Sign in to follow this  
Followers 0
பாலா

துப்பாக்கி....லாஜிக் இல்லாத மொக்கை!

35 posts in this topic

http://www.vinavu.com/2012/11/19/thuppaki-review/

“விஜய் படத்திற்கு விமரிசனமா” – அதிர்ச்சியுடன் கேட்டார் ஒரு தோழர். உண்மைதான். ஒரு ஸ்டூடியோ குத்துப்பாட்டு, ஃபாரின் மரங்களை சுற்றும் இரண்டு டூயட், ஐந்து ரம்பக் காமடி, காட்சிக்கொரு டமால்-டுமீல் பஞ்ச் டயலாக் என்று புளித்துப் போன பஞ்சாமிர்த ஃபார்முலாவில், கதை கானல் நீராக இருப்பதால் விமரிசனங்களுக்கு பெரிய தேவை இருப்பதில்லை. மக்களும் ஆட்டம், பாட்டம் என்று விறுவிறுப்புக்காக இத்தகைய படங்களை பார்த்து மறப்பதால் இது ஒரு பெரிய பிரச்சினையும் அல்ல.

நமக்கு பிரச்சினையில்லை என்றாலும் விஜய் படங்களின் தொடர் தோல்வி அவருடைய கம்பெனி இமேஜுக்கு பிரச்சினை இல்லையா? “நண்பன்” படத்திலிருந்து விஜய் வேறுவழியின்றி வித்தியாசமாக அதாவது அடங்கி ஒடுங்கி நடிக்க தள்ளப்பட்டாராம். “ஏழாம் அறிவி”ல் தமிழனது தொல்பெருமையை ரீல் பொங்க அவிழ்த்து விட்டாலும் வசூலில் கொஞ்சம் சொதப்பியதால் ஏ.ஆர். முருகதாஸுக்கும் ஒரு வெற்றி தேவைப்பட்டிருக்கிறது. சினிமா அழைப்பிதழையே உசிலம்பட்டி முதல் அமெரிக்கா வரை வாய் பிளக்குமளவுக்கு ‘புதுமையிலும், பிரம்மாண்டத்திலும்’ மலிவாக பொளந்து கொட்டும் கலைப்புலி தாணுவுக்கும் ஒரு வசூல் வெற்றி அவசியமிருந்தது. இப்படியாக மூவரும் தங்களது தொழில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக பிரச்சினைக்குரிய இந்தப்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கின்றனர்.

***

தலையின் அளவுக்கேற்பத்தான் தொப்பியைத் தேடுவார்கள். ஆனால் தமிழ் சினிமாவிலோ தொப்பியைச் செய்து விட்டு அதற்கேற்ப தலையை வெட்டுவார்கள். வசூலில் முன்னணி வகிக்கும் இயக்குநர்கள் நிச்சயமாக இந்த ரகம்தான். அப்படித்தான் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் ஒரு மசாலா கதையை உருவாக்கிவிட்டு அந்த ஃபார்முலாவிற்கேற்ப வாழ்க்கை, வரலாறு கதை, உணர்ச்சிகள் அத்தனையும் வெட்டி எறிந்திருக்கிறார்.

“ரமணா”வில் துவங்கி “துப்பாக்கி” வரை முருகதாஸின் படங்கள் அனைத்தும் தாங்க முடியாத அளவுக்கு தமிழ் மசாலா, அண்ணா ஹசாரே அட்வைஸ் கலந்த த்ரில்லர் வகைப் படங்களாக இருக்கும். இதையெல்லாம் விறுவிறுப்பு என்று கொண்டாடுமளவுக்கு தமிழ் பதிவுலகமும் மொக்கை ரசனையில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்தப்படத்தையே எடுத்துக் கொண்டால் இதை சினிமா என்ற முறையில் பார்ப்பதற்கு திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதென பலரும் ரசித்து எழுதியிருக்கின்றனர். அப்படி என்ன ஈர்ப்பு இந்த படத்தில்?

குமுதம், விகடன்களில் ஒரு பக்க கதைகளை படித்திருக்கிறீர்களா? ஏதாவது ஒரு க(சொத்)தைக் களனில் ஓரிரு பாத்திரங்கள், ஒரு முரண்பாடு என்று ஆரம்பித்து படிப்பவர் ஊகிக்கும் தீர்வு போல வந்து பின்னர் அதற்கு நேரெதிராக முடிப்பது இவற்றின் கலை ரகசியம். இதையே ஏ.ஆர் முருகதாஸ் ஒவ்வொரு காட்சிக்கும் வைத்து தாளிக்கிறார். ஆரம்ப காட்சிகளில் ஓரிரு முறை ஈர்ப்பாக இருக்கும் இந்த தாளிப்பு பின்னர் தாளமுடியாத வதையாக இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு காட்சி வரும் போதும் தேர்ந்த ரசிகர்கள் அந்த முரண்பாடு அல்லது ட்விஸ்ட் எழவை ஊகிப்பார்கள். அல்லது இந்த முரண்பாடு என்ன குப்பையாகவோ இருந்து விட்டு போகட்டும் என்று விட்டு விடுவார்கள். கலையை ரசிப்பது இப்படியாக கணக்கு போட்டுப் பார்க்கும் மொக்கைப் புதிராக மாறுகிறது.

இராணுவத்தில் இருந்து விடுமுறையைக் கழிக்க மும்பைக்கு வரும் விஜய் தொடர் குண்டு வெடிக்க முனையும் இசுலாமிய ஜிகாதி தீவிரவாதிகளை அழித்து அவர்களது தலைமை வில்லனை துப்பறிந்து ஒழிப்பதுதான் கதை. இடையில் காஜல் அகர்வாலை காதலிப்பார். ஒட்டுமொத்தமாக இந்தக்கதையை ஒன்றாம் கிளாஸ் படிக்கும் குழந்தை கூட படம் துவங்கிய ஐந்து, பத்து நிமிடத்தில் ஊகித்து விடும். ஆனால் அப்படி ஊகித்தாலும் பலவீனமாக இருக்கும் ரசனையில் நம்பிக்கை வைத்து கதையை கொஞ்சம் இழுஇழுவென எதிர்பாராத கோணத்தில் இழுத்து மேலோட்டமான ஈர்ப்பை ஒவ்வொரு காட்சிக்கும் கொண்டு வந்து சினிமாவை குதறிக் கொண்டு செல்கிறார்கள்.

விறுவிறுப்பு கூட்டுவதற்கு வேகமான கதையும் இன்றைய ட்ரெண்ட் என்று மொக்கை சினிமா ஆய்வாளர்கள் கூட ஆய்வு செய்வது வழக்கம். இந்த வேகத்திற்கு சூர்யா நடித்து ஹரி இயக்கிய சிங்கம் ஒரு பதம். சென்னையில் இருந்து வில்லன் தூத்துக்க்குடி வந்து ஹீரோவிடம் பஞ்ச் டயலாக் பேசி ஆரம்பச் சுற்றில் தோற்றுப் போகும் விசயத்தை எடிட்டிங்கின் உதவியாலும், சர் சர் என பறக்கும் பின்னணி இசையாலும் ஓரிரு நிமிடத்தில் சொல்லி விடுவார்கள். எந்த ஒரு கதையும் அதன் உள்ளடக்கமும் அதற்கு பொருத்தமான வடிவத்தைக் தெரிவு செய்து அமைதி அடைகிறது. மாறாக வேகம் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் முனைப்பு கொண்டதால் சிங்கம் படம் நம்மைப் பொறுத்தவரை வாய்விட்டு சிரிப்பதற்குரிய அஜிங்கமான காமடிப் படம் மட்டுமே. கிராபிக்சில் சிங்கம், அதிவேக எடிட்டிங், அதற்கு உறுதுணையாக வெட்டு இசை, ஒரு கையடியில் ஒரு டன் எடை என்று அதில் சிரிப்பதற்கு ஏராளமிருக்கின்றது.

இத்தகைய ரசனை வீழ்ச்சிதான் ஏ.ஆர் முருகதாஸ் போன்ற படைப்பாளிகளுக்கு பலம். இதில் சுலபமாக ஒரு மொக்கையை தயார் செய்து விடுவது அவர்களைப் பொறுத்த வரை சுலபமானது. மூன்று மணி நேரப் படத்தை முப்பது குறும் பிரிவுகளாக பிரித்து விட்டு அவை ஒவ்வொன்றையும் குமுதம் ஒரு பக்க கதை பாணியில் அமைப்பது இதுதான் முருகதாஸின் (பல இயக்குநர்களின்) சூட்சுமம்.

அதிலும் அந்த குறும்பிரிவுகளில் காதல், காமடி, பாடல் போன்ற வைத்தே ஆக வேண்டிய சமாச்சாரங்களை தவிர்க்க முடியாது என்பதால் பாதியை இவைகள் தின்று தீர்க்க மீதிப் பாதியில்தான் ‘கதை’. இவ்வளவு தொந்தரவுகளையும் தாங்கிக் கொண்டு ஒரு படத்தில் கதை வைப்பது சிரமம் என்பதை விட அந்த தொந்தரவையும் தாங்கிக் கொண்டு கதையை கண்டுபிடித்து பொழிப்புரை போட்டு ரசிக்கிறார்கள் என்றால் தமிழனது பரந்த மனத்தோடு போட்டி போட யாருமில்லை என்பது நிச்சயம்.

“துப்பாக்கியின்” விறுவிறுப்பில் மனம் சிக்குண்ட பதிவர்கள் என்ன மாதிரி காட்சிகளில் தம்மை அடகு வைத்திருப்பார்கள்? ரயில் நிற்கும் பின்னணியில் ராணுவ உடையுடன் விஜயின் அறிமுக ஆட்டம், அதே உடையுடன் ராகுகாலம், அஷ்டமிக்குள் பெண் பார்க்க ரயில் நிலையத்திலிருந்தே செல்லுதல், அடக்க ஒடுக்கமாக நடக்கும் காஜல் தனக்கு மேட்சாக மாட்டார் என்று விஜய் வீடு திரும்பி சொல்லும் போதே அதற்கு நேர் எதிராக அங்கே காஜல் நடந்து கொள்ளுதல், அதிலும் குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொள்ளுதல் (முக்கியமாக காஜலின் குத்துச்சண்டையை மெய்மறந்து பார்ப்பவர்கள்தான் இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் இல்லையென அழுகிறார்கள் என்பது ஒரு சோக காமடி),

பிக்பாக்கெட் பேருந்தில் தற்செயலாய் வில்லனைக் கண்டுபிடித்தல், பிக்பாக்கெட் கண்டுபிடிக்கப்படும் அதே நேரத்தில் வெடிகுண்டு வில்லன் தப்பி ஓடுதல், மருத்துவமனையிலிருந்து வில்லன் தப்பிச் செல்வதை ஊரே பேசிக் கொண்டு இருக்கும் போது அடுத்த காட்சியில் அவன் விஜயின் வீட்டில் இருத்தல், சத்யனிடம் இந்தக் கதையை கூறிக்கொண்டிருக்கும் போதே காஜல் வந்ததால் சஸ்பென்சில் வைத்தல், காஜலுக்கு முத்தம் கொடுக்கும் நேரத்தில் வில்லனைக் கண்டுபிடிக்கும் கிரியேட்டிவிட்டி வேலை செய்து முத்தத்தை ரத்து செய்து பறந்து போதல், இரண்டுமணி நேரத்திற்கு மட்டும் மயக்க மருந்து போட்டு வில்லனை தப்பி போக வைப்பது, அதற்குள் கல்யாண விருந்துக்குச் சென்று ராணுவ வீரர்களை ஆப்பரேஷனுக்கு தயார் செய்வது….

இப்படிச் சின்ன சின்ன திருப்பங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் என்று ஊசிப்போன ஒரு எளிய கணக்குப்புதிர் போன்ற காட்சிகளைத்தான் பதிவர்கள் விறுவிறுப்பான திரைக்கதை என்று கொண்டாடுகிறார்கள். எனில் இவர்களெல்லாம் உண்மை வாழ்க்கையிலும், திரைப்பட அனுபவத்திலும் அப்படி ஒரு ஒரிஜினல் விறுவிறுப்பை கண்டவர்கள் இல்லை என்று தெரிகிறது. இறுதியில் குமுதத்தின் ஒரு பக்க கதை ஃபார்முலாதான் நமது சினிமா பதிவர்களது ரசனை அளவு கோல் என்றால் தமிழ் மக்களிடம் வசூலிக்கவும் விறுவிறுப்பை அளிக்கவும் ஒரிஜினல் துப்பாக்கி தேவையில்லை, வெறும் தீபாவளி பொம்மைத் துப்பாக்கியே போதும்.

அடுத்து நமது சினிமா பதிவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல் லாஜிக் மீறல். இதையும் எளிய கணக்கு புதிருக்குண்டான விதிகள் போலத்தான் கருதுகிறார்கள். பாத்திரங்கள், வேலை விவரங்கள், காட்சிகளின் தொடர்பு போன்றவற்றில் உள்ள தொழில்நுட்ப ரீதியான சமாச்சாரங்கள் முரண்படாமல் அல்லது மீறாமல் இருந்தால் லாஜிக் ஷேமகரமாக இருக்கிறது என்பது இவர்களது புரிதல்.

சான்றாக படத்தில் இராணுவக் கேப்டனான விஜய் மேலதிகாரிகளது அனுமதி இன்றி வில்லன்களை கொல்வதும், அதற்கு சக வீரர்களை பயன்படுத்திக் கொள்வதும் ஏன்? – இப்படித்தான் இவர்கள் லாஜிக்கை ஆராய்கிறார்கள். உண்மையில் ஒரு திரைக்கதையில் இதெல்லாம் மீறப்படுவது பெரிய பிரச்சினை இல்லை. உண்மையிலும் இராணுவத்தினர் பல இடங்களில் அப்பாவி மக்களை அனுமதியின்றி, உத்தரவின்றி கொல்வதும் ஏராளமாய் நடப்பது என்கிற விதத்திலும் இது லாஜிக் மீறல் இல்லை. ஆனால் ஒரு திரைக்கதை எதார்த்த வாழ்வின் உண்மைகளோடும், அறவியல் மதிப்பீடுகளிலிருந்தும் வழுவாமல் இருப்பதுமே முக்கியமாகிறது. இந்த ‘லாஜிக்’ மீறாமல் இருப்பதுதான் நமது கவனிப்பிற்கு உரியது.

இது நமது மொக்கை திலகங்களுக்கு எப்போதும் உறைக்காது, தெரியாது, புரியாது. இந்தியா ராணுவம் ஈழத்திலும், காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கொன்ற கணக்கு ஏராளமிருக்கையில் அதன் ஆக்கிரமிப்பு, மக்கள் விரோத மனோபாவமே எதார்த்தம் எனும் போது படத்தில் ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்களைக் காட்டி கருணைப்படுமாறு கெஞ்சுகிறார்கள். “ஆயிரம் மக்களை கொல்பவன் தன்னுடைய உயிரை விடுவதற்கு கவலைப்படாத போது, மக்களைக் காப்பாற்றுபவனும் தனது உயிரை துறப்பதற்கு தயங்கக் கூடாது” என்று விஜய் இரண்டு, மூன்று முறை பேசுகிறார்.

டான்ஸ் ஆடி குஷால் பேபியாக அறியப்பட்ட விஜய் இதைப் பேசும் கொடுமை ஒருபுறம் இருந்தாலும் இதுதான் உண்மையான ‘லாஜிக்’ மீறல்! ஆக்கிரமிப்பு நாடுகள், இராணுவத்திற்கு எதிராக அரசியல், விடுதலை, பொருளாதார, வாழ்க்கை காரணங்களால் மட்டுமே ஒரு போராளி தன்னுடைய உயிரைத் துறக்கும் தற்கொலைப் போராளியாக மாற முடியும். ஆனால் இத்தகைய போராட்டங்களிலிருந்து முகிழ்விக்கும் தற்கொலைப் போராளிகள் எவரும் ஆக்கிரமிப்பு இராணுவம், நாட்டிலிருந்து தோன்றவே முடியாது.

தன்னுடைய பாதுகாப்பான வாழ்வு போக அடுத்தவனுடைய வாழ்வையும் அபகரிக்க வேண்டுமென்ற சிந்தனை உள்ள ஆக்கிரமிப்பாளன் வாழ்க்கையின் இன்பத்தை துய்ப்பதற்குத்தான் துணிவானே அன்றி உயிரை விட அல்ல. வேண்டுமானால் அமெரிக்க அரசாங்கமோ இல்லை ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ நாட்டிற்காக தற்கொலை தியாகிகள் வேண்டுமென்று அறைகூவல் விட்டுப் பார்க்கட்டும். தயிர் சாதத்திற்கு வழியில்லாத அம்பி கூட அதற்கு துணிய மாட்டான் என்பது உறுதி.

ஜிகாதி பயங்கரவாதிகளிடமிருந்து மும்பை மக்களை பாதுகாக்கும் கடமையை ஏற்றுக் கொண்ட விஜய் இடையிடையில் அதற்கு லீவ் கொடுத்து விட்டு காஜல் அகர்வாலின் பின்னால் சுற்றுகிறார். இப்பேர்ப்பட்ட நபர்தான் நாட்டிற்காக தனது உயிரை கொன்று விடுமாறு சக வீரர்களிடம் உதார் விடுகிறார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் காஜல் அகர்வாலை சுற்றாமல் ஆரம்பத்திலேயே கண்ணும் கருத்துமாக பணியாற்றிருக்கலாம் அல்லவா?

சரி, விஜய் தனது உயிரை எடுக்குமாறு கூறும் போது ரசிகர்கள் சிரிப்பார்களா, இல்லை தேசபக்தியில் புல்லரித்து பொங்குவார்களா? ஒரு பாத்திரம் அதனுடைய கதையமைதியில் வழுவாமல், முரண்படாமல் இருக்குமாறு இருப்பது அடிப்படை விசயம். இது கூட நமது படைப்பாளிகளுக்குத் தெரியவில்லை என்பது சிரிப்பதற்குரிய உண்மை.

பெரிய பட்ஜெட் படங்களுக்கு வில்லன்கள் என்றால் நமது படைப்பாளிகள் இயல்பிலையே இசுலாமிய தீவிரவாதிகள் என்று செட்டிலாகிவிடுகிறார்கள். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பா.ராகவனது “நிலமெல்லாம் ரத்தம்” நூலையோ இதை ஒட்டி வந்த “கிழக்கி”ன் ஏனைய மத்திய கிழக்கு உடான்சுகளையோ படித்திருப்பார் போலும். அதில் வரும் ஸ்லீப்பர் செல், அதனுடைய விளக்கம், எல்லாம் தனது மொக்கை த்ரில்லருக்கு பொருந்தி வரும் என்பதால் அப்படியே அதை மும்பைக்கு நாடு கடத்தி விட்டார்.

மத்திய கிழக்கில் இசுரேலுக்கு எதிராக தோன்றிய இசுலாமிய அமைப்புகளின் நடைமுறை, ஸ்தாபன முறை அனைத்தும் வலுவான, சதிகார எதிரிக்கு எதிராக போராடும் மக்களிடம் தோன்றிய எதிர் போராட்ட வன்முறை. அதை அந்த சூழலில் இருந்து துண்டித்து விட்டு ஒரு மலிவான வில்லனாக வேறு ஒரு நாட்டில் காண்பிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஹமாஸ், அல்கைதா ஏனைய அமைப்புகளின் டெக்னிக்கல் டீடெய்ல் மட்டும் பா.ராகவன் தொட்டு, முருகதாஸு வரையிலும் ஈர்க்கப்படும் அவஸ்தையை இங்கே இனியும் விளக்க வேண்டியதில்லை.

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு என்பது இந்துமதவெறியின் எதிர்வினை. ஒரு வேளை இங்கே இந்துமதவெறியோ, அத்வானி, மோடி, தாக்கரேக்களோ தண்டிக்கப்படும் நிலையிருந்தால் இத்தகைய குண்டு வெடிப்புகளுக்கு தேவைப்படும் சமூக அடிப்படை இருந்திருக்காது. இதை வினவின் பல கட்டுரைகளில் விரிவாக விளக்கியிருக்கிறோம். இதன் அரிச்சுவடி கூடத் தெரியாமல் ஒரு வில்லன் எஃபெக்டுக்காக ஜிகாதி, இசுலாம், நமாஸ், முகமூடி, கழுத்தறுப்பது போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட முசுலீம் வெறுப்பு இந்தியாவின் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் இசுலாமிய மக்கள் எவ்வளவு பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

முருகதாஸ் ஒருவிதமான அண்ணா ஹசாரே டைப்பில்தான் அனைத்து விசயங்களையும் பார்க்கிறார். அதன் அபத்தத்தை ஏழாம் அறிவிலேயே பார்த்தோம். அந்த குப்பை மசாலவை ஏதோ தமிழனது வீரம், ஈழவிடுதலை என்று ஜாக்கி வைத்து தூக்கிய தமிழ் தேசிய இனவாதிகளையும் கண்டிருக்கிறோம். அதனால்தான் மற்றுமொரு தமிழ்தேசியவாதியான கலைப்புலி தாணு தனது பெரிய பட்ஜெட் படத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான வன்மத்தை கக்குவதற்கு கைக்காசை போட்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இவர்தான் ஈழத்தில் அமைதிப்படையின் கொலையை அவரது படமான “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேனி”ல் மறைத்து அமைதிப்படையை வரவேற்கமாட்டேன் என்று சொன்ன கருணாநிதியை குற்றம் சாட்டுவதற்கு பயன்படுத்தியவர்.

ஆக தமிழ் உணர்வு என்றால் அது இந்துத்வ உணர்வின் பங்காளிதானோவென ஐயம் வருகிறது. அதனால்தான் பால்தாக்கரே உயிரோடு இருந்து நடத்திய இனவெறி போராட்டங்களுக்கும் தமிழ்தேசிய வாதிகள் பலர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

அரசியல், வரலாறு, சமூகம், கலை அனைத்தையும் மிக மிக மேலோட்டமான பார்வை மற்றும் ஆதிக்கம் செலுத்தும் கண்ணோட்டத்தோடு புரிந்து வைத்திருக்கும் படைப்பாளிகளிடமிருந்து இத்தகைய விபரீதங்கள் வரும் என்பதற்கு “துப்பாக்கி” எனும் மசாலாவே சாட்சி. இதன் மூத்த சகோதரனாக அமெரிக்க அரசின் ஆசிபெற்ற “விசுவரூபம்” அடுத்து வரப்போகிறது. மீதி விமரிசனங்களை அதில் தொடருவோம்...

Share this post


Link to post
Share on other sites

முருகதாஸ் போன்ற கிராமத்து அறிவா(வி)ளி(லி)களால் தான் இப்படி படம் எடுக்க முடியும்! படம் பார்க்கையில் ஒரு 25 முறையாவது இந்த ஆளை கம்பால அடிக்கலாம் என்று தோன்றியது!

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு என்பது இந்துமதவெறியின் எதிர்வினை. ஒரு வேளை இங்கே இந்துமதவெறியோ, அத்வானி, மோடி, தாக்கரேக்களோ தண்டிக்கப்படும் நிலையிருந்தால் இத்தகைய குண்டு வெடிப்புகளுக்கு தேவைப்படும் சமூக அடிப்படை இருந்திருக்காது. இதை வினவின் பல கட்டுரைகளில் விரிவாக விளக்கியிருக்கிறோம். இதன் அரிச்சுவடி கூடத் தெரியாமல் ஒரு வில்லன் எஃபெக்டுக்காக ஜிகாதி, இசுலாம், நமாஸ், முகமூடி, கழுத்தறுப்பது போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட முசுலீம் வெறுப்பு இந்தியாவின் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் இசுலாமிய மக்கள் எவ்வளவு பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

பாலா

இந்த வினவு ஒரு அயோக்கியன். இவன் ஒரே ஒரு லட்ஷியத்துடன் தான் பதிவுகள் எழுதுவான். இந்துகள் கெட்டவர்கள், முஸ்லிமுகள் அப்பாவிகள். 1947 இருந்து நடந்த கலவரம் அனைத்தையும் ஆரம்பித்தது இந்துவா ?

Share this post


Link to post
Share on other sites

முருகதாஸ் போன்ற கிராமத்து அறிவா(வி)ளி(லி)களால் தான் இப்படி படம் எடுக்க முடியும்! படம் பார்க்கையில் ஒரு 25 முறையாவது இந்த ஆளை கம்பால அடிக்கலாம் என்று தோன்றியது!

ஏன் சார் முருகதாஸ் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருந்தும் உங்கள் காசை வைத்து எதற்கு படம் பார்க்கிறீர்கள் அப்புறம் கம்பால் அடிக்க நினைக்கிறீர்கள்?

Share this post


Link to post
Share on other sites

இந்த வினவு போன்றவர்களுக்கு, இந்தியா, இந்திய ராணுவம் போன்றவறை யாராவது சிறிது பாராட்டினாலும் கோவம் பொத்துகொண்டு வந்து விடுகிறது...

இந்திய அரசு, ராணுவ தலைமை வேண்டுமானால் ஆதிக்க சக்தியாக இருக்கலாம், அதற்காக ராணுவத்தில் வேலை பார்க்கும் ஒரு சராசரி வீரன் கூடவா ஆதிக்க வெறியோடு இருப்பான்?

போராளிகளின் மட்டும் தான் தற்கொலை போரகளிகள் தோன்ற முடியும் என்பது எவ்வளவு அபத்தம்..

நம்மூரில்,பரம்வீர் சக்ரா ற்போன்றவிருது பெற்ற வீரர்கள் தங்கள் வாழ்வை பணயம் வைத்து தானே தன் தோழர்களை காப்பாற்றியிருக்கிறார்கள்.. அதுவும் தற்கொலை போன்றது தானே?

ஒவ்வொரு ராணுவ வீரனும், அதில் சேரும் போதே உயிருக்கு ஆபத்து என தெரிந்து தானெ சேருகிறான்... அதை இந்த இனைய போராளிகள் அவமதிப்பதேன்?

இவர்கள் சொல்லும் போராளிகளில் தான் கருனாவும், காஸ்ட்ரோவும், கடாபியும் உருவானார்கள்... அவர்கள் செய்த அய்யோகியதனத்தை பற்றி இந்த போராளிகள் பேசுவார்களா? மாட்டார்கள் ஏன்னெறால் அவை அனைத்து அமெரிக்க ஏகாதிபத்திய பொய் செய்திகள்... போடாங்க்...

அப்புறம் விஜய் காஜலிடம் காத்ல்செய்வதை லாஜிக் மீறலாக நினைக்கும் இவர், ஏன் இணையத்தில் சினிமா விமர்சனம் எழுதுகிறார்.. மக்களுக்காக களத்தில் போராடவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறதே???

Share this post


Link to post
Share on other sites

பாலா

இந்த வினவு ஒரு அயோக்கியன். இவன் ஒரே ஒரு லட்ஷியத்துடன் தான் பதிவுகள் எழுதுவான். இந்துகள் கெட்டவர்கள், முஸ்லிமுகள் அப்பாவிகள். 1947 இருந்து நடந்த கலவரம் அனைத்தையும் ஆரம்பித்தது இந்துவா ?

வினவு கூறும் எல்லாவற்றையும் நான் சரி என்று சொல்ல வில்லை. ஆனால் இந்தப் படம் முஸ்லீம்களை கேவலப்படுத்தியதுடன், மும்பாயில் என்னமோ போலீஸ் என்ற ஒன்றே இல்லாதமாதிரி அவர்களையும் மிகக் கேவலப் படுத்தியுள்ளது.

வினவின் சில கருத்துகள் அயோக்கியத்தனமானது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்!

Share this post


Link to post
Share on other sites

ஏன் சார் முருகதாஸ் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருந்தும் உங்கள் காசை வைத்து எதற்கு படம் பார்க்கிறீர்கள் அப்புறம் கம்பால் அடிக்க நினைக்கிறீர்கள்?

சரியாத்தான் இருக்கு,...இணையத்தில் பார்த்தபோதே இந்த வெறுப்பு ....காசு கொடுத்து பார்த்திருந்தால் இன்னும் மோசமாய் இருக்கும்! விஜயின் மீதான வெறுப்பு கூட எனக்கு இந்தப் படம் பிடிக்காமல் போனதுக்கு காரணமாய் இருக்கலாம்! இது விஜய் படம் தானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரவே இல்லையா? திடீரென்று விஜய் ரூபிக் க்யூப் எல்லாம் போடுகிறார்...இந்தி இங்லி பீசெல்லாம் உடைத்து உடைத்து பேசுரார்! நிறைய ஓட்டைகள் கதையில். நம்புறமாதிரி இருந்தது ஒரு 20% கூட இல்லை! தேசபக்தியை நல்லாவே விற்க முடிகிறது இவர்களால்.

Share this post


Link to post
Share on other sites

சரியாத்தான் இருக்கு,...இணையத்தில் பார்த்தபோதே இந்த வெறுப்பு ....காசு கொடுத்து பார்த்திருந்தால் இன்னும் மோசமாய் இருக்கும்! விஜயின் மீதான வெறுப்பு கூட எனக்கு இந்தப் படம் பிடிக்காமல் போனதுக்கு காரணமாய் இருக்கலாம்! இது விஜய் படம் தானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரவே இல்லையா? திடீரென்று விஜய் ரூபிக் க்யூப் எல்லாம் போடுகிறார்...இந்தி இங்லி பீசெல்லாம் உடைத்து உடைத்து பேசுரார்! நிறைய ஓட்டைகள் கதையில். நம்புறமாதிரி இருந்தது ஒரு 20% கூட இல்லை! தேசபக்தியை நல்லாவே விற்க முடிகிறது இவர்களால்.

சார் இது வழக்கமான விஜய் படம் மாதிரி இல்லாம இருந்தது தான் இதை ஒருமுறை பார்க்கலாம்னு தோனித்து.. இல்ல பஞ்ச் டயலாக் பேசியே நம்மள கொன்னிருப்பானுங்க...

"நிறைய ஓட்டைகள் கதையில். நம்புறமாதிரி இருந்தது ஒரு 20% கூட இல்லை! தேசபக்தியை நல்லாவே விற்க முடிகிறது இவர்களால்" 100% உண்மை...

இருந்தாலும் கடைசில, இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பனம்னு போட்டது பிடித்திருந்தது.. சில பல காமூகர்கள், அய்யோகியர்கள் இருந்தாலும், பல பல வீரர்கள் தங்கள் உயிரை கொடுத்து நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள்..

Share this post


Link to post
Share on other sites

சார் இது வழக்கமான விஜய் படம் மாதிரி இல்லாம இருந்தது தான் இதை ஒருமுறை பார்க்கலாம்னு தோனித்து.. இல்ல பஞ்ச் டயலாக் பேசியே நம்மள கொன்னிருப்பானுங்க...

"நிறைய ஓட்டைகள் கதையில். நம்புறமாதிரி இருந்தது ஒரு 20% கூட இல்லை! தேசபக்தியை நல்லாவே விற்க முடிகிறது இவர்களால்" 100% உண்மை...

இருந்தாலும் கடைசில, இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பனம்னு போட்டது பிடித்திருந்தது.. சில பல காமூகர்கள், அய்யோகியர்கள் இருந்தாலும், பல பல வீரர்கள் தங்கள் உயிரை கொடுத்து நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள்..

அதே...! அந்த விதத்தில் ஓகே.

வினவின் அயோகியத்தனமான கருத்துகளால் அவர்கள் நல்லது சொல்ல வரும்போதுகூட செருப்படி கிடைக்கும்படி செய்து விடுகிறார்கள்!

Share this post


Link to post
Share on other sites

இது கொஞ்சம் நாகாரீகமான விமர்சனம்..!

http://hellotamilcinema.com/index.php?option=com_content&view=article&id=1329

நம் நாட்டிலுள்ள தீவிரவாதிகளுக்கு இருக்கக்கூடிய ஆகப்பெரும் அச்சுறுத்தல், சினிமாவில், அதுவும் குறிப்பாக தமிழ்சினிமாவில் அவர்கள் சித்தரிக்கப்படும் விதமும் பரத் போன்ற சுள்ளான்களாலும் அவர்கள் பந்தாடப்படும் விதம்தான். லேட்டஸ்டாக தீவிரவாத வேட்டையில் தீவிரமாக இறங்கியிருப்பவர் நம்ம எளைய தளபதி விஜய்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், கேப்டன் விஜயகாந்த் ஆகியோர் சிரமேற்கொண்டு செய்து வந்த தீவிரவாத ஒழிப்புவேலைகளை, கொஞ்சம் இடம் பொருள் ஏவல், வாஸ்து மாற்றி இளையதளபதியின் தோளுக்கு தோதாக ஷிஃப்ட் செய்திருக்கிறார் ஏ. ஆர். முருகதாஸ்.

விட்டால் நாலே வரியில் எழுதி விடலாம், விரும்பினால் நாலுமணி நேரம் வரை சொல்லிக்கொண்டே போகலாம் என்கிற ரெண்டுங்கெட்டான் தனமான கதை ‘துப்பாக்கி’யினுடையது. ஒரு பக்கம் தீவிரவாதிகள் மறுபக்கம் திணவெடுத்த தோள்கள் கொண்ட நம்ம ஹீரோ. அவர்கள் பாம் வைக்க முயற்சிக்க அவர்கள் முயற்ச்சியை, அயர்ச்சியின்றி முறியடிக்கிற த ஸேம் ஓல்டு ஸ்டோரிதான் ‘துப்பாக்கி’யும்.

மிலிட்டரியிலிருந்து 40 நாள் விடுமுறையில் வரும், வம்பை விலைக்கு வாங்கத்துடிக்கும் மும்பைத் தமிழர் நம்ம விஜய். ஒரு பஸ் பயணத்தின் போது, பிக்பாக்கெட் ஒருவனை அவர் பிடிக்க எத்தனிக்கும்போது, தற்செயலாக தீவிரவாதியின் கையாள் ஒருவன் மாட்டுகிறான். அவனை யாருக்கும் தெரியாமல் வீட்டு மாடியில் வைத்து விசாரிக்கும்போது, மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடிப்பை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு, அவர்களது கைப்பாவைகள் மும்பையை வட்டமிட்டிருப்பது தெரிகிறது.

நம்ம இளையதளபதியா கொக்கா? இடது கையால் சொடக்குப் போட்டபடியே தீவிரவாதிகள் கூட்டம் மொத்தத்தையும் ஒழித்து காஜல் அகர்வாலைக் கரம் பிடிக்கிறார்.

‘தம்பி இவ்வளவு நேரமா இல்லாம திடீர்னு, இந்த காஜல் அகர்வால் எங்கருந்து, எப்ப வந்தார்னு சொல்லவேயில்லையே என்று உங்கள் புஜம் துடிப்பது புரிகிறது.

‘குணா’ படத்தில் ‘கண்மணி அன்போடு’ பாடலில் அங்கங்கே ‘மானே தேனே’ போட்டுக்கிற மாதிரி படத்தின் துவக்க காட்சியிலிருந்து ஒவ்வொரு மூனு சீன்களுக்கும் ஒருமுறை காஜல் வருகிறார். காதல், ஊடல்,வாடல் என்று தமிழ்சினிமா காதல் காட்சிகளில் ஏற்கனவே பார்த்துச் சலித்த அத்தனை கன்றாவிகளையும் செய்கிறார்கள்.அப்படியே ஒரு சின்ன முன்னேற்றமாக இருக்கட்டுமே என்று ஒரு முத்தம் கொடுக்கும் முயற்சியில், அயற்சி வருமளவுக்கு மூன்று ரீலை ஓட்டுகிறார்கள்.

தீவிரவாதிகள் என்றாலே அது இஸ்லாமியர்களாகத்தான் இருக்கவேண்டுமா? என்பதற்கும் கதாநாயகி என்றால் அவள் ஒரு அரை லூஸாகத்தான் இருக்க வேண்டுமா? என்பதற்கும் மேற்படி இரு பிரிவினருக்கும் பதில் சொல்லவேண்டிய கடமை இயக்குனர் முருகதாஸுக்கு காத்திருக்கிறது.

மற்றபடி விஜய்க்கு சமீபத்தில் வந்துபோன ‘நண்பன்’ தவிர்த்த அவரது தொத்தல் படங்களுக்கு மத்தியில் இது ஒரு ஆறுதல் பரிசுதான் என்பதில் சந்தேகமில்லை. காஜல் அகர்வால் வெறுமனே காதல் அகர்வால். விஜயை அவ்வப்போது சந்தித்து காதல் பகர்வாள்,அடுத்து ஒரு பாட்டு சீனுக்கு நகர்வாள்.

‘வேர் இஸ் த மியூசிக் என்று கேட்க வைக்கிறார் ஹாரீஸ் ஜெயராஜ். அம்மி கொத்த சிற்பிக்கு ஆர்டர் அனுப்பியதுபோல் இருக்கிறது சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு.

படத்தின் டைட்டிலை மறந்துவிடுவார்கள் என்று நினைத்தோ என்னவோ படம் முழுக்க யாரோ யாரையோ சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். கதையில் விஜய் மிலிட்டரியில் இருந்து 40 நாள் விடுமுறையில் வந்தது போலவே லூஸ் போலீஸ் சத்யனைத்தவிர, மும்பை போலீஸார் அத்தனை பேரும் விடுமுறையில் சென்றுவிட்டார்கள் போல.

அவ்வளவு நேரமும் விஜய் வீட்டில் ஒரு செட் புராபர்ட்டி போலவே, சாதுவாகப் படுத்துக்கிடந்த அந்த பரிதாப நாயை திடீரென்று விஜய் கையில் பிடித்தபடி அதிரடி ஆக்‌ஷனுக்குள் இறங்கும்போது, காமெடியும் எனக்கு வரும் பாஸ் என்று சொல்லாமல் சொல்கிறார் இயக்குனர் முருகதாஸ்.

’ஏழாம் அறிவில் தமிழனின் குரோமோசொம்களை குத்தகைக்கு எடுத்து தமிழ் வியாபாரம் செய்த முருகதாஸ் இந்த முறை ராணுவ வீரர்களின் தியாகத்தைப்போற்றிப் புகழ்ந்து தனது எட்டாவது அறிவால் யாரும் எட்டமுடியாத இடத்தை நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறார்.

Share this post


Link to post
Share on other sites

தீவிரவாதம் பற்றி படம் எடுத்தா அதில் முஸ்லீம்களை தானே தீவிரவாதிகளாக காட்ட்முடியும்... இன்றைய நிகழ்வுகளில் அது தானே உண்மை... அதற்காக எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகளாக யாரும் சித்தரிக்கவில்லை.. அப்படி காட்டினால் தவறு... ஒரு 4 -5 தீவிரவாதிகளை முஸ்லீம்களாக காட்டினால் என்ன தவறு?

படத்திலேயே, அந்த தீவிரவாதியை தப்பிக்க விடும் அதிகாரியை இந்துவாக தானே காட்டினார்கள்... அவரையும் முஸ்லீமாக காட்டியிருந்தால் இவர்கள் குற்றசாட்டு சரி..

இந்து மத வெறியாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கொலைகளும் செய்கிறார்கள் - அவர்கள் தீவிரவாதிகளா? அவர்கள் இந்தியாவை எதிர்க்கவில்லை, அவர்களின் எதிரி முஸ்லீம்கள், கிருஸ்துவர்கள் , அவர்களின் செயல் இந்தியாவை பாதிக்கிறது ஆனால் அது அவர்கள் நோக்கம் இல்லை... ஆனால் இஸ்லாம் தீவிரவாதிகளின் எதிரி இந்துக்கள் இல்லை, இந்தியா.... நாட்டை எதிர்ப்பவன் தீவிரவாதி, மதத்தை எதிர்ப்பவன் மதவாதி.. அப்படி பார்த்தால் தீவிரவாதம் பற்றி படம் எடுத்தால் அதில் முஸ்லீம்களை தான் தீவிரவாதியாக காட்ட வேண்டியிருக்கு.. இல்லை என்றால தீவிரவாதம் பற்றி படம் எடுக்கவே கூடாது!!

இன்னொரு பிரச்சனை, தீவிரவாத படம் எடுத்து அதில் இந்துகளை காட்டினால், உடனே இந்து அமைப்புகள் பிரச்சனை செய்யும்..

என்னை கேட்டால் இவர்கள் இது பற்றி படம் எடுக்காமல் இருப்பதே நல்லது!

Share this post


Link to post
Share on other sites

என்னை கேட்டால் இவர்கள் இது பற்றி படம் எடுக்காமல் இருப்பதே நல்லது!

மிகச் சரி. இதைப் போன்ற படங்களால் பிரச்சனை அதிகமாகுமே ஒழிய ஒரு இம்மியளவும் குறையப் போவதில்லை!

Share this post


Link to post
Share on other sites

இதுவே பரவாயில்லை.. திருத்தனினு ஒரு படா மொக்க படம் - அதுல ஹீரோயின் தவிர பார்க்க ஒன்னுமே இல்லை.. கந்தசாமி, அந்நியன் மாதிரியே கத!! எப்படித்தான் இந்த கதைகெல்லாம் டேட் கொடுக்கறாங்களோ!!

நேத்திக்குதான் நான் ஈ படம் பார்த்தேன்.. கண்டிப்பா மொக்க இல்லை!! ஒருமுறையாவது பார்க்கலாம்...

Share this post


Link to post
Share on other sites

இப்படி என்ன சொல்ல வர்றீங்க? பார்க்கலாமா வேண்டாமா? தெளிவாக சொல்லுங்க அப்பு..

உசாரா இருக்கணும் இல்லையா? அவன் இவன் என்று ஒரு படத்தை நண்பரின் வீட்டில் ஹோஓம் தியேட்ட்ரில் பார்த்தோம். விசால் பொட்டமாரியா நடிச்சிருந்தான், பாதியிலேயே எழுந்து போயிட்டேன். ரொம்ப நேரம் கழித்து படம் முடிஞசிருக்கும் என்று அவங்க வீட்டின் பேஸ்மெண்டிற்க்கு போனேன். திரையைப்பார்த்ததும் என் மூச்சே நின்ற மாதிரி இருந்தது - ஒரு நடுத்தர மனிதர் பட்டக்க்ஸைக்காட்ட கொண்டு ஒடுகிறார் - ஒருத்தன் ஈவு இரக்கமில்லாம்ல அடிக்கிறான். என்ன சார் படம் எடுக்கிறான்கள்? தமிழ்த்திரை உலகம் எங்கே போகிறது.

Share this post


Link to post
Share on other sites

இப்படி என்ன சொல்ல வர்றீங்க? பார்க்கலாமா வேண்டாமா? தெளிவாக சொல்லுங்க அப்பு..

உசாரா இருக்கணும் இல்லையா? அவன் இவன் என்று ஒரு படத்தை நண்பரின் வீட்டில் ஹோஓம் தியேட்ட்ரில் பார்த்தோம். விசால் பொட்டமாரியா நடிச்சிருந்தான், பாதியிலேயே எழுந்து போயிட்டேன். ரொம்ப நேரம் கழித்து படம் முடிஞசிருக்கும் என்று அவங்க வீட்டின் பேஸ்மெண்டிற்க்கு போனேன். திரையைப்பார்த்ததும் என் மூச்சே நின்ற மாதிரி இருந்தது - ஒரு நடுத்தர மனிதர் பட்டக்க்ஸைக்காட்ட கொண்டு ஒடுகிறார் - ஒருத்தன் ஈவு இரக்கமில்லாம்ல அடிக்கிறான். என்ன சார் படம் எடுக்கிறான்கள்? தமிழ்த்திரை உலகம் எங்கே போகிறது.

இந்த படம் பார்க்க தியேட்டர் போவது பணவிரயம் தான்! ஆனால் அவன் இவனுக்கு இது கொஞ்சம் பரவாயில்லை போல! அவன் இவன் எடுத்த பாலாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை!

Share this post


Link to post
Share on other sites

விஜய் படத்தை பார்க்கப் போனதே தப்பு... இதுல விமர்சனம் வேற... :முடியல1::மகிழ்ச்சி:

Share this post


Link to post
Share on other sites

தீவிரவாதம் பற்றி படம் எடுத்தா அதில் முஸ்லீம்களை தானே தீவிரவாதிகளாக காட்ட்முடியும்... இன்றைய நிகழ்வுகளில் அது தானே உண்மை... அதற்காக எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகளாக யாரும் சித்தரிக்கவில்லை.. அப்படி காட்டினால் தவறு... ஒரு 4 -5 தீவிரவாதிகளை முஸ்லீம்களாக காட்டினால் என்ன தவறு?

படத்திலேயே, அந்த தீவிரவாதியை தப்பிக்க விடும் அதிகாரியை இந்துவாக தானே காட்டினார்கள்... அவரையும் முஸ்லீமாக காட்டியிருந்தால் இவர்கள் குற்றசாட்டு சரி..

இந்து மத வெறியாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கொலைகளும் செய்கிறார்கள் - அவர்கள் தீவிரவாதிகளா? அவர்கள் இந்தியாவை எதிர்க்கவில்லை, அவர்களின் எதிரி முஸ்லீம்கள், கிருஸ்துவர்கள் , அவர்களின் செயல் இந்தியாவை பாதிக்கிறது ஆனால் அது அவர்கள் நோக்கம் இல்லை... ஆனால் இஸ்லாம் தீவிரவாதிகளின் எதிரி இந்துக்கள் இல்லை, இந்தியா.... நாட்டை எதிர்ப்பவன் தீவிரவாதி, மதத்தை எதிர்ப்பவன் மதவாதி.. அப்படி பார்த்தால் தீவிரவாதம் பற்றி படம் எடுத்தால் அதில் முஸ்லீம்களை தான் தீவிரவாதியாக காட்ட வேண்டியிருக்கு.. இல்லை என்றால தீவிரவாதம் பற்றி படம் எடுக்கவே கூடாது!!

இன்னொரு பிரச்சனை, தீவிரவாத படம் எடுத்து அதில் இந்துகளை காட்டினால், உடனே இந்து அமைப்புகள் பிரச்சனை செய்யும்..

என்னை கேட்டால் இவர்கள் இது பற்றி படம் எடுக்காமல் இருப்பதே நல்லது!

:பலூன்4:

Share this post


Link to post
Share on other sites

ம்... தென்னவனுக்குக்கொண்டாட்டம் தான். அடுத்த விஸ்வரூபம் வருது. கமல் ஆபகனிஸ்தான் தீவிரவாதம் என்று ஏதோ குழப்பி இருக்கிரான். என்-ஜாய் பிரதர்!

Share this post


Link to post
Share on other sites

அது மட்டுமா கிளிண்டன். நான் பிணவாசனை கதையை மீண்டும் ஆரம்பித்து விட்டேன். இந்த வாரம் படித்தீர்களா ?

மேலும் இந்த கதை முடிந்த பின் (5 வாரம்)

1. siege of India

2. Atom Affair

கதைகள் வருகின்றன. அதில் நம் அருண் அன்ட் கோ திவிரவாதிகளை எப்படி எல்லாம் வேட்டை ஆடுகிறார்கள் என்று பாருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ம்... தென்னவனுக்குக்கொண்டாட்டம் தான். அடுத்த விஸ்வரூபம் வருது. கமல் ஆபகனிஸ்தான் தீவிரவாதம் என்று ஏதோ குழப்பி இருக்கிரான். என்-ஜாய் பிரதர்!

I like this post. Some times I feel bad, I have hurt you many times

Share this post


Link to post
Share on other sites

கமல் பாவம் சார்

விஸ்வரூபம் கதையும் துப்பாக்கி கதையும் ஒன்றேதானாம் (ஆனால் துப்பாக்கியில் கதை என்று ஒன்று இருந்ததா)

துப்பாக்கி வெற்றி அப்ப விஸ்வரூபம் ?

துப்பாக்கி வெற்றிக்கு முதல் காரணம் விஜய் பஞ்ச் வசனம் பேசாதது தான்

Share this post


Link to post
Share on other sites

துப்பாக்கி வெற்றி அப்ப விஸ்வரூபம் ?

--வழக்கப்படி தயாரிப்பாளர் போண்டியாகி, குமுதத்தில் கட்டுரை வாயிலாக குமுறுவார்.

Share this post


Link to post
Share on other sites

'மும்பை போன பிறகுதான் முருகதாஸ் மாறிவிட்டார்!'' --ஜூவி

துப்பாக்கி மிரட்டல்... விவாதங்கள்!

'துப்பாக்கி’ பட சர்ச்சை ஒருவழியாக ஓய்ந்து விட்டது. ஆனால், பிரச்னைக்கு பின்னால் நடந்த விஷயங்கள் படத்தின் திரைக்கதையைவிட படு விறுவிறுப்பு.

'துப்பாக்கி’ திரைப்படத்தில் முஸ்லிம் விரோதக் கருத்துக்கள் இடம்பெற்று இருப்பதாகப் போர்க்கொடி தூக்கிய முஸ்லிம் கூட்டமைப்பினரை ஓட்டலில் சந்தித்தது படக்குழு. தாணு, முருகதாஸ், சந்திரசேகரன் ஆகியோருடன் 24 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அந்தக்கூட்டம், ஏகத்துக்கு சூட்டைக் கிளப்பியது. உள்ளே நடந்த விஷயங்களை பலரிடம் பேசி விசாரித்தபோது கிடைத்த தகவல் இது.

த.மு.மு.க. செயலாளர் சமது முதலில் பேசினார். ''திராவிட இயக்கச் சிந்தனை கொண்டவர் தாணு. அதனால், அவர் முஸ்லிம்களுக்கு எதிராக படம் எடுத்திருப்பார் என நாங்கள் நினைக்கவில்லை. சந்திரசேகரனும் முஸ்லிம் விரோதப்போக்கோடு நடந்து​கொண்டார் என்று சொல்ல எந்த சம்பவமும் இதுவரை இல்லை. படத்தின் இயக்குனரான நீங்கள்​தான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணகர்த்தா'' என்று எடுத்த எடுப்பிலேயே ஏ.ஆர்.முருகதாஸைப் பார்த்து சீறினார்.

''படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் சங்பரிவார் அமைப்புகளின் சித்தாத்தங்கள் வெளிப்பட்டு இருக்கின்றன. மும்பைத் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே பற்றி படத்தில் உயர்வாக வசனம் வைத்திருக்கிறீர்கள். மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங், ராணுவத்தில் கர்னலாக இருந்த ஸ்ரீகாந்த் புரோகித் இருவரையும் ஹேமந்த் கர்கரேதான் கைதுசெய்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக, ராணுவத்தைச் சேர்ந்த முஸ்லிம் கேரக்டர் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக படத்தில் காட்டி இருக்கிறீர்கள். அஜ்மீர் தர்கா, சம்ஜ்வதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மசூதி ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் காவி பயங்கரவாதம் இருந்ததையும், சங்பரிவார் ஆட்கள் கைதுசெய்யப்பட்டதையும் லாகவமாக மறைத்து விட்டு, படத்தை எடுத்து இருக்கிறீர்கள்'' என்று சமது சொல்ல...

இடைமறித்த முருகதாஸ், ''என் மகன், மகள், மனைவி மீது சத்தியமாகச் சொல்கிறேன். அந்த மாதிரியான எண்ணம் துளிகூட என் மனதில் இருந்தது இல்லை. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை எல்லாம் கேட்கும்போது இங்கேயே செத்துவிடத் தோன்றுகிறது'' என்று கடுமையாக மறுத்து இருக்கிறார்.

தொடர்ந்து பேசிய சமது, ''எங்களை மட்டும் அல்ல... எந்த சமூகத்தையும் இழிவு​படுத்தி படம் எடுக்க வேண்டாம். தலித் சமூகத்தைவிட மிகவும் மோசமான நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று சச்சார் கமிட்டி அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு வாடகை வீடுகூட கிடைக்காத நிலையில் இருக்​கிறோம். படத்தில் எங்களை தீவிரவாதிகளாகக் காட்டினால், சமூகத்தில் எப்படி எங்களுக்கு மரியாதை கிடைக்கும். படத்தின் திரைக்கதையை ரொம்ப நுணுக்கமாக எடுத்து இருக்கிறீர்கள். இது சங்பரிவாரின் டெக்னிக். படத்தின் முழு மூளை நீங்கள்தான். உங்களை மன்னிக்கவே முடியாது'' என்றார்.

இதற்குப் பதில் அளித்த முருகதாஸ் ''கள்ளக்​குறிச்சியில் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் வீட்டைச் சுற்றி முஸ்லிம்கள்தான் வாழ்கிறார்கள். அவர்களோடு தொப்புள்கொடி உறவாகத்தான் இதுவரை நான் பழகி இருக்கிறேன். அவர்களை இழிவுபடுத்தி படம் எடுக்க, கனவில்கூட நினைத்தது இல்லை. வெப்சைட்டுகளைப் பார்த்துதான் படத்தின் திரைக்கதையை எழுதினேன். இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. இதற்காக நான் உங்களிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

அடுத்துப்பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளரான முனீர், ''நீங்கள் தமிழ்நாட்டில் இருந்த வரை எந்தப் பிரச்னையும் இருந்தது இல்லை. மும்பைக்குப் போய் படம் எடுக்க ஆரம்பித்த பிறகுதான் உங்களிடம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கே இருக்கும் சங்பரிவார் அமைப்புகள் உங்களைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்ற அச்சம் படத்தை பார்க்கும்போது ஏற்படுகிறது. நடிகர் விஜய் மீது இருந்த மரியாதை இந்த படத்தின் மூலம் போய்விட்டது'' என்று சொன்னபோது, ''அப்படி நினைக்காதீர்கள். இந்தப் படத்தில் என் மகன் நடித்ததற்காக நான் வருந்துகிறேன். உங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட காயத்துக்காக நானும் என் மகனும் வருத்தப்படுகிறோம். அடுத்த படத்தில் விஜய் உயர்வான முஸ்லிம் கேரக்டரில் நடிப்பான்...'' என்றார் சந்திரசேகரன்.

இறுதியில், ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்​படுவதோடு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதிக் கொடுப்பதாக படக் குழு சொன்னதால், பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கிவிட்டு, அதுகுறித்த விவரங்களை மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் தமிமுன் அன்சாரியிடம் அளித்தார் தாணு. நீக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு ஸ்பெஷலாக போட்டுக் காட்டினர். அதிலும் சில காட்சிகள் நீக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, அதையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். அதையும் நீக்குவதாக தாணு ஒப்புக்கொள்ளவே... பிரச்னை ஓய்ந்தது!

- எம்.பரக்கத் அலி

Share this post


Link to post
Share on other sites

உ.பி.யில் 15 பேர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுகள் வாபஸ்: நீதிமன்றம் கண்டனம்!

Posted Date : 13:02 (27/11/2012)Last updated : 14:07 (27/11/2012)

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 15 பேர் மீது சுமத்தப்பட்ட தீவிரவாத குற்றச்சாட்டுக்களை அம்மாநில அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில்,இது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது,இஸ்லாமியர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி அறிவித்தது.

இதன் காரணமாக சமாஜ்வாடி கட்சிக்கு இஸ்லாமியர்கள் ஓட்டு கணிசமான அளவுக்கு கிடைத்தது.

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 15 இஸ்லாமியர்கள் மீதான தீவிரவாத வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த 15 பேரும் பல்வேறு குண்டு வெடிப்புகள், சதி செயல்கள் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவார்கள்.இந்த 15 பேர் மீது தீவிரவாத தடுப்பு பிரிவுகளின் கீழ் ஏற்கனவே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

இந்நிலையில் 15 பேரை விடுவிக்க கோரும் கடிதத்தை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாஜிஸ்திரேட்டுகளுக்கு உத்தரபிரதேச மாநில அரசின் சிறப்புச் செயலாளர் ராஜேந்திரகுமார் அனுப்பியுள்ளார். இதையடுத்து மேற்கூறிய 15 பேர் விடுதலையாகும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்த 15 பேரில் வாலியுல்லாவும், அவரது உதவியாளர் ஷமீமும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 2006-ம் ஆண்டு 21 பேர் உயிரை பறித்த காசி குண்டு வெடிப்பு தொடர்பாக கைது ஆனவர்கள்.

மீதமுள்ள 13 பேரில் 4 பேர் கடந்த 2002-ம் ஆண்டு பொடா சட்டத்தில் கைதானவர்கள்.இவர்கள் 4 பேரும் கார்கில் போரின் போது இந்திய படைகளின் நகர்தல் பற்றி பாகிஸ்தான் ராணுவத்துக்கு ரகசிய தகவல்களை கசிய விட்ட குற்றத்துக்காக கைதானவர்கள்.

மேலும் 5 பேர் 2008-ம் ஆண்டு ராம்பூரில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாம் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவர்கள்.2007-ம் ஆண்டு லக்னோ, காசி, பைசாபாத் கோர்ட்டுகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய 4 பேரும் விடுவிக்கப்படும் குற்ற வாளிகள் பட்டியலில் உள்ளனர்.

உத்தரபிரதேச மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடும் கண்டனமும்,அதிருப்தியும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீதிபதிகள் வெளியிட்டுள்ள கருத்தில், "தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கைதாகி குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நிரபராதிகளா அல்லது தீவிரவாதிகளா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும். இதை அரசு தீர்மானிக்கக்கூடாது” என்று கூறியுள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites

இந்த் மாதிரியெல்லா கூத்தும் நம்ம ஊருல தான் நடக்கும்.. இந்த ஓட்டு விஷயம் மக்கள என்னவெல்லாம் பண்ண வெக்குது...

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0