Sign in to follow this  
Followers 0
சரவணன்

மீண்டும் குடிபோதை சர்ச்சையில் சைமன்ட்ஸ்

8 posts in this topic

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அணியிலிருந்து நீக்கப்பட்டும், மீண்டும் தேர்வு செய்யப்பட்டும் வரும் ஆஸ்ட்ரேலிய அதிரடி வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கடந்த இரண்டு நாட்களில் அணியின் பல்வேறு விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் இந்த இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமல்லாது கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா ஒப்பந்தத்தையும் இழக்க நேரிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.

அதாவது அவர் ஆல்கஹால் உள்ளிட்ட அணியின் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை கடந்த 48 மணி நேரத்தில் மீறியுள்ளதாகவும், இதுவே அவருக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பு என்றும் ஜேம்ஸ் சதர்லேண்ட் கூறியுள்ளார்.

இந்த திடீர் முடிவு குறித்து கேப்டன் ரிக்கி பாண்டிங் இன்னும் சிறிது நேரத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.

புதன் கிழமை இரவு ஆஸ்ட்ரேலிய அணியுடன் கென்சின்டன் விடுதியில் இரவு விருந்தில் காணப்பட்ட சைமண்ட்ஸ், வியாழக்கிழமை ஆஸ்ட்ரேலிய அணி ஓவல் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காணப்படவில்லை. அதாவது அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

"கடந்த 24- 48 மணி நேரத்தில் சைமண்ட்ஸ் குடி உட்பட அணி நிர்வாகத்தின் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை மீறியுள்ளார், இந்த மீறல்கள் தனிப்பட்ட முறையில் பெரிய விஷயமில்லை என்றாலும், ஆஸ்ட்ரேலிய அணியின் திட்ட வரையறைக்கு அவர் இடையூறாக உள்ளார் என்பதும், கடந்த சில காலமாக எச்சரிக்கைகளையும் மீறி சைமன்ட்ஸ் தொடர்ந்து தவறு செய்து வருவதாலும் இதைத் தவிர வேறு முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது" என்று ஜேம்ஸ் சதர்லேண்ட் செய்தியாளர்களிடம் இன்று மெல்போர்னில் தெரிவித்தார்.

ஹர்பஜன் சிக்கை வசை பாடி, பின்பு அப்படியே பிளேட்டை திருப்பி குற்றச்சாட்டை ஹர்பஜன் மீது திருப்பி விட்ட சம்பவத்திலிருந்து, நியூஸீலாந்து விக்கெட் கீப்பர் பிரெண்டன் மெக்கல்லம் குறித்து குடிபோதையில் தரக் குறைவாக பேசியது உட்பட, அணி கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் குடித்து விட்டு மீன் பிடிக்கச் சென்றது வரை ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் இவரது நடவடிக்கைகள் குறித்து பொறுமை கடைபிடித்து வந்துள்ளது.

ஆனால் தற்போது அவர் மீன்டும் கட்டுப்பாடுகளை மீறியுள்ளதால், அவரது கிரிக்கெட் வாழ்வு இத்துடன் முடிவுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஆஸ்ட்ரேலிய ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this post


Link to post
Share on other sites

இதுக்குத்தான் என்னைய மாதிரி நல்லவனா குடிகாரனா இல்லாம இருக்கோனும் என்பது.

Share this post


Link to post
Share on other sites

கலந்து கொள்ளாமல் குடித்து விட்டு மீன் பிடிக்கச் சென்றது வரை ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் இவரது நடவடிக்கைகள் குறித்து பொறுமை கடைபிடித்து வந்துள்ளது.

குடுத்து விட்டு மீன் பிடித்தால் அதிக மீன்கள் கிட்டுமா என்பது கொசுவிற்கு தெரியவில்லை

Share this post


Link to post
Share on other sites

கொசுவின் பார்வையில் சைமண்ட்ச் மிகச்சிறந்த வீரனாயிருந்த போதிலும் குழந்தை மனது அவருடையது.

அவரிடத்திலே இருக்கும் மனநல குறைகளை முதலில் களையவேண்டும் என்பதே கொசுவின் எதிர்பார்ப்பு

அவருக்குத்தேவையான மனநல உதவியைச்செய்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினால் அவுஸ்திரேலியா அடுத்த உலகக்கோப்பையை வெல்லும் என்ற கொசுவின் முடிவான கருத்துடன் இந்தத்திரியின் கடைசி பதிவை முடிக்கிறான்

Share this post


Link to post
Share on other sites

கொசுவின் பார்வையில் சைமண்ட்ச் மிகச்சிறந்த வீரனாயிருந்த போதிலும் குழந்தை மனது அவருடையது.

அவரிடத்திலே இருக்கும் மனநல குறைகளை முதலில் களையவேண்டும் என்பதே கொசுவின் எதிர்பார்ப்பு

அவருக்குத்தேவையான மனநல உதவியைச்செய்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினால் அவுஸ்திரேலியா அடுத்த உலகக்கோப்பையை வெல்லும் என்ற கொசுவின் முடிவான கருத்துடன் இந்தத்திரியின் கடைசி பதிவை முடிக்கிறான்

அவுஸ்ரேலியாவப் பற்றி ரொம்பவே கவலைப்படுகிறீர்கள் கொசு

Share this post


Link to post
Share on other sites

அவுஸ்ரேலியாவப் பற்றி ரொம்பவே கவலைப்படுகிறீர்கள் கொசு

அவுஸ்திரேலியால கொசு இருக்கிறதா என்று இந்த புலேந்திரன் கேட்கிறான்....

Share this post


Link to post
Share on other sites

அவுஸ்திரேலியால கொசு இருக்கிறதா என்று இந்த புலேந்திரன் கேட்கிறான்....

கொசு இருக்கோ இல்லையோ கொசு இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0