16. அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.17. ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.18. அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து, நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?19. இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.20. பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள். ஆதியாகமம்: 20 ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென் தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.2. அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆளனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.3. தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி, நீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.4. அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன், ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?5. இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.6. அப்பொழுது தேவன், உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை. 9. அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து; நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.10. பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி, என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.11. அதற்கு ஆபிரகாம், இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.12. அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.13. என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி, நாம் போகும் இடம் எங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்14. அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான். ஆதியாகமம்: 26 6. ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.7. அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது, இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.8. அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.9. அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து, அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு, அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.10. அதற்கு அபிமெலேக்கு, எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.11. பின்பு அபிமெலேக்கு, இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான். எகிப்தியரும் , கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கும் கடவுள் பக்தியும் தர்மமும் நிறைந்த்வர்களாக உள்ளனர். ஆபிரகாம் இஸ்ரேலின் சிறு தெய்வமான கர்த்தர் தந்தடான நியாயப் பிரமாண சட்டத்திற்கு விரோதமாக சொந்த தங்கையையே மணந்தாராம். ஆதியாகமம்: 20:1212. அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள் லேவியராகமம்: 20:7 ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால் அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.1 அப்பா இருவருக்கும் ஒரே மாதிரியான கதை, அதுவும் அதே ராஜாவுடன். பைபிளியல் அறிஞரகள் ஆபிரகாம்-ஈசாக்கு-யாக்கோபு மூவரும் வெவ்வேறு குழுத்தலைவர்கள், வெவ்வேறு கடவுள்களை வணங்கியவர்கள், பின் நாளில் மூவரையும் இணைத்து கதை செய்யப்பட்டது. புற ஜாதியினர் நியாயமாக் உள்ளனர். ஆபிரகாம் தங்கையை மணந்தார் எனில் ராஜா தாவீதோ பலருடைய மனைவிகளை அபகரித்து கணவர்களை கொன்றவன்.
  4. சிறுமியை கற்பழித்த டிஜிபிக்கு 6 மாதம் சிறை மற்றும் ரூ.1000 அபராதம் 19 வருடத்துக்கு பிறகு தீர்ப்பு வந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 22, 2009, 14:44[iST] http://devapriyaji.wordpress.com/2009/12/25/ruchikaa-vs-dinakaran/ சண்டிகர்: 19 வருடங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியான வளரும் வீராங்கனை ருசிகா கிர்ஹோத்ராவை கற்பழித்த முன்னாள் டிஜிபிக்கு வெறும் 6 மாத சிறைத் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்துள்ளது சண்டிகர் சிபிஐ கோர்ட். 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹரியானா ஐஜியாக இருந்த எஸ்.பி.எஸ். ரத்தோர் என்பவர் வளரும் இளம் விளையாட்டு வீராங்கனையான 14 வயதான ருசிகாவை தனது அலுவலக இல்லத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த 3 ஆண்டுகள் கழித்து ருசிகா தற்கொலை செய்து கொண்டார். கடந்த 19 வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரத்தோருக்கு 6 மாத சிறைத் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது சண்டிகர் சிபிஐ கோர்ட். கடந்த 2002ம் ஆண்டு டிஜிபியாக ஓய்வு பெற்றார் ரத்தோர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ரத்தோர் குற்றவாளியாக நேற்று அறிவிக்கப்பட்டார். இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. ருசிகா விவகாரத்திற்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் பயத்தில் ஹரியானாவை விட்டு போய் விட்டனர். இதையடுத்து ருசிகாவின் தோழியான ரீமு மற்றும் அவரது தந்தை ஆனந்த் பிரகாஷ் ஆகியோர் வழக்கை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ரீமு ஒரு முக்கிய சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.// Ruchika Case Timeline Aug 12, 1990: Rathore, then IG, molests Ruchika at his office-cum-home Sept 3, 1990: Inquiry report indicts Rathore. Sept 20, 1990: Ruchika expelled from school for ‘indiscipline’ Aug 12, 1992: Case referred to Haryana Chief Secretary for advice. Oct 23, 1993: Ruchika’s brother arrested in several theft cases. Dec 28, 1993: Ruchika commits suicide. Nov 1994: Rathore gets promoted; no action on inquiry report. 1994-1997: Complainant Anand Parkash tries to get copy of the inquiry report; finally gets it in 1997. November 1997: Anand Parkash moves High Court August 21, 1998: High Court directs CBI to conduct inquiry· November 16, 2000: CBI files charge sheet July 2002: Rathore retires. Nov 5, 2009: Case transferred from Ambala court to CBI Chandigarh· Dec 11, 2009: Court closes final arguments, sets date for verdict Dec 15, 2009: Case adjourned till December 21 Dec 21, 2009: CBI court gives six-month jail to Rathore அரியான பெண் ருசிகா வழக்கில் தற்கொலைக்குக் காறணமான காவல்துறை அதிகாரிக்கு முறையான தண்டனை பெற்றுத்தர அனைத்து ஆங்கில தொலைக்காட்சிகளும் முயற்சிக்கிறது. ஆனால் தினகரன் அலுவலகத்தில் கமெரா முன் தாக்கிய குற்றவாளிகள் அனைவரும் விடுதலை. தா.கிருட்டிணன் கொலை வழக்கும் அப்படியே. தமிழ்நாட்டில் ஒரு நல்ல மீடியாவே கிடையாதா.
  5. Thanks for every body's wishes I look for comments on my blogs. விவிலியம் மற்றும் இஸ்ரேல் புதைபொருள் ஆய்வு முடிவுகள் பற்றிய பல தம்ழ் ஆங்கிலக் கட்டுரைகள் http://devapriyaji.wordpress.com/ இஸ்ரேல் பழைய ஏற்பாடு பைபிள் விவிலியம் சாலமன் தாவீது (12) கத்தோலிக்கம் மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர் (28) சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர் (25) சுவிசேஷம் புதிய ஏற்பாடு வரலாற்று இயேசு (36) தமிழ்கிறுஸ்டியன் குருட்டு நம்பிக்கயாளர் (14) பலான பாதிரியார் கிறிஸ்துவர் மோசடி கிறிஸ்து (67) பெந்தகோஸ்தே மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர் (3) Christianity ஏசு கிறிஸ்து (92) D.G.S.தினகரன் கிறித்துவம் ஏசு கிறித்து கிறிஸ்து (4)
  6. நன்றி. விவிலியம் மற்றும் இஸ்ரேல் புதைபொருள் ஆய்வு முடிவுகள் பற்றிய பல தம்ழ் ஆங்கிலக் கட்டுரைகள் http://devapriyaji.wordpress.com/ இஸ்ரேல் பழைய ஏற்பாடு பைபிள் விவிலியம் சாலமன் தாவீது (12) கத்தோலிக்கம் மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர் (28) சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர் (25) சுவிசேஷம் புதிய ஏற்பாடு வரலாற்று இயேசு (36) தமிழ்கிறுஸ்டியன் குருட்டு நம்பிக்கயாளர் (14) பலான பாதிரியார் கிறிஸ்துவர் மோசடி கிறிஸ்து (67) பெந்தகோஸ்தே மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர் (3) Christianity ஏசு கிறிஸ்து (92) D.G.S.தினகரன் கிறித்துவம் ஏசு கிறித்து கிறிஸ்து (4)
  7. 18 உள்ளது நண்பரே. ஒரு நபருக்கு 18 குறிகளா.
  8. ஒரு மேற்கத்திய தளத்தை அப்படியே போட்டதால் உங்கள் விமர்சனம். வரலாற்றில் ஆதாரம் என ஒன்றும் கிடைக்காத ஒரு ஏசுவின் விருத்தசேதனம் செய்த ஆண்குறி நுனித்தோல் சர்ச் தங்கள் சர்ச்சில் எனக் காட்டி பணம் சம்பாதிகின்றன. மற்ற கட்டுரைகளை அன்கேயே விமர்சியுங்களேன்.
  9. நான் ஒரு முனைவர் பட்ட மாணவன், இஸ்ரேல் பற்றிய ஆய்வு என் களம். என் மத நம்பிக்கை- நமக்கு மேல் ஒரு சக்தி இறைவன் உள்ளது, ஆனால் நம் செயல்களின் வினைகளின்படி தான் நடக்கும், மேலுள்ள இறைவன் நம் வினைக்கும் ஏற்ப மீண்டும் மீண்டும் பிறக்க வைத்து புவியை அனுபவிக்க வைக்கிறார்.[Agnostic] எல்லா மதப் புராணங்களும் ஆய்வுக்கு உரியவையே, என்னை பைபிளை ஆராயச் செய்ததும் எழுத் வைப்பதும் அவ்விறைவனே. இஸ்ரேல் நாட்டு அகழ்வாய்வுகளைவிட பாரத்தில் கண்டுள்ள அகழ்வாய்வு பல 1000 ஆண்டு முன்பே நாகரீக மேம்பாடு; என்னை உங்களை போல் நம் மூதாதயர் பல ஆயிரம் ஆண்டுகளாய் போற்றி காத்து வந்துள்ளதை ஒதுக்காமல் மதிக்கவே செய்ய வைக்கிறது.
  10. பலரும் இவ்வுண்மைகளை அறிய வேண்டும் என்ற எண்ணத்தோடே பதிக்கப் பட்டுள்ளது. நீங்களும் விமர்சியுங்களேன்.
  11. அற்புதமான படம். நல்ல கருத்துச் செறிவுள்ள கட்டுரை. நன்றி. பூஜை வாழ்த்துக்கள்.
  12. பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்? http://devapriyaji.wordpress.com/ இஸ்ரேல் நாடு அரேபிய பாலைவனத்தின் ஒரு சிறிய பகுதி. ஆனால் இந்நாட்டு புராணக்கதைகளை ஐரோப்பிய நாட்டினர் தங்கள் அரசியல் லாபத்திற்காக- கட்டுக்கதையான இயேசு என்பவர் உயிர்த்தார் என்ற மூடநம்பிக்கையின்படி எழுந்த குழுக்களை ரோம் ஆட்சி வளர்த்து போலே உலகின் பல பகுதிகளிலும் பரப்பியது. பைபிளை ஆய்வு நடுநிலைக் கண்ணோட்டத்தோடு எழுதுபவர்கள், அனைவரும் பைபிள் மறுப்பாளர்கள் அல்லர். உண்மையான வரலாற்று இயேசு யார்? வரலாற்று இயேசு உண்மையில் சொன்னது என்ன? என்ற நோக்கில் ஆய்வுகள் தொட்ங்கின. பழைய ஏற்பாடு என்னும் எபிரேய பைபிளில் பழமையானது எது? எப்போது யாரால் புனையப்பட்டது? கட்டுக்கதையாக மோசே எழுதியது என்பவை உடைய- நடுநிலையாளர்கள் ஆய்வு- பழைய ஏற்பாட்டின் அடிப்படைக் கோட்பாடுகள் வெறும் பொய்யான கட்டுக்கதைகள் என்பதை நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் அனைவரும் ஏற்கின்றனர். ஆனால் 50-75 ஆண்டுகட்கு முன்பான தவறான மேம்போக்கான முடிவுகளை இன்றூம் மழுப்பலாளர்கள் பலர் எழுதிகின்றனர், அவர்கள் பாவம். பொருந்தாத வெற்று மழுப்பல்களை- தெளிவாக தவறு என மறுக்கப்பட்ட விபரங்களைத் தொகுத்து இன்றும் சமாதானங்கள் என புனைவது- அப்பாவிகளின் அறியாமையை காசாக்கும் தொழில் தான். நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான். நீங்கள் உங்கள் இருதயத்தில் புகுத்தப்பட்டுள்ள மூடநம்பிக்கையை கைவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள். இஸ்ரேல் நாடு என்பது முரட்டு அராபியக் கூட்டம், இவர்கள் நாகரிகத்தி மிகவும் பின் தங்கியிருந்தனர். பாபிலோனிய- கிரேக்கப் படையெடுப்புகளுக்குப் பின்பு தான் அவர்கள் நகரம்- கட்டுமானம்- தத்துவம் என அறிவு பெற்றனர். பொ.ச.மு.300-200 இடையே பெரும்பாலான பழைய ஏற்பாடு புனையப் பட்டது, இதற்கு எஸ்ரா-நெகமியா போன்ற புத்தகங்களிலும் மிகத்தெளிவான ஆதாரங்கள்- அதை எவைக் குறிக்கின்றன என்பதில் பெரும் கருத்தொற்றுமை நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர். இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள். ஆய்வு நூல்: R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch” இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து - பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார். இன்னுமொரு நூல் – Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York. How was Hebrews living during OT times. The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them. Page-77 எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும். With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government. Pages- 87,88 ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை. Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them. Page-77 The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle. The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further. It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought. Pages 86-87. வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை. பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை. இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர். பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பட்குதியாகவே இல்லை. இன்னுமொரு நூல் – ஆரம்பத்தில் பார்த்தது. • Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8 இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல். இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள். 1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல. 2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை. 3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது. 4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை. 5. தாவீது- சாலமோன் - ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள். 6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள். 7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை. இந்த புத்தகம் பற்றிய தனி பதிவு விரைவில். மேலும் வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது: Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002- The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information. Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் - சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் - மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது. சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும். இவையே நடுநிலை வரலாற்று ரீதியாக பைபிளியல் அறிஞர்கள் ஏற்கும் உண்மைகள்.
  13. தலைப்பில் சிறு மாற்றம் அனைவருக்கும் திரியின் அடிப்படை புரிய நன்றி தேவப்ரியா சாலமன்