Sign in to follow this  
Followers 0
அருணாசலம்

உலககோப்பை

34 posts in this topic

இந்தியா சிறப்பாக விளையாடியது, எனவே வென்றது என்று மொஹாலியில், இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்த பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி இப்போது இந்தியாவைப் பற்றி தாறுமாறாக விமர்சித்துள்ளார்.இந்தியாவுடன் நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியைய பாராட்டிப் பேசியிருந்தார் அப்ரிதி. இது இந்திய ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது. அப்ரிதியை ஜென்டில்மேன் என்று அனைவருமே பாராட்டினார்கள்.

ஆனால் தற்போது இந்தியர்கள் மீது பாய்ந்துள்ளார் அப்ரிதி. குறிப்பாக இந்திய மீடியாக்களை சரமாரியாக விமர்சித்துள்ளார். மேலும் இதில் மதத்தையும் அவர் இழுத்துள்ளார். தனது அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் மீடியாக்களிடமிருந்து தப்பவும், பாகிஸ்தான் மக்களின் அதிருப்தியிலிருந்து வெளியே வரவும் இதுபோல அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்தியர்களையும், இந்திய மீடியாக்களையும், இந்தியாவையும் குறைத்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாகிஸ்தானியர்களுக்கு இருப்பதைப் போன்ற பெரிய மனது இந்தியர்களுக்குக் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, பாகிஸ்தானியர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உள்ளதைப் போன்ற அகண்ட மனது, இந்தியர்களுக்குக் கிடையாது என்றுதான் சொல்வேன். கணிவான இதயம் இந்தியர்களுக்குக் கிடையாது. அல்லா எங்களுக்குக் கொடுத்துள்ளதைப் போன்ற சுத்தமான, கணிவான இதயம் நிச்சயம் இந்தியர்களுக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

அவர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பது நமக்கு மிக மிக கஷ்டமானது. அவர்களுடன் நீண்ட கால உறவையும் நம்மால் நிச்சயம் பேண முடியாது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதால் ஒரு பயனும் ஏற்படாது என்பது எனது கருத்து. கடந்த 60 ஆண்டுகளில் நட்பை வளர்ப்பதற்காகவும், உறவுகளை வலுப்படுத்துதவற்காகவும் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏதாவது பயன் இருந்ததா. இருக்காது. அவர்களுக்கு்ததான் நல்ல உள்ளம் இல்லையே.

சண்டை போட்டுக் கொள்வதில் இந்த இரு நாடுகளுக்கும் விருப்பம் இல்லை. ஆனால் மூன்றாவது நாடு ஒன்றுதான் இந்த இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்பட விடாமல் தடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நாடு இரு நாடுகளையும் இணைய விடாது, நட்பாக இருக்க விடாது.

இந்திய மீடியாக்கள் மிகவும் பொறாமை பிடித்தவை, பாரபட்சத்துடன் கூடியவை. இவர்களுடன் ஒப்பிடிட்டால் பாகிஸ்தான் மீடியாக்கள் நூறு மடங்கு சிறந்தவை என்பது எனது கருத்து. இவர்களால்தான் இரு நாடுகளின் உறவுகளும் கூட சீர்கெட்டுப் போயுள்ளது. இந்திய மக்கள் இப்படி இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் மீடியாக்கள்தான் அனைத்தையும் கெடுக்கின்றன.

அதேபோல பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், பாகிஸ்தான் அணியினர் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதேசமயம், பாகிஸ்தானை வென்று அந்த வெற்றியை, மும்பையில் பலியானவர்களுக்கு காணிக்கை ஆக்குவேன் என்று கெளதம் கம்பீர் கூறியதையும் நான் காட்டமாக கண்டிக்கிறேன். இதெல்லாம் அரசியல் பேச்சு. கம்பீர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது. அவரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. மும்பையில் நடந்த தாக்குதலுக்கு நானோ, அல்லது பாகிஸ்தான் வீர்ர்களா காரணம் என்று கேட்டார் அப்ரிதி.

பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதியின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

அட பைத்தியகாரா? அடுத்தமுறையும் ஐபில்-லில் இடம் கிடைக்காதே உனக்கு!!!

Share this post


Link to post
Share on other sites

அட பைத்தியகாரா? அடுத்தமுறையும் ஐபில்-லில் இடம் கிடைக்காதே உனக்கு!!!

தாலிபான்களிடம் இருந்து தலை தப்புவது முக்கியமா

இல்லை இந்த IPL முக்கியமா

இந்த பாக்கிஸ்தானியர் யாரையும் நாம் நட்பாக கொள்ள முடியாது

மதமா மனித நேயமா என்றால் மதம் பிடித்தவர்கள் மதம் என்று மட்டும் தான் சொல்லுவார்கள்

Share this post


Link to post
Share on other sites

இந்த வருடம்

11 கங்காருகள் கொல்லப்பட்டனர்

11 திவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

11 ராவணன் வம்சாவழியினர் கொல்லப்பட்டனர்

Share this post


Link to post
Share on other sites

இந்த வருடம்

11 கங்காருகள் கொல்லப்பட்டனர்

11 திவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

11 ராவணன் வம்சாவழியினர் கொல்லப்பட்டனர்

அவுஸ்திரேலியா

பாகிஸ்தான்

ஸ்ரீலங்கா என்றால்.... அவர்கள் ராவணன் வம்சாவளி அல்ல...

ராமன் வம்சாவளியினர் என்கிறார்கள். சகோதரப் படுகொலை செய்துவிட்டீர்களே......

Share this post


Link to post
Share on other sites

இந்த வருடம்

11 கங்காருகள் கொல்லப்பட்டனர்

11 திவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

11 ராவணன் வம்சாவழியினர் கொல்லப்பட்டனர்

தலை கால் புரியவில்லை

விபரமா சொல்லுங்கப்பா

Share this post


Link to post
Share on other sites

இவ்வளவு பெரிய ஊழல் செய்யறோமே, மாட்டிக்க மாட்டோமா என்று ஏன் கருணாஸீக்குத்தோணல? அதை ஏன் அவர் ராசா முதலனானோர்க்கு எடுத்துச்சொல்லலை?

வாக்கப் சார், நான் இந்த உலகில் பிறந்து செலவழிக்காத பணமும் இல்லை. சந்திருக்காத வாழ்க்கைத்துன்பங்களும் இல்லை. எங்கே பணம் புரள்கிறதோ அங்கே, துன்பம் என்ற ஒன்று அவர்களைத்தொடர்ந்துசெல்லும் என்பது என் வாழ்க்கை அனுபவம். எவன் பணம் இல்லாமல் வாழ்கிறானோ அவனே உண்மையில் ஒரு சுதந்திர மனிதன். காரணம் அவனால் அவன் மனதை அடக்க முடிகிறது. ஆனாலும் பாருங்கள். பல பணக்காரர்கள் ஊர் மக்களை ஏய்த்து பெரும் பணம் சம்பாதித்திருக்கிறார்கள் அதை நான் என் கண்முன்னே பல தடவை என் அப்பரின் வியாபார நடவடிக்கைகள் மூலம் பார்த்திருக்கிறேன். ஆனால் என் அப்பர் இன்று தன் கடைசிக்காலங்களை என்ணும் நிலையிலும் பணக்காரராகவே வாழுகிறார். ஆனால் நானோ அவரின் இந்த வியாபார நடவடிக்கைகளினை எதிர்த்து குரல் கொடுத்துப்விட்ட காரனத்தினால், அவரின் சப்போர்ட் இல்லாமல் என் சொந்தக்காலில் நின்று வாழ்க்கையில் போராடவேண்டியிருக்கிறது.

கடவுள் இருக்கின்றார் என்று எனக்கு வாதிட ஆசை ஆனால், என் அப்பரைப்போன்று, முதலமைச்சர் கருனாநிதியினையும் அவர்களினது வாரிசுகளின் பணக்கையாடல்களை கூர்ந்துநோக்கும் போது, அப்படியான கடவுள் இல்லையென்று எனக்குள் தெள்ளதெளிவாக படுகிறது. ஆகவே ஏய்ப்பவன் ஏய்ந்துபோவான் என்பது முதுமொழியாக இருந்தும், இன்றுவரை இந்த முதுமொழி பொய்ப்பிக்கப்பட்டதே வரலாறாக இருக்கிறது என்பது மிகவும் மனவருந்தப்படகூடிய செயல்.

ஆகவே கடவுள் என்ற கொள்கையில் சில உண்மையான கண்டிபிடிப்புகள் நானே என் வாழ்க்கையின் ஊடு கண்டுபிடித்துவிட்டேன் என்று கூட சில சமயம் நினைப்பது உண்டு.

இதுதான் நான் கண்ட உண்மை. ஒரு கொள்ளைக்காரன் எவ்வளவும் கொள்ளை அடிக்கலாம் ஏன் கொலையும் செய்யலாம். எல்லாம் அவனுக்கு வெற்றியே, என்றும் அவன் தான் மற்றவர்களை துன்புறுத்தியோ அல்லது அவன் மற்றவர்களை ஏமாற்றியோ பணம் சம்பாதிக்கவில்லை என்று தன் இதயத்தில் நினைக்காதவகையில் தன் இதயத்தினை செயல்படுத்தும் வரை அவன் சந்திரமண்டலத்திலும் போய், காசு அடிக்கலாம் பெரும் கோடிகளாக. எவன் எதையும் கண்டு பயப்பிடுகிறானோ அவன் அழிவுக்கு ஆளாவான்.எவன் பயப்பிடவில்லையோ, அவன் கள்ளன் ஆனாலும் இந்த உலகை ஆள்வான் தைரியமாக.

ஆகவே தான் தெய்வத்தினைக்கண்டு பயப்பிடும் அளவு கொளகையினைக்கொண்ட இந்துமதம் இன்று இடம் வலம் தெரியாமல் அழிந்துகொண்டு செல்லுகிறது...

Share this post


Link to post
Share on other sites

மலிங்கா ஒரு யார்க்கர் கூட போடவில்லை. மெண்டீஸ் விளையாடவில்லை. ரெண்டு விக்கெட் எடுத்தபின் அவ்வளவு ஜரூராக இலங்கை பந்து வீசவில்லை. என்னமோ இருக்கு....

அம்மணமாக‌ வர இருந்த பெண்மணி வாயே திறக்காம இருக்காங்களே.

Share this post


Link to post
Share on other sites

திமுக என்பது தேசதுரோகிகளின் கூடாரம் என்பது சரிதான்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0