Sign in to follow this  
Followers 0
அஸ்ஸாஞ்

வைராக்கியமே! உன் மறுபெயர் கலைஞரா?

Rate this topic:

4 posts in this topic

வைராக்கியமே! உன் மறுபெயர் கலைஞரா?

"எல்லா வழக்குகளும் போட்டு விட்டீர்கள். கொலை முயற்சி வழக்கும் போட்டாகி விட்டது. கொலை வழக்குத் தான் பாக்கி. அதையும் போடுங்கள். தூக்குத் தண்டனை கொடுத்து ஒரு வேளை நான் இறந்து போய் விட்டால் என்னவோ..... ஆயுள் தண்டனை கொடுத்தால் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகாவது வெளியே வருவேனா மாட்டேனா? சந்திக்கி றேன் எல்லோரையும்....’’ என்றார் தலைவர் கலைஞர்.

இப்படி சொல்லி ஏறத்தாழ - ஆண்டுகளாகி விட்டன. அரை நூற்றாண் டுக்கு சில ஆண்டுகள் தான் பாக்கி!

அப்போது கலைஞர் ஒரு மணிநேரத்திற்கு மேல் நடப்பார் யாருடைய துணையுமின்றி! உணவு உண்ணுவதற்கு நேரம் - காலம் கிடையாது. கிடைத்த உணவைச் சாப்பிடுவார். ஓய்வு கொள்வதற்கு நல்ல தங்கும் விடுதிகள் எதிர் பார்த்ததில்லை. சீர்காழியில் ஒரு முறை அவருக்கு தங்கும் விடுதியே மறுக்கப்பட்ட காரணத்தால் மதிய உணவுக்குப் பிறகு மாலை நிகழ்ச்சி வரை நேரத்தைக் கடத்துவதற்கு ஒரு திரைப்படக் கொட்டகையில் படம் பார்த்துக்கொண்டு நேரத்தைக் கழித்தார்.

அவருக்கு கார் ஓட்டியவனெல்லாம் வீடு வரை சென்று அவரை விட்டு விட்டுப் போவதற்குக் கூட முடியாமல் காரோடு அவரை நடு வீதியில் விட்டு விட்டு ஓடினான். அப்படி ஒரு நெருக்கடி அவனுக்கு காவல் துறையினரால்.

அவருக்கு கார் ஓட்ட உதவிக்கு வந்தவர்கள் எல்லாம், என்று விடுதலை என்று தெரியாத காரா கிரஹத்திற்குள்ளே அடைக்கப்பட்டார்கள். அவருக்குத் தொண்டு செய்யவும் - துணை நிற்கவும் தோள் உயர்த்திய தளகர்த்தர் கள் எல்லாம் தமிழ்நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் முடக்கப் பட்டிருந்தனர்.. இயங்க முடியாமல் அடக்கப் பட்டிருந்தார்கள். அவருடைய குடும்பத்தில் ஒருவர் - அவருடைய மகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சோதனை என்ற பெயரால் அவருடைய குடும்பத்து பெண்கள் அவமானப்படுத்தப்பட்டார் கள். எப்போதும் நண்பர்களும் - தொண்டர்களும் புடை சூழ அவர்களோடு - (உணவு உண்ணவில்லை என்றாலும் கூட) உரையாடு வதையே உற்சாகத்திற்குரிய மருந்தாக இன்றும் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் தனிமைப் படுத்தப்பட்டார். இவைக ளெல்லாம் பழங்கதைகள் என்று புறம் தள்ளி விட முடியவில்லை. ஒரு காயத்தையே ஒரு சிலரால் மறக்க முடியவில்லை யாம். நமக்குத்தான் எத்தனை காயங்கள்? அந்த மூத்த தலைவருக்குத் தான் எத்தனை முதுகுக் குத்தல்கள்?

ஆனால் அத்தனைக்கும் அவர் ஈடுகொடுத்தார். இமயமலையின் பேரில் எத்தனை இடி கள் விழுந்தால் என்ன? இடிகள்தான் செயலற்றுப் போயிருக்கின்றனவே தவிர இமயம் இமயமாகவே இருக்கிறது!

இத்தனையும் நடந்தது 1976 -ல். தமிழகத்தினுடைய சிறைச்சாலையில் செல்வந்தர்களான தி.மு.க. தொண்டர்கள் மட்டும் சிறையில் இல்லை. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் களும் இருந்தார்கள். அன்றாட ஜீவனத்திற்கே அல்லப்பட்டுக் கொண்டிருந்த ஏழைகள் இருந்தார்கள். சம்பாதிக்கின்ற குடும்பத் தலைவர்கள் சிறையில் இருந்த காரணத்தினால் பல ஏழைத் தொண்டர்களின் குடும்பங்கள் வறுமையின் விளிம்பிற்கே வந்து விட்டன. வெளியே சொல்ல முடியாத துன்பங்கள் - துயரங்கள்!

துணி சலவை செய்யும் கடையில் தினக் கூலியாக வேலை செய்து கொண்டிருந்த இந்தி எதிர்ப்புப் போர் வீரன் திருச்சி கரிகாலனும் இருந்தான். அன்றாட ஊதியத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த தொண்டன் கோபாலகிருஷ்ண னும் இருந்தான். அன்றைக்கு சிறிய தேநீர் கடையின் சொந்தக்காரரான திருவாரூர் ஜான் சிறையில் இருந்தார். இதைப் போல் பலர்! ஆனால் இவர்களை எல்லாம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பொருளாதாரக் குற்ற வாளிகள் என்று நம்முடைய அகில இந்திய வானொலி அன்றாடம் சொல்லிக் கொண்டி ருந்தது. இந்த ஜானின் மருமகன் தான் வரப்போகின்ற தேர்தலில் திருவாரூருக்கு நகர் மன்றத் தலைவர் வேட்பாளர். இதை நினைந்து செய்ய தொண்டர் நாயகன் கலைஞரைத் தவிர வேறு யாரால் முடியும்?

திருச்சி மிசா சிறையில் இருந்த திருச்சி - தஞ்சை - புதுக்கோட்டை மாவட்ட தி.க.- தி.மு.க. தோழர்களில் பலர் சோறு உண்ணுகிற போது கூட வழிகிற கண்ணீர் வெளியே தெரியாமல் அரைகுறையாக மென்று விழுங்குவார்கள். காரணம் கேட்டால் அழுகையால் தொண்டை அடைக்க, "நாங்கள் எப்படியோ இங்கே சாப்பிடுகிறோம். வெளியே என் குடும்பம் சோற்றுக்கு என்ன செய்கிறதோ?" என்று கலங்குவார்கள். இவை களைக் கண்டும் கேட்டும் கலங்காத கண்கள் கண்களல்ல. இளகாத நெஞ்சம் நெஞ்சமல்ல. இந்த நெருக்கடி நிலை ஓரிரு மாதங்கள்தான்.

கல்லுக்குள்ளே இருக்கிற தேரைக்கும் - கருப்பையிலே இருக்கிற உயிருக்கும் எங்கோ இருக்கின்ற கண்ணுக்குத் தெரியாத இறைவன்தான் உணவளிப்பதாக பக்தர்கள் பாடு வார்கள். பாவம் அவர்கள் உடல் கூறு விஞ்ஞானம் தெரியாதவர்கள்.

ஆனால் சிறைக் கம்பிகளுக்குள்ளே தங்கள் குடும்பங்களின் வறுமையை நினைத்து ஊமையின் கனவு போல் உள்ளே புழுங்கிக்கொண்டிருந்த அந்தக் குடும்பங்களுக்கு எல்லாம் கலைஞர் மாதம் தோறும் உதவித் தொகை வழங்கினார். சிறையிலே இருந்த தொண்டர் களின் குடும்பம் பட்டினி கிடக்காமல் யாரிடமும் கையேந்தாமல் கஞ்சி குடித்தது.

இதற்கு ஏது பணம்? தி.மு.க. பல வகையாலும் முடக்கப் பட்டிருந்த நேரம். கலைஞர் தானே கையேந்தினார். நாடெங்கும் இருந்த நல்ல உள்ளங்கள் அவருக்கு உதவின. தன் தொண்டன் கையேந்தாமல் இருப்பதற்காக தான் கையேந்திய தலைவன் இந்தியாவின் மக்கள் நாயகன், வரலாற்றில் கடந்த இரு நூறு ஆண்டுகளில் தலைவர் கலைஞர் மட்டும் தான். அண்ணல் காந்தியடிகள் மறக்க முடியாத மாபெரும் தலைவர். அவர்கூட இதனைச் செய்ததில்லை. காரணம் அவர் எதிர்கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவரை அந்த நிலைக்குத் தள்ளவில்லை. சிறைக் கைதியான அண்ணல் காந்தியடிகளைக் கூட அவர் மனைவியோடு ஆஹாகான் அரண் மனையில்தான் வெள்ளைக்கார கொடுங்கோலர்கள் சிறை வைத்திருந்தனர்.

கலைஞருக்கு இப்பேர்ப்பட்ட வரலாற்று அங்கீகாரம் கிடைப்பதற்குக் காரணமானவர் களை நாமே மறந்தாலும் ``சர்வ வல்லமையுள்ள கடவுள்(?)’’ மறக்க மாட்டார்.

இப்போதும் அதே நிலை! அன்று கலைஞரின் மகன் சிறையில். இப்போது அவருடைய மகள் சிறையில். இன்றும் அவருடைய துணைவியார் இடத்தில் சோதனை. புண்ணி யத்தை ``அம்மா’’ கட்டிக் கொண்டிருக்கிறார்.

முக்கிய தளபதிகள் எல்லாம் சிறைச்சாலையில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். இடைத் தேர்தல் நடக்க இருக்கின்ற திருச்சியில் வேட்பாளர் கே.என்.நேரு தொடங்கி பெரும் பாலான பொறுப்பாளர்கள் சிறையில் இருக்கிறார்கள். அடுத்தது நீ தான் ``அடுத்தது நீ தான்’’ என்று நேரிலும் - தொலைபேசியிலும் அதிகாரிகள் மிரட்டல். அப்போது ஓராண்டு சிறையில் வைக்கும் மிசா. இப்போது குண்டானவர்களால் சுமத்தப்படும் குண்டர்கள் சட்டம். வெறும் வழக்குகளே கிடையாது. எல்லாம் கொலை வழக்குகள்.

இந்தச் சூழலில் அவசர அவசரமாக உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிப்பு. கடந்த பத்து நாட்களாக அறிவாலயத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். குண்டர் சட்டமும் கொலை வழக்குகளும் தி.மு.க. தொண்டனை மிரட்ட வில்லை. கலைஞர் ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் இருந்த அதே கலைஞராய் ஊக்கம் குறையாமல் - உற்சாகம் குறையாமல் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே சர்வ மகா பாவங்களுக்கு உரியவர்களானவர்கள் நிறுவியிருக்கும் சக்கர வியூகத்தை உடைத்து நொறுக்க களமிறங்கி யிருக்கிறார்.

காலையில் நான்கு மணி நேரம் - மாலையில் நான்கு மணி நேரம் ஒவ்வொரு மாவட்டத் தவரையும் அழைத்து வேட்பாளர்கள் பட்டியலை அவர் - தளபதியின் துணையோடு - உறுதியாக்கிய அந்தப் பாங்கைக் கண்டு நான் மெய் சிலிர்த்துப் போனேன். நாளொன் றுக்கு எட்டு மணி நேரம் உட்கார்ந் திருந்த இடத்திலேயே - வெறும் திரவ உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு இது எப்படி சாத்தியம்? அதே உத்வேகம். அதே கூர்மை. இறுக்கத்தை நீக்க இடையிடையே நகைக்சுவை வெடிகள். இவர் யாதுமாகி நிற்கிறவர். உடலுக்குதான் வயது! உற்சாகத்திற்கு உறுதிக்கு, உத்வேகத்திற்கு, வைராக்கியத்திற்கு வயதேது!

திருச்சி வேட்பாளர் சிறையில். அவருக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தவர் தொண்டர் நாதனின் பிள்ளை! திருச்சி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய தளபதி ஸ்டாலின் புறப்பட்டுப் போனார். பெரிய முன்னறி விப்புக்கள் இல்லை. விளம்பரங்கள் இல்லை. மேற்கு தொகுதி வாக்காளர்களில் பெரும் பகுதி அங்கே நின்றார்கள். தொழில் நிமித்தமும் - வெளியூரில் பணியாற்றும் பிள்ளைகளோடும் வாழவும் போய் விட்ட திருச்சி வாக்காளர்களான பல மூத்த தொண்டர்களை அந்தக் கடும் வெயிலில் பார்த்தேன். அறிவிப்பு இல்லாத ஒரு பெரிய ஊர்வலம் தளபதியின் பின்னால்.

``என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’’ என்று பாரதி பாடினான். அன்றைக்கு திருச்சியில் புதுப்பாட்டு பாடினார்கள். "என்றும் தணியாது எங்கள் போர்க் குண தாகம், என்றும் மடியாது எங்கள் அநீதியை எதிர்க்கும் வேகம்.’’

Share this post


Link to post
Share on other sites

அப்படியிருந்த தலிவர் இப்படி ஆகிட்டாரே.. :பெப்பெப்பே:

Share this post


Link to post
Share on other sites

என்னோட பதிவுக்கு ஜலம் எழுதிய பதிலின் அர்த்தம் என்ன...?யாருக்காவது புரியுதா...?

Share this post


Link to post
Share on other sites

என்ன சார் இது புரியலையா?

ஒரு காலத்துல மக்களுக்காக சாப்பாடு கூட இல்லாம உழைத்த தலைவர், இப்போ குடும்பத்துக்காகவும், பதவிக்காகவும், 4 மணி நேர உண்ணாவிரத டிராமா எல்லாம் போடும்படியாகிடுச்சே... அத சொன்னேன்... இது எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும், உங்களுக்கு புரியலைனு சொல்லுவது ஆச்சரியமா இருக்க்கு

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0