தேவன்

Active Members
  • Content count

    805
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About தேவன்

  • Rank
    Guide
  • Birthday 02/17/1978

Contact Methods

  • ICQ varnan

Profile Information

  • Gender Male
  • Location UK
  • Interests வாசிப்பு மிகவும் பிடித்த பொழுது போக்கு!

Recent Profile Visitors

2,473 profile views
  1. ‘பச்சைத் தமிழன்’

    நான் வாகன ஓட்டுநரிடம் வினவிய போது அது இந்த ATM இல்லை ஏனையவற்றில் இருப்பதாகச் சொன்னார். அப்படி என்றால் இந்த ATM ம் தமிழ்நாட்டில்தானே இருக்கின்றது என்று கேட்டேன்! சிறிய கூலிக்கு ஆள் கிடைப்பது தமிழ்நாட்டில் அரிது என்பதால் வடநாட்டார் வேலை செய்கின்றார்களா? அப்படி என்றால் தமிழ்நாட்டில் பிச்சை எடுத்து திரியும் மக்கள் எல்லாம் வடநாட்டாரா? இல்லை சிறிய கூலிக்கு வேலை செய்வதைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பது கௌரவம் என்று இருக்கின்றதா? தமிழன் நிலத்தில் இருந்து தமிழனின் பணத்தை புடுங்கும் நிர்வாக அலகு எல்லாம் அந்தப்பணத்தில் ஒரு துளியும் தமிழனுக்கு சேரக்கூடாது என்பதில் எவளவு பொறுப்பாக இருக்கின்றார்கள். தமிழன் பணத்தில் கொழுப்பவர்கள் அந்த நிலத்தில் வாழும் மொழியை பரதேசிபோல் ஒதுக்குவது எவளவு திமிரானது.
  2. மகிந்தாவிற்குகூட இப்படியே இரு விசுவாசிகள் கிருக்கின்றான்றார்கள். அவர்கள்: டக்ளஸ், கருணா அவர்களும் இப்படித்தானே சொல்லி தங்கள் கௌரவத்தைக் காப்பாற்றுகின்றார்கள்! அதிகாரத்தின் அடியை வருடுபவர்கள் அவர்கள் அதை அறிவாலோ, இல்லை அன்பாலோ செயவ‌தில்லை. நல்ல அரசியல் நாட்டுக்கு தேவை என்று நினைப்பவனை சாதியும், உறவும், மதமும் அவன் போக்கை மாற்றும் வகைகுரியன அல்ல! அதுபோல் சொந்த நன்மை கருதி கொடிபிடிப்பவனை மக்களின் எந்தவலியும் அவன் கண்ணை உறுத்துவன அல்ல! திருட்டுப்பாவத்தை விட பொய்சொல்லும் பாவம் மெலியது. எனவே திருடன் வாய்யில் பொய் அவனைக் காக்கும் கருவியைப் போன்றது. அவன் தன்னைக் காக்க சொல்லும் வார்த்தைகளை நம்புவதுதான் பரிதாபகரமானது! தமிழ்நாட்டின் அரசியல் என்பது கொலை, கொள்ளை இரண்டும் கலந்த பாவத்தினாலானது. எனவே இதற்கு உத்தியோக பூர்வமமான ஆதரவு தெரிவிப்பவன் பொய் அறியாதவன் அல்ல. பொய் சொல்ல வெட்கப்படாதவன். உதாரணங்கள் ஆயிரம் சொல்லலாம். தேவன் யார் என்று தெரியாது. தேவனின் உண்மைப் பெயர் இது என்று சொல்லவும் தெரியாது. ஆனால் களத்தில் பயன்படுத்தும் தேவனின் பெயர் உண்மையானது இல்லை என்று சொல்லுவதில் இவரது அடிப்படை விவாத மூலப்பொருள் பொய் என்பது எவளவு துலாம்பரமாகத் தெரிகின்றது!
  3. ‘பச்சைத் தமிழன்’

    பெளிநாட்டில் இருப்பவனுக்கு தமிழ்நாடு என்ன செவ்வாயா? வரமுடியாமல் இருப்பதற்கு! ATM களில் தமிழைக் காணவில்லை தமிழ்நாட்டில். நட்சத்திர விடுதிகளில் அவை இருப்பது தமிழ்நாட்டில் என்ற என்ற‌ அடையாளங்களும் அங்கே இல்லை. PVR skywalk இங்கே தமிழும் ஆங்கிலமும் தெரியாதவர்களே பெரிதும் மூலைக்கு மூலை வேலையாளிகளாய் உள்ளார்கள். தமிழ் மட்டும் தெரிந்தவன் தமிழ்நாட்டைத் தவிர உலகில் எந்தப்பகுதிக்கும் போனாலும் கௌரவமாக சேவை பெறுவான். தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றும் இல்லாமையின், இயலாமையின் அடையாளம் ஆகின்றது. தமிழுக்கு கொம்புமுளைத்திருக்கின்றதோ, இல்லை அது தூசணமோ ஆகட்டும் அதை ஒருவன் பிறப்பிற்கு கொடுத்த மொழி அவன் வாழ்கின்ற வழிமுழுக்க அவனுக்கு அதுவே கண் அந்தக் கண்ணைக் குருடாக்கி அவனை அரை மனிதனாக்குவது மனித உரிமையை மதிக்காத செயல். உலகத்தின் ஏனைய பகுதிகளில் ஆளும் தமிழ் தெரியாதவார்களே செய்யாத அநீதியை தமிழை தம் மூச்சு என்று மேடைமீது வேசம் போடும் பீடைகள் எத்துணை கேட்டைத் தமிழுக்கும், மனித உரிமைக்கும் இளைத்து விட்டார்கள்! இனியும் எவன்டா தமிழைத் தாழ்த்த முடியும் என்ற கேடை அல்லவா விட்டு வைத்திருக்கின்றார்கள்!
  4. தன்னை துண்டு, துண்டாக வெட்டினாலும் கலைஞரை இகழமாட்டேன் என்று தன்வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலம் தந்த ஒருவன் தன் இனத்தை துண்டு, துண்டாக வெட்டினாலா கலைஞரை இகழும் நியாயத்தையா பேசப்போகின்றான்! தனது மானத்தின் தலையைக் காப்பாற்ற முடியாத பகையுடன் ஒருவன் அதை இழந்த பின்னும் போராடுகின்றான் என்றால் அந்த அவனது நிலமை அவன் துணியும் முயற்சிக்கே அவமானம். போடி, போடி என்று சொன்னாலும் அதை தூசி என்று பக்கம் பக்கமாய் வருவாள் தாசி இதுதான் மானத்தையே இழந்தவள் செய்கின்ற கௌரவம் பார்க்காத தொழிலுக்கு உதாரணம்! பேருக்கு பேராய் தனது பேருக்கு மானத்தை கப்பல் ஏற்றிய இந்தக் கௌரவம் யாருக்கு இந்த மாலை சூடும் உத்தியோகம் பார்க்கின்றதாம்!
  5. ‘பச்சைத் தமிழன்’

    கொள்ளைக் காறன் வீட்டு நாய் சோத்தில உப்பு இல்லை என்று அழலாம். அது என்ன பேச்சில நியாய தர்மம் இல்லை என்ற கவலை!
  6. மிருகங்கள் தனியாக ஏமாந்திருக்கின்ற நேரம் பார்த்து வேட்டையாடுமாம் ஒரு வலி மெலிந்த ஓநாய் ஒன்று. இதற்கு உதவியாக எப்பவும் ஒரு நாய் ஒன்று திரியுமாம், அது ஏனைய மிருகங்களைப்பார்த்து அந்த 'ஓநாயை' ஓநாய் இல்லை என்று சொல்லி பிற மிருகங்களை நம்பவைப்பதே அதன் ஒரே வேலையாம். நாட்பட நாட்பட அதன் முயற்சி ஓநாயை நாய் என்று நம்பவைக்கும் பணியில் தோற்றுப் போனது அது மட்டும் அல்ல அதன் விலையாக நாயாக இருந்த அதுவும் ஓநாயாகப் பார்க்கப்படும் நிலையே முடிவானது!
  7. ஒரு புத்தகம் ஒன்றில் நான் வாசித்த ஒரு விடயம் என் ஞாபாகத்திற்கு இப்போது வருகின்றது, அது: பிரமிட்டுக்களுகுள் இருக்கும் மம்மிகள் ஏன் பழுதடைவதில்லை? காரணம் அந்த பிரமிட்டுக்களின் வடிவ அமைப்பே பிரதான காரணம் என்று இருந்தது. இதை நிரூபிக்கும் வகையாக காகித அட்டையில் அந்த வடிவ அமைப்பை ஒத்தவனவாக அமைத்து உள்ளே பாலை வைத்துப் பாருங்கள், அந்தப் பால் பழுதடையாது காணப்படும் என்றும் இருந்தது. நான் இதை துருப்பளவும் நம்பவில்லை. பதிலுக்கு அந்த பரிசோதைனையையும் செய்து பார்க்கவும் இல்லை. பரிசோதனை மிக இலகு என்பதற்காக பச்சை முட்டாள்தனத்திற்கு ஆராட்சி தேவைதானா எனபதே எனது முடிவாக இருந்தது. இப்போதுதான் விடயத்திற்கு வருகின்றேன் சுபவியின் கட்டுரையினை வாசிப்பது இலகு என்பதற்காககூட நான் வாசிக்க முயற்சிப்பதில்லை. பச்சை முட்டாள்த்தனத்தை அறிவுடைமை என்று சந்தேகிப்பதுகூட முட்டாள்த்தனமே ஆகின்றது. ஈழப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்றால்க்கூட கலைஞர் தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதியை தன் கண்ணால் நோக்க முடியவில்லை என்று சொன்னால், அவன் சுத்தமான பொய்யன் என்றே ஆவான்! ஒரு பாவியைக் காவும் ஒருவன் தோளுக்கு காரணமாகும் அந்த பந்தம் அவன் வயிற்றில் இருந்துதான் விளைந்திருக்கும், இருந்தாலும் அதை மனதில் விளைந்ததாக காட்ட முற்படுவது அவன் தன் கௌரவத்தைக் காப்பாற்றும் முயற்சியினால் ஆனது!
  8. ‘பச்சைத் தமிழன்’

    ஒரு இனம் தான் பிறந்து வழர்ந்த சூழலில் தனக்குத் தெரிந்த மொழியால் ஒரு அரசநிர்வாக அலகுக்குள்ளோ, இல்லை ஒரு தனியார் நிர்வாக அலகுக்குள்ளோ ஒரு சேவையைப் பெறவேண்டும் எனில் தனக்குத் தெரிந்த மொழியால் அதைப் பெறக்கூடிய நிலை இல்லை என்றால் இது மனித உரிமைக்கு எதிரானது. ஆனால் தமிழ்நாட்டில் எந்த ஒரு அலகுக்குள் போனாலும் தமிழ் செல்லாத மொழி. உலகத்திலே அதிக அளவான சனத்தொகை உள்ள தமிழ்நாட்டில் தமிழால் எதுவும் செய்ய முடியாத பரிதாபம். மிகக் குறைந்தளவு சனத்தொகையாக வாழும் ஏனைய நாடுகளில் அவர்கள் தமிழை தம் விருப்பத்திற்கு பயன்படுத்த முடிகின்றது. தமிழை மூச்சுக்காற்றுக்கு நிகராக பேசுபவர்களின் ஆட்சியின் பயனையும், தமிழ் என்னவெனேறே அறியாத அயல் நாடுகளின் ஆட்சியின் பனனையும் உற்று நோக்குங்கள்!
  9. பசும் பால் (பெரியார்) நல்லதா கெட்டதா என்ற வாதம் இருக்கட்டும்; எமது கண்ணும் அறிவும் அறிந்த விசப்பாத்திரத்திற்குள் (திமுகவுகுள்) வைத்துக் கொண்டு பாலின் தரத்தை நிர்ணயம் செய்வதில் என்ன பயன்?
  10. சூதாட்டத்தில் தர்மன் அனைத்தையும் தொலைத்த நிலையை அந்தக் காட்சியில் துரியோதனனால் கட்டளையிடப்பட்டு துர்ச்சாதனன் அந்தப்புரம் சென்று நடந்த நிலையினைச் சொல்லி சபைக்கு வருமாறு அழைக்கின்றான். அப்போது துரோபதி கேட்கின்றாள்! "தர்மன் தன்னை இழந்த பின் எம்மை இழந்தானா, இல்லை எம்மை இழந்தபின் தன்னை இழந்தானா?" தன்னை இழந்தபின் அவன் அடிமை, அவனால் எம்மை இழக்க முடியாது என்பது வாதம்! அதுபோல் திமுகவில் இதன்னை இழந்தவன் அவனில் நியாயம், தர்மம் இவற்றை இழந்த பின்னால்த்தான் திமுகவின் அடிமை ஆகமுடியும் அப்படி அந்த அறிவுக்குருடன் எப்படி நீதி, நியாயத்தைப் பேசுகின்ற அருகதை பெறமுடியும்!
  11. கலைஞரின் ஈழத்தமிழகம் :)

    குசாஞ்சுக்கு தமிழில் அறிவு மேலோட்டமா? இல்லை பொது அறிவு மேலோட்டமா? சாணத்தை சந்தணம் என்று வாதாடவருபவன், முடிவு அவனைக் அறிவு கேவலப்படுத்தும் (அவன் அறிவை, உணர்ச்சியை) என்பதை அறியாதவன் அல்ல. அந்தக் கேவலத்தையே எதிர் கொள்ளத்தயாரான ஒருவனை, அவமானப்படுதி துன்பப்படுத்தலாம் என்று எண்ணுபவனின் முயற்சிதான் பரிதாபகரமானது. குப்பையை குப்பையால் துன்புறுத்தப்பட முடியாது.
  12. கலைஞர் - வதந்தி

    'தேவன்' சாதிப்பேர் என்றால் 'தேவி' சாதிப்பேர் அல்லவா? தமிழ்நாட்டில் பொதுவாக பிச்சை எடுப்பதைக் காட்டிலும் அவமானப்படும் விடயம் தமிழில் பேசுவத்தே (பிச்சை எடுப்பவனே தொழிலால் தாழ்ந்த தன் கௌரவத்தை பேசும் மொழியால் ஆங்கிலத்தில் பேசி மீள்க்க ஆசைப்படுகின்றான்) இந்த விதிக்குள் வாழும் மொழியின் வளர்ச்சி செழிப்படையுமா? இல்லை தாழ்வடையுமா? இந்தக் கலாச்சாரத்துக்குள் வாழ்ந்து கொண்டு தனக்கு புரியாததை; தமிழ் அல்ல‌ என்று சொல்லுவது தமிழைக் கேவலப்படுத்துவதற்கு ஒப்பானது! திருக்குறள், திருமந்திரம் இவை எல்லாம் உங்களுக்கு புரிகின்ற வகைக்குரியவைதானா?
  13. கலைஞரின் ஈழத்தமிழகம் :)

    தனிமனிதத் தாக்குதலால் பதிலடி தரவேண்டியதேவை இதுபோன்ற தேவைகளால்த்தான் உருவாக்கப்படுகின்றது குசாஞ்! தேவன் என்னுடைய இயற்பெயர் இல்லை என்று சொல்லும் உமக்கு எனது இயற்பெயர் தெரியவில்லை என்றால் எப்படிப்பட்ட பம்மாத்துதனமான பதிவுகள் கொட்டித்தள்ளுகின்றீர்!
  14. கலைஞரின் ஈழத்தமிழகம் :)

    ஐயா! உண்மையான பெயர் வேறு என்று தெரிவதற்கு முன்னால் தெரியப்பட்டு இருக்க வேண்டியது அந்த உண்மையான பெயர் அல்லவா? அப்படி என்றால் உங்கள் வாக்கில் இருக்கின்ற உண்மையை இந்த உண்மையைக் கொண்டு ஆவது அளப்பதற்கு அருள்பாலியுங்கள்!
  15. கலைஞர் - வதந்தி

    மரணத்தை பரிகாசம் செய்யும் உரிமை சாகாவரம் பெற்ற ஒருவனுகு மட்டுமே உண்டு! ஆனால் வயதிற்கும், தன் வலிக்கும் பொருதம் இல்லாத பொறுப்புக்களைக் கொண்டிருந்தால் எந்த சுண்டங்காய்க்கும் இந்த நிலையை இழக்காரம் செய்யும் உரிமை உண்டு!