லக்கிலுக்

Active Members
 • Content count

  9,794
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About லக்கிலுக்

 • Rank
  Philosopher

Contact Methods

 • Website URL http://madippakkam.blogspot.com
 • ICQ 0

Profile Information

 • Gender Male
 • Location சென்னை

Recent Profile Visitors

3,730 profile views
 1. கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? ஜாதகம், பெயர்ராசி எல்லாம் பார்க்காமல், வத்தலோ தொத்தலோ கிடைத்த பெண்ணை மணந்து கொள்ளுங்கள். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் ஆசைப்படுங்கள். ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஸ்டாக் மார்க்கெட், பொருளாதார மந்தம், வேலை இழப்பு, இடைத்தேர்தல், மின்னணு இயந்திரம் குளறுபடி, ஜெயலலிதா, கொடைநாடு, கலைஞர் கடிதம், பெட்ரோல் விலை உயர்வு, துவரம்பருப்பு விலை உயர்வு, தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு, எண்கவுண்டர், ஈழம், அல்குவைதா, அமெரிக்கா, கியூபா, எதிர்வீட்டு பிகர், பக்கத்து வீட்டு நாய்க்குட்டி, தெருமுனை பிள்ளையார் கோயில், 23சி பஸ், லேடீஸ் காலேஜ், பார்க், பீச், இத்யாதி.. இத்யாதி பிரச்சினைகள், மகிழ்ச்சிகள், கோபங்கள் எல்லா கருமத்தையும், கந்தாயத்தையும் மறந்துடுங்க. வாழும் காலத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு இன்னமும் இருப்பது இரண்டேகால் வருடம் மட்டுமே. 2012 டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது. இப்படித்தான் பீதியைக் கிளப்பி, எல்லோருக்கும் பேதியை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டர்நெட் சைட்களில். மாயா என்றால் நமீதா நடிக்கும் கிளுகிளு படம் மட்டுமல்ல. மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது. மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது. மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்துவிட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது. சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா? சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை. துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா? ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது. சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள். அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை பெற்ற நீங்கள் குமுதம் ரிப்போர்ட்டரில் இந்த கட்டுரையை வாசிக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை. துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா? ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறி சீரும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிகள் மனிதக்குலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த அழிவுகளையே உறுதி செய்கிறது. சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள். மாயர்களைப் போலவே உலகில் வாழ்ந்த பல இனத்தவர்களுக்கும் பிரத்யேக காலண்டர்கள் இருக்கிறது. அந்த காலண்டர்களும் கூட உலகம் அழியப்போவதாகவே பயமுறுத்துகிறது. என்ன ஆண்டுதான் கொஞ்சம் முன்னே, பின்னே 2011, 2013 என்று மாறியிருக்கிறது. உண்மையில் 2012ல் என்னதான் நடக்கப் போகிறது? எதிர்காலம் குறித்து சீட்டுக்கட்டிலிருந்து கிளி எடுத்துப்போடும் சீட்டை வைத்து சொல்லப்படும் பலன்களை நீங்கள் நம்புகிறீர்களா? இரத்தமும், சதையும், எலும்பும், மூளையும், சிந்தனைகளுமாய் வளர்ந்த உங்களின் எதிர்காலம் ஒரே ஒரு நெல்லுக்காக கிளி அவசரமாக எடுத்துப்போடும் சீட்டில்தான் இருக்கிறதா என்ன? கிளிஜோசியரின் கிளி மாதிரி தான் ஆளாளுக்கு புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் 1999ஆம் ஆண்டு முடிந்ததுமே உலகம் அழிந்துவிடும் என்று பலரும் டுமீல் விட்டுத் திரிந்தார்கள். நாஸ்ட்ரடாமஸ் கணித்திருக்கிறார், அவரின் கணிப்பு பொய்யானதில்லை என்று அடித்துப் பேசினார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் பாகுபாடின்றி நடுநடுங்கி செத்தது உலகம். உலகம் தான் அழியப் போகிறதே என்ற எண்ணத்தில் பல்வேறு சமூகக் குற்றங்கள் நடந்தது. நம்மூர் கிராமப்புறங்களில் கூட இந்த பீதியைப் பயன்படுத்தி தென்னந்தோப்புகளிலும், கம்மாய்க்கரைகளிலும் பல பாலியல் குற்றங்கள் நடந்ததாக பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம். 1999 முடிந்து சரியாக பத்து வருடங்கள் கடந்துவிட்டது. நாமெல்லாம் செத்தா போய் விட்டோம்? உலகம் தோன்றியதிலிருந்தே உலகின் கடைசிநாளான ஜட்ஜ்மெண்ட் டே பற்றி பேசிக்கொண்டே தானிருக்கிறார்கள். உண்மையில் இன்று நம் பூமிக்கு அச்சுறுத்தலாக இருப்பது புவி வெப்பமடைதல் (குளோபல் வார்மிங்). மனிதர்களுக்கு மூளை வீங்கிப்போய் அறிவியலில் அக்குவேறு, ஆணிவேறாக அலசி, எக்குத்தப்பாக கண்டுபிடித்து தொலைத்த கண்டுபிடிப்புகள், நவீன வசதிகள் தான் (குறிப்பாக வாயுமண்டலம் மாசடைவதற்கு காரணமான தொழிற்சாலைகள், ஏசி இயந்திரங்கள்) மனிதகுலத்துக்கு வினையாக தோன்றியிருக்கிறது. நாம் எப்போது அழிவோம், எப்படி அழிவோம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அழியவேண்டிய நேரத்தில் நிச்சயமாக அழிவோம். அது நிச்சயமாக இப்போது அல்ல. ஆகையால் இப்போதைக்கு உலகம் அழிவதைப் பற்றிய பழைய கணிப்புகளை வாசிக்காமல், ப்ரீயாக விடுவதே நம் மனநிம்மதிக்கு உத்தரவாதம் தரும் செயலாக இருக்க முடியும். 2012 டிசம்பர் மாதம் ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் முடிவடையும் என்று ஒக்கேனக்கல் செயல்பாட்டு கால அட்டவணைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திட்டம் முடிவடைந்தாலும் சரி, முடிவடையா விட்டாலும் சரி. ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் குறித்த புலனாய்வுக் கட்டுரை ஒன்றினை 2013 ஜனவரி மாத குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்களும், நானும் படித்துக் கொண்டிருக்கப்போவது மட்டும் உறுதி. (குமுதம் ரிப்போர்ட்டர், 08-08-2009)
 2. தமிழீழ விடுதலை போராட்டம் - ராஜிவ்

  இந்த கட்டுரை முழுக்க பேத்தல். 1991 தேர்தல் நிலவரம் எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. மதவாதிகளாலும், ராஜீவ், சந்திரசேகர் போன்ற பதவி வெறியர்களாலும் முதுகில் குத்தப்பட்டு வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்து, சந்திரசேகரும் ஒன்றரை மாதத்தில் கவிழ்ந்து நடந்த தேர்தல். நாடு முழுக்க வி.பி.சிங்குக்கு ஆதரவான அலை இருந்தது. ராஜீவ் மரணம் மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால் வி.பி.சிங் மீண்டும் ஆட்சிக்கு மெஜாரிட்டியில் வந்திருப்பார். ராஜீவ் படுகொலை அனுதாப அலையிலேயே கூட மைனாரிட்டியாக தான் காங்கிரஸ் வரமுடிந்தது. ராஜீவ் கொல்லப்படாமல் இருந்திருந்தால் காங்கிரசுக்கு அவர் கையாலேயே கருமம் செய்திருந்திருக்கலாம். ராஜீவ் இந்தியாவில் செல்லாக்காசு ஆகியிருப்பார்.
 3. காதல் என்ற சொல்லுக்கு எந்த பொருளுமில்லை. பெண்ணின் உடல் மீதான ஈர்ப்பும், காமமுமே நம் சமூகத்தில் காதல் என்று சொல்லப்படுகிறது. இந்த காதல் என்ற கருமாந்திரம் இல்லாவிட்டால் இந்தியர்கள் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு முன்பே பல்பை கண்டுபிடித்து ஆட்டு ஆட்டுவென்று ஆட்டியிருப்பார்கள் என்ற சிந்தனையை உரக்கச் சொல்லவே காதல் கதை என்ற செல்லுலாய்டு குப்பையை கொட்டியிருக்கிறார் வேலுபிரபாகரன். சென்சார் இப்படத்தைப் போட்டுக் குதறியதில் எந்த தப்புமேயில்லை. பாடாவதி படத்தை திரும்ப திரும்ப சோர்வடையாமல் போட்டுப் பார்த்து வெட்டித்தள்ளிய சென்சார் அதிகாரிகளுக்கு கலாச்சார அமைச்சகம் சம்பள உயர்வு கொடுக்கலாம். பாடல் காட்சிகளிலும், ஏனைய காட்சிகளிலும் தாராளமாக செமி நியூட். படத்தில் நடித்த நடிகைகளுக்கு மார்பகம் குறித்த பிரக்ஞையே சற்றும் இல்லை என்பதால் தமிழ் சினிமா ஹாலிவுட் அளவுக்கு சைஸில் பெருத்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாம். காதல் மற்றும் காமம் குறித்த வேலுபிரபாகரனின் உளறல்களுக்கு இடையே பகுத்தறிவுப் பிரச்சாரக் கொடுமை. ஒரு காட்சியில் வேலுபிரபாகரன் பெரியார் வேடத்தில் தோன்றிப் படுத்துகிறார். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கிறது? கொஞ்சமும் சரக்கில்லாத மூன்றாந்தர இந்த பிட்டுப் படத்தை எடுத்துவிட்டு இத்தனை நாளாக ஊடகங்களில் வேலு பிலிம் காட்டிக் கொண்டிருந்தது ரொம்பவும் ஓவர். ரஜினிகாந்த் இப்படத்துக்கு பொருளாதார ரீதியாக உதவியிருந்தால் அதைவிட நகைச்சுவை வேறெதுவுமில்லை. ஹீரோயின் ஷெர்லினின் கண்கள் மட்டும் ஆறுதல். முதல் படமென்றாலும் திறந்த மனதோடே கேமிராவை அணுகியிருக்கிறார். பாபிலோனா உள்ளிட்ட மற்ற கட்டைகளும் தங்கள் திறமையை சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார்கள். இவர்களின் இடுப்புக்கும், மார்புக்கும் ஸ்பெஷல் லைட்டிங் அமைப்பதிலேயே கேமிராமேனின் மொத்தக் கவனமும் இருந்திருக்கிறது. பெண் உடல் மீதான கிளர்ச்சி இளைஞர்களுக்கு இருப்பதாலேயே நாட்டில் நடைபெறுகிற குற்றங்களில் எண்பது சதவிகிதம் பாலியல் குற்றமாக இருக்கிறது என்று முதல் காட்சியிலேயே பாடம் போதிக்கும் வேலுபிரபாகரன் இப்படம் மூலமாக தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. மாறாக மேலும் பாலியல் குற்றங்கள் முன்பைவிட தீர்க்கமாக நடைபெற உந்துசக்தியாக இப்படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார். வரைமுறையற்ற காமத்துக்கு சுதந்திரம் கோருகிறார். இந்த கண்ணறாவியைப் பார்த்துவிட்டு எந்த மாதிரியான விவாதம் சமூகத்தில் கிளம்பும் என்று அவர் எதிர்பார்க்கிறாரோ புரியவில்லை. பிரபல கவர்ச்சி நடிகையை வேலுபிரபாகரன் திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் வாழ்ந்திருக்கிறார். அவர் மீது கொண்டது காதலல்ல, வெறும் காமம் என்றுணர்ந்து விலகியிருக்கிறார். பிறகு வேறொரு பெண்ணிடம் காதல்வசப்பட்டு.. மன்னிக்கவும் காமவசப்பட்டு, பின்னர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். எனவே காதல் என்பது பொய், காமம் என்பதே மெய் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இப்படியாக சொந்தவாழ்வில் ஏற்பட்ட சில காம, காதல் குளறுபடிகளால் மனம் குழம்பி ‘வேலுபிரபாகரனின் காதல் கதை' என்று படமெடுத்து மக்களையும் குழப்ப கிளம்பியிருக்கிறார். ஆர்ட் டைரக்‌ஷன் தவிர்த்து தொழில்நுட்பரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் மகா மகா மட்டமான படைப்பு இது. ஒரு மேட்டர் படத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டுமோ, அப்படியே கச்சிதமாக இசையமைத்திருக்கிறார் இசைஞானி. தியேட்டரில் எக்ஸ்ட்ரா பிட் ஓட்டாதது ஒன்றுதான் பாக்கி. மற்றபடி முழுநீல வண்ணப்படம். அரங்கு நிறைந்து ஓடுகிறது. இதுபோதாதா வேலுபிரபாகரனுக்கு?
 4. புதுப்பேட்டை

  செல்வராகவன் இயக்கிய படமல்ல. சென்னையின் டெட்ராய்ட். அண்ணாசாலையிலிருந்து தாராப்பூர் டவர்ஸ் அருகே லெஃப்ட் அடித்து நேராக போனால் சிந்தாதிரிப்பேட்டை. பாலத்தில் இடதுபக்கமாக திரும்பினால் புதுப்பேட்டை. இருசக்கர வாகன நட்டு போல்ட்டிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் வரை கிடைக்குமிடம். கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் மார்க்கெட் இது என்கிறார்கள். ஆயிரம் கடைகள் இருக்கிறது. எல்லாக் கடைகளுமே இரும்புக் குப்பைகளால் நிரப்பப் பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு ‘ஆட்டோ நகர்' என்று பெயர் வைக்க வேண்டுமென்பது இப்பகுதி வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கை. கடை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ‘பாய்'கள். ஆங்காங்கே ‘இன்ஷா அல்லா' அதிகமாக கேட்கமுடிகிறது. பொதுவாக இந்த இரண்டு பத்திகளையும் வாசிப்பவர்களுக்கு விவகாரமாக எதுவும் தெரிந்திருக்காது. பொல்லாதவன் படத்தில் தனுஷின் பைக் தொலைந்துவிடும் அல்லவா? உடனே தனுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே? அந்த இடம் தான் புதுப்பேட்டை. சென்னையிலும், புறநகரிலும் எந்த பைக் தொலைந்தாலும் எல்லோரும் ஓடிப்போய் தேடுவது புதுப்பேட்டையில் தான். தேடிய எவருக்குமே இதுவரை பைக் திரும்ப கிடைத்ததாக சரித்திரமில்லை. பத்தே நிமிடத்தில் ஒரு பைக்கை பார்ட் பார்ட்டாக பிரித்து போடக்கூடிய வல்லுநர்கள் நிறைந்த இடம் இது. சீப்பாக காருக்கும், டூவீலருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது வேண்டுமென்றால் தாராளமாக புதுப்பேட்டைக்கு போகலாம். செகண்ட் ஹேண்டில் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விலைக்கு எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அந்த காலத்து பேபி ஸ்கூட்டருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் கூட இன்னமும் இங்கே கிடைக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிற்கான கார் ஆடியோ செட்டை நம் நண்பர் ஒருவர் இங்கே இருபதாயிரத்துக்கு முடித்துக்கொண்டு வந்தார் என்றால் நம்ப கடினமாக தானிருக்கும். இங்கே ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொன்று ஸ்பெஷல். டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க வெங்கடாச்சல நாயக்கன் தெரு. லைட், இண்டிகேட்டர், மீட்டர் போன்ற எலக்ட்ரிக்கல் சமாச்சாரங்களுக்கு வெங்கடாச்சல ஆசாரி தெரு. கார், வேன் ஸ்பேர்களுக்கு ஆதித்தனார் சாலை. ஒட்டுமொத்தமாக பாடியே (சேஸிங் வகையறாக்கள்) வேண்டுமானால் கூவம் சாலை. புதுப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ‘இன்னா சார் வோணும்? சொல்லு சார். எதா இருந்தாலும் கொடுத்துடலாம்' என்று எதிர்படும் எல்லா கடைக்காரர்களுமே சொல்லி வைத்தாற்போல கேட்பார்கள். நான் போன அன்று இன் செய்த சட்டையை எடுத்து விட்டேன், தலையை கலைத்து விட்டுக் கொண்டேன். வாயில் ஒரு மாணிக்சந்த் போட்டு, இல்லாத கடுமையை ஒரு ‘கெத்'துக்காக முகத்தில் வைத்துக்கொண்டேன். மூஞ்சை பார்த்து ஏமாளி என்று முடிவுகட்டிவிடக்கூடாது இல்லையா? “சிடி டான் டேங்க் வேணும்ணா. இருக்கா?” ”நேரா போய் ரெண்டாவது ரைட் அடி” ரெண்டாவது ரைட்டு ரொம்ப குறுகலானது. டூவீலர் போவதே கடினம். இருபக்கமும் ஏராளமான வண்டிகள் கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். தெரியாத்தனமாக ஒரு ஆட்டோக்காரர் உள்ளே நுழைந்துவிட்டாலும் போதும். செம்மொழியில் அர்ச்சனை கிடைக்கும். “த்தா.. பிஸ்னஸ் அவர்லே எவண்டா மயிரு மாதிரி வண்டியை உள்ளே எட்தாந்தது?” என்பார்கள். ரெண்டாவது ரைட்டு அடித்தால் இருபுறமும் பெட்ரோல் டேங்குகள் தோரணமாக கட்டிவிடப்பட்டிருந்தன. பல்சர், யூனிகார்ன் என்று லேட்டஸ்ட் ப்ரீமியர் பைக்குகளின் டேங்குகளும் கிடைக்கிறது. அப்படியே புத்தம்புதுசாக ஒரிஜினல் பெயிண்டின் கருக்குலையாமல். ஒவ்வொரு கடையாக ”டாங்க் இருக்கா?” என்று கேட்டால் “எண்ணாண்டே டான் டேங்க் இல்லை, ஆனா ஆறாவது கடையிலே இருக்கும்” என்று தன் சகப்போட்டியாளர்களுக்கே பிஸினஸ் பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆறாவது கடையில் ஒரு பாய் உட்கார்ந்திருந்தார். ”சிடி டான் டேங்க் வேணும்னா. இருக்கா?” “இருக்குண்ணா” வண்டியை விட்டு இறங்கவே கொஞ்சம் பயமாகதானிருக்கிறது. “டேங்கு காட்டுண்ணா” “எறங்கி வாண்ணா. மேல இருக்கு. மாடிக்கு போ எடுத்து கொடுப்பாங்க” வண்டியை ஓரமாக நிறுத்தி, சைட் லாக் போட்டால், ”சைட் லாக் போடாதே” என்கிறார். கொஞ்சம் தயங்கியதுமே புரிந்துகொண்டவராக “புதுப்பேட்டைலே மட்டும் எவன் வண்டியும் திருடுபோவாது!” என்றார். தயங்கியபடியே வண்டியை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மாடிக்கு சென்றேன். தரையே தெரியாத அளவுக்கு வண்டிகளின் ஸ்பேர் பார்ட்ஸ். மேலேயும் ஒரு பாய். “சிடி டான் டேங்க் வேணும்னே” “இன்னா கலரு” “பிளாக்” ஒரு பையனை அனுப்பி “சாருக்கு ஒரு டாங்க் எடுத்துக் கொடு!” என்றார். பையன் உள்ளே எங்கேயோ அழைத்துப் போனான். சில படிக்கட்டுகள் ஏறி, சில படிக்கட்டுகள் இறங்கி சந்து மாதிரி போய்க்கொண்டே இருக்கிறது. கீழே விட்ட வண்டி என்னாகுமோ என்ற பயம் வேறு. ஒரு அறைக்கதவை திறந்து லைட் போட்டான். உள்ளே குறைந்தபட்சம் நூறு, நூற்றி ஐம்பது பெட்ரோல் டேங்குகளாவது இருந்திருக்கும். கவரில் சுற்றிவைக்கப்பட்ட ஒரு டாங்கை கொடுத்து “போய் அண்ணன் கிட்டே ரேட் பேசிக்கோ!” என்றான் அந்தப் பையன். “என் வண்டிலே வயலட் ஸ்டிக்கரு. இது பிரவுனா இருக்கே?” “இங்கல்லாம் அப்படித்தான். கிடைக்கிறதை (?) தான் கொடுக்க முடியும்” வேறு வழியின்றி அண்ணனிடம் போய் ரேட் பேசினேன். “எவ்ளோண்ணா” “கொடுக்குறதை கொடு” “பரவால்லை ரேட்டு சொல்லிக்கொடுண்ணா” - வெளியே நின்ற வண்டி என்ன கதியோ? “ரெண்டாயிரம் கொடு” “புதுசே அவ்ளோ தாண்ணா” “புதுசு மூவாயிரத்து இருநூறு இன்னிக்கு ரேட்டு. எங்களாண்டியேவா தம்பி?” நான் ஐநூறில் ஆரம்பித்து ஆயிரத்து நூறுக்கு வந்தேன். அவர் நூறு, இருநூறாக குறைத்துக் கொண்டே வர நான் இருபத்தைந்து, ஐம்பதாக ஏறிக்கொண்டே வந்தேன். கடைசியாக ஆயிரத்து இருநூறில் முடிந்தது. அச்சு அசலாக புது டேங்க். ஷோருமில் வாங்கியிருந்தால் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் ஆகியிருக்கும். டேங்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக தாவிக்குதித்து என் வண்டிக்கு ஓடினால்.. நல்லவேளை எதுவும் ஆகவில்லை. கீழே கடையில் இருந்த பாய் புன்னகைத்தார். ”வேறு எது வேணும்னாலும் வாங்க. ஊடு எங்கேருக்கு?” “நந்தனம்னே, நன்றி. கெளம்புறேன்” வண்டியை வெளியே எடுத்துக் கொண்டுவரும்போது தெருமுனையில் ஒரு புது ஸ்பெளண்டரை அக்கு அக்காக பிரித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தில் எவருக்காவது ஸ்பெளண்டர் டேங்க் வேண்டுமென்றால் பாய் கடையில் சகாய விலைக்கு கிடைக்கும்.
 5. லக் - மரணவிளையாட்டு!

  படம் சென்னையில் ஹிட்டு. ஒருவேளை ஸ்ருதிஹாசன் நடித்திருப்பதால் இருக்கலாம்.
 6. நிர்வாகி வாழ்வாங்கு வாழ்க!

 7. ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களை சில நண்பர்களோடும், கள உறுப்பினர்கள் பாரி மற்றும் பகுத்தறிவு போன்றோருடனும் ஒருமுறை சந்தித்து பெரியாரின் எழுத்துகள் குறித்துப் பேசினோம். பெரியாரின் எழுத்துக்களை தவறான காண்டெக்ஸ்ட்டில் (துக்ளக் போன்றவர்கள் செய்வது போன்று) யாரும் பயன்படுத்திவிடக்கூடாது என்பதாலேயே கழகம் கண்டிப்போடு செயல்படுவதாக கூறினார். அது நியாயமான காரணமாகவே பட்டது. குஷ்பு - கற்பு விவகாரத்தின் போது தந்தை பெரியாரின் சிந்தனைகளை அவரவர் இஷ்டத்துக்கு வளைத்து விளையாடிய விளையாட்டு அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
 8. நன்றி தோழர்களே! புகுந்தவீடு என்னதான் வளமாக இருந்தாலும், பெண்ணுக்கு தாய்வீட்டு சீர்தான் அதிக பெருமிதத்தை தரும்... இந்த திரி அதுமாதிரியான பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது! :)
 9. நமீதா இட்லி!

  பொருட்களை விற்பதற்காக திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பெயரில் பிராண்டிங் செய்யப்படுவது உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பாக நதியா கம்மல், நதியா வளையல் என்று கூறி கம்மல், வளையல் வகையறாக்களை விற்றார்கள். அதன்பின்னர் கவுதமி தாவணி, கவுதமி மிடி, கவுதமி ஸ்டப்ஸ் என்று சொல்லி விற்கப்பட்டது. பிரபலமான படங்களின் பெயர்களில் துணிவகைகள் விற்பனை செய்யப்படுவது மிகப்பெரிய கடைகளில் கூட வழக்கமானதுதான். குஷ்பு தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோது அவரது பெயர் சொல்லி பல பொருட்கள் விற்கப்பட்டது. முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஒரு ஹோட்டலில் 'குஷ்பு இட்லி' என்று அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் இட்லிக்கடைகளில் 'குஷ்பு இட்லி' என்று சொல்லப்படுமளவுக்கு இட்லி பிராண்டிங் ஆனது. அதுபோலவே இப்போது நமீதா மிக பிரபலமாக இருக்கிறார். நமீதா இடம்பெறுவதே படங்களில் இப்போதெல்லாம் கூடுதல் தகுதியாக இருக்கிறது. நமீதா சிறு வேடங்களில் தோன்றும் படங்களை கூட அவரது ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை. ஒரே ஒரு பாடல்காட்சியில் அவர் இடம்பெற்றாலும் அப்படங்களை பலமுறை அவரது ரசிகர்கள் பார்க்கிறார்கள். ஹோட்டல்களிலும், கையேந்தி பவன்களிலும் MEALS READY என்றோ, TIFFEN READY என்றோ முகப்பில் போர்டு வைக்கப்பட்டிருக்கும். சில நாட்களாக சென்னையின் கையேந்தி பவன்களில் “நமீதா இட்லி ரெடி” என்று போர்டு வைக்கப்பட்டு வருகிறது. நமீதா இட்லி என்றதுமே இட்லியின் சைஸ் பிரம்மாண்டமாக இருக்கும் என்று நினைத்து நாக்கில் யாருக்கும் நீர் ஊற வேண்டாம். அதே பழைய சிம்ரன் சைஸ் இட்லி தானாம். நமீதா ட்ரெண்டினை நன்கு புரிந்துகொண்ட சென்னையின் கையேந்திபவன் காரர்கள் சிலர் நூதனமான முறையில் “நமீதா இட்லி ரெடி” போர்டு மாட்டி விற்பனையில் பட்டையைக் கிளப்புகிறார்கள். அதே பழைய இட்லி, காரச்சட்டினி, தேங்காய் சட்டினி தான். ஆனாலும் சாதாரண இட்லிக்கு கூட நமீதாவின் நாமகரணம் சூட்டப்படும் கடைகளில் எல்லாம் விற்பனை இரண்டு மடங்காக இருக்கிறதாம். மிக விரைவில் தமிழ்நாடெங்கும் இட்லி நமீதா மயமாகும் என எதிர்பார்க்கலாம். குறிப்பு : மேலே படத்தில் நமீதா மட்டும் தானிருக்கிறார். இட்லி இல்லை. இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் வெள்ளையாக காணப்படும் எல்லாமே இட்லி அல்ல.
 10. ஆண்களை கவருவது எப்படி

  Safeஆ Quote பண்ணி வெச்சுக்கறேன் சேக்கு :P
 11. மலிவாய் போன திமுக!

  எண்ணண்ண்னா பண்ணுறது? பதினாறு வருஷ தோஷம் ஒரே நாள்ல நீங்கிடுமா? பரிகாரம் இப்போதானே முடிஞ்சிருக்கு. கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டிய நேரத்துலே கிடைச்சே தீரும்.
 12. மலிவாய் போன திமுக!

  கைப்புள்ள தைரியம் வந்து பாசகவோடு பேசுனதுக்கப்புறம் அம்மாவுக்கு டகுலு பிகிலு ஊதிக்கிச்சாம்.. எப்படியோ நாலு சீட்டை கொடுக்குறோம்.. போன சட்டசபை தேர்தலு மாதிரி மேலே ஏதாவது போட்டுக் கொடுக்கறோம். அஜ்ஜீஸ் பண்ணிக்குங்கன்னு பேசிக்கிட்டிருக்காங்களாம். அனேகமா கொடுக்குறதை வாங்கிட்டு கும்மி அடிச்சுடலாம்ங்கிற ரேஞ்சுக்கு கைப்புள்ள வந்துட்டதா பேசிக்கிறாங்க.
 13. ஆண்களை கவருவது எப்படி

  எல்லா ஆண்களுமே காய்ந்த மாடுகள் தான். அதனால் தான் வத்தலோ, தொத்தலோ கம்பங்கொல்லை கிடைத்தால் புகுந்து விளையாடி விடுகிறார்கள் :P
 14. ஆண்களை கவருவது எப்படி

  ஆண்களை கவர குறைந்தபட்சம் பெண்ணாக இருப்பது மட்டுமே போதுமானது
 15. கேவலப்படுத்தும் அதிமுக

  சின்ன விளம்பரம்... விரைவில் எதிர்பாருங்கள்.... “விஜயகாந்த் என்கிற நாராயணசாமி நாயுடு”