Sign in to follow this  
Followers 0
புதிய பூமி

பிப்லியா

6 posts in this topic

பிப்லியா

பைபிள் என்று இன்று சொல்லப்படும் வேதாகமம், பிப்லியா (Bibleya) என்ற கிரேக்க சொல்வழி வந்ததாகும். இந்த பிப்லியா என்னும் சொல் பன்மைப் பெயர்ச்சொல்லாகும். இதர எழுத்து படைப்புகளான புத்தகங்களிலிருந்து வேறுபடுத்தி, பழைய புதிய ஏற்பாடு புத்தகங்களை மட்டும் சிறப்பாக சுட்டிக்காட்ட இந்த பிப்லியா என்னும் கிரேக்க சொல் உபயோகிக்கப்பட்டது.

கிமு 285ல் பழைய ஏற்பாடு புத்தகங்கள் மூல பாஷையாகிய அசல் ஏபிரேய மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு 72 எபிரேய நிபுணர்களால் மொழி பெயர்க்கப் பட்டன. இந்த கிரேக்க பழைய ஏற்பாடு புத்தகங்களுக்கு ஸெப்டிகின்ட் ( Septuagint ) என்று பெயர். இது எல்லா மொழி பெயர்ப்பைக் காட்டிலும் மிகவும் சிறந்த விலை மதிப்பர்ற படைப்பாகும். இயேசு கிறிஸ்து மானிடராக வந்திருந்த காலத்தில் இஸ்ரவேலர்களிடம் இந்த மொழி பெயர்ப்பே நடைமுறையிலிருந்தது.

இந்த மொழி பெயர்ப்பில் தானியேல் 9:2 ல் காணப்படும் "புத்தகங்கள்" என்ற சொல்லுக்கு பிப்லியா ( The Books ) எனும் சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

கிறிஸ்ஸோஸ்டம் (Chrisostum ) என்பவர் ஆதி கிரேக்க கிறிஸ்தவர்களின் தந்தை என அழைக்கப்பட்ட நால்வருள் ஒருவர். கி.பி. 407 ல் காலமானார். இவர் தனது எழுத்துக்களில் முதன் முதலாக இரண்டு ஏற்பாடு புத்தகங்களுக்கும் பிப்லியா என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார். பின்னால் மேற்கத்திய நாடுகளிலும் கிறிஸ்தவ மண்டலங்களிலும் இந்த கிரேக்க சொல்லையே இரண்டு ஏற்பாடுகளுக்கும் பெயராக வைத்தனர். இவ்வாறு 13ம் நூற்றாண்டுவரை பிப்லியா ( The Biblia - the Books ) என்ற பன்மைப் பெயர் வேதாகமத்திற்கு வழங்கப்பட்டது.

13ம் நூற்றாண்டு இந்த பிப்லியா எனும் பன்மை சொல் ஒரு இலக்கண பிழையின் காரணமாக ஒருமைப் பெயராக, லத்தீனில் மருவி, அதாவது பைபில் (The Bible - the Book ) என்று புதிய , பழைய புத்தகங்கள் அனைத்திற்கும் பெயராக வழங்கப் படலாயிற்று.

தொடர்கிறேன் ---

Edited by புதிய பூமி

Share this post


Link to post
Share on other sites

நிச்சயம் தொடருங்கள் புதியபூமி.

ஆனால் நான் சொல்ல வருவது எல்லாம் இதுதான்.

பைபிளின் இறுதியில் வரும் வசனம் ஒன்று உண்டு.

இயேசுவை வழிபடுபவர்கள் இன்று முதல் கிருஸ்தவர்கள் என அழைக்கப் படுவார்கள் என்பதுதான் அது.

ஆனால் அந்தக் கிருஸ்தவர்கள் எல்லோரும் இப்போது பலவிதமாகப் பிரிந்து பல கொள்கைகளையுடையவர்களாக இருக்கிறார்கள்.

அது கூடப் பரவாயில்லை. அவர்கள் எல்லோரும் தங்கள் கையில் ஒரு பைபிளின் புதிய மொழிபெயர்ப்பு என்னும் பெயரில் ஒவ்வொரு புத்தகங்கள் வைத்திருக்கின்றனர்.

இதில் வேதனை என்னவென்றால் இப்பொழுது நீங்கள் சொல்வது போல ஒவ்வொருவரும் தங்கள் கையில் இருக்கும் புத்தகம்தான் சரியானது மற்றவை எல்லாமே பிழையானவை என்கிறார்கள்.

நாங்கள் எல்லாம் வேற்று மதத்தவர்கள். ஆனால் நீங்களோ கிருஸ்தவர்கள். உங்கள் கிருஸ்தவர்களுக்குள்ளேயே பலர் ஒரே பைபிளை வைத்துக் கொண்டு எனது பைபிள்தான் சரியானது என்று கூறுவது மிகவும் வேதனையான விசயம் இல்லையா.

முதலில் அந்நியரான எங்களுக்கு பைபிளைப் பற்றி தெளிவுபடுத்துவதற்கு முன்னர், பைபிளில் சொல்லியிருப்பது போல இயேசுவைப் பின்பற்றும் கிருஸ்தவர்களான நீங்கள், எந்தப் புத்தகம் சரியானது. அல்லது எல்லாவற்றிற்கும் பொதுவான சரியான புத்த்கத்தை உருவாக்கி வெளியிடுங்கள்.

அதற்கு அப்புறம் வந்து அதை நாம் வாசித்த பின்னர் எமது சந்தேகங்களைத் தெளியப் படுத்தலாம்.

தற்போது உள்ள நிலையில் நீங்கள் எமது கையில் உள்ள பைபிளில் இருப்பதை நாம் சொன்னால், எபிரேயுவில் அப்படி இல்லை, ஆங்கிலத்தில் அப்படி இல்லை, கிரேக்கத்தில் அப்படி இல்லை என்றே சொல்லப் போகிறீர்கள்.

சில விடை தெரிந்த விவாதங்கலில் பங்குபற்றுவதில் பயன் இல்லாமல் போய்விடுகிறது.

புதிய பூமி,

இப்போது நீங்கள் சொல்ல வருவதை மறுக்க உங்கள் கிருஸ்தவ சபைகளுக்குள்ளேயே நூற்றுக்கணக்கான சபைகள் உண்டு.

இதுதான் சரியென்று யாரும் ஒப்புக் கொள்வதில்லை.

குறிப்பாக யகோவாவின் சாட்சிகள் உங்களை ஒரு போதும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை.

எனவே இதில் எங்களது நியாயங்களையும் புரிந்து கொள்ளுங்கள்.

இறுதியாக ஒன்று புதியபூமி.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ.

இயேசு என்னும் மனிதராகப் பிறந்தவரை நான் மிகவும் மதிக்கிறேன்.

அவர் சொன்ன பல வார்த்தைகள் மிகவும் அர்த்தங்கள் நிறைந்தவை.

அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் எனக்குக் கிடையாது.

பலர் நான் இந்து மதத்தையே முற்றாக வெறுப்பதாக நினைப்பார்கள்.

நான் வெறுப்பது மூட நம்பிக்கைகளையும், கடவுள் என்று சொல்லி ஏமாற்றும் தந்திரங்களையும்தான்.

ஆனால் சுவாமி விவேகானந்தரின் ஒரு ஆழமான வாசகன் நான். ஞான புமியின் அனைத்துப் பாகங்களையும் வைத்திருப்பவன் நான்.

அவரைப் பற்றி இப்போது என்னால் ஒரு முழு நீள நூலை எழுத முடியும்.

அத்துடன் ராமகிருஸ்னரின் குட்டிக் கதைகள் கேட்டே நான் வளர்ந்தவன். சாரதா சேவாச்சிரமம் என்னும் ஒரு ஆச்சிரமத்திலும் தொண்டுகள் செய்தவன் நான்.

ஏனோ என்னால் சில போலிகளையும், பிதற்றல்களையும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

Share this post


Link to post
Share on other sites

புதிய பூமி,

இப்போது நீங்கள் சொல்ல வருவதை மறுக்க உங்கள் கிருஸ்தவ சபைகளுக்குள்ளேயே நூற்றுக்கணக்கான சபைகள் உண்டு.

இதுதான் சரியென்று யாரும் ஒப்புக் கொள்வதில்லை.

குறிப்பாக யகோவாவின் சாட்சிகள் உங்களை ஒரு போதும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை.

எனவே இதில் எங்களது நியாயங்கலையும் புரிந்து கொள்ளுங்கள்.

இதையே தான் நானும் மற்றோரு திரியில் சொல்லி இருந்தேன். லீனா அண்ணா போல விளக்கமாக சொல்லவில்லை, ஆனால் நான் சொல்ல நினைத்தது இது தான்.

Share this post


Link to post
Share on other sites

உண்மைதான், நான் இங்கு கூறும் பல கருத்துக்களை கிறிஸ்தவ சபைகள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. திரும்பவும் சொல்கிறேன் நான் கிறிஸ்தவ மதத்துக்காகவோ கிறிஸ்தவ சபைக்காகவோ வாதாடவில்லை. கிறிஸ்தவ சபைகளின் போதனைகளை கூறவும் இல்லை.

நான் கூறுவது ஒரு புதிய கடவுளைப் பற்றி. கடவுளால் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட செய்திகள், அந்த செய்திகள் அடங்கிய புத்தகங்கள் (The Books ) பற்றியே இங்கு கூற ஆரம்பித்திருக்கிறேன். இந்த உண்மைகள் கிறிஸ்தவ மத குருமார்களின் கட்டுக்கதைகளுக்கு ஏதிரானது. கிறிஸ்தவ சபைகளின் செயல் பாடுகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக இருக்கும் . அவர்களின் சபை அமைப்புகளை தாக்கி அழிக்கக்கூடியதாக இருக்கும்.

உண்மையாகவே இந்த புத்தகங்கள் கிறிஸ்தவ சபைகளை, உலகை மது பானம் கொடுத்து மயக்கி குழப்பத்தில் வைத்திருக்கும், ஆண்டு கொண்டிருக்கும் ஒரு வேசி என்றே சொல்கிறது.

வெளி 17 அதிகாரம்

4. அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

5. மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

6. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

Edited by புதிய பூமி

Share this post


Link to post
Share on other sites

வேதாகமம் அதன் பழைய எழுத்துச்சுவடிகளில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டதாகும். இதனை பலரும் ஆதிகாலத்திலிருந்தே பற்பல மொழிகளில் மொழி பெயர்த்தனர். எல்லா பழைய மொழிபெயர்ப்பைக்காட்டிலும் மிகவும் பழமையான் விலைமதிப்பற்ற மொழிபெயர்ப்பு செப்டுஜின்ட் (Septuagiant ) ஆகும். இது கி.மு. 285 இல் எப்ரேய மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாடு மட்டும் அடங்கிய வேதாகமம் ஆகும். இது அலேக்ஸான்டிரியாவிலுல்ல (எகிப்து ) 72 எபிரேய கல்விமான்களால் மொழிபெயர்க்கப்பட்டதால் இதற்கு செப்டுஜின்ட் என்று பெயர். இதுவே கிறிஸ்துவின் காலத்திய வேத புத்தகமாகும். இதுவே புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களின் வேதபுத்தகமும் ஆகும். இது கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக பழக்கத்திலிருந்தது.

புதியஏற்பாட்டில் காணப்படும் பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் பொதுவாக இதிலிருந்து எடுக்கப்படவையே ஆகும். இந்த மொழிபெயர்ப்பிலும் பல குறைகள் இருந்தன. அப்போஸ்தலர்கள் மேற்கோள் காட்டும் போது செப்டுஜின்ட் மொழிபெயர்ப்பில் குறை இருப்பின் அதை திருத்திக் கூற தயங்கியது இல்லை. உதாரணமாக எரே 31:31 - 34 இல் உள்ள பகுதியை அப்போஸ்தலர் எபி: 8:8 - 12 இல் மேற்கோள் காட்டுகிறார். இந்த மேற்கோளை செப்டுஜின்ட் மொழிபெயர்ப்போடு ஒப்பிட்டு பார்க்கும் போது அதில் 12 வித்தியாசங்கள் இருப்பதை காணலாம். இதிலிருந்து செப்டுஜின்ட் மொழிபெயர்ப்பில் வேறுபாடு இருப்பின் அசல் எபிரேய பழைய ஏற்பாட்டை ( அக்காலத்து வேத புத்தகம்) அப்போஸ்தலர்கள் பரிசீலித்து மொழிபெயர்ப்பின் தவறை நீக்கி போதித்திருக்கிறார்கள் என்று அறிகிறோம்.

...

Share this post


Link to post
Share on other sites

வேதாகமத்தில் பழைய ஏற்பாடு புத்தகங்களில் சில பகுதிகளைத் தவிர மற்றவைகள் அனத்தும் எபிரேய மொழியில் எழுதப்பட்டவைகள். ஏரேமியா 10:11, எஸ்றா 4:8 - 16:18; 7:12- 26 தானியேல் 2:4 - 7:28 ஆகிய பகுதிகள் மட்டும் அரமேக் என்ற மொழியில் எழுதப் பட்டிருக்கிறது. அரமேக் மொழி எபிரேய மொழியை நெருங்கித் தழுவியதும், கி.மு. சில நூற்றாண்டுகளாகவே பாலஸ்தீனத்தில் பேசி வந்ததுமாகும். யேசு கிறிஸ்துவின் காலத்திலும் பாலஸ்தீனாவில் அரமேக் மொழியும் கிரேக்க மொழியுமே பேசினார்கள்.

பழைய ஏற்பாடு புத்தகங்கள் எழுதியவர்கள் கைப்படவாக எழுதின எழுத்துச் சுவடிகள் ( Manuscripts ) காலப்போக்கில் பழமையாகி நாசமடைந்து விட்டன. அவைகளிலிருந்து நகலாக எழுதப்பட்ட எழுத்துச்சுவடிகளும் அவ்விதமே பெரும்பாலும் அழிந்து விட்டன. மேலும் நேபுகாத் நெச்சார், அந்தியோகி எபிப்பேன்ஸ் போன்றவர்களால் எழுத்துச்சுவடிகள் அழிக்கப்பட்டு போயின. எனினும் யூதர்கள்தங்களது உயிரையும் கொடுத்து வேத சுவடிகளை பாதுகாத்து வந்தார்கள். அவர்களது பக்திவைராக்கியத்தினாலேயே நமக்கு இவைகள் பத்திரமாக கிடைத்திருக்கின்றன.

இவைகள் அதிக கவனம் செலுத்தி காக்கப்பட்டவைகளாதலால் பழைய ஏற்பாடு புத்தகங்கள் அனைத்தும் அதிக தவறுகள் இல்லாமல், கலப்படம் இல்லாது நமக்கு கிடைத்திருக்கின்றன. என்ற போதிலும் அக்காலங்களில் கையினால் எழுதி நகல் எடுக்கப்பட்டதினால் உண்டான பிழைகளும் குறைகளும் காலப்போக்கில் அதிகமாகிவிட்டன. ஆதலால் வேத எழுத்துச் சுவடிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஒப்பிட்டு, படித்து தவறுகளை களைந்து , களங்கமற்ற சுத்தமான எழுத்துச்சுவடிகளை மெஸோரேட்ஸ் (The Massoretes ) என்ற எபிரேய நிபுணர்கள் (கி.பி 450 - 900 ) அதிக கவனமாக தயாரித்து அளித்தனர். பின்பு அவர்கள் ஒப்பிட்டு படித்த குறை நிறைந்த எல்லா எழுத்துச் சுவடிகளையும் எல்லாருடைய சம்மதத்தின் பேரில் அழித்து விட்டனர். ஆதலால் பழைய ஏற்பாட்டிற்கு மிகப் பழைய எழுத்துச் சுவடிகள் இந்த மெஸோரேட்ஸ் கி.பி. 925ல் தயாரித்து அளித்ததேயாகும். இவைகளே நமது பழைய ஏற்பாடு புத்தகங்களுக்கு ஆதாரமான மூல எழுத்துச் சுவடிகள், இப்பொழுது இங்கிலாந்து தேசத்தின் அருங்காட்சியகத்தில் (Museum ) வைக்கப்பட்டிருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0