Sign in to follow this  
Followers 0
வேக்கப்

தொடரும் சச்சன் சாதனைகள்

7 posts in this topic

நமது சச்சன் அவர்கள் தொடர்ந்து சாதனைகளை செய்து கொண்டு இருக்கிறார்

அவர் இப்ப கிட்டதிட்ட முறியடிக்காத சாதனை ஏதும் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்

---

இனியும் இருக்க அவருக்கு மற்றவர் சாதனையை முறியடிக்கும் வேலை இல்லை, இப்ப அவர் செய்ய வேண்டியது அவர் சாதனைகளை அவரே முறியடிப்பது தானா

---

இவர் சாதனைகளை முறியடிக்க யாராவது - கண்ணில் தென் படுகிறார்களா

அறிந்தவர்கள் எழுதுங்கள்

Edited by வேக்கப்

Share this post


Link to post
Share on other sites

ஜாக்குவாஸ் காலீஸ், ரிக்கி பாயிண்டிங், குமார சங்ககாரா, கொளதம் கம்பீர், இங்கிலாந்து குக் ஆகியோர் மட்டும் தான் தென்படுகிறார்கள்

Share this post


Link to post
Share on other sites

சச்சின் தெய்வீக சக்தி படைத்தவர் என்பதை முதலில் வாக்கப் சார் அறிந்துகொள்ளவேண்டும். தெய்வீக சக்திபடைத்தவர்களை, தெய்வீக சக்தி இல்லாதவர்கள்( அதாவது பகுத்தறிவு கொண்ட மானிடர்கள் தங்கள் சொந்த தசையின் சக்தியினை நம்புவர்கள்)வெல்லுவது என்பது முடியாத ஒரு காரீயம்.

தெய்வீக சக்தி என்பது தெய்வத்தினை மட்டும் வணங்குவது அல்ல. இவர் சச்சின் தன் தந்தையினை தெய்வமாக வணங்குகிறார். ஆகவே அவரின் அந்த தெய்வீக நம்பிக்கை அவரை இமயமலை அளவு சாதனை படைக்கும் அளவு உயர்த்தியுள்ளது. நான் அவுஸ்திரேலியாவில் பல ஆயிரக்கணக்காண மக்களை சந்திதிருக்கிறேன்.அவர்கள் எல்லோரும் வெள்ளைத்தோல் கொண்டவர்கள். இனத்துவேசத்தினை பிறப்பில் தம் கூர்ப்பினூடு கொண்டு திரியும் அவர்களிடம் நான் சச்சினைப்பற்றி கதைத்தபோது ஒரு கிறிக்கட மகாத்மாவினைப்பற்றி அவர்களிடம் கதைப்பதுபோல வாய்மூடி, இனத்துவேசத்தினை மறந்து ஒரு ஒற்றுமையாக சச்சினின் திறமைகளை தம் அடிமனதில் இருந்து கதைக்கிறார்கள் பாருங்கள். இங்கே தான் நான் சொல்லும் அந்த கடவுள் என்ற வஸ்சு இருக்கிறது என்று சொல்ல வருகிறேன். எல்லா ஆன்மாவினையும் டச் பண்ணும் இவர் என்னைப்பொருத்து ஒரு கடவுளே!!.

Share this post


Link to post
Share on other sites

கிரி,

நான் உங்கள் எழுத்துகளின் ரசிகன்.

சச்சின் ஒரு சுயனலவாதி தன் சாத்னைக்காக மட்டும் தான் ஆடுவார். சுயனலம் கூட தெய்விகமானதா ?

Share this post


Link to post
Share on other sites

தென் ஆப்பிரிக்க வீரர் காலிசுக்கும் சச்சினுக்கும் டெஸ்ட் போட்டியில் இன்னும் 8 சதங்கள் தான் வித்தியாசம்....

Share this post


Link to post
Share on other sites

சுயனலம் கூட தெய்விகமானதா?

தென்னவன், நல்லதையே செய்ய நினைக்கிறவனின் நெஞ்சு பல பழங்களைச்சுமக்கிற ஒரு கூடை என்று நினைக்கிறேன். அந்த கூடையில் இயற்க்கையாகவே, இயல்பாகவே சில புளிப்பான பழங்களும் ஒண்டுடன் ஒன்டு கலந்து இருக்கலாம் இல்லையா?

மார்க்கஸ் அரேலியஸ், ரோம் சாம்ராஜ்யத்தினை ஆட்சி புரிந்த ஒரு ஞானம் படைத்த மன்னர்களில் ஒருவர்.அவர் தன் நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்தாராம் இப்படி

" நான் இன்றைக்கு அதிகமாகப் துன்பப்படுகின்ற கவலையினைப்பற்றியே பேசுகின்ற மக்களையும், சுயநலம், தற்பெருமை, நன்றியின்மை ஆகிய முக்குணங்களையும் கொண்டுள்ள எப்போதும் எதனையும் எப்படிப்பட்டாகிலும் சாதித்தபடியுள்ள பணக்காரர்களையும் சேர்த்து சந்திக்கப்போகின்றேன் என்று. அவர்களைப் பார்த்து நான் ஆச்சரியமோ, கலவரமோ அடையப்போவதில்லை. இம்மாதிரி மனிதர்கள் இல்லாத உலகத்தினை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை."

மனிதனின் வெற்றிக்கு மூன்று ஒழுக்கங்கள் அவசியம் என்பதை சிறிது நேரம் தாழ்த்தி விளங்கிக்கொண்டவன் என் சொந்த வாழ்க்கையில் இருந்து.

எனக்கும் இந்த அறிஞர் சொல்லியதின் உள் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.உண்மையில் நல்ல மனிதன் என்று ஒருவருமே இந்த உலகில் இல்லை.

அவரவர் நெஞ்சங்களில் வெளிவரும் ஒவ்வொரு செயலும், சிந்தனைகளௌம் சுற்றியிருக்கும் மனிதர்கள், பிரச்சனைகள், சந்தர்ப்பங்கள் இவைகளுடன் செர்ந்து வெளிவருபவை.இவை எமக்கு சாதகமில்லாதபோது நாம் அவற்றை நாம் "சுயநலம்" சாதகமாக வரும் போது "பொது நலம்" என்கிறோம் அவ்வளவே!!.இங்கே உங்களுக்கு பொது நலம் என்பது தேவைப்படுகிறது. அப்படி பொது நலம் வேண்டும் என்று நினைப்பதும் ஒரு சுயநலம் தானே.

நீங்கள் ஒரு இந்து மதத்தவர், நானும் ஒரு இந்து மதத்தவன். இந்தியாவிலென்ன, இலங்கையிலென்ன எல்லா கோவில்களிலும் பாருங்கள், எத்தனையோ வறிய மக்கள் இந்த மற்றவர்களின் பொது நலத்துக்காக தவமாய் தவம் கிடந்து, தம்மையே சோம்பேறியாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.அதே நேரம் நியூஸிலாந்து நாட்டில், இன்னுமொருவன் இவன் உயர்ந்த மலைகளை ஏறுபவன். ஏன் இமயமலையில் ஏறி சாதனை படைத்தவன். ஒரு சமயம் தன் காலை பனிக்கட்டிக்குள் கொடுத்துவிட்டு சாகும் தருவாயில் தன் காலை கண்ணாடி போத்திலினை உடைத்து வெட்டி உயிர் தப்பி, இன்றும் பல வருடங்களின் பின்னால் மீண்டும் ஒரு காலுடன் இமயமலை ஏறி உலக சாதனை படைத்திருக்கிறார்.இவருக்கும் ஒரு சுயநலம் உண்டாம். இவரை போட்டி போட்டுக்கொண்டு முன்னேறினால் ஒரு வெறித்தனத்தில் சுயந்லத்துடன் முன்னேறி இவர்களை துரத்திச்சென்று முனெனெறுவாராம். இதுவும் ஒரு வகை சுயநலம் தானே. ஆகவே இவர் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட்டது.

ஆகவே இப்போது இதே மனிதனை நாம் சச்சினுடன் ஒப்பிட்டுப்பார்த்தோமானால், எத்தனையோ எமக்கு தெரியாத மன தோல்விகளுக்கும் மத்தியிலும் தனை நிராகரித்து, மேலும் தன் துடுப்பாட்டத்தில் சிரத்தைவைத்து இமய மலையளவு சாதனை படைக்கிறார் இந்த சச்சின்.இங்கும் மற்றவர்களை வீழ்த்தவேண்டும் என்ற நல்ல சுயநலம் இவருக்குஇருக்கிறது.

ஒரு மனிதன் நல்லவனாக இருக்கலாம் அல்லது கூடாதவனாக இருக்கலாம். ஆனால் இந்த மேலே நான் சொல்லிய மூன்று ஒழுக்கங்களை எவன் கடைப்பிடிக்கிறானோ அவன் வெற்றிபெற்ற மனிதனாக உயர்வான்.

அதாவது சாதனை படைக்கும் மனிதனுக்கு உடல் உறுப்புகளின் கட்டுப்பாடு தேவை: அது சச்சினுக்கு இருக்கு.

மன அலைகளின் கட்டுப்பாடும் அவருக்கு இருக்கு.

ஆகவே செயல் புரிவதிலும் கட்டுப்பாடும் அவருக்கு இருக்கும். ஆகவே வெற்றி அவர் கையில்.

உடல் கட்டுப்பாடு தேவையென்றால் கண்ட கண்ட உனவினை திண்ணுவதை நிப்பாட்டி, உடற்பயிற்சியினூடு உடல் உறுப்புகளை சீரும் சிறப்புமாக வாழ வழிசமைக்கிறார். ஆகவே இங்கே அவரின் சுய நலம் அடிபட்டுப்போகின்றது இல்லையா தென்னவன்.

அங்காடி நாய் போல எப்போதும் வீட்டுப்படைலை திறந்தது போல நித்திரை விட்டு எழுந்ததும் ஓடும் எம் பொல்லாத மன அலைகளை நாம் அடக்க எப்படியாக கஸ்டப்படவேண்ன்டியிருக்கிறது.அவர் அதையும் மிக கட்சிதமாக நிறைவேற்றியதில் பல வெற்றிகளை அவர் மனச்சக்தியின் உதவியோடு பண்ணுகிறார். இங்கேயும் அவருக்கு சுயநலமிருந்திருந்தால் மற்ற கிறிக்கட் வீரர்களைப்போல அவராலும் தெருநாய்போல அவர் மனதை கிறிக்கட்டில் பந்தடிக்கும் நோக்கத்தில் இருந்து ஒரளவாகிலும் விலத்திச்சென்று, அதை நட்ச்சக்திர விடுதிகளில் வாசலில் நிற்க வைத்திருக்கலாம் இல்லையா தென்னவன்? அவர் அதையும் வெற்றிகரமாக அடக்கியிருக்கிறார்.

ஆகவே செயல் புரிவதிலும் கட்டுப்பாடும் அவருக்கு இருக்கும். இப்படிப்பட்ட ஒருவர் மற்றவனின் அழிவில் சுகம் காணும் வகையினன் அல்ல அல்லவே!!.

ஆகவே தெவீகத்திலும் சுயலமும் உண்டு. பொதுநலமும் உண்டு.

P.S இன்னும் நான் கொஞ்சம் மேலே போய் இந்துமதத்தினயே உதாரணத்துகு எடுத்து உங்களுக்கு நான் சுயநல்மென்றால் என்ன என்பதைச்சொல்லிக்காட்ட முடியும் ஆனால் அதை நிருவாகி சார் விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன். அதன் பின்பு என்னை தடைசெய்துவிடுவார் நிரந்தரமாக தென்னவன் சார். :6f7108ab7637e542e0ab99ac3616f99

Share this post


Link to post
Share on other sites

ஸசின் இச் Gஒட் ஒf cரிcகெட்.

[உர்ல்=க்ட்ட்ப்://ந்ந்ந்.சஙம்க்ரொஉப்கொடெல்ச்.cஒம்/டொஉர்-பcககெ]Kஅன்யகுமரி டெம்ப்லெச்[/உர்ல்] | [உர்ல்=க்ட்ட்ப்://ந்ந்ந்.சஙம்க்ரொஉப்கொடெல்ச்.cஒம்/கொந்-டொ-ரெஅச்-உச்]Kஅன்யகுமரி டொஉரிச்ட் ச்பொட்ச்[/உர்ல்] | [உர்ல்=க்ட்ட்ப்://ந்ந்ந்.சஙம்க்ரொஉப்கொடெல்ச்.cஒம்/cஒன்டcட்-உச்]Kஅன்யகுமரி டொஉரிச்ட் அட்ட்ரcடிஒன்[/உர்ல்]

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0