Sign in to follow this  
Followers 0
அஸ்ஸாஞ்

கொஞ்சம் தயக்கத்தோடும், நிறைய வருத்தத்தோடும்...

Rate this topic:

4 posts in this topic

கொஞ்சம் தயக்கத்தோடும், நிறைய வருத்தத்தோடும்...

எனதருமை தமிழீழச் சொந்தங்களே!

கொஞ்சம் தயக்கத்தோடும், நிறைய வருத்தத்தோடும் உங்களிடம் இதனைப் பேசத் துணிகிறோம். இதைப் பேசுகிற உரிமை எமக்கிருக்கிறதென்றும் கருதுகிறோம். இதனால் எம்மீது உங்களில் சிலருக்கும், எம்மில் சிலருக்கும் கூட வருத்தம் உண்டாகலாம். ஆயினும் யாரேனும் ஒருவர் இது குறித்துப் பேசியே ஆகவேண்டும்.

தமிழக அரசியலில் யார் யார் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி அருள்கூர்ந்து நீங்கள் கருத்து தெரிவிக்காதீர்கள். இனப்பாசத்தின் அடிப்படையில், எம் உறவுகள் என்ற அடிப்படையில், தமிழனுக்கென ஒரு கொடி உலக அரங்கில் பறக்கட்டும் என்ற ஆசையில் தமிழீழத்துக்கான எங்கள் ஆதரவு அமைகிறது. அதே வேளையில் எம் தமிழ்நாட்டின் நிலைக்கேற்ப, எங்களின் தேவைகளுக்கேற்ப, இங்குள்ள சூழல்களைப் பொறுத்து யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பது எங்கள் விருப்பம்.

அதை விடுத்து, உங்கள் விருப்பத்திற்கு செயல்படவில்லை என்பதற்காக கலைஞரைத் திட்டுவது, ஆசிரியர் வீரமணியைத் திட்டுவது, திருமாவை, சுப.வீ-யைத் திட்டுவது, தரக்குறைவாகப் பேசுவது என்று நீண்ட உங்கள் பட்டியல், இப்போது வைகோ வரை வந்திருக்கிறது. தெளிவாகச் சொல்கிறோம்... உங்களுக்காக நாங்கள் இயக்கம் தொடங்கவில்லை. எமது அடிமைச் சூழல்களுக்கு மத்தியில் தான் ஈழத்தமிழர்க்கான எங்கள் குரலும் ஓங்கி ஒலிக்கிறது. கடந்த 30 ஆண்டு காலத்தில் எமக்கான போராட்டங்களைவிட தமிழீழத்திற்கான போராட்டம் தான் தமிழ்நாட்டில் அதிகம்.

(2008-இல் Srilanka Guardian-இன் பார்வையில் ’தமிழ்நாட்டில் தமிழீழ அரசியல்’. Terror என்று அவன் தேசியத் தலைவரைக் குறிப்பிடுகிறான். மற்ற தலைவர்களை அதைக்கொண்டு வகைப்படுத்துகிறான். இதில் Terror என்ற வார்த்தையிலும், Victim of Terror, Forgetting terror- நபர்களிலும் நான் ஒத்துப் போகவில்லை.)

எப்படி சிங்களத்தின் கொடுமையை நாங்கள் நேரடியாக அனுபவித்ததில்லையோ (மீனவர் படுகொலை தவிர்த்து), அதே போல் இங்கிருக்கிற பார்ப்பனியக் கொடுவிஷத்தின் கொடுமைகளை நீங்கள் நேரடியாக அனுபவித்ததில்லை.

ஆனால் ஈழத் தமிழினத்தின் அழிவில் எந்த ஒரு தனி இயக்கத்துக்கும்(காங்கிரஸ்), தனிப்பட்ட மனிதருக்கும் இருக்கும் பங்கை விட ஆயிரம் மடங்கு வேகமாகவும், ஆழமாகவும் பார்ப்பனியத்தின் பணி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பார்ப்பனியமே இவர்களை இயக்குகிறது. இயக்கங்களைப் பிரிப்பதும், மக்களைத் திசை திருப்புவதும், பார்ப்பனியமே. அதன் பல்வேறு கரங்கள் தான் உளவுத்துறையும், ஊடகங்களும்.

இப்படி ஈழத் தமிழர்களையும் சேர்த்து, எம் மக்கள் புரிந்துகொள்ள விரும்பாத, கண்ணுக்குத் தெரியாமல் போரிடும் எதிரியுடன் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதில் எம்முடன் கரம் கோர்த்து போராட வேண்டிய நீங்கள், எமக்கெதிராக கட்சிகட்டி நிற்பது எவ்வகையில் சரியானது.

இதில் இன்னொரு பெரும் கொடுமையாக, ஆயிரம் ராஜபக்சேவுக்கு நிகரான மோடி என்னும் கொடுங்கோலனுக்கு அத்தனை பார்ப்பன ஊடகங்களும் ஆதரவுக் கரம் நீட்டிக் கொண்டிருக்க, அவனைப் போன்ற எண்ணற்ற வெறியர்களின் கூடாரமாகத் திகழும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும், அதன் கிளைகளும் இந்த நாட்டையே விழுங்கத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு எதிராக நாங்கள் எப்படி வியூகம் வகுப்பது, அணி திரட்டுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆத்திரத்தால் அறிவிழந்த சிலர் மோடியைப் பாராட்டுவதையும், பா.ஜ.க-வைப் பாராட்டுவதையும், அதை ஈழத் தமிழர்களின் பேரால் செய்வதும் வெந்த புண்ணில் சூலாயுதத்தைப் பாய்ச்சுவதாகும்.

எம் தமிழ்நாட்டு மக்களின் விடியலுக்காக இயக்கம் நடத்துகிற நாங்கள், எம்மினம் என்கிற துடிப்பில் உங்களுக்குக் கரம் தர முன்வருகிறோம். அத்தகைய சூழலிலும் நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்ற தொனியில் எங்களுக்குக் கட்டளை விதிப்பதும், உணர்வோடு கரம் தருவோரை, தமிழக அரசியலில் அவர்களது நிலைப்பாடு குறித்து விமர்சனம் எழுப்பி தட்டி விடுவதும் அறிவார்ந்த செயல் ஆகுமா?

சகோதர யுத்தம் என்று தப்பித் தவறி யாராவது பேசினாலோ, ஈழத்தில் ஜாதிப் பிரச்சினை என்று தமிழகத் தமிழர்கள் யாராவது பேசிவிட்டாலோ கூட ”உங்களுக்கென்ன தெரியும், தமிழகத்தோடு எங்கள் சூழலை ஒப்பிடாதீர்கள்” என்று கொதித்துக் கொந்தளிக்கும் எம் ஈழச் சொந்தங்களே! எங்களின் அரசியல் நிலை உங்களுக்கென்ன தெரியும் என்று நாங்கள் கேட்கிறோம். (நாளை ஈழம் விடிந்தால் அங்கு ஜாதி ரீதியாக ஒடுக்கப்படும் குரல் எழுந்தாலும் நிச்சயம் நிலைமையைப் புரிந்துகொண்டு எங்கள் குரல் இருக்கும் என்பது ஒரு பக்கம்)

தனக்கான இடஒதுக்கீட்டு உரிமைக்குக் கூட சேர்ந்து போராடாத எம் தமிழ்நாட்டு இளைஞன் பெருமளவில் உணர்வோடு திரண்டது ஈழத் தமிழர் படுகொலைகளைக் கண்டித்துத் தான்! அப்படி ஒன்று சேர்ந்தவர்களும் உள்ளூர் அரசியல் நுழைந்தால் பிரிந்துவிடுவார்கள் என்ற கவலைதான் எங்களுக்கு!

ஈழப்பிரச்சினையைப் பயன்படுத்தி பலன் அனுபவிக்கத் துடிக்கும் கும்பலும் இங்கு இல்லாமல் இல்லை. கடந்த தேர்தலில் தமிழர்கள் அங்கு செத்துக் கொண்டிருந்த நேரத்திலும், எங்களுக்கு ஆதரவாய் ஓர் அறிக்கை விட்டால் ஒரே பிடுங்காகப் பிடுங்கிவிடுவோம் என்று வாக்கு சேகரிக்க உங்களைக் கொண்டு வந்து நிறுத்த முயற்சித்தது யார் என்று யோசியுங்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே ஈழப்பிரச்சினையை வைத்து அரசியல் லாபம் பார்க்கத் துடித்தவர்கள் தோல்வியுற்றார்கள்.

ஏற்கெனவே, சமூகப் பார்வை கொண்டவர்கள், அரசியலில், பொதுவாழ்வில் இருப்பவர்களில், பார்ப்பனர்கள், காங்கிரஸ்காரன், தேசிய அரசியல் பேசுபவன், பெரும்பான்மை பொதுவுடைமைத் தோழன், அ.தி.மு.க போன்றோர் ஈழப்பிரச்சினை பேசுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் எப்போதுமே எதிர் நிலைப்பாடு கொண்டவர்கள்.

மிச்சமிருக்கும் சமுதாய இயக்கங்களான திராவிடர் கழகம் உள்ளிட்டவை, அரசியல் இயக்கங்களான தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க, வி.சி, இவற்றோடு, என்றைக்கும் தங்களுக்குள் ஒன்று சேர விரும்பாத கணக்கிலடங்கா தனிநபர் தமிழ்தேசியக் கட்சிகள் இவைதான் ஈழத் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவை. இதிலும் தி.மு.க - நேரடியாக புலிகளை ஆதரிக்காத இயக்கம்; ஆனால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் (இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்; இன்று பெயரளவில்தான் என்று நீங்கள் சொல்லலாம்) குரல் கொடுக்கும் இயக்கம்.

’நாங்கள் போராடிய அளவுக்காவது 2008-க்கு முன் புலம்பெயர் தமிழர்கள் களம் கண்டிருக்கிறார்களா’ என்ற கேள்வியும் கூட, புலம்பெயர் தேசத்தில் அதற்கான வாய்ப்பில்லை என்பதை நாங்கள் உணர்ந்த காரணத்தால் எம்மிடமிருந்து எழவில்லை.

ஆனால், இவர்களையும் இழக்கும் விதத்தில் அண்மைக் காலமாக பலரது பேச்சு இருந்துகொண்டிருக்கிறது. இப்படி எரிச்சலைக் கிளப்பும் வகையில் பேசச் செய்து, தமிழகத்தில் ஈழத் தமிழர்க்கான மக்கள் இயக்கங்களின் குரலை ஒழித்துவிடலாம் என்பதும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சியாக இருக்கலாம். இதில் அருள்கூர்ந்து ஈழத் தமிழர்கள் சிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்போதைக்கு இது போதும், தேவைப்பட்டால் பிறகு விரிவாகப் பேசுவோம்.

ஏதோ சிலரின் அறிவற்ற பேச்சுக்காக, தமிழீழத்திற்கான ஆதரவுக் குரலையும், உணர்வையும் எங்களிடமிருந்து பிரித்துவிட முடியாது. ஏனெனில் உங்களுக்காகப் போராடுகிறோமே தவிர, உங்களைக் கேட்டுக் கொண்டு நாங்கள் போராடவரவில்லை.

நீங்கள் திட்டினாலோ, எங்களைத் துரோகி என்றாலோ நாங்கள் போராடாமல் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில், உங்களிடம் இருந்து எந்த பலனையும் எதிர்பார்க்காதவர்கள் நாங்கள். அதனால் தான் கேட்கிறோம், குறைந்தபட்சம் உங்கள் நலனை முன்னிட்டாவது, எமக்குள் இருக்கும் அரசியல் பிரிவினைகளுக்குள் நுழையாதீர்கள். பிறகு அதில் நசுங்கி ஒடுங்கப் போவது ஈழ ஆதரவு உணர்வுதான்!

Share this post


Link to post
Share on other sites

இக்கட்டுரையை நான் 100சதவீதம் ஆதரிக்கிறேன்...

கலைஞரையும் அவரின் ஆதரவாளர்களையும் வசைபாடும் பார்ப்பனகூட்டத்திற்கு கொடி பிடிக்கும் கூட்டமாக ஈழத்தமிழர்களும், ஈழத்தமிழர்களின் களங்களும், பார்ப்பன அடிவருடிகளின் ஆதரவாளர்களாக மாறிவிட்டது காலத்தின் கோலம்.

Share this post


Link to post
Share on other sites

இக்கட்டுரையை நான் 100சதவீதம் ஆதரிக்கிறேன்...

கலைஞரையும் அவரின் ஆதரவாளர்களையும் வசைபாடும் பார்ப்பனகூட்டத்திற்கு கொடி பிடிக்கும் கூட்டமாக ஈழத்தமிழர்களும், ஈழத்தமிழர்களின் களங்களும், பார்ப்பன அடிவருடிகளின் ஆதரவாளர்களாக மாறிவிட்டது காலத்தின் கோலம்.

அலோ அஸ்ஸாஞ் , இதெல்லாம் ராசதந்திரம் .

Share this post


Link to post
Share on other sites

பிரின்ஸ் என் ஆர் சாமா

அடுத்தவர் பதிவை எடுத்து பதியும் பொழுது மறக்காமல் லிங்கையும் கொடுக்கவும்.. அதில் ஒரு பின்னூட்டம்..

சகோதரரே உங்கள் பதிவிற்கு நன்றிகள். உங்கள் ஈழ ஆதரவுக்க நன்றிகள்.

ஏதோ ஒன்றிரண்டு தமிழ் உணர்வாளர்களின் உயிரில் நீங்கள் குளிர் காய்கின்றீர்கள் என்பதே உண்மை. நீஙகள் எழுதியிருப்பது போல புலம் பெயர் தமிழரின் பங்களிப்பை கொச்சைப்படுத்த வேண்டாம். அதற்கு நீங்கள் தகுதியானவர்களும் அல்ல.

60 வருடகால தமிழின அழிவில் திரு எம்.ஜீயார் அவர்களும் திருமதி இந்திரா அம்மையாரும் மட்டுமே உண்மையான கரிசனையைக் காட்டினார்கள். அதிலும் இந்திரா அம்மையார் அரசியலையும் கலந்தே எமக்கு ஆதரவளித்தார். அதற்குப் பின் வந்தவர்கள் அனைவரும் தமது அசிங்க அரசியலுக்காவே எமது அழிவையும் கண்ணீரையும் பயன்படுத்தினார்கள். இது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்து சகோதரர்களே உங்களிடம் அன்றும் இன்றும் கேட்பது ஓன்றே. எமது பிரச்சனைகளை எம்மால் தீர்த்துக் கொள்ள முடியும்.எமக்கு அப்படிப்பட்டதொரு தலைவன் கிட்டியிருக்கின்றான். அவன் இருகின்றான். அவன் வழியில் எம் துன்பங்களுக்கு விடிவு கிட்டும் என்பதனை இந்த நிமிடம் வரை உறுதியாக மிக மிக உறுதியாக நம்புகின்றோம். உங்கள் அரசியல் கோமாளிகளை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள். எமக்கு உங்கள் நாற்காலிக் கனவுகளுடனான முதலைக் கண்ணீர் ஆதரவு தேவையில்லை. தயவு செய்து தயவு செய்து மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். எமது அவலங்களை உங்கள் சுயநலன்களுக்காய் உபயோகிக்காதீர்.

இந்திய நாய்களோ அல்லது ஒன்று சேர்ந்த மற்றைய கொலைவெறி நாடுகளோ சிங்கள கொடூங்கோலனுக்கு உதவியிருக்காவிடின் எம் மண்ணை நாம் இழக்க வேண்டிய நிலை வந்திருக்காது. ஒரு அங்குல நிலம் கூட பறிபோயிருக்காது. ஒரு உண்ணத தலைவனின் வழிகாட்டலில் ஒரு முதற்தர உண்ணதமான தமிழ் சமூதாயம் உருவாகியிருக்கும்.எம் அழிவிற்கு மூலகாரணமானவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள். இது உறுதி. நாம் இலவசங்களுக்கா எமது கோவணங்களை இழக்கத் தயாரான தமிழர்கள் அல்ல.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0