Sign in to follow this  
Followers 0
வர்ஷா

தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது

Rate this topic:

2 posts in this topic

தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்

wr602322.jpg

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் சிக்கி மத்திய அமைச்சர் பதவியை இழந்து நிற்கும் தயாநிதியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இவருக்கு எதிரான ஆதாரதிரட்டுக்களை சேகரிக்க அதிகாரிகள் ரகசிய பணியை மேற்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை தரக்கூடிய வரலாற்றிலே இல்லாத அளவிற்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்திருப்பது ஸ்பெக்ட்ரம் முறைகேடு. இதில் சொல்லப்படுவது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றும் மற்றொரு தரப்பு 35 ஆயிரம் கோடி என்றும் அறுதியிட்டு சொல்ல முடியாத அளவிற்கு நடந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ., தனது பணியை செவ்வனே செய்து வருகிறது என்று சாமானியர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்த விசாரணை காரணமாக மாஜி அமைச்சர் ராஜா, எம்.பி., கனிமொழி தொலை தொடர்பு, மற்றும் ரிலையன்ஸ் உயர் அதிகாரிகள்என 14 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இந்த விசாரணை நீண்டு கொண்டே போகிறது. அதாவது 2001 முதல் இந்த அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த விவகாரங்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் பணித்தது. இதன் காரணமாக 2001 முதல் மத்திய அமைச்சராக இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் பா.ஜ., காலத்தில் அமைச்சராக இருந்த அருண்ஷோரி மீதான எவ்வித புகாரும் இல்லை என சி.பி.ஐ.,விடுவித்து விட்டது. அடுத்தக்கட்டமாக தயாநிதியை விசாரிக்க முடிவு செய்திருந்த நேரத்தில் ஏர்செல் நிறுவன உரிமையார் சிவசங்கரன் தனக்கு ஏற்பட்ட இழப்பை புகாராக தெரிவிக்க இதுவே தயாநிதியை வழக்கில் சேர்த்துக்கொள்ள கூடிய அளவிற்கு முக்கிய ஆதாராமாக மாறிக்கொண்டது.

முக்கிய 3 அதிகாரிகள் ஆதாரம்: தயாநிதி காலத்தில் இவருக்கு செயலராக இருந்த நிர்பேந்திரமிஸ்ரா, அதிகாரிகள் பி.கே., மிட்டல், மற்றும் குஸ்வாகா ஆகியோர் முக்கிய சாட்சியங்களாக சி.பி.ஐ., கருதுகிறது. இதில் ஒருவர் ஓய்வுபெற்றவர் ஏனைய இருவர் தற்போது பணியில் உள்ளனர். இவர்கள் 3 பேரும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தயாநிதியின் நடவடிக்கை குறித்தும், ஏர்செல் சிவசங்கரன் கொடுத்த விண்ணப்பத்தை 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்டதுமான உண்மை நிலைகளை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர். எங்களின் ஆலோசனையை ஏற்கவில்லை என்றும் குறை கூறியுள்ளனர்.

பிரதமருக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை: இந்த அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இது தயாநிதிக்கு கூடுதல் சிக்கலாக அமைந்துள்ளது. இந்த ஆதாரங்களே தயாநிதியை வழக்கில் சேர்க்க போதுமானது என்றார் ஒரு சி.பி.ஐ., உயர் அதிகாரி. அவர் மேலும் கூறுகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்படும். தயாநிதியை விசாரணைக்கு அழைப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் எவ்வித அனுமதியும் பெற வேண்டியதில்லை. மற்றபடி அவரை கைது செய்வதாக இருந்தால் சபாநாயகருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார். இந்த மாத இறுதிக்குள் மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டியிருப்பதால் தயாநிதிக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார் என தெரிகிறது.

பிரதமருக்கு கடிதம் எழுதியது ஏன்? இவர் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதில் தமது துறையில் எடுக்கும் முடிவுகளில் பிரதமர் அ<லுவலகம் தலையிட வேண்டாம் என்றும் தன்னிச்சையாக முடிவு எடுக்க அனுமதிக்கவும் கோரியிருந்தார். இதுவும் இவர் குற்றம் புரிய தமது அதிகார வரம்பை பயன்படுத்த முனைந்துள்ளார் என சி.பி.ஐ., கருதுகிறது.

Share this post


Link to post
Share on other sites

என்றைக்கு திஹார் பயணம் தயா?

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0