சங்கரன்

முதல் அறை!

216 posts in this topic

கல்லூரி நாட்களில் அடியேன் படு ஸ்மாட்டாக இருப்பேன் (இப்ப மாமா மாதிரி ஆகி விட்டேன் அது வேறு விசயம் - இன்று முதல் 39 வயதாகிறது - டாக்குமெண்ட்ஸ் படி). பெண்களைப்பார்த்தால் நான் தனி குனிந்து கொள்வேன். அழகான, அறிவான (இப்ப அது போயே போச்சு எனக்கு), கண்ணியம் (என்னிடம் இன்னமும் இருக்கு) உள்ள ஆணைப்பார்த்தால் சில பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். நட்பு பாராட்டத்தோன்றும். அப்படி சில பெண்களின் நட்புக்கிடைத்தது. என்னத்தான் எல்.கே.ஜிலிருந்து பி.ஜி வரைக்கும் கோ-எட் -ல் படித்தாலும் சகோதரியே, கசின்ஸோ இல்லாததால் பெண்களிடம் பேசுவதில் மிகுந்த கூச்சம் இருந்தது. ஒரு குறிப்பிட்ட பெண்ணிடம் மிகவும் நட்பாக நடந்து கொண்டேன். அவரை வேற டிபார்ட்மெண்ட் மாணவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது, "ஷி இஸ் லைக் மை சிஸ்டர்" என்று சொன்னேன். பிறகு, மாலை பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்லும் போது, "காலையில் ஜியாலஜி ஸ்டூடேண்ட்ஸ் இடம் என்ன எப்படி இன்டடூயூஸ் செய்தாய்?" என்று கேட்டாள். "ஸிஸ்டர் மாதிரின்னு சொன்னேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் கன்னத்தில் ஒரு மெல்லிய பளார். கணக்கு வாத்திகளைத்தவிர்த்து மற்றொருவரிடம் நான் அறை வாங்கியது அது தான் முதல் முறை. (இப்ப அடிக்கடி வீட்டில் கிடைக்கிறது - அது வேற விசயம்). அவள் கண்களில் கோபம், வருத்தம். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..

(தொடரும் -- ரொம்ப போர்னா இப்பவே நிறுத்திக்கிறேன்)

Share this post

Link to post
Share on other sites

எனது மருமகனுக்கும் சமீபத்தில் இது நடந்தது.

ஒரு பெண் அவனைக் காதலிப்பதாக சொன்னாள் (பெண் மிக அழகானவள், மருமகனும் அழகானவன்) ஆனால் இவன் அதற்கு பதில் சொல்லவில்லை.

விழுந்தது பளார் என அறை.

சரி சங்கரன் நீங்கள் அழகென்பது புரிகிறது. மேலும் கதையைத் தொடருங்கள்.

Share this post

Link to post
Share on other sites

ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

- நடந்தது நல்லதாவே இருக்கு.

Share this post

Link to post
Share on other sites

யப்பா அடுத்தவங்க கதை என்றால் எப்படி சுவாரசியமா படிக்கிறோம் பாருங்க

அதனால் தானோ என்னவொ - சுமார் படங்களை எல்லாம் உண்மை சம்பவதை வைத்து எழுதியது என்று இப்பவெல்லாம் படம் காட்டுரானுவோ

Share this post

Link to post
Share on other sites

எனக்கும் என கல்லூரி கால நினைவுகளை திரும்ப வைக்கிறது சார் தங்களின் தொடர்...

தொடருங்கள்.. உங்களின் நடவடிக்கை என்ன என..

சூப்பரான எழுத்து நடை சங்கரன் சார்...காட்சிகளை கண்முன்னே வர வைக்கிறது..

Share this post

Link to post
Share on other sites

அவள் கண்களில் கோபம், வருத்தம். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..

சங்கரன் சார்.. ஏன் சார் நிறுத்திட்டீங்க??.. இன்றிரவு எனக்கு தூக்கம் வராது.. என்ன செவதேன்று தெரியாமல் என்ன செய்தீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆவலோடு உள்ளேன்..

Share this post

Link to post
Share on other sites

சிம்மாவிற்காக தொடருகிறேன்...

மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்த எனக்கு காதலில் ஈடுபடுவது, சைட் அடிப்பது போன்றவற்றில் அறவே நாட்டம் இல்லை. ஆகவே அவள் அடிக்கொடுத்தாலும் அமைதியாகவே இருந்தேன். அடி வாங்கிய உணர்வை விட அவள் கண்களில் இருந்த சோகம் என்னை மிகவும் உறுத்தியது. மெதுவாக பேருந்திற்குள் சென்றோம் - அவளுக்கும் சேர்த்து டிக்கட் வாங்கினேன். அவளுடைய ஸ்டாப்பிற்கு முன்பாகவே என்னுடைய ஸ்டாப் வந்து விடும். என்னுடைய ஸ்டாப்பிங் வந்தது - மெதுவாக இறங்கிச்சென்றேன். மற்ற பயணிகள் இறங்கியதும் கண்டக்டர் விசில் அடித்தார். மெதுவாக திரும்பிப்பார்த்தேன் - ஸாரி என்று கெஞ்சலுடன் உதட்டை அசைத்தாள். நான் பேசாமல் நடக்கத்தொடங்கினேன். 1980களில் பை பை என்றெல்லாம் ஒரு பெண்ணைப்பார்த்து சொல்லி விட முடியாது. ஏதோ மாபெரும் குற்றம் செய்த மாதிரி கிழங்கட்டைகளும், நடுத்தர வயது ஆட்களும் முறைப்பார்கள். வீட்டிற்கு செல்ல மனம் இல்லை. வழியில் வந்த என் உறவுக்கார பையனிடம் நான் பழைய நண்பர்களுடன் திரைப்படம் - பர்ஸ்ட் ஷோ பார்க்கப்போவதாக சொல்லி அனுப்பினேன். தியேட்டரில் படம் தொடங்கி விட்டது - மைக் முரளியின் இதயம் படம் - செம சோகம்- கனத்த இதயத்துடன் வீடு திரும்பினேன். ஏனோ வழக்கத்திற்கு மாறாக எல்லாரும் சந்தோஷமாக இருந்தார்கள். (அது தானே உலக நியதி - நாம் துயரமாய் இருக்கும் போது அடுத்தவர்கள் மகிழ்வாக இருப்பார்கள் :(-). "டேய், ச்ங்கரா எல்.ஐ.சி அசிஸ்டெண்ட் வேலைக்கான என்ட்ரென்ஸ் எக்ஸாமில் பாஸ் ஆயிட்டியாம் - அடுத்த மாசம் இன்டெர்வியூவிற்கு கூப்பிட்டு இருங்காங்க - வேலூர்க்கு போகணும் நீ..." அப்பா சந்தோஷமாய் சொல்ல , சற்று யோசித்து - புன்னகைத்து வைத்தேன். அவள் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்தாள். செகண்ட் இயர் முடிப்பதற்குள்ளே வேலைக்கிடைத்து விட்டால், அவளையும் என் அருமைத்தோழர்களையும் இழந்து விடுவேனோ என்று கவலைப்பட்டேன். இன்டெர்வியூவை சொதப்பலாம் என்று முடிவு செய்தேன்.

will continue, if you folks finds this interesting ...

Edited by சங்கரன்

Share this post

Link to post
Share on other sites

மிக அருமை...திடீர்ன்னு தொடரும் போட்டுட்ட்டீங்களே...சார்... தொடருங்கள் சீக்கிரமா

Share this post

Link to post
Share on other sites

மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்த எனக்கு காதலில் ஈடுபடுவது, சைட் அடிப்பது போன்றவற்றில் அறவே நாட்டம் இல்லை.

அடி வாங்கிய உணர்வை விட அவள் கண்களில் இருந்த சோகம் என்னை மிகவும் உறுத்தியது.

1980களில் பை பை என்றெல்லாம் ஒரு பெண்ணைப்பார்த்து சொல்லி விட முடியாது. ஏதோ மாபெரும் குற்றம் செய்த மாதிரி கிழங்கட்டைகளும், நடுத்தர வயது ஆட்களும் முறைப்பார்கள்.

தியேட்டரில் படம் தொடங்கி விட்டது - மைக் முரளியின் இதயம் படம் - செம சோகம்- கனத்த இதயத்துடன் வீடு திரும்பினேன். ஏனோ வழக்கத்திற்கு மாறாக எல்லாரும் சந்தோஷமாக இருந்தார்கள். (அது தானே உலக நியதி - நாம் துயரமாய் இருக்கும் போது அடுத்தவர்கள் மகிழ்வாக இருப்பார்கள் :(-). "டேய், ச்ங்கரா எல்.ஐ.சி அசிஸ்டெண்ட் வேலைக்கான என்ட்ரென்ஸ் எக்ஸாமில் பாஸ் ஆயிட்டியாம் - அடுத்த மாசம் இன்டெர்வியூவிற்கு கூப்பிட்டு இருங்காங்க - வேலூர்க்கு போகணும் நீ..." அப்பா சந்தோஷமாய் சொல்ல , சற்று யோசித்து - புன்னகைத்து வைத்தேன். அவள் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்தாள். இன்டெர்வியூவை சொதப்பலாம் என்று முடிவு செய்தேன்.

இந்த சூழ்நிலைக்கு இது போன்ற பாட்டு தான் நல்ல இதமாக இருக்கும்.. தாங்களும் இதை தான் மனதிற்குள் ஓடவிட்டு ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.. தங்களுக்கு இந்த பாடல் பிடிக்கும் என நம்புகிறேன்..

நான் பாடும் மௌன ராகம் கேட்க்க வில்லையா??

என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா??

கண்ணீரில் உன்னை தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்..

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்??

முள் மீது ஏனடி தூங்க சொல்கிறாய்??

உன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி போனது

கூடு தானே இங்கு பாடுது

கூடு இன்று குயிலை தானே தேடுது

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்

என் சாபம் தீரவே நீயும் இல்லையே

என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது, காம்பு என்ன வாழ்வது??

காலம் என்னை கேள்வி கேக்குது

கேள்வி இன்று கேலியாகி போனது!!!

உங்களுக்கு இது போன்ற பாடல்கள் பிடித்திருந்தால்.. உங்கள் பதிவிர்க்கேற்ற பாடல்களை பதிகிறேன்..

சார், இந்த திரி 182 பார்வைகள் அடைந்துள்ளது, அதனால் எல்லோருக்கும் உங்கள் காவியம் பிடித்திருக்கிறது என்றே நினைக்கிறேன்..

Edited by சிம்மகர்ஜனை

Share this post

Link to post
Share on other sites

சங்கரன் சார்.. சஸ்பென்ஸ் வைக்காதேள்.. உங்களின் இந்த ஒரு தலைக்காதல் க்ளைமாக்ஸ் என்னாச்சுது ??

Share this post

Link to post
Share on other sites

தொடர்ச்சி:-

நான் இன்று என்றில்லை, எப்பவுமே தத்தி தான். பன்னிரெண்டாம் வகுப்புப்படிக்கும் போது தான் சைக்கிள் ஓட்டவே கற்றுக்கொண்டேன். டபிள்ஸ் அடிக்கத்தெரியாது. ஒட்டப்பந்தயங்களில் அய்யா தான் பர்ஸ்ட் - கடைசியாக வருவதில். ஆனால் அவளோ எல்லாவற்றிலும் சூப்பர் கேர்ளாக இருந்தாள். ஸ்டைலாக டிவிஎஸ் 50 ஒட்டுவாள் - ஸ்போர்ட்ஸ் அனைத்திலும் அவள் தான் பர்ஸ்ட். அடியேனுக்கு பிளஸ் பாயிண்ட் என்றால் நல்ல தோற்றம், நன்றாக படிக்கக்கூடியவன் என்பது மட்டும் தான். அவள் சற்றே விலகிச்செல்வது போல் தோன்றியது. காரணம் பிரதீப். கிளாஸ் மேட். சரியாக ஜொள்ளுப்பார்ட்டி. அவனுக்கு இவளை அடைய வேண்டும் என்ற வெறி இருந்தது. அவனும் சரியான அதெலெட்- ஸ்போர்ட்ஸ் மேன். அவள் அவனுடன் அடிக்கடி பேசத்தொடங்கினாள். மனம் வலித்தது. எங்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் எடுத்த வாத்தி சரியான எமகாதகன். அவன் தான் எச்.ஓ.டி. இரண்டாம் இயர் கடைசி செமஸ்டர் சமயத்தில் ஒரு நாள் வகுப்பில் இப்படி சொன்னார் - உங்களில் எவன் போர்ட்ரானில் அதிக மார்க் எடுக்கிறானோ அவன் தான் என்னை இந்த வகுப்பில் கதாநாயகன் என்று. பிரதீப்பும் நன்றாகப்படிக்கக்கூடியவன். தம் அடித்துக்கொண்டே படிப்பான். நான் முடிவு செய்தேன் - அவனை ஒவர் டேக் செய்ய ஒரே வழி - போர்ட்ரான் பாடத்தில் நல்ல மார்க் வாங்க வேண்டுமென்று - அப்பவாவது அவள் என்னிடம் மீண்டும் அன்பாக பழகுவாள் என்று நம்பினேன். என் அண்ணன் அமெரிக்காவிலிருந்து வேக்ஷனில் வந்தார் - நிறைய கம்ப்யூட்டர் புத்தங்கங்களுடன் - விடிய விடிய வெறியுடன் படித்தேன். 3 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள் இருந்தது அந்த செமஸ்டரில் - நான் 88, 89 மதிப்பெண் வாங்கினேன். போர்ட்ரானில் பிரதீப் வாங்கிய மதிப்பெண் எவ்வளவு தெரியுமா - 56/100. அவள் எழுபது மதிப்பெண் வாங்கி இருந்தாள். அது தான் வகுப்பில் இரண்டாவது அதிக மதிப்பெண். யார் முதல் மதிப்பெண் வாங்கி இருப்பார்கள் என்று சொல்லணுமா? அடியேன் 96% வாங்கி இருந்தேன். லெக்சரருக்கு வாயெல்லாம் பல். அவள் மீண்டும் என்னிடம் பேசத்தொடங்கினாள் :மகிழ்ச்சி5: .

contd..

Share this post

Link to post
Share on other sites

எப்போ முதல் கிஷ்... ஹிஹி

Share this post

Link to post
Share on other sites

அவள் மீண்டும் என்னிடம் பேசத்தொடங்கினாள் :மகிழ்ச்சி5: .

இப்ப தான் கதையில் ஒரு திருப்பு முனை ஏற்ப்பட்டுருக்கு.. சார், மனசுக்குள்ள ஸ்டக் ஆன பறவைகள், கடல் அலை எல்லாம் திரும்பவும் ஓடத் தொடங்கிருக்குமே??

Share this post

Link to post
Share on other sites

சங்கரன் வாள் நிறைவேறாத கதையை தான் எழுதுகின்றார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

Share this post

Link to post
Share on other sites

புனைகையும் சிரிப்பும் வரக்கூடாது... ஒரு குற்ற உணர்வும் வரவேண்டும். கல்யாணத்திற்கு முன் ஒருவனோடு சுற்றிக்கொணடு இருந்துது விட்டு இப்போது ஒருவனோடு வாழ்கிறோமே அப்படி சுற்றி இருக்க இருக்க கூடாது என்று நினைக்க வேண்டும்.. அப்படி நினைத்தல் அவள் தன் உணமையான வாழ்விற்கு விசுவாசமாக இருக்கிறாள் என்று அர்த்தம் , அதை விட்டு. புன்னகை பண்ணாள்... சிரித்தால் என்றால் துரோகம்... வேண்டும் என்றால் நான் சொல்வதை வீட்டில் உள்ள பெரிவர்களிடம் கேட்டு பாருங்கள் :)

நீங்கல் உங்கள் வீட்டில் கேட்டு பாருங்கள் என்ன மனதில் தோன்றும் என்று. பின்பு சொல்லுங்களேன்

Share this post

Link to post
Share on other sites

பெரியவர்கள் சொன்ன கருத்தை தான் பதிதேன் சினேகிதன்

Share this post

Link to post
Share on other sites

பெரியவர்கள் சொன்ன கருத்தை தான் பதிதேன் சினேகிதன்

சார், இது ஒன்றும் தாங்கள் சொல்லும்படி பெரிய விஷயம் அல்ல என்றே நினைக்கிறேன்.. நாம் இந்த விவாதத்தை இப்படியே நிறுத்திக் கொள்வது சாலச் சிறந்தது..

Share this post

Link to post
Share on other sites

பெரியவர்கள் சொன்ன கருத்தை தான் பதிதேன் சினேகிதன்

இது சும்மா தன் மகள்/மகன் காதலில் விழுந்துவிடக்கூடாது, அல்லது தான் ரொம்ப ஒழுக்கமானவன் என்று உந்க்களுக்கு தப்பாக காட்ட சொல்லும் கதை.

இன்று பெரும்பாலான பிரிந்த காதலர்கள் தங்கள் பழைய காதல்களை பற்றி நினைவலைகள் வரும் போது என்ன மனதில தோன்றுகிறதோ, அதே தான் பெரும்பாலான நம் முந்தைய தலைமுறைக்கும் அவர்கள் நினைவுகளால் தோன்றும். குற்ற உணர்ச்சி வரும் என்பதெல்லாம் சும்மா பேத்தல்

Share this post

Link to post
Share on other sites

இது சும்மா தன் மகள்/மகன் காதலில் விழுந்துவிடக்கூடாது, அல்லது தான் ரொம்ப ஒழுக்கமானவன் என்று உந்க்களுக்கு தப்பாக காட்ட சொல்லும் கதை.

இன்று பெரும்பாலான பிரிந்த காதலர்கள் தங்கள் பழைய காதல்களை பற்றி நினைவலைகள் வரும் போது என்ன மனதில தோன்றுகிறதோ, அதே தான் பெரும்பாலான நம் முந்தைய தலைமுறைக்கும் அவர்கள் நினைவுகளால் தோன்றும். குற்ற உணர்ச்சி வரும் என்பதெல்லாம் சும்மா பேத்தல்

சிநேக் இவ்வளவு உறுதியா பேசுவதை பார்த்தா, ஏதோ மேட்டர் இருக்கும் போலருக்கே? சிநேக் நீங்களும் உங்க பழைய நினைவுகள பக்ரிந்து கொள்ளலாம்!

Share this post

Link to post
Share on other sites

சிநேக் இவ்வளவு உறுதியா பேசுவதை பார்த்தா, ஏதோ மேட்டர் இருக்கும் போலருக்கே? சிநேக் நீங்களும் உங்க பழைய நினைவுகள பக்ரிந்து கொள்ளலாம்!

சார், நானும் என் கல்லூரியில் நடந்ததை எழுதலாமா?? ஆனா எல்லாம் நான் களத்தில் போடுகிற மொக்கையை விட படு மொக்கையா இருக்கும்.. பரவாயில்லையா??

Share this post

Link to post
Share on other sites

சார், நானும் என் கல்லூரியில் நடந்ததை எழுதலாமா?? ஆனா எல்லாம் நான் களத்தில் போடுகிற மொக்கையை விட படு மொக்கையா இருக்கும்.. பரவாயில்லையா??

ஒருத்தருக்கு மொக்கை இன்னொருத்தருக்கு இன்ட்ரெஸ்டிங்.. அதெல்லாம் பார்த்தா நடக்குமா... சும்மா ஒரு தனி திரி ஆரம்பிச்சு எழுதுங்க!

Share this post

Link to post
Share on other sites

அப்படியானால் பெரியவர்கள் சொல்வது தவறா ?

ஒருவரை காதலித்து மற்றவரை மணம் செய்யும் போது ஏன் அந்த காதலை மறைத்து திருமணம் செய்கிறார்கள் ? பெண்பார்க்கவரும் போதே.. நான் ருவனுடன் சுற்றினேன் ஆனால் நீங்கள் மணம் செய்யுங்கள் என்று சொல்லலாமே !!! :)

இது சும்மா தன் மகள்/மகன் காதலில் விழுந்துவிடக்கூடாது, அல்லது தான் ரொம்ப ஒழுக்கமானவன் என்று உந்க்களுக்கு தப்பாக காட்ட சொல்லும் கதை.

இன்று பெரும்பாலான பிரிந்த காதலர்கள் தங்கள் பழைய காதல்களை பற்றி நினைவலைகள் வரும் போது என்ன மனதில தோன்றுகிறதோ, அதே தான் பெரும்பாலான நம் முந்தைய தலைமுறைக்கும் அவர்கள் நினைவுகளால் தோன்றும். குற்ற உணர்ச்சி வரும் என்பதெல்லாம் சும்மா பேத்தல்

Share this post

Link to post
Share on other sites

அப்படியானால் பெரியவர்கள் சொல்வது தவறா ?

ஒருவரை காதலித்து மற்றவரை மணம் செய்யும் போது ஏன் அந்த காதலை மறைத்து திருமணம் செய்கிறார்கள் ? பெண்பார்க்கவரும் போதே.. நான் ருவனுடன் சுற்றினேன் ஆனால் நீங்கள் மணம் செய்யுங்கள் என்று சொல்லலாமே !!! :)

பார்தீங்களா இதை சும்மா விவாதத்திற்கு எடுக்கும் போதே எவ்வளவு கேள்வி கேட்கிறீங்க, இன்னும் காதலிச்ச விசயத்தை சொன்னா சில மாரல் போலிசார், கலாச்சார காவலர்கள் என்ன என்ன மாதிரி கேள்வி கேப்பீங்க, காதலிச்சீங்க அப்புறமென்ன பண்ணீங்கனு தேவை இல்லாம் கொஸ்டீன் கேட்டு காது மூக்கு கற்பு எல்லாம் ஒட்ட வைத்து பாழாக்கிடுவாங்க வாழ்கையை, அது மட்டுமில்லா வரப்போகிறவங்களுக்கு அந்த பழைய காதல் தேவை இல்லாத ஒரு மேட்டர், அதை சொல்லி ஏன் புது வாழகையில் பழசை வேணுமின்னே புகுத்தனும்.....

டிஸ்கி: அப்படி இருந்தும் சில பேர் கல்யாணத்திற்கு முன்னாடியே வரபோகிறவர்களின் அறிவை, புரிந்து கொள்ளும் திறனை உணர்ந்து அவரிடம் மட்டும் தனியாக தன் பழைய காதலை சொல்லிவிடுவதுண்டு, கலாக்சார காவலகளிடம் சொல்வார்களா என்பது சந்தேகமே

Share this post

Link to post
Share on other sites