ஆக்னி

விளையாடலாம் வாங்க

32 posts in this topic

ஆடுபுலி ஆட்டம்.

கிராமத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடும் ஆட்டம். ஆனால் எங்கள் கிராமத்தில் சிறுவர்கள் இதனை ஆடி நான் பார்த்ததில்லை. ஏனென்று தெரியவில்லை.

ஒரு முறை பக்கத்து தெருவில் தனியாக நடந்து போய்கொண்டிருந்தேன். அப்பொழுது 60 வயது பெரியவர் ஒருவர் அவரின் வீட்டின் முன்புறம் இருந்த நிழலில் தனியாக உக்கார்ந்து கட்டம் போட்டு எதோ விளையாடிக்கொண்டிருந்தார். நானோ நேரம் போகாமல் அப்பொழுது ஊர் சுத்த வந்திருந்தேன். அவரிடம் போய் என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டேன். ஆடு புலி ஆட்டம் ஆடுகின்றேன் என்றார். இது ஒரு ஆள் விளையாடும் விளையாட்டா என்று கேட்டேன். இல்லை ஆடு புலி ஆட்டம் ஆட ஆள் இல்லை அதானால் தனியாக ஆடுகின்றேன் என்று சொன்னார். எனக்கு கத்துகொடுங்கள் நான் ஆடுகின்றேன் என்று சொன்னேன். ஆடு புலி ஆட்டம் எனக்கு தெரிந்தது இப்படி தான்.

ஆடு புலி ஆட்டம் கத்துக்கொள்ளும் பொழுது எனக்கு சதுரங்கம் ஆட்டம் எல்லாம் தெரியாது. சதுரங்கம் கட்டத்தையே நான் 10 வது வகுப்பு லீவில் சென்னை வரும் பொழுதுதான் பார்த்திருக்கின்றேன். ஆனால் இந்த ஆட்டம்மும் கிட்டத்ட்ட சதுரங்கம் ஆடுவது போன்றதுதான். ஒரே ஒரு வித்தியாசம் சதுரங்கத்தில் இரு அணியினரும் ஒரே வலிமையில் களம் இறங்குவார்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான ரூல்ஸ் இருக்கும். ஆனால் ஆடு புலி ஆட்டம் கொஞ்சம் வேறு பட்டிருக்கும். 3 புலிகளை 15 ஆடுகளை கொண்டு அடைக்க வேண்டும்(நகர முடியாத படி செய்ய வேண்டும்).

அது எப்படி செய்வது? ரூல்ஸ் தெரிஞ்சிகிட்டு ஆடையும் புலியையும் நகர்த்த தெரிஞ்சிகிட்டா வெரி சிம்பில்.

முதலில் புலி எப்படி நகரும் என்று பார்த்துவிடுவோம். ஆட்டம் தொடங்கும் பொழுது 3 புலிகளையும் முதலில் இடம் பார்த்து வைத்துவிடவேண்டும். பொதுவாக ஒரு புலி எப்பொழுதும் கட்டத்தில் தலை பாகத்தில் இருக்கும். புலிகளை வைத்ததும் ஆடுகளை ஒவ்வொண்றாக வைத்து புலியை அடைக்க பார்ப்பார்கள். ஒரு ஆடு கட்டத்திற்குள் வைக்கும்பொழுது புலியானது ஒரு கட்டம் நகரும்.

1. காலியான கட்டம் இருந்தால் புலி ஒரே ஒரு கட்டம் மட்டுமே நகரும்.

2. பக்கத்து கட்டத்தில் ஆடு இருந்து அதற்கு நேர் அடுத்த கட்டம் காலியாக இருந்தால் புலி ஒரே தாவு தாவி பக்கத்து காலியான இரண்டாம் கட்டத்து போய்விடும். போவதற்கு முன்னர் தனியாக மாட்டியா ஆட்டையும் அடித்து சாப்பிட்டுவிட்டு போய்விடும். மொத்த எண்ணிக்கையில் ஒரு ஆடு காலி. அதனை கட்டத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும்.

3. சரி அப்போ எப்படி புலியை அடைப்பது. வெரி சிம்பில். ஆடு இருக்கும் கட்டத்திற்கு நேர் அடுத்த கட்டம் காலியாக இல்லை என்றால் புலியால் தாவி போக முடியாது. அத்னால் முதலில் புலி இருக்கும் இடத்தில் இருந்து 2 ஆம் இடத்தில் ஆட்டை வக்க வேண்டும். பின்னர் முதல் கட்டத்தில் வைக்கவேண்டும். அதாவது தொடர்சியாக 2 ஆடுகள் இருந்தால் அதனால் முதல் ஆட்டை அடிக்க முடியாது. அப்படி தொடர்சியாக இருந்தால் புலி வேறு பக்கம் திரும்பி போக பார்க்கும்.

இப்படி எந்த பக்கமும் புலியால நகரமுடியாதபடி செய்த்துவிட்டால் ஆடு வைத்து விளையாடுபவர் வெற்றி பெருவார். இல்லை என்றால் புலி ஆட்டை அடித்துக்கொண்டே வரும். 5 ஆட்டை அடித்து விட்டால் அத்துடன் விளையாட்டை முடித்துகொள்வார்கள். ஏன்னா அதுக்கு அப்புறம் 10 ஆட்டை வைத்து 3 புலிகளை கட்டவே முடியாது.

எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. முதல் நாள் கற்றுகொண்டு அவரோடு ஆடிய 2 ஆட்டங்களிலும் எனக்கு தோல்வியே. ஆனால் அதன் பின்னர் அவரொடு நிறைய முறை விளையாடி வெற்றி பெற்றுருக்கின்றேன்.

ஆடு புலி ஆட்டம் ஆடவேண்டுமா. கீழே உள்ள லிங்கை உபயோகித்து கணினியில் விளையாடலாம். ஆனால் இரண்டு பேர் இருந்தால் மட்டுமே ஆட முடியும்.

Edited by ஆக்னி

Share this post


Link to post
Share on other sites

ஆன் லைனில் விளையாட...

http://www.fupa.com/play/Action-free-games/goats-against-tigers.html

Share this post


Link to post
Share on other sites

கள்ள கபடமில்லாத வயதில், எந்த பால் (ஜென்டர்) வித்தியாசமின்றி ஆடிய ஆட்டங்களை நினைத்தால், ஏனோ மனதில் சோகம் லேசாக எட்டிப்பார்க்கிறது. பேஸ் புக் இருந்தும் என் நண்பர்கள், நண்பீகள் பலரைக்கண்டு பிடிக்க இயலவில்லை.

Share this post


Link to post
Share on other sites

பூப்பறிக்க வருகிறோம்.

இது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு(பசங்கள் 10 வயதுக்கு மேலிருந்தால் ஆட்டத்துல சேர்க்க மாட்டார்கள்)

சரி இந்த விளையாட்டை எப்படி ஆடுவதுன்னு பார்க்காலாம்.

விளையாட்டுக்கு வந்தவர்களை இரண்டு பிரிவாக பிரித்து அதற்கு அணித்தலைவர் தேரிந்த்தெடுக்கப்படுவார்.

அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு விளையாட்டு பெயர் வைக்கப்படும் அப்படி வைக்கப்படும் முன் இரு அணித்தலைவர்களும் கலந்து பேசி எந்த அணிக்கு எப்படி பட்ட பெயர்வைக்க வேண்டும் என்று முடிவுசெய்வார்கள்.

ஒரு அணி பூக்களின் பெயரை வைக்கும். இன்னொரு அணி காய்களின் பெயரைவைக்கும். இப்படி ஏதாவது ஒரு வெரைட்டியை தேரிவு செய்யவேண்டும்.

அதன் பின்னர் இரு அணியினரும் கொஞசம் இடைவெளிவிட்டு எதிர் எதிராக வரிசயாக உக்காருவார்கள். அணித்தலைவர் தங்கள் அணி உருப்பினர் ஒவ்வொருவரின் காதிலும் அவருடைய பெயரை கூறுவார். (பூக்கள் பெயர் என்றால், முல்லை, மல்லி, கனகாம்பரம், லில்லி... என்று ஒரு ஒருவருக்கும் பெயர் வைக்கப்படும் ஒருவருக்கு என்ன பெயர் வைத்திருக்கின்றார் என்று அவருக்கும் அணித்தலைவருக்கும் மட்டுமே தெரியும். வேறு ஒருவருக்கும் தெரியாது.

பெயர் சூட்டல் முடிந்ததும் டாஸ் போட்டு எந்த அணி முதலில் விளையாட்டை ஆரம்பிக்கவேண்டும் என்று முடிவு செய்வார்கள். டாஸில் வென்ற அணித்தலைவர் அடுத்த அணியில் இருக்கும் ஒருவருடைய கண்களை இருக்கமாக தன்னுடைய கைகளை வைத்து மூடிக்கொள்வார். இருக்கமாக மூடியவுடன் தன் அணியை சேர்ந்த ஒருவரை வந்து கண்கள் முடப்பட்டவரை வந்து கிள்ளிவிட்டு போக சொல்லுவார். அதற்காக அவர் ஒரு வரியை திரும்ப திரும்ப சொல்லுவார்.

உதாரணத்துக்கு முல்லைபூ பெயர் உள்ள நபரை அழைத்தால்

"முல்லை பூவே! முல்லை பூவே மெல்ல வந்து கிள்ளி போ,

முல்லை பூவே முல்லை பூவே மெல்ல வந்து கிள்ளி போ" என்று ஒரு வித ராகத்தில் அதை திரும்ப திரும்ப சொல்லுவார்.

முல்லை பூ என்ற பெயருடையவர் மெதுவாக வந்து அடுத்த அணியின் கண்கள் மூடப்பட்டவரை கிள்ளிவிட்டு போய் ஒன்னுமே தெரியாத மாதிரி அவருடைய இடத்தில் போய் உக்கார்ந்துவிடுவார். அவர் உக்கார்ந்தவுடன் அணித்தலைவர் தன்னுடைய அணியினரை பார்த்து மீண்டும் ஒரு வரி சொல்லுவார்

"எல்லோரும் ஆடம அசையாம தலைய வெட்டி நாய்க்கு போடுன்னு"

அப்படி சொன்னதும் அணியினர் அனைவரும் தலையை தலையை குனிந்து கொள்வார்கள். அப்படி குனிந்ததும் கண்களை மூடியிருந்த கையை எடுத்துவிடுவார். இப்பொழுது யார் கணகளை மூடியிருந்தாரோ அவர் தன்னை வந்து கிள்ளி சென்றவரை அடையாளம் காட்டவேண்டும். அவர் சரியாக அடையாளம் காட்டிவிட்டாள், கிள்ளிவிட்டவர் எதிரணிக்கு போய் விடவேணடும். அதன் பின்னர் அவர் எதிர் அணி உறுப்பினர். தவறான ஆளை சொல்லிவிட்டாள் இவர் முதல் அணிக்கு வந்துவிட வேண்டும்.

ஆட்டத்தின் முடிவில் எந்த அணியில் அதிகமாக ஆள் இருக்கின்றார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.

ஆட்டத்தின் சுவராஸ்யமான பகுதிகள்,

1. கிள்ளுபவர் வேண்டும் என்றே அதிகமாக வலிக்கும் படி கிள்ளுவார்.

2. யார் கிள்ளியது என்று கண்டுபிடிப்பது ரொம்ப கஸ்டம். முகத்தை பார்க்கவே முடியாது. எல்லோரும் தலை குனிந்து இருப்பார்கள்.

3. ஒருவருடைய அசைவு வைத்து குத்துமதிப்பாக கண்டுபிடிப்பார்கள். கிராமங்களில் யார் யார் எப்படி நடப்பார்கள், யார் நடக்கும் பொழுது எப்படி சத்தம் வரும் என்பது எல்லாம், எல்லோருக்கும் கிட்ட தட்ட தெரியும்

4. கிள்ளவருபவர் பக்கத்தில் வரும் பொழுது, வளையல் சத்தம், கொலுசு சத்தம் கேக்கின்றதா என்று கவனிப்பார்கள்

5. கிள்ளுபவர் பக்கத்தில் வரும் பொழுது வித்தியாசமான வாசனை வருகின்றதா என்பதை கவனிப்பார்கள். (பொதுவாக மீன் குழம்பு சாப்பிட்டுவிட்டு வந்தால் அவர்கள் பக்கத்தில் வந்ததும் கண்டுபிடித்திவிடலாம். அது போல் ரசம் சாப்பிட்டுவிட்டு வந்தாலும் கண்டு பிடித்துவிடலாம்)

6. இப்படி எல்லாத்தையும் கவனித்து சொன்னாலும் முக்கால்வாசி தவறாகவே போய்விடும். ஒருசிலர் மட்டுமே சரியாக கணித்து சரியான ஆளை அடையாளம் காட்டுவார்கள்.

7. சரியான ஆளை கண்டுபிடிப்பாவர்களை இரு அணித்தலைவர்களும் தங்கள் அணியில் வைத்துக்கொள்ள முயற்சி செய்வார்கள். இதனால் அவருக்கு மட்டும் அடிக்கடி கண்பொத்தல் நடக்கும். கிள்ளுபட்டு அவருடைய கைகள் ரணமாகிடும்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now