Sign in to follow this  
Followers 0
சேகுவேரா

பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!

Rate this topic:

2 posts in this topic

பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!

இன்றையச் செய்தித் தாள்களில் வந்த செய்திகள் கவலை அளிப்பவையாக உள்ளன. பூமியின் வெப்பம் கூடுதலாகி வருவதுடன் இந்தியாவில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் வரும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர் என்று ஒரு செய்தி. ஒரிசா, சுந்தர்பன் பகுதிகளில் தீவுகள் நான்கு ஏற்கனவே கடல் நீர்மட்ட உயர்வால் மூழ்கிப் போய் ஆறாயிரம் மக்கள் இடம் பெயர்ந்துவிட்டனர். ஆனால் அவர்களின் நிலங்களும், வீடுகளும் போனது போனதுதான். மேலும் பல பகுதிகள் மூழ்கும் ஆபத்தும் உண்டாம். இது அளிக்கும் கவலையை விடப் பெரிய கவலை கீழ்வருவனபற்றித்தான்.

தர்மசாஸ்தா என்று ஒரு கடவுள். விஷ்ணு என்று ஒரு கடவுள். கேரள மாநிலம் குரட்டூரில் இரண்டு கடவுள்களின் வீடு (கோயில்)களும் பக்கத்துப் பக்கத்தில் உள்ளன. நேற்று பார்த்தால் இரண்டு வீடுகளிலும் இருந்த கடவுள்களின் கை, கால்கள் தனித் தனியே கிடந்தன. ஆம், கடவுள் சிலைகள் உடைக்கப்பட்டுக் கிடந்தன. யார் காரணமோ அவர்களைக் கைது செய் என்று பக்தர்கள் மறியல் செய்தனராம். கை, கால்கள் வெட்டப்பட்ட கடவுள்களை மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதற்கு விவரம் இல்லை. மிகுந்த கவலையை இந்தச் செய்தி தருகிறது.

சபரிமலை அய்யப்பனை வெடிகுண்டு வைத்துப் பீஸ்பீசாக்கப் போகிறோம் என்று மிரட்டல் வந்து உள்ளதாம். 60 சிறப்பு அதிரடிப்படையினர் காவல் போடப்பட்டுள்ளதாம். இப்படி ஒவ்வொன்றுக்குமாகச் சேர்த்து மொத்தம் அங்கே மட்டும் 500 காவலர்கள் இருக்கின்றனராம். 60 பேர் மப்டியில் பக்தர்களோடு பக்தர்களாகக் கலந்து காவல் பணி, மோப்பப் பணியில் ஈடுபடுவார்களாம். மிரட்டல் விட்டவரும் சரி, காவல் துறையினரும் சரி இருவருமாகச் சேர்ந்து அய்யப்பனை அசிங்கப்படுத்தி அதன் சக்தியை அவமானப்படுத்துகிறார்களே என்பதால் நிறை கவலை.

காஞ்சிபுரம் வரதராஜன் கோயிலில் இரண்டு பல்லிகள் உள்ளனவாம். ஒன்று தங்கப் பல்லி. மற்றொன்று வெள்ளிப் பல்லி. இவற்றின் கண்களைத் தோண்டி எடுத்துவிட்டார்களாம். மக்கள் மிக்க கவலை அடைந்து இருக்கிறார்களாம். என்ன ஏற்படுமோ ஏது ஏற்படுமோ என்று மிக்கக் கவலை கொண்டிருக்கிறார்களாம். முதல் பத்திச் செய்தியைப் படித்துப் பூமி வெப்பம் அடைவதைப் பற்றி ஒருவரும் கவலைப்படாமல், பல்லிக் கண்களைப் பற்றிக் கண் கலங்குகிறார்களாம். கடவுளின் கண் எதிரேயே பல்லியின் கண்ணைத் தோண்டி எடுத்திருக்கிறார்கள். பகவான் என்ன பண்ணிக் கொண்டிருந்தாராம்? என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்கிறார்களே! பல்லியின் நடமாட்டம் இருக்கும் இடத்தில் மயிலிறகை வைத்தால் பல்லி அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்காது. மயில் அதைக் கொத்தித் தின்றுவிட்ட பயம் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். பல்லியை விரட்ட அது வழி என்றால் பல்லிக் கண்ணைக் குருடாக்கியவர்களைக் கண்டுபிடிக்க என்ன வழி?

காஞ்சிபுரம் வரதராஜன்தான் ஒன்றும் செய்யவில்லை! (சங்கரராமனை வரதராஜன் கண் முன்னால் கொன்றபோது கூடத்தான் ஒன்றும் செய்யவில்லை!) கலியுக வரதனாக இருக்கும் அரியலூர் கலியபெருமாளாவது ஏதாவது செய்ய வேண்டாமோ? இதுவும் பெருங்கவலை.

திருவண்ணாமலைத் தீபத்தைப் பார்க்க 15 லட்சம் பேர் வந்தனர் என்கிறது தமிழ் ஏடுகள்! 10 லட்சம் என்கிறது இண்டியன் எக்ஸ்பிரஸ்! 5 லட்சம் பேரைக் காணோமே என்பதுகூட பெருங்கவலையாக இருக்கிறது. நெய்த் தொட்டியில் திரியைக் கொளுத்துகிறது பக்தி. அரோகரா போட்டு வணங்குகிறது பக்தி. மலையில் மரத்தில், செடியில் தீப்பிடித்து அலறுகிறது மக்கள் என்றால், எனக்கிருக்கும் கவலை, ஏன் இவர்கள் ஒரு நெருப்பைக் கும்பிடுகிறார்கள் - ஒரு நெருப்பைக் கண்டு அலறுகிறார்கள்? என்பதுதான்.

இந்த லட்சணத்தில் ஆறுதலான(?) செய்தி ஒன்றும் உண்டு. மக்களின் கஷ்டம் போக சுலபமான வழி ஒன்று கண்டு பிடித்துவிட்டார்கள். இரண்டு ஆண் குழந்தை பெற்ற தாய்மார்களிடம் ஒரு ஆண் குழந்தை பெற்ற தாய்மார்கள் பிச்சை எடுத்து 3, 5, 7 என்று ஒற்றைப் படைத் தொகையைப் பெற்றுச் சேமித்து தங்கவளையலோ, தங்க நிற வளையலோ வாங்கினால் குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் அடியோ அடி என்று அடிக்குமாம். தருமபுரி வழி காட்டுகிறது.

அடடா, எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு? பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்! செய்திகள்தான் தேளாகக் கொட்டுகின்றன.

- அரசு

Share this post


Link to post
Share on other sites

ஜொயிங்
ஜங்
ஜக்...

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0