Sign in to follow this  
Followers 0
கிமீரா

மாஸ்டர் ப்ளாஸ்டருக்கு வாழ்த்துக்கள்

9 posts in this topic

லாராவின் ரெக்கார்டை முறியடித்த சச்சினுக்கு வாழ்த்துக்கள்.

லாராவின்11953 ரன்களை முறியடித்தார் சச்சின்...

Share this post


Link to post
Share on other sites

மொகாலி: மொகாலியில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற லாராவின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்தார் டெண்டுல்கர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. பெங்களூரில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

2வது டெஸ்ட் போட்டி மொஹாலியில் இன்று காலை தொடங்கியது.

தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே அணியில் இடம் பெறவில்லை. இதனால் இந்த போட்டிக்கு மகேந்திர சிங் டோனி கேப்டனாக செயல்படுகிறார்.

இன்று தொடங்கிய போட்டியில் இந்திய அணி டாசில் வென்று முதலில் பேட் செய்யக் களம் இறங்கியது.

கவுதம் கம்பீரும், வீரேந்திர ஷேவாக்கும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஓரளவு சிறப்பான துவக்கத்தைத் தந்தனர்.

வீரேந்திர ஷேவாக் 35 ரன்கள் எடுத்திருந்த போது ஜான்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். கம்பீர் 67 ரன்னுக்கு ஜான்சனிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து வந்த திராவிட் 39 ரன்களில் லீயிடம் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் லட்சுமணன் 12 ரன்களில் ஜான்சனிடம் அவுட் ஆனார்.

இப்போது அதிரடி நாயகர்கள் சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் முறையே களமிறங்கினர்.

இதில் 13 ரன்கள் எடுத்த நிலையில் டெண்டுகள் புதிய உலக சாதனையைப் படைத்தார். இதுவரை டெஸ்ட் போட்டிகளி்ல் பிரையன் லாரா தான் 11,953 எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.

11,954 ரன்களைக் குவித்துள்ளதன் மூலம் இந்த சாதனையை டெண்டுல்கர் இன்று முறியடித்தார்.

Share this post


Link to post
Share on other sites

லாராவின் ரெக்கார்டை முறியடித்த சச்சினுக்கு வாழ்த்துக்கள்.

லாராவின்11953 ரன்களை முறியடித்தார் சச்சின்...

கொஞ்ச நாளா ப்ளாஸ்டருடன் தானே இருந்தார்.. :லொள்:

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்.

94985.jpg

இதனால் ஒரு நாள் ஆட்டத்திலும் (16, 361 ரன்கள்), டெஸ்ட் ஆட்டத்திலும் (12, 027) அதிக ரன் எடுத்த வீரர் ஆவார்.

10,000கும் அதிமாக ஒரு நாள் ஆட்டத்தில் ரன்கள் அடித்தவர்கள்:

One-Day Internationals

Most runs in career

SR Tendulkar (India) 16361

ST Jayasuriya (Asia/SL) 12785

Inzamam-ul-Haq (Asia/Pak) 11739

SC Ganguly (Asia/India) 11363

RT Ponting (Aus/ICC) 11113

R Dravid (Asia/ICC/India) 10585

BC Lara (ICC/WI) 10405

இதில் இவருடைய சாதனை முறியடிப்பது கடினம். ஜெயசூர்யா, கங்கூலி ஓய்வு பெற்ப்போகின்றார்கள், அடுத்தது பாண்டிங்தான் அவரும் 5000 ரன் அடிப்பது கடினம் (அதற்க்குள் ஓய்வு அடைந்து விடுவார்).

10,000கும் அதிமாக ரெஸ்ட் ஆட்டத்தில் ரன்கள் அடித்தவர்கள்:

Test matches

Most runs in career

SR Tendulkar (India) 12027

BC Lara (ICC/WI) 11953

AR Border (Aus) 11174

SR Waugh (Aus) 10927

R Dravid (ICC/India) 10341

RT Ponting (Aus) 10239

SM Gavaskar (India) 10122

இதில் முறியடிக்கப்படலாம். ராவிட் சந்தேகம், அனால் பாண்டிங் முறியடிப்பார் என நினைக்கின்றேன், இன்னும் 1788 ரன்கள் வித்தியாசம். டெண்டுல்கார் 152 மாட்சில் 12,027 எடுத்தார், பாண்டிங் 121 மாட்சில் 10, 239 எடுத்துள்ளார்

Share this post


Link to post
Share on other sites

விரிவான.. புள்ளிவிவரங்களுடனான.. அலசல்... அட்டகாசம்...

நன்றி குண்டு சார் :)

Share this post


Link to post
Share on other sites

விரிவான.. புள்ளிவிவரங்களுடனான.. அலசல்... அட்டகாசம்...

நன்றி குண்டு சார் :)

வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

நீங்க வச்சிகினு இருக்குர புலி எதோ ஒருமாசமா சாப்பிடாமல் பட்டினி கிடந்தாபல இருக்கு

யார் நாச்சும் புலியை போய் வச்சுகுவாங்களா

கடிச்சு கிடிச்சுட போவுது

பேசாம அதை கொண்டு போய் காட்டுல விட்டு விட்டு முனிவர் மாத்திரம் திரும்பட்டும்.

சரி இந்த முனிவர் என்ன அய்யப்பா பக்தரா, புலியோட வராரே

Share this post


Link to post
Share on other sites

ஓ அப்படியா தண்ணீருக்குள் முதலை பாம்பு இன்னும் நிறைய விச ஜந்துக்கள் இருக்குமே

ஐயோ வர்சா அக்கா இந்த புலி எத்தனை விலங்குகளை பார்த்திருக்கு முதளை ,பாம்பு எல்லாம் சும்ம ஜிஜி பி :) :)

Share this post


Link to post
Share on other sites

மாஸ்டர் ப்ளாஸ்டர் ... நேற்று தனது முதல் சதத்தை எடுத்தார்...

கொஞ்ச்ம் பொறுங்க.. முதல் சதம் நியூஜிலாந்து மண்ணில் ... அவர்களுக்குஎதிராக... ஹிஹி

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0