ஆக்னி

10 மணி நேரத்தைத் தாண்டியும் தொடரும் ஆட்டம்

14 posts in this topic

விம்பிள்டன் டென்னிஸ் வரலாற்றில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான் இஸ்னர் மற்றும் பிரான்ஸின் நிக்கோலஸ் மஹூத் ஆகியோருக்கு இடையிலான ஒற்றையர் போட்டி பத்து மணி நேரமாகியும் இன்னும் முடியாமல் நீண்டு கொண்டிருக்கிறது.

இரு வீரர்களும் 4 செட்கள் ஆடி முடித்த நிலையில், சம நிலையை எட்டினர். இதையடுத்து 5வது செட் ஆட்டம் தொடங்கியது. அதுதான் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. இரு வீரர்களும் சரியாக 10 மணி நேரம் ஆடி முடித்த நிலையில் இரவு கவிழ்ந்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்று தொடரவுள்ளது.

5வது செட்டில் இருவரும் தலா 59 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளனர்.

இப்படி ஒரு ஆட்டம் இதுவரை நடைபெற்றதில்லை. இனியும் நடைபெறப் போவதில்லை என்று மிகவும் அயர்ச்சியுடன் கூறினார் இஸ்னர்.

இந்த மாரத்தான் ஆட்டத்தை மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட மூச்சு விடக் கூட நேரமில்லாமல் கவனித்தனர்.

இதற்கு முன்பும் இப்படி ஒரு மாரத்தான் போட்டி நடந்தது. 2004 பிரெஞ்சு ஓபன் போட்டியின்போது பிரான்ஸ் வீரர்கள் பேப்ரிஸ் சான்டோரா மற்றும் அர்னாட் கிளெமன்ட் ஆகியோர் ஆறு மணி நேரம் 33 நிமிடங்கள் ஆடி 6-4, 6-3, 6-7, 3-6, 16-14 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை முடித்தனர்.

இஸ்னரும், மஹூத்தும் செவ்வாய்க்கிழமை ஆடத் தொடங்கினர். நான்கு செட்களை முடித்தபோது மாலை வந்து ஆட்டத்தை நிறுத்தியது. பின்னர் நேற்று மீண்டும் ஆட்டம் தொடங்கி இன்னும் முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது.

இஸ்னர் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார். அடுத்த செட்டை 6-3 என்ற கணக்கில் மஹூத் வென்றார். 3வது செட்டையும் மஹூத்தே 7-6 என்ற கணக்கில் வென்றார். 4வது செட்டை இஸ்னர் 7-6 (7-3) என்ற கணக்கில் வெல்லவே இழுபறியாகி விட்டது.

தற்போது 5வது செட் யார் வசம் என்பதில் பெரும் இழுபறி நிலவுகிறது. இன்று தொடரும் போட்டியைக் காண ராணி எலிசபெத் நேரில் வருகிறாராம். அந்த அளவுக்கு இந்தப் போட்டி இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

http://thatstamil.oneindia.in/news/2010/06/24/wimbledon-longest-match-inser-mahut.html

Share this post


Link to post
Share on other sites

SVOD.com இல் காட்டுகிறார்களா??

வேற ஏதும் லிங்க் இருந்தா... கொடுங்கோ ஆக்னி வாள்..

Share this post


Link to post
Share on other sites

நேற்று இந்த ஆட்டத்தை பார்த்துகொண்டிருந்தேன்.. இருவரும் 6 மணி நேரம் விளையாடியும் கொஞ்சம் கூட விட்டுகொடுக்காமல் ஆடுகின்றனர்.. அதிலும் குறிப்பாக இஸ்னர் களைப்புடனே காணப்பட்டார் அப்படியும் தொடர்ந்து தன் சர்விஸ் கேம்களை ஜெயித்துகொண்டிருந்தார்..

really unbelievable!

Share this post


Link to post
Share on other sites

SVOD.com இல் காட்டுகிறார்களா??

வேற ஏதும் லிங்க் இருந்தா... கொடுங்கோ ஆக்னி வாள்..

நானே செய்தியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.

Share this post


Link to post
Share on other sites

ஏதும் உள்ளே தள்ளியிருப்பாரோ இருக்கலாம்... ஹிஹி

நேற்று இந்த ஆட்டத்தை பார்த்துகொண்டிருந்தேன்.. இருவரும் 6 மணி நேரம் விளையாடியும் கொஞ்சம் கூட விட்டுகொடுக்காமல் ஆடுகின்றனர்.. அதிலும் குறிப்பாக இஸ்னர் களைப்புடனே காணப்பட்டார் அப்படியும் தொடர்ந்து தன் சர்விஸ் கேம்களை ஜெயித்துகொண்டிருந்தார்..

really unbelievable!

நீங்கள் உதவலாமே... லிங்க் அனுப்பி...

Share this post


Link to post
Share on other sites

பிபிசி சைட்டுல இருக்கு.. ஆனா அது வெறும் யுகேவில் மட்டும் தான் தெரியும்..

சேகு சொல்லுவார் சில சைட்டுகளில் போய் உங்க ஐபி அட்ரஸை யுகேவில் இருந்து வருவது போல் செய்யலாம்னு... நான் களம் வந்த புதிதில், நான் தான் அருண் யுகேவில் இருந்து வருவது போல் ஏமாற்றுகிரேனு நம்பினாங்க..

அதே மாதிரி போய் பிபிசியில் பார்க்க முடியாதா?

Share this post


Link to post
Share on other sites

ஏதும் உள்ளே தள்ளியிருப்பாரோ இருக்கலாம்... ஹிஹி

நீங்கள் உதவலாமே... லிங்க் அனுப்பி...

நான் மேட்சை டிவியில் இல்ல பார்த்தேன்!

Share this post


Link to post
Share on other sites

நான் மேட்சை டிவியில் இல்ல பார்த்தேன்!

ஓ...

நன்றி...

Share this post


Link to post
Share on other sites

சே! தமிழனின் "ஆறு" மணி நேரச் சாதனையை விஞ்சி நிறையச் சாதனைகள் படைக்கின்றனர் மேல் நாட்டவர். எம்மோடு இவர்கள் டாஸ்மாக்கில் போட்டி போடத் தயாரா என்று பிளிறுகிறார் தோழர் பூழே.

Share this post


Link to post
Share on other sites

மானஸ்தர் வேக்கப்பை இத்திரியில் காணோமே

Share this post


Link to post
Share on other sites

மானஸ்தர் வேக்கப்பை இத்திரியில் காணோமே

அந்த வெளிநாட்டான் ஏந்தான் இப்படி உடம்பு நோக ஆடுராங்களோ

எங்களைப்பாருங்க எப்படி வாயாலேயே பந்தல் போட்டு கல்லாகட்டுரோம்

--

எங்களை மிஞ்ஞி யார் இருக்கா இருந்தா வெளியே வா

ஒன்டிக்கு ஒன்டி மோதி (பேசி) பார்க்கலாம்...

இப்படிக்கு

பெரியரின் பாசறையில் இருந்து தப்பி ஓடிய கூட்டத்தின் தலையும் வாலும்

Share this post


Link to post
Share on other sites

இப்படிக்கு

பெரியரின் பாசறையில் இருந்து தப்பி ஓடிய கூட்டத்தின் தலையும் வாலும்

இன்னிக்கு எல்லோரும் இப்படி ஃபார்ம்ல இருக்காங்களே!

Share this post


Link to post
Share on other sites

10 மணி நேரமாக விளையாடுவதற்கு காரணம் எங்கள் தானைத்தலைவி இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி தான்.

Share this post


Link to post
Share on other sites

11 மணி நேரம் 5 நிமிடங்களில் ஆட்டம் முடிவுற்றது.

புதன்கிழமை வரை 10 மணி நேரம் ஆடியிருந்த நிலையில் நேற்றுஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே முடிவு தெரிந்து அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சைக் கொடுத்தது.

இஸ்னர் 70 கேம்களையும், மஹூத் 68 கேம்களையும் கைப்பற்றினர். இதையடுத்து 5வது செட்டை வென்றார் இஸ்னார். போட்டியையும், 6-4, 3-6, 6-7, 7-6, 70-68 என்ற கணக்கில் வென்றார் இஸ்னர்.

சாதனைப் போட்டியின் புள்ளிவிவரங்கள்

- 5வது செட் போட்டி நடந்த நேர அளவு 8 மணி 11 நிமிடங்கள்.

- மொத்தம் விளையாடப்பட்ட கேம்களின் எண்ணிக்கை 183

- 5வது செட்டில் விளையாடப்பட்ட கேம்களின் எண்ணிக்கை 138

- மொத்த கேம்களின்போது கிடைத்த சர்வீஸ் பிரேக் 3

- இருவரும் சேர்ந்து விளாசிய ஏஸ்களின் எண்ணிக்கை 215

- இஸ்னர் போட்ட ஏஸ்களின் எண்ணிக்கை 112

- நிக்லோஸ் மஹூத் போட்ட ஏஸ்கள் 103

- கேம்களின் அடிப்படையில் பார்த்தால் இதுதான் ஒற்றையர் போட்டியில் நீண்ட நேரம் நடந்த போட்டியாகும்.

- ஒரு கிரான்ட்ஸ்லாம் போட்டியில் நீண்ட நேரம் நடந்த ஒற்றையர் பிரிவு செட் இதுதான்.

- ஒரு போட்டியில் ஒரு வீரர் அதிகளவில் ஏஸ்கள் வீசியதும் இதுவே முதல் முறை.

- இந்தப் போட்டியில் மொத்தம் எடுக்கப்பட்ட புள்ளிகளின் எண்ணிக்கை 980

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now