Sign in to follow this  
Followers 0
அஸ்ஸாஞ்

காலந்தோறும் பிராமணியம்

Rate this topic:

1 post in this topic

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

காலந்தோறும் பிராமணியம்

ஆதித்த கரிகாலன் கொலைக்கு யார் காரணம்?

அனைத்துச் சோழ மன்னர்களும் சைவம் _ வைணவம் என்று பிராமணிய மதத்தை மட்டுமே ஆதரித்து வந்தவர்கள் என்றும் கூற முடியாது. சில விதிவிலக்குகளும் உண்டு. சுந்தர சோழன் அப்படியொருவன். தற்போதய தென்னாற்-காடு மாவட்டத்தில் உள்ள உலகபுரம் எனும் ஊரில் சுதந்தர சோழப் பெரும்பள்ளி என்ற பவுத்தக் கோயில் இருந்ததாகக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இவன் சமண_புத்த சமயங்கள் பால் மாச்சரியம் இல்லாமலிருந்தான் என்கின்றன வீழ சோழிய உரைச் செய்யுட்கள். இவன் நீடூழி வாழ வேண்டும் என்று புத்தர் பெருமானை வேண்டுகிறது ஒரு செய்யுள்

இத்தகைய மன்னவனது மூத்த மகனும் பட்டத்து இளவரசனுமாகிய ஆதித்த கரிகாலன் சோழ நாட்டிலேயே சிலரால் கி.பி. 969ல் படுகொலை செய்யப்பட்டான், அந்தக் கொலைக்காரர்களுக்குப் பின்னாளில் _ ராஜராஜ சோழன் காலத்தில் _ தண்டம் விதிக்கப்பட்டது. இது பற்றிய விபரம் உடையார் குடிக் கல்வெட்டில் உள்ளது. கே.கே. பிள்ளை எழுதுகிறார் _ அக் கொலைக்கு காரணமானோர் பிராமணர்கள் என்பதையும் அக்கல்வெட்டு சுட்டிக்-காட்டுகிறது. இக்கொலைக்குக் காரணமானவர் பின்வரும் நால்வராவர் -_ சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி-ராசன், பரமேசுவரனான இருமுடிச்சோழ பிரமாதிராசன், மலையனூரானான தேவதாசக் கிரமவித்தன். இந்நால்வருள் இருவர் பஞ்சவன் பிரமாதிராசன், பரமேசுவரனான இருமுடிச்சோழ பிரமாதிராசன், இருமுடிச்சோழ பிரமாதி-ராசன் என்னும் சிறந்த அரசியல் பட்டம் பெற்றோர் ஆவர். ஆதலின் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் உயர்-நிலையில் இருந்தவர் என்பதில் ஐயமில்லை. அவ்வாறிருந்தும் ஏன் இக்கொலைக்கு _ அரசிளங்குமாரரின் கொலைக்கு _ துணையாயினர் என்பது அறியக்கூடவில்லை

நமக்கு இப்போது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் நினைவுக்கு வரும். அதில் ஆதித்த கரிகாலனின் கொலை ஒரு மையக் களமாகும். அதிலே வருகி சில சதிகாரர்களின் பெயர்களும் இந்தக் கல்வெட்டில் உள்ள பெயர்களே. ஆனால், இவர்கள் உள்நாட்டு பிராமணர்கள் என்கிற உண்மையைக் கல்கி எழுதவில்லை. மாறாக, பாண்டிய நாட்டு ஒற்றர்கள் என்றே சித்தரித்திருக்கிறார். நாவலும் கொலை-காரர்கள் யார் என்று உறுதிபடச் சொல்லாம-லேயே அந்தரத்தில் முடிந்துவிடும்.

இங்கே கே.கே. பிள்ளைக்கு உள்ள பிரச்சனை கொலைகாரர்கள் யார் என்பதல்ல, கல்வெட்டிலேயே அது உள்ளது. அவர்களது சாதியும் தெளிவாகத் தெரிகிறது. பிரமாதி-ராசன் என்பது பிராமணரைக் குறிப்பதாகும். கொலைகாரர்களே என்றாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படாமல் வெறும் தண்டம் மட்டுமே விதிக்கப் பட்டதி-லிருந்தும் அது நிச்சயமாகிது. தர்ம சாஸ்திரங்களின் படி கொலையே செய்திருந்-தாலும் பிராமணர்களுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்பதை அறிந்துந்திருக்கி-றோம். பிரச்சனை எதற்காக இந்தப் படுகொலை என்பது?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தக் கொலை பற்றி இப்போது துப்பு துலங்க முடியாது. ஊகமே செய்ய முடியும். இதற்கு இரண்டு தகவல்கள் ஆதாரமான இருக்கின்றன. ஒன்று _ சுந்தர சோழன் பிராமணிய மதத்திடம் மட்டுமல்லாது, சமண _ பவுத்த மதங்களிடமும் தன்மையாக நடந்து கொண்டான். அவனது மகன் ஆதித்த கரிகாலனும் அப்படியான மனப்பான்மை உள்ளவனாக இருந்திருக்கலாம். இரண்டு _ சதிகாரர்களில் இருவர் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளாக இருந்த பிராமணர்கள். இவர்களால் அரசன் மற்றும் இளவரசனின் போக்கை நேரடியாகக் கண்டிருக்க முடியும். இந்த இரண்டு தகவல்களும் நம்மை ஒரு ஊகத்திற்கு இட்டுச் செல்லுகின்றன. இளவர-சனைக் கொன்று, அதன் மூலம் அரசனையும் ஒடிந்து போகச் செய்து, அதில் எழும் குழப்பத்தால் புதிய அரசன் வந்து பிராமணிய மதங்களுக்கு மட்டுமே அரசு ஆதரவு கிடைக்கும் சூழலை உருவாக்குவது இந்தக் கொலைக்-கான காரணமாக இருக்கலாம். பின்னாளில் நடந்ததும் அதுதான்.

இவ்வளவு தீர்க்க தரிசனத்தோடு கொலை நடக்கவில்லை என்றாலும், சமண பவுத்த மதங்-களுக்கு காட்டப்படும் சலுகைகள் கண்டு பொறாமல் உடனடி ஆத்திரத்தாலும் இவர்கள் அந்தக் கொலையைச் செய்திருக்-கலாம். அர்த்தசாஸ்திரம் அதற்கான அனு-மதியைக் கொடுத்திருந்தது. ஹர்ஷனின் சரித்திரத்-திலும் அதைக் கண்டோம். தமிழகத்திலும் அது நடந்திருந்தால் ஆச்ரியப்-பட ஏதுமில்லை! பிராமணியம் பள்ளிப் படர்ந்ததில் வடக்கேயும் தெற்கேயும் இருந்த ஒற்றுமை அதற்கான உத்திகளிலும் இருந்-திருக்கும் அல்லவா?

****

விக்னேஷ்வரரின் மிதாஷராம்

யாக்னவல்கிய ஸ்மிருதிக்கு விக்னேஷ்-வரர் (கி.பி. 1080 _ 1100 இடைப்பட்டு) விளக்கவுரை எழுதினார். அதுதான் புகழ்பெற்ற மிதாஷராம் இது விளக்கவுரை-யாக மட்டு-மல்லாது இதர ஸ்மிருதிகளின் நிபந்தமாகவும் _ சுருக்கமான தொகுப்பாகவும் _ இருந்தது. பல ஸ்மிருதி களுக்கிடையே உள்ள முரண்-களுக்கு விளக்கம் தந்து ஓர் இயையுவை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாக இருந்தது. அதனால், இதுவே ஆங்கிலேயர் ஆட்சி வரும் வரை வங்காளம் _ மராட்டியம் தவிர பாரதத்தின் இதர பகுதி முழுமைக்கும் நடைமுறையில் சட்டத் தொகுப்பாக இருந்தது. அதனால், இதுவே ஆங்கிலேயர் ஆட்சி வரும் வரை வங்காளம் _ மராட்டியம் தவிர பாரதத்தின் இதர பகுதி முழுமைக்கும் நடைமுறையில் சட்டத் தொகுப்பாக இருந்தது. இப்போதும்கூட மிராஷராமை நீதிமன்றங்களில் மேற்கோள் காட்டுவோர் உண்டு. பரத்வாஜ கோத்ரத்தில் பிறந்த ஒரு பிறந்த ஒரு பிராமணர் எழுதியது இந்த மாபெரும் பூமிக்கே சட்ட விதியாகிப் போனது!

வங்காளத்தைப் பொறுத்தவரை தாயபாகம் என்பது பின்பற்றப் பட்டது. இதை எழுதியவர் ஜீமுத்தவாகனர். மராட்டியம் பின்பற்றிய தர்ம சாஸ்திரத்தின் பெயர் மயூகம்.

தர்ம சாஸ்திரங்களுக்கு வியாக்யானம் எழுதியவர்களில் இன்னும் சிலர் முக்கிய-மானவர்கள். ஒருவர் கோவிந்தராஜர், மற்றொருவர் குல்லுகபட்டர். இருவருமே மனுதர்மத்திற்கு விளக்கவுரை தந்தவர்கள். கோவிந்தராஜர் எழுதியதற்குப் பெயர் மனுதீகம். குல்லுகபட்டவர் எழுதியத்ற்குப் பெயர் மனுவர்த முக்தாவளி. தேவன்ன பட்டர் எழுதியது ஸ்மிருதிசந்திரிகா. குறிக்க வேண்டிய இன்னொருவர் அபரார்கர்.

ஏற்கெனவே, மனுஸ்மிருதி மற்றும் யாக்னவல்கியர் ஸ்மிருதியின் முக்கியத்து-வத்தைக் குறிப்பிட்டுள்ளோம். இவை தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை பிராமணியத்தின் பரதான சட்டப்-புத்தங்-களாக திகழ்ந்தது உறுதியாகிறது. புதிய சூழலுக்கு ஏற்ப வியாக்யானம் என்ற பெயரில் சில மாறுதல்கள் செய்து கொள்ளப்-பட்டனவே தவிர அடிப்படை என்னவோ அந்த நூல்கள்தாம்.

இந்தக் காலத்தில் எழுத்தப்பட்ட பாஷ்யங்-கள் மற்றும் நிபந்தங்களின் அடிப்படைத் தன்மை என்னவாக இருந்தது என்று யு.என். கோஷல் கூறுவதை முதலில் கேட்டுக் கொள்வோம் _ முந்திய நூற்றாண்டுகளின் ஸ்மிருதி பாரம்பரியம் பாதுகாத்து பந்த இந்திய சமூக முறைமையை உண்மை-பூர்வமாகப் பிரதிபலித்தன இந்தக் காலத்திய பாஷ்யங்-களும் நிபந்தங்களும். ஸ்மிருதிகளின் வழியில் நின்று நான்கு வருணங்களின் உரிமை-கள் மற்றும் கடமைகளை எடுத்-துரைத்தன.

இதன் பொருள் முந்திய காலத்திற்கும் இதற்கு வேறுபாடே இல்லை என்பதல்ல, சிற்சில மாறுபாடுகள் உண்டு. பிராமணர்-களைத் தவிர மற்றவர்களுக்கு மட்டுமே அரசன் யஜமானன் என்கிற கவுதம தர்ம சாஸ்திரத்தை வெறும் புகழ்ச்சியுரை என்கிறார் விக்னேஷ்வரர். அப்படியென்றால், பிராமணர்களும் மற்றவர்களைப் போலத்-தான் என்கிறாரா? அதுவும் இல்லை. கவுதம சாஸ்திரம் கூறுவது அனைத்து பிராமணர்-களுக்கும் பொருந்தாது, கற்றறிந்த பிராமணர்-களுக்கு மட்டுமே பொருந்தும் என்கிறார். இதுதான் மாறுபாடு! தான் கற்றிறிந்தவன் என்று ஒரு பிராமணர் நிரூபித்துவிட்டால் அரசன் அவரைத் தனித்துவமாகத்தான் நடத்த வேண்டும். தன்னைக் கொல்ல வரும் ஒரு பிரா-மணரை ஒருவர் கொல்லலாமா என்கிற விஷயத்தை இந்தக் கால வியாக்யானகர்த்-தாக்கள் விவாதித்த விதம் வினோதமானது. அப்படி ஒரு பிராமணர் கொல்ல வரும்போது தப்பிக்க வழியிருந்தால் தப்பிக்க வேண்டும் அல்லது கம்பு போன்ற ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கலாம். இதற்கும் வழியில்லாத போதுன் அவரைக் கொல்ல வேண்டும். அப்போதுதான் அவருக்கு பிராமணரைக் கொன்ற பாவம் வந்து சேராது. மற்ற வருணத்தவர் என்றால் இவ்வளவு கவனம் தேவையில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். எப்படியோ இப்போதும் பிராமணர்-களுக்கு தனி அந்தஸ்து கொடுக்கப்-பட்டது நிச்சயமாகிறது. இதிலிருந்து இதற்கு முந்திய காலங்களில் தன்னைக் கொல்ல வரும் ஒரு பிராமணரைத் தற்காப்புக்காகவும் கொல்லக்கூடாது என்றிருந்ததும் நிச்சய-மாகிறது.

பிராமணர்கள் விஷயத்தில் இந்த அளவுக்-காவது சமத்துவ நோக்கிலான மாறுபாடு இருந்தது என்றால் சூத்திரர்கள் விஷயத்தில் அதுவும் இல்லை. அது முந்திய காலத்து ஸ்மிருதிகளை அப்படியே பின்பற்றுவதாக இருந்தது. சில விஷயங்களில் முன்பைவிட நிலைமை இன்னும் மோசமாக ஆனது. முந்திய காலங்களில் ஒரு பிராமண குடும்-பஸ்தர் தனது அடிமை, தனது மாடுமேய்ப்-பவன், தனது குடும்ப நண்பன், தனது குத்தகைக்காரன் ஆகிய நான்கு வித சூத்திரர்-களிடமிருந்து உணவு வாங்கி உண்ணலாம் என்றிருந்தது. இப்போதோ இதிலும் வந்தது கடும் கட்டுப்பாடு. அபரார்கர் கருத்துப்படி இக்கட்டான தருணத்தில் மட்டுமே இப்படிச் செய்யலாம். ஹரதத்தர் என்பார் கருத்துப்படி மிகவும் இக்கட்டான தருணத்தில் மட்டுமே இப்படிச் செய்யலாம். தேவன்னபட்டரின் கருத்துப்படி கலியுகத்தில் இது முற்றிலும் தடைசெய்யப்பட்ட விஷயமாகும்!

ஸ்மிருதி சந்திரிகாவில் தடைசெய்யப்பட்ட விஷயங்கள் என்றொரு பட்டியல் உள்ளது. அதில் பிராமணர் வீடுகளில் சமையல் வேலைககுச் சூத்திரார்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று வருகிறது. இப்படிப் பல தடைகள் சூத்திரர்கள்பால் விதிக்கப்பட்டுள்ளது. இதன் உச்சமாக, இவர்-களிடம் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் விதிகள் இந்த விளக்கவுரைக்காரர்களால் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளன. ஒரு சூத்திரனைத் தொட்டுவிட்டால் உடுத்திய உடையோடு குளிக்க வேண்டும் என்கிறார் அபரார்கர். இழிந்தவகை சூத்திரரைத் தொட்டால்தான் இப்படிச் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீதரர் என்பவர் தனது ஸ்மிருத்-யார்த்த சாரம் என்கிற நூலில். சூத்திரனைத் தொட்டுவிட்டால் பிராயச்சித்தமாக உண்ணா-விரதம் இருக்க வேண்டும் என்கிறது இதே நூல்.

சூத்திரர்களுக்கும் கீழானவர்களாகப் பாவிக்கப்பட்டவர்கள் அந்தியசாதிகள் எனப்-பட்டடோர். இவர்களில்தான் சண்டாளர்-கள் சேர்க்கப்பட்டிருந்தார்கள். யாதவப்-பிரகாசர் இந்தக் காலத்தில் எழுதியது வைஜெயந்தி என்கிற அகராதி, இதன்படி அந்தியசாதிகளில் சலவைத் தொரிலாளர்கள், தோல் பதனிடு-வோர், மீனவர்கள் , வேனர்கள், புருலர்கள், மேடர்கள் மற்றும் பில்லர்கள் எனும் ஏழுவகையினர் அடக்கம். இதில் கடைசி-யாக வரும் நான்கு வகையினரும் இந்த மண்ணின் பூர்வகுடிகள் என்கிறார் யு.என்.கோஷல், இவர்களை பிராமணியம் தீண்டாத்தகாதவர் பட்டியலில் வன்மத்தோடு சேர்த்து வைத்-திருந்தது. சண்டாளர்களை பொறுத்த-வரையில் சொல்ல வேண்டியதில்லை, அவர்கள் மீதும் தீண்டாமைக் காறாராக அமுல்படுத்தப்பட்டது.

கறார் என்றால் முன்பெல்லாம் இவர்-களைத் தொட்டால்தான் தீட்டு என்றிருந்தது. இந்த விளக்கவுரைக்காரர்களின் விதிகள்படிப் பார்த்தால், இப்போது இவர்களைப் பார்த்தாலே தீட்டு, பேசினாலே தீட்டு, இவர்-களது நிழலைக் கண்டாலே தீட்டு, இவர்-களது நிழலை மிதித்துவிட்டாலே தீட்டு, இவர்களைத் தொட்ட இரண்டாவது, மூன்றாவது, நான்காவது நபரைத் தொட்-டாலும் தீட்டு. இதற்கெல்லாம் தனித்-தனியான பிராயச்சித்தங்களைச் சொல்லியிருக்-கிறார்கள் இந்த விளக்கவுரையாளர்கள். ****

கிருஷ்ணா - ராதா - கோபிகா லீலைகள்

பிராமணியம் மதரீதியாக எப்படி இயங்கியது என்பதை காண்போம். இதன் பொதுமைத் தன்மையை ஆர்.சி. மஜூம்தார் மூலம் முதலில் தெரிந்து கொள்வோம் _ இந்தக் காலத்திய மத வரலாற்றின் முக்கிய அம்சம் பிராமணிய மதத்தின் வெற்றிகரமான மீட்பாகும். தான் பிறந்த பூமியிலிருந்து பவுத்தம் மறைந்து போனது. குஜராத் எனும் இந்தியாவின் ஒரு மூலையில் மட்டும் சமணம் தன்னைத் தக்க வைத்துக் கொண்டது.

இந்த மீட்புக்கான ஒரு முக்கியமான வழிமுறையாக கிருஷ்ணா _ ராதா _ கோபிகா ஸ்திரீகள் கற்பிதம் இருந்தது. இதற்கு முந்திய காலத்தில் உருவான பாகவத புராணத்தில்-கூட ராதா வரவில்லை. இந்தக் காலத்தில்-தான் இது முன்வைக்கப்பட்டது. ஜெயதேவர் எழுதிய கீத _ கோவிந்தம் இந்தப் பணியைச் செய்தது. கடவுள் அவதாரம் எனப்பட்ட கிருஷ்ணனை காமலீலா வினோதனாகச் சித்தரிக்க பிராமணியத்தின் ஒரு பரிவாகிய வைஷ்ணவம் சிறிதும் தயங்கவில்லை. குறிப்பாக, வட இந்தியாவில் இது பிரபலமானது. மிகவும் ஆபாசமான சித்தரிப்புகள் எல்லாம் இதையொட்டி எழுந்தன. இதற்கு வலிந்து சில சித்தாந்த விளக்கங்கள் கொடுத்துக் கொண்டார்கள் வைஷ்ணவர்கள். ஆனால் ஆர்.சி.மஜூம்தார் போன்ற வரலாற்றளர்களால் கூட இதைச் செரிக்க முடியவில்லை

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0