லீனாரோய்

ரிக் வேதம்.......

Rate this topic:

159 posts in this topic

நண்பர்களுக்கு......

நான் இந்தத் திரியில் எனக்குத் தெரிந்த, நான் படித்துப் புரிந்த ரிக் வேதம் பற்றி சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

ரிக் வேதம் பற்றி நான் ஒன்றும் பாண்டித்யம் பெற்றவனல்ல, ஆனாலும் சராசரியாக சில விளக்கங்கள் உள்ளவன்.

நான் எழுதுவதை எதிர்க்கும் நண்பர்கள், தயவு செய்து இது பற்றி விவாதிக்க விரும்பினால் அல்லது மறுத்தால், ரிக் வேதம் பற்றி நூல்களைப் படித்தோ அல்லது

அதுபற்றித் தெரிந்தவர்களிடம் கேட்டோ இருப்பது நல்லது.

இங்கு எனது நோக்கம் யாரையும் தாக்குவதோ, அல்லது நோகடிக்கப் பண்ணுவதோ அல்ல.

ரிக் வேதம் என்னும் புரியாத ஒரு புதிரை எல்லாரும் அறிய வேண்டும் என்பது மட்டும்தான்.

அது தவிர்ந்து நல்லவர்கள் சிலரை நான் தெரிந்தோ தெரியாமலோ காயப்படுத்தினால் அதற்காக இப்போதே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் இங்கு எழுதப் போவது ரிக் வேதம் பற்றிய ஒரு அலசல்தான்.

இவற்றில் ஒன்றுமே எனது கருத்துகள் அல்ல. எல்லாமே நான் படித்ததும் கேட்டதும்தான்.

என்ன நண்பர்களே ஆரம்பிக்கலாமா.....?

Edited by லீனாரோய்

Share this post


Link to post
Share on other sites

ரிக் வேதத்தை பற்றி அறிவதற்கு முன்னர் நாங்கள் இந்தியாவில் ஆரியர்களின் வருகை பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மொகஞ்சதாரோ மற்றும் சிந்து என்று சொல்லப்பட்ட ஹரப்பா ஆகியவற்றில் நாகரிகத்தின் கடைசி சிறப்பான காலம் கி.மு.2500ம் ஆண்டாக கருதப் படுகிறது.

ஆனால் இக்காலங்களில் ஆரியர்கள் இந்தியாவில் இருந்திருக்கவில்லை.

அப்போது வாழ்ந்தவர்கள் திராவிடர்களும், கிராதர்கள் எனச் சொல்லப்படும் மங்கோலிய முக ஜாடையுடன் இருக்கும் ஒரு இனமும் மட்டுமே!

இந்த இரண்டு இனத்தவர்களும் கருமை நிறத்தவர்களாக இருந்தனர்.

பின்னர் வந்த வெள்ளை நிறத்து ஆரியர்களால் இவர்கள் செய்த போர் ஒரு நிற அடிப்படையில் நடை பெற்றதாகக் கூடச் சொல்லலாம்.

இது ஒரு நிற பேதத்தை இரண்டு கூட்டத்தினருக்கும் கொடுத்தது.

இதனாலேயே வர்ணம் (நிறம்) என்ற அடிப்படையில் மக்கள் நான்காக பிற்காலத்தில் பிரிக்கப் பட்டார்கள்.

இதிலிருந்து தோன்றியதுதான் வர்ணாச்சிரம முறையாகும்.

Edited by லீனாரோய்

Share this post


Link to post
Share on other sites

நண்பர்களுக்கு......

என்ன நண்பர்களே ஆரம்பிக்கலாமா.....?

நல்லாவே தொடங்கலாம்... ஆனால் இதையும் யாராவது புராணா கேட்டார் என்பதற்காக நிறுத்தி விடாதீர்கள்...

Share this post


Link to post
Share on other sites

நல்லாவே தொடங்கலாம்... ஆனால் இதையும் யாராவது புராணா கேட்டார் என்பதற்காக நிறுத்தி விடாதீர்கள்...

உங்கள் உள்குத்து விளங்குகிறது தமிழ்க்குரல்.

இந்தத் திரியை முழுவதும் தகவல் அடங்கிய திரியாகவே எழுதலாம் என நினைக்கிறேன்.....

என்ன பிரச்சனைன்னா தகவல்கள் மட்டும் இருக்கும் போது கொஞ்சம் போரடிக்கலாம். இருந்தாலும் பார்க்கலாம்..........

ஆனால் ஒன்று நண்பர்களே...! இது பற்றிய கருத்துகளை நீங்கள் தெரிவிக்கும் பட்சத்தில் மட்டுமே இதை நான் மேலும் தொடர்ந்து கொண்டு போவேன்.

உங்களுக்கு இஷ்டமில்லாததை இங்கு நான் எழுதக் கூடாது அல்லவா...?

Edited by லீனாரோய்

Share this post


Link to post
Share on other sites

நான் மேலே சொன்ன சிந்து நாகரீகத்தின் இறுதிக் கட்டமான கி.மு.2500 ஆண்டிற்கு பின்னர் ஆயிரம் ஆண்டுகளில்,

அதாவது கி.மு.1500ம் ஆண்டளவில் ஆரியர்கள் சிந்துப் பகுதியில் பிரவேசித்தார்கள்.

இப்படிப் பிரவேசித்த ஆரியர்கள் பாரதத்தின் அண்மை நாடான ஈரானிய நாடிலிருந்து பெரும் பகுதியாக வந்தவர்களாகும்.

ஈரானியர்களுக்கும், பாரதத்தில் குடியேறிய ஆரியர்களுக்கும் பலமான இரத்த உறவிருந்ததை பல ஆரய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஈராணியருக்கு 'ச' என்னும் எழுத்தின் உச்சரிப்பு வாயில் நுழையாது.

அவர்கள் அதை 'ஹ' என்றே உச்சரிப்பார்கள். அதனால் 'சி' என்பது அவர்களாஇ 'ஹி' என்றே உச்சரிக்கப் படலாயிற்று.

இதனால் 'சிந்து' என்று சொல்லப்பட்ட இடம் அவர்களால் 'ஹிந்து' என உச்சரிக்கப் படலாயிற்று.

இந்த ஆரியர்கள் குடியேறிய இடம் 'ஏழு நதிகள்' எனப் பொருள் படக் கூடிய 'சப்த சிந்து' என்னும் நிலப் பகுதியேயாகும்.

Share this post


Link to post
Share on other sites

அண்ணே ஒரு சின்ன சந்தேகம் :

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் பேர்சியர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள் இவர்களும் ஆரியர்களும் ஒன்றா? இல்லை வேறு வேறா? வரலாறு புவியியல் எல்லாம் எனக்கு வெறுத்த பாடங்கள்.

Share this post


Link to post
Share on other sites

அண்ணே ஒரு சின்ன சந்தேகம் :

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் பேர்சியர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள் இவர்களும் ஆரியர்களும் ஒன்றா? இல்லை வேறு வேறா? வரலாறு புவியியல் எல்லாம் எனக்கு வெறுத்த பாடங்கள்.

வந்தி நீங்கள் சொல்லும் பேர்சியர்கள் என்னும் சொல் மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்தது.

அதுமட்டுமல்லாமல் ஆரியர்கள் அப்படியே ஈரானில் இருந்து பாரத்ததினுள் நுழைந்து விடவில்லை.

படிப்படியாக நகர்ந்து நகர்ந்து ஹைபர் கண்வாய், ஆப்கானிஸ்தான் ஊடாக பாரத்ததினுள் நுழைந்தனர்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு சிறு விளக்கம்:> நான் இங்கு எழுதிய சில கருத்துகளை விக்கிப் பீடியாவிற்கும் அனுப்பியுள்ளேன்.

காரணம் ஆரியர்கள் பற்றிய விளக்கமான விஜயராகவன் கட்டுரையில் இதன் சார்பான ஆக்கங்களைக் கேட்டிருந்தனர்.

அதனை அவர்கள் ஏற்கும் பட்சத்தில் அதை பிரசுரிக்கலாம்.

அவை பிரசுரிக்கப்படும் பட்சத்தில், அவற்றை நான் அங்கிருந்து காப்பி பேஸ்ட் செய்ததாக நினத்து விட வேண்டாம்.

Share this post


Link to post
Share on other sites

வலையுலகின் ஜாம்பவானரான லீனாராய் சார் அவர்களுக்கு வனக்கம்,

லீனாராய் சார் அவர்கள் எப்படி உள்ளீர்கல் தங்களின் படைப்புகள் அனைத்தும் சிந்திக்கவும் சிலசமயம் என்களி கன்புயுஷன் ஆகவும் வைத்துவிடும்

(ஆன்மீகசம்பந்தமான் மத சம்பந்தமாகட்டுரை பற்றியது மட்டும் பொருந்தும்)

மற்ற கட்டுரைகள் அனைத்தும் மிக்ஜோர்தான் தங்களின் படைப்புகளுக்கு மிக்கநன்றி

ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள சில நல்ல கருத்துக்கள்

ருக்,-8-59-5

1. நம்முடைய மேன்மைக்காகவே நாம் உண்மை பேசுகிறோம்.

ருக்-9-74,3

2. இந்த பரந்த உலகில் நேர்மை வழியினை கடைப்பிடிப்போர் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

ருக்-4,23,10

3. உண்மையைத் தேடுவோர் அதனை கட்டாயம் கண்டு கொள்வர்.

ருக்10,61-10

4. உண்மையை கடைபிடிப்போர் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எப்போதும் இனம் கண்டுகொள்வர்.

ருக்,9,73,8

5. உண்மையைக் காப்பவரையும் நேர்வழி நடப்பவரையும் எவரும் வெற்றிகாண இயலாது. ருக்-9,75,2

6. உண்மை பேசுவது இனிமையையும் அன்பையும் உண்டாக்குகிறது.

ருக்-7,61-5

7. உண்மை ஒரு ஸ்திரமான அஸ்திவாரத்தின் மீது உள்ளது.

ருக்-9,73,6

8,பாவிகள் உண்மை வழி நடக்க முடியாது.

ருக்-7,61,5

9,மனித சமுதாயத்தின் எதிரிகள் தீயவழியினை கடைப்பிடிப்பவர்கள்.

ருக்,1,71,3

10. இடைவிடாது உழைப்பவர் மட்டுமே சுகத்தினை சுவைக்க முடியும்.

ருக்-1,39,10

11.தர்ம, அர்த்த,காம,மோக்ஷ சதுர்வித புருஷார்த்தங்களைத் தேடுவோர் நிரந்தரமாக உழைப்பவர்கள்.

ருக்8-2-18

12,சுறுசுறுப்பானவர்களையே கடவுள் நேசிக்கின்றார். சோம்பேறிகளை அல்ல.

ருக்.10,191,4

14.மனம் தெளிவாக செயல்படில் வாழ்வில் வெற்றிகிட்டும்.

ருக்1-191-2

15.நீங்கள் யாவரும் ஒன்றாகச் செல்லுங்கள் ஒரே குரலில் பேசுங்கள். உங்கள் மனம் ஒரே எண்ணம் கொண்டதாக அமையட்டும்.

ருக்,9,71-1

16.விழிப்புடன்இருப்பவர் எதிரிகளிடம் இருந்தும் பாபிகளிடம் இருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்வர்.

ருக் 1,90,6

17. உண்மையும் நேர்மையும் ஆனவருக்கு காற்று சுகத்தையும் நதிகள் சுவையான நீரையும் அளிக்கின்றன.

ருக்-5,12,5

18. தூய்மையானவர்களைத் தூற்றுவோர் அழிந்து போவார்கள்.

ருக்,1-15,5

19. சுபீக்ஷத்தை அளிக்கும் ஸ்வராஜ்யத்தினை வணங்குவோம்.

ருக்1,89,4

20. இந்த பூமியும் ஆகாயமும் நமது தாயும் தந்தையும்.

ருக்-1,56,2

21. மனிதனே உளது ஆன்மபலம் உன்னை செழுமைக்கு இட்டுச்செல்லட்டும்.

ருக்,10,28

22. திடமான ஆன்ம பலம் உடலால் இளைத்தவனை திடகாத்திரமான பலவானையும் வெற்றிகாணச்செய்யும்.

ருக்8,48,14

23. நம்மை காக்கும் கடவுள்கள் நமக்கு நல்லறிவு அளிக்கட்டும்.

ருக், 3,26,9

24. ஆசார்யன் வற்றாத நூற்றுக்கணக்கான அறிவு ஊற்றுகட்கு இருப்பிடம்.

ருக்,9,69,2

25. அறிவுடன் செயல்பட்டால் வாழ்வு இன்பம் அளிக்கும்,

ருக்,1,144,1

26. அறிஞர்கள் தங்களின் அறிவை சிறந்த செயல்கட்கு உபயோகிப்பார்கள்.

ய,வே,36-18,

27. நட்புக் கண்களோடு ஒருவரை ஒருவர் பார்ப்போமாக.

ய,வே,36,24

28. தலைநிமிர்ந்து நூறு ஆண்டுகள் வாழ்வோமாக.

சா,வே,1590

29. நண்பர்களின் உதவியுடன் தன் எதிரிகள் யாவரையும் ஒருவர் வெற்றி காண முடியும்.

சா,வே,435,

30. அடையவேண்டும் என்ற முயற்சி உடையவர்களே வாழ்வில் செழிப்பினை அடைகின்றனர்.

சா,வே,441

31. குறிக்கோள் இல்லாதவர் முயற்சியும் செய்வதில்லை,எந்தவிதமான பொருளினையும் சேர்ப்பதில்லை.

ருக்,10,141,6

32. இறைவா, எங்களுடைய எண்ணங்களை தூய்மையாக்கி எங்களது யாகங்களையும் வெற்றியடையச் செய்ய எங்களுக்கு அறிவுச்சுடரினை வழங்குங்கள்.

ருக்,10,164,35

33. இந்த யாகம் இந்த உலகத்தின் நாபியாகிறது.

ருக்,1,1,83,3

34. முயன்று செயல்படும் யாககர்த்தா சிறந்த சக்தியினை அடைகின்றார்.

ருக் 1,83,5

35.முதன் முதலில் யாகத்தைச்செய்தவர் அதர்வ ரிஷியாவார்.

ருக்,1,107,1

36.யக்ஞம் செய்வது தேவர்களை மகிழ்விப்பதற்கு ஒரு சாதனம்.

ருக்,5,393

37.இறைவா யாகம் செய்பவர்களின் மனத்திலிருந்து அறியாமை இருளை விலக்கிவிடு.

ருக்,8,1,1

38.இறைவனைத் தவிர மற்றவர்களைத் துதிக்காதே. ருக்,8-1-20

39.இறைவனிடத்தில் கை ஏந்தாதவர் எவர் உளர்? ருக்,4,25,7

40.தேவையானவர்கட்குத் தானம் அளிக்காத தனவந்தர்களின் தனத்தை கடவுள்எடுத்துக் கொண்டு அவர்களின் உடைமைகளை பறித்து பின் அவர்களை அழித்து விடுகின்றார்.

ருக்,8,92,32

41. இறைவா!நாங்கள் தங்களைச் சார்ந்தவர்கள்,நீங்கள்எங்களை?r />?் சார்ந்தவர்.

ருக்,8,103,5

42. இறைவா, தங்களின் பக்தன் மிகவும் பலமாக காப்பாற்றப்படும் , எதிரிகளின் பாசறையிலும் உண்பதற்கு ஏதேனும் பெறுவான்.

ருக்,1,164,43

43.யாகம் செய்வது என்பதுதான் மிகப் பழமையான மதச்சடங்கின் கடமையாக இருந்தது.

ருக்,5,34,5

44.பலமாக இருந்து சுறுசுறுப்பாக இல்லாதவர்க்கு கடவுள் உதவி செய்ய மாட்டார்.

ருக்,10,143,3

45.இறைவன்அருள் இருப்பின் கரம்பு நிலமும் நல்ல செழிப்பான நிலமாக ஆகிவிடும்.

ருக்,10,64,2

46. கடவுளைத் தவிர வேறு எவராலும் நமக்கு சுகத்தை அளிக்க இயலாது. ருக்,8,62,1

47.கடவுளால் அளிக்கப்பட்ட சொத்து எப்போதும் மங்களகரமானது.

ருக்,8,16,5

48.கடவுளை தன் பக்கம் கொண்டவர்கள் வெற்றி காண்பார்கள்.

ருக்6,61,3

49.ஸரஸ்வதி தேவியே!கடவுளர்களை நிந்திப்பவர்களை அழித்து விடு.

ருக்- 5-4-5

50. சுய கட்டுப்பாடுடைய விருந்தாளியை நமது வீட்டிற்கு அழைத்து உபசரிக்க வேண்டும்.

ருக்- 2-18-8

51. இறைவனிடத்தில் என்னுடைய பக்தி நிரந்தர மானதாக இருக்கட்டும். ருக்-2-12-14

52. யாகம் செய்பவர்களையும், சுறுசுறுப்பாய் இருப்பவர் களையும் கடவுள் காப்பாற்றுகிறார்.

ருக்-2-12-9

53. உலகம் யாவும் கடவுளில் பிரதிபலிக்கிறது.

ருக்-6-47-18

54. உலகில் உள்ள எல்லா பொருள்களிலும் கடவுளின் உரு பிரதிபலிக்கிறது. ருக்-6-16-28

55. தனது தீவிரமான வெப்பத்தால் நெருப்பு எல்லா புழுக்களையும் அழித்துவிடுகின்றது.

ருக்- 2-3-11

56. நெய் தீயினை வலுப்படுத்துவதால் அதனை நோக்கித் தாவுகிறது.

ருக்-5-3-3

57. நெருப்புக் கடவுளிடம் நல்ல பெயர் வாங்க காற்றுக் கடவுளாகிய " மருத்தும் "நெருப்பிற்கு தொண்டு செய்கிறது.

ருக்-3-1-13

58. இறைவனும் தூய உள்ளத்தவரும் இணைந்து இருக்கின்றனர். ருக்-7-56-5

59. மக்களுக்கு மருத்துக்கள் பலத்தை அளிக்கட்டும்.

ருக்-1-152-3

60. சூரியன் உண்மையை பலப்படுத்தி நம்மை பொய்மையிலிருந்து காப்பாற்றுகின்றார்.

ருக்-2-23-6

61. பிரஹஸ்பதியே, தாங்கள் தெளிவான நோக்குடையவர்கள் தாங்களே எங்களின் காப்பாளரும் வழி காட்டியுமாக ஆவீர். ருக்-1-106-3

62. தகுந்த அறிவுரை வழங்கும் நமது முன்னோர்கள் நம்மை காப்பாற்றட்டும். ருக்-10-116-9

63. நல்லதொரு வேலைக்காரனைப் போல் நல்ல மனிதனுக்கு மனம் குளிர்ந்த கடவுள் தொண்டு செய்கிறார். ருக்-1-44-1

64. விடியற்காலையில் கடவுள்கள் எழுகின்றனர். ருக்-10-63-4

65. மனித சமுதாயத்தின் செயல்பாட்டினை தேவர்கள் எந்நேரமும் கண் கொட்டாமல் கண்காணித்து வருகின்றனர். ருக்-8-18-15 66. தேவர்கள் தூய்மையானவர்களிடம் வசித்து அவர்களின் அந்தரங்க எண்ணங்களையும் அறிகின்றனர்.

ருக்-1-3-8 67. தேவர்கள் யாவரும் சுறுசுறுப்பானவர்கள்.

ருக்-1-90-30

68.அழிவற்ற தேவர்கள் மனித சமுதாயத்தின் மீது சுகத்தைப் பொழியட்டும்.

ருக்-2-41-16

69. சரஸ்வதி தேவியே, நாங்கள் புகழற்றவர்கள்;எங்களுக்கு புகழ் அளியுங்கள்.

ருக்-5-43-11

70. எங்களுடைய யாகத்தில் மதிப்பிற்குரிய ஸரஸ்வதி இருக்கட்டும்.

ருக்-2-41-17

71. ஸரஸ்வதி தேவியே, நீண்ட ஆயுளுக்குத் தேவையான யாவும் தங்களிடத்தில் இருக்கும்.

ருக்-7-96-3

72. ஸெளபாக்கியவதியான ஸரஸ்வதி யாவர் மீதும் அன்பைப் பொழிகின்றார்

ருக்-7-96-5

73. ஸரஸ்வதியே தங்களிடமிருந்து கிளம்பும் இனிமையான காற்று எங்களுக்கு சுகம் அளிப்பதாக அமையட்டும்.

ருக்-6-61-7

74. தங்கமயமான பாதையில் சென்று ஸரஸ்வதிதேவி தனது எதிரிகளின் உள்ளத்தில் பயத்தினை ஏற்படுத்துகின்றார்.

ருக்-1-89-3

75. ஸெளபாக்கிவதியான ஸரஸ்வதி எங்களுக்கு இன்பம் அளிக்கட்டும்.

ருக்- 6-61-4

76. ஸரஸ்வதி தேவி தன் சக்தியினாலேயே மிகுந்த பலமுள்ளவர். ருக்-2-3-8

77. ஸரஸ்வதி நமது அறிவை பலப்படுத்தட்டும்.

ருக்-6-61-4

78. ஸரஸ்வதி தேவியே எங்களை எங்கள் முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லுங்கள்.

ருக்-1-124-12

79. இல்லற தர்மத்தினை சிறப்பாக செய்யும் இல்லறத்தானின் மீது விடியல் கடவுளான உஷா தனது அருளைப் பொழிகின்றார்.

ருக்-1-123-9

80. உண்மையின் கடவுளாகிய ருதத்தின் மனைவியான உஷா தனது வகுக்கப்பட்ட இடத்திலிருந்து இம்மியும் நகர்வதில்லை.

81.உஷா .எங்களது நல்ல ஐஸ்வர்யத்திற்கும் வள்ளல் தன்மைக்கும் வழிகாட்டியாக இருக்கின்றார்,

ருக்,3,61,2

82. உஷாவின் தேர் தங்கத்தால் ஆனது, அவர் ஒரு மனிதனுக்கு வள்ளல் தன்மைக்கான வழியினைக் காட்டுகிறார்.

ருக்4,14,3

83.உஷாதேவி தோன்றி மக்களை நல்வழியில் சென்று நல்ல செயல்களை செய்யத் தூண்டிவிடுகிறார்.

ருக்1,92,7

84..உஷாதேவி ஒளிமயமானவர், மக்களை உண்மை பேசத் தூண்டுகிறார். ருக்,1,185,2

85.சுவர்க்கமும் பூமியும் நம்மை அழிவினின்று காப்பாற்றறட்டும்.

ருக்,10,63,16

87.தேவர்களால் காப்பாற்றப்படும் இந்த பூமி நாங்கள் வசிக்க ஏற்றதாக மங்களகரமானதாக அமையட்டும்.

ருக், 5,5,8

88.நல்ல பேச்சுக் கடவுளான இடாவும் அறிவுக்கடவுளாகிய ஸரஸ்வதியும் பூமியின் கடவுளாகிய மஹியும் மக்களுக்கு சுகத்தை அளிக்கின்றனர்.

ருக்4,23,8

89.உண்மையைப் புகழ்ந்து பாடப்படும் பாடல்களை செவிடர்களும் கேட்க முடியும்.

90. உண்மையைப் புகழ்ந்து பாடப்படும் பாடல்கள் தேவர்களை மகிழ்விக்கின்றது.

ருக்,4,23,9

91.உண்மை அழிவற்ற செல்வத்தினை அடையச் செய்கின்றது.

ருக்4,3,12

92. மழை நீருக்கு இனிப்பையும் அமிர்தத்திற்கு ஒப்பான தூய்மையையும் உண்மை தான் அளிக்கின்றது.

ருக்,7,60,5

93.மனிதனின் தீய செயல்களை தேவர்கள் அறிவார்கள்.

ருக்,10,37,2

94.எல்லா பக்கங்களிலும் எனது உண்மை பேச்சு என்னைக் காப்பாற்றட்டும்.

ருக்,8,79,5

95.தேடுபவன் தன் குறியினை கட்டாயம் அடைவர்.

ருக்,10,42,10

96.நம்முடைய தகுதியினாலேயே நாம் வெற்றி அடைவோமாக.

ருக்10,17,7

97.நிலத்தை உழுதபின் தான் ஒருவர் விளைச்சலை அறுக்க முடியும்.

ருக்,7,82,9

98.குறிக்கோள் உள்ளவர்கள் தான் வாழமுடியும், அவர் யாவற்றினையும் வெற்றி கண்டு பலசாலியாகின்றார்.

ருக்,9,73,3

99.கடினமான பாதையில் செல்ல அறிவுள்ளவர்கட்குத்தான் தைர்யமும் துணிவும் உண்டு.

ருக், 4,33,11

100. இடைவிடாது உழைப்பவரைத்தான் தங்களின் நட்பிற்கு ஏற்றவர்களாக தேவர்கள் கருதுகின்றனர்.

ருக்,7,32,9,

101.திறனற்றவர்களை தேவர்கள் ஆதரிப்பதில்லை.

ருக்-1-139-10

102. கடுமையாக உழைப்பவன் பல அரண்மனைப் போன்ற வீடுகட்கு சொந்தக்காரனாக ஆகிறான்.

ருக்-10-117-5

103. ஐஸ்வர்யம் ஒருவரிடமே நீண்ட காலம் தங்குவதில்லை.

ருக்-1-125-7

104. தானம் அளிக்காதவர்களை கஷ்டங்கள் தாக்குகின்றன.

ருக்-1-92-3

105. நல்ல செயல் புரிவோருக்கும் தானம் அளிப்பவருக்கும் மட்டும் உஷாதேவி செழுமையினை அளிக்கின்றார்.

ருக்-10-117-3

106.தானம் அளிப்பவரின் ஐஸ்வர்யம் ஒருபோதும் குறைவதில்லை.

ருக்-5-42-8

107.பசுக்களையும் ஆடைகளையும் தேவையானவர்கட்கு அளிப்பவர்களுடன் சௌபாக்யவதி மஹாலக்ஷ்மி வசிக்கின்றாள்.

ருக்-1-125-6

108.தானம் அளிப்பவர்கள் நீண்ட ஆயுளை சுவைக்கின்றனர்.

ருக்-1-125-6

109. தானம் அளிப்பவர்கள் அழியாத் தன்மை பெறுகின்றனர். -ருக்-10-117-4

110.தேவையான காலத்தில் உதவாத நண்பன் நண்பனே அல்ல.- ருக்-10-117-7

111.தான உள்ளம் படைத்த நண்பன் கருமியினை கைவிடுகின்றான். -ருக்-10-117-6

112.மூர்க்கனிடம் உள்ள ஐஸ்வர்யம் எவருக்கும் பயனில்லை.- ருக்-3-8-5

113.அறிஞர்கள் தங்களின் செயல்களை தங்களின் அறிவுத் திறமை மூலம் தூய்மையாக்குகின்றனர்.- ருக்-1-125-11

114.விடியலில் எழுபவர்கட்கு எல்லா வகை நன்மைகளும் கிட்டும்.- ருக்-5-2-6

115.நம்மை பழிப்பவர் தாமே பழிக்காளாவர்- ருக்-7-4-7

116.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது. - ருக்-5-51-15

117.தான சிந்தனை உள்ளவர், அஹிம்ஸைவாதிகள், நன்கு படித்த அறிஞர்கள் ஆகியோரின் நட்பைப் பெறுவோமாக. - ருக்-9-58-1

118.மகிழ்வு நிறைந்த மனம் கொண்டோர் வாழ்க்கைக் கடலில் அமைதியாக நீந்தி இருப்பர்.- ருக்-10-164-2

119.பொதுவாக மக்கள் உயர்ந்த உள்ளம் கொண்டவரை நேசித்து அவர்களை முன் உதாரணமாகப் பின்பற்றுவர்.- ருக்-10-117-9

120.இரட்டையரும் சமமான பலம் கொண்டவர்களாக இருப்பதில்லை.- ருக்-10-120-3

121.இனிமையாக பேசுபவரிடம் எப்போதும் இனிமையாகவே பழக வேண்டும்.- ருக்-2-41-8.

122.நிந்திப்பவர்கள் எதிரிகட்கு ஒப்பானவர்.- ருக்-3-53-23

123.குதிரையின் முன்பு கழுதையை எவரும் நிறுத்துவதில்லை.- ருக்-10-10-1

124.என்னுடைய நண்பர்களிடம் என்னுடைய நடத்தை ஏற்புடையதாக இருக்க வேண்டும்.- அ.வே.9-6-24

125.சந்தேகம் கொண்டவன் அல்லது ஏமாற்று நோக்கம் கொண்டவன் ஆகியவனின் உணவை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.- அ.வே.5-3-4

126.எனது விருப்பம் யாவும் நிறைவேறட்டும். - ஈ.சோ.11

127. அத்யாத்ம வித்தையின் மூலம் அழியாத் தன்மையினை அடைய முடியும்.

PDF E-Book டவுன் லோட் செய்ய

http://www.esnips.com/web/anuradha202000/?flush=1

Edited by அனுராதா

Share this post


Link to post
Share on other sites

அடக்கடவுளே!!!

இங்கே "லீனா அண்ணாவின் பார்வையில் ரிக் வேதம்" மட்டும் இருக்கட்டும்......

மற்றவை பதிக்கநினைத்தால் வேறு திரி ஆரம்பித்து பதிக்கவும்....இந்த திரியையும் படிக்க ஆர்வமில்லாதவாறு செய்யவேண்டாம் அனுராதா அவர்களே.ப்ளீஸ்!......

Share this post


Link to post
Share on other sites

அனுராதா நீங்க எழுதியதில் இப்போ நான் தெரிவு செய்ததில் மக்களுக்கு என்ன நல்ல செய்தி உண்டென்று ஒருதரம் கூற முடியுமா...?

ஆனால் ஒன்று ரிக் வேதம் என்பது உங்களைப் போல மட்டுமல்ல அனைத்து இந்துக்களுக்கும் ஒரு மூடப்பட்ட நூலாகும்.

நான் அடிக்கடி சொல்வதுதான்.

குரான் படிக்காத முஸ்லிம் இல்லை. பைபிள் படிக்காத கிருஸ்தவன் இல்லை. ஆனால் ரிக் வேதம் படித்த இந்துவும் இல்லை என்று.

இதுதான் எங்கள் மதத்தின் நிலை இன்று.

அனுராதா,

நீங்கள் எழுதியுள்ள ரிக் வேத குறிப்புகள் எங்கே எங்கே, எந்த எந்தச் சந்தர்ப்பங்களில் எழுதப் பட்டவை என்பதை நான் எழுத வெளிக்கிட்டால் மிகவும் கஷ்டப்படுவீர்கள்.

வேண்டாம் இத்துடன் சரியான விவாதத்தை மட்டும் இங்கு வையுங்கள்.

மீண்டும்,

நீங்க எழுதியதில் இப்போ நான் தெரிவு செய்ததில் மக்களுக்கு என்ன நல்ல செய்தி உண்டென்று ஒருதரம் கூற முடியுமா...?

ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள சில நல்ல கருத்துக்கள்

ருக்,-8-59-5

1. நம்முடைய மேன்மைக்காகவே நாம் உண்மை பேசுகிறோம்.

ருக்-7,61-5

7. உண்மை ஒரு ஸ்திரமான அஸ்திவாரத்தின் மீது உள்ளது.

ருக்-1,39,10

11.தர்ம, அர்த்த,காம,மோக்ஷ சதுர்வித புருஷார்த்தங்களைத் தேடுவோர் நிரந்தரமாக உழைப்பவர்கள்.

ருக்,1,144,1

26. அறிஞர்கள் தங்களின் அறிவை சிறந்த செயல்கட்கு உபயோகிப்பார்கள்.

33. இந்த யாகம் இந்த உலகத்தின் நாபியாகிறது.

ருக்,1,1,83,3

34. முயன்று செயல்படும் யாககர்த்தா சிறந்த சக்தியினை அடைகின்றார்.

ருக் 1,83,5

35.முதன் முதலில் யாகத்தைச்செய்தவர் அதர்வ ரிஷியாவார்.

ருக்,1,107,1

36.யக்ஞம் செய்வது தேவர்களை மகிழ்விப்பதற்கு ஒரு சாதனம்.

ருக்,5,393

37.இறைவா யாகம் செய்பவர்களின் மனத்திலிருந்து அறியாமை இருளை விலக்கிவிடு.

39.இறைவனிடத்தில் கை ஏந்தாதவர் எவர் உளர்? ருக்,4,25,7

ருக்,8,92,32

41. இறைவா!நாங்கள் தங்களைச் சார்ந்தவர்கள்,நீங்கள்எங்களை?r />?் சார்ந்தவர்.

ருக்,8,103,5

42. இறைவா, தங்களின் பக்தன் மிகவும் பலமாக காப்பாற்றப்படும் , எதிரிகளின் பாசறையிலும் உண்பதற்கு ஏதேனும் பெறுவான்.

ருக்,1,164,43

43.யாகம் செய்வது என்பதுதான் மிகப் பழமையான மதச்சடங்கின் கடமையாக இருந்தது.

49.ஸரஸ்வதி தேவியே!கடவுளர்களை நிந்திப்பவர்களை அழித்து விடு.

ருக்- 2-18-8

51. இறைவனிடத்தில் என்னுடைய பக்தி நிரந்தர மானதாக இருக்கட்டும். ருக்-2-12-14

ருக்-2-12-9

53. உலகம் யாவும் கடவுளில் பிரதிபலிக்கிறது.

ருக்-6-47-18

54. உலகில் உள்ள எல்லா பொருள்களிலும் கடவுளின் உரு பிரதிபலிக்கிறது. ருக்-6-16-28

55. தனது தீவிரமான வெப்பத்தால் நெருப்பு எல்லா புழுக்களையும் அழித்துவிடுகின்றது.

ருக்- 2-3-11

56. நெய் தீயினை வலுப்படுத்துவதால் அதனை நோக்கித் தாவுகிறது.

ருக்-5-3-3

57. நெருப்புக் கடவுளிடம் நல்ல பெயர் வாங்க காற்றுக் கடவுளாகிய " மருத்தும் "நெருப்பிற்கு தொண்டு செய்கிறது.

ருக்-3-1-13

59. மக்களுக்கு மருத்துக்கள் பலத்தை அளிக்கட்டும்.

ருக்-1-152-3

60. சூரியன் உண்மையை பலப்படுத்தி நம்மை பொய்மையிலிருந்து காப்பாற்றுகின்றார்.

ருக்-2-23-6

61. பிரஹஸ்பதியே, தாங்கள் தெளிவான நோக்குடையவர்கள் தாங்களே எங்களின் காப்பாளரும் வழி காட்டியுமாக ஆவீர். ருக்-1-106-3

62. தகுந்த அறிவுரை வழங்கும் நமது முன்னோர்கள் நம்மை காப்பாற்றட்டும். ருக்-10-116-9

64. விடியற்காலையில் கடவுள்கள் எழுகின்றனர். ருக்-10-63-4

65. மனித சமுதாயத்தின் செயல்பாட்டினை தேவர்கள் எந்நேரமும் கண் கொட்டாமல் கண்காணித்து வருகின்றனர். ருக்-8-18-15 66.

தேவர்கள் தூய்மையானவர்களிடம் வசித்து அவர்களின் அந்தரங்க எண்ணங்களையும் அறிகின்றனர்.

ருக்-1-3-8 67. தேவர்கள் யாவரும் சுறுசுறுப்பானவர்கள்.

ருக்-1-90-30

68.அழிவற்ற தேவர்கள் மனித சமுதாயத்தின் மீது சுகத்தைப் பொழியட்டும்.

ருக்-2-41-16

69. சரஸ்வதி தேவியே, நாங்கள் புகழற்றவர்கள்;எங்களுக்கு புகழ் அளியுங்கள்.

ருக்-5-43-11

70. எங்களுடைய யாகத்தில் மதிப்பிற்குரிய ஸரஸ்வதி இருக்கட்டும்.

ருக்-2-41-17

71. ஸரஸ்வதி தேவியே, நீண்ட ஆயுளுக்குத் தேவையான யாவும் தங்களிடத்தில் இருக்கும்.

ருக்-7-96-3

72. ஸெளபாக்கியவதியான ஸரஸ்வதி யாவர் மீதும் அன்பைப் பொழிகின்றார்

ருக்-7-96-5

73. ஸரஸ்வதியே தங்களிடமிருந்து கிளம்பும் இனிமையான காற்று எங்களுக்கு சுகம் அளிப்பதாக அமையட்டும்.

ருக்-6-61-7

74. தங்கமயமான பாதையில் சென்று ஸரஸ்வதிதேவி தனது எதிரிகளின் உள்ளத்தில் பயத்தினை ஏற்படுத்துகின்றார்.

ருக்-1-89-3

75. ஸெளபாக்கிவதியான ஸரஸ்வதி எங்களுக்கு இன்பம் அளிக்கட்டும்.

ருக்- 6-61-4

76. ஸரஸ்வதி தேவி தன் சக்தியினாலேயே மிகுந்த பலமுள்ளவர். ருக்-2-3-8

77. ஸரஸ்வதி நமது அறிவை பலப்படுத்தட்டும்.

ருக்-6-61-4

78. ஸரஸ்வதி தேவியே எங்களை எங்கள் முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லுங்கள்.

ருக்-1-124-12

79. இல்லற தர்மத்தினை சிறப்பாக செய்யும் இல்லறத்தானின் மீது விடியல் கடவுளான உஷா தனது அருளைப் பொழிகின்றார்.

ருக்-1-123-9

80. உண்மையின் கடவுளாகிய ருதத்தின் மனைவியான உஷா தனது வகுக்கப்பட்ட இடத்திலிருந்து இம்மியும் நகர்வதில்லை.

81.உஷா .எங்களது நல்ல ஐஸ்வர்யத்திற்கும் வள்ளல் தன்மைக்கும் வழிகாட்டியாக இருக்கின்றார்,

ருக்,3,61,2

82. உஷாவின் தேர் தங்கத்தால் ஆனது, அவர் ஒரு மனிதனுக்கு வள்ளல் தன்மைக்கான வழியினைக் காட்டுகிறார்.

ருக்4,14,3

83.உஷாதேவி தோன்றி மக்களை நல்வழியில் சென்று நல்ல செயல்களை செய்யத் தூண்டிவிடுகிறார்.

ருக்1,92,7

84..உஷாதேவி ஒளிமயமானவர், மக்களை உண்மை பேசத் தூண்டுகிறார். ருக்,1,185,2

85.சுவர்க்கமும் பூமியும் நம்மை அழிவினின்று காப்பாற்றறட்டும்.

ருக்,10,63,16

87.தேவர்களால் காப்பாற்றப்படும் இந்த பூமி நாங்கள் வசிக்க ஏற்றதாக மங்களகரமானதாக அமையட்டும்.

ருக், 5,5,8

88.நல்ல பேச்சுக் கடவுளான இடாவும் அறிவுக்கடவுளாகிய ஸரஸ்வதியும் பூமியின் கடவுளாகிய மஹியும் மக்களுக்கு சுகத்தை அளிக்கின்றனர்.

ருக்,7,60,5

93.மனிதனின் தீய செயல்களை தேவர்கள் அறிவார்கள்.

ருக்,10,37,2

94.எல்லா பக்கங்களிலும் எனது உண்மை பேச்சு என்னைக் காப்பாற்றட்டும்.

120.இரட்டையரும் சமமான பலம் கொண்டவர்களாக இருப்பதில்லை.- ருக்-10-120-3

126.எனது விருப்பம் யாவும் நிறைவேறட்டும். - ஈ.சோ.11

Edited by லீனாரோய்

Share this post


Link to post
Share on other sites

ரிக் வேதம் படித்த இந்துக்கள் இல்லை.....ஆனால் பைபிள் படித்த இந்துக்கள் உண்டு......

Share this post


Link to post
Share on other sites

ரிக் வேதம் படித்த இந்துக்கள் இல்லை.....ஆனால் பைபிள் படித்த இந்துக்கள் உண்டு......

இது யாருக்கு குத்து...?

Share this post


Link to post
Share on other sites

இது யாருக்கு குத்து...?

இந்துக்களே படிக்கமுடியாதவாறு எட்டாத இடத்தில் வைத்து இந்து மதத்தை உயர்த்தி சொல்பவர்களுக்கும்,வேதங்களை கேட்டாலே காதில் காய்ச்சிய ஈயம் ஊற்றவேண்டும் என்று சொன்னவர்களுக்குத்தான்.....

Share this post


Link to post
Share on other sites

வேதங்களும் உபநிதங்களும் ஒரு சிலரின் மேன்மைக்காக வசதிப்படி திரித்துக் கூறவும், கூடியமட்டும் கடவுள் பெயரால் அச்சுறுத்தவுமே பயன்படுத்தப்பட்டதென்பது வரலாறு. இதில் கோலோச்சும் மன்னனும் அடிமையானது துரதிஷ்டமானது. பல நேரங்களில் மன்னனையும், நாட்டையும் விட குறிப்பிட்ட பிரிவினர் முக்கியத்துவமானவர்களாக மாறினர். மக்கள் கடவுளை நேரடியாக வணங்கவோ,ஆராதிக்கவோ வேதங்களும் மொழிகளும் இன்னபிற 'பொடி'களும் தடைகளாக இருப்பின், அவற்றை தூக்கியெறிய வேண்டுமேயொழிய அறியாமையினால் ஒதுங்கிக்கொள்ளக்கூடாது.

இன்றும் நாட்டின் கொள்கையை வகுக்கிறேன் பேர்வழியென அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மறைத்துத் திரித்து கூறி காரியம் சாதிக்கும் வல்லமை ஒரு சாரருக்குண்டு. ஆகையால் வேதங்களின் வேடங்களை சிறிதாவது களைந்து தோலுரித்து காட்டப்படும் என்ற வகையில் இத்திரியை நான் வரவேற்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

வேதமெல்லாம் உயர் சாதிக்காரர்கள் படித்துச்செலவது....

அவரு பண்டிதரு... வேதமெல்லாம் படிச்சிருக்காரு...

இப்படித்தான் பொதுவில் நாம் கூறுவது...

நாமும் படித்து... புரிந்து தெளிய.... தங்கள் விளக்கங்கள் தேவை அண்ணா...

தொடருங்கள் ..

Share this post


Link to post
Share on other sites

சப்த சிந்துப் பகுதியில் ஆரியர்கள் கி.மு 1500க்கு முன்னர் குடியேறினாலும், ரிக் வேதம் அச்சமயம் இயற்றப்படவில்லை.

அதற்குப் 300 ஆண்டுகளின் பின்னர் (கி.மு 1200) பரத்வாஜர், வசிஷ்டர், விசுவாமித்திரர் ஆகியவர்கள் தங்கள் முதல் செய்யுள்களை இயற்றினார்கள்.

இந்த செய்யுளகள் ரிக் வேதத்தில் "ரிசா"க்கள் என்றழைக்கப் படுகின்றன.

அந்த ரிசாக்கள், அப்போதிருந்த ஆரியர்கள் திராவிடர்களுடன் நடாத்திய யுத்தத்தை தேவ, அசுர யுத்தங்களாக வடிக்கப்பட்டன.

இதில் மிகவும் உன்னிப்பாக நாம் கவணிக்க வேண்டிய ஒரு நகைச்சுவை உண்டு.

அதாவது ஆரியர்கள் ரிக் வேத காலத்தில் வணங்கிய முக்கிய தெய்வங்கள் மூன்று.

அவர்கள் இந்திரன், அக்னி, சோமன்.

இதில் சோமம் என்பது ஒரு வகைப் பானம்.

ரிக் வேத காலத்தில் நெருப்பு, நீர், ஆறு, காற்று, வானம் என அனைத்துமே கடவுளாக வழிபடப்பட்டு வந்தன.

அதில் இந்தச் சோம பானமும் கடவுளாகவே வழிபடப்பட்டது. சோம பானத்திற்கு அதிபதியாக சந்திரன் சோமன் என அழைக்கப்பட்டான்.

இதில் வேடிக்கை என்னவென்றால்,

இந்த சோமபானம் வேறு எதுவுமில்லை. அது வெறும் கஞ்சாச் இலைகளை பசும்பாலில் ஊறவைத்துச் செய்யும் ஒரு பானம் அவ்வளவுதான்.

இந்தக் கஞ்சாச் செடிப்பானமே மிகவும் தெய்வீகமாக்கப்பட்டு சோமபானமென இந்துக்களுக்கு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திரன் முதற்கொண்டு அனைத்துக் கடவுளும் இந்தப் பானத்தைப் பருகியுள்ளனர்.

இதன் மகிமை ரிக் வேதத்தின் 10வது அத்தியாயத்தின் முழுவதுமே சொல்லப்பட்டிருக்கிறது.

இதில் இன்னுமொரு வேடிக்கை உண்டு. அக்காலத்தில் ஆரியர்களால் அருந்தப்பட்ட பானங்கள் இரண்டு.

இரண்டுமெ தெய்வீகமாக்கப்பட்டிருந்தன.

ஒன்று சோமபானம், மற்றது சுரா பானம்.

இந்தச் சுரா பானம் பழங்களைப் புளிக்க வைத்து அதன் மூலம் வடித்தெடுக்கப்பட்ட ஒருவகை மதுபானம்தான்.

சொல்லப் போனால் சாராய வகையைச் சேர்ந்தது.

இந்தச் சுராபானத்தை ஆரியர்கள் விரும்பிக் குடித்ததனால் அவர்கள் சுரர்கள் என்று அழைக்கப் பட்டனர்.

ஆனால் அவர்களது எதிரிகளான திராவிடர்களும், கிராத் இன மக்களும் அசுரர்கள் எனப்பட்டனர்.

அதாவது சுராபானம் அருந்தாதபடியினால் அ-சுரர்கள் என அழைக்கப்பட்டனர்.

இதுவே பிற்காலத்தில் மருவி அசுரர் என்றால் கோரமாக இருப்பார்கள் என திட்டமிட்டு சிலரால் மாற்றப்பட்டது.

Share this post


Link to post
Share on other sites

எனக்கு கொஞ்சமும் தெரியாத விசயம் இது. தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

நன்றி.

Share this post


Link to post
Share on other sites

அனுராதா இங்கேயும் குப்பையை கொட்டி திரியை நாற்றமெடுக்க செய்ய ஆரம்பித்து விட்டார். நிர்வாகம் கவனிக்க வேண்டும் :லொள்:

Share this post


Link to post
Share on other sites

ஆத்தாடி .. அப்பமே என்னமா அனுபவிச்சு சரக்கடிச்சிருக்கானுவ... :சியேர்ஸ்:

Share this post


Link to post
Share on other sites

ஆத்தாடி .. அப்பமே என்னமா அனுபவிச்சு சரக்கடிச்சிருக்கானுவ... :சியேர்ஸ்:

அது மட்டுமல்ல அப்படி அதை சாப்பிடாதவர்கள் தாழ்ந்தவர்கள், தப்பானவர்கள் என்றும் ரிக் வேதம் மூலம் கூறியிருக்கிறார்கள்.

அதைக் குடிக்காத ஒரு நல்ல இனத்தையே அந்தக் குடிவகையை வைத்து கொச்சைப் படுத்தியிருக்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆமாம்... சுரா குடிக்காத அ- சுரர்கள் நல்லவர்களா.. அல்லது.... கஞ்சா... சோம... சுரா... குடித்து கும்மாளமிட்ட ஆரியர்கள் நல்லவர்களா எனும் கேள்வி வருகிறது ...

Share this post


Link to post
Share on other sites

நாராயணி, திராவிட தாவல்புகழ் தென்னவனிடமிருந்து பதில் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

அனுராதா நீங்க எழுதியதில் இப்போ நான் தெரிவு செய்ததில் மக்களுக்கு என்ன நல்ல செய்தி உண்டென்று ஒருதரம் கூற முடியுமா...?

ருக்,-8-59-5

1. நம்முடைய மேன்மைக்காகவே நாம் உண்மை பேசுகிறோம்.

ருக்-7,61-5

7. உண்மை ஒரு ஸ்திரமான அஸ்திவாரத்தின் மீது உள்ளது.

ருக்-1,39,10

11.தர்ம, அர்த்த,காம,மோக்ஷ சதுர்வித புருஷார்த்தங்களைத் தேடுவோர் நிரந்தரமாக உழைப்பவர்கள்.

ருக்,1,144,1

26. அறிஞர்கள் தங்களின் அறிவை சிறந்த செயல்கட்கு உபயோகிப்பார்கள்.

33. இந்த யாகம் இந்த உலகத்தின் நாபியாகிறது.

ருக்,1,1,83,3

ருக்,-8-59-5

1. நம்முடைய மேன்மைக்காகவே நாம் உண்மை பேசுகிறோம்.

ருக்-7,61-5

7. உண்மை ஒரு ஸ்திரமான அஸ்திவாரத்தின் மீது உள்ளது.

ருக்-1,39,10

வியாபாரம் என்பது சமூகசேவையாகச் செய்யவேண்டிய ஒருகாரியம். கொடுப்பவருக்கும் சந்தோஷம் | வாங்குபவருக்கும் சந்தோஷம் என்பதாகவியாபாரம் அமையவேண்டும்.

எல்லாத்தரப்பு மக்களுக்கும் சேவைசெய்யும் வாய்ப்பு, வியாபாரப் பெருமக்களுக்கு மாத்திரம்தான் உண்டு. மற்றவர்களிடமெல்லாம் பிரிந்து பிரிந்து இருக்கும். எப்படி ஒரு வழக்கறிஞர் இருக்கிறாரோ, ஒரு மருத்துவர் இருக்கிறாரோ, ஒருநிர்வாகி இருக்கிறாரோ... அதேபோல்தான் வியாபாரிகள். அவர்களுக்கென்று ஒருதர்மம்உண்டு. அறம் சார்ந்து இருக்க வேண்டியவர்கள் வியாபாரிகள்.

பழைய வியாபாரத்தில் கடனே கிடையாது. இப்போது எல்லாமே கடனில் ஓடுகிறது. வியாபாரத்தில் துக்கமே வரக்கூடாது என்று நினைத்தவர்கள் கடனே இல்லாமல் செய்தார்கள்.

‘எந்தப் பொருள் வாங்குபவனுக்கு நிலையான உபயோகத்தைத் தருகிறதோ, அதை மட்டும்தான் அவனுக்கு விலைக்குக் கொடுக்கலாம்’ என்கிறார் சாணக்யர். ‘நீ சும்மா கொடுத்தால் கூட அந்தப் பொருள் அவன் பயன் படுத்துவது மாதிரி இருக்கவேண்டும்’ என்கிறது தர்மசாஸ்திரம்.

கொடை என்பது கூட ஒரு வியாபாரம் தான். கொடை வழங்குவதால் நாம் விரும்பியோ விரும்பாமலோ நமக்கு ஒரு புகழ் கிடைக்கிறது. நமக்குப் புகழைத் தரக்கூடிய கொடையில், வாங்குபவனுக்கு பயனில்லை என்றால் அவன் துக்கப்படுவான். எனவே, பயனுள்ளதைத்தான் தரவேண்டும். மாடு கொடுத்தால் நாளை சாகப்போகிற மாட்டைக் கொடுக்கக்கூடாது. அரிசி கொடுத்தால் ரேஷன் அரிசி கொடுக்கக் கூடாது. வேஷ்டி கொடுத்தால் தேர்தல் நேரத்தில் தரும் வேஷ்டியைக் கொடுக்கக் கூடாது. இப்படி ஒருசட்ட திட்டத்தை தர்மசாஸ்திரம் வகுத்திருக்கிறது.

11.தர்ம, அர்த்த,காம,மோக்ஷ சதுர்வித புருஷார்த்தங்களைத் தேடுவோர் நிரந்தரமாக உழைப்பவர்கள்.

ருக்,1,144,1

மானிட இந்த ஜென்ம வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்காக இந்து மதம் சொல்கிறது. அவையாவன: தர்மம் அல்லது அறம், அர்த்தம் அல்லது செல்வம், காமம் அல்லது இன்பம் மற்றும் இறுதியில் மோட்சம் ஆகும். இதில் முதல் மூன்று இலக்குகளை அடைந்திடும் பருவத்திற்கு சம்சாரம் என்று பெயர். சம்சார வாழ்வின் சாரம் என்னவென்றால் : அற வழியில் நடந்து ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும். மனைவி மக்களோடு தூய இல்லற வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று இன்பத்தினை துய்க்க வேண்டும். இதனால் இவற்றுக்கு பெயர் தர்ம, அர்த்த,காம,மோக்ஷ சதுர்வித புருஷார்த்தங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்

தர்மம்:என்று இந்து சமயத்தில் பொதுவாக சொல்லப்படுதலுக்கு, தமிழில் அறம் என்று வழங்கப்படுகிறது.

மனிதர்களைப் பொறுத்தவரை தர்மம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் வெளியில் உலகம் உழல்வதும், அண்ட சராசரங்கள் ஒரு ஒழுங்கில் இயங்குவதும் தர்மம் எனப்படும் இறைவனின் விதிகளில்தான் என்கிறது இந்து சமயம்.

மனித ஆத்மா இறைவழியில் நடந்து உயர் ஞானம் பெற்றிட அற வழியில் நடந்திடல் அவசியமானது. அறம் வலியுறுத்தும் திருவள்ளுவர், அறத்தின் சிறப்பினை இவ்வாறு சொல்லுகிறார்:

சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்

ஆக்கம் எவனோ, உயிர்க்கு? (31)

(தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது உறுதி. செல்வமும் வரலாம். ஆதலால் தர்மத்தை காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது வேறு என்ன இருக்கிறது?)

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)

(தர்மங்களை செய்வதுபோல நன்மை தரக்கூடியதும் இல்லை. தர்மங்களை செய்யாமல் மறந்துவிடுவது போலத் தீமை தரக்கூடியதும் இல்லை.)

தர்ம வழியில் இருந்து பிறழுதலுக்கு அதர்மம் என்று வழங்கப்படுகிறது.

காமம்: என்பது ஆசை,விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பஙகளையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல்.

சம்சார வாழ்க்கையில் நன்கு பக்குவப்பட்ட பின், ஒருவர் அடுத்த நிலையான துறவு நிலைக்கு தயாராகிறார். துறவு நிலையில் அடுத்த இறுதி இலக்கான மோட்ச நிலைக்கு தன்னை தயார் செய்து கொள்கிறார். சம்சார வாழ்க்கையில் ஒருவர், வாழ்க்கையை முழுதுமாக வாழ்வதில் தன் மனதை செலுத்துகிறார். துறவுக்காக அவர் சம்சார வாழ்க்கையில் வாழ்வதில்லை. தானாக மனம் பக்குவப்பட்டு, துறவுக்கு தயார் செய்யுமே தவிர சம்சார வாழ்க்கையில் துறவைப் பற்றி நினைப்பதில்லை. இந்த வகையில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரானது எனச் சொல்லலாம்.இறுதி இலக்கான மோட்சத்திற்கான துறவு வழியில் நடந்திட அதற்கு முந்தைய பாதையான சம்சாரம் அவசியமானது. ஏனெனில் சம்சார வாழ்க்கையில் ஒருவர் பக்குவப்பட்ட பின்னரே அவர் துறவு வாழ்க்கைக்கு தயாராகிறார். துறவு வாழ்க்கையில் பக்குவப்பட்டு, இறுதி இலக்கான மோட்சம் என்னும் மறுபிறவி இல்லாத நிலையினை அடைய தயாராகிறார். இதுவே இந்து மறைகளில் பொதுவாக உரைக்கப்பட்ட பாதை. ஆயினும் சம்சார வாழ்க்கையில் இருந்து கொண்டே, மோட்ச நிலையினை அடைய இயலும் என்றும் அவ்வாறு மோட்சம் அடைந்த மகான்களும் உண்டென சொல்லலாம்

26. அறிஞர்கள் தங்களின் அறிவை சிறந்த செயல்கட்கு உபயோகிப்பார்கள்.

ருக்,1,1,83,3

சபாபதி ஒருவர்த்தகன். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் பெயர் சந்திரன். இன்னொருவன் பெயர் இந்திரன். சபாபதிக்கு, தனக்குப் பிறகு வியாபாரத்தைநடத்தும் பொறுப்பை எந்தமகனிடம்கொடுப்பதுஎன்பது பற்றி ஒரே கவலை. ஒருநாள் தன் இருமகன்களையும் அழைத்து ஒவ்வொருவரிடமும் ஒருரூபாய் கொடுத்து இந்த வீடு முழுவதும் நிரம்பும்படி ஏதாவது ஒரு பொருளை வாங்கிக்கொண்டு வருமாறு சொன்னார்.

மூத்தமகன் சந்திரன் உடனே உற்சாகத்துடன் கடைத்தெருவுக்கு ஓடினான். அங்கு எது மலிவாகவும் ஏராளமாகவும் கிடைக்கும் என்று பார்த்தான். வைக்கோல்தான் கிடைத்தது. வாங்கிக்கொண்டுவந்தான். ஆனால், அதுவோ வீட்டின் ஒருபகுதியைக்கூட நிரப்பவில்லை.

இளையவன் இந்திரன் அவன் அண்ணனைப்போல் உடனேகடைக்குஓடவில்லை. யோசித்தான். தந்தையின் செயலில் ஏதோ உட்கருத்து இருப்பதாகத் தெரிந்தது. இதை மிக புத்திசாலித்தனமாகத்தான் நிறைவேற்றவேண்டுமென்று தீர்மானித்தான். கடைக்குச் சென்று சிலமெழுகுவத்திகளை வாங்கிவந்தான். இரவுவந்தது. ஒவ்வொரு அறையிலும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தான். வீடு முழுவதும் வெளிச்சம்பரவியது.

தந்தைக்கு ஒரே மகிழ்ச்சி. உனக்குத்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது. எனது வியாபாரத்தைத் தொடர்ந்துநடத்த உனக்குத்தான் தகுதி உள்ளது! என்றார்.

Share this post


Link to post
Share on other sites

இந்தச் சோம பானமும் கடவுளாகவே வழிபடப்பட்டது. சோம பானத்திற்கு அதிபதியாக சந்திரன் சோமன் என அழைக்கப்பட்டான்.

இந்த சோமபானம் வேறு எதுவுமில்லை. அது வெறும் கஞ்சாச் இலைகளை பசும்பாலில் ஊறவைத்துச் செய்யும் ஒரு பானம் அவ்வளவுதான்.

ஒன்று சோமபானம், மற்றது சுரா பானம்.

இந்தச் சுரா பானம் பழங்களைப் புளிக்க வைத்து அதன் மூலம் வடித்தெடுக்கப்பட்ட ஒருவகை மதுபானம்தான்.

சொல்லப் போனால் சாராய வகையைச் சேர்ந்தது.

சோம + பானம் என்றால் இனிய பானம் என்று அர்த்தம். சோம் என்றால் இனிமை என்று அர்த்தம். அதில் இருந்து தோன்றிய சொல் தான் சுஹம்.

‘சோமலதே’ என்ற ஒரு கொடி. அதைப்பிழிந்து சாறுஎடுத்து “சோம’ என்கிற சாறுதான் இந்தச் சோமபானம். இது அமுதத்துக்கு நிகரானது என்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அது போதை வஸ்து அல்ல. சோமபானம் பற்றி வேதங்களிலும், புரா ணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஸோமபானம் என்பது போதை ஏற்றுவது அல்ல. "ஸுரா பானம்' என்பதுதான் அப்படிப்பட்ட பானம்; இதுவே "பானம்' என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதுண்டு.

ஸோம என்பது ஒரு கொடி – ஸோமலதை; அதன் ரஸம் ஸோம ரஸம்; இது தேவர்களுக்கு உரியதாகவும், அமிர்தத்திற்கு ஒப்பானதாகவும் குறிப்பிடப்படுகிறது. இது யாகங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இது போதை தருகிற விஷயம் அல்ல.

ஆகையால் ஸோமபானம் அருந்துவது என்பது சடங்குகளுடன் கூடிய, புனிதமுடைய ரஸத்தை அருந்துவதே தவிர – போதை ஏற்றிக்கொள்கிற விஷயம் அல்ல. ஸுராபானம் என்பதுதான், குடி; போதை பானம்.

ஸம்ஸ்க்ருதத்தில் மது என்றால் "போதை தருகிற பானமே' என்பதல்ல பொருள். கள், சாராயம், இவற்றின் அயல்நாட்டு வகைகள் போன்றவற்றை அருந்துவது, தமிழில் மது அருந்துவது என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஸம்ஸ்க்ருதத்தில் "மது' என்பதற்கு, பல அர்த்தங்கள் உண்டு. "மது உண்ணும் வண்டு' என்கிறோமே, அந்த "மது'தான், ஸம்ஸ்க்ருத "மது'; அதாவது மலர்களிலிருந்து பெறப்படுவது; தேன். இதைத் தவிர, சுவையுள்ள தித்திப்பு ருசியுள்ள பழரஸங்களும் "மது' என்று குறிப்பிடப்படுகின்றன.

"மதுர' (மதுரம்) என்றால் சுவையுள்ளது, இனிமையானது. நல்ல இசையை "அந்த சங்கீதம் கேட்பதற்கே மதுரமாக இருந்தது' என்று கூறுவது இதனால்தான். பூஜைகள் செய்யும்போது, "மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி' – "மதுபர்க்கம் சமர்ப்பிக்கிறேன்' என்று கூறப்படுகிறது. மதுபர்க்கம் என்பது தேன், பால், வெண்ணெய், தயிர் போன்றவை கலந்தது. "மதுபானம்' என்பதற்கு ஸம்ஸ்க்ருத அகராதி "சுவையுள்ள பழரஸங்கள்' என்று பொருள் கூறுகிறது.

ஆகையால் மது என்றால், உடனே கள், சாராய வகையைச் சார்ந்தது மட்டுமே என்ற எண்ணம் தவறானது. தமிழிலேயே கூட அகராதிகள், "மது' என்பதற்கு பல

அர்த்தங்களைக் கூறுகின்றன. மகரந்தம், தேன், அமிர்தம் போன்றவற்றுடன் "கள்' என்பதும், தமிழ் "மது'விற்கு ஒரு அர்த்தம். ஸம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும் மது என்ற சொல்லிற்கு உள்ள நல்ல அர்த்தங்களை கொள்ள முடியாது என்ற வைராக்கியத்துடன், "கள்' என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக்கொள்வேன் என்று சொன்னால், அதில் வறட்டுப்பிடிவாதம் இருக்குமே தவிர, விஷயஞானம் இருக்காது.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now