Sign in to follow this  
Followers 0
வந்தி

கவிதைப் பூங்கா

Rate this topic:

29 posts in this topic

கவிதைப் பூங்கா

இந்த பகுதியில் நான் படித்துச் சுவைத்த கவிதைகள் பிரசுரிக்க எண்ணியுள்ளேன். இதில் அரசியல், வீரம், தத்துவம் மற்றும் காதல் என சகல விதமான கவிதைகளைப் பதிப்பது என் நோக்கம். நீங்கள் படித்த கவிதைகளையும் பிரசுரியுங்கள். எழுதியவரின் பெயர் இயலுமானால் வெளிவந்த புத்தகம் விபரங்கள் குறிப்பிடுவது நல்லது.

சட்ட விரோதம்

ஆண்டிடுவோர் செய்கை இது

விந்தை விந்தை

அச்செய்கைத் தன்மையினை

என்னென் போம் நாம்!

மாண்டிடுவார் அனேகர் கத்தி

முனையில் என்று

மழுங்கு முனைச் சிறு கத்தி

யில்லா தொன்றைத்

தீண்டவுமே கூடாதெனச்

சட்டஞ் செய்தார்

தீங்கொழிந்த தென; அந்தோ

சட்டம் மீறி

நீண்டவொரு கத்தி தனை

நிமிர ஏந்தி

நெடுந்தடியில் கொலைச் சிங்கம்

பறக்கலாமோ ?

தான் தோன்றிக்கவிராயர் சில்லையூர் செல்வராஜன் (ஈழம்) 1951ல் சுதந்திரன் பத்திரிகையில் எழுதியது.

குறிப்பு : இலங்கை தேசியக் கொடியில் வாளேந்திய சிங்கம் உண்டு.

தோல்வி ஒரு

சிற்பி !

பல வரலாறுகள் இந்த

சிற்பி செதுக்கியது தான் !

தோல்வி ஒரு

நெருப்பு !

நிறைய தீபங்களை இந்த

நெருப்புதான் ஏற்றியது !

தோல்வி ஒரு

அணை !

ஏராளமான நதிகள் இந்த

அணையிலிருந்து கிளம்பின….

தோல்வி என்பது

முடிவல்ல…

இடைவெளி !

தோல்வி ஒரு

அவஸ்தை அல்ல

அவகாசம் !

தோல்வி என்பது

தண்டணை அல்ல !

எச்சரிக்கை !

வித்தகக் கவிஞன் பா.விஜய் உடைந்த நிலாக்கள் (பாகம் 3)

என்னைத் தவிர

யாரிடமும் பேசாதே

உன் இதழ்களில்

நனைந்து வருவதால்

வார்த்தைகளெல்லாம்

முத்தங்களாக்விடுகின்றன.

காதல் கவிஞன் தபூ சங்கர்

Share this post


Link to post
Share on other sites
gallery_133_8_9078.jpg

Share this post


Link to post
Share on other sites

Normally kaadhal kavithai are very good..... do every one experienced before writing...

Pa. vijay... has told that he never experienced.

just for fun:(My comment)

I am with saraj only...... :P

(sarj be carefull... you too get married... :lol: .)

Share this post


Link to post
Share on other sites

நாளை நாளை என்று சொல்லியே

இன்றுள்ளதெல்லாம் கடந்துவிட்டது

கடந்த காலத்து நினைவினிலே

எதிர்காலத்து கனவினிலே

நிகழ்காலத்தை இழந்துவிட்டோம்

கண்காணிப்புகள் பயனற்றுப் போயின

ரசம் நிறைந்த நதி வற்றிப்போய்விட்டது

லாபம் நட்டமெனும் தராசுத் தட்டுகளில்

வாழ்வும் கழிந்தது.

விற்றவன் விலை பெற்றான்

விற்காதவனுக்கு நட்டமாகிவிட்டது

சந்தையில் என்னை தவிக்கவிட்டு

ஒவ்வொரு நண்பராய்ச் சென்றுவிட்டார்.

கவிஞர் அடல் பிகாரி வாஜ்பாய்(முன்னாள் பிரதமர்). என் கவிதைகள் ஐம்பத்தொன்று

கவிஞன் காலத்தின் கண்ணாடி என்பதை இந்தக் கவிதைமூலம் உறுதிசெய்துள்ளார் கவிஞர் வாஜ்பாய். சிலவரிகளை ஈழப்பிரச்சைனையுடன் பொருத்திப் பாருங்கள் அற்புதமாகப் பொருந்துகிறது.

Share this post


Link to post
Share on other sites

எழுதாத கவிதை...

எழுதுங்களேன்

நான்

எழுதாது செல்லும்

என் கவிதையை

எழுதுங்களேன்!

ஏராளம்..........

ஏராளம்.... எண்ணங்களை

எழுத

எழுந்துவர முடியவில்லை

எல்லையில்

என் துப்பாக்கி

எழுந்து நிற்பதால்.

எழுந்து வர என்னால் முடியவில்லை!

எனவே

எழுதாத என் கவிதையை

எழுதுங்களேன்!

சீறும்

துப்பாக்கியின் பின்னால்

என் உடல்

சின்னா பின்னப்பட்டு போகலாம்

ஆனால்

என் உணர்வுகள் சிதையாது

உங்களை சிந்திக்க வைக்கும்.

அப்போது

எழுதாத என் கவிதையை

எழுதுங்களேன்!

மீட்கப்பட்ட - எம் மண்ணில்

எங்கள்

கல்லறைகள்

கட்டப்பட்டால்

அவை

உங்கள்

கண்ணீர் அஞ்சலிக்காகவோ

அன்றேல் மலர் வளைய

மரியாதைக்காகவோ அல்ல!

எம் மண்ணின்

மறுவாழ்விற்கு

உங்கள் மன உறுதி

மகுடம் சூட்ட வேண்டும்

என்பதற்காகவே.

எனவே

எழுதாத என் கவிதையை

எழுதுங்களேன்!

அர்த்தமுள்ள

என் மரணத்தின் பின்

அங்கீகரிக்கப்பட்ட

தமிழீழத்தில்

நிச்சயம் நீங்கள்

உலாவருவீர்கள்!

அப்போ

எழுதாத

என் கவிதை

உங்கள் முன்

எழுந்து நிற்கும்!

என்னை

தெரிந்தவர்கள்

புரிந்தவர்கள்

அரவணைத்தவர்கள்

அன்பு காட்டியவர்கள்

அத்தனை பேரும்

எழுதாது

எழுந்து நிற்கும்

என்

கவிதைக்குள்

பாருங்கள்!

அங்கே நான் மட்டுமல்ல

என்னுடன்

அத்தனை

மாவீரர்களும்

சந்தோஷமாய்

உங்களைப் பார்த்து

புன்னகை பூப்போம்!

(ஆனையிறவு முகாம் தாக்குதலில் 15-07௧991 இல் வீரமரணமடைந்த கப்டன் வானதி பத்மசோதி சண்முகநாதபிள்ளைஸ எழுதிய இறுதிக் கவிதை இது)

எப்பொழுது இந்த கவிதையை வாசிக்கிறபோதும் என் கண் ஒரத்தில் வரும் கண்ணீர்துளியை நிப்பாட்டமுடியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

வாழ்க்கை

வாழ்க்கை என்பது

ஒரு கடல் அலை

அதன் வண்ணமும்

வடிவமும்

ஓயாது மாறிகொண்டு

இருக்கும் இது

இயற்கையின் நியதி

Share this post


Link to post
Share on other sites

குழலும், குழலியும்

புதிதாய் வாங்கி வந்த

புல்லாங்குழலுடன்- நான்

தோட்டத்தில்

இரட்டை ஜடையில்

பட்டுப்பாவாடை தாவணியில்

கொலுசுகள் இசைக்க

கூந்தலில் மல்லிகை மணக்க

புன்னகையோடு

வந்தமர்ந்தாள் என்னவள்

என் பக்கத்தில் - அவள்

முகம் பூசிய பவுடர் வாசம் - அவள்

மூச்சுக் காற்றுகளிலும் வாசம்

முதலில் எதை நான் வாசிப்பது?

Share this post


Link to post
Share on other sites
p47.jpg

Share this post


Link to post
Share on other sites

அம்மா நீ எங்கே அம்மா நீ எங்கே

உலகிலே சிறந்தது

உயிரினும் மேலாலனது

உன் பாசம்; உன் நேசம்; உன் அன்பு; உன் அரவணைப்பு

எல்லாமே தேவையே எனக்கின்று

அம்மா நீ இன்று

எவ்வூரில் ஓடுகின்றாய்?

கோரப்புயல் போல

கொடுமைகள் புரிந்துநிற்கும்

கொடியவர் துரத்தினரா?

கொண்டதே கோலமாக

கொடுந்துயர் கொண்டு நீயும்

கலங்கியே ஓடினாயோ?

கணவனே துணை என்றாய்

கடல் கடந்து வந்து விட்டேன்

கண்காணா ஊரிலின்று

கண்கலங்கி நிற்கின்றேன்

அம்மா உனை என்று காண்பேன்

உன் கையால் சோறு உண்ண ஆசை

என் பிள்ளையை நீ அள்ளி

அணைத்து மகிழ்வதைக்காண ஆசை

ஆயிரம்பேர் இருந்தென்ன

ஆயிரமாய் பணம் வந்தென்ன

ஆளாக்கி வளர்த்த உன்

அன்பு மனம் தவிக்கின்றதே

தத்தித் தத்தி நடக்கையிலே

தள்ளாடி விழுமென்னை

தாவியே ஓடிவந்து

தாங்கியே நீ பிடித்தாய்

தளர் நடை போட்டு நீ

தள்ளாடி நடக்கையிலே

தள்ளியே நானிருந்து

தவிக்கின்ற தவிப்புக்களை

என்னென்று உரைத்திடுவேன்

உனைப் பிரிந்த பின்தானே

உனை எண்ணிப்பார்க்கின்றேன்

தாயான பின்தானே

தாய்ப்பாசம் உணர்ந்திட்டேன்

என்செய்வேன் ஏதுசெய்வேன்

என்றேங்கி வாடுகின்றேன்

அம்மா நீ எங்கே?

Share this post


Link to post
Share on other sites

பி.எஸ்ஸி., லவ்வாலஜி

தபூ சங்கர்

இந்தியாவில்

ஆளுநர் ஆவதற்கு

35 வயதுக்கு மேல்

இருக்க வேண்டும்.

ஆனால் நீயோ

22 வயதிலேயே

என்னை ஆளுகிறாயே!

மின்மினிப் பூச்சிகளில்

அதிகம் ஒளி வீசுவது

பெண் மின்மினிகள்தான்.

அது சரிதான் என்பது

உன் கண்மணிப் பூச்சிகளைப்

பார்த்தாலே தெரிகிறதே!

தங்கம் எப்போதும்

தனியாகக் கிடைக்காதாம்.

ஆனால் உன் தாய்

தனியாகத்தானே

பெற்றெடுத்தார் உன்னை!

நிலவில் வாயு மண்டலம் இல்லை.

அதனால் அங்கே ஒருபோதும்

மனிதன் பேசினால் கேட்காது.

அதனால்தான் நான் பேசுவதை

எப்போதும் கேட்பதில்லையா நீ?

எரிமலை இருந்த, இருக்கும்

இடத்தில்தான் கிடைக்குமாம் கந்தகம்.

நீ இருக்கும் இடத்தில்தான்

எனக்குக் கிடைக்கின்றன கவிதைகள்!

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் பரவ்வால்யா..! சுமாரா கீது :)

Share this post


Link to post
Share on other sites

லொள்ளுக் கவிதைகள் - முஜிப் அல்கோபர்

காதல்

கடலில மூழ்கினா முத்து

காதலில் மூழ்கினா பித்து

படிப்பைக் கொஞ்சம் யோசி

குடும்பத்தைக் கொஞ்சம் நேசி

சொந்தக் காலில் முதலில் நில்லு

அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு

இதுக்கு மேலும் வேணாம் மல்லு

அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு

வயசானா உதவிடும் கைத்தடி

வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி

o

குடி

வெயிலுக்குக் குடிச்சா நல்லது மோரு

குடும்பத்தையே நாசமாக்குது இந்த பாரு

o

இளசுகள்(பெண்கள்)

செய்தித்தாளை படிச்சா தெரிஞ்சிக்கலாம் மேட்டரு!

வயசுப் பசங்களப் பார்த்தா பொண்ணுங்க விடுவாங்கோ பீட்டரு!!

o

அரசியல்வாதி

குடிகாரன் குடிபோதையில் உளறுவான்!

அரசியல்வாதி குடிக்காமலேயே உளறுவான்!!

கைகூப்பிக் கேட்பாங்கோ ஓட்டு!

வெற்றிபெற்றா உட்ருவாங்க ஜூட்டு

Share this post


Link to post
Share on other sites

‘காலியம்’ என்கிற உலோகம்

நம் உள்ளங்கைச் சூட்டிலேயே

உருகி விடுமாம்

நானோ உன் நிழலின் சூட்டிலேயே!

ஒரு கையால் ஓவியம் வரைந்துகொண்டே

இன்னொரு கையால் எழுதும் பழக்கம்

உடையவர்

ஓவியர் லியனார்டோ டாவின்ஸி

ஒரு கையால் எழுதிக்கொண்டே

இன்னொரு கையால்

தன் கூந்தலையே கோதிக்கொள்ளும்

ஓவியம் நீ!

இந்தியாவின்

‘ரோஜா தலை நகரம்’

பூனா. என்றாலும்

ரோஜாக்களின் தலைநகரம்

உன் கூந்தல்!

இங்கிலாந்து நாட்டில் வாழும்

அனைத்து கறுப்பு அன்னப் பறவைகளும்

இங்கிலாந்து அரசிக்குச் சொந்தமாம்.

இந்தியாவில் வாழும் அனைத்து

வண்ணத்துப் பூச்சிகளும் உனக்குச்

சொந்தமோ?!

தபு சங்கர்

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கவிதைகள் நெட்டில் சுட்டு என் உண்மையான பெயரில் சிலருக்கு அனுப்பியவை காரணம் விளங்கும் என நினைக்கிறேன். இதில் தற்போது வந்தியத்தேவன் என பெயரை மாற்றி உள்ளேன். கவிதை பிடித்தால் எழுதிய யாரோவைப் பாரட்டவும். வடிவமைப்பு பிடித்தால் என்னைப் (ஹி ஹி )பாராட்டவும்.

kadhalkavithai.jpg

a_z_love.jpg

Edited by வந்தியத்தேவன்

Share this post


Link to post
Share on other sites

முதலிரவு

முதலிரவு என்றதால்

நெஞ்சில் படபடப்பு;

கொஞ்சம் பரபரப்பு.

எத்தனையோ பாதிநாட்களை

படுக்கையில் கழித்த எனக்கு,

அன்று ஏனோ

அரை அவுன்ஸ் ஏக்கம்

மனதில் மகுடி வாசித்தது.

விளக்கணைத்து -இருளின்

விரல் பிடித்து ஏதோ

போருக்கு போவது போல

போர்வைக்குள் போனேன்.

சாய்ந்த மாத்திரத்திலேயே

காதுக்குள் அவள் சொன்ன

சிருங்கார மொழியும்

சிக்கன சிணுங்கலும்

புரியாமல் தலையசைத்தேன்.

ஓயாத அவள் பசிக்கு

ஓவ்வாத ஜென்மமாக

சுருண்டு விட்டேன்.

ஆனால்,

அவளோ விடவில்லை.

போர்வைக்குள் நீச்சலடித்தேன்;

கைகளோ படபடத்தன;

கால்களோ துடிதுடித்தன;

என் கை நகங்களே

என்னை பிராண்டின.

முடிந்தளவு போராட்டம்

விடிய விடிய நடந்தது.

போரின் உச்சத்தில்

போர்வையே கிழிந்தும்விட்டது.

காலையில் பார்த்தபோது

ஓரத்தில் சிறு ரத்தக்கறை.

என்னவிரசமான வர்ணனையா?

வெளிநாடொன்றில்,

நான் கழித்த முதலிரவில்,

எனையழித்த நுளம்பின் தொல்லையை

இதற்கு மேல் எப்படி சொல்ல?

சுட்ட இடம் :அலையோசை

Share this post


Link to post
Share on other sites

ஹி ஹி :lol: :lol:

அட நம்ம வந்தியா இப்புடி "பச்சயா" கவிதை எழுதிறதுன்னு பயந்து போயி முழுவதும் படிச்சி பாத்தா

அட "நுளம்பு" :( :(

Share this post


Link to post
Share on other sites

ஹி ஹி :lol: :lol:

அட நம்ம வந்தியா இப்புடி "பச்சயா" கவிதை எழுதிறதுன்னு பயந்து போயி முழுவதும் படிச்சி பாத்தா

அட "நுளம்பு" :( :(

வந்தி என்பதும் ஒரு நுளம்புதால்.

சமயத்தில் அது குத்தும் நாமதான் அதைப் பதமாக அடிக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

வந்தியா இப்படி???

Share this post


Link to post
Share on other sites

வந்தியா இப்படி???

"வந்தியா" என்று நீங்க கேட்டது கூட அவனுக்கு "சந்தியா" என்றே கேட்கும்.

ஒருதரம் "இருமலா" என்று கேட்க "நிருமலா" என்று அவனுக்குக் கேட்டது எனக்குத் தெரியும்.

Share this post


Link to post
Share on other sites

"வந்தியா" என்று நீங்க கேட்டது கூட அவனுக்கு "சந்தியா" என்றே கேட்கும்.

ஒருதரம் "இருமலா" என்று கேட்க "நிருமலா" என்று அவனுக்குக் கேட்டது எனக்குத் தெரியும்.

சந்தியா நல்ல பெயர். இக்களத்திலுமொரு சந்தியா இர்ருந்தார் அவரைப் பல நாட்களாக காணவில்லை அவர் பூக்குட்டியின் தோழி.

Share this post


Link to post
Share on other sites

நிர்மலாவும் நல்ல பெயர் தானே வந்தியண்ணா... ஹிஹி!

:rolleyes:

Share this post


Link to post
Share on other sites

எஸ் எம் எஸ் காதல் கவிதை

அவளை என் இதயமே என்று-நான்

ஒரு போதும் சொன்னதில்லை...!

அவள் துடித்து நான் உயிர் வாழ்வதா...?

http://jayapragash.blogspot.com/2007/11/blog-post_11.html

Share this post


Link to post
Share on other sites

எஸ் எம் எஸ் காதல் கவிதை

அவளை என் இதயமே என்று-நான்

ஒரு போதும் சொன்னதில்லை...!

அவள் துடித்து நான் உயிர் வாழ்வதா...?

http://jayapragash.blogspot.com/2007/11/blog-post_11.html

வாவ்!!!

Share this post


Link to post
Share on other sites

வாவ்!!!

அப்படியே உன் பெண் நண்பிகள் அனைவருக்கும் பார்வேட் பண்ணவும் ஜெய்த் தம்பி.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0