Sign in to follow this  
Followers 0
சேகுவேரா

குரங்கு செத்தது, கோவில் வந்தது!

1 post in this topic

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குரங்கு செத்தது, கோவில் வந்தது!

photo04.jpg

அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங் களில் எந்த மதத்தையும் சேர்ந்த கடவுள்கள், பெண்கடவுள்கள், படங்கள், சிலைகள் ஆகியவற்றை வைக்கக் கூடாது என்றும், அதேபோன்று சாதுக்கள், மகான்கள், அவதாரங்கள் எனச் சொல்லும் சாமியார்களின் படங்களையும் வைக்கக் கூடாது என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து, அரசு ஆணையும் வெளியிட்டி ருக்கிறது. (அரசுக் குறிப்பாணை எண்: 7553/66-2 -நாள் 29.04.1973)

சட்டங்கள் இப்படியிருக்க நடப்புகள் எப்படி உள்ளன? திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏராள மான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் குரங்குகளும் வசித்து வந்தன. எப்போதும் மரக் கிளைகளைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கும் குரங்கு ஒன்று, அன்றைய தினம் கைப் பிடியை விட்டுவிட்டது. உயரத் திலிருந்து குரங்கு கீழே விழுந் தால் என்னவாகும்? செத்துப் போகும். அப்படித்தான் அன்று நடந்தது.

உடனே அங்கிருந்த ஒருவர் செத்தது குரங்கு அல்ல, அனுமார் என உணர்ச்சி வசப்பட்டுள்ளார். குரங்கை வெளியில் வீசி எறியாமல், அங்கேயே அடக்கம் செய்து கோவில் கட்டிக் கும்பிடுவோம் என இன்னொருவரும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்.

விளைவு, செத்துப் போன குரங்கை அங்கேயே குழி தோண்டிப் புதைத்து, மண் எழுப்பி, அதன் மேல் குங்குமம் வைத்து வழிபடத் தொடங் கியுள்ளனர். நாளடைவில் நாம் வழிபடும் கோவில் இப்படியா வெயில், மழையில் இருப்பது என சிமெண்ட் தளம் போட்டு, கூரை வேய்ந்துள்ளனர். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்று, இப்போது பெரிய கோவிலாகவே (படம் மேலே) மாறிவிட்டது. இப்போது இதற்கு ஒரு பூசாரி, பராமரிப்பு வேலை கள், கும்பாபிசேகம் எனத் தொடர் கதையாகிவிட்டது.

செத்துப்போன குரங்கு கொஞ்ச நாளிலே எலும்பும், தோலும் சிதைந்த நிலையில், மண்ணோடு மண்ணாக மக்கிப் போயிருக்கும். இப்போது அந்த இடத்தைத் தோண்டிப் பார்த் தால் எதுவுமே இருக்காது. ஆக எதுவுமே இல்லாத ஒன்றை இந்த மக்கள் தினமும் கும்பிட்டு வருகிறார்கள். கோவில்கள் உருவானது எப்படித் தெரியுமா? இப்படித்தான்!

Edited by சேகுவேரா

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0