Sign in to follow this  
Followers 0
clinton

விமர்சனம் : அம்மாவின் கைப்பேசி

5 posts in this topic

விமர்சனம் : அம்மாவின் கைப்பேசி

விகடன் விமர்சனக் குழு

பொறுப்பு இல்லாமல் திரிந்த கடைக்குட்டி மகன் சாந்தனுவிடம் இருந்து நல்ல செய்தி ஒன்று கைப்பேசி அழைப்பு வாயிலாக வரும் என்று காத்திருக்கும் அம்மா ரேவதி அம்மாளுக்கு இறுதியில் என்ன ஆகிறது என்பதே... அம்மாவின் கைப்பேசி!

எட்டு சகோதர-சகோதரிகள், ஒரு அம்மா, சாந்தனு, இனியா, அவருடைய குடும்பத்தினர், தோல் தொழிற்சாலை பாய், குவாரி உரிமை யாளர், அவரது மேனேஜர், சிலபல வில்லன்கள், 'செம கவர்ச்சி’ மீனாள் என எக்கச்சக்க 'சிம் கார்டு’களை ஒரே கைப்பேசியில் திணித்துஇருக்கி றார் இயக்குநர் தங்கர்பச்சான்.

மேலே கதைச் சுருக்கத்திலும் சரி, கதைமாந்தர் களிலும் சரி.... 'நடிகர்’ தங்கர் கேரக்டரேவந்திருக் காதே... ஆனால், படம் முழுக்க 'பட்டையைக் கிளப்புவதில்’ சாந்தனுவை ஓரங்கட்டி தகர அடி அடித்து இருக்கிறார் தங்கர்.

இந்தக் கைப்பேசியில் கவர்ச்சிக் கரகாட்டம், வட நாட்டு அழகிகளின் குலுக்கல் குத்து, சாந்தனு - இனியா இதழ் பச்சக், மீனாளுடன் அத்துமீறிய நெருக்கம் எனக் கவர்ச்சிக்கு எனத் தனி மெமரி கார்டே திணித்து இருக்கும் தங்கர், அதில் உச்சகட்ட உலுக்கலாக தானே ஜட்டி குளியல் தரிசனம் தருகிறார்! :பெப்பெப்பே:

கிராமத்து இளைஞனாக அள வாக நடித்து இருக்கும் சாந்தனு வைப் பற்றி, 'அவன் கோபக் காரன்ய்யா’ என்று ஆரம்பத்தில் ஏக பில்டப் கொடுக்கிறார்கள். ஆனால், இறுதி வரை ஒரு காமா சோமா வில்லனிடம் சிக்கிச் சின்னாபின்னம் ஆகிறார் அந்தக் கோபக்காரன். தலைப்பு முக்கியத் துவம்கொண்ட கேரக்டரில்பாசக் கார அம்மாவாக ரேவதி அம்மாள் எவ்வளவு நெகிழவைத்து இருக்க வேண் டும்... ம்ஹூம். இதழ் முத்தம் தவிர இனியாவைப் பற்றி நினைவுகூர எதுவுமே இல்லை.

'ரொம்ப நல்லவராக’ வரும் குவாரி உரிமையாளர் அழகம் பெருமாளின் கேரக்டர் செம காமெடி. அவரைப் போலவே அனைத்து குவாரிக்காரர்களும் இருந்துவிட்டால் போலீஸுக்கு வேலையே இல்லை. வேலைக்குச் சென்று புருஷ னைக் காப்பாற்றும் கேரக்டரில் மீனாள்கச்சிதம். ஆனால், படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தங்கருடன் 'இறுக்கி முறுக்கி நெருங்கும்’ காட்சி களில் மீனாளுக்கே 'அதிகப் பங்கு’. இதனால் அவருடைய பாத்திரமே 'வேறு தொனி’யில் மாறுகிறதே!

கருத்து இல்லாமல் தங்கர் படமா? 'சார்னு வெள்ளைக்காரன்தான் கூப்பிடுவான். அய்யான்னு தமிழனுங்க கூப்பிடணும்’ என்று வகுப்பு எடுப் பதில் தொடங்கி ஏராளமான கருத்துக் குத்துக்களும் உண்டு. கதை, திரைக்கதை, காட்சிப்படுத்திய விதம், பாடல்கள் அனைத்தும் படத்தின் பலவீனப் பட்டியலில் இடம் பிடிக்க, கிஷோரின் எடிட்டிங்கும், ரோஹித் குல்கர்னியின் இசையும் அதற்குத் துணை நிற்கின்றன.

அம்மாவின் கைப்பேசி - நாட் ரீச்சபிள்!

Share this post


Link to post
Share on other sites

என்னது ஜட்டிக்குளியலா? கர்மம். கமல் இது மாதிரி நடித்து இருக்கிறான் என்று நினைக்கிறேன். கூச்சமாய் இருக்காதா?

Share this post


Link to post
Share on other sites

என்னது ஜட்டிக்குளியலா? கர்மம். கமல் இது மாதிரி நடித்து இருக்கிறான் என்று நினைக்கிறேன். கூச்சமாய் இருக்காதா?

ஏனுங்க ஜட்டியோட குளிக்க எதுக்குங்க கூச்சம்.. அது இல்லாம குளிச்சாதான் கூச்சம்... நம்ம ஊருல குத்தால அருவிய்ல அப்படிதானே பலர் குளிக்கிறாங்க‌

Share this post


Link to post
Share on other sites

ஏனுங்க ஜட்டியோட குளிக்க எதுக்குங்க கூச்சம்.. அது இல்லாம குளிச்சாதான் கூச்சம்... நம்ம ஊருல குத்தால அருவிய்ல அப்படிதானே பலர் குளிக்கிறாங்க‌

தங்கர் தகரர் ஆகி விட்டார்! இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போனதுதான் மிச்சம்!

Share this post


Link to post
Share on other sites

தங்கரின் அழகியை விட சொல்ல மறந்த கதை மிகவும் அருமையான படம் (நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அப்படத்தை பார்ப்பேன்). ஆனால் அப்படத்திலும் புஷ்ப்பவனம் குப்புசாமீயின் ஜட்டி குளியல் உண்டு

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0