Sign in to follow this  
Followers 0
அஸ்ஸாஞ்

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்

Rate this topic:

29 posts in this topic

இலங்கை இறுதிப் போரில் சர்வதேச நாடுகளின் சரணடைதல் திட்டத்தை நிராகரித்தார் பிரபாகரன்: எரிக் சொல்ஹெய்ம்Updated: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 9, 2012, 16:06 [iST]

லண்டன்: இலங்கை இறுதிப் போரில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் முன்வைத்த சரணடைதல் திட்டத்தை ஏற்காமல் கடைசிவரை போரை பிரபாகரன் நீட்டித்ததே பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணம் என்று நார்வேயின் முன்னாள் அமைச்சரான எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

பி.பி.சியின் தமிழோசை வானொலிக்கு எரிக் சொல்ஹெய்ம் அளித்த பேட்டியில்,

பிரபாகரன், பொட்டு அம்மானை தவிர அனைவருக்கும் பொதுமன்னிப்பு:

கேள்வி: இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக் கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் அனைத்துலக நாடுகள் கூட்டாக எடுத்த முயற்சி, இந்த திட்டம் உருவான பின்னணி, அது ஏன் செயற்படாமல் கைவிடப்பட்டது?

பதில்: இலங்கையின் சமாதானத்துக்காக முயற்சி எடுத்த ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐ.நாவும் இதன் பின்னணியில் இருந்தது. அப்போது, போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்த நிலையில், பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற யோசனையை நாங்கள் முன்வைத்தோம். விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்ட பிறகு தான் அந்தத் திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் முடிவு செய்யப்பட்டிருக்கும்.

அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு- கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பி வைப்பது என்றும், அதில் ஐ.நா அதிகாரிகளோ அல்லது மற்ற அனைத்துலக அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம். அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்ந்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பதாகும்.

அப்படி நடந்திருந்தால், அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் அனைத்துலக அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த நேரத்தில் கொல்ல முடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள். நாங்கள் இந்தப் பேச்சுக்கள் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கம் போரின் இறுதி வரை தொடர்ந்தது.

இதன் ஒரு கட்டமாக, ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதி வடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தொடர்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் ஆஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரைத் தடுத்து விட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கேள்வி: இந்த திட்டத்திற்கு இலங்கை அரசின் ஒப்புதல் இருந்ததா?

பதில்: அந்த நாட்களில் நான் இலங்கைக்குச் செல்லவில்லை. ஆனால் நார்வேயில் ஆஸ்லோவில் இருக்கும் இலங்கை தூதரகம் மூலமாகவும், மற்ற தூதரகங்கள் மூலமாகவும் இலங்கை அரசுத் தரப்புடன் எங்களுக்கு இருந்த தொடர்புகள் மூலமாகவும் இலங்கை அரசுடன் நாங்கள் பல பேச்சுக்களை நடத்தினோம். அவர்களுடன் பேசியதிலிருந்து முழுமையான ராணுவ வெற்றியை பெறுவதே இலங்கை அரசின் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்ற உணர்வையே நாங்கள் பெற்றோம். அதேசமயம், விடுதலைப் புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசு அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது என்றே எங்களுக்கு தோன்றியது.

கேள்வி: இந்தத் திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருக்கும் என்று எதை வைத்து நீங்கள் நம்புகிறீர்கள்?

பதில்: அவர்களுக்கு இதில் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையே இருந்தது. காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த அனைத்துலக சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள். இலங்கை அரசில் தயக்கம் இருந்திருந்தாலும் அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்காது.

பிரபாகரனின் வரலாற்று தவறு:

கேள்வி: அப்படியானால், இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதற்கு முழுப் பொறுப்பு விடுதலைப் புலிகளின் தலைமையை சாரும் என்கிறீர்களா?

பதில்: போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப் போகிறது என்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராட வேண்டும் என்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு என்றே நான் நினைக்கிறேன்.

அதேசமயம், இதை காரணமாகக் காட்டி இலங்கை அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்த முடியாத 'பாதுகாப்பு வளையம்' என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்த பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்து தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

புலிகள் மீது இந்தியாவுக்கு செம கோபம்:

கேள்வி: இந்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா?

பதில்: விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக இந்திய அரசிடம் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு காரணங்கள் இதற்கு பின்னணியில் இருக்கின்றன. ஆனால் அதேசமயம், இறுதிகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படக்கூடாது என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

கேள்வி: நீங்கள் இறுதியாக முன்வைத்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா இல்லையா?

பதில்: இலங்கை பிரச்சனையில் நான் ஈடுபட்டிருந்த 10 ஆண்டு காலங்களில் இந்தியாவுக்கு தெரிவிக்காமல் நான் எந்த திட்டத்தையும் முன்னெடுத்ததில்லை. இந்த திட்டத்தை இந்தியா ஏற்றிருக்கும் என்பதிலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசும் இருந்திருக்கும் என்பதிலும் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

கேள்வி: இப்படி ஒரு திட்டம் இருந்ததாக நீங்கள் இப்போது கூறும் கருத்துக்கள் உண்மையா என்பதற்கு என்ன ஆதாரம்?

பதில்: 2009ம் ஆண்டில் நடந்த இந்த விஷயங்கள், கொழும்பில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அது தொடர்பான மற்ற தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் விக்கிலீக்ஸில் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருக்கும் தகவல்களை பார்த்தால் இந்தக் கூற்றுக்கான ஆதாரங்கள் அதில் இருக்கின்றன.

இவ்வாறு எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

Share this post

Link to post
Share on other sites

மேன்மை தங்கிய எம் புலிகளின் ஒப்பற்ற தலைவன் இன்று எம்மிடம் இல்லை என்ற வதந்திகள் சொல்லுவதை என் இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

நாண் 2001 ஆம் ஆண்டுகளிலேயே நினைத்தேன் இப்படி நடக்கப்போகின்றது. இந்த தமிழர்கள் சமூகத்தில் இம்முறை பிறப்பெடுத்த நாங்கள் எல்லாம் யார்?. ஒரு காரில் இருக்கும் என் ஜினில் இருக்கும் ஒரு ஒயில் லெவல் பார்க்கும் ஒரு குச்சிபோல நானும் பல சந்தர்பங்களில் பல கருத்துக்களை பலவற்றில் எழுதினேன்.ஒரு தடவை டக்ளஸ் தேவாநந்தாவால் நடாத்தப்பட்ட தினமுரசு என்ற பல லட்சம் மக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முண்டி அடித்து வாங்கிப்படித்த வார நாளிதலிலும் "மறைமுகன்" என்ற புனைபெயரில் எழுதினேன்.அதை தேவாந‌ந்தாவும் பிர‌சுரிக்க‌ த‌ன் ஆட்க‌ளுக்கு அனும‌திகொடுத்த‌தே ஒரு பெரிய‌ வெற்றி.

என்ன எழுதினேன்?

நான் யார்? இந்த‌ வெள்ளைக்கார‌ர்க‌ள் யார்? எம் பிற‌புரிமையென்ன‌? அவ‌ர்க‌ளின் பிற‌புரிமையென்ன‌? எம் க‌லாச்சார‌மென்ன‌? இவ‌ங்க‌ளின் நாறிப்போன‌ டிவோஸ் எடுக்கும் க‌லாசார‌மென்ன‌? ஆக‌ குடிப்பான், கல்யாணம் கட்டியும் அடுத்தவர் மனைவுயுடன் கூத்த‌டிப்பான். தன் மனைவி பிறறுடன் கூடி வர ஒத்துழைககவிட்டால் டிவோஸ் எடுப்பான். இதுக்குப்பெய‌ர்தான் நாக‌ரீக‌ம்.

வெள்ளைத்தோல் எல்லாம் ஒற்றுமையாக‌ இருந்து இந்த‌ உல‌கை ஆழுகிறார்க‌ள். க‌றுப்புத்தோல்க‌ள் ஒற்றுமையாக‌ இருந்து ஒரு க‌றுப்பு அமெரிக்க‌னை அமெரிக்காவின் ஜ‌னாதிப‌தியாக‌ கூட் ஆக்கியிருக்கிறார்க‌ள்.

முஸ்லீம் ம‌க்க‌ளுக்கு இடையில் ஒரு ம‌த‌ம் என்ற‌ இணைப்புப்பால‌ம் ஒண்டு இருக்கிற‌து. கிறீஸ்துவ‌ர்க‌ளுக்கு என்று பிரிதொரு பாலம் இருக்கிற‌து இணைப்ப‌த‌ற்க்கு. எம‌கெண்டு என்ன‌ இருக்கிற‌தெண்டால்..கோப‌ப்ப‌டும் ஆற்ற‌ல் இருக்கிற‌து. குண்டும் வைத்து ம‌ற்ற‌வ‌ரை மிர‌ட்டும் த‌னிப்பாணி இருக்கிற‌து.எம்மை இணைப்ப‌த‌ற்க்கு இந்தும‌த‌ம் அல்ல‌து வேறு ஒரு கலாச்சார‌ பால‌ம் என்று ஒன்றும் இருக்க‌வில்லை. ஆக‌ குண்டு வைத்து எதிரியையும்,காட்டிக்கொடுப்போரையும், கப்பம் கட்ட மறுத்தோரையும், தமிழீழகோரிக்கைக்கு ஆதரவு இல்லாத தமிழ்- சிங்கள்- முஸ்லீம் மக்களை ஏதோ ஒரு நோக்கத்துககக அது சரியாக இருப்பினும் பிழையாக இருப்பினும் கொல்லுத‌ல் என்ற‌ கொள்கையில் நாம் முதல்வர் என்ற பிரமையினை இந்த‌ உல‌க‌த்துக்கு நாம் எஸ்போக்ஸ் ப‌ண்ணிய‌தின் விளைவே!!.

ஆனால் உண்மையில்

16 வ‌ய‌தில் வே.பிர‌பாக‌ர‌ன் ஏன் ஆயுத‌ம் தூக்கினார் என்று எவ‌ரேனும் ஆராய‌ப்போகின்றார்க‌ளா இன்று என்று ஒருவ‌ரும் நினைப்ப‌தில்லை. என‌க்கும் ஒரு மூன்று பேர் என் வீடின் முன்னே வைத்து என் பெற்றார் பார்க்க‌ அடித்தார்க‌ள் என் காத‌ல் வாழ்க்கையில். அத‌ற்காக‌ நான் அந்த‌ மூன்று பேரையும் வெட்டிச்சாய்க்க‌ கூரிய‌ வாளினை என் முதுகினில் சும‌ந்த‌ப‌டி அவ‌ர்க‌ளைத்தேடி அவ‌ர்க‌ள் குகையில் வ‌ல‌ம் வ‌ந்தேன் என் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன். இதனைப்பார்த்த‌ என் பெற்றோர் ப‌ய‌ந்தார்க‌ள். நான் ஒரு ப‌ய‌ங்க‌ர‌வாதி என்று ப‌ட்ட‌ம் சூட்டினார்க‌ள். நான் ஏன் வாள் தூக்க‌வேண்டிவ‌ந்த‌து என்றால். ந‌ரிவ‌ஞ்ச‌க‌செய‌ல்க‌ளைப்பார்த்து, அனியாய‌ங்க‌ளைக்க‌ண்டு கொதித்த‌னால். ஆனால் நான் அன்று ம‌ட்டும் ச‌ரி அடித்த‌வ‌ர்க‌ளிட‌ம் அடிவாங்கிவிட்டேன் என்று அமைதிய‌டைந்திருந்தால், அவ‌ர்க‌ள் என் காத‌ல் வாழ்க்கையினையே அழித்திருப்பார்க‌ள்.

ஆக‌வே நான் அத‌ன் பின்பு ஒரு உள்ளூரில் ஒரு தெருச்ச‌ண்டிய‌னாக‌ உவம‌ய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டேன் என் ஊரில் வாழும் அனைத்து ம‌க்க‌ளால்.

ஆனால் நான் ஒரு ப‌ய‌ங்க‌ர‌வாதிய‌ல்ல‌. அனியாய‌ங்க‌ளை எதிர்க்க‌ என‌க்குள் இருந்து ஒரு என‌ர்ஜி வ‌ந்த‌து. என் அப்ப‌ன் த‌வ்று விட்டாலே அவ‌ரை கொல்ல‌த்த‌ய‌ங்காத‌வ‌ன் நான் என்று பெய‌ரெடுத்த‌வ‌ன் என் சின்ன‌ வ‌ய‌தில்.

ஆக‌வே இன்று வெள்ளைக்கார‌ நாய்க‌ளுட‌ன் சேர்ந்து அவ‌ர்க‌ளிட‌ன் கூனி ம‌ண்டியிட்டு வேலைசெய்ய‌ என‌க்கு விருப்ப‌மேயில்லை என்ற‌ முடிவில் ஏதோ ஒரு தொழில் ப‌ண்ணி என் குடும்ப‌த்தினைக்காப்பாற்றுகிறேன்.

இதே நிலைமையே எம் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னுக்கும் ஏற்ப‌ட்ட‌து. த‌ம் உரிமைக்காக‌ போராடுப‌வ‌ர்களை, அனியாயங்களை எதிர்த்துபோராடுபவர்களை, இந்த நாய்கள், ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்று சொல்லும் போது, இந்த‌ நாய்க‌ளுக்காக‌ நாம் ஏன் ப‌ணிந்துபோக‌வேண்டும்.ஆக‌வே போராடியே ஆக‌வேண்டும். செத்தால் ஒரு வீர‌னாக‌ச்சாவோம் என்று நினைத்தே எம் த‌லைவ‌ர் போர் பிர‌க‌ட‌ன‌ம் செய்தார். ஆனால் அவ‌ருக்கு க‌ழுத்த‌றுத்த‌து வெளிநாடுக‌ளில் வாழும் த‌மிழ் ம‌க்க‌ள், இந்தியாவில் அவ‌ர் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌ம்பியிருந்த‌ க‌றுப்புச்ச‌ட்டைக்கார‌ர்க‌ள். இல‌ங்கையில் வாழ்ந்த‌ பொது ம‌க்க‌ள்.

இத‌னாலேயே புலிக‌ளின் போராட்ட‌ம் அழிந்த‌து. இந்த‌ சொக்கிப்போன‌ நாயெல்லாம் அமெரிக‌க‌வுக்கு குண்டி க‌ழுவிவிடும் நாய்க‌ள். இதுக‌ள் இன்று சொல்லுப‌வை எல்லாம் சுய‌ந‌ல‌மிக்க‌வை.

ஒரு க‌ட்ட‌த்தில் இவ‌ன் நினைத்திருந்தால் இவ‌ன் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்திருகக்க‌லாம். ஆக‌ சிங்க‌ள் அரசு கொடுத்த‌ ர‌த்தின‌க்க‌ல்லுக‌ளுக்காக‌வும், இர‌வு நேர‌ அழ‌கிக‌ளுக்காக‌வும், எம் த‌மிழ் இன‌த்தினை சிங்கள நாய்களிடமும், கிண்டி மொழிபேசும் இந்திய‌ நாய்க‌ளிட‌ம்,ஒரு இன்னுமொரு டிஸ்ஜிட் போன்று காட்டிக்கொடுத்தான்.

Edited by kiri

Share this post

Link to post
Share on other sites

மேன்மை தங்கிய எம் புலிகளின் ஒப்பற்ற தலைவன் இன்று எம்மிடம் இல்லை என்ற வதந்திகள் சொல்லுவதை என் இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

--------------------------------

வெள்ளைத்தோல் எல்லாம் ஒற்றுமையாக‌ இருந்து இந்த‌ உல‌கை ஆழுகிறார்க‌ள். க‌றுப்புத்தோல்க‌ள் ஒற்றுமையாக‌ இருந்து ஒரு க‌றுப்பு அமெரிக்க‌னை அமெரிக்காவின் ஜ‌னாதிப‌தியாக‌ கூட் ஆக்கியிருக்கிறார்க‌ள்.

முஸ்லீம் ம‌க்க‌ளுக்கு இடையில் ஒரு ம‌த‌ம் என்ற‌ இணைப்புப்பால‌ம் ஒண்டு இருக்கிற‌து. கிறீஸ்துவ‌ர்க‌ளுக்கு என்று பிரிதொரு பாலம் இருக்கிற‌து இணைப்ப‌த‌ற்க்கு. எம‌கெண்டு என்ன‌ இருக்கிற‌தெண்டால்..கோப‌ப்ப‌டும் ஆற்ற‌ல் இருக்கிற‌து. குண்டும் வைத்து ம‌ற்ற‌வ‌ரை மிர‌ட்டும் த‌னிப்பாணி இருக்கிற‌து.எம்மை இணைப்ப‌த‌ற்க்கு இந்தும‌த‌ம் அல்ல‌து வேறு ஒரு கலாச்சார‌ பால‌ம் என்று ஒன்றும் இருக்க‌வில்லை. ஆக‌ குண்டு வைத்து எதிரியையும்,காட்டிக்கொடுப்போரையும், கப்பம் கட்ட மறுத்தோரையும், தமிழீழகோரிக்கைக்கு ஆதரவு இல்லாத தமிழ்- சிங்கள்- முஸ்லீம் மக்களை ஏதோ ஒரு நோக்கத்துககக அது சரியாக இருப்பினும் பிழையாக இருப்பினும் கொல்லுத‌ல் என்ற‌ கொள்கையில் நாம் முதல்வர் என்ற பிரமையினை இந்த‌ உல‌க‌த்துக்கு நாம் எஸ்போக்ஸ் ப‌ண்ணிய‌தின் விளைவே!!.

-----------------

இதை தான் நான் பல வருடமா சொல்கிறேன். 1985 ஆண்டில் இருந்தே எனக்கு இந்த கருத்து இருந்த்தது. என்னை மத வெறியன் என்றார்கள்

Share this post

Link to post
Share on other sites

இதை தான் நான் பல வருடமா சொல்கிறேன். 1985 ஆண்டில் இருந்தே எனக்கு இந்த கருத்து இருந்த்தது. என்னை மத வெறியன் என்றார்கள்

85-லேயே இந்த கருத்து இருந்திருந்தால் உங்களுக்கு அப்போ என்ன வயசு? இந்த மாதிரி கருத்து வருவதற்கு ஒரு 15-20 வயதாவது இருக்கனும்.. அப்போனா நீங்களும் 50-ஐ தொடபோகிறீகளா?

Share this post

Link to post
Share on other sites

85-லேயே இந்த கருத்து இருந்திருந்தால் உங்களுக்கு அப்போ என்ன வயசு? இந்த மாதிரி கருத்து வருவதற்கு ஒரு 15-20 வயதாவது இருக்கனும்.. அப்போனா நீங்களும் 50-ஐ தொடபோகிறீகளா?

சேகு தான் இப்படி கேல்குலேட் பண்ணுவார் எனச் சொன்னீங்க... இப்ப நீங்க பண்றதைப் பார்த்தா நீங்க ஏன் சேகுவாக இருக்கக்கூடாது... :குழந்தை:

Share this post

Link to post
Share on other sites

சேகு தான் இப்படி கேல்குலேட் பண்ணுவார் எனச் சொன்னீங்க... இப்ப நீங்க பண்றதைப் பார்த்தா நீங்க ஏன் சேகுவாக இருக்கக்கூடாது... :குழந்தை:

அட இதெல்லாம் சேகுகிட்ட இருந்து கத்துண்டது சார்.. அதுக்காக என்னையும் அவரையும் ஈக்வேட் பண்றிங்களே?

Share this post

Link to post
Share on other sites

85-லேயே இந்த கருத்து இருந்திருந்தால் உங்களுக்கு அப்போ என்ன வயசு? இந்த மாதிரி கருத்து வருவதற்கு ஒரு 15-20 வயதாவது இருக்கனும்.. அப்போனா நீங்களும் 50-ஐ தொடபோகிறீகளா?

அப்போ நான் 12 வயது பையன்.

Share this post

Link to post
Share on other sites

இந்திய தமிழர்கள் நினைத்திருந்தால் குறிப்பாக மு.கா நினைத்திருந்தால் ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும்.

Share this post

Link to post
Share on other sites

இப்பதிவிற்கு மீண்டும் உயிர் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது... இதற்கு நான் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டி இருந்தது....

போராட்டம் தோல்வி அடைந்ததற்கு பல காரணிகள்... அவற்றை வரிசைப்படுத்தும் பொழுது...

1. ஆயுதங்கள் கிடைக்காதது.. ஆயுதக்கப்பல்கள் வரிசையாக அழிக்கப்பட்டது

2. கேபி நீக்கப்பட்டு ஆயுத கொள்வனவு செய்ய முடியாதது.

3. கிழக்கில் புலிகளிடம் உருவாக்கப்பட்ட விரிசல் (கருணா பிரிவு)

4. கேபி, கருணாவின் துரோகம்

5. சர்வதேசத்தின் ஒத்துழைப்பு 2001க்கு பிறகு கிடைக்காமல் போனது (போராளி இயக்கம் தீவிரவாத இயக்கமாக மட்டுமே பார்க்கப்பட்டது)

6. இந்தியாவின் ஈழத்திற்கு எதிரான கொள்கை

7. தமிழக அரசியல்வாதிகளின் ஒற்றுமை இன்மை.. (வைகோவின் தவறான அனுகுமுறை, 91க்குப் பிறகு திமுகவின் அனுகுமுறையில் மாற்றம்)

இதில் கருணாநிதியை மட்டும் மையப்படுத்தி ஈழப்போராட்டத்தின் தோல்வியை கொண்டு செல்வது அரசியல்வாதிகளுக்கு உபயோகப்படுமே தவிர ஈழத்துக்கு எந்த விதத்திலும் உதவாது....

Share this post

Link to post
Share on other sites

அட இதெல்லாம் சேகுகிட்ட இருந்து கத்துண்டது சார்.. அதுக்காக என்னையும் அவரையும் ஈக்வேட் பண்றிங்களே?

சாரி சார்.. என்ன இருந்தாலும் நீங்க பெரியவா அய்யங்கார்... சேகு சூத்திரன்.. ரெண்டு பேரையும் ஈக்குவேட் பண்றது தப்பு தான்.. மன்னிச்சிக்கோங்க.....

Share this post

Link to post
Share on other sites

இப்பதிவிற்கு மீண்டும் உயிர் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது... இதற்கு நான் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டி இருந்தது....

போராட்டம் தோல்வி அடைந்ததற்கு பல காரணிகள்... அவற்றை வரிசைப்படுத்தும் பொழுது...

1. ஆயுதங்கள் கிடைக்காதது.. ஆயுதக்கப்பல்கள் வரிசையாக அழிக்கப்பட்டது

2. கேபி நீக்கப்பட்டு ஆயுத கொள்வனவு செய்ய முடியாதது.

3. கிழக்கில் புலிகளிடம் உருவாக்கப்பட்ட விரிசல் (கருணா பிரிவு)

4. கேபி, கருணாவின் துரோகம்

5. சர்வதேசத்தின் ஒத்துழைப்பு 2001க்கு பிறகு கிடைக்காமல் போனது (போராளி இயக்கம் தீவிரவாத இயக்கமாக மட்டுமே பார்க்கப்பட்டது)

6. இந்தியாவின் ஈழத்திற்கு எதிரான கொள்கை

7. தமிழக அரசியல்வாதிகளின் ஒற்றுமை இன்மை.. (வைகோவின் தவறான அனுகுமுறை, 91க்குப் பிறகு திமுகவின் அனுகுமுறையில் மாற்றம்)

இதில் கருணாநிதியை மட்டும் மையப்படுத்தி ஈழப்போராட்டத்தின் தோல்வியை கொண்டு செல்வது அரசியல்வாதிகளுக்கு உபயோகப்படுமே தவிர ஈழத்துக்கு எந்த விதத்திலும் உதவாது....

சரியாதான் சொல்லியிருக்கிங்க... டிவின் டவர் இடிக்கபட்டதற்கு அப்புறம் உலகளவில் ஆயுத போராட்டதற்கு ஏற்பட்ட பின்னடைவு.. அதற்கு அப்புறம் புலிகள் போரட்டத்தை வேறு விதமாக எடுத்து செல்லாதது..

கருனாவை எல்லோரும் பழிப்பதற்கு காரணம், தேவையில்லாத உண்ணாவிரத போராட்டம் போன்றவைதான்..

ஒரு மாநில அரசால் ஓரளவுதான் வெளிநாட்டு பிரச்சனையில் எதுவும் செய்ய முடியும்.. ஆனால் அதைகூட இவர் இறுதி கட்ட போராட்டத்தில் செய்தார என்பது சந்தேகம் தான்...

Share this post

Link to post
Share on other sites

சாரி சார்.. என்ன இருந்தாலும் நீங்க பெரியவா அய்யங்கார்... சேகு சூத்திரன்.. ரெண்டு பேரையும் ஈக்குவேட் பண்றது தப்பு தான்.. மன்னிச்சிக்கோங்க.....

என்ன அஸ்ஸாஞ் சார் என்ன பத்தி சேகு அளவுக்கு நிறைய தெரிஞ்சி வெச்சிருக்கிங்க???

இருந்தாலும் நான் சொன்னதை வேறுவிதமாக திருத்தி அர்த்தம் கொடுத்தது, நீங்கள் கருனாவின் தொண்டர் என்பதை நிருபித்திருக்கிறீர்கள்..

Share this post

Link to post
Share on other sites

சரியாதான் சொல்லியிருக்கிங்க... டிவின் டவர் இடிக்கபட்டதற்கு அப்புறம் உலகளவில் ஆயுத போராட்டதற்கு ஏற்பட்ட பின்னடைவு.. அதற்கு அப்புறம் புலிகள் போரட்டத்தை வேறு விதமாக எடுத்து செல்லாதது..

கருனாவை எல்லோரும் பழிப்பதற்கு காரணம், தேவையில்லாத உண்ணாவிரத போராட்டம் போன்றவைதான்..

ஒரு மாநில அரசால் ஓரளவுதான் வெளிநாட்டு பிரச்சனையில் எதுவும் செய்ய முடியும்.. ஆனால் அதைகூட இவர் இறுதி கட்ட போராட்டத்தில் செய்தார என்பது சந்தேகம் தான்...

சார் நீங்க டிவின் டவர்ன்னு சொன்னது அமெரிக்க ட்வின் டவர் தானே....கொஞ்சம் எசகுபிசகா பயந்துட்டேன்.... :மகிழ்ச்சி:

Share this post

Link to post
Share on other sites

என்ன அஸ்ஸாஞ் சார் என்ன பத்தி சேகு அளவுக்கு நிறைய தெரிஞ்சி வெச்சிருக்கிங்க???

இருந்தாலும் நான் சொன்னதை வேறுவிதமாக திருத்தி அர்த்தம் கொடுத்தது, நீங்கள் கருனாவின் தொண்டர் என்பதை நிருபித்திருக்கிறீர்கள்..

நான் என்றைக்கும் கலைஞரின் உண்மைத் தொண்டன்..ஒருத்தருக்கு பயங்கரமா எரியுமே... :P:

Share this post

Link to post
Share on other sites

இப்பதிவிற்கு மீண்டும் உயிர் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது... இதற்கு நான் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டி இருந்தது....

போராட்டம் தோல்வி அடைந்ததற்கு பல காரணிகள்... அவற்றை வரிசைப்படுத்தும் பொழுது...

1. ஆயுதங்கள் கிடைக்காதது.. ஆயுதக்கப்பல்கள் வரிசையாக அழிக்கப்பட்டது

2. கேபி நீக்கப்பட்டு ஆயுத கொள்வனவு செய்ய முடியாதது.

3. கிழக்கில் புலிகளிடம் உருவாக்கப்பட்ட விரிசல் (கருணா பிரிவு)

4. கேபி, கருணாவின் துரோகம்

5. சர்வதேசத்தின் ஒத்துழைப்பு 2001க்கு பிறகு கிடைக்காமல் போனது (போராளி இயக்கம் தீவிரவாத இயக்கமாக மட்டுமே பார்க்கப்பட்டது)

6. இந்தியாவின் ஈழத்திற்கு எதிரான கொள்கை

7. தமிழக அரசியல்வாதிகளின் ஒற்றுமை இன்மை.. (வைகோவின் தவறான அனுகுமுறை, 91க்குப் பிறகு திமுகவின் அனுகுமுறையில் மாற்றம்)

இதில் கருணாநிதியை மட்டும் மையப்படுத்தி ஈழப்போராட்டத்தின் தோல்வியை கொண்டு செல்வது அரசியல்வாதிகளுக்கு உபயோகப்படுமே தவிர ஈழத்துக்கு எந்த விதத்திலும் உதவாது....

கருணாநிதியால் ஈழத்துக்கு ஒரு பயனும் இல்லை தான்!

தமிழகத்தில் மக்கள் எழுச்சியை அடக்கியது ...வக்கீல்கள் போராட்டத்தை வன்முறையால் அடக்கியது.

தனது ஊடகத்தில் ஈழமக்கள் அவலங்களை, இருட்டடித்தது ... உண்ணாவிரத நாடகம் நடத்தி போர்நிறுத்தம் ஏற்பட்டதாக மக்களை ஏமாற்றியது...

ஈழமக்களின் விரோதியான காங்கிரஸ் கட்சியின் அடிமையாக இருப்பது ...................... இதெல்லாம் தான் துரோகம்!

இனி எத்தனை டெசோ நாடகங்கள் ,கருப்பு ச்சட்டை நாடகங்கள் நடத்தினாலும் .... ஈனத்தலைவனை மக்கள் நம்ப மாட்டார்கள்!

ஈனத்தலைவனும் , ஈனத்தலைவியும் தமிழகத்தின் சாபக்கேடுகளாக வரலாற்றில் பதிக்கப்படுவார்கள்!

அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் ... என்பது கருணாநிதிக்கு இனி புரியும்!

Edited by கரிகாலன்

Share this post

Link to post
Share on other sites

கருணாஸ் தமிழ், தமிழன், பார்ப்பானைத்திட்டுவது போன்ற உணர்ச்சிகரமான விடயங்களை வைத்து, வாய் கிழிய பேசி மக்களை முட்டாளாக்கி பல தலைமுறைக்கு வேண்டிய சொத்தைச்சேர்த்து விட்டார். ராசா, கனிமொழி திருடி மாட்டிக்கொண்டார்கள் - கொஞ்சமும் அவருக்கு தைத்ததா இல்லையே. இழந்த செல்வாக்கை மீட்க இப்ப ஈழத்தை மீண்டும் கையில் எடுக்கிறார். அவர் ஓட்டு மொத்த தமிழனுக்கு துரோகம் செய்து விட்டார். ஜெயாவிடம் தமிழ் உணர்வை எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், கருணாஸ் தான் தமிழர்களின் அத்தாரிட்டி என்றூ காலங்காலமாய் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியதால் அவரை பெரிதும் நம்பினர்.

கரிகாலன் இதுவரை எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாத ஒருவராகத்தான் இருந்திருப்பார் என்பது அவரின் எழுத்தில் தெரிகிறது.... சார் ஏன் இந்த வீரப்பேச்சு... போங்க சார்.. போய் புள்ள் குட்டிங்கள படிக்க வைங்க...

Share this post

Link to post
Share on other sites

கருணாஸ் தமிழ், தமிழன், பார்ப்பானைத்திட்டுவது போன்ற உணர்ச்சிகரமான விடயங்களை வைத்து, வாய் கிழிய பேசி மக்களை முட்டாளாக்கி பல தலைமுறைக்கு வேண்டிய சொத்தைச்சேர்த்து விட்டார். ராசா, கனிமொழி திருடி மாட்டிக்கொண்டார்கள் - கொஞ்சமும் அவருக்கு தைத்ததா இல்லையே. இழந்த செல்வாக்கை மீட்க இப்ப ஈழத்தை மீண்டும் கையில் எடுக்கிறார். அவர் ஓட்டு மொத்த தமிழனுக்கு துரோகம் செய்து விட்டார். ஜெயாவிடம் தமிழ் உணர்வை எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், கருணாஸ் தான் தமிழர்களின் அத்தாரிட்டி என்றூ காலங்காலமாய் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியதால் அவரை பெரிதும் நம்பினர்.

போய்யா டுபுக்கு...

Share this post

Link to post
Share on other sites

தேவன் யாழில் போய் மத்தளம் வாசித்துவிட்டு வந்துவிட்டார்.... :மகிழ்ச்சி2:

Share this post

Link to post
Share on other sites

என்ன அஸ்ஸாஞ் சார் என்ன பத்தி சேகு அளவுக்கு நிறைய தெரிஞ்சி வெச்சிருக்கிங்க???

இருந்தாலும் நான் சொன்னதை வேறுவிதமாக திருத்தி அர்த்தம் கொடுத்தது, நீங்கள் கருனாவின் தொண்டர் என்பதை நிருபித்திருக்கிறீர்கள்..

என்ன அருணாச்சலம் சார் அஸ்ஸாஞ்சை போய் சேகுவுடன் கம்பேர் பண்ணியுள்ளீரே

சேகுவின் எழுத்தில் ஒர் நல்ல மெச்சூரிட்டி இருக்கும், அவர் உணர்ச்சி கொந்தளிப்பில் என்றுமே எழுதமாட்டார்

அஸ்ஸாஞ்சு நம்ம பழைய தோஸ்த் M130, இல்லை துரோணச்சரியார் (எ) அப்துல் மருத்துவர் தமிழ் ஒருவேளை சேகுவாக இருக்கும்

Share this post

Link to post
Share on other sites

ஒரு வீட்டில் அமர்ந்திருக்கிறேன்.... அங்கே அவர் ஒரு நாற்காலியில் வந்து அமர்கிறார்... லுங்கி அணிந்திருக்கிறார்...அவர் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து அண்ணா நீங்க இல்லைன்னு சொல்றாங்களே என்கிறேன்... சிரிக்கிறார்... ஏதோ பேசும் பொழுது இன்னும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.. வெளியில் வருவேன் என்கிறார்... நேற்று அங்கே புகைமூட்டமாக இருந்ததே என்கிறேன்.. அங்கே சென்று வந்த பெண் போராளியை காண்பிக்கிறார்...பிறகு எழுந்து செல்ல ஆயுத்தமாகிறார்.. பக்கத்தில் இருப்பவர் போட்டோ எடுக்கிறார்.. என்னை மட்டும் அவருடன் நிற்க வைத்து எடுக்க கேட்கிறேன்... இன்னும் எத்தனை போட்டோ எடுப்பீர்கள் என்கிறார்.. பிறகு சென்றுவிடுகிறார்... போட்டோவை நான் இணையத்தில் பிரசுரித்தால் என்ன நடக்குமோ என எண்ணும் பொழுதே கனவு கலைந்துவிட்டது... :சோகம்:

Share this post

Link to post
Share on other sites

போராட்டம் தோல்வி அடைந்ததற்கு பல காரணிகள்... அவற்றை வரிசைப்படுத்தும் பொழுது...

1. ஆயுதங்கள் கிடைக்காதது.. ஆயுதக்கப்பல்கள் வரிசையாக அழிக்கப்பட்டது.

புலிக‌ளை இந்திய- ஈழ யுத்தத்தின் பின்பு , ரஜீவின் மரணத்தின் பின்பு,இந்தியா எடுத்த முயற்சியின் பிரகாரம், மேற்குல‌க‌ம் புலிகளையும் ஒரு ப்யங்கரவாத இயக்கமாக த‌டைசெய்த‌பின்ன‌ர் புலிக‌ளுக்கு கிடைத்த ஈழமக்களின் நாளாந்த‌ ந‌ன்கொடை த‌டுத்து நிறுத்த‌ப்ப‌ட்ட‌து.

ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்கு சார்பாக‌ இருக்கும் அனைத்து வ‌ங்கிக்க‌ண‌க்குக‌ளை மேற்குலகம் தேடியபோது, புலிகளின் ஆதரவாளர்களுக்காக வாங்கி விடப்பட்ட பல கோடி டாலர்கள் பெறுமதியான சொத்துக்களை புலிகளின் ஆதரவாளர்கள் தமக்குள் அடித்துக்கொண்டது கேவலமான உண்மை.

க‌டைசிச்ச‌ன்டையில் எம் உட‌ன்பிற‌வாத‌ போராளிக‌ள் கால்க‌ளில் செருப்பின்றி முள்ளுக‌ளுக்குள்ளால் வெறும் காலுட‌ன் ஓடி ச‌ண்டையிட்டு த‌ம்மை அழித்த‌த‌ற்க்கு முத‌ல் கார‌ன‌ம். ப‌ண‌மின்மை. வெளிநாடுக‌ளில் இருந்து செல்ல‌வேண்டிய‌ ப‌ண‌த்தினை புலிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் முட‌க்கிக்கொண்ட‌தே. இது த‌லைவ‌ருக்குக்கிடைத்த‌ பெருமேமாற்ற‌ம்.

நான் இதை யாழ் களத்தில் 2005 ஆம் ஆண்டில் இருந்து தடை செய்ய செய்ய அங்கே கள்ளமாகவே நுழைந்து வேறு வேறு பெயர்களில் கேள்விகள் எழுப்பியபோது என்னை லூஸ் என்று கூறி தடைசெய்தார்கள் அவர்கள்.இன்று அப்ப‌டி த‌டைசெய்ய‌ப்ப‌ட்ட‌ அந்த‌ புனைப்பெய‌ர்க‌ளுக்கு த‌னிம‌ட‌ல் அனுப்பி வ‌ர‌வேற்ப‌து எத‌னால் என்னில் மேல் இருக்கும் ப‌ற்றுக்காக‌வா. இல்லை. ப‌ல‌ர் அங்கு குவிந்தால் அவ‌ர்க‌ளுக்கு ப‌ண‌ம் வ‌ரும் என்ப‌த‌ற்காக‌. போடா புண்ணாக்குக‌ளே என்று கூறிவிட்டு த‌மிழ்நாடு ராகில் இன்றும் இருப்ப‌வ‌ன் நான்.

இன்று புலிகளே நம்பிய கே.பி. அரசின் கையில் ஒரு முக்கிய ஆளாக இருந்துகொன்டு வேலை செய்கிறார்.ஒரு காலத்தில் அமைச்சராக்க்கூட வரமுடியுமாம் அவரால். எப்படியாக கதைகட்டி மலேசியாவில் தன்னை சிறீலங்காவிடம் தன்னை ஒப்படைத்த கே.பியின் கைதுவுக்கு பின்னால் கருணாவின் உதவி இருந்ததாம்.

2. கேபி நீக்கப்பட்டு ஆயுத கொள்வனவு செய்ய முடியாதது.

கேபியினை கருணா கோஸ்டி எப்போதோ வாங்கி விட்டதை உணராத வெளிநாட்டில் அப்போது பொருப்பாளர்களாக இருந்தவர்கலெல்லாம் எவ்வளவு அறிவீனர்கள் என்று நான் அப்போதே கூறினேன். அப்படி அவர்களை படுமுட்டாள்கள் என்று கூறிய ஒரே ஈழத்தமிழர் நான் தான் என்று நினைக்கிறேன்.)

3. கிழக்கில் புலிகளிடம் உருவாக்கப்பட்ட விரிசல் (கருணா பிரிவு)

க‌ருணாவினை த‌டைசெய்து உயிருடன் விட்ட‌து மிக‌ப்பெரிய‌ பிழை. சூட்சும‌மாக‌ வ‌லைபின்னி அவ‌ரைக்கைது செய்ய‌முனையாது விட்ட‌து புலிக‌ள் எப்ப‌டியாக‌ க‌ருணாவின் த‌ய‌வில் அன்று இருந்திருக்கிறார்க‌ள் என்று நினைக்க‌த்தோன்றுகிற‌து. முக்கிய‌மாக‌ போர்க‌ள‌ங்க‌ளில் வீர‌ம‌ர‌ண‌ம் அட‌ந்த‌வ‌ர்க‌ள் கிழ‌க்குப்போராளிக‌ளே என்ப‌து இதிலிருந்து தெளிவாகிற‌து. ஆக‌வே புலிக‌ளின் த‌லைவ‌ர் க‌ருணாவின் மீது அள‌வு க‌ட‌ந்த‌ ந‌ம்பிக்கையினை வைத்து ஏமாந்த‌வ‌ர்.

4. கேபி, கருணாவின் துரோகம்

5. சர்வதேசத்தின் ஒத்துழைப்பு 2001க்கு பிறகு கிடைக்காமல் போனது (போராளி இயக்கம் தீவிரவாத இயக்கமாக மட்டுமே பார்க்கப்பட்டது)

6. இந்தியாவின் ஈழத்திற்கு எதிரான கொள்கை.

இதை இந்திய‌ த‌மிழ‌ர்க‌ளின் அர‌சிய‌ல்வாதிக‌ள் ஒன்று கூடி எதிர்த்திருந்தால், இந்திய தமிழர்களின் ஒற்றுமையுடன் கூடிய தேர்த‌ல் வாக்குப்ப‌ல‌ம் இந்த‌ கொள்கையினை மாற்ற‌ வழிசமைத்துக்கொடுத்திருக்கும். ஆனால் இந்திய‌ த‌மிழ‌ர்க‌ள் எப்போதும் ஈழ‌த‌மிழ‌ர்க‌ளை ஒரு நொண்டித்த‌மிழ‌ர்க‌ளாக‌ பார்த்தார்க‌ளே ஒழிய‌ த‌ம் உட‌ன் பிற‌வாத‌ தொப்புள் கொடியெண்டு தேர்த‌ல் கால‌ங்க‌ளில் நினைக்க‌வில்லை. த‌ம் த‌ம் க‌ட்சி என்று ஒரு க‌ப‌ட‌த்த‌ன‌த்தில் வேலைச் செய்தார்க‌ள். ஆக‌ ஆட்சிய‌மைப்ப‌து ஒன்றே அவ‌ர்க‌ளுக்கு மேலோங்கியிருந்த‌து. எப்ப‌டியாகிலும் ஆட்சிக்க‌ட்டிலைப்பிடித்தால் ச‌ரி அத‌ற்க்கு ஈழ‌த‌மிழ‌னையும் அவ‌ன் போராட்ட‌த்தினையும் பாவித்தால் ஆதாய‌ம் இருக்கும் என்று நினைத்து செய‌ற்ப‌ட்ட‌தே, தேர்த‌ல் கால‌ங்க‌ளில் புலிக‌ளை ஒட்டுமொத்த‌மாக‌ இல‌ங்கை இராணுவ‌ம் மேற்குல‌கோடும் இந்தியாவுட‌னும் சேர்ந்த் அழித்த‌ற்க்கு மூல‌ கார‌ன‌ம்.

7. தமிழக அரசியல்வாதிகளின் ஒற்றுமை இன்மை.. எல்லோரின் தவறான அணுகுமுறை என்று எழுதப்பட்டிருக்கவேண்டும்.(வைகோவின் தவறான அனுகுமுறை, 91க்குப் பிறகு திமுகவின் அனுகுமுறையில் மாற்றம்)

இதில் கருணாநிதியை மட்டும் மையப்படுத்தி( இதில் மு.கா முதலமைச்சர் என்ற காரனத்தால் அவரே ஈழதமிழர்களின் முழு சாவிற்க்கும் காரணம் என்று பொறுப்பு ஏற்க்க வேண்டிய ஒரு கட்டாய சூழல் அவருக்கு இருந்தது. அவர் தேர்தல் வெற்றி என்ற நோக்கில் அதை கருத்தில் எடுக்கவில்லை. நாடகமாடினார் தேர்தல் வாக்குகளை அபகரிக்க.

ஈழப்போராட்டத்தின் தோல்வியை கொண்டு செல்வது அரசியல்வாதிகளுக்கு இன்று உபயோகப்படுகிறதே தவிர தவிர ஈழத்துக்கு எந்த விதத்திலும் உதவாது....ந‌ன்றி உங்க்ள் க‌ருத்துக்கு

Edited by kiri

Share this post

Link to post
Share on other sites

"க‌டைசிச்ச‌ன்டையில் எம் உட‌ன்பிற‌வாத‌ போராளிக‌ள் கால்க‌ளில் செருப்பின்றி முள்ளுக‌ளுக்குள்ளால் வெறும் காலுட‌ன் ஓடி ச‌ண்டையிட்டு த‌ம்மை அழித்த‌த‌ற்க்கு முத‌ல் கார‌ன‌ம். "

இதைப்படிக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. நைக்கி மற்றும் இதர விலை உயர்ந்த ஷீக்கள் அணியும் போது எனக்கு இனி வலிக்கும்.

Share this post

Link to post
Share on other sites

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதே, சிங்கள் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைச்சட்டத்தின் கீழ் தமிழ்மக்கள் மீதான ஒடுக்குமுறை,இனவாத வஞ்சனைச்செயல்களில் பெருவாரியாக அப்பாவித்தமிழ்மக்கள் கொல்லப்பட்டதின் எதிரொலியினால், இனக்கலவரத்தில் தமிழர்களின் சொத்துக்களை வேண்டுமென்றே அழித்தார்கள் சிங்கள் இனவாதிகள். தமிழர்களை அழிக்கவேண்டி ஏற்படுத்தப்பட்ட மிலேச்சத்தனமான செயல்களில் இருந்து தமிழர்களைக்காப்பாற்றவே போராட்டம் தொடக்கப்பட்டது.தமிழ்ப்பிரதேசங்களில்,சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்தி, சிங்கள இனவாத அரசுகளின் தமிழர்களின் மீதான ஏகாதிபத்திய அடக்குமுறை சட்டத்துக்கு உடன்படாது, அவர்களின் கீழ் வாழாது சொந்தமாகவே எமக்கென்று ஒரு தனிநாடு அமைத்து நாம் விடுதலை பெற்று எம் சொந்தக்கால்களில் நின்று வாழவே.

என்ன‌ ந‌ட‌ந்த‌து என்றால்.

ஈழ‌த‌மிழ‌ர்க‌ள், ஈழ‌ இன‌வாதிக‌ளின் அட‌க்குமுறைச்ச‌ட்ட‌த்தின் கீழ், ஒடுக்குமுறைசட்டத்தின் கீழ், தமக்கு ஆதரவிலலத நிலையில் இருந்தால்,தம் தமிழ் இன‌த்தினையே அழிக்கும் கொள்கை. பெருவாரியாக‌ ப‌டித்த‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்பட்ட கீழ் நிலை. பெருவாரியாக‌வே பெரும் நகைகள், பணம், வாகன‌ கொள்ளைய‌டிப்பு, சிங்க‌ள‌வ‌ர்க‌ளை அழிக்க‌ ஏந்திய‌ துப்பாக்கி, அப்பாவி த‌மிழ‌ர்க‌ளையே தாக்கிய‌ கொடூர‌மான‌ நிக‌ழ்வுக‌ள், ச‌ம்ப‌வ‌ங்க‌ள், அந்த இயக்கம் முந்தப்போகின்றது இந்தியாவின் தயவில் என்ற எரிச்ச‌ல், பொறாமையில் இந்த இயக்கத்தினை அழிப்போம் என்ற இறுமாப்பு. இந்த‌ இய‌க்க‌ம் 10 ஆமியினைக்கொன்று ஒரு முகாமினையோ அல்ல‌து பொலீஸ் நிலைய‌த்தினையோ தாக்கி, ம‌க்க‌ள் ம‌த்தியில் பெய‌ர் பெற்று விடுமோ என்ற‌ ஏக்க‌த்தில், த‌மிழ்ம‌க்க‌ள் அழிந்தாலும் ப‌ற‌வாயில்லை, ப‌த்து ஆமியினை குண்டு வைத்து த‌கர்த்து, பெய‌ர் எடுத்து விட‌வேண்டும் தாமும் ஒரு விடுத‌லை இய‌க்க‌மாக‌ என்று,கண் மண் தெரியாமல் குண்டு வைத்தல். த‌மிழ்ம‌க்க‌ளையே பொருட்ப‌டுத்தாம‌ல், துப்பாக்கிக‌ளையும், லான்ட் மைன்ஸ்ஸுக‌ளையும் ஒரு க‌ட்டுப்பாடு இல்லாது இடம் வலம் பார்க்காது பாவித்துக்கொண்டார்க‌ள், விடுத‌லை என்று சொல்லிக்கொண்டு புற‌ப்ப‌ட்ட‌ போராளிக‌ள் கூட்ட‌ம் வெறிபுடித்து ஆடிய‌ காட்சிக‌ளால் ம‌க்க‌ள் உண‌மையிலேயே வெறுப்ப‌டைந்தார்க‌ள்.

விரும்பி இய‌க்க‌த்தில் சென்று போராடிய‌ கால‌ம் போய், பிள்ளை பிடிப்ப‌துபோல‌ ஆட்க‌ளை இய‌க்க‌த்துக்கு பிடித்துச்சென்று க‌ட்டாய‌ இராண‌வ‌ ப‌யிற்சி கொடுத்த‌ கோர‌மான‌ செய‌ல்க‌ளை க‌ண்டு, ம‌க்க‌ள் இல‌ங்கையினை விட்டு அக‌திக‌ளாக‌ வெளியேற‌த்தொட‌ங்கினார்க‌ள்.அதுவும் அக‌திக‌ளாக‌ த‌மிழ்பிர‌தேச‌ங்க‌ளை விட்டு வெளியேறி, சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் இட‌ங்க‌ளில் வாழ்ந்துகொண்டு, வெளிநாடுக‌ளில் த‌ஞ்ச‌ம் அடைந்தார்க‌ள். அங்கு அவ‌ர்க‌ள் கொடுத்த வாக்குமூலங்களை நீங்க‌ள் போய் ஆராய்ந்து பார்த்தால், இப்ப‌டியே 99 வீத‌ம் இருந்திருக்கிற‌து. "அங்க ஆமியோட சன்டைபோட, போராட்ட‌த்துக்கு தம்முடன் சேரவெண்டு புலியோ அல்ல‌து வேறு இய‌க்க‌ங்க‌ளோ பிடிக்கிரான்க‌ள்.அத‌னால‌ அங்க‌ இருக்க‌ ஏலாது எண்டு இங்க‌ வ‌ந்திட்ட‌ம் என்றுதான் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து.இத‌னால் எல்லா நாடுக‌ளிலும் புலிக‌ளுக்கு எதிராக‌, பிற‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு எதிராக‌ ப‌ல‌ முறைப்ப‌டுக‌ளை எம் ஈழ‌ ம‌க்க‌ளே புகாரிட்டிருந்தார்க‌ள்.

அத‌ற்காக‌ போராட்ட‌ம் தொட‌க்க‌ப்ப‌ட்ட‌து பிழையெண்டு யாரும் சொல்ல‌ முடியாது.கால‌ம் செல்ல‌ செல்ல‌ தேவையின் அடிப்ப‌டையில் போராளிக‌ள் அதிக‌மாக‌ தேவைப்ப‌ட்ட்ட‌தால் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை விரும்பியோ விரும்பாம‌லோ எடுக்க‌வேண்டிய‌ ஒரு க‌ட்டாய‌ சூழ்நிலை எவ‌ருக்கும் வ‌ர‌லாம் போராட்ட‌ம் என்று செல்லும் போது. ஆக‌வே தான் இறுதியில் புலிக‌ளின் ப‌ல‌ம் முன்னைய‌துபோல‌ ஒரு வீர‌ம் மிருந்த‌ புலிக‌ள் ப‌ல‌மாக‌ இருக்க‌வில்லை.1984 க‌ளில் இருந்த‌ புலிக‌ளின் ஒவ்வொரு வீர‌ர்க‌ளும், ம‌ண்ணை நேசித்த‌வ‌ர்க‌ள், மண்ணின் விடுத‌லையினை எப்படிப்பட்ட விலையினைக்கொடுத்தாலும் பெற்றுத்தீரவேண்டும் என்று ஒரு உறுதியான நோககத்தில் இய‌க்க‌த்தில் சேர்ந்த‌வ‌ர்க‌ள். வீர‌ம‌ர‌ண‌த்தினை விரும்பி ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ள். 2004 க‌ளில் இத‌ற்க்கு எதிர்மாறாக‌வே எல்லாமும் ந‌டைபெற்ற‌ன‌. ச‌ன்டையில் முன்னுக்கு நின்ற‌வ‌ர்க‌ளின் இத‌ய‌ம் ட‌ப‌க் ட‌ப‌க் என்று அடித்த‌வண்ணம் இருக்கும். முன்ன‌ல் சென்றாலும் ம‌ர‌ண‌ம், பின‌ன‌ல் ஓடினாலும் ம‌ர‌ன‌ம். ஆக‌வே துப்பாக்கியினை ஒரு ப‌த‌ற்ற‌த்துட‌ன் பிடித்த‌தில் எதிர் முன்னேறிவிட்டான் எல்லா இட‌ங்க‌ளிலும்.

போதாத‌ குறைக்கு எனி மேல் புலிக‌ளால் சிங்கள இராணவத்தினை வெல்ல‌வே முடியாது என்று வெளிநாட்டு,உள்நாட்டும‌க்க‌ளும் உண்மையிலேயே நினைக்க‌த்தொட‌ங்கிவிட்டார்க‌ள்.கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பெருமளவுவு ப‌ண‌த்தினை ஒளித்து வைத்த‌தில், யார் யாரிட‌ம் க‌ண‌க்கிற‌து என்று குள‌ம்பிய‌ நிலையில், வெளிநாட்டில் புலிக‌ளுக்காக‌ நிதி சேக‌ரித்த‌ எல்லோரும் த‌ம் த‌ம் பாட்டில் எல்லாவ‌ற்றையும் அடித்துக்கொண்டார்க‌ள். எஙேய‌ட‌ ப‌ண‌ம் என்று யாரும் கேட்டால், அந்தந்த‌ நாடுக‌ளில் உள்ள‌ பொலீஸில் சொல்லிவிட்டால் என்ன‌ செய்வ‌து என்று கேட்காமல் ஒதுங்கிய‌வ‌ர்க‌ளும் உண்டு.

ஆக‌வே க‌ட‌சியாக‌ புலிக‌ளின் த‌லைவ‌ர், த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் த‌ய‌வை, ஆத‌ர‌வை எதிர்பார்த்திருப்பார் இந்த‌ ச‌ண்டையினை நிறுத்த‌. ஊம். ஊம். அர‌சிய‌லில் ப‌ழ‌ம் திண்டு கொட்டைபோட்ட‌வ‌ர்க‌ள் நாங்க‌ள் என்று சொல்லாம‌ல் செய‌லில் காட்டிவிட்டார்க‌ள் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளும் அவர்களின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளும்.

இத‌னைச்சாட்டாக‌வைத்து நடிகர் விஜ‌ய் முத‌ல் கொண்டு சீமான் வ‌ரை எல்லோரும் அர‌சிய‌லில் நுழைய‌ எம் இறுதிப்போரை பாவித்துக்கொண்டார்க‌ள்.எதிரணிக‌ள் என்ன‌ன்ன‌மோ செய்கின்ற‌ன‌வே ந‌டிக்கின்ற‌ன‌வே பெரிய பெரிய ந‌டிக‌ர்க‌ளுக்கே க‌தைவ‌ச‌ன‌ம் எழுதிய‌வ‌ன் நான், என‌க்கா ஒரு சீனை உருவாக்க‌ முடியாது என்று ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ சீன்களே மக்கள்ச‌ங்கித்தொட‌ரும் பொய்த்த‌து, குடையின் கீழ் இருந்த‌ உன‌ணாவிரதமும் இதுவும் மக்களிடம் பொய்த்த்துப்போகவே. இன்று எடுத்துக்கொண்ட‌ இன்னுமொரு சீன் தான் ப‌ழைய‌ மொக்கையில் புதிய‌ க‌ள்ளுக்குடிப்ப‌துபோன்ற‌ த‌மிழிழ‌ ஆர்பாட்ட‌ங்கள், ரெசோ மீள் இனைப்பு என்ப‌தெல்லாம்.புலிக‌ள் இருக்கும் வ‌ரை அதை எதிர்த்த‌ ஜெயலலிதாவினை யாரோ அங்கால‌ ஏத்திவிட‌ அவ‌வும் ஈழ‌த‌மிழ‌ர்க‌ளுக்கு ஏதோ தான் செய்ய‌வேண்டிய‌ க‌ட‌மையுண்டு என்று அங்கால‌ பினாத்த‌, நாம் ஈழ‌த‌மிழ‌ர்க‌ள் இன்றும் இந்திய‌ த‌மிழ‌ர்க‌ளை நம்பிகொண்டு வாழ்கிறோம் என்றால் நாம் எவ்வ‌ள‌வு ம‌டைய‌ர்க‌ள் என்று நினைக்க‌வேண்டும்.சிங்களவர்களுடன் ஒத்துப்போய் இருந்திருந்தால் ஏதோ இன்றும் நாம் இலங்கையில் வாழ்ந்துகொண்டு எம் சொந்த மண்ணில் சுதந்திரமகவே சுவாசித்துக்கொண்டு சந்தோசமாகவே இருந்திருக்கலாம் என்பது என் வாதம்.( இங்கே கருத்துக்களத்தில் அஜ்ஜாஞ் போன்ற சில‌ உண‌மையான‌ ஈழ‌ அபிமானிக‌ளும் இருக்க‌லாம் நான் அவ‌ர்க‌ளை இங்கே குறைப்பிட‌வில்லை)

Share this post

Link to post
Share on other sites

( இங்கே கருத்துக்களத்தில் அஜ்ஜாஞ் போன்ற சில‌ உண‌மையான‌ ஈழ‌ அபிமானிக‌ளும் இருக்க‌லாம் நான் அவ‌ர்க‌ளை இங்கே குறைப்பிட‌வில்லை)

நன்றி கிரி சார்...

சிங்களவர்களுடன் ஒத்துப்போய் இருந்திருந்தால் ஏதோ இன்றும் நாம் இலங்கையில் வாழ்ந்துகொண்டு எம் சொந்த மண்ணில் சுதந்திரமகவே சுவாசித்துக்கொண்டு சந்தோசமாகவே இருந்திருக்கலாம் என்பது என் வாதம்.

சிங்களவனுடன் ஒத்து போகலை என்பதால் தானே போராட்டமே ஆரம்பித்தது...

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  
Followers 0