சங்கரன்

முதல் அறை!

216 posts in this topic

காலையில் குழந்தையைப்பள்ளியில் விடும் போது, அவள் டீச்சர் மேரிபேத் அவர்களிடம் போது பேசுவது வழக்கம்.  மிக கனிவாக பேசுவார் அந்த அம்மையார். டீச்சரிடமும், அவளிடமும் ஒரே நேரத்தில் குட் மார்னிங் சொல்வேன். ஒரு நாள் அவள் வரவில்லை, டீச்சர் என்னிடம், "யூவர் பிரண்ட் கெவ் மீ ரைஸ் புட்டீங், இட் வாஸ் யம்மி" என்றார். என்னது இவள் டீச்சருக்குப்பாயசம் தந்திருக்காளா.. எனக்கு கிடையாதா ? கோபம் வந்தது.  "யாமினி இஸ் வெரி நைஸ்!" என்றார் டீச்சர் - ஆகா பெயர் கண்டுப்பிடிச்சாசே, இது போதும்.. பெயரைச்சொல்லும் போதே இனிக்கிறதே..
அந்த வார கடைசியில், நியூ ஜெர்சியில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தமிழ் வருடப்பிறப்பு விழா நடக்க இருப்பதை அறிந்தேன். நல்ல சாப்பாடு கிடைக்கும் அதுக்காக போயே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். விழா அரங்கம் ஒரே கூட்டமாக இருந்தது. குழந்தைகள் ஓடிக்கொண்டு இருந்தார்கள். எல்லாருமே ஜோடி ஜோடியாய் வந்து கொண்டு இருந்தார்கள். நான் ஒரு தனிமரம் என்ற உண்மை அப்போது தான் சுட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி புரோகிராம் நன்றாக போய் கொண்டிருந்தது. முப்பதுக்களில் இருக்கும் பெண்கள் ஏகப்பட்ட பாடல்களுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். நகைச்சுவை , மிம்கிரி என்ற பெயரில் சிலர் ரம்பம் போட்டுக்கொண்டு இருந்தனர். எதையுமே ரசிக்க முடியவில்லை. ஆர்கெஸ்டிரா சார்பில் பாடல்கள் ஆரம்பம் ஆனது. அடப்பாவிகளா, நடிகர் மோகன் நடித்த பாடல்களுக்கு எஸ்.பி.பி எப்படி எல்லாம் பாடி இருப்பார்.. இப்படியா கடித்துக்குதறுவது? கூட்டத்தில் எகப்பட்ட செய்கை ச்சிரிப்புகள், ஊளைகள். நிகழ்ச்சி அறிவிப்பாளருக்கு டென்ஷன் கூடியது, மைக்கைப்பிடித்து விளாசித்தள்ளினார், நாங்கள் எவ்வளவு பிசியாக இருந்தாலும் ரிகர்சல் செய்தோம், சவுண்ட் சிஸ்டத்தில் பிராப்ளம் என்று அடித்து விட்டார்.  உங்களில் யாருக்காவது தைரியம் இருந்தால், மேடையில் வந்து பாடுங்கள் என்று சவால் விட்டார். கூட்டம் அமைதியானது. யாருக்கு மேடை ஏறிப்பாட தைரியம் வரும். நமக்கு எல்லாம் அடுத்தவனைக்குறை சொல்லத்தான் தெரியும். சில நிமிடங்களுக்குப்பிறகு, அழகான திருசூர்ணம் இட்டு வந்திருந்த  மாமா, ஒருவர் மேடை ஏறினார். மிக இனியான குரலில் சிவாஜி பாடல்களைப்பாடிக்கொண்டே போனார். அவர் மேடையில் இருந்து இறங்கியதும், வேறு யாராவது பாட வருகிறீர்களா என்று அறிவிப்பாளர் சவால் விட, நான் மேடை ஏறினேன்..எங்கிருந்துடா சங்கரா இந்த தைரியம் உனக்கு வந்தது?

Share this post


Link to post
Share on other sites

super....masss...

I'm waiting...

Share this post


Link to post
Share on other sites

எனக்கு மிகப்பிடித்த "இளைய நிலா பொழிகிறதே பாடலை மெய் மறந்துப்பாடிக்கொண்டு இருந்தேன். "பருவ மகள் விழிகளிலே கனவு வரும்" என்று பாடும் போது, யாமினியின் அழகிய கண்கள் மனதில் வந்து போனது. ஒரு வழியாகப்பாடி முடித்து மேடையில் இருந்து இறங்கினேன். நல்ல வேளையாக நிறைய கை தட்டல்கள். சிலர் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து வந்து கைக்கொடுத்தார்கள். அதில் பலர் சொட்டைஸ். ஒரு வேளை இவன்களும் நம்மைப்போல் சீக்ரெட்டாக ரொமன்ஸ் பண்றான்களோ? செம குஷி மூடில் இருக்கும் போது, அலைப்பேசி அழைத்தது. லைனில் ஸ்மிதா வந்தாள்...
 

 

super....masss...

I'm waiting...

 

Edited by சங்கரன்

Share this post


Link to post
Share on other sites

சார் ஒரு நாளைக்கு இரண்டு பாராவாவது எழுதுங்க. எப்பட அடுத்த பதிவு வரும்னு காக்க வைக்கிறிங்க

Share this post


Link to post
Share on other sites

செம விறுவிறுப்பா போகுதுங்க சார்..

Share this post


Link to post
Share on other sites

செம விறுவிறுப்பா போகுதுங்க சார்..

 

செம விறுவிறுப்பா போகுதுங்க சார்..

ஸ்மிதாவின் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லையாம், உடனே பாஸ்டனுக்கு வா என்று போனில் அழுதாள். டிவோர்ஸ் பிராஸஸில் இருக்கும் போது, போகலாமா வேண்டாமா என்று நினைத்தேன். ஒரு வேளை அவருக்கு எதாவது ஆகி விட்டால் .... மனசு உறுத்தியது.  பதறி அடித்துக்கொண்டு பாஸ்டனுக்கு ஓடினேன். ஏப்ரல் மாதமென்றாலும் லைட்டாக குளிர் காற்று வீசி ஒடிக்கொண்டிருந்தது. கார் காராஜை மூடி வைத்து இருந்தார்கள். கார்லிங் பெல் அழுத்தினேன். ஸ்மிதா கதவைத்திறந்தாள்.  நார்மலாக தான் தெரிந்தாள். உள்ளே அழைத்துச்சென்றாள். பேமிலி ரூம் இருட்டாக இருந்தது. ஒரு மூலையில் சோபாவில் நெட்டை உட்கார்ந்து இருந்தார். என்னைப்பார்த்தும் கையை நீட்டினார்.  அப்பாவின் பி.பி. ரொம்ப அதிகமாகி விட்டது, ஈ.ஆரில் இருந்து நேற்று மாலை தான் திரும்பினோம் என்றாள். 
"ஹவ் இஸ் யுவர் ஜாப் ஷங்கர்"  என்றார் நெட்டை. 
"கோயிங் குட்" என்றேன்.
 "ஹவ் இஸ் யுவ‌ர் பிஸினஸ் ஸார்?"
"நாட் பேட், பட் ஐ ஹேவ் டூ மீட் சம், பைனாசியல் ஆப்லி கேஷன்ஸ்"
"ஒகே"
"ஷங்கர், ஐ நீட் யூவர் ஹெல்ப்"

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் சார்..

Share this post


Link to post
Share on other sites

கேன் யூ லென்ட் மீ ஹன்ட்ரெட் தெளவ்சன்ட் டாலர்ஸ்?

இதென்ன அக்கிரமமா இருக்கு? அவனவன் வரதட்சணை கேட்டு கல்யாணம் பண்றிக்கிறான். நாம ஒரு பைசா கேட்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டா இவங்க நம்ம கிட்டேயே பணம் கேட்கிறாங்க.

ஸ்மிதாவை த்தனியாக அழைத்துப்பேசினேன். என்கிட்டே அவ்வளவு பணம் கிடையாது. ஒரு லட்சம் சேர்க்க நான் என்ன தென்னவன் மாதிரி கொள்ளைக்கொள்ளையா சம்பாரிக்கிறேன்? "உன் அப்பாவிடம் கடன் வாங்கிக்கொடு" என்றாள்.  "என்னது, என் அப்பாக்கிட்டேயா? அவரே பாவம் கஷ்டப்பட்டு பிசினேஸ் நடத்திக்கிட்டு இருக்கார்.  நியாயமா நான் தான் அவருக்குப்பணம் அனுப்பணும்"
"ஸொ, யூ டோன்ட் லக் மை டேட்" குரலை உயர்த்தினாள் ஸ்மிதா.
நெட்டையன் எத்தனைப்பேரிடம் ஆட்டையைப்போட்டாரோ, நியூட்டனின் 3வது விதி அவரையேத்தாக்குது..

Share this post


Link to post
Share on other sites

கேன் யூ லென்ட் மீ ஹன்ட்ரெட் தெளவ்சன்ட் டாலர்ஸ்?

இதென்ன அக்கிரமமா இருக்கு? அவனவன் வரதட்சணை கேட்டு கல்யாணம் பண்றிக்கிறான். நாம ஒரு பைசா கேட்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டா இவங்க நம்ம கிட்டேயே பணம் கேட்கிறாங்க.

ஸ்மிதாவை த்தனியாக அழைத்துப்பேசினேன். என்கிட்டே அவ்வளவு பணம் கிடையாது. ஒரு லட்சம் சேர்க்க நான் என்ன தென்னவன் மாதிரி கொள்ளைக்கொள்ளையா சம்பாரிக்கிறேன்? "உன் அப்பாவிடம் கடன் வாங்கிக்கொடு" என்றாள்.  "என்னது, என் அப்பாக்கிட்டேயா? அவரே பாவம் கஷ்டப்பட்டு பிசினேஸ் நடத்திக்கிட்டு இருக்கார்.  நியாயமா நான் தான் அவருக்குப்பணம் அனுப்பணும்"

"ஸொ, யூ டோன்ட் லக் மை டேட்" குரலை உயர்த்தினாள் ஸ்மிதா.

நெட்டையன் எத்தனைப்பேரிடம் ஆட்டையைப்போட்டாரோ, நியூட்டனின் 3வது விதி அவரையேத்தாக்குது..

சங்கர், ப்ளீஸ் ஹெல்ப் மை டேட், நாம டிவேர்சை வேண்டுமென்றால் ரீகன்சிடர் பண்ணலாம்.

அடிப்பாவி, அப்பாவிற்கு த்தப்பாமல் பெண் பிறந்திருக்கிறது.  அவள் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள், நான் ஒப்புக்கொள்ளவே இல்லை. மூதாதையர் சொத்தை வித்தா இந்த நெட்டை மூதேவியின் கடனை அடைக்க வேண்டும். திருமணம் என்பது எவ்வளவு புனிதமான பந்தம்? ஆணவத்தால் என்னைத்தூக்கி எறிய துணிந்தீர்கள்? இன்று பணம் வேண்டும் எனும் போது நான் புருஷனாய் தெரிகிறேன். நாளை எவனாவது பணக்காரன் கிடைத்தால் , நான் மீண்டும் டாய்லெட் பேப்பர் ஆகி விடுவேனே?

Share this post


Link to post
Share on other sites

நேரம் போய்க்கொண்டே போனது. அன்று இரவு அங்கு தங்கக்கூடாது என்று முடிவு செய்தேன். வீட்டின் அழைப்பு மணி அடித்தது. இவள் கதவைத்திறக்க, நெட்டையின் தம்பி உள்ளே நுழைத்தார். பிஸினெஸில் ஏதோ சிக்கல் என்றும், பணம் தர வேண்டிய குஜராத்தி கண்ணில் படாமல் ஓளிந்துக்கொண்டான் என்றும் புலம்பினார்.  நான் ஒன்றரை லட்சம் டாலர் தயார் பண்ணி விட்டேன், உன்னால் மூணு வாரத்திற்குள் 1 லட்சம் டாலர் தர முடியுமா என்று கேட்டார் நெட்டையின் தம்பி.  நான் முடியாது என்று சொல்ல சொல்ல அவர் முகம் மாறியது.  ஸ்மிதாவிற்கு நீ எவ்வளவு தொல்லைக்கொடுத்தாய், அவளுக்கு கெட்டுப்போன சாப்பாடு க்கொடுத்தாய், அலிமோனி (ஜீவனாம்சம்) கேட்டு உன்னை ஒரு வழிப்பண்ணுவோம் என்று மிரட்டத்தொடங்கினார். ஒரு கட்டத்தில் கையை ஓங்கிக்கொண்டு ஆவேசமாய் அடிக்க எல்லாம் வந்தார். ஸ்மிதா அமைதியாய் நின்றுக்கொண்டு இருந்தாள், அது தான் எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. இவன்கள் கூத்தடித்தற்கு நானே, என் அப்பாவே தண்டம் அழ வேண்டும்.  , ஒரு வேளைபணக்காரனெல்லாம் இப்படி தான் மானம் கெட்டு நடந்து க்கொள்வான்களோ... என்ன செய்வது?

Share this post


Link to post
Share on other sites

ஸ்மிதா என் கைகளைப்பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  அவளைப்பார்க்கவும் பாவமாய் இருந்தது. என் புத்திக்கெட்டது -  ஒரு நிமிஷம் இரு என்று சொல்லி விட்டு, என் காரை நோக்கிச்சென்றேன்.  கிள‌வ் கம்பார்ட்மெண்டில் இருந்து செக் புக்கை எடுத்து வந்தேன். ஸ்மிதாவைத்தனியாக அழைத்துச்சென்றேன். "நீயும் நானும் இனி ஒன்றாக வாழ முடியாது, இன்னிக்கு உங்களுக்கு பணக்கஷ்டம் இருக்கு, அதனால நான் மனுஷனாய் தெரிகிறேன். உங்க நிலைமை மாறுச்சுனா, நான் மறுபடியும் உங்களுக்கு புழுவாய் தெரிவேன், ஸாரி டியர்.. என்னிடம் பேங்க் சேவிங்கில் முப்பதைந்தாயிரம் டாலர் தான் இருக்கு, செக்காக தருகிறேன், திருப்பிக்கூட தர வேண்டாம், இனி மேல் என்னைக்காண்டாக்ட் செய்யாதே" அமைதியாய் செக்கை வாங்கிக்கொண்டாள். மெல்லியக்குரலில், தாங்க்ஸ் என்றாள். நெட்டை எழுந்து நின்று கைக்குலுக்கினார், அவர் தம்பி முதுகில் தட்டிக்கொடுத்தார். நியூ ஜெர்சி திரும்பினேன். பிராஜெக்ட் முடிந்து விட்டது, இனி மேல் பென்ச் சம்பளம் தான் தர முடியும் என்று கம்பெனி பிரசிடெண்ட் கூப்பிட்டு சொன்னார். அவர் நினைத்தால் என்னை வேலையை விட்டுத்தூக்கி இருக்கலாம், ஸ்ருதியை பள்ளியில் கொண்டு போய் விடுவதால் இரக்கம் காட்டுகிறார் என்று நினைக்கிறேன்.  மனம் மிகப்பாரமாக இருந்தது. 2 மாதத்தில் அவள் ஸ்கூலும் முடிந்து விடும். இன்டர்வீயுவிற்கு பிரிபேர் பண்ணனும். ஒரே டிப்ரஸனாக இருந்தது. வீட்டிற்கு போன் செய்தால், அப்பாவிற்கு உடம்பு சரியில்லை, கொஞ்சம் பணம் அனுப்ப முடியுமா என்றார்கள். சேமித்து வைத்திருந்தப்பணத்தையும், ஸ்மிதா அப்பாவிற்கு க்கொடுத்தாயிற்று. எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை வளர்த்து இருப்பார் அப்பா? எப்படியாவது அவருக்குப்பணம் அனுப்ப வேண்டும்.  காரில் அமர்ந்து யோசித்தேன், அட இந்த‌ கார் தேவையா, நியூஜெர்சியில் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இருந்தால் பஸ்ஸை ப்பயன் படுத்தியே காலத்தை ஓட்டி விடலாம்.  ஆசை ஆசையாய் வாங்கிய காரை அடிமாட்டு விலைக்கு விற்றேன். கண்களை முட்டிக்கொண்டு கண்ணீர் வந்தது.  ஸ்மிதா குடும்பத்திடம் ஏமாந்து விட்டோம் என்று தோன்றியது.

Share this post


Link to post
Share on other sites

கம்பெனி காரில், ஸ்ருதியை அழைத்துக்கொண்டு வந்து நிறுத்தினேன். அவள் ,"பை அங்கிள்" என்று சொல்லி விட்டு பிரேயர் லைனில் போய் நின்று கொண்டாள். நானும் கண்ணை மூடிக்கொண்டு கும்பலோடு பிரேயரை முணு முணுத்தேன். கண் திறந்துப்பார்த்தால்,  யாமினி சற்றுத்தொலைவில் நின்று கொண்டிருந்தாள். அவள் என்னைப்பார்ப்பாளா? ஆவலோடு நின்றுக்கொண்டு இருந்தேன். அவள் பாட்டிற்கு போய்க்கொண்டே இருந்தாள். சே எனக்கு நேரமே சரியில்ல போலிருக்கிறது. காரை எடுத்துக்கொண்டு டிராபிக்கில் வெயிட் செய்து கொண்டிருந்தேன். மதியம் போன் இன்டர்வியூ வேற இருக்கிறது. என்னத்தைக்கேட்பான்களோ? பக்கத்து லேனில் ஒரு குட்டி போர்டு கார் நின்று க்கொண்டு இருந்தது.  அந்தக்காரிலிருந்து துள்ளலான குரல்,  "ஹே சங்கர், இளைய நிலா இன்னுமுமா பொழிஞ்சிட்டு இருக்கிறது.. குட் டே மை பிரண்ட்" யாமினி, மோகினியாய் சிரித்தாள்.....சிக்னலில் கீரின் விழுந்தது..

Share this post


Link to post
Share on other sites

கேன் யூ லென்ட் மீ ஹன்ட்ரெட் தெளவ்சன்ட் டாலர்ஸ்?

இதென்ன அக்கிரமமா இருக்கு? அவனவன் வரதட்சணை கேட்டு கல்யாணம் பண்றிக்கிறான். நாம ஒரு பைசா கேட்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டா இவங்க நம்ம கிட்டேயே பணம் கேட்கிறாங்க.

ஸ்மிதாவை த்தனியாக அழைத்துப்பேசினேன். என்கிட்டே அவ்வளவு பணம் கிடையாது. ஒரு லட்சம் சேர்க்க நான் என்ன தென்னவன் மாதிரி கொள்ளைக்கொள்ளையா சம்பாரிக்கிறேன்? "உன் அப்பாவிடம் கடன் வாங்கிக்கொடு" என்றாள்.  "என்னது, என் அப்பாக்கிட்டேயா? அவரே பாவம் கஷ்டப்பட்டு பிசினேஸ் நடத்திக்கிட்டு இருக்கார்.  நியாயமா நான் தான் அவருக்குப்பணம் அனுப்பணும்"

"ஸொ, யூ டோன்ட் லக் மை டேட்" குரலை உயர்த்தினாள் ஸ்மிதா.

நெட்டையன் எத்தனைப்பேரிடம் ஆட்டையைப்போட்டாரோ, நியூட்டனின் 3வது விதி அவரையேத்தாக்குது..

செம...

Share this post


Link to post
Share on other sites
சிக்கலில் க்ரின் விழ, யாமினி காற்றில் மறைந்தாள். அவளை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று மனம் ஏங்கியது.  இன்டெர்வியூவில் வினாக்களை அனாயசமாக எதிர்க்கொண்டு, பதில்களை படு நம்பிக்கையோடு அள்ளித்தெளித்தேன். அட! நம்ம கிட்ட கூட இவ்வளவு சரக்கு இருக்கிறதா? லிப்ட்டில் இறங்கி வரும் போது எதிர்ப்படும் முகங்கள் எல்லாம் யாமினியாய் தோன்றியது. ஒரு புதுமுகம் என்னை இவ்வளவு தூரம் மாற்றும் என்று நினைக்கவே இல்லை. வீட்டிற்குச்சென்றவுடன் விசல் அடித்துக்கொண்டே டிவியை ஆன் செய்தேன். டிவி நிகழ்ச்சியைப்பார்த்துக்கொண்டே இருந்தேன். எப்படியாவது யாமினியின் போன் நம்பரை வாங்கி விட வேண்டும் என்று தோன்றியது. மறு நாள் காலையில் அவளைக்கண்டதும் நேரே சென்றேன். 
 
"மொபைல் நம்பர் வேணும்...."  
"எதுக்கு"  
"பேச தான்"
"அதான், பேசிட்டு இருக்கீங்களே!"
"இல்லை, எப்பவாச்சம் பேசுணும்னு தோணுச்சுனா பேசறதற்கு..."
"ஓ... எப்பல்லாம் பேச தோணுது?"
"வீட்டில, ஆபிஸ்ல இருக்கும் போது..."
"ஓ. ஐ சி..ஆபிஸ்ல வேல பாக்க மாட்டீங்களா"
"பென்சல் இருக்கேன்...."
"புரோஜக்ட் கிடைச்சிட்டா நெனப்பு வருமா?"
சரியான வாயாடி போல இருக்கு, ஆனா இதுவும் ஜாலியா தான் இருக்கு....

Share this post


Link to post
Share on other sites

என்ன ஓய்! மீதி எழுதுவேலா? மாட்டேலா? தொடர்கதைன்னுறது வாரத்துக்கு ஒருதடைவையாவது எழுதனும். வருசத்துக்கு ஒரு தபா எழுத கூடாது.

Share this post


Link to post
Share on other sites
ஒரு புதுமுகம் என்னை இவ்வளவு தூரம் மாற்றும் என்று நினைக்கவே இல்லை.
 
என்னை வம்புக்கு இழுக்காமல் இருந்தால் யாருக்குமே தூக்கம் வராதா?

Share this post


Link to post
Share on other sites