Sign in to follow this  
Followers 0
வர்ஷா

மீடியாக்கள் காரணமாம்: சொல்கிறார் கருணாநிதி

Rate this topic:

7 posts in this topic

மீடியாக்கள் காரணமாம்: சொல்கிறார் கருணாநிதி

சென்னை:"மீடியாக்கள் நினைத்தால், யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்' எனக் கருணாநிதி தெரிவித்தார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று மாலை கோபாலபுரம் வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது, ""உலகில், குறிப்பாக இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால், யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்; அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல,'' என்றார்.பின், நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:தயாநிதிக்கு தி.மு.க., துணை நிற்குமா?துணை இருக்கும்.தயாநிதிக்கு ஆதரவாக, கட்சி சார்பில் இதுவரை ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லையே?இதுவரை என்ன நடந்திருக்கு...காங்கிரஸ் சார்பில் யாரேனும் உங்களிடம் பேசினார்களா?இல்லை.தொலைபேசியில் சோனியாவுடன் பேசினீர்களா?தொடர்பு கொள்ளவில்லை.மத்திய அமைச்சரவையிலிருந்து, ராஜா, தயாநிதி ஆகியோர் விலகி விட்டதால், வேறு யாருக்கும் பதவி கேட்பீர்களா?தெரியாது.பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளீர்களாமே?உங்கள் கற்பனை அது.இவ்வாறு கருணாநிதி பதிலளித்தார்.

Share this post


Link to post
Share on other sites

வாசகர்கள் கருத்து

இதே "உங்கள் மீடியால வந்த குடும்ப செய்திக்காக" தானே மதுரையில் மூன்று அப்பாவி பத்திரிக்கை ( உங்கள் வார்த்தையில் மீடியா ) தமிழர்கள் "உங்கள் குடும்பத்து" விசுவாசிகளால் கொல்லப்பட்டனர், ஒரு வேளை அதை காரணமாக சொன்னீர்களோ என்னவோ?

கலைஞர் பேசுறத பாத்தா ரொம்ப டென்சனா இருக்குற மாறி தெரியுது... இருக்காதா பின்ன, ஊருக்குள்ள காலரா( சி.பி.ஐ ரெய்டு )வந்து எல்லாவனும் துண்ட காணும் துணிய காணுமுன்னு ஊர விட்டு ஓடிட்டு இருக்கும் போது பெரியவருக்கு மட்டும் பயம் வராம இருக்குமா? அந்த பயத்தில தான் பெருசு இப்டி ஒளருது...பெரியவரே,நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க இந்த மாதிரி நேரத்தில கண்டிப்பா ஒரு இன்ப சுற்றுலா போயிட்டு வந்தா எல்லாம் சரி ஆயிடும்.சென்னை சென்ட்ரல் ல இருந்து GT எக்ஸ்பிரஸ்,தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் இருக்கு அதுல எதாவது ஒண்ணுல ரிசர்வேஷன் பண்ணிட்டு டெல்லி போய்டுங்க. அங்க இருந்து காசி க்கு போயிட்டு அப்டியே கங்கையில குளிச்சிட்டு வந்திடுங்க. நீங்க பண்ணுன பாவம் எல்லாம் தண்ணியோட தண்ணியா கரைஞ்சி ஓடிடும்...என்னா ஆட்டம் போட்டீங்க தமிழ், தமிழ் ன்னு சொல்லி எங்க தலையில மிளகாய அரச்சி தமிழ தவிர மத்த மொழிய படிக்க விடாம எங்க பொழப்புல மண்ண அள்ளி போட்டீங்க,கேவலம் ஊர விட்டு பொழைக்க எங்கயும் போக முடியாம நொந்து நூடுல்சா ஆனதுதான் மிச்சம். டெல்லியில நம்மள பாத்தாலே வட நாட்டு காரனுங்க மதராசி, மதராசி ன்னு கேவலமா பேசுறதுக்கு முக்கிய காரணமே நீ தான். எல்லா பாவத்துக்கும் சேத்து கடைசி காலத்தில நல்லா அனுபவிச்சிட்டு போ, இப்படி ஒரு சந்தர்ப்பம் யாருக்கும் கெடைக்காது...இவ்வளவு நடந்தும் நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.நிருபர் கேள்வி கேட்டா கேள்விக்கு ஒழுங்கா பதில சொல்ல தெரியாதா?அவங்களுக்கு என்ன உன்னிய மாறி வேலை வெட்டி இல்லன்னு நெனச்சீங்களா?

ஆரூர் ரங - chennai,இந்தியா 2011-07-08 06:48:12 IST Report Abuse

ஆமாம் மீடியா, அதாவது சன் டிவி நினைத்தால் யாரையும் இழிவு படுத்த முடியும்! எப்போதோ பழைய படங்களில் உபயோகித்த பழைய செருப்புக்களை ஊழலில் கொள்ளையடித்து வாங்கியதாகக் காட்டமுடியும்! தீண்டாமையை எதிர்த்துப் போராடிய மதத் தலைவரை பெண் பித்தனாகக் காட்டமுடியும்! தன தலைவனின் மருமகள் நடத்தும் vaelaacheri பள்ளியில் உள்ள கட்டணக் கொள்ளையைப் பற்றி காட்டாமல் அவருக்கு போட்டியாக உள்ள பள்ளிகளில் கொள்ளை நடப்பதாக சித்திரிக்க முடியும்! யாருடைய பெட்ரூமிலோ எடுக்கப்பட்ட நீலப் பட வீடியோவை ஒரே நாளில் நூறு முறை காட்டி விளம்பர வசூல் பண்ண முடியும்! விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்களிடமிருந்து ( லஞ்சத்துக்கு பதிலாக ) காஸ்ட்லி விளம்பரங்களை கோடிகளில் வாங்கிப் போட்டு, மூட்டை கட்ட முடியும்! போட்டி கேபிள் நிறுவனங்களின் கேபிள்களை அறுத்து விரட்டிவிட்டு, தான் மட்டும் ஏகபோகமாக சம்பாதிக்க முடியும்! கஷ்டத்தில் இருக்கும் பட அதிபர்களின் படங்களை அடிமாட்டு விலைக்குப் பிடுங்கி தன் டிவியில் டாப் படமென்று காட்டி விளம்பரம் செய்து ஆட்டயப் போட முடியும்! அதற்கு ஒத்துவராத தயாரிப்பாளர்களை போலீஸ் வைத்து மிரட்ட முடியும்! இடமிருந்தால் ஆதாரங்களுடன் இன்னும் என்னால் எழுத முடியும்

தமிழக டிவி TRP யில் 60 % இவர்களிடம். கேபிள் டிவி யில் ஏகபோகம்! ( இவர்கள் கூற்றுப்படி )அதிக விற்பனை நாளிதழும், வார இதழும் இவர்கள் குடும்ப சொத்து! பின்னர் எந்த மீடியா இவங்களை தோற்க வைத்தது ? பழி ஓரிடம் . பாவம் ஓரிடம்!

இதற்க்கு ஒன்றும் கொறச்சல் இல்லை, நிருபர்கள் கேள்விக்கு மட்டும் ஒரே வரியில் பதில், ஆனால் கேள்வி பதில் அறிக்கையில் மட்டும் நூறு கிலோ மீட்டருக்கு பதில் நீளும். இந்த மீடியாவை வைத்து தான் சமச்சீர் கல்வியை வைத்து அரசியல் செய்கிறீர்கள், இந்த மீடியாவை வைத்து தான் உங்களின் கேள்வி பதில் அறிக்கைகளை தினமும் வெளியிட்டு எங்களை வேதனை படுத்துகிறீர்கள், இந்த மீடியாவை வைத்து தான் ஐயோ கொல்றாங்களே என்று நாடகம் ஆடி 2006 இல் ஆட்சியை பிடித்தீர்கள், ஐந்தே ஊடகங்களை வைத்து தான் அம்மா அவர்களின் செருப்பு, நகைகள், புடவைகளை போட்டு போட்டு காண்பித்தீர்கள், இதே ஊடகத்தை வைத்து தான் அம்மா தவறு செய்ததாக கூறி நிமிடத்திற்கு ஒரு முறை பிரசாரம் செய்கிறீர்கள், இந்த ஊடகத்தை வைத்து தான் 2G விவகாரத்தை மறைத்தீர்கள். கடந்த ஆட்சியில் ஊடங்கங்கள் ஆஹா ஓஹு என்று புகழ்ந்தீர்கள், உங்களுக்கு ஒரு ஆபத்து என்றவுடன் ஊடகங்கள் எளக்காரமாக ஆகிவிட்டது. தமிழகத்தில் உங்கள் குடும்பத்தை சேர்ந்த ஊடகங்கள் தான் அதிகமாக உள்ளது. நக்கீரன் பத்திரிக்கை ராமதாசை விட நூறு மடங்கு நிறம் மாறும் பச்சோந்தி. இப்பொழுதெல்லாம், அதிமுகவுக்கு அடிக்கும் ஜாலரா சத்தம் காதில் ரத்தத்தை வரவழைக்கிறது. தேர்தலுக்கு முன்னாள் அவர்கள் தான் திமுக 140 இடங்கள் கைப்பற்றும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டார்கள், நக்கீரன் கருத்து கணிப்பு எப்பவுமே சரியாக தான் வருமாம், ஆனால் தேர்தல் முடிவு வெளிவந்து ஒரு மணி நேரத்தில் அந்த பத்திரிக்கை முழுவதும் அதிமுக வுக்கு ஜாலரா அடிக்கும் பத்திரிக்கையாக மாறிவிட்டது. அய்யா கருணாநிதி, எங்க அம்மா இன்னும் விளையாட்டை ஆரம்பிக்கவில்லை, இனிமேல் தான் ஆரம்பம், பொறுத்திரும்.

அடி மேல் அடியாக விழுந்துகொண்டு இருப்பதால் இவருக்கு ஏதாவது மறை கழண்டு விட்டதா, என்ன? முதலில் அந்தணர்களை வசை பாடினார். இப்போது மீடியாவை! ஊழல் செய்ய சொன்னது மீடியாவா? நிர்வாகத்தை கவனிக்காது 'மானாட மயிலாட', மற்றும் பாராட்டு கூட்டங்களில் நேரத்தை செலவிடசொன்னது மீடியாவா? வரலாறு காணாத மின்வெட்டுக்கு காரணம் மீடியாவா? குடும்பத்தினர் ஆதிக்கத்தை ஊக்குவித்து தலை கால் புரியாது ஆடசொன்னது மீடியாவா? சைக்கிளில் போகக்கூட வக்கில்லாத கவுன்சிலர்கள் ஸ்கார்பியோ, சுமோ கார்களில் சவாரி செய்துகொண்டு நில அபகரிப்பு, அரிசி கடத்தல், மண் கடத்தல் என்று கொள்ளை அடிக்க சொன்னது மீடியாவா? இரண்டு சாப்பாட்டுக்கு நடுவில் கிடைக்கும் நேரத்தில் உண்ணாவிரதம் இருந்து விட்டு, இலங்கையில் போர் நின்றுவிட்டதாக பொய் சொல்லி அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வீட்டுக்கு ஓடசொன்னது மீடியாவா? மகளை விட்டு விலாவாரியாக நீரா ராடியாவிடம் பேச சொன்னது மீடியாவா? வயதான காலத்தில் வாயாடாது "நோ கமண்ட்ஸ்!' என்று சொல்லி விட்டு சும்மா இருங்கள்! தமிழ் இனத்துக்கு செய்த துரோகம் விஸ்வரூபம் எடுத்து முன் நின்று கை கொட்டி சிரிக்கிறது! ஆட்டம் குளோஸ் என்பதை உணருங்கள்

திமுக தலைவருக்கு ஒரு சில கேள்விகள் ஊடகங்கள் என்று கூறும்பொழுது அதில், உங்கள் குடும்ப தொலைக்காட்சிகளும் (சன் மற்றும் கலைஞர்) அடங்குமா?? நீங்கள் இலவசம் என்ற பெயரில் எங்கள் வரிப்பணத்தை "இலவச வண்ணத் தொலைகாட்சி" என்ற பெயரில் ஊதாரித்தனமாக செலவு செய்தீர்களே, அந்த பெட்டிகள் தாம் தற்பொழுது தங்களுடைய "ஊழல்", "மோசடி", "அராஜகம்", "காட்டு மிராண்டித்தனம்", "தம் குடும்ப நலம்", உங்கள் ஆட்சியில் அரங்கேறிய பல்வேறு "கண்துடைப்பு நாடகங்கள்" போன்ற அத்தனை அத்துமீறல்களையும், தமிழக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துள்ளது. இதே ஊடகங்கள்தான் உங்களை கைது செய்தபொழுது "கொல்றாங்கப்பா" காட்சிகளை மக்களுக்கு கொண்டுசென்று, உங்கள் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதே ஊடகங்கள்தான் அவர்களைப்பற்றிய உங்களது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், எங்களிடம் சேர்த்துள்ளது. இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமாவது நான் உங்களுக்கு சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். "ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை" - உங்கள் குடும்ப தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் உங்களது ஊழல், திரைமறைவு அடாவடிகளை மக்களுக்கு சொல்லவில்லை எனினும், உண்மை செய்திகளை தினமலர் போன்ற நாளிதழ்கள், நித்தம் மக்கள் மன்றத்தில் சேர்ப்பித்துக் கொண்டுதான் உள்ளனர். இவர்கள் வெளிக்கொணரும் உண்மைகளை, ஒட்டுமொத்த திமுக, காங்கிரஸ் மற்றும் உங்களுக்கு "சாமரம்" வீசும் அரசியல் கட்சிகள் நின்றாலும் தடுக்கமுடியாது. தமிழக மக்கள் உங்களுக்கு எதிராக வாக்களித்து, வீழ்த்தியதன் மூலம், உங்கள் ஆட்சியில் தமிழகத்தில், மற்றும் மத்திய அரசில் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள், மோசடிகள் மக்களுக்கு வெளிச்சம் போடப்பட்டு வருகின்றது. மாறாக, நீங்கள் மட்டும் கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால், நிச்சயம் உங்களது அனைத்து மோசடிகளும் மூடி மறைக்கப்பட்டிருக்கும் இந்நேரம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும். ஊடகங்களுக்கு ஒரு சில கேள்விகள்: நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற மற்றும், நடக்கப்போகும் அனைத்து நிகழ்வுகளுக்கும், ஊடகங்களே காரணம் என்று கூறிய திமுக தலைவரை, மீண்டும் பேட்டி எடுக்கச் செல்வீர்களா நீங்கள்?? கொஞ்ச காலத்திற்கு இவரை மட்டுமல்ல, இவரது கட்சியின் உறுப்பினர் எவர் ஒருவர் பேட்டி கொடுத்தாலும், அவர்களை கண்டுகொள்ளாமல் சிலகாலம் விட்டு விலகுங்கள் பார்க்கலாம். திமுக-வினர் செய்த மோசடிகளை வெளிச்சம் போடத் தயங்காமல், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களின் பேட்டிகளுக்கு மட்டும் தடை விதித்துவிடுங்கள். இவர்கள் தப்பித் தவறி நிருபர்களை சந்திக்க ஏற்பாடு செய்தால், வரமாட்டோம் என்று தெளிவாக கூறிவிடுங்கள். ஊடக அன்பர்களே முடியுமா உங்களால்??

அமாம் மீடியா தான் காரணம். தினமலர் போன்ற பத்திரிகை இல்லாவிடில் உங்களை போல் மஞ்சள் துண்டு போர்த்திக்கொண்டு, பகுத்தறிவு பேசி பொண்டாட்டி பிள்ளைகளை காலஹஸ்தி, திருநள்ளாறு கோவில்களுக்கு ரகசியமாக பரிகாரம் செய்ய அனுப்புவது. மற்றும் உங்கள் குடும்பத்தினர் செய்யும் உழல்களை மக்கள் அறியாது இருந்திருப்பர்.

கருணா, சின்ன திருத்தம் "திமுக மீடியாக்கள் நினைத்தால், யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்'" என்று சொல்லவும். இதுதான் உண்மை, மக்கள் நன்கு அறிவார்கள். You are outdated politician. Time for you to take rest. அவ்வளவு பவர் மீடியாவுக்கு இருந்தால், உங்கள் கை வசம் சன் டிவி, கலைஞர் டிவி தான் இருக்கே. அதை வைத்து மக்களை Brain Wash செய்யலாமே. சாத்தியமா? மக்கள் மனதே உண்மையான மீடியா - Virtual Media. உங்கள் கொள்ளை வெளி வந்தது மீடியாவால் தான், நிரா ராடியா Conversation வெளிவந்தது மீடியாவால் தான், உங்கள் Fastest Fasting [உண்ணாவிரதம்] மக்களை தெளியவைத்தது மீடியாவால் தான். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த Fastest Fasting பிரபலமான காரணம் "உங்கள்" மீடியாதான், உண்மை செய்திகளை தினம் தினம் மக்களிடம் இருந்து மறைப்பது உங்கள் மீடியாதான், திகாரில் உங்கள் குடும்பம் நாறியதை மறைத்தது உங்கள் மீடியாதான், அதை வெளியே காட்டியது எங்கள் மீடியாதான். மீடியா மீது நீங்கள் நடத்திய அராஜகம் எங்களுக்கு தெரியும், அதை பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை. இப்பொழுது நான் இந்த கருத்தை சொல்லும் இடம் தினமலர் - இவர்கள் கூட உங்களால் பாதிக்க பட்டவர்கள். தோல்வி அடையும் நேரங்களில் "மானாட மயிலாட" ஒளிபரப்பு செய்வது உங்கள் மீடியாதான். தமிழ் கலாச்சாரத்தை மாற்றுவது உங்கள் மீடியாதான். யார் அந்த தயாளு, மக்களுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் - "How is CM" "hmm.. ok.. fine" என்று reply. இதுதான் மீடியா எங்களுக்கு தந்த வசதி. இதை சொன்னால், உங்களுக்கு ஏன் உறுத்துகிறது. நீங்கள் திருந்தும் ஜன்மம் கிடையாது, சொந்த மீடியா கொண்டு பரவிய தீய சக்தி நீங்கள் தான்.

இனி இவருக்கு டெல்லி என்றால் திகார் தான், ஏற்கனவே, இவரது ஒரு மனைவியின் மகள் கம்பி எண்ணி கொண்டு மெழுகு வர்த்தி செய்து ஜெயிலில் இருக்கிறார், ராஜாவும் சேர்ந்து எண்ணுகிறார், கம்பி,, இவர்களின் எடுபிடிகளும் ஆட்களும் மூன்று பேர் இப்போ சேர்ந்து எண்ணுகிறார்கள், இனி பேரனும் இதோ கம்பி எண்ண புறப்பட்டு விட்டார். ,நம் இந்திய வரலாற்றிலேயே ஏன் உலக வரலாற்றிலேயே, இது போல் ஒரு கேவல குடும்ப வாரிசு ஊழல் கொள்ளை அரசு இருந்திருக்குமா? இந்தியாவிற்கே இந்த கேடு கெட்ட குடும்பத்தினால் கேவலம்.. நீங்கா கறை.. உலகமே நம்மை பார்த்து இப்போ காறி துப்புகிறது. இதற்காகத்தான் இந்த ஊழல் மன்னன் இத்தனை ஆண்டுகள் பாவம் ரத்தத்தின் இரத்தங்களையும்,,, உடன் பிறப்புகளையும் ஏமாற்றி,,ஏமாற்றி தொண்டர்களையும் ஏமாற்றி,,கட்சி பிழைப்பு நடத்தினாரா?? இதில் ஆச்சரியம் என்ன வென்றால் ,,இன்னும் இவர்களின் பேச்சு கேட்டு பழுத்த அரசியல்வாதிகள் அன்பழகன், போன்றோர் இருப்பது தான்,,கூட்டணி கட்சிகளுக்கு கேவலம்,, எந்த முகத்தை வைத்து இனி அரசியல் நடத்துவார்கள்,,, மக்களிடம் எந்த மூஞ்சியை வைத்து ஓட்டு கேட்க புறப்படுவார்கள்.??

இதே மீடியாவ வெச்சு தான ( ஐயோ கொல்றாங்களே & ஜெ யின் தனிப்பட்ட உடைமைகளான காலனி நகைகள் ) காமிச்சு தான நீங்க 2006 ல வந்தீங்க... உங்க கிட்ட காலனி & நகை இல்ல... பரம ஏழை ... அதான் கலைஞர் டிவி, எஸ்டேட், தீவுகள் அப்படின்னு எள்ளுருண்டையா வாங்கி இருக்கீங்க... அப்போது மீடியா மடுவை மலையாக காண்பித்தது... இப்போது இமய மலையை நெல்லிக்காயாக காட்ட மறுக்கிறது..இதே மீடியாக்கள் தான் ஒரு காலத்தில் உங்களுக்கு சாதகமாக இருந்தது . நீங்கள் கொடுத்த இலவச டி வீ உங்களையே அடையாளம் காட்டி விட்டது. தவளை தன் வாயால் கெடும் உங்களுக்கு மிக பொருந்தும்.

திரு.ஊழல் நிதி கூறுவது முற்றிலும் உண்மை. "மீடியாக்கள் " தான் திருடர்கள் முன்னேற்ற கழக வீழ்ச்சிக்கு காரணம். இவர் கோருவது போல "மீடியாக்கள் " துறையில் அமைச்சராக இருந்த தயாநிதியின் , பேராசை மற்றும் திருட்டுத்தனம் , மேலும் கருணாநிதி குடும்பத்தின் "கலைஞர் தொல்லை காட்சி " ஊழலே திருடர்கள் முன்னேற்ற கழக வீழ்ச்சிக்கு காரணம்.

இவ்வளவு ஊழல் ரகளைக்கும் முக்கியமான காரிய கர்த்தா யார்..? இந்த மஞ்ச துண்டு தானே..? எதற்க்காக இந்த துறைதான் வேண்டும் என்று கேட்டு..மறுத்த நிலையிலும்..டெல்லியிலிருந்து "கோபித்து"கொண்டு..சென்னை வந்தார்..மந்திரிகளின் பதவி ஏற்ப்பு நிகழ்ச்சியையும் புறக்கணித்தார்..?!! இவர்க்குத்தான் இந்த ஊழலின் மூளை செயல்பட்டுள்ளது..! கனியை..ராசாவை..தயாநிதியை..இப்படி நொண்டி தின்றவர்களை தண்டிப்பதைவிட...ஒட்டுமொத்தமாய் "முழுங்கி" ஏப்பம் விட்ட இந்த மஞ்ச துண்டாரை தண்டிப்பதுதானே "நீதி"..? அதைத்தானே நாடே சொல்லுகின்றது..!! இவர் கொள்ளையடிப்பாராம்..கோடி கோடியாய் அள்ளி சேர்ப்பாராம்..!! அதனை கண்டுகொள்ள கூடாதாம்..!! அப்போ பத்திரிகைகள் எல்லோரும் திருப்பதி சென்று கீழே கிடப்பதை எண்ணிக்கொண்டு கணக்கை வெளியிட வேண்டியதுதான்..! பேசுகின்ற பேச்சை பாருங்கள்..! ஒரு முறையாவது உருப்படியாய் "பொய்" சொல்லாமல்.."திருடாமல்.." சாரி திருடாமல் என்று சொல்லகூடாது..மரியாதை இல்லை என்பதால்.."கொள்ளை" அடிக்காமல் ஆட்சி செய்தேன் என்று இவரால் சொல்ல முடியுமா? இவரது இந்த பத்திரிகை மீதான கோபமெல்லாம் இப்போதுள்ளபடி "ரத்தம் சுண்டாமல்" இருந்திருந்தால் அலை ஓசை பத்திரிக்கையை துவம்சம் செய்ததுபோல் செய்திருப்பார்..என்ன செய்வது..முன்புபோல் இல்லை பத்திரிகைகள் கண்ணில் விரலை விட்டு நோண்டி எடுக்கும் திறமைசாலிகள் என்பதுதான் இவரது இந்த "ஆத்திரத்திற்கு" காரணம்..! பாவம்.வயதானவர் என்று விட முடியாது.. என்று பத்திரிகைகள் தொடர்ந்து தாக்கும் தாக்குதல் இந்த மரண ஓலத்திற்கு காரணம்..! முதுமை..பயம்..திகார் இவை எல்லாம் வந்துபோவதும்.ஓர் காரணம்..!

தனக்கு ஒரு ஆபத்து வரும்போதுதான், குய்யோ முய்யோ என கூப்பாடு போட்டு ஒப்பாரி வைக்கிறார், இத்தனை நாள் இவர்களின் ஊடகங்கள் செய்தது என்னவோ???? எத்தனை பேரின் வைத்தேரிச்சலை கொட்டிக்கொண்டிருக்கும், அளவுக்கதிகமான ஊடகங்களை வைத்துக்கொண்டு நீங்கள் செய்த அராஜகங்கள் கண்ணனுக்கு தெரியவில்லையா அல்லது கருப்பு கண்ணாடி போட்டு தெரியாமல் மறைதுக் கொண்டீரா??? இவர்களின் ஊடகங்களில் எத்தனை பேரை இழிவுப்படுத்தி, அவமானப்படுத்தி, கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்டார்கள், அப்போதெல்லாம் சொல்லாத வார்த்தை இப்போது வெளிவந்த மர்மம் என்னவோ??? தரம் தாழ்ந்து நடந்தது எல்லாம் மறந்தனவோ??? இனியாவது ஊடகங்களை எப்படி பயன்படுத்துவது என உமக்கு புத்தி வரட்டும்...... தன் வினை தன்னையே சுடும்..... இப்போ சுட்டுருச்சா????? ஐயோ வலிக்குதே.....

Share this post


Link to post
Share on other sites

உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார், அவரின் ஊடகம் மூலமாக ரஞ்சிதாவை அசிங்கப்படுத்தினார் என்பதை..

ஜனநாயகத்தின் நான்காம் தூண் ஊடகங்கள். ஆனால் இவரின் ஆட்சியில் அவை எப்படி வேலை பார்த்தது என்பது ஊருக்கே தெரியும்.. இன்று வரை கலைஞர் டிவியிலோ அல்லது உலகபுகழ் நித்தியானந்தா கலவியை 3 நாட்கள் விடாமல் தொடர்ந்து ஒளிபரப்பியவர்கள். டிவியை போட்டாலே எதோ ஜோதி தியேட்டரில் படம் பார்க்க போனது போல் மானாட மாராட என்று ஒளிபரப்பியவர்கள். இன்று வரை ஒரு இனம் பட்ட துன்பத்தை ஒளிபரப்பு செய்ய தயாரில்லை.. புறக்கணிக்கப் படவேண்டியது தினமலமும், ஹிந்துவும் மட்டுமல்ல சன்னும், கலைஞர் டிவியும் தான்..

Share this post


Link to post
Share on other sites

உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார், அவரின் ஊடகம் மூலமாக ரஞ்சிதாவை அசிங்கப்படுத்தினார் என்பதை..

ஜனநாயகத்தின் நான்காம் தூண் ஊடகங்கள். ஆனால் இவரின் ஆட்சியில் அவை எப்படி வேலை பார்த்தது என்பது ஊருக்கே தெரியும்.. இன்று வரை கலைஞர் டிவியிலோ அல்லது உலகபுகழ் நித்தியானந்தா கலவியை 3 நாட்கள் விடாமல் தொடர்ந்து ஒளிபரப்பியவர்கள். டிவியை போட்டாலே எதோ ஜோதி தியேட்டரில் படம் பார்க்க போனது போல் மானாட மாராட என்று ஒளிபரப்பியவர்கள். இன்று வரை ஒரு இனம் பட்ட துன்பத்தை ஒளிபரப்பு செய்ய தயாரில்லை.. புறக்கணிக்கப் படவேண்டியது தினமலமும், ஹிந்துவும் மட்டுமல்ல சன்னும், கலைஞர் டிவியும் தான்..

மக்களை ஏமாற்றும் ஒருவனுக்கு தண்டனை உண்டு என்று கடவுள் நிரூபித்து விட்டார்.

கருணாநிதி மற்றும் சன் டீவி, கலைஞர் டிவியும் அவரது குடும்பத்தினரின் அராஜக போக்கு யாருக்கும் பிடிக்கவில்லை;

ஆனால் வெளிப்படுத்தமுடியாமல் இருந்தோம். ஆனால், இப்போ கடவுளின் கோபம் அவர் குடும்பத்தினர் மேல் விழுந்து விட்டது.இனியும் இவர்கள் தப்பமுடியாது எல்லோரும், தன் மனசாட்சிக்கு விரோதமா தப்பு செய்து விட்டார்கள் போல

Share this post


Link to post
Share on other sites

தாத்தா...... இப்படி எல்லாம் சொல்லபடாது .... இன்னைய வரைக்கும் சவுத் சைடு லே நம்ம தானே மீடியா வா இருக்கோம்....இன்னைக்கு தினமலர் மாறி ஆளுங்க இல்லாட்டி யார்கிட்ட தான் எங்கள மாரி ஆளுங்க பொலம்புறது ??? எல்லாம் சரி ஆய்டும் தாத்தா நீ ஒன்னும் கவலைப்படாதே இன்னும் எவ்வளோவோ வேலை இருக்கு... அடுத்த சீன் வந்தா நீ டப்பிங் பேச போவனும்....ஐயோ கொல்ல்றாங்கோ... ஆனா இந்த தபா அண்ணன் தயாநிதி பேசுவாரு... அது எப்படி உன் குடும்பத்துல மட்டும் எல்லார் பேரும் நிதி லையே முடியுது ??? எல்லாம் எங்க விதி ....

மிகவும் அருமையான பதில். ஒரே வரியில் நச்சுனு பதில். இவரோட கேள்வி-பதில் அறிக்கைனா பக்கம் பக்கமா பதில் வந்துருக்கும். அது எப்படி "உலகில், குறிப்பாக இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால், யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்; அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல,''. போன 5 வருசமா நீங்க போடாத ஆட்டமா? உங்க ரெண்டு டிவியும் என்ன ஆட்டம் போட்டீங்க. உங்கள பத்தி ஊழல்னு சன் டிவி, கலைஞர் டிவி, உங்க தினசரி பத்திரிகை, உங்க ரேடியோ, etc .... எதுலயாவது வந்துருக்கா? உங்களுக்கு ஒரு ஆள பிடிகலைன்ன அந்த ஆள உங்க டிவில போட்டு நாறடிக்க மாட்டீங்க? உங்க சினிமா மட்டும் தான் டாப் 10ல வரும். மத்த படம் எல்லாம் குப்ப படம் மாதிரி விமர்சனம் வேற. போங்க, போயி லுங்கியும் பனியனும் போட்டு ரெடியா இருங்க. ஐயோ, அம்மானு கத்த practice பண்ணுங்க. இந்தா, வந்துகிட்டே இருக்காங்க ஷூட்டிங் எடுக்க.

Share this post


Link to post
Share on other sites

Sivakumar.M - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2011-07-08 00:45:15 IST Report Abuse

ஒரு கேள்விக்காவது உருப்புடியான பதில் உண்டா? ஆமாம் மீடியாக்கள் காரணம் என்று சொல்கிறார்! இவரோட குடும்பத்தாரும், மாறனும் தங்கள் சொந்த மீடியாக்களை வைத்து கொண்டு பொது மக்களிடம் பொய் பிரச்சாரம் பண்ணியதை என்னவென்று சொல்ல! கடந்த ஐந்து வருசத்துல ஒரு ஆணியையும் புடுங்கல! ஆனா நிமிசத்துக்கு பத்து முறை ஜோரு ஜோருடா!..................................அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது...................முடியல. நானும் மக்கள் ஏமாந்துருவாங்கன்னு நினைச்சேன். நல்லா ரிவட்டு அடிச்சாங்க. 1991 - 1996 க்கு அப்புறம் ஜெயாவை நீங்கள் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமா! ஜெயா போட்ட செருப்பு, புடவை...........இப்படி அனைத்தையும் நாளுக்கு நூறு முறை சன் டிவியில் ஒளிபரப்பியதை யாரும் மறக்கவில்லை. தெரியாமல்தான் கேட்கிறேன். ஒரு நடிகைக்கு அதுவும் முன்னனி நடிகைக்கு இது போன்ற ஆடம்பர பொருட்கள் இருப்பது சகஜமே! இப்போது உங்க கட்சியில இருக்கிற குஸ்பு வீட்டுல போயி பாருங்கள். இதை விட அதிகமாவே இருக்கும். பெண் என்றும் பாராமல் அளவுக்கு அதிகமாகவே ஜெயாவின் வாழக்கையில் விளையாடி விட்டீர்கள். அதற்கான பலனை இப்போது மொத்த குடும்பமே அனுபவிக்கிறீர்கள். மஞ்சள் துண்டு செய்த பாவங்களின் பலன்களை அவர் உயிரோடு இருக்கும்போதே அனுபவிப்பார் என்று ஜெயா சில மாதங்களுக்கு முன் சொன்னது இன்னும் என் நினைவில் உள்ளது. அது இன்று நடக்கிறது. 1991 - 1996 போதிய அனுபவம் இல்லாமை, முதல்வர் பதவிக்கு புதிது, அரசியல் பற்றி முழுமையாக படிக்காமை, உடன் இருந்த அமைச்சர்களை முழுவதும் நம்பியது.......இப்படி அரசியல் முதிர்ச்சி இல்லாமல் சில தவறுகளை ஜெயா செய்தது உண்மை. யாரும் மறுக்கவில்லை. அதுவே அவருக்கு 1996 ல் பெரிய தோல்வியை தந்தது. ஆனால் 2001 - 2006 ல் அதிக நிதி சுமையிலும் மத்திய அரசில் அங்கம் வகிக்காமலே அதாவது மத்திய அரசின் போதிய நிதி உதவி இல்லாமலே நல்லாட்சி செய்தார். ஆதலால்தான் 2006 ல் DMK +காங்கிரஸ்+ PMK +CPI +CPM+IUML+ ஏறக்.......இப்படி வலுவான கூட்டணி மற்றும் விஜயகாந்த் தனித்து நின்று 9 % வாக்குகளை பிரித்தும் மைனாரிட்டி அளவில்தான் DMK வெற்றி பெறமுடிந்தது. வாக்கு சாவடிகளில் திமுகவுக்கு ஆதரவாக அரசு ஊழியர்களின் தில்லு முள்ளு வேறு. திமுக வெற்றிபெற்றது ஜெயாவுக்கு எதிரான அலையால் அல்ல.மக்கள் திமுகவை முழுமையாக நம்பவில்லை. திமுகவின் முக்கிய புள்ளிகள் அன்பழகன், வீராசாமி, ஸ்டாலின்.....................போன்றோர் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றார்கள். எனவே திமுக இந்த தேர்தலோடு அழிந்தது அழிந்ததுதான். இனி எழ வாய்ப்பில்லை.

Kunjumani - Chennai.,இந்தியா 2011-07-08 00:50:17 IST Report Abuse

மீடியாக்கள் நினைத்தால், யாரையும் இழிவுபடுத்திவிட முடியும் வாஸ்தவமான வாதம். அதே மீடியாக்கள் நினைத்தால் யாரை வேண்டுமென்றாலும் உயர்த்தி வைக்கமுடியும் இல்லையா? உங்களை மாதிரி ஊழல் பேர்வழிகளை உயர்த்தி நிற்க வைத்த மீடியா இன்று இழிவுபடுத்தி பார்கிறது. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா, மாட்டு புண்ணாக்கு விழா என்ற கன்றாவிகளையும் நாங்கள் மீடியாக்களில் படிக்கும் துர்பாக்கிய நிலை ஒவ்வொரு தமிழனுக்கும். உங்கள் இனைவியின் மகளுக்கு என்ன தகுதி இருக்கிறது தினசரி செய்திகளில் வர?? அவரை தூக்கி வைத்ததும் இந்த மீடியாவே, அவ்வளவு ஏன் எம் இலங்கை உறவுகள் ( விடுதலை புலிகள் நீங்கலாக ) இன்னல்கள் பல அனுபவித்து கதறியதை இந்த மானம்கெட்ட மீடியா மறைத்தது. ஆனால் உங்கள் இணைவி கண்ணீர் விட்டு கதறியது, வானூர்தி தவறவிட்டது, நீர் இரண்டு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தது என்ற பல முக்கியமான செய்திகளை மக்களிடம் சேர்த்த பொழுது இனித்ததா? மக்கள் உங்கள் கூட்டத்திற்கு ஆப்பு வைக்க தயார் என்பதை உணர்ந்த மீடியாக்கள் உங்களை கைவிட்டுவிட்டன, உங்கள் கூட்டம் செய்த ஊழலால் அவர்கள் இழிவடைந்தனர் என்பதே உண்மை. தமிழர் விரோதி சோனியாவின் கட்சி பாஜாக கட்சியின் முன்னால் அமைச்சரை இந்த ஊழலில் சம்மந்தப்படுத்த பார்த்தது. ஆனால் உண்மையான மிஸ்டர் கிளீன் அருண் ஷோரி மீது குற்றம் சுமத்த முடிந்ததா? உங்கள் கூட்டத்தின் "கை" சுத்தம் அவ்வளவுதான் நீங்கள் உத்தமர் போல மீடியாக்களை சாடுவதினால் ஒரு பயனும் இல்லை. காங்கிரஸ் ஊழலில் ஊறின கட்சி இவ்வளவு நடந்தும் உங்கள் கூட்டணி தொடருவதில் இருந்து உங்கள் யோக்யதை எங்களுக்கு மிக நன்றாக தெரிகிறது. உங்கள் கூட்டம் சுத்தமான கூட்டம் என்றால் கூட்டணியை முறியுங்கள் தமிழர் விரோதி சோனியாவின் ஊழலை வெட்ட வெளிச்சமாக்குங்கள், செய்வீர்களா..?? செய்யமாட்டீர்கள் மேலும் தமிழர் விரோதி ஊழல் ராணி சோனியாவை சொக்கத்தங்கம் என்று அழைத்து பம்முவீர்கள் என்பதே சோகமான உண்மை.

Share this post


Link to post
Share on other sites

S T Rajan - pune,இந்தியா 2011-07-08 07:00:07 IST Report Abuse

அடிக்குறது ஊழல் கொள்ளை .... இதுல தி மு க சப்போர்ட் வேற...... வெட்கமில்ல.......

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0